புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
1 Post - 3%
Guna.D
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
9 Posts - 2%

4 Posts - 1%
Jenila
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_m10பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் கவிதைகள் - விநாயகர் நான்மணி மாலை

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:12 pm

First topic message reminder :

வெண்பா

(சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்(திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா)-அத்தனே!
(னின்)றனக்குக் காப்புரைப்பார்; நின்மீது செய்யும் நூல்
என்றிதற்கும் காப்புநீ யே.

கலித்துறை

நீயே சரணம்நின தருளே சரணஞ் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்;
வாயே திறாவாத மெளனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.

விருத்தம்

செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்
சீர்பெற் றிடநீ அருள்செய்வாய்,
வையந் தனையும் வளியினையும்
வானத் தியுமுன் படைத்தவனே!
ஐயா! நான்முகப் பிரமா
யானை முகனே! வாணிதனைக்
கையா லனைத்துக் காப்பவனே!
கமலா சனத்துக் கற்பகமே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:16 pm

அகவல்

அச்ச மில்லை அமுங்குத லில்லை,
நடுங்குத லில்லை நாணுத லில்லை.
பாவ மில்லை பதுங்குத லில்லை;
ஏது நேரினும் இடர்ப்பட மோட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்சமாட்டோம்;
கடல்பொங்கி எழுந்தாற் கலங்க மாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம் எதற்க்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்;
வான முண்டு, மாரி யுண்டு;
ஞாயிறும் காற்றும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே;
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்,
கெட்கப் பாட்டும் காணநல் லுலகும்,
களித்துரை செய்யக் கணபதி பெயரும்
என்றுமிங் குளவாம் சலித்திடாய்; ஏழை
நெஞ்சே! வாழி! நேர்மையுடன் வாழி!
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ!
தஞ்ச முண்டு சொன்னேன்,
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:17 pm

வெண்பா

நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைபொழுதுஞ் சோரா திருத்தல்-உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்!
சிந்தையே, இம்மூன்றும் செய்.

கலித்துறை

செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெலாம்
ஐயத்தி லிந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே!
பையத் தொழில்புரி நெஞ்சே! கணாதிபன் பக்தி கொண்டே

விருத்தம்

பக்தி யுடையார் காரியத்திற்
பதறார்! மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறைவா! கணநாதா!
மேன்மைத் தொழிலிற் பணியெனையே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:17 pm

அகவல்

எனைநீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றே பூமி யாள்வார்;
யாவும்நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்
செவ்விய நெறி, அதிற் சிவனிலை பெறலாம்;
பொங்குதல் போக்கிப் பொறையெனக் கீவாய்;
மங்கள குணபதி; மணக்குளக் கணபதி!
நெஞ்சக் கமலத்து நிறந்தருள் புரிவாய்;
அகல்விழி உமையாள் ஆசை மகனே!
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்,
உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி
ஆள்வதும், பேரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்;
காத்தருள் புரிக, கற்பக விநாயகா!
காத்தருள் புரிக, கடவுளே! உலகெலாம்
கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளே!
அங்குச பாசமும் கொம்பும் தரித்தாய்
எங்குல தேவா போற்றி!
சங்கரன் மகனே! தாளிணை போற்றி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:17 pm

வெண்பா

போற்றி! கலியாணி புதல்வனே! பாட்டினிலே
ஆற்ற லருளி அடியேனைத்-தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள்
விணையொலி என் நாவில் விண்டு.

கலித்துறை

விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டுன தன்னை பராசக்திக் கென்றும் தொடர்ந்திடுவேன்;
பண்டைச் சிறுமைகள் போக்கி, என்னாவிற் பழுத்த சுவைத்
தெண்டைழ்ப்பாடல் ஒருகொடி மேவிடச்செய்குவையே.

விருத்தம்

செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி,
செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்,
கையா ளெனநின் றடியேன்செய்
தொழில்கள் யாவும் கெஇகலந்து
செய்வாள், புகழ்சேர் வாணியுமென்
னுள்ளே நின்று தீங்கவிதை
பெய்வாள்! சக்தி துணைபுரிவாள்.
பிள்ளாய்; நின்னைப் பேசிடிலே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:18 pm

அகவல்

பேசாப் பொருலைப் பேசநான் துணிந்தேன்,
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,
இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
'பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும், நோவும்,
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
இன்புற்று வாழ்க' என்பேன்! இதனைநீ
த்ருச்செவிக் கொண்டு திருவுளம் இரங்கி,
'அங்ஙனே யாகுக' என்பாய் ஐயனே!
இந்நாள் இப்பொழு தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய்; ஆதிமூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:19 pm

வெண்பா

உனக்கேஎன் ஆவியும் உள்ளமும் தந்தேன்;
மனக்கேதம் யாவினையும் மாற்றி-(எனக்கேநீ)
நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து.

கலித்துறை

விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா!
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக் கொளுத்தியவன்
அரங்கத்தி லேதிரு மாதுடன் பள்ளிகொண் டான்மருகா!
வரங்கள் பொழியும் முகிலே! என்னுள்ளத்து வாழ்பவனே!

விருத்தம்

வாழ்க புதுவை மணக்குளத்து
வள்ளல் பாத மணிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமிலாது!
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக!
தொலையா (இன்பம் விளைந்திடுக!)
வீழ்க! கலியின் வலியெல்லாம்!
கிருத யுகந்தான் மேவுகவே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:19 pm

அகவல்

மேவி மேவித் துயரில் வீழ்வாய்,
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்,
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்; எதற்குமினி அஞ்சேல்;
ஐயன் பிள்ளை (யார்) அருளால் உனக்குநான்
அபயமிங் களீத்தேன் ....நெஞ்சே)
நினக்குநான் உரைத்தன நிலைநிறுத் தி(டவே)
தீயிடைக் குதிப்பேன், கடலுள் வீழ்வேன்,
வெவ்விட முண்பேன், மேதினி யழிப்பேன்;
ஏதுஞ் செய்துனை இடரின்றிக் காப்பேன்;
மூடனெஞ்சே! முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன்; இன்னும் மொழிவேன்;
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே;
ஏது நிகழினும் 'நமகேன்?' என்றிரு;
பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்;
நமக்கேன் பொறுப்பு? "நான் என்றோர் தடிப்பொருள்
இல்லை; நானேனும் எண்ணமே வெறும்பொய்"
என்றான் புத்தன்; இறைஞ்சுவோம் அவன்பதம்.
இனியெப் பொழுதும் உரைத்திடேன், இதைநீ
மறவா திருப்பாய், மடமை நெஞ்செ!
கவலைப் படுதலே கருநர கம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி,
சிவனொரு மகனிதை நினக்கருள் செய்கவே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:19 pm

வெண்பா

செய்கதவம்! செய்கதவம்! நெஞ்சே! தவம்செய்தால்,
எய்த விரும்பியதை எய்தலாம்,-வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை. அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு.

கலித்துறை

இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்.
செயலிங்கு சித்த விருப்பினைப் பின்பற்றும்; சீர்மிகவே
பயிலுநல் லன்பை இயல்பெனக் கொள்ளுதிபாரிலுள்ளீர்
முயலும் வினைகள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே

விருத்தம்

மொய்க்குங் கவலைப் பகைபோக்கி,
முன்னோன் அருலைத் துணையாகி,
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி,
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொனர்வேன், தெய்வ விதியிஃதே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:20 pm

அகவல்

விதியே வாழி! விநாயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணீயா, போற்றி
மதியினை வளர்க்கும் மன்னே, போற்றி!
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கு
மூல சக்தியின் முதல்வா, போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி!
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பசபச காலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை யமரர்
பதந்களாம், கண்டீர்! பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன்; வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!
விதியே வாழி! விநாயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணீயா, போற்றி
மதியினை வளர்க்கும் மன்னே, போற்றி!
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கு
மூல சக்தியின் முதல்வா, போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கும் நிர்மலன் வாழி!
காலம் மூன்றையும் கடந்தான் வாழி!
சக்தி தேவி சரணம் வாழி
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பசபச காலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை யமரர்
பதந்களாம், கண்டீர்! பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன்; வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 29, 2008 4:20 pm

விநாயகர் நான்மணி மாலை முற்றும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக