புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10 
11 Posts - 50%
heezulia
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10 
53 Posts - 60%
heezulia
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு


   
   

Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 12:58 pm

First topic message reminder :



மக்கா வாழ்க்கை


பரம்பரை

ஆசியாவிலுள்ள பல நாடுகளில், தென்வடலாக 1500 மைல் நீளமும் கிழமேலாக 800 மைல் அகலமுள்ள பாலைவனப் பிரதேசமான அரபு நாடும் ஒன்று. அந்த நாடு செழிப்பால் வறண்ட நாடு. ஆயினும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் ஒளிதில் தொடர்பு கொள்ளத்தக்க முக்கியமான ஓர் இடத்தில் அது அமைந்திருக்கிறது. எனவே தான் மக்கா பண்டைக்காலங்தொட்டு ஒரு முக்கிய வியாபார கேந்திரமாகத் திகழ்ந்து வந்துள்ளது.

இவ்வித நடு நாயகமான ஓர் இடத்தில் அரபு நாடு அமைந்திருந்த போதிலும், வளமில்லாத பாலைவனப் பிரதேசமாக இருக்கும் காரணத்தினால், சுற்றுப்புற நாடுகளை அரசாண்ட அரசர்கள் எவரும் அரபு நாட்டின் மீது ஆசையோ, அக்கறையோ கொண்டு ஆட்சி கொள்ளமுன் வரவில்லை. ஆனதால், அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரலாயினர். இங்கு வாழ்ந்த வழுகின்ற மக்களை, நூஹ் நபியவர்களின் புத்திரர் ஷாம் என்பவரின் வழித்தோன்றல்களான ஆதிப் பழங்குடி அரபியர்கள், பாலைவன அராபியர்கள், குடியேறிகளான அந்நியர்கள் என மூன்று பெரும் பிரவுக்குள் அடக்கலாம்.

அரபுநாட்டில் குடியேறி வசித்த அந்நியர்களில் ஆபிரஹாம் தீர்க்கதரிசி என்னும் இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயீல் நபியும் சேருகின்றனர். இப்ராஹீம் நபி இராக்கிலுள்ள கல்தூனியா என்ற இராச்சியத்தைச் சேர்ந்தவர். இவருடைய சிறிய தந்தை ஆஸர் என்பவர் கோயில்களுக்கு உருவ வழிபாடு செய்வோருக்கும் விக்கிரகங்கள் செய்து கொடுத்து வந்தார். இப்ராஹீம் நபி விக்கிரக வணக்கத்தை கண்டித்து ஏக இறைவனை வணக்குமாறு மக்களிடையேப் பிரச்சாரம் செய்தார். இதனால் அவரின் சிறிய தந்தையும் அந்நாட்டு அரசன் நம்ரூது என்பானும், உற்றார் உறவினரும் இவரை வெறுத்து அந்நாட்டை விட்டும் வெளியேற்றிவிட்டனர்.

எனவே, அவர் பாலஸ்தீனம் சென்று அங்கு கன்ஆன் என்னும் இடத்தில் தங்கினார். பின் அங்கிருந்து வெளியாகி சிரியாவுக்கு வந்து வசித்த போது தமது சிறிய தந்தையின் மகளான சாரா என்ற பெண்மணியை மணம் செய்து கொண்டார். சில காலஞ்சென்று மீண்டும் சொந்த நாட்டுக்கு வந்து இறைவனின் மகத்துவத்தைப் பற்றியும், விக்கிரக வணக்கத்தைக் கண்டித்தும் பிரச்சாரம் செய்யலானார். அதனால் அரசன் நம்ரூது அவரை நெருப்புக் குண்டத்துள் எறியச் செய்தான். இறைவனின் ஆணைப்படி அந்நெருப்பு அவருக்கு குளிர்ந்த புங்காவாக மாறி விட்டது. பின்னர் சொந்த நாட்டைத் துறந்து மனைவி சாராவுடன் எகிப்து நாட்டுக்குச் சென்றார். எகிப்து அரசன் ரக்கிய்யூன் என்பான் இப்ராஹீம் நபியைக் கண்ணியப்படுத்தி பல வெகுமதிகளுடன் அரசகுமாரி ஹாஜரா என்ற மங்கையையும் பரிசிலாகக் கொடுத்தனுப்பினான்.

இப்ராஹீம் நபியவர்களுக்கும் வயதாகி வந்தது. ஆயினும் சாராவைக் கொண்டு மகப்பேறு கிட்டாதிருந்தது. எனவே ஹாஜராவையும் அவர் திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் ஹாஜராவுக்கு ஆண் மகவு ஒன்று பிறந்தது. அவ்வன்புக் குழந்தைக்கு இஸ்மாயீல் என அழகுத் திருப்பெயர் சூட்டி மிக்கப் பற்றுப் பாசத்துடன் வளர்த்தார்கள். இப்ராஹீம் நபியவர்களுக்கு அது சமயம் 86 வயதாக இருந்தது. அதன்பின் மூத்த மனைவி சாராவுக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு இஸ்ஹாக் எனப் பெயரிட்டார். அது போழ்து இப்ராஹீம் நபி 99 வயதை அடைந்திருந்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:13 pm


ஜைது பின் ஹாரிதா (ரலி)




திருமணத்திற்குப் பின் கதீஜா நாச்சியார், பெருமானாரின் பணிவிடைக்காக ஜைத் பின் ஹாரிதா என்ற பதிமூன்று வயதுச் சிறுவரை அடிமையாக விலைக்கு வாங்கி ஒப்படைத்ததார். அச்சிறுவரைத் தாம் அடிமையாக வைத்திருக்க மனமில்லாமல் விடுதலை வழங்கி, விருப்பமானால் தம்மிடம் இருந்து வருமாறும் இல்லாவிடின் தம் பெற்றோரிடம் திரும்பிச் செல்லலாமெனவும் நபிகள் பிரான் நவின்றார்கள். ஆனால், ஜைது அண்ணலாருடனேயே இருந்து அவர்களுக்கு பணிவிடை புரியப் போவதாகக் கூறி கதீஜா நாசச்சியாரின் இல்லத்திலேயே இருந்து கொண்டார். சில தினங்களுக்குப் பின் ஜைதின் தந்தை தன் மகனை மீட்டிச் செல்வதற்காகப் பணத்துடன் மக்கா வந்து பெருமானாரை அணுகி விஷயத்தைச் சொன்னார். ழைஜதுக்குத் தாம் ஏற்கனவே உரிமையளித்து விட்டதாகவும், மீட்புத்தொகை செலுத்தாமலே அவரைக் கூட்டிச் செல்லலாமெனவும் அண்ணலார் ஹாரிதாவிடம் கூறினார்கள். பெருமகிழ்ச்சியுற்ற ஹாரிதா தம் மகனை உடன்வருமாறு அழைத்தபோது அச்சிறுவர் தாம் பெருமானாரிடமிருந்து பணிவிடை செய்வதையே பெரும் பேறாகக் கரதுவதாகக் கூறி உடன் செல்ல மறுத்துவிட்டார். ஹாரிதா ஒருவகையில் ஏமாற்றமும் மற்றொரு வகையில் பெருமானாரின் பெருந்தன்மையின் மீது பெருமதிப்பும் உற்றவராக வீடு திரும்பினார்.

பெருமானார் ஜைதைத் தங்கள் வளர்ப்பு மகனாகக் கருதி அன்புடன் அழைத்து வந்தனர். அவ்விளவலுக்கு வயது வந்தபோது தம் சொந்த அத்தை உமைமாவின் மகள் அழகு சௌந்தர்யமுள்ள ஜைனபைத் திருமணம் செய்வித்தார்கள். குலப்பெருமையின் காரணமாக அத்திருமணம் ஓராண்டுக்குப் பின் பிரிவனையில் முடிந்தது. ஓர் ஹபஷி அடிமையின் மனைவியாக இருந்தார் என்பதற்காக குறைஷி குலத்ததவர் எவரும் ஜைனபை அவர் மிக்க அழகுள்ளவராகயிருந்தும், மறுமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. நீண்ட நாள்களுக்குப் பின், தம்மால் தம் அத்தை மகள் வாழாவெட்டியாக இருந்து வருவதைக் கருதிப் பெருமானார் அப்பெண்மணியை கடிமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ழைஜனப் மிக்க இறை பக்தியுள்ளவராயிருந்தமையால் திருவசனம் வெளியாகி அவனது நாட்டமறிந்த பின்பே திருமணத்திற்கு உட்பட்டார். ழைஜனபுக்கு மண விடுதலையளித்த பின் ஜைது பெருமானாரின் அடிமைப் கெண்ணும், வளர்ப்புத் தாயும் ஹபஷி இனத்து மாதுமான உம்மு அய்மனை மணந்து அவர் மூலம் உஸாமா என்ற ஆண் மகனையும் பெண் மக்களையும் பெற்றார்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:15 pm

அபூபக்கர் ஸித்தீக் (ரலி)


நாட்கள் பல சென்றன, நபிகள் கோமானுக்கு ‘வஹீ’ வந்து கொண்டிருப்பதும் அவர்கள் புதிய மார்க்கம் உன்றை மக்களிடையே போதித்து வருகிறார்கள் என்பதும் மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு மத்தியில் பரவியது. அது சமயம் அப்துல் கஃபாஅபூ பக்கர் (ரலி) என்ற ஜவுளி வர்த்தகர் ஒருவர் சிரியா சென்று வியாபாரம் செய்து விட்டு மக்கா திரும்பிக் கொண்டிருந்தார். இவர் தந்தை உதுமான் அபூ குஹைபா என்பவராவார். தாயார் உம்முல்கைர் ஸல்மா என்பதாகும். சிரியாவிலிருந்து வரும் வழியில் மக்காவை அடுத்து, குறைஷிகள் சிலரை அப்துல் கஃபா சந்தித்த போது ஊர் நடப்புகள் பற்றி விசாரிக்கலானார். தநற்கவர்கள், பெருமானார் தம்மை நபியாகவும் தமக்கு வேதம் இறங்குவதாகவும் கூறிக் கொண்டு புதிய மார்க்கமொன்னைப் பிரச்சாரம் செய்து வருவதாகவும் தங்களின் (கல்) தெய்வங்களை இழித்துரைப்பதாகவும் இதுபற்றி ஊரில் ஒரே குழப்பமும் கொந்தளிப்புமாக இருந்து வருவதாகவும் எடுத்துச் சொல்லி அண்ணலாரை அடாத வார்த்தைகள் கொண்டு தாக்கிப் பேசினார்கள். அவர்கள் கூறியவை அனைத்தையும் கேட்ட அப்துல் கஃபா அமைதியுடன், “அல் அமீன்” அவ்வாறு கூறுவாரானால் அது உண்மையாகத் தான் இருக்க வேண்டும். அது பற்றி சந்தேகிக்கத் தேவையில்லை. முஹம்மது அவர்களின் தாவாவை நான் மனப்புர்வமாக ஒப்புக் கொள்கிறேன்” எனக்கூறியவராய் மக்கா விரைந்தார். அண்ணலாரை அண்மி அனைத்தையும் கேட்டறிந்தார். அது வரை வெளியாகியிருந்த வேத வசனங்களையும் செவி குளிர இதயம் இனிக்க ஓதக் கேட்டார். அக்கணமே கலிமாச் சொல்லி ஈமான் கொண்டார். இஸ்லாத்தின் அணியில் இணைந்தார்.

இவரது இயற்பெயர் அதீக் என்பதாகும். இஸ்லாத்தைத் தழுவிய பின் இவர் தம்மை “அப்துல்லாஹ்” (இறைவனின் அடியான்) என அறிவித்துக் கொண்டார். ஆயிஷா திருமணத்திற்குப் பின் “அபுபக்கர்” (கன்னியின் தந்தை) என அழைக்கப்பட்டார். இப்பெயர் இவருக்குப் பெருமானார் அவர்களால் சூட்டப்பட்டது எனவும் கூறுகின்றனர். பெருமானாரின் விண்ணேற்றம் (மிஃராஜ்) பற்றிய செய்தியை இவர் தயக்கமின்றி ஏற்றதால் பெருமானார் இவரை “சித்தீக்” (மெய்ப்பித்தவர்) என்ற அடைமொழியுடன் “அபுபக்கர் சித்தீக்” என அன்புகனிய அழைத்து வந்தார்கள்.

குறைஷிகளின் மத்தியில் அபுபக்கர் (ரலி) ஒரு பெரிய வர்த்தகராகவும், செல்வந்தராகவும், நாணயமானவராகவும் திகழ்ந்தார். கூரிய மதியும் நினைவாற்றலும் பெற்றவர் எனவும் திறமைமிக்கவர் எனவும், தீர்ப்பு வழங்குவதில் நீதவான் எனவும் ஒழுக்கத்தில் உயர்ந்தவர் எனவும் புகழ் பெற்றிருந்தார். இத்தகு சிறப்புகளையுடைய ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தது பெருமானாரின் புதிய இயக்கத்திற்கு முதுகெலும்பாக அமைந்து விட்டது என்றே கூற வேண்டும். அபுபக்கர் (ரலி) அண்ணலாரின் இளமைப் பருவத்துத் தோழர். சுமார் இரண்டு அல்லது மூன்று வயது இளையவர், மது அருந்தாதவர், உருவ வழிபாட்டில் ஈடுபடாதவர், நாயகத் திருமேனியை நன்கு அறிந்தவர்.

நபித்துவம் அருளப்பெற்ற மூன்று ஆண்டுகள் மட்டும் இஸ்லாம் இரகசியமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது. அதுவரை, வாலிபர், நடுத்தர வயதினர், ஏழைகள், செல்வந்தர் ஆகியோர் ஆண்களும் பெண்களுமாக நாற்பது பேர் மட்டுமே இஸ்லாத்தின் அணியில் வந்து இணைந்தனர். இவர்கள் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி) என்னும் தனவந்தர் குறிப்பிடத் தக்கவர். இவரே பெருமானாரின் இரு புதல்விகளைத் திருமணம் செய்யும் பெருமையையும் பாக்கியமும் பெற்ற இஸ்லாத்தின் மூன்றாம் கலீஃபா ஆவார். மக்காவெங்கும் புதிய மதம் பற்றிய பேச்சு மக்களிடையே பரவி வந்தது.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:15 pm

பகிரங்கப் பிரச்சாரம்


நபித்துவம் நான்காம் ஆண்டு ஆரம்பம். இப்போது இஸ்லாத்தைப் பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்யுமாறும், தம் குடும்பத்தினர், உறவினர், செல்வர், செல்வாக்குடையோர், அனைவரையும் அதன் பால் அழைக்குமாறும் இனியும் தயங்கித் தாமதித்துக் கொண்டிருந்தால் தண்டனைக்காளாக நேருமெனவும் வானவர் ஜிப்ரீல் மூலம் இறைவனின் உத்தரவு இறங்கியது.

உடனே நபிகள் நாதர், ஸபா குன்றின் மீது ஏறி நின்று நெருக்கடி காலங்களில், மக்காவின் மக்கள் அக்குன்றின் மேல் ஏறி நின்று ஜனங்களைக் கூவி அழைப்பது போன்று, சப்தமிட்டு அழைத்தார்கள். எல்லா மக்களும் அங்கு வந்து ஒன்று சேர்ந்தனர். அவர்களை நோக்கிப் பெருமானார், “இந்த மலையின் பின்புறத்தில் எதிரிப்படையொன்று நம்மைத் தாக்க வந்திருப்பதாக நான் கூறினால் அதனை நீங்கள் நம்புவீர்களல்லவா! என வினவினார்கள். அதற்கு அனைவரும் ஒருமித்த குரலில் “நீர் மறந்தும் பொய் பேசா அல்அமீன் என்பதை நாங்கள் அறிவோமாதலின் உம் வார்த்தைகளை நிச்சயமாக நம்பவே செய்வோம்” என பதிலிறுத்தனர். அது கேட்ட அண்ணலார் “அவ்வாறாயின், நான் சொல்வதைக் கேளுங்கள்! நீங்கள் ஏகனாகிய இறைவனை மட்டுமே வணங்க வேண்டுமெனவும், அவனுக்கு இணை, துணை கற்பித்து விக்கிரகங்களை வணங்கக்கூடாதெனவும் உங்களுக்கு எச்சரிக்கை செய்யுமாறு அக்கருணையாளன் எனக்கு உத்தரவிட்டுள்ளான். எனவே, அப்து முனாப், ஸஹ்ரா, மக்ஜுமி, தமீம், அஸது ஆகியோரின் சந்ததயாரே! நீங்கள் விக்கிர வணக்கத்தைக் கைவிட்டு. உருவமில்லா இறைவனை வணங்கி வந்தால் ஈருலகிலும் ஈடேற்றம் பெறுவீர்கள். அவ்வாறல்லாது எனது வார்த்தைகளைப் புறக்கணித்து உங்களின் பழைய மூடக் கொள்கையின் வழியிலேயே இனியும் செய்து கொண்டிருப்பீர்களாயின், நிச்சயமாக நீங்கள் இன்னல், இடையூறுகளுக்கும் பெரிய இழப்புக்கும் ஆளாவீர்கள். இதனை எடுத்துரைத்து எச்சரிக்கை செய்யவே நான் உங்களை அழைத்தேன்” எனக் கூறினர். அக்கூட்டத்தினரிடையே நின்ற பெருமானாரின் பெரிய தந்தையாகிய அபூலஹப் என்னுங் கொடியோன், தங்களை வீணுக்கழைத்துச் சிரமங் கொடுத்து பீதியடையச் செய்ததாகக் குறை கூறிக் கடிந்து கொண்டதுடன் மண்ணையும் வாரித் தூற்றிவிட்டுச் சென்றான். அவனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களனைவரும் வெறுமனே கலைந்து சென்றனர். உத்தமத் திருநபியவர்களுக்கு ஊக்கமளிப்போர் அப்போது அங்கே எவருமில்லை.

இதுபோல பிறிதொரு சமயம், பெருமானார் அலீயை அழைத்து, “நம் உறபினரிடம் எனது தூதை அறிவித்தால் அது அவர்களுக்கு மிகக் கசப்பாயிருக்கும் என்பது தெரிந்து மௌனமாயிருந்தேன். ஆனால், இப்போது ஜிப்ரீல் வந்த தூதை நான் நம் உறவினரிடம் அறிவிக்க வேண்டுமெனவும் இல்லாவிடில் நான் இறைவனின் தண்டனைக்கு ஆளாக நேரிடுமெனவும் அறிவித்துள்ளார். எனவே, நீ சிறிது ஆட்டிறைச்சியுடன் கூடிய உணவும் ஒரு கோப்பை பாலும் ஆயத்தம் செய்து கொண்டு அப்துல் முத்தலிபின் மக்களை விருந்துக்கு அழைத்து வருவாய். நான் அவர்கள் மத்தியில் இறைவன் எனக்கு உத்திரவிட்டுள்ளதை வெளியிட்டுக் காண்பிக்கிறேன்” எனக் கூறினார்கள். அலீ, பெருமானார் கூறிய வண்ணம் விருந்துக்கழைத்தார். அதற்கு அபூத்தாலிப், ஹம்ஸா, அப்பாஸ், அபூலஹப் உட்பட சுமார் 40 பேர் வந்திருந்தனர்.

பெருமானார், அலீ கொண்டு வந்த பாத்திரத்திலிருந்து இறைச்சித் துண்டொன்றை எடுத்து அதைக் கடித்து இரண்டாக்கி, “பிஸ்மில்லாஹ், சாப்பிடுங்கள்” எனக் கூறி அனைவரையும் விருந்துண்ணச் சொன்னார்கள். விருந்து முடிந்ததும் பெருமானார் பேச வாயெடுத்தார்கள். அப்போது அண்ணலாரின் பெரிய தந்தையான அப்துல் உஸ்ஸா என்ற ‘அபூலஹப்’ (நெருப்பின் தந்தை) “விருந்துண்ண அழைத்தீரேயன்றி உம் பேச்சைக் கேட்க அழைக்கவில்லையே!” எனக் கூறியவாறு எழுந்து வெளியேறினான். அவனைப் பின் தொடர்ந்து மற்றவர்களும் வெளியேறினர். தம் முயற்சி தோல்வியுற்றதைக் கண்ட பெருமானார் மீண்டும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து முன்போல் உறவினர்களை அழைத்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:16 pm

அவர்கள் மறுமுறையும் வந்து விருந்துண்டனர். ஆனால், இன்று இறைவனின் தூதர் சற்று முன்னெச்சரிக்கையுடன் எழுந்து நின்று வந்துள்ளோரை விளித்து, “எனது உறவின் முறையாரே! அப்துல் முனாபின் வழித் தோன்றல்களே! நான் உண்மை பேசுபவனா அல்லனா என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அப்துல் முத்தலிபின் சந்ததியாரே! எந்த அராபியனும் நான் கொண்டு வந்திருப்பதை விட மேலானதொரு செய்தியை உங்களுக்கும் இந்நாட்டு மக்களுக்கும் என்றும் கொண்டு வந்ததில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். இம்மையிலும், மறுமையிலும் சிறந்த பயனளிக்கும் சுபச் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் விக்கிரக வணக்கத்தைக் கைவிட வேண்டுமெனவும், உங்களைத் தன் மார்க்கத்தின்பால் அழைக்குமாறும் இறைவன் எனக்கு உத்தரவிட்டுள்ளான். இவ்வழைப்பை உங்களில் எத்தனைபேர் ஏற்று எனது தூதுக்கு ஆதரவு நல்கச் சித்தமுடையோராய் இருக்கிறீர்கள்?” என அன்புக்கரம் நீட்டி மும்முறை வினவினார்கள். ஒருவரும் பதில் பேசவில்லை. மௌனம் சாதித்தனர். சுமார் பன்னிரண்டு வயதே நிரம்பப் பெற்ற சிறுவர் அலீ மட்டும் எழுந்து, “தங்களுடைய தூதில் நான் தங்களுக்கு உதவியாளனாக இருந்து வருவேன்” எனக் கணீரென மொழிந்தார். குழந்தையாகத் தொட்டிலில் தூங்கியபோது, ஓர் நாள், நச்சரவம் ஒன்று தம்மீது ஊர்ந்ததால் விழிப்புற்ற பாலகர், விளையாட்டாக அதன் தலையைப் பிடித்துக் கையாலேயே இறுக்கிச் சாகடித்த அல்லாஹ்வின் புலி’யல்லவோ இந்த அலீ! ஆனால் விருந்துண்ட மற்றவர்கள் முன்தினம் போலவே இன்றும் அபூலஹபைப் பின் தொடர்ந்து ஏளனம் பேசியவாறு எழுந்து கலைந்து சென்றனர். அந்த நெருப்பின் தந்தை ஏசிப் பேசி வசைப் பாடிக்கொண்டு சென்றான்.

இந்நிகழ்ச்சிக்குப் பின் நபிகள் பெருமான் கஃபாவிலும், முச்சந்திகளிலும், மக்கள் கூடுமிடங்களிலும், சந்தை, திருவிழா நடக்குமிடங்களிலும் தம் பிரச்சாரப் பணியை உத்வேகத்துடன் செய்யத் துவங்கி விட்டார்கள். ஏகநாயனாகிய இறைவன் ஒருவனையே மெய்யான தெய்வமாகக் கொள்ள வேண்டுமென்றும், அவனுடைய அளப்பரிய அருட்கொடைகளை எடுத்து விளக்கியும், விக்கிர வணக்கத்தைக் கைவிடுமாறும், அவ்வாறு செய்து அனாச்சாரங்களை விட்டொழித்து நாகரிகத்தையும், நற்கருமங்களையும், கைக்கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் ஏற்றம் அடையலாம் என்றும், அவ்வாறு நடக்கத் தவறி, தாங்கள் இருந்து வரும் தீயவழியிலேயே மக்கள் சென்று கொண்டிருந்ததால் இறைவனின் முனிவுக்கும் தண்டனைக்கும் ஆளாக நேரும் எனவும் எச்சரித்து உபதேசம் புரிந்து வந்தார்கள்.

திருத்தூதரவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய பிரச்சாரம் செய்வதை மக்கத்துக் காபிர்களான (நிராகரிப்பவர்) குறைஷிகள் அதிகம் பொருட்படுத்தவில்லை. ஆனால் விக்கிர வணக்கம் ஒழிக்கப்பட்டால் தங்களில் சுகவாழ்வு, பொருளாதாரம், பிழைப்பு, குலப்பெருமை, தலைமைத்தனம், ஆகிய எல்லாம் அழிந்து விடுமே என்ற அச்சம் தான் அவர்களை வாட்டி வேதனைப்படுத்தியது. தவிரவும், பெருமானாரின் பதிய கொள்கை, குறைஷிகளின் மத நம்பிக்கை, வணக்கமுறை, வாழ்க்கைப் பாதை, இவற்றையெல்லாம் முற்றிலும் மாற்றியமைத்து பணக்காரன் - ஏழை, ஆண்டான் - அடிமை, முதலாளி – ஊழியன் என்ற பாகுபாடுகளை ஒழித்துக் கட்டி, எல்லோரும் ஓர் இனம், எல்லாரும் ஓர் நிறை என்ற புதிய தத்துவத்தைப் புகுத்த முனைவதால், ஆணவம் நிறைந்த அக்குறைஷிகள் அது கண்டு துணுக்குற்றனர். எனவே ஏந்தல் நபியவர்களைத் தீவிரத்துடன் எதிர்ப்பதெனவும் பகைமையுடன் பாவிப்பது எனவும் முடிவு செய்தனர். குறைஷிகள் தம்மைப் பழிப்பதையோ புறக்கணிப்பதையோ பெருமானார் கிஞ்சிட்டும் பொருட்படுத்தவில்லை. இறைவனின் கட்டளையை இம்மியும் பிசகாது எடுத்துக்கூறுவதிலும் செயலாற்றுவதிலுமே அவர்கள் ஓர்மையுடன் முனைந்து நின்றார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Apr 24, 2010 6:19 pm

அருமையான தகவல் தல வாழ்த்துக்கள்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:26 pm

அபுலஹப்


வள்ளல் நபியவர்கள் வீதியில் நடந்து செல்லும் போது வசைபாடுவதும், கேலி, நையாண்டி செய்வதும், பைத்தியம் பிடித்தவர், சூனியக்காரர், மாயாவி, பிசாசு பிடித்தவர் எனத் தூற்றுவதும் குறைஷிகளின் அன்றாடக் கடமையாகிவிட்டது. பெருமானார் மீது வசை கவிகள் எத்தனை யெத்தனையோ பாடப்பெற்றன. இடையூறுகள் எவ்வளவோ செய்யப்பெற்றன. கஃபாவிலும் தெரு முனைகளிலும், சந்தை கூடுமிடங்களிலும் நின்று அவர்கள் பிரச்சாரத்தை ஆரம்பிக்கையில், சிறுவர்களையும், காலாடிகளையும், ஏவிவிட்டுக் கூச்சலிடச் செய்வது, குப்பை கூளங்களையும், சேறு சகதிகளையும் வாரி வீசுவது, கஃபாவில் தொழுது கொண்டிருக்கும்போது ஒட்டகையின் குடல், இளங்கொடி இவற்றைக் கொண்டு வந்து பெருமானாரின் புனித மிக்க முதுகிலும், கழுத்திலும் போடுவது, வழிநடக்கும் பாதைகளில் முட்களைப் பரப்பி வைப்பது, இன்னும் இதைப் போன்ற எத்தனையோ இன்னல்களைச் செய்து வந்தனர். வன்னெஞ்சம் மிக்க குறைஷிக் காபிர்கள். இந்த நீசத்தனமான “கைங்கரியத்தில் பெருமானாரின் பெரிய தந்தையான அபுலஹபும் அவன் மனைவியும் அபுசுப்யானின் தங்கையுமான கொடு நீலி உம்முஜமீலும்
பிரதானப் பங்கு பற்றிக் கண்ணும் கருத்துமாயிருந்து இடுக்கண் விளைவித்து வந்தனர்.

மற்றவர்களை விடத் தம் நெருங்கிய உறவினரான இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை நினைத்துப் பெருமானார் பெரிதும் வேதனையுற்றார்கள். மரணப் படுக்கையிலிருந்த அப்துல் முத்தலிப் தம் பேரர் முஹம்மதுவைத் தம் மக்களில் ஒருவரிடம் ஒப்படைத்துச் செல்ல கருதிய போது பெருமானாரை ஏற்க முதன்மையாக முன் வந்தவன் இக்குணங்கெட்ட கொடியோன், அபுலஹபேயாவான், இதனாலன்றோ இறைவனின் நாட்டம் அண்ணலாரை அன்புள்ள கொண்ட அபுதாலிபிடம் ஒப்படைக்குமாறு செய்து விட்டது.

இக்கொடுந் தம்பதியர் அடையவிருக்கும் அவகேடான சாவு பற்றி இறைவன் தன் திருமறையின் 111ம் அத்தியாயத்தின் மூலம் முன்னறிவிப்புச் செய்தான். இவ்வத்தியாயம் வெளியான செய்தியறிந்து அபுலஹபும் அவன் மனைவியும் அடங்காச் சினம் கொண்டனர். ரசூலுல்லாஹ் அவாகளின் புத்திரிகள் ருகையா, உம்மு குல்தூம் ஆகிய இருவரையும், அபுலஹபின் புதல்வர்களான உத்பா, உதைபா ஆகிய இருவருக்கும் அப்போது திருமணம் செய்யப் பெற்றிருந்தது. அவ்விரு பெண்மணிகளுக்கும் மணவிடுதலையளித்துப் பெருமானாரிடம் அனுப்பி விடுமாறு அபுலஹப் தன் புத்திரரை வற்புறுத்தினான். தகப்பனுக்கு அஞ்சிய தனயர்களிருவரும் தம் மனைவியரை விவாகரத்துச் செய்து பிறந்தகத்துக்கு அனுப்பி விட்டனர். பின்னர் இவ்விரு திருப்புதல்வியரையும் ஹலரத் உத்மான் அவர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராகத் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருத்தூதரவர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களைக் கண்டு மணந்தாளா அபுதாலிப். இனி எவரும் தம் தம்பி மகனுக்கு இன்னல் விளைவிப்பின் தம் குடும்பத்தார் அனைவரும் ஒன்றுபட்டு உயிர்த்தியாகம் செய்தாகிலும் குடும்ப கவுரவத்தைக் காக்க நேருமென எச்சரித்தார். அதனைக் கேட்ட குறைஷிகள் தங்கள் கொடுமைகளைசட சற்றுத் தளர்த்திக் கொண்டனர். அண்ணலாரும் சபா குன்றின் மீதமர்ந்த அர்கம் என்பாரின் மாளிகையில் போயிருந்து சிறிது காலம் வீட்டங்கத் தம் பிரச்சாரத்தைச் செய்து கொண்டிருந்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:27 pm


குறைஷிகள் தூது



எனினும், மக்கள் தொடர்ந்து சிறுகச் சிறுக இஸ்லாத்தில் இணைந்து வருவதைக் கண்ட குறைஷிகள் மனங்குமைந்தனர். தங்களின் எதிர்ப்பை வலுப்படுத்தத் துவங்கினர். முதன் முiறாக அபுசுப்யான் தலைமையில் அபுதாலிபிடம் தூது சென்று குறையிரந்தனர். அவர் ஒருவகையாகச் சமாதானங்கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.

மறுமுறை, குறைஷிகள் தங்களுக்குள் ஆலோசனை கலந்து, அம்மார் பின் வலீத் என்னும் சௌந்தர்யமிக்க வாலிபனை, அபுதாலிபிடம் அழைத்துச் சென்று, “இவ்வழகிய வாலிபனைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு, முஹம்மதை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். நாங்கள் அவரை ஒழித்துக் கட்டி விடுகிறோம்.” என இரக்கமற்ற மொழி பகர்ந்தனர். அபுத்தாலிப் ஆத்திரங் கொண்டவராய் எக்களிப்புச் சிரிப்பொன்றை வெடித்தவாறு, “நன்று, நன்று நீங்கள் சொல்வது வெகு அழகாக இருக்கின்றது “ உங்கள் மகனை நாம் ஊட்டி வளர்க்குமாறும், என் உயிருக்குயிரான மகனை நான் உங்களிடம் கொல்லத் தருமாறும் என்னிடமே துணிந்து கேட்க முன் வந்து விட்டீர்கள். சென்று வாரீர்” இது ஒருக்காலும் நடவாது” என முகத்தில் அறைந்தாற் போல் பதில் கூறி அனுப்பி விட்டார்.

மற்றொரு முறை இவர்கள் அபூதாலிபிடம் சென்று முஹம்மதைக் கட்டுப்படுத்த முடியாவிடில் தங்களிடம் ஒப்படைத்துவிடுமாறும், அவ்வாறு செய்யாவிடில், ஹாஷிம் குலத்தாருக்கும் ஏனைய கோத்திரத் தாருக்குமிடையில் போர் மூளும் சூழ்நிலை ஏற்படுமென்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்தனர். அபூதாலிபுக்கு அப்போதிருந்த வறுமையும், ஒன்றுபட்ட எதிர்ப்பைச் சமாளிக்க இயலாத தன்மையும் சிறிது கவலையளித்தன. குறைஷிகளைத் தனிமையில் எதிர்ப்பதற்குச் சற்று தயங்கினார். மனந்தளர்ந்தார். குறைஷிகளைப் பகைக்கவும் மனமில்லை. அதேசமயம் தம் தம்பி மகனைக் கைவிடவும், கஷ்டத்திற்குள்ளாக்கவும் விருப்பமில்லை. ஆலோசித்தார் அழைத்துவரச் சொன்னார். குறைஷிகள் வந்தபோன விவரத்தை எடுத்து விளக்கினார். அவர் நயனங்கள் கண்ணீரை மல்கி நின்றன் அபூதாலிப் பேச்சைத் துவக்கினார். “என் அன்பிற்குரிய தம்பி மகனே! என்மீதும் எனது முதுமைப்பருவத்தின் மீது இரக்கங்காட்டுவாய். நான் தாங்க முடியாத பொறுப்பை என்மீது சுமத்திவிடாதே. குறைஷிகள் அனைவரையும் நாம் ஏக காலத்தில் பகைத்துக் கொள்ளவும் எதிர்த்து நிற்கவும் இயலாதன்றோ?” என ஏக்கம் மேலிடக் கேட்டார். அவருடைய இவ்வார்த்தைகளைச் செவியேற்ற அண்ணலவர்கள் தம் நிலையையும் தம் பெரிய தந்தையாரின் நிலையையும் மனதில் திரையிட்டுக் கொண்டு சற்று நேரம் சிந்தனையிலாழ்ந்தார்கள். ஏன்? இஃது நபிகளாரின் வாழ்க்கைக்கும் உலகின் எதிர்காலத்திற்கும் சவாலான ஒரு பிரச்சனையாகத் தலை தூக்கி நின்றது. சிந்தனைன கலைந்தது. இறைவனின் பாதுகாப்பிலே தங்களை முற்றும் ஒப்படைத்தவர்களாக, அபூதாலிபை நோக்கி, “என்னருமைப் பெரிய தந்தையே! இறைவன்மீது பிரமாணமாகக் கூறுகிறேன். அவர்கள் சூரியனை எனது வலக்கரத்தின் மீதும் சந்திரனை எனது இடக்கரத்தின் மீதும் கொண்டு வந்து வைத்து எனது தூதைக் கைவிடச் சொல்லினும், அதை நான் ஏற்கமாட்டேன். இம்முயற்சியில் இறைவன் எனக்கு வெற்றியை நல்கும் வரை அல்லது இதனால் நான் அழிந்தொழியும் வரை எனது பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்றே தீரும். உங்களுக்கு இயலாதாயின் என்னைத் தனியாக விட்டுவிடுங்கள். நீங்கள் வேண்டுமாயின் குறைஷிகளின் சார்பில் இருந்து கொள்ளுங்கள்” என உணர்ச்சி ததும்பக் கூறியவர்களாய் அவ்விடத்தை விட்டும் புறப்பட்டார்கள்.

இவ்வார்த்தைகள் தளர்வு கண்ட அபூதாலிபின் மனதில் மின்சாரம் போல பாய்ந்து புதிய தெம்பையும் தைரியத்தையும் ஊட்டின. பாய்ந்து சென்று அபூதாலிப், பெருமானாரைக் கட்டித் தழுவி நெற்றியில் முத்தமிட்டு “நல்லது மகனே! உம் நோக்கப்படியே நடந்து கொள்ளும். கஃபாவின் இறைவன்மீது ஆணையாக எதுவரினும் உம்மை நான் புறக்கணிப்பதில்லை. என்றும் நான் உமக்குப் பக்கபலமாகவே இருந்து வருவேன், இது உறுதி” எனக் கூறி அனுப்பி வைத்தார்.

இதற்குப் பின் அறைவனின் திருத்தூதர் தமது இஸ்லாமியப் பிரச்சாரத்தை முன்னிலும் பன்மடங்கு வேகமாக செய்ய முனைந்தார்கள். விக்கிர வணக்கத்தின் வழிகேட்டையும் குறைஷியரின் குறைமதியையும் வன்மையாகத் தாக்கி அவர்களை இறைவனது சன்மார்க்கத்தின் பக்கம் அழைத்தார்கள்.

இப்போது குறைஷிக் கோத்திரத்தாருக்குள் வாக்கு வாதங்கள் முற்றிப் பிளவுகள் தலைநீட்டின. பெருமானாரின் தூதை அபூதாலிப் ஏற்கவில்லையாயினும் தம் தம்பி மகனை மற்றவர்கள் அவமதிப்பாக நடத்துவதையும் அதனால் ஹாஷிம் வமிசத்திற்கு அவகீர்த்தி நேருவதையும் தடுக்க முனைந்தனர். தம் உறவழனர் அனைவரையும் ஒன்றுகூட்டிப் பெருமானாரைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அபூலஹபையும் பெரிய தந்தை ஹாரிதின் மகன் அபூசுப்யானையும் தவிர்த்து ஹாஷிம் குலத்தார் அனைவரும் அபூதாலிபின் ஆணைப்படி நடக்கச் சித்தமாயினர். அது கண்டு அவர் அகமகிழ்ந்தார். தம் குலத்தின் கீர்த்தி, மேன்மை இவற்றை நினைவு கூரும் கவிதை ஒன்றைப் புனைந்தார். ஹாஷிமிகளுக்கும் ஏனையக் குறைஷிகளுக்கும் இடையில் பூசலும் பிணக்குகளும் ஏற்பட்டன.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 6:28 pm



எதிர்ப்பின் உச்சம்



இப்போது கஃபாவைத் தரிசிப்பதற்காக வெளியூர் யாத்திரிகர் மக்காவில் வந்து கூடும் சமயம்ஈ நபிகள் கோமானின் தூதுபற்றி அவர்கள் ஓரளவு கேள்வியுற்றிருந்த நேரம் அது. இதைக் கருதிக் குறைஷிகள் வலீத் பின் முகைரா என்பவரின் தலைமையில் கூடி ஆலோசனை கலந்தனர். முடிவில் மக்காவுக்கு வரும் எல்லாப் பாட்டைகளிலும் தம் ஆட்களை நிறுத்தி, முஹம்மது ஒரு மாயா ஜாலக்காரர் எனவும், பேச்சுத் திறமையுள்ளவர் எனவும் விஷயங்களை உண்மைக்கு மாறாகத் திரித்துக் கூறி, யாத்திரிகர்களை ஏமாறாதிருக்குமாறு எச்சரிக்க வேண்டுமென்ற தீர்மானத்துக்கு வந்து அவ்வாறே செயலாற்றவும் துவங்கினர். குறைஷியரின் இம்முயற்சி நினைத்தற்கு நேர் மாறான பலனையே அவர்களுக்கு அளித்தது. மக்கா வந்த யாத்திரிகர் குறைஷினளின் வார்த்தையில் மயங்காமல், அதில் ஏதோ சூது இருப்பதாக கருதி, பெருமானரை நேரில் காணவும், அவர்களின் திருவாய் மொழிகளைச் செவிமடுக்கவும் அவாவுற்று அன்னார் பிரச்சாரம் புரியும் இடங்களை நோக்கி விரைந்தனர். அண்ணலாரின் அமுதவாய் மொழிகளையும் இற்புதத் திருவசனங்களையும் அள்ளிப்பருகி ஆனந்தமுற்றனர். தெளிவான விளக்கமும் பேச்சுத் திறனும் கொண்ட அவர்களது ஹவாஸின் நாக்கு, கேட்போர் உள்ளங்களைத் தம்பால் பற்றி இழுத்தது. அனைவரும் மெய் மறந்து நின்று கேட்டனர். இதனைக் கண்ட குறைஷிகள் ஏமாற்றமும் அவமானமுற்றனர். யாத்திரை காலம் முடிந்தது. பெருமானரைப் பற்றிய பேச்சும் புகழும் அரபு நாடெங்கும் பரவியது.

யாத்திரையிலிருந்து திரும்பியவர்கள் வாயினின்றும் யத்ரிப் மக்கள் பெருமானாரையும் அவர்களின் புதிய தூதையும் பற்றிக் கேட்டறிந்தனர். ஏற்கனவே, யத்ரிபிலுள்ள மக்களுக்கு அங்கு வசதியும் யூதர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அதிகமிருந்ததால், அவர்களிடமிருந்து அரபு நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றவருக்கிறார் என்பதை அவர்கள் அட்டின்றி அங்கரீத்தனர். உண்மையென உவந்தனர். மக்காவின் குறைஷியர் காட்டிய எதிர்ப்புத் தன்மையையும் ஒருவாறு புரிந்துகொண்டனர்.

குறைஷிகளின் பொறமைத்தீ இப்போது கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. முட்டாள்களையும் முரடர்களையும் தூண்டி விட்டுத் திருத்தூதரவர்களை ஏசிப் பேசத் தலைப்பட்டனர். ஒருமுறை குறைஷிகள் கஃபாவில் கூடி ஊர்வம்பு பேசிக்கொண்டிருந்த போது, நாயகம் அவர்கள் ‘தவாபு’ செய்வதற்காக அங்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சிலர் அடாத வார்த்தைகளால் ஏசியது பெருமானாரின் காதில் விழுந்தது. ஒருமுறைக்கு இருமுறை பொறுத்தார்கள். மூன்றாம் முறையும் அவ்வாறு பேசவே, குறைஷிகளை நெருங்கி ‘ஏ குறைஷிகளே! நான் சொல்வதை நீங்கள் கேட்பீர்களா? ஆண்டவன் மீது பிரமாணமாக, இறைவனின் பெயரில் அர்ப்பணிக்கப்பெற்றவற்றை நான் உங்களுக்குக் கொண்டு வரட்டுமா?” என வினவினார்கள். கூடியிருந்தவர்கள் பதில் சொல்லத் தெரியாது விழித்தனர்.

முரடனான ஒருவன் மட்டும் எழுந்து, “அபுல் காஸிமே! ஆண்டவன் மீது ஆணையாகத் தாங்கள் என்றும் பலாத்கார வழியில் சென்றதில்லை” எனக் கூறிச் சமாதானப்படுத்தினான். அதன்பின் நபிகள் பிரான் அங்கிருந்து அகன்றார்கள். மறுநாளும் குறைஷிகள் கஃபாவில் கூடி அண்ணலாரைப் பற்றி ஆத்திரத்தோடு பேசிக் கொண்டிருந்தனர். அன்றும் நாயகம் அவர்கள் அங்கு வர நேர்ந்தது. அனைவரும் அவர்கள் முன் பாய்ந்து சென்று “எங்களின் தெய்வங்களைப் பழித்து பேசுவது நீர்தானா?” எனக் கேட்டனர். “ஆம், நான்தான்” எனக் கனீரெனக் கழன்றனர் நபிகள் நாதர். அவர்களில் உத்பா பின் அபூமுயீத் என்பவன் சட்டென தனது மேலத்துணியைப் பெருமானாரின் கழுத்தில் போட்டு முறுக்கினான். அதனால் அவர்கள் மூச்சுத் திணறி மயக்கமுற்றார்கள். எதிர்பாராத விதமாக அந்நேரத்தில் அபூபக்கர் (ரலி) அங்கு வந்தார்கள். அண்ணலாரின் நிலையைக் கண்டு கண் கலங்கியவராய், “இறைவன் ஒருவனே என்ற உண்மையைச் சொல்வதற்காகவா ஒருவரை நீங்கள் கொல்ல முற்படுகிறீர்கள்?” என ஆவேசத்துடன் கூறியவராய், அம்மூடனின் முரட்டுப் பிடியிலிருந்து பெருமானாரை விடுவித்தார்கள்.



தொடரும்....................



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Apr 25, 2010 6:59 pm

ரொம்ப அருமையான தொகுப்பு இதனை யாவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று நன்றி நன்றி நன்றி சகோதரா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:20 pm

அபூஜஹல்

குறைஷிகளில் சுமார் 45 வயதுடைய அம்ருப்னு ஹிஷாம் மக்ஜுமி என்பவன் இருந்தான். இவன் உயர் குடும்பத்தைச் சேர்ந்தவன். வாக்குச் சாதுரியமும் செல்வாக்கும் உடையவன். அபூலஹப் போன்று இவனும் அண்ணலாருக்கு இன்னல் விளைவிப்பதில் அளவற்ற இன்பங்கண்டு வந்தான். இதன் காரணமாக முஸ்லிம்கள் அவனை ‘அபூஜஹல்’ அறிவீனத்தின் தந்தை என அழைக்கலாயினர். குறைஷிகள்அவனை ‘அபுல்ஹிகம்’ (அறிவின் தந்தை) என்று அழைத்து வந்தனர்.

ஒரு தடவை நபிகள் நாதர் கஃபாவுக்குச் சென்று தொழுது கொண்டிருந்தார்கள். அபூஜஹலின் தூண்டுதலின் பேரில், உத்பாபின் அபூமுயீத் என்பவன் அப்போது ஈன்ற ஒட்டகையின் இளங்கொடி ஒன்றை எடுத்து வந்து பெருமானாரின் பிடரியின் மீது போட்டான். இதைக் கண்ட அபூஜஹலும் அவன் சகாக்களும் கைகொட்டி விழுந்து சிரித்தனர். அண்ணல் நபியவர்கள் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது வணக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். பெருமானாரின் திருப்புதல்வி பத்து வயதுச் சிறுமியான பாத்திமா இதையறிந்து ஓடிவந்து அந்த அசுத்தத்தை அப்புறப்படுத்திக் குறைஷிகளையும் சபித்தார். சாந்த சொரூபியான சத்தியத் திருநபியவர்கள் தம் புதல்வியைச் சமாதானப்படுத்தி பேசுவதை நிறுத்தினார்கள்.

மற்றொரு நாள் பெருமானார் ‘சபா’ குன்றருகே இருப்பது தெரிந்த அபூஜஹல் அங்கு சென்று அண்ணலாரை வாயில் வந்தபடி ஏசிவிட்டுக் கஃபாவுக்கு வந்தவன். அங்கிருந்த தன் சகாக்கள் மத்தியில் உட்கார்ந்து அதுபற்றி ஜம்பம் அடித்துக் கொண்டிருந்தான். இச்செய்தியை வேட்டைக்குச் சென்று வீடு திரும்பிய பெருமானாரின் சிறிய தந்தை ஹம்ஸா, அப்துல்லா பின் ஜுத்ஆன் என்பவரின் பணிப்பெண் வாயால் கேட்டறிந்தார். ஆத்திரம் மிகக் கொண்டவராக வேட்டைக்குச் சென்ற கோலத்துடனேயே நேரே கஃபாவுக்குச் சென்றார். அங்கு வீற்றிருந்த அபுஜஹலை நோக்கி, “நான் முஹம்மதுவின் மார்க்கத்தைப் பின்பற்றி அவரைப் போல் நானும் பிரச்சாரம் செய்யத் தலைப்பட்டால் என்னைத் தடுத்து நிறுத்தும் திராணி உனக்கு உண்டா? என வினவியராய்த் தம் வில்லால் அவனை ஓங்கி அடித்தார். அருகிலிருந்த அவன் தோழர்கள் ஹம்ஸாவுடன் பொருத எழுந்தனர். அபுஜஹர் அவரைக் கையமர்த்தியவாறு ஹம்ஸாவை நோக்கி, “உண்மையில் நான் முஹம்மதை அனாவசியமாகவே பேசி விட்டேன்” எனக்கூறி வருத்தம் தெரிவித்தான். உடனே ஹம்ஸா அர்கம் மாளிகைக்குச் சென்று பெருமானாரிடம் நடந்தவற்றைக் கூறி இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். இது நுபுவ்வத் ஆறாம் ஆண்டு நிகழ்ந்தது. அன்று முதல் ஹம்ஸா தம் அண்ணன் மகனைக் கண்ணை இமை காப்பது போல் காத்து வந்தார்.

நாளுக்கு நாள் நபிகளாரின் பிரச்சாரத்திற்கு ஆதரவு ஒரு பக்கமும், எதிர்ப்பு மறு பக்கமும் வலுத்தன. ஒவ்வொரு கோத்திரத்திற்குள்ளேயும், குடும்பத்திற்குள்ளேயும், பிணக்கும் புசலும் தலை தூக்கின. அண்ணன் பெருமானாரை எதிர்ப்பவனாகவும், தம்பி ஆதரிப்பவனாகவும், தந்தை விக்கிரக வணக்கக்காரனாகவும், மகன் முஸ்லிமாகவும், கணவன் பல தெய்வ வணக்கமுள்ளவனாகவும், மனைவி இஸ்லாத்தைத் தழுவியவளாகவும், ஆண்டான் விக்கிரகத் தொழும்பனாகவும், அடிமை ஏக தெய்வ வணக்கமுள்ளவனாகவும் இருந்து வந்தனர். இவ்வித முரண்பாடுகள் காரணமாக அவர்களுக்குள் எதிர்ப்புணர்ச்சிகள் நெடுகிலும் பரவி நின்றன.

ஏழைகள் பட்டபாடு நபிகள் நாதரை மட்டும் குறைஷிகள் துன்புறுத்துவதோடு திருப்தியடையவில்லை. இஸ்லாத்தைத் தழுவிய ஏழைகளையும், அடிமைகளையும் அவர்கள் படுத்திய கொடுமைகளும் பண்ணிய சித்ரவதைகளும் சொல்லுந்தரமன்று, கல் மனமும் கரைந்து விடும் தன்மையதாயிருந்தன. கொதிக்கும் மணலில் கிடத்தி நெஞ்சில் பாராங்கல்லை தூக்கி வைப்பர். தண்ணீருக்குள் தலையை அமிழ்த்தி மூச்சுத் திணறச் செய்வர்.

காலில் பிரியைக் கட்டித் தெரு தெருவாக இழுத்துச் செல்வர். இன்னும் எத்தனையெத்தனையோ விதமான கொடுமைகள்! காணச் சகியாது. கண்ணீரைச் சிந்த வைக்கும்!. அவற்றின் சிலவற்றைக் கீழே காண்போம்.

பிலால் இப்னு ரபாஹ் என்ற நீக்ரோ அடிமையை அவர் எஜமானன் உமய்யா பின் கலப் என்பவன் அவரது கழுத்தில் கயிற்றைக் கட்டி பையன்களை ஏவித் தெரு தெருவாக இழுத்துச் செல்லச் செய்வான். அதனால் கயிறு அழுத்திக் கழுத்திலிருந்து இரத்தம் வழிந்தோடும். முதுகும் தேய்ந்து குருதி தோய்ந்தோடும். அவரது உடலைப் பச்சைத் தோல் கொண்டு சுற்றி அத்தோல் கிழியும் வரை கழி கொண்டு நையப் புடைப்பான். இத்தனை கொடுமையிலும் அவரது புனித வாய் “அஹதுன் அஹதுன்” (ஏகன், ஏகன்) என்ற வார்த்தைகளை மட்டிலுமே உச்சரித்துக் கொண்டிருக்கும். அப்போது பிலாலுக்கு வயது இருபத்தேழு.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக