|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by வை.பாலாஜி Today at 10:38 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்
Page 1 of 1 • Share •
கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்
| கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல் |
வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும். ரீஸ்டோரஷன் என்றால் என்ன? கணினி நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது அதனை பேக்-அப் செய்து இதர பார்ட்டிஷனில் சேமித்து, கணினி மக்கர் செய்யும்போது சேமித்த கணினியின் பேக்-அப்பை கொண்டு கணினியின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே ரீஸ்டோரேஷன் ஆகும். இன்றைய பதிவில் நாம் அதனை பற்றிதான் விபரமாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். பொதுவாக கணினியை இரண்டு வகையாக பிரிப்போம் ஒன்று Branded மற்றொன்று Assembled இதில் Branded கணினியாக இருந்து அதனை நீங்கள் Genuine OS உடன் வாங்கினால் அந்த கணினி தயாரிப்பாளரே உங்களுக்கு ஒரு ரீஸ்டொரேஷன் cd/dvd யை அளிப்பார் (Dell,Acer,HP etc..). விண்டோஸில் ஏதாவது பிழை ஏற்பட்டு பூட் ஆக மறுக்கும் போது இந்த cd/dvd யை போட்டு ரீஸ்டோரேஷன் செய்துகொண்டு நீங்கள் கணினியை எந்த தேதியில் வாங்கினீர்களோ அந்த தேதியின் நிலமைக்கு கொண்டு வரலாம். இதே Branded கணினியை Free DOS ஸாக வாங்கினீர்க்ளேயானால், இந்த ரீஸ்டோரேஷன் சாத்தியம் இல்லை. இந்த சூழ்நிலையில் நாம் தான் ரீஸ்டோரேஷன் உருவாக்க வேண்டும் (IBM,DELL,ACER etc without OS). அடுத்ததாக Assembled கணினி, இது நமக்கு ஏற்ற கணினியை நாமே தனித்தனியாக வாங்கி சர்வீஸ் Engg மூலமாக உருவாக்குவது ஆகும். இங்கு பிரான்ஸ் நாட்டில் Assembled கணினியின் எண்ணிக்கை மிகக்குறைவே, இங்கு Branded கணினி முறையான OS உரிமம் பெற்றே தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான கணினிகள் Assembled கணினிகளே. அவ்வாறு கணினியின் பாகங்களை கடையில் வாங்கும்போது நம்மில் பலரும் விண்டோஸ் தொகுப்பை பணம் செலுத்தி வாங்குவது கிடையாது. எனவே தான் Pirated விண்டோஸ் தொகுப்புகளை உலகில் அதிகமாக பயன்படுத்துவது ஆசியாவில் தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. என்ன செய்வது மைக்ரோசாப்டின் விண்டோஸ் தொகுப்புகளின் விலை அப்படி. அதே நேரத்தில் பைரேட் செய்து பயன்படுத்துவதும் தவறு. இந்த ரீஸ்டோரேஷனால் என்ன பயன்? கணினி நல்ல நிலமையில் இயங்கிக்கொண்டிருக்கும் போதே ரீஸ்டோரேஷன் உருவாக்குவதால் சில நன்மைகள் நமக்கு கிட்டும். வன்தட்டை (Hard Disk) பார்மேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் கணினியின் வந்தட்டிற்க்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. வன்தட்டை அடிக்கடி பார்மேட் செய்வது நல்லதல்ல. விண்டோஸ் சிடியை தேடி அலைய வேண்டாம். டிரைவர் சிடி இல்லையே என்ற கவலை வேண்டாம். மேலும் நீங்கள் விண்டோஸ் Genuine தொகுப்பு பயன்படுத்தினால் அதனை மைக்ரோசாப்டில் வருடத்திற்கு 4 முறை மட்டுமே இணையத்தில் ஆக்டிவேஷன் செய்ய இயலும். விண்டோஸை புதிதாக நிறுவும் நேரத்தை காட்டிலும் விரைவாக ரீஸ்டோரேஷனை செய்து கணினியை இயக்கி விடலாம். இதுபோன்ற நன்மைகள் இருப்பதால் கணினியை உங்களது தேவையான மென்பொருட்களை நிறுவிய பின் ரீஸ்டோரேஷன் உருவாக்கி அதனை பேக் அப் செய்து பாதுகாப்பாக சேமித்துவைப்பது சாலச்சிறந்தது. நம்மில் பலரும் இதனை செய்வது கிடையாது. விண்டோஸில் பிழை ஏற்பட்டு கணினி பூட் ஆக மக்கர் பண்ணும் போது உடனே பார்மேட் செய்து விண்டோஸை புதிதாக நிறுவிவிடுவோம். பல சர்வீஸ் Engg களும் பரவலாக இதைத்தான் செய்கிறார்கள். நாங்கள் எங்களின் பல வாடிக்கையாளர்களுக்கு பல கணினிகளை Assembling செய்து தந்திருக்கின்றோம், தந்துகொண்டும் இருக்கிறோம். இவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக நாங்கள் அவர்களுக்கு ரீஸ்டோரேஷன் செய்து எங்களது தகவலையும் அந்த ரீஸ்டோரேஷன் மென்பொருளிலேயே எடிட் செய்து தந்துவிடுவோம். கணினி மக்கர் செய்யும் போது அவர்களது கணினியில் ரீஸ்டோரேஷன் செய்து 30 நிமிடத்தில் கணினியை இயக்கிவிடுவோம்(Hardware ல் பிழை இல்லாமல் இருந்தால்). இதுபோல நீங்களும் ரீஸ்டோரேஷன் உருவாக்கிக்கொண்டு ரீஸ்டோரேஷன் செய்ய கற்றுக்கொண்டால் கணினியில் பிழை ஏற்படும் போது எளிமையாக ரீஸ்டோரேஷன் செய்துகொள்ளலாம். இவ்வாறு ரீஸ்டோரேஷன் உருவாக்க எந்த மென்பொருள் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நாங்கள் எங்களது வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவது Drive Image XML என்ற இலவச மென்பொருளைத்தான். பொதுவாக ரீஸ்டோரேஷன் செய்யும் மென்பொருள்கள் எல்லாம் விலைகொடுத்து வாங்கும் சூழ்நிலையில் Drive Image XML இன் பயன்பாடு நன்றாக இருக்கின்றது. இதனை கணினியில் நிறுவி பேக்-அப் செய்யலாம். பேக்-அப் செய்யும் போது அந்த கோப்பின் அளவை குறைக்க Compression ம் வைத்திருக்கின்றனர். இது விண்டோஸ்,விஸ்டா,விண்டோஸ்7 க்கு சப்போர்ட் செய்கின்றது. FAT,FAT16,FAT32,NTFS format களை ஆதரிக்கின்றது. Drive Image XML இன் குறைபாடு இலவசமாக கிடைக்கும் இந்த Drive Image XML இல் உங்களது விண்டோஸ் பூட் ஆகவில்லை என்றால் ரீஸ்டோர் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கின்றது. அதாவது Drive Image XML அளிக்கும் இலவச plug in ஐ வைத்து நீங்களாக தான் Windows Pre Enviroinment அல்லது Bart Pre Enviroinment துணைக்கொண்டு bootable cd உருவாக்கி தான் உங்களது கணினியை ரீஸ்டோரேஷன் செய்ய இயலும் என்பது சாதாரண கணினி பயனாளர்களுக்கு சாத்தியமில்லை என்பது கொஞ்சம் வருதப்படவேண்டிய விஷயம். |
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









