புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
17 Posts - 4%
prajai
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
8 Posts - 2%
jairam
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_m10உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் துக்கங்களை எல்லாம் இயேசு சுமப்பார்!


   
   

Page 1 of 2 1, 2  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:57 pm

குடும்ப பாரத்தை எல்லாம் நான் ஒருத்தியாக சுமக்கிறேன். என் கணவருக்கு கொஞ்சமும் கவலை இல்லையே!
என் வேலையில் உள்ள பிரச்சனைகளோடு சேர்ந்து என் வீட்டு பிரச்சனைகளையும் என் தலையில் போட்டு திரிகிறேனே,

அது பற்றி என் மனைவிக்கோ, வளர்ந்து விட்ட என் பிள்ளைகளுக்கோ- எந்த ஒரு வருத்தமும் இல்லையே!
அந்த அலுவலகத்தில் எத்தனை பேர்களோ பணி செய்கிறார்கள், ஆனால் நான் மட்டுமே அத்தனை வேலைகளும் தனியாக செய்ய வேண்டி இருக்கிறது. அப்படி இருந்தும் மேல் அதிகாரிகளுக்கோ- என் மேல் ஒரு அனுதாபம் கூட இல்லையே!

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:58 pm

ஒரு பக்கம் உணராத இருதயம்!
ஒரு பக்கம் உணரும் இருதயம்!
நடுவே உணர்த்தும் இருதயம்!
வலது பக்கம் ஒரு திருடன்.
இடது பக்கம் ஒரு திருடன்.
நடுவே இயேசு!

ஆம்! இரண்டு திருடர்களுக்கு நடுவே இயேசு, சிலுவையில் தொங்கி கொண்டு இருக்கிறார்.
இரண்டு பாவ மனிதர்களுக்கும் இடையே பரிசுத்த தேவ குமாரன், இரத்தம் வடிய சிலுவையில் தொங்கி கொண்டு இருக்கிறார்.

ஏன்? எதற்காக??

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:58 pm

ஒரு மனிதனுக்கு சுகம் இல்லை.
அதுவும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவனுக்கு சுகம் இல்லை.
அவன் விருப்பம் எல்லாம், அவன் ஆசை எல்லாம் -
இந்த வியாதியில் இருந்து சுகமாகி விட வேண்டும் என்பதே!
நான் இந்த மரண வியாதியில் இருந்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்பதே.
அதற்காக அவன் ஒரு கட்டிடத்தில் போய் படுத்து கிடந்தான்.

அதில் படுத்துக்கொண்டே-
அருகில் உள்ள குளத்தை பார்த்து கொண்டிருந்தான். அந்த குளத்தில் கிடக்கும் தண்ணீரையே கவனித்து கொண்டிருந்தான்.
எப்போது குளத்தில் தண்ணீர் களங்கும்?
எப்போது தேவதூதன் வந்து அந்த தண்ணீரை கலக்குவான்?
அப்படி அந்த தண்ணீர் கலக்கப்படும் போது- நான் முதல் ஆளாக போய், அந்த தண்ணீரில் இரங்கி விட்டால், என் வியாதி உடனே சுகமாகிவிடும் என்று நம்பியவனாக-
அவன் அந்த குளக்கரையிலே உள்ள அந்த கட்டிடத்திலே பல ஆண்டுகளாக படுத்துகிடந்தான்.
ஆனால் அவன் எண்ணம் நிறைவேறவில்லை.

காரணம்-
படுத்த படுக்கையாக கிடக்கும் அவனுக்கு, உதவி செய்ய யாரும் முன் வர வில்லை.
நான் சுகம் பெற என்னை குளத்தில் கொண்டு போய் விட, யாராவது எனக்கு உதவிக்கு வர மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்தான்.

இப்படி இருக்க அவனை தேடி அங்கு இயேசு வந்தார்.
அவனிடம் நேராக வந்து, அவன் நீண்ட காலமாக வியாதியாக இருக்கிறான் என்று அறிந்து-
அவனிடம் இயேசு அன்பாக பேசினார்.
அவனை அன்போடு விசாரித்தார்.(Iபேதுரு 5:7)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 10:59 pm

நீ சுகமாக வேண்டும் என்று விரும்புகிறாயா என்று மனதுருக்கத்தோடு கேட்டார்.
இயேசு ஏன் இப்படி அவனிடம் கேட்க வேண்டும்?
அவன் எப்படியாவது சுகம் பெற்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தானே-
அந்த கட்டிடத்தில படுத்து கிடந்து அந்த குளத்தின் தண்ணீரையே பல வருடங்களாக பார்த்து கொண்டிருக்கிறான்.

அப்படி இருக்க அவனை பார்த்து-
"நீ சுகமாக வேண்டும் என்று விரும்புகிறாயா" என்று இயேசு ஏன் கேட்கிறார்?
அதற்கு காரணம் இருக்கிறது.
அவன் குளத்தையே பார்த்து கொண்டிருந்தானே தவிர, அதில் கிடந்த தண்ணீர் கலங்கும் நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தானே தவிர-
நான் ஏன் பல ஆண்டுகளாக இந்த வியாதியோடு போராடிக்கொண்டிக்கிறேன்.
ஏன் இந்த வியாதி எனக்கு வந்தது? ஏன் இந்த வியாதி என்னை விட்டு போக மாட்டேன் என்கிறது?-
என்றெல்லாம் அவன் சிந்தித்த பார்க்கவே இல்லை.

அவன் தன்னை பற்றியும்- தன் கடந்த கால வாழ்க்கையை பற்றியும்- தன்னுடைய செய்கைகளை பற்றியும்- அதுவரை எண்ணி பார்க்வே இல்லை.

ஆகவே தான் அவனை உணர்த்த வேண்டும் என்றும், அவன் தன்னை பற்றி சித்துத்து- தன்னை ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்றும் விரும்பி இயேசு- அவனை பார்த்து,
"நீ சுகமாக வேண்டும் என்று விரும்புகிறாயா" என்று கேட்டார்.

ஆனால் அந்த மனிதனோ-
இயேசுவின் இந்த கேள்வியின் மூலம், தன்னை பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு பதிலாக-
தேவ தூதன் குளத்தில் இறங்கி, தண்ணீரை கலக்கும் போது, என்னை அந்த குளத்தில் கொண்டு போய் விடுவார் இல்லை- எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்று சொன்னான்.

ஆம்!
அவன் தன் பாவத்தை உணராதபடிக்கு, அவன் உள்ளம் அடைபட்டு கிடந்தது.
என் பாவமே என் வியாதிக்கு காரணம்-
என் பாவமே என் பல ஆண்டு கஷ்டங்களுக்கு காரணம்-
என்று அவனை சிந்திக்க விடாதபடிக்கு, ஒரு இருள் அவனை மூடிக்கொண்டு இருந்தது.
ஆனாலும், அவன் மேல் மனதுருகிய இயேசு- அவனுக்கு இரங்கி, அவனை சுகமாக்கிதோடு-
மீண்டும் அவனை தேவாலயத்திலே சந்தித்து-
இதோ நீ சுகமானாய். அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி, இனி பாவம் செய்யாதே என்று எச்சரித்து அனுப்பினார்.

உணராத அவன் இருதயம், இனியாவது உணரட்டும் என்றே மீண்டும் இயேசு அவனை சந்தித்தார்.
இப்படி எச்சரித்தார். (யோவான்5:1-14)

உணராத உள்ளம் கொண்ட இந்த மனிதன், அதன் பின்பாவது உணர்த்தப்பட்டானா?
சரி போகட்டும்!

இந்த மனிதன் தான் இப்படி என்றால், இன்னொரு மனிதன் எப்படி இருக்கிறான் என்ற பார்ப்போமா?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 11:00 pm

அவன் ஒரு பெரிய அதிகாரி.

அவனுக்கு கீழே நிறைய பேர் வேலை பார்த்தார்கள்.
தன்னிடம் வேலை பார்த்தவர்களில் ஒருவன் மீது, அவன் மிகுந்த அன்பு செலுத்தினான்.
ஒரு நாள்- அந்த வேலையாள் அதிக சுகவீனம் அடைந்தான். சில நாட்களில் சாகும் நிலைக்கு அவன் ஆளானான்.

இதனால், மிகுந்த மனவேதனை அடைந்த அதிகாரி, அவனை காப்பாற்ற விரும்பினான். மருத்துவர்களை அழைத்து சிகிச்சை செய்து பார்த்தான்.

ஆனால் வியாதி சுகமாகவில்லை.
மாறாக அந்த வேலைக்காரன், மரணத்தோடு போராடிக்கொண்டிருந்தான்.

"இனி என்ன செய்வது?
என் வார்த்தைகளுக்கெல்லாம் கீழ்ப்படிந்து, எனக்கு முன் உண்மையாக ஊழியம் செய்த இவனை நான் இழந்து விட வேண்டியதுதானா"- என்று கவலை அடைந்தான்.

அப்போது -
அவனுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்தது.

அந்த சந்தோஷ செய்த, இது தான்.

பரிசுத்தராகிய இயேசுகிறிஸ்து, அவன் இருந்த ஊருக்கு வந்து இருக்கிறார் என்பதே!
இதுபற்றி கேள்விப்பட்டவுடன், அவன் உள்ளம் துள்ளி குதித்தது.

வியாதிப்பட்ட பலர், இயேசுவால் அற்புத சுகம் பெற்றதை அவன் ஏற்கனவே அறிந்து இருந்தபடியால்-
"இனி எனக்கு கவலை இல்லை, என் அன்பான வேலைக்காரன், இனி உயிர் பிழைத்து கொள்வான். சாகமாட்டான்" என்று மன தைரியம் அடைந்தான்.

அதே நேரம்- ஒரு சந்தேகம் அவனுக்குள் ஏற்பட்டது.
"நான் அரசு அதிகாரி ஆயிற்றே, இயேசு யூதராயிற்றே, நான் அழைத்தால் அவர் வருவாரா?
வராவிட்டால் என்ன செய்வது?"

- இப்படி சிந்தித்து, அவன் வேதனைப்பட்டான்.

ஆனாலும், அவன் சும்மா இருக்கவில்லை. தனக்கு தெரிந்த - அந்த ஊரில் உள்ள சில பெரிய மனிதர்களை அழைத்தான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 11:01 pm

"நீங்கள் இயேசுவிடம் போய், எப்படியாவது அவரை என் வீட்டுக்கு அழைத்து வந்து விடுங்கள்.
அவர் வந்து, என் வேலைக்காரனை சுகமாக்க வேண்டும்"- என்று அவர்களிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டான்.
ஊர் பெரியவர்களுக்கு, பெரும் சந்தோஷம். "இந்த பெரிய அதிகாரி, நம்மிடம் உதவி கேட்டு வந்துவிட்டாரே! அவருக்கு இந்த காரியத்தில், நாம் உதவி செய்தே ஆக வேண்டும்" என்று தீர்மானித்தனர்.
அவர்கள் சிறிதும் தாமதிக்காமல், இயேசு இருந்த இடத்துக்கு சென்று அவரை அழைத்தனர்.

"இயேசு தங்களோடு வர- எங்கே மறுத்து விடுவாரோ?" என்று எண்ணிய அவர்கள்- அந்த அதிகாரியை புகழ்ந்து இயேசுவிடம் கூறினார்கள்.

"அய்யா! இந்த அதிகாரி மிகவும் நல்லவர். நம்முடைய ஜனங்களை நேசிக்கிறார். நமக்கு ஒரு ஆலயத்தையும் கட்டி தந்து இருக்கிறார்.

நீர் வந்து, மரண அவஸ்தைப்படும் அவருடைய வேலைக்காரனை சுகமாக்கினால் போதும் என்று அவர் விரும்புகிறார்.

நீர் இந்த தயவு செய்கிறதற்கு, அவர் தகுந்தவராக இருக்கிறார்"- என்று இயேசுவிடம் கருத்தாக வேண்டிக்கொண்டார்கள்.

இயேசு, மறு வார்த்தை ஒன்றும் பேசவில்லை.
அவர்களுடனே கூட, அந்த அதிகாரி விட்டுக்கு இயேசு நடந்து போனார்.

அந்த வீட்டை அடைவதற்கு இன்னும் சிறிது தூரம் தான் இருந்தது.
தான் அனுப்பிய ஊர் பெரிய மனிதர்களோடு, தாம் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த இயேசு சற்று தூரத்தில் வருவதை- அந்த அதிகாரி தன் வீட்டுக்கு முன் நின்று பார்த்து விட்டான். அவ்வளவுதான்-
அவ்ன உள்ளம் பயம் அடைந்தது- அவன், கை-கால்கள் நடுங்கின. அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை.
உடனடியாக தன் அருகில் நின்ற தன் நண்பர்களை அவசரமாக கூப்பிட்டான்.

"அதோ, என் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கிறாரே, அந்த பரிசுத்த மனிதரிடம் போய் சொல்லுங்கள்.
நீர் என் வீட்டுக்கு வர வேண்டாம் என்று நான் சொன்னதாக அவரிடம் போய் கூறுங்கள்"- என்று கேட்டுக் கொண்டான்.

பிரியமானவர்களே! இந்த அதிகாரிக்கு அதற்குள் என்ன நேர்ந்து விட்டது?
சற்று நேரத்துக்கு முன்தான் ஊர் பெரியவர்களை அனுப்பி, எப்படியாவது என் வீட்டுக்கு அவரை அழைத்து வந்து விடுங்கள் என்று கூறினான்.

இப்போதோ, தன் நண்பர்களை அனுப்பி, அவர் என் வீட்டுக்கு வரவேண்டாம். வராதபடி அவரை தடுத்து விடுங்கள் என்று கேட்டு கொள்கிறானே, ஏன்?

ஆம், அன்பானவர்களே! இந்த இடைப்பட்ட நேரத்துக்குள்- அவனுக்குள் பெரிய மாற்றமே ஏற்பட்டு விட்டது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 11:02 pm

"நான் பெரிய அதிகாரி.
என்னை கண்ட எல்லாரும், என்னை வணங்குகிறார்கள்.

என்னை எதிர்த்து பேசவோ, எதிர்த்து நிற்கவோ- இங்கு யாரும் இல்லை.
நான் நல்லவன். ஆகவே தான் என்னை மதிக்கிறார்கள்-விரும்புகிறார்கள்"
- இப்படித்தான் அவன், தன்னைப்பற்றி அதுவரை நினைத்திருந்தான். மிக உயர்வான இடத்தில் தன்னை வைத்திருந்தான்.

எப்போது, அவன் இயேசுவை பார்த்தானோ - அப்போதே இந்த "பெருமையின் கோட்டை" அவன் உள்ளத்தில் உடைந்து நொறுங்கியது.
தான், "யார்?" என்பதை அவன் உணர்ந்தான்.

இயேசுவை- அதுவரை ஒரு அற்புதர் என்றுதான் அவன் அறிந்திருந்தான்.
தன் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்த இயேசுவின் தோற்றத்தைக் கண்ட போதுதான்- இயேசுவின் முகத்தைப் பார்த்த போது தான்-
"இயேசு, மகா பரிசுத்தர்."

நான், அவருக்கு முன் நிற்கவோ- அவரிடம் பேசவோ கொஞ்சமும் தகுதி இல்லாத "மகா பெரிய பாவி" என்று அவன் உணர்ந்தான்.

அதுவரை உணர்வில்லாமல் இருந்த அவன் இருதயம்- இயேசுவை கண்ட உடனே- அவருடைய பரிசுத்த தோற்றத்தை பார்த்த உடனே உணர்வடைந்த இருதயமாக மாறியது.
ஆகவே தான்- தன் அருகில் உள்ள நண்பர்களை அழைத்து - என் வீட்டை நோக்கி வந்து கொண்டிருக்கும் இயேசுவிடம் போய்- "அவரை வரவேண்டாம்" என்று சொல்லி விடுங்கள் என்று அவசரமாக கூறினான்.
"நீர் வருத்தப்பட வேண்டாம். நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல.
நான் உம்மிடத்தில் வரவும், என்னை பாத்திரனாக எண்ணவில்லை.

ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும். அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான் என்று நான் சொன்னதாக அவரிடம் போய் சொல்லுங்கள்" என்றும், அவர்களிடம் சொல்லி அனுப்பினான்.
இயேசு- அவன் அனுப்பிய நண்பர்கள் மூலம்- அவன் கூறி அனுப்பிய இந்த வார்த்தைகளை கேட்டபோது-
தாங்கள் பரிசுத்தவான்கள், நீதிமான்கள் என்று எண்ணி - தனக்கு பின்னால் திரளாக வந்து கொண்டிருந்த மக்களை பார்த்து-
"இஸ்ரவேலருக்குள்ளும், நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை காணவில்லை" என்று ஆச்சரியத்தோடு சொன்னார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 11:02 pm

அந்த நேரமே- அந்த அதிகாரியின் வேலைக்காரன்- இயேசுவால் அற்புத சுகம் அடைந்தான்.
உணர்வடைந்த உள்ளத்தோடு தன்னை தாழ்மைப்படுத்திய அந்த அதிகாரியின் விசுவாசத்தை கண்ட இயேசு- அவன் வேண்டிக்கொண்டபடியே அவனுக்கு செய்தார். (லூக்கா7:1-10)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 11:03 pm

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தார்.
தன்னை துன்பப்படுத்தி, சிலுவையில் அடித்து, ரத்தம் சிந்த வைத்த மக்களுக்காக- உணர்வில்லாத அந்த கொலைகார கூட்டத்துக்காக அவர் பரிதாபப்பட்டார்.

அவர்கள் பிதாவின் கோபத்துக்கு ஆளாகி, அழிந்து போகக்கூடாதே என்று அவர்களுக்காக மனதுருகினார்.
எனவே- பிதாவை நோக்கி- "பிதாவே! இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாமல் இருக்கிறார்களே!"- என்று அவர்களின் மன்னிப்புக்காக பரிந்து பேசினார்.
இயேசுவுடன்- இரண்டு பக்கங்களிலும் சிலுவையில் அறையப்பட்ட இரண்டு திருடர்களும்- இயேசுவின் இந்த வேண்டுதலை கேட்டனர்.

அவர்களில் ஒருவன்- "நீ தேவனுடைய குமாரனா? அப்படி என்றால் உன்னையும், எங்களையும் இரட்சித்துக்கொள்" என்று இகழ்ந்து கூறினான்.
பாவம்! அவன் சாகப்போகும் கடைசிநேரத்தில், இரட்சிப்பை பெற்றுக்கொள்ள- தனக்கு கிடைத்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டான்.

தன் பாவங்களை உணர்ந்து, தன்னை தாழ்த்தி, நரக ஆக்கினைக்கு தப்பித்து கொள்ள வேண்டிய அவன்-
தனது உணராத இருதயத்தினால், நித்திய அழிவை தேடிக்கொண்டான்.
ஆனால், அந்நேரம்- இயேசுவின் இன்னொரு பக்கம்- சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த திருடனோ-
தன் தவறுகளை உணர்ந்தான். நான் உண்மையிலே குற்றம் செய்து, இந்த தண்டனையை பெற்று கொண்டிருக்கிறேன் என்று தீர்மானித்தான்.

இவரோ, ஒரு தவறும் செய்யாமல் இருந்தும்- என்னை போல் தண்டிக்கப்பட்டு விட்டாரே என்று வேதனைப்பட்டான்.
இயேசு, பரிசுத்த தேவ குமாரன் என்று உணர்ந்த அவன், "நீர் உம்முடைய இராஜ்யத்தில் வரும் போது, அடியேனை நினைத்தருளும்" என்று கண்ணீரோடு கெஞ்சினான்.

அவன் உணர்வுள்ள இருதயத்தை கண்டு, அவனுக்கு இரங்கிய இயேசு-
"இன்றைக்கு, நீ என்னுடனே கூட பரதீசியல் இருப்பாய்" என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தார்.
சாகப்போகும் கடைசி வேளையில் இரட்சகர் இயேசுவை சந்திக்கும் வாய்ப்பை பெற்ற நல்ல சந்தர்ப்பத்தை அவன் பயன்படுத்திக்கொண்டான்.

தன் இருதயத்தை தாழ்த்தி, நித்திய அழிவுக்கு தப்பித்து கொண்டான்.
அது மட்டும் அல்ல-
இயேசுவுடனே கூட நித்திய இராஜ்யத்தையும் அவன் பெற்றுக்கொண்டான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 08, 2008 11:03 pm

இந்த இரண்டு பேர்களில், நான் யாரை போல இருக்கிறேன்?
இயேசுவை அருகில் கண்டும்- இயேசுவின் அன்பான வார்த்தைகளை கேட்டும்- மனம் மாறாமல் போன உணர்வற்ற இருதயம் கொண்ட மனிதனை போல இருக்கிறேனா? அல்லது-
மனம் திருந்திய அனுபவத்தை பெற்று-
உணர்வடைந்த இருதயம் கொண்ட மனிதனைப்போல இருக்கிறேனா?

முப்பத்தெட்டு ஆண்டுகள் சுகவீனமாக இருந்தும், தன் பாவத்தை உணராமல்- தன்னை ஆராய்ந்து பார்க்காமல்- சுகமடையாமல்-
தன் விசுவாசத்தை- குளத்தை பார்ப்பதிலும், தண்ணீரை பார்ப்பதிலும் செலவிட்டானே ஒரு மனிதன்- அவனை போல இருக்கிறேனா?
அல்லது-
இயேசுவை பார்த்த உடனே- தன்னை பாவி என்று உணர்ந்து, தன்னை இயேசு என்று தாழ்த்திய "நூற்றுக்கு அதிபதி" என்ற அதிகாரியைப் போல இருக்கிறேனா-
உங்களை நீங்களே சோதித்து பாருங்கள், உங்களை பரீட்சித்து பாருங்கள் (IIகொரிந்தியர் 13:15) என்ற பரிசுத்த வேதம் நம்மை பார்த்து கூறுகிறது.

உணர்வடைந்த உள்ளம் கொண்ட நூற்றுக்கு அதிபதி, தன் வேலைக்காரன் மரணத்துக்கு தப்ப வேண்டுமே என்ற மனபாரத்தை விசுவாசத்தோடு இயேசுவின் மீது சுமத்தினான்.

அதேபோல- திருடர்களில் ஒருவன் உணர்வடைந்த இருதயத்தோடு "பாவியாகிய என்னையும் இரட்சியும் இயேசுவே" என்று தன் பாவங்களையும் துக்கங்களையும் இயேசுவின் மேல் சுமத்தி விட்டான்.
இயேசுவும் இதைத்தான் விரும்புகிறார்.

"மகனே! மகளே! நீ யார் என்று உன்னை உணர்த்துவதற்காகவே- நான் இந்த உலகத்தில் ஒரு மனிதனாக வந்தேன்.
உன்னை பாவ பிசாசிடம் இருந்தும் பாவ மரணத்தில் இருந்தும் விடுவிக்கவே- உன் பாரங்களை எல்லாம், உன் துக்கங்களை எல்லாம் சிலுவையில் சுமந்தேன்.

அன்று மட்டும் அல்ல-
இன்றும், உன் துக்கங்களை சுமக்கிறதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்" என்று, இயேசு நம்மை பார்த்து கூறிக்கொண்டு இருக்கிறார்.
ஆம்! உணராத இருதயங்களை உணர்த்தும் படியாகவும்- உணர்ந்த இருதயங்களை பரலோகத்துக்கு உயர்த்தும்படியாகவும்-
நம்முடைய துக்கங்களை சுமந்தவராக- இன்றும் இயேசு சிலுவையில் தொங்கி கொண்டிருக்கிறார்.
"உன் துக்கங்களை சிலுவையில் சுமந்தேன்.
நீ மனம் திரும்பி என்னிடம் வா.

உணர்வடைந்த இருதயத்தோடு உன்னை எனக்கு ஒப்புக்கொடு.
உலகம் தரக்கூடாத சமாதானத்தை உனக்கு தருவேன்" என்று வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களை எல்லாம் இயேசு அழைத்து கொண்டிருக்கிறார்.
துக்கத்துடனே திரிகிறவர்களை இயேசு தேடிக் கொண்டிருக்கிறார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக