புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10 
49 Posts - 52%
heezulia
படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10 
41 Posts - 43%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10 
91 Posts - 56%
heezulia
படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10 
62 Posts - 38%
mohamed nizamudeen
படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_m10படித்ததில் பிடித்தது - Page 7 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sun Mar 07, 2010 8:34 am

First topic message reminder :

படித்ததில் பிடித்தது





வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.



தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.



சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.



உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.



தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.



நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.



ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.



-அவ்வையார்


செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Mar 31, 2010 8:49 am

படித்ததில் பிடித்தது மார்ச் - 31


தன்னலம் பார்க்காமலும், ஆரவாரமில்லாமலும் சேவை செய்யுங்கள். பணிவு, பெருமை இவையிரண்டும் இல்லாத சேவை கடவுளுக்கு தொண்டு செய்வதற்கு ஒப்பாகும். நீங்கள் செய்த சேவையால், பயனடைந்தவர்கள் மகிழ்ச்சியடைந்தால் மட்டுமே உங்களது சேவை முழுமையடையும்.

செய்ய வேண்டும் என பெயருக்கு செய்யும் சேவையால் யாருக்கும் பயன் ஏற்படாது. எனவே, சேவை செய்வதை வாழ்க்கையில் விதிக்கப்பட்ட கடமையாக கருதி முழுமூச்சுடன் செயலாற்றுங்கள். கடமையை செய்யத் தவறியவர்கள் பாவம் செய்தவர்களுக்கும், மன்னிக்கமுடியாத குற்றத்தை செய்தவர்களுக்கும் ஒப்பானவர்கள் ஆவர்.

பணம், பொருள், புகழ் இவையெல்லாம் வைத்திருப்பவரை செல்வந்தர் என்று சொல்ல முடியாது. யார் ஒருவர் கடவுளை நண்பராகவும், அவரது அருளை எளிதில் பெறுபவராகவும் இருக்கிறாரோ அவர்தான் உண்மையான செல்வந்தர்.

கடவுளை நண்பனாக பெற வேண்டுமானால் சேவை செய்யும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் கடவுள், ஏழைகளின் வடிவில் இருக்கிறான். அவர்களுக்கு செய்யும் சேவையை தனக்கு செய்வதாகவே அவர் ஏற்றுக்கொள்கிறார்.

கோயில்களிலோ, பிற அமைதி தலங்களிலோ கடவுளை பார்க்க முடியாது. ஆனால், பொதுநலம் கருதி சேவை செய்யப்படும் இடத்திலும், அறநெறி தழைத்து நிற்கும் இடத்திலும் அவரை பார்க்கலாம். எனவே தர்மம் தவறாமல், அறநெறியில் நின்று சேவை செய்வதை லட்சியமாகவே எண்ணி செயலாற்றுங்கள்.





- காந்திஜி



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Thu Apr 01, 2010 9:23 am

படித்ததில் பிடித்தது ஏப்ரல் - 1



இதயத்திலிருந்து இரண்டு எண்ணங்களை அகற்றி விடுங்கள். நமக்குப் பிறர் செய்த தீமைகளை மறந்துவிடுவதோடு மன்னிக்கவும் வேண்டும். மற்றொன்று நாம் பிறருக்குச் செய்த நன்மைகளை மறந்துவிட வேண்டும்.


ஆசைகளை வளர்த்துக் கொண்டே போவதால் நிம்மதியை இழக்கிறோம். வாழ்க்கைப்பயணத்தில், ரயில் பயணம் போல சுமைகளை குறைத்துக் கொண்டால் நிறைவான சுகத்தைப் பெற்று மகிழலாம்.


குற்றம் குறையில்லாத பொருள் இல்லை. துன்பக் கலப்பு இல்லாத இன்பம் இல்லை. அகம்பாவச் சுவடற்ற செயல் இல்லை. எனவே, தூய உள்ளத்தோடு பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே துன்பத்தைப் போக்கும் வழி.


வாழ்வில் தடைகள் ஏற்படும்போது தான் நமக்கு அதிகப்படியான தைரியம் தேவைப்படுகிறது. மனவுறுதி உள்ளவர்கள் எந்த தடையையும் தாண்டி சாதனை புரிகிறார்கள்.



-சாய்பாபா



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Apr 03, 2010 8:45 am

படித்ததில் பிடித்தது ஏப்ரல் - 3




· அனைவரிடமும் அன்பாக இருக்க வேண்டும், நேசம் செலுத்தி அவர்களால் விரும்பப்படுபவராக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர்களால் அவ்வாறு இருக்க முடிவதில்லை.



· இந்த அன்பு நிலையை அடைவதற்கு, மற்றொருவரின் உதவி தேவையில்லை. ஆனால், அன்பு என்பது மற்றொரு நபரின் தூண்டுகோல் இருந்தால் மட்டுமே வெளிப்படும் என்ற மாயையான நிலைக்கு பலர் தள்ளப்பட்டுள்ளார்கள். அன்பு என்பதை தனிமையில் இருக்கும்போது நமக்கு நாமே கூட செலுத்திக் கொள்ளலாம். பிறர் மீது, அன்பு செலுத்த விரும்புபவர்கள், அதற்கான சூழலை உருவாக்கிக் கொண்டாலே போதும்.



· தற்போது மற்றவர்களை எப்படி பயன்படுத்துவது என்பதின் இலக்கணமாகத்தான் அன்பு கருதப்படுகிறது. ஒருவர் யார் மீது அன்பு செலுத்துகிறாரோ, அவர் இவரது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்பவராக இருக்க வேண்டும் என்ற வரைமுறையும் வகுக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் தங்களுக்கு பிடிக்காத கொள்கை உடையவர்களை விரும்புவதில்லை. இத்தகைய செயல் வியாபாரமாக கருதப்படுமே தவிர நிச்சயமாக அன்பாக இருக்காது.



· ஒருவருக்கு பொருளோ, இன்பமோ தேவைப்படும் நேரத்தில் அதனை அடைவதற்காக சம்மந்தப்பட்ட நபரிடம் அன்பு செலுத்தக்கூடாது. உண்மையான அன்புடன் இருந்தால் விரும்பும் அனைத்தும் எளிதாக கிடைக்கும் என்ற மனப்பக்குவம் மக்களிடம் வர வேண்டும்.







· - ஜக்கிவாசுதேவ்



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
prabumurugan
prabumurugan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 890
இணைந்தது : 18/02/2010

Postprabumurugan Sat Apr 03, 2010 8:57 am

படித்ததில் பிடித்தது - Page 7 677196 படித்ததில் பிடித்தது - Page 7 677196 படித்ததில் பிடித்தது - Page 7 677196



மரணத்திற்கு பிறகு நான் மனிதனாக பிறப்பேனேயானால்
தாயே நான் உனக்கு தாயாகவேண்டும்.

பிரபுமுருகன்.....................
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Apr 05, 2010 9:12 am

படித்ததில் பிடித்தது ஏப்ரல் - 05



மனதை தூய்மைப்படுத்துவதே மனிதனின் முதல் கடமை. மனதை தூய்மைப்படுத்த மலைக்குகைகளிலும், வனங்களிலு, புண்ணிய தலங்களிலும் அலைந்து திரிந்து பயனில்லை.


மனம் என்னும் கண்ணாடியை மனிதன் தூய்மையாக்கிய பிறகு, அவன் எங்கு வசிக்கிறான் என்ற பேச்சுக்கே இடமில்லை. தூய்மையான உள்ளத்தில் கடவுளாகிய மெய்ப்பொருள் உள்ளபடி ஒளிர்கிறார்.


மனிதன் தன் மனதை தூய்மையாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கிருந்தே இதனைச் செய்ய முடியும். வேண்டியது மன வைராக்கியம் மட்டுமே.


இதயத்தில் எப்போது வீணான ஆசைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றதோ, அப்போதே மனிதன் மரணத்தை வென்றவன் ஆகிறான். அவன் இவ்வுடலில் இருக்கும்போதே கடவுளை அறியும் தன்மை பெறுகிறான்.

உலகத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருந்தாதே. உன் உள்ளத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருத்தம் கொள். உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து. பிறகு உள்ளும் புறமும் தூய்மை பெறுவதை விரைவில் உன்னால் உணரமுடியும்.





-விவேகானந்தர்



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Apr 06, 2010 8:54 am

படித்ததில் பிடித்தது ஏப்ரல் - 06



மனதை அடக்குவதற்கு இரண்டு சாதனங்கள் உண்டு. வெளிப்படையாய் செய்வது பகிரங்கம். தனக்கு மட்டும் தெரியச் செய்வது அந்தரங்கம்.

தானதர்மங்கள் செய்வது, பூஜிப்பது, யாகம் நடத்துவது போன்ற செயல்கள் பகிரங்கமாக பலருக்குத் தெரியும்படி செய்வதாகும். அந்தரங்க சாதனம் என்பது தியானம் செய்வதாகும்.

தியானத்திற்கு துணைசெய்வது ஐந்து குணங்கள். அவை அகிம்சை, சத்தியம், தூய்மை, புலனடக்கம், திருடாமை ஆகியவை, இந்த ஐந்து நற்குணங்களால் மனதை அடக்கினால் தியானம் எளிதில் கைகூடும்.




அகிம்சை என்பது எல்லாவுயிர்களையும் அன்புமயமாகப் பாவிப்பதாகும். எண்ணம், சொல், செயல் இம்மூன்றாலும் உண்மைவழியில் நடப்பது சத்தியம். தூய்மை என்பது அகத்தூய்மை, புறத்தூய்மை ஆகிய இரண்டுமாகும். புலனடக்கம் என்பது புலன் களை கட்டுப்பாட்டில் வைப்பதாகும். அதாவது கண் முதலிய ஐம்புலன்களையும் ஒழுக்கநெறியில் செலுத்துவதாகும் . திருடாமை என்பது பிறர் பொருள் மீது ஆசைப்படாதிருப்பதாகும்.



இந்த குணங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம். இச்சாதனைகளைச் செய்வதற்கே நாம் சரீரம் என்னும் உடம்பை பெற்றிருக்கிறோம். இந்த ஐந்து ஒழுக்க நெறிகளை "சாமான்ய தர்மங்கள்' என்றே சாஸ்திரங்கள் சொல் கின்றன. சாமான்யம் என்றால் மக்கள் அனைவருமே பின்பற்ற வேண்டியவை என்பது பொருள்.





- காஞ்சி பெரியவர்



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Wed Apr 07, 2010 8:52 am

படித்ததில் பிடித்தது ஏப்ரல் - 07


மவுனமாக இருப்பது நல்லது. ஆனால், அதற்கு தேவையான மனஅடக்கம் நமக்கு இருப்பதில்லை. உண்மையை நாடுபவர்களுக்கு மவுனம் பெருந்துணையாகும். மவுனத்தால் மனதிலுள்ள தயக்கம் விலகி தெளிவான முடிவினை எட்டமுடியும்.


பேசாமல் இருப்பது மட்டுமே மவுனமாகாது. அவசியமில்லாதவற்றை மனதில் சிந்திக்காமல் இருப்பதே மவுனம். விரதம் என்ற பெயரில் மனதோடு போராடிக் கொண்டிருப்பது நல்லதல்ல. மனதை பூரண அமைதியில் தவழச் செய்வதே சரியான மவுனமாகும்.


மவுனம் பழகப் பழக ஆண்டவனின் குரலை நம்மால் கேட்க முடியும். சத்திய வேட்கை உடையவர்கள் பழகவேண்டிய அடிப்படைக் குணம் மவுனம். கோபத்தைப் போக்கி சாந்த குணத்தை வளர்த்துக் கொள்ள மவுனத்தைப் போல சிறந்த துணை வேறில்லை.


மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களுக்கு நாவடக்கம் மிகவும் அவசியம். அதற்கு மவுனப்பயிற்சி சரியான வழிகாட்டியாக துணை செய்யும். மிகைப்படுத்துவதும், உள்ளதை மறைப்பதும் மனிதனின் இயல்பான குறைபாடாக இருக்கிறது. அதை மவுனம் அடியோடு போக்கிவிடும்.




-காந்திஜி



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக