|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்கby அசுரன் Today at 12:20 am
» கிளாஸ் பெயிண்டிங்
by அசுரன் Today at 12:06 am
» பகத்சிங் நாத்திகரா?
by அசுரன் Today at 12:03 am
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by ராஜு சரவணன் Today at 12:01 am
» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by யினியவன் Yesterday at 11:34 pm
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by யினியவன் Yesterday at 11:18 pm
» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
by யினியவன் Yesterday at 10:48 pm
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by யினியவன் Yesterday at 10:43 pm
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ரா.ரா3275 Yesterday at 10:37 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by ரா.ரா3275 Yesterday at 10:35 pm
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:16 pm
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:57 pm
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:55 pm
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by யினியவன் Yesterday at 8:55 pm
» பொதுஅறிவு துளிகள்
by Muthumohamed Yesterday at 8:53 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 8:51 pm
» குளிரூட்டியில்(Freezer) வைத்து கைப்பேசி பேட்டரியின் திறனை அதிகரிக்கலாமா?
by மாணிக்கம் நடேசன் Yesterday at 8:50 pm
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by ansaralis Yesterday at 8:14 pm
» எனது 8000 -மாவது நகைச்சுவை பதிவு - ஐபிஎல் ஸ்பாட் பிக்சிங் காமெடி கலாட்டா...
by Muthumohamed Yesterday at 8:13 pm
» எம்பிராய்டரி
by madhukrish Yesterday at 7:55 pm
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by ansaralis Yesterday at 7:48 pm
» வாஸ்து - help
by vishwajee Yesterday at 7:39 pm
» இதோ எனது ஆசை !
by அகல் Yesterday at 7:24 pm
» கவிதையில் யாப்பு
by ரமணி Yesterday at 6:19 pm
» வழக்கொழிந்த அளவுகள்
by ராஜா Yesterday at 6:04 pm
» ரமணியின் கதைகள்
by ரமணி Yesterday at 5:53 pm
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by ராஜா Yesterday at 5:48 pm
» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by balakarthik Yesterday at 5:07 pm
» பயன்தரும் தமிழ் மின்நூல்களைப் பதிவிறக்க...
by yarlpavanan Yesterday at 5:05 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம முத்துராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by ராஜா Yesterday at 4:59 pm
» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by balakarthik Yesterday at 4:54 pm
» என் தனிமை தருணங்கள் .....
by balakarthik Yesterday at 4:49 pm
» கட்லட்
by balakarthik Yesterday at 4:43 pm
» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by சதாசிவம் Yesterday at 4:17 pm
» 1000 பதிவுகள் கடந்த நம்ம ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ...
by balakarthik Yesterday at 4:17 pm
» அறிமுகம்
by balakarthik Yesterday at 4:09 pm
» 20000 பதிவுகளை கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Yesterday at 4:05 pm
» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Yesterday at 3:20 pm
» மகாபாரதம் - திரு.சுகிசிவம் அவர்களின் 20 மணிநேர சொற்பொழிவு MP3
by ராஜா Yesterday at 2:44 pm
» எனது முஸ்லிம் சகோதரனை இன்று காப்பாற்ற முடியவில்லையே !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 12:18 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
Page 1 of 1 • Share •
ஜோதிடம்: அடிப்படைப் பாடம்

1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன?
மேஷம்,
ரிஷபம்,
மிதுனம்,
கடகம்,
சிம்மம்,
கன்னி,
துலாம்,
விருச்சிகம்,
தனுசு,
மகரம்,
கும்பம்,
மீனம்.
2.
ராசி அதிபதிகளின் பெயர் என்ன?
மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி
மீனம் - குரு
3. 12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன?
அட்டவனை உள்ளது பார்க்கவும்


4. லக்கினம் என்பது என்ன?
ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்
பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்
உதாரணம். சித்திரை மாதம் முதல் தேதியன்று (That is on April 14th) காலை
6 மணி முதல் 8 மணி வரை மேஷ லக்கினம்.ஆவணி மாதம் (August 17th or 18th) அதே காலை நேரத்தில் உதய
லக்கினம் சிம்மம் இப்படி. அதையடுத்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும்
அடுத்தடுத்த லக்கினம் வரிசைப்படி மாறிக்கொண்டிருக்கும்.
5. லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?
லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால்
ஒவ்வொரு ராசியும் 2,3,4,5,6,7,8,9,10,11, 12 என்று வரிசைப்படி வரும்.
6. சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?
ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும்.
அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.
7. லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?
பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்,தசாபுத்தி என்பது ரோடு,கோள்சாரம் என்பது டிரைவர்.லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து ஜாதகனுடைய
வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன் பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள் கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.
8. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?
ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.
9. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?
ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்
10. தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?
ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.
11. தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?
சூரிய தசை - 6 ஆண்டுகள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை - 7 ஆண்டுகள்
ராகு தசை - 18 ஆண்டுகள்
குரு தசை - 16 ஆண்டுகள்
சனி தசை - 19 ஆண்டுகள்
புதன் தசை - 17 ஆண்டுகள்
கேது தசை - 7 ஆண்டுகள்
சுக்கிர தசை - 20 ஆண்டுகள்
மொத்தம் 120 ஆண்டுகள்
ஒரு பார்முலா உள்ளது:
Major Period x Sub Period = Number of months & Days of the Sub- Period (In the three digit answer, first 2 digits are months and the last digit multiplied by three is the days
12. கோள்களின் பெயர் என்ன? அவைகளின் சொந்த வீடு எது?
சூரியன் - சிம்மம்
சந்தின் - கடகம்
(இந்த இரண்டு கோள்களுக்கும் ஒரு வீடு மட்டுமே சொந்தம்)
செவ்வாய் - மேஷம், விருச்சிகம்
புதன் - மிதுனம், கன்னி
குரு - மூலம், மீனம்
சுக்கிரன் - ரிஷபம், துலாம்
சனி - மகரம், கும்பம்
(இந்த ஐந்து கிரகங்களுக்கு
தலா 2 வீடுகள் சொந்தம்)
ராகு - சொந்த வீடு இல்லை
கேது - சொந்த வீடு இல்லை
13. அவைகள் உச்சம் அல்லது நீசம் ஆவது என்றால் என்ன?எங்கே ஆகும்?
ஒரு கிரகத்திற்கு அதன் சொந்த வீட்டில் 100% சக்தி (Power) உண்டு
உச்ச வீட்டில் சொந்தவீட்டைப்போல இரண்டு மடங்கு சக்தி உண்டு!
கோள்கள் "உச்சம்" அடையும் இராசி
சூரியன் - மேஷத்தில்,
சந்திரன் - ரிஷபத்தில்,
குரு - கடகத்தில்
புதன் - கன்னியில்
சனி - துலாமில்
ராகு,கேது - விருச்சிகத்தில்
செவ்வாய் - மகரத்தில்
சுக்கிரன் - மீனத்தில்
=======
நீசவீட்டில் ஒரு கிரகத்திற்கு சுத்தமாக வலிமை இருக்காது.
கோள்கள் "நீசம்" அடையும் இராசி
சூரியன் - துலாமில்,
சந்திரன் - விருச்சிகத்தில்,
செவ்வாய் - கடகத்தில்,
புதன் - மீனத்தில்
குரு - மகரத்தில்
சுக்கிரன் - கன்னியில்
சனி - மேஷத்தில்
ராகு, கேது - ரிஷபத்தில்
14.அவைகளின் நட்பு வீடு, பகை வீடுகள் எவை?
Chart கொடுக்கப்பட்டுள்ளது
கேந்திரம் என்பது லக்கினத்தில் இருந்து 4, 7,10ஆம் வீடுகள்
திரிகோணம் என்பது லக்கினம், 5, 9 ஆம் வீடுகள். கேந்திரம் சிறப்பானது அதைவிட திரிகோணம் இன்னும் சிறப்பானது.இந்த வீடுகளில் அமரும் கிரகங்கள் வலிமை
பெற்றுவிடும்

15. அஸ்தமனம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?
ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம் இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும் கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம் 10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்
16. அஷ்டகவர்கம் என்றால் என்ன?
அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின் தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8 ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337
(யாராக இருந்தாலும் 337 மட்டுமே)
இந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை தீமைகளை சுலபமாக அறியலாம்.
இதற்கு பதிவின் சைடுபாரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளைப் பயன்படுத்தவும்.
17.நவாம்சம் என்றால் என்ன? அது எதற்குப் பயன்படும்?
Navamsam is the magnified version of a Rasi Chart
ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக்
காட்டுவதுதான் நவாம்சம்.(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)
18. காரகன் என்பவன் யார்? எது எதற்கு யார் யார் காரகன்?
காரகன் என்பவன் authority ஒரு வீட்டின் அதிபதி என்பது அந்த வீட்டின் சொந்தக்காரன் (Owner)
காரகன் என்பவன் அந்த வீட்டின் செயல்களுக்கு உத்தரவு போட்டு நடத்திவைக்கும் வலிமை உடையவன்(authority)
(உதாரணத்திற்கு ஒன்பதில் சனி இருந்தால், அப்பாவிற்கும் மகனுக்கும் ஒத்துவராது.
ஆனால் ஜாதகனுடைய ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்தால் நல்ல தந்தையாகக் கொடுப்பான்.
ஒத்துவராமைக்கு இவன் காரணமாக இருந்தாலும் தந்தை அனுசரித்து அன்பாக இருப்பார். அதற்கு காரகன் காரணமாக அமைவான்.)
தந்தைக்குக் காரகன் சூரியன் உடல் காரகன் சூரியன் தாய்க்குக் காரகன் சந்திரன் மன காரகன் சந்திரன்
ஆயுள் காரகன் சனி தொழில் காரகன் சனி களத்திர காரகன் சுக்கிரன் தன (பணம்) காரகன் குரு புத்திரகாரகன் குரு
கல்வி,புத்தி காரகன் புதன் ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்!
நன்றி:
SP.VR.SUBBAIYA

சரவணன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 9073
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
பகிர்வுக்கு நன்றி பிச்ச அவர்களே....

சரண்யா- இளையநிலா

- பதிவுகள்: 534
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 0
Re: ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
எளிமையாக விளக்கும் அற்புத பதிவு... நன்றி சரா,,,!

கலைவேந்தன்- வி.ஐ.பி

- பதிவுகள்: 13412
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 640

Re: ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
குரு - மூலம், மீனம்-------------------தனுசு , மீனம் என்று இருக்க வேண்டும்.

JUJU- பண்பாளர்
- பதிவுகள்: 185
சேர்ந்தது: 27/02/2011
மதிப்பீடு: 23
Re: ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
தொடரட்டும் தங்கள் சேவை. நன்றி

JUJU- பண்பாளர்
- பதிவுகள்: 185
சேர்ந்தது: 27/02/2011
மதிப்பீடு: 23
Re: ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
அரிய தகவல்கள் சரவணா அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9997
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 874

Re: ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
பிச்ச - கிளி ஜோசியம் தெரியுமா ?

குடந்தை மணி- இளையநிலா

- பதிவுகள்: 455
சேர்ந்தது: 11/06/2010
மதிப்பீடு: 13

Re: ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
நன்றி பிச்சு மாமா

கௌசிகன்- புதியவர்

- பதிவுகள்: 40
சேர்ந்தது: 01/05/2011
மதிப்பீடு: 23
Re: ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
எது மாமாவா?.......கௌசிகன் wrote:நன்றி பிச்சு மாமா

சரவணன்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள்: 9073
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
12. கோள்களின் பெயர் என்ன? அவைகளின் சொந்த வீடு எது?
சூரியன் - சிம்மம்
சந்தின் - கடகம்
(இந்த இரண்டு கோள்களுக்கும் ஒரு வீடு மட்டுமே சொந்தம்)
செவ்வாய் - மேஷம், விருச்சிகம்
புதன் - மிதுனம், கன்னி
குரு - மூலம், மீனம்
சுக்கிரன் - ரிஷபம், துலாம்
சனி - மகரம், கும்பம்
(இந்த ஐந்து கிரகங்களுக்கு
தலா 2 வீடுகள் சொந்தம்)
ராகு - சொந்த வீடு இல்லை
கேது - சொந்த வீடு இல்லை
இதில் குரு வுக்கு - தனுசு, மீனம் சொந்த வீடாகும்.
ராகு, கேதுக்கு - அவர்கள் இருக்கும் இடமே சொந்த வீடாகும். மாற்றி விடுங்கள் நண்பா!

ANTHAPPAARVAI- தளபதி

- பதிவுகள்: 1681
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121
Re: ஜோதிடம்: அடிப்படைப் பாடம்
பிச்ச க்கு எப்ப சுக்ர தெசை அடிச்சது - குபேரன் ஆனதற்கு !

மனோஜ்- இளையநிலா

- பதிவுகள்: 791
சேர்ந்தது: 12/02/2010
மதிப்பீடு: 11
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











