புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
83 Posts - 51%
heezulia
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
6 Posts - 4%
prajai
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
125 Posts - 54%
heezulia
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_m10வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா....


   
   

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 23, 2010 5:52 pm

First topic message reminder :

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா....

Dyslexia

ஒரு மிகப்பிரபலமான பள்ளியில் ஒரு மாணவன் தமிழ் பாடத்தைப் படிக்காமலே ஓட்டிக்கொண்டு இருந்தான். அவனைப் படிக்கக் கூறினால் மிஸ் நான் டிஸ்லெக்சியான்னு சர்டிஃபிகேட் அபளை பண்ணியிருக்கேன். அது வந்துடும். அதனால் தமிழ் பாடம் எனக்கு தேர்வு எழுதத் தேவையில்லை. தேரிவில் இருந்து விலக்கு கிடைத்து விடும் என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. விளக்கமாகக் கூறு என்றேன் எனக்கு இந்தப் பாடத்தில் இஷ்டமில்லை மிஸ். அதனால் மருத்துவருக்குக் கொஞ்சம் பணம்
கொடுத்து சர்ட்டிஃபிகேட் வாங்கி விட்டேன். அரசுக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் ஆர்டர் வந்து விடும். என்று சிரித்துக் கொண்டே கூறினான். இப்படியும் ஒரு மாணவனா என்று சிரித்த அதே நேரத்தில் அது என்ன டிஸ்லெக்சியா எனச் சிந்திக்கும் வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுத்த அந்த மாணவனுக்கு மனதால் நன்றி சொல்லியபடி அதனைப் பற்றி அறிந்து கொண்டேன்.

இக்காலத்தில் பல பள்ளிகளில மிக அதிகமாகப் பயன்பட்டுக் கொண்டுள்ள சொல் டிஸ்லெக்சியா. முக்கியமாக செல்வந்தர்களின் குழ்ந்தைகளிடம் இக்குறைபாடு அதிகமாகக் காணப்படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. (நான் பார்த்த வரையில்) சரி டிஸ்லெக்சியா என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Left_right_brain

மூளை இரண்டு பகுதிகளாகப் பிளவு பட்டு இருக்கும். இடது மூளைக்கும் வலது மூளைக்கும் இடையில் சரியாகத் தொடர்பு இல்லாத நிலைதான் இந்த டிஸ்லெக்சியா குறைபாட்டை ஏற்படுத்துகிறது.

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Corpuscallosum

உதாரணமாக வலக்கண் பார்க்கும் காட்சி மூளையின் இடப்புறம் பதிவாகிறது. இடக்கண் பார்க்கும் காட்சி மூளையின் வலப்புறம் பதிவாகிறது. இந்தத் தொடர்பு விஷயத்தில் தொடர்பு கெடும்போது பார்க்கின்ற காட்சியின் ஒட்டுமொத்தத் தோற்றம் மூளைக்குப் போய்ச்சேர்வது இல்லை. இதனால் குழந்தைகள் வாசிப்பதில் எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டு திறமை குறைகிறது. டிஸ்லெக்சியா உள்ள மாணவன் ஆசிரியர் ஒன்றை எழுதினால் அதைத் தப்பும் தவறுமாகத் தன் நோட்டில் எழுதுவான். இவ்வாறு வார்த்தைகளைத் தவறு தவறாக எழுதுவதை ”வார்த்தைக் குருடுஎன்று கூறுவர்

டிஸ்லெக்சியா என்ன காரணத்தால் வருகிறது? முன்னோர்களிடம் இருந்தும் பரம்பரையாகாவும், சுற்றுச்சூழல் காரணமாகவும் வருகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.. இதன் காரணமாக குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ளூம் திறன் குறைந்து போய் விடுகிறது. பத்தில் ஒரு குழந்தைக்கு முழுவதும் இல்லையென்றாலும் சிறிதளவாவது உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது.

இதனைக் கண்டறிவது எப்படி? வரி வரியாக விரல் வைத்து வாசிப்பது, எழுதுகோலை ஒரு பக்கமாகச் சாய்த்துப் பிடித்து எழுதுவது, பேனாவைச் செங்குத்தாக பிடித்துக் கொண்டு எழுதுவது, இரண்டு விரலால் மட்டும் எழுதுகோலைப் பிடித்து எழுதுவது, பார்த்து எழுதும்போது தப்பும் தவறுமாக எழுதுவது போன்றவை டிஸ்லெக்சியா இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம்.

டிஸ்லெக்சியா வந்துவிட்டதே என்று அதிகமாகக் கவலைப் படத் தேவையில்லை. இதில் ஒரு நல்ல அம்சமும் உள்ளது டிஸ்லெக்சியாவால்தான் நான் இவ்வாறு பெருமைப் பட முடிந்தது
என்று சொல்லி இன்புறும் காலமும் உண்டாகலாம். யார் கண்டது? அப்படிப் பெருமைப் பட்டவ்ர்க்ளைப் பற்றிய் பெரிய பட்டியலைப் பார்த்தீர்களானல் எனக்கும் டிஸ்லெக்சியா வந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணத்தோன்றும்


வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Einstein


இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியுமா? நோபல் பரிசுக்குச் சொந்தக்காரர் ஆயிற்றே. முதலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டினைப் பற்றிப் பார்ப்போம். இவர் ஒன்பது வயது வரை எதையும் படிக்கும் திறனின்றி இருந்தாராம். ஒரு திடீர் திருப்பமாகப் பனிரெண்டாம் வயதில் கணிதத்திலும், இயற்பியலிலும் சக்கைப் போடு போட ஆரம்பித்தாராம்.

இவர் ஐந்து வயதாக இருந்தபோது இவரது தந்தையார் இவருக்கு ஒரு சட்டைப்பையில் வைக்கக்கூடிய ]திசையறி கருவியொன்றைக் காட்டினார். அந்த வயதிலேயே அவர் ஒன்றுமற்ற வெளியில் ஏதோ ஒன்று காந்த ஊசியில் தாக்கம் ஏற்படுத்துவதைப் புரிந்துகொண்டார். அவர் மாதிரியுருக்களையும், இயந்திரக் கருவிகளையும், பொழுது போக்காகச் செய்துவந்தார்.. இவருடைய உறவினரிருவர். அறிவியல் கணிதம் தொடர்பான நூல்களையும் ஆலோசனைகளையும் கொடுத்து அவரை ஊக்குவித்தார்களாம்.

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Edison_laboratorio_west


இவரைத் தெரியாதவர்களும் இருக்க முடியாதே தனது பெயரில் சாதனை அளவான உரிமங்களைப் திவு செய்த எடிசன் பெரிமளவு கண்டு பிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். பள்ளிகளிலும் சரி வெளியிடங்களிலும் சரி அறிவியல் கண்டுபிடிப்பு பற்றி எழும் வினாக்களுக்கு, முக்கியாமாக ஒரு பொருளைக் கண்டு பிடித்தவர் யார் என்று நமக்குத் தெரியாவிட்டால் நாம் என்ன செய்வோம். ஒற்றையா ரெட்டையா கூடப் போட மாட்டோம். கண்களை மூடிக்கொண்டு குருட்டாம் போக்கில் தாமஸ் ஆல்வா எடிசன் என்று கூறிவிடுவோம்.. அது சரியான விடை என்று பாராட்டும் பெற்று விடுவோம். அப்படி இன்று காண்கின்ற பொருள்களில் பெரும்பானமையான் பொருள்களுக்குச் சொந்தக்காரராக இருக்கும் தாமஸ் ஆல்வா எடிசனும் இந்த டிஸ்லெக்சியாவுக்கு ஒருவாறு அல்வா கொடுத்தவரே.

வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 245px-President_Woodrow_Wilson_portrait_December_2_1912

மேலே இருப்பவர் அமெரிக்க ஜனாதிபதியாகவும், மிகச்சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்த தாமஸ் உட்ரோ வில்சன். தமது பதினோராம் வயது வரை ஒரு எழுததைக் கூட வாசிக்க முடியாதவராக இருந்தார் என்றால் நம்மால் நம்ப் முடிகிறதா? அதுதான் உண்மை.

இதைப் படித்தவுடன் மேலே கூறியதைப் போல நமக்கும் டிஸ்லெக்சியா வந்தால் பரவாயில்லை என்று எண்ணத் தோன்று கிறதல்லவா? ஆனால் எல்லோரும் இப்படி உயர்ந்து விட முடியுமா? இத்தகு குறைபாடு ஒன்றைப் பெற்றவர்கள் தம் வாழ்வில் சாதித்து எப்படி? ஒரு கதைவை அடைத்தால் இன்னொரு கதவைத் திறந்து விடுவான் என்பது போல இறைவனின் படைப்பில் ஒரு திறன்
குறைந்தால் அதனையும் மிஞ்சி வெற்றி பெறும் அளவுக்கு வேறு ஒரு திறன் நிறைந்து இருக்கும். அதனாலேயே இன்று ஊனமுற்றவர்களை மாற்றுத்திறனாளி என்று கூறத் தொடங்கி உள்ளோம். அது எத்துனைச் சரியானது. மேலே கூறிய இவர்களையும் மாற்றுத்திறனாளி என்று அழைப்பதில் தவறு இல்லையே!


]இவர்களிடம் முயற்சியும் தொடர்ந்து எதையும் செய்யக்கூடிய பயிற்சி மனப்பானமையும் இருந்ததே இவர்கள் எளிதில் இக் குறைபாட்டை வெற்றி கொண்டமைக்கும், உலகையே வெற்றி கொண்ட்மைக்கும் இது முற்றிலும் தனிப்பட்ட முயற்சியால் கிடைத்த வெற்றி. இதனைத் திறன் (INDUVIDUAL EFFORTS) எனலாம். குறைபாடு எதுவாக இருந்தாலும் அதனை போக்கடித்து. வெற்றி கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது.

ஒன்று கண்டிப்பாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு சிறு குறைபாடே அன்றி பெரிய நோய் அல்ல. எனவே இருந்தாலும் குழந்தைகளால் வாழ்வில் வெற்றி பெற முடியும்.. அதற்கு பெற்றோரும், ஆசிரியர்களும் பெரிதளவில் உறுதுணையாக இருக்க வேண்டும். நல்ல முறையான அணுகுமுறையும், சிறந்த பயிற்சியும் அம்மாணவர்களுக்குக் கொடுத்து உதவுவது இவர்களின் கடமையே.

குறைபாடு எதுவாக இருந்தாலும் அதனைப் போக்கடித்து. வெற்றி கொள்வது அவரவர் கையில்தான் இருக்கிறது என்றாலும் உதவவேண்டியது பெற்றோர், ஆசிரியர்களின் கடமை ஆகும்.
ஏனெனில் சிறந்த வெற்றிக்கு அடிப்படையாய் இருப்பவை 1% உள்ளூக்கமும் 99% விடாமுயற்சியுடன் கூடிய பயிற்சியுமே ஆகும்.. இதனை வள்ளுவர்,

”ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாளாது உஞற்று பவர்

சோர்வு இல்லாமலலும் தன் முயற்சியில் குறைவு இல்லாமலும் முயல்கின்றவர் தம் முயற்சிக்கு இடையூறாக வரும் ஊழ் வினையையும் புறமுதுகிட்டு ஓடச்செய்து விடுவர். அப்படி இருக்க, டிஸ்லெக்சியா என்ன, அம்னீஷியா என்ன... எல்லாம் புறமுதுகுக் காட்டி ஓடுவது உறுதி...ஆகையால் ஆசிரியர்களே! பெற்றோர்களே! உதவுங்கள் வருங்கால் இந்தியாவுக்கு. ஆக்குங்கள் டிஸ்லெக்சியா குறைபாட்டுக் குழந்தைகளை, ஒரு எடிசனாக், ஒரு ஐன்ஸ்டினாக, ஒரு உட்ரோ வில்சனாக!!!!!! வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 154550


ஆதிரா..



வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Tவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Hவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Iவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Rவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Empty

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jun 23, 2010 11:11 pm

Aathira wrote:
நிலாசகி wrote:மிகவும் பயனுள்ள தகவல் .நானும் நமக்கு டிச்லக்சியா வந்திருக்க கூடாதா என்று
நினைத்திருக்கிறேன் ,இவர்களை உரிய கவனிப்புடன் வளர்த்தால் பொக்கிஷங்கள்
இவர்கள்.தாரே ஜாமீன் பர படம் அழகாய் சொல்லியிருக்கும் .

சிலர் எளிதாக மனனம் செய்துவிடுவார்கள் ... ஆனால் இப்படி இருப்பவர்களுக்கு
அந்த விசயத்தில் ஆழ்ந்த சந்தேகங்கள் இருக்கும்..அதை அவர்களால்
ஏற்றுக்கொள்ளமுடியாது .

இன்னும் இது குறித்து நீங்கள் அறிந்ததைப் பதிவிடுஙகள் சகி..அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமே...அழக்காக கருத்துப் பதிந்தமைக்கு மிக்க ந்ன்றி சகி.. வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 154550 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 599303 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 154550
நிச்சயமாக அக்கா வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 154550



தீதும் நன்றும் பிறர் தர வாரா வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 154550
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Jun 23, 2010 11:11 pm

உங்களைப்போல உள்ளவர்கள் இருக்கும்வரை நிச்சயமா நடக்கும் ..
வாழ்த்துக்கள் ..நல்ல கட்டுரை தந்தமைக்கு ..........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 24, 2010 12:01 am

Dyslexia பற்றிய தகவல் அருமை அக்கா! மேலும் இணையத்தில் கிடைத்த சில தகவல்களை இங்கு அளிக்கிறேன்!


டிஸ்லெக்சியா என்றால் என்ன?

மூளையில் உள்ள சில பிரச்னைகளால், இக்குறைபாடு குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இக்குழந்தைகளுக்கு, படிப்பதிலும் எழுதுவதிலும் சிரமங்கள் இருக்கும். இவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள் அல்ல. இவர்கள் புத்திசாலியாக, சில செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கலாம். இவர்களுக்கு எழுதுவதும் படிப்பதும் மட்டும்தான் கொஞ்சம் கடினமான காரியம். இஷானை நினைவு படுத்திக்கொள்ளுங்கள். அவன் மக்கு அல்ல, ஓவியத்திலும், கைவினைப்பொருட்கள் செய்வதிலும் மிகுந்த ஈடுபாடு உடையவன். சரியான முறையில் பாடங்களைக் கற்றுக்கொடுத்த பின், அவன் படிப்பிலும் சிறக்கத் தொடங்கிவிடுகிறான். அது திரைப்படத்திற்கான மிகைப்படுத்தல் இல்லை. உண்மைதான். கடின உழைப்பும், சரியான வழிகாட்டுதலும் இருப்பின் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் படிக்கவும் எழுதவும் முடியும்.

டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டவர்களால் ஏன் படிக்க இயலுவதில்லை, அது எவ்வகையான குறைபாட்டைத் தோற்றுவிக்கிறது என்று அறிந்துகொள்ளுமுன், படிப்பது, கற்றுக்கொள்வது என்பது இயல்பாக எப்படி நடக்கின்றது எனத் தெரிந்துகொள்வது அவசியம். கற்றுக்கொள்வது என்பது பல நிலைகளை உடையது.

1. ஒலிகள் இணைந்து எப்படி வார்த்தைகளை உருவாக்குகிறது என்பதை உணர்தல்
2. வடிவங்களைக் கவனித்து எழுத்துக்களை அறிதல்
3. ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்குமான தொடர்பை உணர்ந்துகொள்ளுதல்
4. ஒலிகளையும் , எழுத்துக்களையும் இணைத்து வார்த்தைகளாக்குதல்
5. புத்தகத்தின் பக்கங்களில் வரிகளின் மீதான ஒழுங்கமைவு மற்றும் கட்டுப்பாடு. அதாவது ஒரு வரியைப் படித்தபின் அதற்கடுத்த வரி, அதற்கடுத்தது என்று வரிசையாகப் படிக்க இயலுதல்
6. முன்பே அறிந்தவற்றையும், புதிதாகப் பார்ப்பவற்றையும் தொடர்பு படுத்த இயலுதல்
7. புதிய கருத்துப் படிவங்கள், உருவகங்களை உருவாக்குதல், உத்திகளை உருவாக்குதல்
8. பார்த்தவை, படித்தவைகளை நினைவில் நிறுத்துதல்

இவை அனைத்தும் சரிவர நடக்கும்பொழுதுதான், நாம் படிப்பது எழுதுவது இவை இயல்பானவை. இவற்றில் சிலவற்றை நம்மால் செய்ய முடியவில்லை எனில், அச்செயல்பாட்டின் ஒழுங்கமைதி சீர்குலைந்துவிடும். படிப்பது, எழுதுவது, நினைவு வைத்துக்கொள்வது இவற்றில் குறைபாடு உண்டாகும். டிஸ்லெக்சியாவால் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு, முதல் இரண்டு மூன்று படிகளிலேயே தடுமாற்றம் உண்டாகிறது. அவர்களால் ஒலி வார்த்தைகளை உருவாக்குவதையும், வடிவங்களைக்கொண்டு தொடர்புகளை உணர்வதையும், பல ஆணைகளை ஒன்றாகக் கொடுக்கையில் அவற்றை வரிசையாகச் செயல்படுத்துவதையும் கிரகித்துக்கொள்ள இயலுவதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் மேற்கொண்டு படிப்பது மிகுந்த கடினமான செயலாகி விடுகிறது.

குழந்தைகள் படிக்கையில் அ என்ற எழுத்துடன் து என்ற எழுத்தைச் சேர்த்தால் அது என்ற சொல் உருவாகும் என்பதைப் புரிந்துகொண்டு சொற்களைத் துவக்கத்தில் படிப்பார்கள். 'எழுத்துக்கூட்டிப்படி', 'வாய்விட்டுப் படி' என்று சிறுகுழந்தைகளை நாம் கூறுவது அதனால்தான். நாளடைவில் பலமுறை ஏற்கனவே பார்த்த சொற்களை ஒலிவடிவத்தை உணர்ந்து எழுத்துக்களைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே, நினைவாற்றலின் உதவியால் குழந்தைகளால் படிக்க இயலும். ஆனால், டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால், இந்த இயல்பான செயலைச் செய்ய முடியாது. இவர்கள் எழுத்துக்களை அவற்றின் வரிவடிவத்தைக் கொண்டு அடையாளம் காண்பது முதல், முன்பு படித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்வது வரை ஒவ்வொரு கட்டத்திலும் தடங்கல்களைச் சந்திக்கின்றனர்.உதாரணமாக 'cat' 'tac' ஆகவும், 'pot' 'top'ஆகவும், 'was', 'saw' ஆகவும் இவர்களுக்கு மாறிவிடக்கூடும். அதே போல் 'சுக்கு மிளகு திப்பிலி' என்று எழுதினால் இவர்கள் அதை 'சுக்குமி லகுதி ப்பிலி' என்று பார்க்கக் கூடும். இதனால் இவர்கள் மிக மெதுவாகவும், ஏகப்பட்ட தப்பும் தவறுமாகவும் படிப்பார்கள். ஒரே விதமான எழுத்துப் பிழைகளைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். எழுத்துக்களைத் தலைகீழாகவும் இவர்கள் எழுதக்கூடும்.

டிஸ்லெக்சியா ஏன் ஏற்படுகிறது?


டிஸ்லெக்சியா ஏற்படும் விதங்களைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. மூளையில் படித்தல், எழுதுதலைக் கட்டுப்படுத்தும் பகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது காயம் காரணமாக ஏற்படும் குறைபாடு(Traumatic Dyslexia). இது பொதுவாகச் சிறு குழந்தைகளிடம் அதிகம் காணப்படுவதில்லை.

2. பிறவியிலேயே மூளையின் இடப்பக்கத்தில் (Cerebral Cortex) ஏற்படும் தவறான வினையாக்கம், அல்லது அப்பகுதி சரிவர வேலை செய்யாமையின் காரணமாகப் படிப்பது, எழுதுவது இவற்றில் ஏற்படும் குறைபாடு, பரம்பரை பரம்பரையாக, ஜீன்களின் மூலம் கடத்தப்படுகிறது (Hereditary). இது 'Primary Dyslexia', என்று அழைக்கப்படுகிறது. இக்குறைபாடு உடையவர்களுக்கு எத்தனை வயதானாலும் எழுதுவதும் படிப்பதும் சிரமமாகவே இருக்கும். இது இருபாலாரிடமும் காணப்படும் குறைபாடு ஆகும்.

3. பிறவிக்கோளாறு இல்லாமல், ஹார்மோன்களின் சுரப்பின் காரணமாக உருவாவது Secondary Dyslexia. இது சிறுவர்களிடம்தான் அதிகம் காணப்படும். இக்குறைபாடு வயதானால் குறைந்துவிடக்கூடும்.

டிஸ்லெக்சியா குறைபாடு இருப்பதை சிறுகுழந்தையாக இருக்கும்பொழுதே கண்டறிந்து அதற்கான சிறப்பு ஆசிரியர்களிடம் (Teaching Specialists) காட்டலாம். இரண்டு அல்லது மூன்று வயதுக்குழந்தையால் 'ABCD' எல்லா எழுத்துக்களையும் உணரவும், உச்சரிக்கவும் முடியும். குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பின்னும் எழுத்துக்களை இனம் காண்பதில் சிக்கல்கள் இருப்பின் குழந்தை மருத்துவர்களிடம் காட்டவேண்டும். இக்குழந்தைகளுக்கு அவர்களுக்குப் புரியும்படி கற்றுத்தரும் சிறப்பு ஆசிரியர்களிடம் சில நாட்கள் கற்றுக்கொண்டால், அதன் பின் அவர்கள் தாமாகவே படிக்கத் தொடங்கிவிடுவர். பழைய முறைகளின் எழுதுதல், படித்தல் மட்டுமின்றி இவர்களுக்கு, ஒலி ஒளிக்காட்சிகள் மூலம் கற்றுக்கொடுத்தல் நல்லது.




வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 24, 2010 1:04 am

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ் எத்தனை அருமையான பதிவு சிவா... மிக்க் நன்றி..எனக்குப் பயன்படும்.. வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 154550



வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Tவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Hவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Iவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Rவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 03, 2010 5:08 pm

பிளேடு பக்கிரி wrote:வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 678642 வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 678642
மிக்க நன்றி...பி.ப. வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 154550



வெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Tவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Hவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Iவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Rவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Aவெற்றிக்கு வழி காட்டும் டிஸ்லெக்சியா.... - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக