ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பசு மாடு கற்பழிப்பு
 ayyasamy ram

கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
 SK

பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
 SK

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 SK

சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
 SK

தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ஜாஹீதாபானு

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 SK

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

வெறுப்பா இருக்கு!
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 SK

சிந்திக்க சில நொடிகள்
 SK

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 SK

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர்

View previous topic View next topic Go down

அதிக படங்களுக்கு இசையமைத்த தமிழர்

Post by அப்புகுட்டி on Mon Jun 28, 2010 1:33 am

இலங்கையில் அதிக படங்களுக்கு இசையமைத்திருப்பவர் ஒரு தமிழர் என்று எங்களில் நிறையப் பேருக்குத் தெரியாத ஒரு உண்மையாகும். சிறுவயதிலேயே தன்னை இசைக்கு அர்ப்பணித்து கொண்ட இவர் மொத்தம் 225 தமிழ் மற்றும் சிங்கள படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படங்களில் இடம்பெற்ற சில பாடல்கள் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன. தென்னிந்திய பாடகர்கள் மட்டுமின்றி இலங்கையில் முன்னணி பாடகர்கள் அனைவருமே இவரது இசையமைப்பில் பாடியுள்ளனர்.

திரைப்பட இசையில் மட்டுமின்றி கர்நாடக இசையிலும் பாண்டித்தியம் பெற்றுள்ள இவர் ஒரு பாடகருமாவார். இத்தனை பெருமைகளுக்கும் உரிய இந்த இசையமைப்பாளர்
ஆர். முத்துசாமி மாஸ்டர். இவரது 22வது நினைவு தினம் இன்றாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.


தமிழ் நாட்டில், கேரள எல்லையில் அமைந்துள்ள நாகர்கோவில் என்ற கிராமத்தில் 1926 ஜனவரி 5ஆம் திகதி முத்துசாமி பிறந்தார்.

இவரது முழுப்பெயர் ராமையா ஆசாரி முத்துசாமி என்பதாகும். இவரது தந்தை ராமையா பாகவதர். அவரும் ஒரு இசையமைப்பாளர்.

சிறு வயதிலேயே மகனுக்கு இருந்த இசையார்வத்தை கண்ணுற்ற ராமையா பாகவதர் பேபி வயலின் ஒன்றை மகன் முத்துசாமிக்கு வாங்கிக் கொடுத்தார். 10 வயதாகும் போது அந்த பேபி வயலினை நன்கு இசைக்கும் அளவுக்கு பழகியிருந்தார் மகன். அதன் பின் பெரிய வயலினை வாங்கி இசை அறிவை வளர்த்துக் கொண்டதையடுத்து சென்னையில் (அப்போது மெட்ராஸ்) நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் வயலின் இசைக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது 35 எம். எம். சிங்கள திரைப்படம் ‘கடவுனு பொருந்துவ’ 1947 ஜனவரி 21 ஆம் திகதி இது திரையிடப்பட்டது. இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஆர். நாராயண ஐயர். அந்தப் படத்தின் இசையமைப்பு மற்றும் இசைப்பதிவு வேலைகள் அனைத்தும் இந்தியாவிலேயே இடம்பெற்றன. இந்நிலையில் தனது இசைக்குழுவில் வயலின் கலைஞராக சேர்ந்து கொள்ளுமாறு நாராயண ஐயர் முத்துசாமிக்கு அழைப்பு விடுத்தார். வயலின் இசைப்பதில் அவருக்கு இருந்த திறமையை கண்ணுற்ற ஐயர் அவரை தனது உதவியாளராக ஆக்கிக்கொண்டார்.

‘கடவுனு பொருந்துவ’ சிங்களப் படத்தின் தயாரிப்பாளரான எஸ். எம். நாயகம் ஒரு தமிழர். இந்தியாவில் நடந்த படத்தின் இசையமைப்பு மற்றும் இசைப்பதிவுகளின் போது சுறு சுறுப்பாகப் பணிபுரிந்த இளைஞர் முத்துசாமியை தயாரிப்பாளர் நாயகத்துக்கு நன்கு பிடித்துப் போய்விட்டது. இலங்கைக்கு வருமாறு நாயகம் அவரை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று இலங்கைக்கு வந்த முத்துசாமி இங்கு ஒரு இசைக் கலைஞராக முதலில் ரேடியோ சிலோனில் சேர்ந்து கொண்டார்.

1952 அக்டோபரில் ரேடியோ சிலோனில் சேர்ந்து கொண்ட முத்துசாமி 1953 லேயே அதிலிருந்து விலகினார்.

திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எம். நாயகம் கந்தானையில் 1953ஆம் ஆண்டு ஒளிப்பதிவு கலையகம் ஒன்றை நிறுவினார். சுந்தர முருகன் நவகலா சவுன்ட் ஸ்டூடியோ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் கலையகம் பின்னர் எஸ். பி. எம். ஸ்டூடியோ என்று அழைக்கப்பட்டது.

இந்தக் கலையகத்தின் இசைப்பிரிவினை பொறுப்பேற்குமாறு நாயகம் விடுத்த அழைப்பை முத்துசாமி ஏற்றுக் கொண்டார்.

இதனையடுத்து 1953 இல் ‘பிரேம தரங்கய’ படத்தின் மூலம் தனது 27வது வயதில் முத்துசாமி முதல் முதலாக இசையமைப்பாளரானார். அப்படத்தின் சிறப்பாக இசையமைத்ததற்காக தென்னிந்திய ஊடகவியலாளர்கள் சங்கம் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வழங்கியது.

இதனையடுத்து ‘புதும லேலி’ (1953) ‘அஹங்கார ஸ்திரீய’, ‘மாதலங்’, ‘ஹித்த ஹொத்த மினிஹெக்’ ஆகிய படங்கள் மூலம் இவரது இசையமைப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பிரபல டைரக்டர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் சந்தேஷய படத்தில் ‘பிருதுகீசிகாரயா’ என்ற பாடல் முத்துசாமியின் சிறப்பை மேலம் பறைசாற்றியது. இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட இப்பாடலை பாடுவதற்கு எச். ஆர். ஜோதிபால என்ற புதிய பாடகருக்கு முத்துசாமி வாய்ப்பளித்திருந்தார்.

சிங்களப் படவுலகில் அப்போது இருந்த பிரபல பின்னணிப் பாடகர் தர்மதாச வல்பொல அவருக்கு பதிலாக சந்தேஷய பாடலைப் பாடுவதற்கு அழைக்கப்பட்ட எச். ஆர். ஜோதிபாலவுக்கு அது சுக்கிரதிசையாக மாறியது. அப்பாடல் மூலம் கிடைத்த புகழ் ஜோதிபாலவுக்கு இறக்கும் வரை செல்வாக்கை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. அப்பாடலின் இசைத்தட்டு கார்கில்ஸ் நிறுவனத்தில் அந்தக் காலத்திலேயே விற்பனையில் ஒரு லட்ச ரூபாவை தாண்டி சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிக படங்களில் இசையமைத்தமைக்காக 1974இல் முத்துசாமி மாஸ்டருக்கு ‘தீபசிகா’ விருது வழங்கப்பட்டது. சிங்கள படவுலகில் இவரது இசைப் பங்களிப்பை அங்கீகரித்த லிவியிவி அமைப்பும் இவரை கெளரவித்தது. 1987 இல் அப்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சி. இராசதுரை இவருக்கு ‘லயஞானவாருதி’ என்ற பட்டத்தை வழங்கினார். அதேசமயம் முத்துசாமி மாஸ்டரின் மகனான மோகன் ராஜுக்கு மெல்லிசை மன்னன் பட்டமும் வழங்கப்பட்டது.

தென் இந்திய பாடகர்கள் பலர் முத்துசாமி மாஸ்டரின் இசையமைப்பில் பாடியுள்ள அதேவேளை இலங்கையில் உள்ள முன்னணி பாடகர்கள் அனைவருமே இவரது இசையமைப்பில் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பிரபல பாடகி நந்தாமாலினி இவரது இசை யமைப்பில் ‘தருவா காகெத’ என்ற படத்தில் 1960இல் பாடியதன் மூலம் திரைப்படங்களில் பாடுவதை ஆரம்பித்திருந்தார்.

சிங்கள இசையுலகிற்கு ஆற்றிய சேவையை கெளரவிக்கும் வகையில் 1956 இல் அப்போதைய பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவல இவருக்கு கெளரவ இலங்கை பிரஜாவுரிமையை வழங்கினார்.

கர்நாடக இசை ஆசிரியராக இருந்த முத்துசாமி மாஸ்டர் நல்ல பாடகரும் ஆவார். ‘சிதக மஹிம’ என்ற படத்தில் சுஜாதா அத்தநாயக்கவுடன் இவர் பாடிய ‘மதுரயாமே’ என்ற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடலாகும். பல தசாப்தங்களின் பின்னர் இவரது மகனான மோகன்ராஜ் அதே பாடலை நிரோஷா விராஜினியுடன் பாடியிருந்தார். இலங்கை இசையுலகில் மோகன்ராஜின் செல்வாக்கை உயர்த்த இப்பாடல் பெரிதும் உதவியுள்ளது.

1958இல் மீண்டும் ரேடியோ சிலோனில் சேர்ந்து கொண்ட முத்துசாமி மாஸ்டர் 1981 வரை 24 வருடங்கள் அந்த நிறுவனத்தில் சேவையாற்றியிருந்தார்.

1961 அக்டோபர் 7ஆம் திகதி முத்துசாமி மாஸ்டர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். நீலியா பெரேரா என்ற சிங்கள யுவதியை இவர் திருமணம் செய்தார். முத்துசாமி மாஸ்டர் நீலியா தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் மோகன்ராஜ் இவர் தற்போது அப்சராஸ் என்ற இசைக் குழுவை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று தங்கைகள் உள்ளனர்.

1988 ஜூன் 27ஆம் திகதி முத்துசாமி மாஸ்டர் தனது 62 ஆவது வயதில் மரணமானார். அச்சமயம் அவர் 225 சிங்களப் படங்களுக்கு இசையமைத் திருந்தார்.


இன்று முத்துசாமி மாஸ்டரின் நினைவு தினம்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum