புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 5:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 10:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 12:17 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 9:33 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 8:40 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 8:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 1:06 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 12:51 am

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:35 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 10:19 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:16 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 10:13 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 10:12 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 10:10 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 10:09 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 10:06 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:50 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 9:49 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 3:22 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 3:19 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 2:58 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 2:51 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 3:15 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:05 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 3:01 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 10:57 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri May 03, 2024 12:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
5 Posts - 4%
prajai
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
kargan86
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
jairam
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
50 Posts - 28%
mohamed nizamudeen
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
9 Posts - 5%
prajai
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Jenila
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Baarushree
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Rutu
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
M. Priya
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_m10ஸ்ரீ கிருஷ்ண லீலா! - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ கிருஷ்ண லீலா!


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 5:59 pm

First topic message reminder :

சகடா சூரவதம்

குழந்தை கிருஷ்ணர் சற்று வளர்ந்த பின், குப்பிறப்படுக்கத் துவங்கினார். மற்றொரு விழாவை யசோதாவும் நந்தமகாராஜாவும் கொண்டாடினார்கள், அது கிருஷ்ணரின் முதலாவது பிறந்தநாள் விழாவாகும். அவர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவுக்கு பெருந்திரளானவர்கள் வந்து விழாவில் குதூகலமாக கலந்துகொண்டனர். நேர்த்தியான வாத்தியக்குழு ஒன்று இசை பொழிய, கூடியிருந்த மக்கள் அதை ரசித்தனர். கற்றறிந்த பண்டிதர்கள் எல்லோரும் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிராமணர்களான அவர்கள், கிருஷ்ணரின் நன்மை கருதி வேத பாராயணம் செய்தார்கள். யசோதை, நீராட்டப்பட்டு, அழகிய ஆடைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த குழந்தை கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொண்டிருக்கும்போது, குழந்தை தூங்குவதுபோல் தோன்றியதால், அன்னை யசோதை அவரைப் படுக்கையில் கிடத்தினாள்.

உறவினர்களையும் நண்பர்களையும் அந்த சுபவேளையில் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் யசோதை, குழந்தைக்கு பாலூட்ட மறந்து போனாள். எனவே, அவர் பசித்திருந்ததால் அழத் தொடங்கினார். அங்கே ஏற்பட்டிருந்த பற்பல ஓசைகளின் காரணமாக குழந்தை அழுதது, யசோதையின் காதில் விழவில்லை. பசியால் வருந்திய குழந்தை கோபமுற்று, எந்த சாதாரண குழந்தையும் செய்வதுபோல் கால்களைத் தூக்கி உதைக்கத் தொடங்கினார். குழந்தை கிருஷ்ணர் ஒரு சகட வண்டியின் கீழ் படுக்க வைக்கப்பட்டிருந்ததால், அவர் கால்களை உதைத்தபோது வண்டியின் சக்கரத்தில் பட்டு அது பல துண்டுகளாக நொறுங்கியது. அந்த சகடமானது ஒரு அரக்கன். கம்சனால் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறு கால்களால் உதைக்கப்பட்டதும் அரக்கன் மாண்டு விழுந்தான். ஓசை கேட்டு வந்த யசோதை, குழந்தை கிருஷ்ணரை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு பிராமணர்களை அழைத்து, கொடிய தேவதைகளால் குழந்தைக்கு தீங்கு ஏற்படாமலிருக்க, வேத மந்திரங்களை ஓதும்படி கேட்டுக்கொண்டாள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 6:04 pm

காளிங்கனின் மீது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நடனமாடுதல்

யமுனை நதியின் அடியில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் காளிங்கன் என்ற மிகப் பெரிய விஷப் பாம்பு ஒன்று வசித்து வந்தது. அதன் விஷம் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் தூய்மை கெட்டு, நச்சுக் கலந்திருந்தது. அங்கு ஒரு பறவை பறந்தால் அது உடனே மடிந்து கீழே விழும். யமுனையில் இருந்து வெளிவந்த நச்சு வாயுவின் பாதிப்பால் யமுனைக் கரையிலிருந்த மரங்களும் புற்களும் பட்டுப் போய்விட்டது. அப்பெரிய பாம்பின் விஷத்தால் ஏற்பட்ட கேட்டைக் கிருஷ்ணர் கவனித்தார். விருந்தாவனத்தை அடுத்து ஓடிய நதி முழுவதும் உயிருக்கு அபாயம் விளைவிக்கக் கூடியதாக இருந்தது.

உலகில் கேடு விளைவிக்கும் சக்திகளைக் களைவதற்கென்றே அவதரித்துள்ள ஸ்ரீகிருஷ்ணர், யமுனை நதியின் கரையிலிருந்த ஒரு பெரிய கடம்ப மரத்தின் மீது ஏறினார். கடம்பம் எனும் வட்டமான மஞ்சள் நிற மலர், பொதுவாக விருந்தாவனப் பகுதியில் மட்டும் காணப்படும் ஒரு மலர் வகை. மரத்தின் உச்சியில் ஏறியபின் அவர் தன் அரைக் கச்சையை இறுக்கிக் கொண்டு, மல்யுத்தம் செய்பவனைப் போல் கைகளை ஆட்டிக் கொண்டு நச்சு மிகுந்த அந்த ஏரியினுள் குதித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏறிய அந்தக் கடம்ப மரம் ஒன்று மட்டுமே அப்பகுதியில் பட்டுப் போகாமல் தப்பியிருக்கிறது. இந்தியாவின் விருந்தாவனத்துக்குச் செல்பவர்கள் அந்த கடம்ப மரம் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் இருப்பதைக் காணலாம். ஸ்ரீகிருஷ்ணரின் கால் பட்டதும் மரம் உடனே உயிர் பெற்றதென்று சில உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். சில புராணங்களில், இம்மரத்தில் கிருஷ்ணர் வருங்காலத்தில் ஏறுவாரென்று அறிந்திருந்த கருடர், அது பட்டுப் போகாமல் இருக்க அதன் மீது அமிர்தத்தைத் தெளித்திருந்தார் என்று கூறுகின்றன.

கிருஷ்ணர் நதியில் குதித்;;தபோது நீர் கரை புரண்டு ஓடியது. அதனால் எழுந்த பேரொலி, கரு நாகமான காளிங்;கனின் காதில் விழுந்தது. தன் இருப்பிடத்தை யாரோ தாக்க வந்திருக்கிறார் என்பதை அது புரிந்து கொண்டு, கிருஷ்ணரின் முன் வந்தது. அழகிய முகத்தில் புன்னகையுடன், அவர் மிகுந்த பலத்துடன் யமுனை நதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும்; அதற்கு கோபம் வந்தது. தன் பலம் மிக்க உடம்பின் சுருள்களுக்கிடையே காளிங்கன், கிருஷ்ணரைப் பிடித்து அழுத்தியது. பாம்பின் பயங்கரமான பிடியில் தப்ப முடியாத வகையில் கிருஷ்ணர் அகப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டதும், அவரிடம் அன்பு கொண்டிருந்த ஆயர் குலச் சிறுவர்களும் மற்ற விருந்தாவன வாசிகளும் பயத்தால் அதிர்ந்து போனார்கள்.

அவர்களால் நதிக்கரையில் நின்று அழமுடிந்ததே தவிர, கிருஷ்ணருக்கு உதவும் வகையில் எதுவும் செய்ய முடியவில்லை. அன்னை யசோதை வந்தபோது, அவள் யமுனையில் குதிக்க விரும்பினாள். மற்றவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவள் மூர்ச்சையடைந்தாள். தம் உயிரைக் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்திருந்த நந்தகோபரும் மற்றவர்களும் நீரில் குதிக்க எண்ணினார்கள். ஆனால் பிரபு பலராமர் அவர்களைத் தடுத்தார். எவ்வித அபாயமும் இல்லையென்பது பலராமருக்குத் தெரியும்.

இரண்டு மணி நேரங்களுக்குக் கிருஷ்ணர் காளிங்கனின் பிடியில் ஒரு சாதாரணக் குழந்தையைப் போல் இருந்தார். ஆனால் தன் தாயும், தந்தையும் கோபியரும், சிறுவர்களும், பசுக்களும் கன்றுகளும் மற்ற கோகுல வாசிகளும் ~மரணத்தின்| தருவாயில் காப்பவரின்றி இருந்ததைக் கண்டதும் கிருஷ்ணர், தம்மை உடனே விடுவித்துக் கொண்டார். அவர் தம் உடலை விரிவடையச் செய்தார். பாம்பு அவரைக் கட்டிப் பிடிக்க சிரமப்பட்டது. அதனால் அதன் பிடி தளர்ந்து, கிருஷ்ணராகிய முழுமுதற் கடவுளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 6:04 pm

காளிங்கன் மிகுந்த கோபமடைந்து, தனது பெரிய படங்களை விரித்தது. மூக்குகளில் இருந்து நச்சுக் கலந்த மூச்சை வெளியிட்டது. அதன் கண்கள் நெருப்பாய் தகித்தது. வாயிலிருந்து அனல் வீசியது. கிருஷ்ணரைப் பார்த்தபடி அது சிறிது நேரம் அசையாமல் நின்றது. பிளவுபட்ட நாக்குகளால் உதடுகளை நக்கியபடி கண்களில் விஷம் பொங்க அவரைப் பார்த்தது. பாம்பின் மீது கருடன் பாய்வதுபோல, கிருஷ்ணர் அதன்மீது பாய்ந்தார். காளிங்கன் தன் விஷப் பற்களால் கிருஷ்ணரைக் கடிக்க முயன்றான். ஆனால் கிருஷ்ணர், அதன் தலைகளை அழுத்திப் பிடித்து அவற்றின் மேல் ஏறினார். பாம்பின் தலையில் இருந்த ரத்தினங்களின் ஒளியினால் பிரபுவின் பாதங்கள் சிவந்து காணப்பட்டன. பின்பு, கலைஞர்களுக்கு எல்லாம் ஆதி கலைஞரான ஸ்ரீகிருஷ்ணர், விஷப் பாம்பான காளிங்கனின் மீது நடனமாடினார். இதைக் கண்ட வாணவர்கள், பூச்சொரிந்து, மத்தளங்கள் முழக்கி, குழல்களை இசைத்து, துதிகளையும் பாடல்களையும் பாடினார்கள். இவ்வாறாக வானுலக வாசிகளான கந்தவர்கள், சித்தர்கள் மற்றும் தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

கிருஷ்ணர் தன் தலைகளில் நடனமாடியபோது, காளிங்கன் அவரைத் தன் மற்ற தலைகளால் கீழே தள்ள முயற்சித்தான். காளிங்கனுக்கு நூறு தலைகள் இருந்தன. ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, தன் காலால் அதன் தலைகளில் அடித்தபோது, காளிங்கனால் அந்த அடிகளைத் தாங்கி; கொள்ள முடியவில்லை. அது உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டு, தன்னில் இருந்த விஷத்தைக் கக்கியபோது அதன் பாவங்கள் குறையத் தொடங்கின. பன்பு அது, விஷத்துக்குப் பதிலாக இரத்தத்தை கக்கத் தொடங்கியது.

அப்போது, காளிங்கனின் மனைவிகளான நாகபத்தினிகள், கிருஷ்ணர் தம் கணவனை உதைத்து அடக்குவதைக் கண்டனர். அவர்கள் கிருஷ்ணரைச் சரண் அடைந்து, தம் கணவனான காளிங்கனை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு பிரார்த்தித்தனர். கிருஷ்ணர் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, காளிங்கனை நோக்கி, உடனே அந்த இடத்தை விட்டு தாமதிக்காமல்; மனைவி பிள்ளைகளுடன் சமுத்திரத்திற்குப் போய்விடுமாறும், யமுனையின் நீரை அசுத்தப் படுத்த வேண்டாமெனவும், பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் தடை ஏற்படக்கூடாதெனவும் கட்டளை இட்டார். காளிங்கனும் அவனது மனைவி பிள்ளைகளும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றனர். அப்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர்நானும் என் நண்பர்களும் நீராடிய காளிங்க ஏரியில் ஒருவர் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்தாலும் அவரின் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 6:04 pm

காட்டுத் தீயை அணைத்தல்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காலிங்கன் மீது நடனமாடிவிட்டு யமுனை நதியில் இருந்து வெளி வந்தபோது இரவாகி விட்டதால் விருந்தாவன வாசிகளும், பசுக்களும், கன்றுகளும் மிகவும் களைப்படைந்து, யமுனை நதிக் கரையிலலேயே ஓய்வெடுத்துக் கொள்வதென்று தீர்மானித்தார்கள். இவ்வாறு அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் திடீரென்று காட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டது. விரைவில் விருந்தாவன வாசிகள் எல்லோரும் நெருப்புக்கு இரையாகி விடக்கூடுமென்ற அச்சம் ஏற்பட்டது.

நெருப்பின் உஷ்ணம் அவர்களைத் தகிக்கத் தொடங்கியதும் அவர்கள் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடம், அப்போது அவர் ஒரு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த போதும், சரணடைந்தார்கள். அவரிடம் அவர்கள் கூறினார்கள் அன்பான கிருஷ்ணா, முழுமுதற் கடவுளானவரே, பலத்தின் சிகரமான பலராமரே, கோரமான இந்த நெருப்பு எல்லாவற்றையும் அழிக்கக் கூடியது. அதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். உங்களைத் தவிர எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை. இந்த நாசகாரத் தீ எங்களை எல்லாம் விழுங்கி விடும். இவ்வாறு அவர்கள் கிருஷ்ணரின் பாதகமலங்களைத் தவிர வேறு புகலிடம் இல்லையென்று கூறி, அவரிடம் பிரார்த்தித்தார்கள்.

தம் ஊர்வாசிகளிடம் மிகுந்த கருணை கொண்ட கிருஷ்ணர், உடனே காட்டுத் தீ முழுவதையும் விழுங்கி, அவர்களைக் காப்பாற்றினார். இது கிருஷ்ணரால் முடியாத காரியமல்ல. ஏனெனில் அவர் வரம்பற்ற சக்தியை உடையவர். தாம் விரும்பிய எதையும் செய்ய வல்லவர். நாசகாரத் தீயை அணைத்த பின்னர் கிருஷ்ணர், நண்பர்களும், உறவினர்களும், பசுக்களும், எருதுகளும் புடைசூழ்ந்து அவரின் புகழ் பாடிவர, எப்போதும் பசுக்களால் நிறைந்திருந்த விருந்தாவனத்தை மீண்டும் அடைந்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 6:05 pm

பிரலம்பாசுர வதம்

ஒரு நாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் மற்றும் கோபாலச் சிறுவர்களும் விருந்தாவனத்தின் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரலம்பாசுரன் என்ற பெயருடைய அரக்கன் அவர்களிடையே புகுந்து பலராமரையும் கிருஷ்ணரையும் கொல்ல விளைந்தான். கிருஷ்ணர் அப்போது ஆயர்குலச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார் என்றாலும், முழுமுதற் கடவுளாகிய அவர் முக் காலங்களையும் உணர்ந்தவர் அல்லவா? எனவே, பிரலம்பாசுரன் அவர்களிடையே வந்து புகுந்ததும் அவனை எப்படிக் கொல்வதென்று முடிவெடுத்தார். வெளிப்படையாக, ஒரு நண்பனைப் போல் வரவேற்று,அன்பான நண்பனே, எங்களின் விளையாட்டில் கலந்து கொள்ள நீயும் வந்திருப்பது நல்லதாயிற்று என்று கூறி, நண்பர்களை அழைத்து,இப்போது நாம் ஜோடி ஜோடியாக விளையாடலாம், ஒருவருக்கொருவர் சவால் விடலாம் என்று கூறினார்.

சிறுவர்கள் ஒன்று கூடி சிலர் கிருஷ்ணரின் பக்கமும், சிலர் பலராமரின் பக்கமும் சேர்ந்து கொண்டார்கள். எதிர்;க் கட்சிகள் ஜோடி ஜோடியாக யுத்தம் செய்ய வேண்டும். வென்றவர்களைத் தோற்றவர்கள் முதுகில் சுமக்க வேண்டும் என்பது நிபந்தனை. விளையாடியபடியே அவர்கள் பசுக்களையும் கவனித்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் பாண்டீர வனம் எனும் காட்டினூடே சென்றனர். ஸ்ரீ தாமனும் விருஷபனும் இருந்த பலராமனின் கட்சி வெற்றி பெற்றது. கிருஷ்ணரின் கட்சி அவர்களை சுமந்து கொண்டு பாண்டீர வனத்தில் நடக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணர், ஸ்ரீ தாமனையும் பத்ரசேனர் விருஷபனையும் அங்கு ஆயர்குலச் சிறுவனின் தோற்றத்தில் வந்திருந்த பிரலம்பாசுரன் பலராமரையும் முதுகில் சுமக்க வேண்டியதாயிற்று.

பிரலம்பாசுரன் அசுரர்களுள் மிகப் பெரியவன். அங்கிருந்த ஆயர்குலச் சிறுவர்களுள் கிருஷ்ணர் மிகுந்த பலசாலியென்பதை அவன் யூகித்திருந்தான். கிருஷ்ணரின் அருகில் இருக்க விரும்பாமல் பிரலம்பாசுரன், பலராமரை வெகு தூரம் தூக்கிச் சென்றான். அந்த அசுரன் பலத்திலும் சக்தியிலும் மிகுந்தவன். ஆனால், ஒரு மலைக் குகைக்குச் சமமான பலராமரை அவன் தூக்கிச் சென்றான். எனவே அவன் களைப்புற்று பாரத்தைச் சுமக்க முடியாமல் போனதால் அவனது உருவம் மேக மண்டலம் வரை விரிந்து, கண்கள் அனலெனப் பளிச்சிட கூரிய பற்கள் வெளிப்பட அவன் தோன்றியதை பலராமர் கவனித்தார்.

அசுரனின் தோற்றத்தைக் கண்டு பலராமர் ஆச்சரியப் பட்டார். தன்னை அந்த அசுரன், தன் நண்பர்களிடமிருந்து தூரமாக எடுத்துச் சென்று கொல்ல நினைக்கிறான் என்பதை அறிந்தார். உடனே அவர், இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் ஒரு மலையைத் தாக்குவது போல் அசுரனின் தலையில் தன் முஷ்டியால் ஓங்கித் தாக்கினார். பலராமரின் தாக்குதலைத் தாங்க மாட்டாமல், தலை நசுக்கப்பட்ட பாம்பைப் போல், அசுரன் கீழே விழுந்து இறந்தான். அவனின் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. சிறுவர்களெல்லாம் அந்த இடத்துக்கு விரைந்தார்கள். கோரமான காட்சியைக் கண்டதும் பலராமருக்குசபாஷ் என்று கூறிப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமுவந்து பலராமர் மீது பூக்களைத் தூவி, ஆசி வழங்கி, பிரலம்பாசுரனைக் கொன்றதற்காகப் பாராட்டினார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 6:05 pm

யாகங்கள் நடத்திய அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தல்

வழக்கம்போல கிருஷ்ணரும் பலராமரும் அவர்களது நண்பர்களுடன் யமுனை நதிக் கரைக்குச் சென்றிருந்தபோது, ஆயர் சிறுவர்கள் காலை உணவு உண்டிராததால் மிகவும் பசியாக இருந்தார்கள். அவர்கள் கிருஷ்ணரையும் பலராமரையும் அணுகி இவ்வாறு கூறினார்கள்:அன்பான கிருஷ்ணா, பலராமா, நாங்கள் இன்று பசியாக இருக்கிறோம். எங்கள் பசியைப் போக்குவதற்கான உபாயம் ஏதாவது கூறுங்கள். என்று கூறினார்கள்.

நண்பர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டபோது கிருஷ்ணரும் பலராமரும் அச்சமயம் யாகங்கள் நடத்திக் கொண்டிருந்த சில பிராமணர்களின் மனைவியரின் மீது கருணை கொண்டார்கள். அம்மனைவியர்கள் பிரபுவின் சிறந்த பக்தைகள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு, கிருஷ்ணர் அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார். கிருஷ்ணர் நண்பர்களிடம் கூறினார்:அன்பான நண்பர்களே, பக்கத்திலுள்ள பிராமணர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் உணவு கேளுங்கள். இப்போது அவர்கள் வேத முறைப்படியானஆங்கிரஸ எனும் யாகங்களை நடத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் பிராமணர்கள் வேதப் பண்களை இசைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால், வேத அறிவின் நோக்கம் என்னை அறிவது என்பதை அவர்கள் மறந்திருக்கிறார்கள். என்று கிருஷ்ணர் தம் நண்பர்களுக்குக் கூறினார்.

கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று சிறுவர்கள் பிராமணர்களிடம் சென்று,கிருஷ்ணரும் பலராமரும் அருகாமையில் பசுக்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் வந்திருக்கிறோம். அந்தணராகிய நீங்கள் தர்மங்களை அறிந்தவர்கள். எங்களுக்கு உணவு தரலாமென நீங்கள் எண்ணினால், நீங்கள் தரும் உணவை நாங்கள், கிருஷ்ணருடனும் பலராமருடனும் பகிர்ந்து உண்கிறோம். என்று; கூறினார்கள். அவர்களைப் பற்றி அவ்வந்தனர்கள் கவலைப் படாமல் சிறுவர்களிடம் பேச மறுத்து விட்டார்கள். பிராமணர்கள் தங்களிடம் பேச மாட்டார்கள் என்பதை அறிந்த சிறுவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன்; திரும்பிச் சென்று கிருஷ்ணரிடமும் பலராமருடனும் நடந்ததை விவரித்தார்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட கிருஷ்ணர் கூறினார்:பிராமணர்கள் தானம் தர மறுத்ததை எண்ணி வருந்தக் கூடாது. ஏனெனில் யாசகம் அப்படிப்பட்டது. யாசிப்பவன் செல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது நிச்சயமாகக் கிடைக்குமென்று எதிர்பார்க்கக் கூடாது. சில இடங்களில் ஏமாற்றமடைய நேரிடலாம். அதற்காக மனம் வருந்தக் கூடாது. நீங்கள் மீண்டும் அந்தணர்களின் இருப்பிடத்துக்குச் சென்று அந்தணர்களின் மனைவியரைச் சந்தித்து, அவர்களிடம் என் பெயரையும் பலராமரின் பெயரையும் சொல்லி உணவு கேளுங்கள். உங்களுக்கு வேண்டிய அளவு உணவை அவர்கள் நிச்சயமாகத் தருவார்கள். என்று கிருஷ்ணர் கூறினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 6:05 pm

கிருஷ்ணரின் கட்டளைப்படி சிறுவர்கள் உடனே அந்தணர்களின் மனைவியரிடம் சென்றார்கள். அவர்கள் தத்தம் வீடுகளில் இருந்தார்கள். சிறுவர்கள் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கூறினார்கள்:அன்பான அன்னையரே, கிருஷ்ணரும் பலராமரும் அருகாமையில் பசுக்களுடன் வந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டளைப்படி நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் மிகவும் பசியாக இருக்கிறோம்.

எனவே, உணவை வேண்டி உங்களிடம் வந்திருக்கிறோம். கிருஷ்ணரும், பலராமரும் நாங்களும் உண்பதற்கு ஏதாவது உணவு தாருங்கள். என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்தண மனைவியர், கிருஷ்ணரையும் பலராமரையும் பற்றிக் கவலைப் பட்டார்கள். உடனே அவர்கள் பல பாத்திரங்களில் நேர்த்தியான உணவு வகைகளையும், யாகத்திற்காகத் தயாரிக்கப்பட்ட சுவையான உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரையும் பலராமரையும் சந்திப்பதற்கு சென்றார்கள். கிருஷ்ணர் அவர்களைச் சந்தித்து, அவர்கள் அன்புடன் கொண்டுவந்த உணவுகளை ஏற்று, அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தபின் அந்தணர்களின் மனைவிமார் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றார்கள்.

எப்போதும் ஆனந்த நிலையிலிருக்கும் ஸ்ரீ கோவிந்தன், சாதாரணக் குழந்தையாக வந்து தன் லீலைகளைக் காட்டி, அந்தணர்களின் மனைவியர் கொடுத்த உணவை உண்டு மகிழ்ந்தார். கிருஷ்ணரிடமிருந்து மனைவியர் திரும்பிய பின், யாகங்களை நிறைவேற்றிய அந்தணர்கள் முழுமுதற் கடவுளுக்கு உணவளிக்க மறுத்த குற்றத்திற்காக மனம் வருந்தி, தமது தவறை உணர்ந்து கொண்டார்கள்.

அந்தப் பிராமணர்கள் கூறினார்கள்:கிருஷ்ணரையும் பலராமரையும் பற்றி அந்த ஆயர் சிறுவர்கள் நமக்கு நினைவூட்டியும், அவர்களை நாம் அசட்டை செய்து விட்டோம். நமது நன்மைக்காக, நம்மிடம் கருணை கூர்ந்து முழுமுதற் கடவுள் தம் நண்பர்களின் மூலம் நம்மிடம் உணவு கேட்டு அணுப்பினார். இல்லாவிடில் அவர் அவர்களை அனுப்பி இருக்கத் தேவையில்லை. அவர் நினைத்த மாத்தித்தில் அவர்களின் பசியைத் தீர்த்திருக்க முடியும். ஆனால், நம்மைப் போல் குறுகிய நோக்கில்லாத நம் மனைவியர் கிருஷ்ணருக்கு புனிதமான பக்தித் தொண்டாற்றி இருப்பதால் நம்மைவிட உயர்ந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதை எண்ணி நாம் பெருமை அடைகிறோம். எனவே, நாமும் இப்போது அவரது பாத கமலங்களில் பணிவோமாக. என்று அந்தப் பிராமணர்கள் கூறினார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவருக்கு அன்புடன் உணவளித்த அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 6:06 pm

கோவர்த்தன கிரியைப் பூஜித்தல்

விருந்தாவன வாசிகள் இந்திரனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு யாகத்தை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனைத் திருப்திப் படுத்தினால் மழை வருமென்று நம்பப்பட்டது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கிருஷ்ணர், தன் தந்தை நந்தமகாராஜாவிடம் அதுபற்றிப் பணிவுடன் கேட்டார். நந்தமகாராஜா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். யாகத்தின் நுணக்கங்களைச் சிறுவனான கிருஷ்ணரால் புரிந்துகொள்ள முடியாதென்று அவர் நினைத்தார். ஆனால் கிருஷ்ணர் விடவில்லை. அந்த விபரங்களை விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு நந்தமகாராஜா கூறினார்: இச்சடங்கு பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வருகிறது. மழை இந்திரனின் கருணையால் ஏற்படுவதாலும், மேகங்கள் அவரது பிரதிநிதிகள் ஆகையினாலும், தண்ணீர் நமது வாழ்வுக்கு மிக முக்கியமானதாலும், மழையில்லாமல் நாம் பயிரிடவோ, தானியங்களை விளைவிக்கவோ இயலாது. மழை பெய்யாவிட்டால் நாம் வாழ முடியாது. எனவேதான், இந்த யாகம் செய்யப்படுகிறது, என்று நந்தமகாராஜா கூறினார். இதைக் கேட்டபின் கிருஷ்ணர் பேசிய விதம் இந்திiனை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது. யாகத்தை நடத்த வேண்டாமென கிருஷ்ணர் விவாதித்தார். அதற்காக அவர் கூறிய காரணங்கள் இரண்டு. முதலாவதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல், இகவுலக நலன்களுக்காக தேவர்களை வழிபடத் தேவையில்லை. தேவர்களை வழிபட்டுப் பெறப்படும் நன்மைகள் தற்காலிகமானவை. இரண்டாவதாக, தேவர்களை வழிபடுவதால் கிடைக்கும் தற்காலிகமான நன்மைகளும் முழுமுதற்கடவுளால் வழங்கப்படுபவை. அவரின் அனுமதியின்றி யாரும் யாருக்கும் எந்த நன்மையும் வழங்க இயலாது.

கிருஷ்ணர் மேலும் கூறினார்: சுவர்க்க லோகத்தின் ஆளுனர் பதவியில் இருப்பதால் கர்வம் கொண்டிருந்த இந்திரனுக்கு பாடம் கற்பிப்பதற்காக, இந்திரனுக்கு செய்யும் யாகத்தை நிறுத்தி, கோவர்த்தன கிரிக்கான பூஜையை மேற்கொள்ள வேண்டும.; நாம் விருந்தாவனத்தில் வாழ்வதில் திருப்தி காண்கிறோம். நமது உறவு குறிப்பாக கோவர்த்தன கிரியுடனும் விருந்தாவனத்துடனும் ஏற்பட்டது. நமது ஊரிலுள்ள பிராமணர்களையும் கோவர்த்தன கிரியையும் திருப்திப் படுத்துவதற்கான யாகத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். எனப் பணிவாகக் கேட்டுக் கொண்டார். இறுதியில் நந்தமகாராஜா கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 6:06 pm

அன்று முதல் இன்றுவரை ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கோவர்த்தன பூசை நடத்தப்பட்டு வருகிறது. விருந்தாவனத்திலும், மற்ற இடங்களிலும், உலகெங்கிலும் உள்ள இஸ்கான் ஆலயங்களிலும் உணவு பெருமளவில் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக மக்களுக்கு வினியோகிக்கப் படுகிறது. நந்தமகாராஜாவும் ஏனைய ஆயர்களும் கோவர்த்தன பூசையை நிறைவேற்றி, மலையை வலம் வந்தார்கள். இந்த மரபையொட்டி இப்போதும் விருந்தாவனத்தில் இந்தப் பூஜை தினத்தன்று நன்றாக உடையுடுத்து, தம் பசுக்களுடன் கோவர்த்தன மலைக்குச் சென்று, பூஜையை நிறைவேற்றி மலையை வலம் வருகிறார்கள். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி கற்றறிந்த அந்தணர்களை வரவழைத்து வேதம் ஓதச் செய்து, கோவர்த்தன பூசையை நடத்திப் பிரசாதம் வழங்கினார்கள். விருந்தாவன வாசிகள் ஒன்றுகூடி, பசுக்களை அலங்கரித்து, அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள்.

கோவர்த்தன பூசையை நடத்தி வைத்த அந்தணர்கள், கோபாலர்களையும், கோபியரையும் ஆசிர்வதித்தார்கள். எல்லாம் சரிவர நடந்தேறிய பின், கிருஷ்ணர் மிகப் பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு, கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, இரண்டும் ஒன்றே, என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தினார். பின்னர், அங்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு முழுவதையும்; கிருஷ்ணர் உண்டார். கோவர்த்தன கிரியும் கிருஷ்ணரும் ஒன்றே என்ற கருத்து இன்றும் மதிக்கப் படுகிறது. அம்மலையின் கற்களை எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றைப் பூஜிக்கிறார்கள். உணவு முழுவதையும் உண்ட கிருஷ்ண வடிவமும், கிருஷ்ணர் தாமும் வௌ;வேறாக விழங்கி நின்றதால் கிருஷ்ணர் தாமும் மற்ற விருந்தாவனவாசிகளும் அந்த மாபெரும் மூர்த்திக்கும் கோவர்த்தன மலைக்கும் ஒருங்கே வழிபாடு நடத்தினார்கள். இவ்வாறு கோவர்த்தன பூசையை நடத்திய விருந்தாவன வாசிகள், வசுதேவர் மைந்தனான கிருஷ்ணரின் கட்டளைகளை நிறைவேற்றிய பின் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 6:06 pm

கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல்

விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தைக் கிருஷ்ணர் தடுத்து விட்டார் என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு, தன் கோபத்தை விருந்தாவன வாசிகளின் மீது காட்டினான். யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என்பதை அறிந்திருந்த போதிலும், பழியை நந்தமகாராஜாவின் தலைமையிலான ஆயர்களின் மீது தீர்க்க முற்பட்டான். பலவகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம் பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும் போதுதான் அழைக்கப்படும்.

விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் ஸாங்வர்த்தக மேகத்துக்கு கட்டளையிட்டபோது அப்பொறுப்பை ஏற்க அவை மிகவும் அஞ்சின. ஆனால் தேவேந்திரன், நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள் நானும் என் யானை மீது ஆரோகணித்து பெரும் புயல்கள் புடை சூழ உங்களுடன் வருகிறேன். விருந்தாவன வாசிகளைத் தண்டிப்பதில் என் சக்தி முழுவதையும் செலவிடத் தீர்மானித்திருக்கிறேன். என்று உறுதியளித்து மேகங்களை ஊக்குவித்தான்

இந்திரனின் கட்டளைப்படி பலவகையான, மிகவும் அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின் மேல் தோன்றி தம் பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இடியிடித்தது. மின்னல் மின்னியது, பலமான காற்று வீசிற்று. கூரிய அம்புகள் போல் நீர் தாரைதாரையாக வர்ஷித்தது. சற்று நேரத்தில் விருந்தாவனத்தின் நிலப் பகுதிகள், மேடு பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின. நிலமை மிக மோசமாயிற்று. குறிப்பாக மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று வீசியதால் விருந்தாவனத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின. அத் தொல்லைகளில் இருந்து விடுபட முடியாத மக்கள் கோவிந்தனின் பாத கமலங்களில் சரணடைந்தனர். அப்போது விருந்தாவன வாசிகள் எல்லோரும் கிருஷ்ணரை நோக்கி அன்புள்ள கிருஷ்ணா, நீர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இந்திரனின் கோபத்துக்கு ஆளாகித் தவிக்கும் எங்களைக் காப்பாற்றுவீராக. எனப் பிரார்த்தித்தார்கள்.

இந்தப் பிரார்த்தனையைக் கேட்ட கிருஷ்ணர், காலம் தவறிப் பெரும் மழை பெய்ததும், கடும் காற்று வீசியதும் தனக்குச் சேரவேண்டிய யாகம் நடைபெறாததால் கோபம் கொண்ட இந்திரனின் செயலால் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டார். இந்திரன் திட்டமிட்டு தன் கோபத்தை இவ்வாறு காட்டுகிறான். இந்த தேவன் தானே மிகப் பெரியவன் என்று எண்ணிக்கொண்டு தன் பலத்தைக் காட்டுகிறான். ஆகையால் என் தகுதியை நான் அவனுக்கு உணர்த்த வேண்டும். பிரபஞ்சக் காரியங்களை நடத்துவதில் அவன் தனியுரிமை பெற்றவனல்ல என்பதையும், நானே மேலாளரான உயரதிகாரி என்பதையும் உணர்த்தி, அவனது கர்வத்தை அடக்கி, விருந்தாவனத்திலுள்ள என் தூய பக்தர்களை நான் காப்பாற்ற வேண்டும். எனக் கிருஷ்ணர் நினைத்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 30, 2008 6:07 pm

பின்பு பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஒரு குழந்தை தரையில் இருந்து குடைக் காளானைப் பிடுங்குவதுபோல், கோவர்த்தன கிரியைத் தன் ஒரு கையில் தூக்கிக் கொண்டார். இது கிருஷ்ணர் கோவர்த்தன கிரியைத் தூக்கிய பரமான லீலையாகும். மலையைக் கையில் ஏந்தியவாறு தம் பக்தர்களிடம் கிருஷ்ணர் கூறினார்: அன்புள்ள சகோதரர்களே, அன்புள்ள தந்தையே, எனதருமை விருந்தாவன வாசிகளே, இப்போது நீங்கள் பத்திரமாக இந்த கோவர்த்தன கிரியாகிய குடையின் கீழ் வரலாம். என் கையிலிருந்து மலை நழுவி விழுந்து விடலாமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம். பலத்த மழையாலும் சூறாவளிக் காற்றாலும் நீங்கள் பெருத்த அவதிக்குள்ளாகி இருக்கிறீர்கள். எனவே நான் இந்த மலையைத் தூக்கி அதை உங்களுக்காக குடையாகப் பிடித்திருக்கிறேன். இந்தக் குடையின் கீழ் உங்களின் பசுக்களுடன் இப்போது நின்மதியாக இருங்கள். என்று கிருஷ்ணர் கூறியதும் விருந்தாவன வாசிகள் அப்பெரிய மலையினடியில் ஒன்று கூடி, தங்கள் உடைமைகளுடனும் மிருகங்களுடனும் பத்திரமாக இருந்தார்கள்.

விருந்தாவன வாசிகளும் அவர்களது பசுக்களும் அம்மலையின் அடியில் ஒரு கிழமை பசி, தாகம் இன்றி, வேறு எவ்விதமான கவலையும் இல்லாமல் இருந்தார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது இடது கையின் சுண்டு விரலின் நுனியில் அவ்வளவு பெரிய மலையை ஒரு வார காலம் நிறுத்தியிருந்ததைக் கண்டு ஆயர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அப்போது கிருஷ்ணருக்கு ஏழு வயதே நிரம்பியிருந்தது. கிருஷ்ணரின் அசாதாரணமான யோக சக்தியைக் கண்டு சுவர்க்கத்தின் அதிபதியான இந்திரன், இடியால் தாக்கப்பட்டவனைப் போல் திகைப்படைந்து உறுதி குலைந்தான். உடனே, அவன் மேகங்களையெல்லாம் விலகிச் செல்லும்படி கட்டளையிட்டான். மேகங்கள் எல்லாம் கலைந்து ஆகாயம் தெளிவு பெற்றதும் பலத்த காற்று வீசுவது நின்றது. அப்போது கோவர்த்தன கிரிதாரி என்ற பெயரைப் பெற்ற முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் கூறினார்: என்னருமை ஆயர்குல மக்களே, இப்போது நீங்கள் உங்கள் மனைவியரையும், குழந்தைகளையும், பசுக்களையும் அழைத்துக் கொண்டு உங்கள் உடமைகளுடன் வீட்டுக்குச் செல்லலாம். வெள்ளம் குறைந்து விட்டது. எனவே, நீங்கள் இங்கிருந்து செல்லலாம். என்று கூறினார். எல்லா மக்களும் தத்தம் உடைமைகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றார்கள். அவர்கள் அங்கிருந்து சென்றதும் பிரபுவாகிய கிருஷ்ணர் மெதுவாக கோவர்த்தன கிரியை கீழே இறக்கி அதன் உரிய இடத்தில் முன்பிருந்தபடி வைத்தார்.

எல்லாம் முடிந்த பின்பு விருந்தாவன வாசிகள் அனைவரும் கிருஷ்ணரை அணுகி அவரை மனமாரத் தழுவிப் பேருவகை அடைந்தார்கள். சுவர்க்கத்தில் ஸித்தலோகம், கந்தர்வ லோகம், சாரணலோகம் ஆகியவற்றைச் சேந்தவர்கள் தம் திருப்தியைத் தெரிவித்து பூமியின் மீது மலர் மாரி பொழிந்து பல வகையான சங்குகளையும் வாத்தியங்களையும் இசைத்தனர். இறுதியில் சுவர்க்க லோகத்தில் இருந்து தேவேந்திரன் வந்து, தான் இழைத்த குற்றத்தை உணர்ந்து, கிருஷ்ணரின் பாதகமலங்களில் விழுந்து வணங்கி, அவரைத் துதித்ததும் இந்தினின் கர்வம் அடங்கியது. பின் கிருஷ்ணரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு இந்திரன் சுவர்க்க லோகத்திற்கு திரும்பிச் சென்றான்.

இந்தியாவின் விருந்தாவனத்துக்குச் செல்பவர்கள், விருந்தாவனத்திலிருந்து ஏறக்குறைய 22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இடது கையின் சுண்டுவிரலின் நுணியில் குடையாகத் தூக்கி வைத்திருந்த கோவர்த்தன கிரியைத் தரிசிக்கலாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக