புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10 
11 Posts - 50%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10 
53 Posts - 60%
heezulia
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_m10தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை


   
   

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 12, 2008 3:37 pm

First topic message reminder :

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 Kadal-thamarai


முன்னுரை



டி.வி. இராமசுப்பையர் அதிசய மனிதருள் ஒருவர்.


நண்பர் தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை எனும் டி.வி.ஆர்., வாழ்க்கை வரலாறு நூலுக்கு முன்னுரை ஒன்று எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட போது, தயக்கமும், மகிழ்ச்சியும் ஊடாட ஒப்புக் கொண்டேன்.

நான் பிறந்து வளர்ந்து, இப்போது வாழ்ந்து வரும் வெள்ளாங்குடியின் அருகில் உள்ள தடிமார் கோவில் கிராமத்தில் டி.வி.ஆர்., பிறந்தார். இளமைப் பருவத்தின் பெரும் பங்கை அங்கே தான் செலவழித்தார். வடிவீசுவரத்திற்கு தனது இருக்கையை மாற்றிய போதும், வட சேரி கிராமத்திற்கு மாதத்தில் பலமுறை வந்து செல்வார். எனவே, ஊர்ப்பற்றுக் காரணமாக, சார்புடன் முன்னுரையை எழுதி விடுவேனோ என்ற பயத்தால் தயக்கம் எழுந்தது.

டி.வி.ஆரையும், அவர், தன்னுடன் அழைத்துச் செல்லும் மக்களையும் - ஒன்றிரண்டு நாள் அவர் மருமகனையும் - நான் அகல நின்று 1941ம் ஆண்டிற்கு முன் பார்த்து இருந்தாலும், நாகர்கோவில் கிளப்பில் உறுப்பினன் ஆன பின்தான் அந்த கிளப்பின் செயலாளர் என்ற நிலையில் டி.வி.ஆரை அறிந்திட முடிந்தது. சமுதாய நன்மைக்கு அவர் செய்த பணிகளைத் தெரிந்திடவும் வாய்ப்பு ஏற்பட்டது. 1963ம் ஆண்டு, காசி சர்வ கலாசாலை போல் கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைக்கும் ஆலோசனைக்கு டி.வி.ஆர்., மிகவும் துணை நின்றார். அவர்தான் அந்த ஆலோசனைக் குழுவின் தலைவர். எனவே, நட்புறவாலும், அன்பாலும் கட்டுப்பட்ட என்னிடம், டி.வி.ஆரைப் பற்றி எழுதுவதில் இனந்தெரியாத மகிழ்ச்சி எழுந்தது.

ஆய்வு நிறுவனம், அறநிலையங்கள் முதலியவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு மார்ச் மாதம் கெடுபிடியானது. அம்மாத முதலில் தான் இந்த வரலாற்று நூல் கிடைத்தது. கிடைத்த நாள் மாலை, நூலின் ஒரு சில பகுதிகளைப் படித்தேன். மிக சுவையாக நூல் வளர்ந்து சென்றது. தெளிவுகளைத் திரட்டி, சம காலத்தவர்களின் எண்ணங்களை இடை இடையே கொடுத்து நூல் உருவாக்கியுள்ள திறமையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பிற பணிகளை ஒதுக்கி விட்டு, அன்றும், அடுத்த நாளும் நூல் முழுவதும் படித்து முடித்தேன். செம்மையாக முத்துகிருஷ்ணன் உருவாக்கியுள்ளார் என்ற எண்ணமே என் உள்ளத்தில் மேலோங்கி நின்றது.

நூலின் செம் பாதிக்கு மேல், தினமலர் பத்திரிகையை டி.வி.ஆர்., நிறுவி வெற்றி கண்டதைப் பற்றியதாகும். அந்த நிறுவனத்தை டி.வி.ஆரின் மக்களும், பேரப் பிள்ளைகளும் இன்று ஒற்றுமையுடன் வளர்த்து வருகின்றனர். தனது மக்களை இந்தப் பணியில் ஈடுபடுமாறு செய்தது டி.வி.ஆரின் குடும்பத் தலைமைக்குத்தக்க உதாரணமாகும்.

எஸ்.வையாபுரிப்பிள்ளை, "தினமலர்' இதழை செப்., 6,1951 வெளியிட்ட அன்று, அவருடன் நானும் சென்றிருந்தேன். சி.ஓ.மாதவன் தலைமை தாங்கினார். கவிமணி ஒரு வாழ்த்துப் பாவால் தினமலர் இதழை வரவேற்றார்.அன்று சாதாரண நிலையில் உருவான, "தினமலர்', திருவிதாங்கூர் தமிழர் எழுச்சியால் பிரபலம் அடைந்து, இன்று, ஆலமரம் போல் படர்ந்து அனேகமாக ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும் வெளியிடப்படுகிறது. அந்த வளர்ச்சி, பாராட்டத்தக்கது; பெருமைப்படத்தக்கது.

டி.வி.ஆர்., பத்திரிக்கை வளர்ப்பதில் காட்டிய ஆர்வம், வகுத்த நெறிமுறைகள், அரசியல், தனிமனித எதிர்ப்புகள், அஞ்சா நெஞ்சம், பிறரை அணைத்துச் செல்லும் ஆற்றல், மன்னித்து மறக்கும் பெருந்தன்மை முதலியவற்றை முத்துகிருஷ்ணன் திறம்படக் கூறி இருக்கிறார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:16 am

பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன்

நாகர்கோவில் வடசேரியில் பிப்., 18, 1926ல் பிறந்த பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம், உலகப்புகழ் பெற்ற தமிழ் அறிஞர். நெல்லை, திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பணியாற்றியவர். 1981ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர்.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 PHOTO_4d


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:16 am

சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கழக நிறுவனர். சர்வேதேச திராவிட மொழியியல் பத்திரிகையின் நிறுவன ஆசிரியர். உலக மலையாள மாநாட்டின் உதவித் தாளாளர். உலக நாடுகள் பலவற்றுக்கும் பல முறை சென்று வந்தவர். 130க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

ஆரம்பக் கல்வி இயக்கத்தில் டி.வி.ஆரின் பங்கு பற்றி வி.ஐ.சுப்பிரமணியன் விளக்குகையில்:

"ஆரம்பக் கல்வி இயக்கத்தை அன்றைக்கு ராஜ குடும்பத்தைச் சார்ந்தவரும், கல்வி இலாகா டைரக்டராக இருந்தவருமான ஏ.என்.தம்பியின் உதவியுடன் டி.வி.ஆர்., நாஞ்சில் நாட்டில் பிரபலப்படுத்தினார். தம்பி வெளிநாடுகளில் படித்தவர். தீவிரமாக ஆங்கிலம் பேசுவார். டாக்டர் அழகப்ப செட்டியாருடன் பயின்றவர். இதன் காரணமாகவே காரைக்குடியில் செட்டியார் கல்லூரி ஆரம்பித்த போது அதன் பிரின்சிபாலாக தம்பியை நியமித்தார். டி.வி.ஆர்., மீது தம்பிக்கு மிகவும் பிரியம். தரமான நல்ல கல்வி வளருவது பிற்காலத்தில் அப்பகுதியில் ஜாதிமதச் சண்டைகள் வராமல் தடுக்கும் என்று டி.வி.ஆர்., கருதினார்' என்று விளக்கினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:16 am

முதல் கல்லூரி முயற்சி

நாகர்கோவிலில் முதன்முதலாக ஒரு கல்லூரியை அமைத்து விட வேண்டும் என்ற ஆசை டி.வி.ஆருக்கு இருந்தது. இதற்காகப் பெருஞ் செல்வந்தரான தன் மாமனாரிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை வாங்கி விடலாம் என்ற முடிவும் இருந்தது. மாமனாரோ நன்கொடை தரத் தயங்கவில்லை. ஆனாலும், அப்படி உருவாகும் கல்லூரிக்குத் தன் பெயர் வைக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார். எப்படியாவது ஒரு கல்லூரி வரவேண்டுமே என்ற நோக்கத்தில் சர்.சி.பி.,யை கண்டு பேசினார் டி.வி.ஆர்., கல்லூரி போன்ற கல்வி ஸ்தாபனத்திற்குத் தனி மனிதர் பெயர் சூட்டுவது சரியல்ல என்ற கருத்தை சர்.சி.பி., வெளியிட்டார். அதனால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:17 am

கன்னியாகுமரியில் ஒரு பல்கலைக்கழகம்

குமரி மாவட்டம் பல்வேறு துறைகளில் முன்னேற வேண்டும் என்று தான் கொண்டிருந்த பெரும் ஆவலின் காரணமாக எழுந்ததுதான், "கன்னியாகுமரியில் ஒரு பல்கலைக்கழகம்!' இது வெறும் ஆசையின் உந்துதல் மட்டுமன்று. நியாயத்தின் அடிப்படையிலும் மிகச் சரியான கோரிக்கையே என்பதைப் பல்வேறு காரணங்களுடன் சிந்தித்தார் டி.வி.ஆர்.,

ஒரு பணியை பற்றிச் சிந்தனை வருமானால், அதைச் செயலாக்க, அத்துறையில் உள்ள நிபுணர்களை இணைத்து ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவின் மூலமே பணிகளை முடுக்கி விடுவது டி.வி.ஆரிடம் காணப்படும் தனிச் சிறப்பு. அவரின் ஆலோசனையில் இவ்வாறு பல குழுக்கள் குமரி மாவட்ட நலனுக்கான இயங்கி வந்தன.

தி.முத்துகிருஷ்ணன் எழுதிய கடல் தாமரை - Page 7 PHOTO_04e


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:17 am

பல்கலைக்கழகம் உருவாக வேண்டுமென்ற எண்ணம் வந்ததும், இதற்கான ஆதாரங்களைத் திரட்டி பணிகளைத் தொடங்க அன்றைய திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியத்துடன் இணைந்து இது பற்றிய திட்டங்களை வகுத்தார். இவையெல்லாம் 1956ம் ஆண்டு பணிகளாகும்.

பேராசிரியர் சுப்பிரமணியத்துடன் இணைந்து டி.வி.ஆர்., தயாரித்த அறிக்கை மிக முக்கியமானது. அந்த அறிக்கை மூலம் தனது கோரிக்கையை அரசின் முன் வைத்தார்.

கோரிக்கையை வைக்கும்போதே அதற்கான முழுத் திட்டத்தையும் டி.வி.ஆர்., தயாரித்தார். அவரது திட்டமிடும் மனப்பான்மைக்கு இந்த அறிக்கை ஒரு சரியான எடுத்துக்காட்டு என்பதால், டி.வி.ஆர்., அளித்த அறிக்கையின் ஒரு பகுதியை தந்து விடுகிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:17 am

குமரி மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழகம்: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பரந்த வயல்வெளி அதன் சிறப்பிற்குக் காரணமா? இல்லை. தஞ்சையிலும், திருநெல்வேலியிலும் அத்தகைய செந்நெல் வயல்வரப்புகள் உண்டு.

வானைத் தொடும் மலைத் தொடர்கள் அதன் சிறப்பிற்குக் காரணமா? இல்லை. உதக மண்டலத்திலும் இக்காட்சியைக் காணலாம்.

கடல்வளம் காரணமாக இருக்குமா என்றால் கடலைக் கரையாக உடைய பல மாவட்டங்கள் உள்ளன. பல புலவர்களையும், தலைவர்களையும் தோற்றுவித்தது காரணமா? அக்காரணமெனில் பல தமிழ் அறிஞர்களைத் தோற்றுவித்த பெருமை திருநெல்வேலிக்கும் உண்டு.

இந்திய நாட்டின் தென் எல்லையான கன்னியாகுமரி இம்மாவட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெருமை இது. தென் எல்லை மட்டுமன்று, புனிதத் தலமாக மிகப் பழங்காலம் முதல் கருதப்பட்டு வந்திருக்கிறது. வியாச பாரதத்திலும், வால்மீகி ராமாயணத்திலும், இந்நகரம் குறிக்கப்படுகிறது. கி.பி., இரண்டாம் நூற்றாண்டில் தமிழகம் வந்த கிரேக்கப் பயணிகள் இந்நகரை, குமோரி எனக் குறிக்கின்றனர். சங்க இலக்கியங்களில் சேரனும், சோழனும், பாண்டிய அரசர்களும் தத்தம் நாட்டின் தென் எல்லையாக குமரியை க் குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்றனர். இடைக்காலக் கல்வெட்டுக்கள் பலவும், "கங்கையிற் செய்த பாவத்திற்கும் குமரியில் செய்த பாவத்திற்கும் கழுவாய் இல்லை' என்று கூறி, இந்நகரத்தின் புனிதத் தன்மையை வற்புறுத்துகின்றன. "குமரியாடிப் போந்தேன் சோறு தாருங்கள்' என்று கேட்டு உணவு பெறும் பல சந்நியாசிகளைப் பற்றிக் குறிப்பாக சேனைவரையர் கூறுகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:18 am

துவைத தத்துவத்தைப் பரப்பிய மாத்துவாச்சாரியார், குமரி சென்று தமது தத்துவத்தை விளக்கிப் பல சீடர்களைப் பெற்றதாக அவரது வரலாறு கூறுகிறது. விவேகானந்தர் அமெரிக்கா செல்லும்முன் குமரியில் வந்து நீராடி, சிந்தனைத் தெளிவு பெற்ற நிகழ்ச்சி நாம் எல்லாரும் அறிந்தது. காந்தியடிகளும், நேருவும் கன்னியாகுமரியின் எழிலால் பிணைப்புண்ட செய்தியை அவர்கள் வாக்கினால் தெளிய முடியும். மதத் தலைவர்களும், புலவர்களும், அரசர்களும் அரசியல் மேதைகளும் புண்ணிய தலமாக மதித்த நகரம் கன்னியாகுமரி.

கங்கைக் கரையில் இருக்கும் காசியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி, அதன் பெருமையை உலகறியச் செய்தார் மாளவியா. மகாபாரதப் போர் நடத்த குருஷேத்திரத்தின் பெருமையை நினைவுறுத்த ஒரு பல்கலைக்கழகம் அங்குச் செயல்பட்டு வருகிறது. புனித சங்கமக் கரையிலுள்ள அலகாபாத்திலும், பாடலி என்று வழங்கப்பட்ட பாட்னாவிலும் பல்கலைக் கழகங்கள் அவ்வூர்களின் பெருமையை விளக்கமுறச் செய்கின்றன. வட மாநிலத்திலுள்ள புண்ணிய தலங்களிலெல்லாம் பல்கலைக் கழகங்கள் செயல்படும்போது, தென்கோடியிலுள்ள புண்ணிய பூமியான குமரியில் இதுவரை பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவாமல் இருப்பது வருந்தத்தக்கது.

பல பல்கலைக்கழகங்கள் இருக்குமானால் பல ஆயிரம் மாணவர்கள் உயர்தரக் கல்வி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். கல்வியின் தரம் உயர்வதற்கும் வழி செய்யும். இதை உலகில் வளர்ச்சியுற்ற நாடுகளில் பார்க்கிறோம். எனவே, தமிழ் நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் தோன்ற வேண்டும்.

குமரி மாவட்டத்திற்கெனத் தனி இயல்புகள் சில உண்டு; தனிப் பிரச்னைகள் சில உண்டு. பாரதத்தின் விடுதலைப் போர் 1857ல் நடந்த சிப்பாய்க் கலகத்துடன் ஆரம்பமாயிற்று என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது வழக்கம். ஆனால், அதற்கு வெகு காலத்திற்கு முன்னரே ஆங்கிலேயருக்கு எதிராக மக்களைப் புரட்சி செய்யத் தூண்டி, குண்டறை என்ற ஊரில் 1809ல் உரிமைச் சாசனம் ஒன்றை பறைசாற்றிய வேலுத்தம்பித் தளவாய், இம்மாவட்டத்தில் தலைக்குளம் எனும் ஊரில் பிறந்தவர். மாவட்டத்தில் ஏனைய இடங்களை விடக் கன்னியாகுமரியில் கூடுதலாகவே ஆரம்பப் பள்ளிகளும் ,உயர்தர பாடசாலைகளும் இருக்கின்றன. ஆனால், கல்லூரிப் படிப்புக்கு உள்ள வாய்ப்புகள் மிகக் குறைவு. வெளி மாவட்டங்களுக்கு ஒரு மாணவனை அனுப்பிப் படிக்க வைப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்படும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:18 am

தொழில் கல்விக்கும், மருத்துவக் கல்விக்கும், இம்மாவட்ட மாணவர்களுக்கு போதிய இடம் கிடைப்பதில்லை. மாவட்டத்தின் தேவைக்கேற்ப இடம் ஒதுக்கப்படுவதில்லை. இப்பிரச்னைகள் அனைத்தையும் கன்னியாகுமரிப் பல்கலைக்கழகம் தீர்க்க முடியும். ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.

இம்மாவட்டத்தில் திறமையுடைய பல அரசியல் அறிஞர்கள் உண்டு. பல அரசியல் காரியங்களை அவர்கள் சாதித்து இருக்கின்றனர். இதை இம்மாவட்ட வரலாறு விளக்கும். கல்லூரிகளைச் சிறப்புற நிர்வகிக்கும் முதல்வர்கள் பலர் உண்டு. பள்ளிகளைச் சிறப்புற நடத்தும் தலைமை ஆசிரியர்கள் உண்டு. பொருளாதார அறிஞர்கள் உள்ளனர். வரலாற்றுப் பேராசிரியர்களும், தமிழ் அறிஞர்களும் உள்ளனர். பொதுக் காரியங்களை நியாயம் தவறாமல் நடத்திப் பெயர் பெற்ற பல பெரியோரும் உண்டு. இவர்கள் அனைவரும் கல்விப்பணியையே கடவுள் பணியாகக் கருதுபவர்கள்.

நாட்டின் நலனை மனத்தில் கொண்டு, ஜாதி மதம் பாராது, தியாக உணர்ச்சியுடன் இப் பல்கலைக்கழகம் நிறுவும் வேலையில் ஈடுபடுவார்களானால், நம் நாட்டு இளைஞர்களும், அயல்நாட்டினரும் கன்னியாகுமரிக்கு கல்வி பயில வரும் காலம் நெடுந்தொலைவில் இல்லை. நம் நாட்டுப் பண்பாட்டின் சிறப்பை உலகறியச் செய்வதற்குக் கன்னியாகுமரிப் பல்லைக்கழகம் பயன்படும் காலம் நெடுந்தூரமில்லை. நாடு வாழ்ந்தால் தானே நாம் வாழ முடியும்.

- இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.


நெல்லைக்குத் "தினமலர்' வந்த பின்னர்தான் குமரியில் பல்கலைக்கழகம் அமைப்பது என்ற குரலை எழுப்பி இருக்கிறார் டி.வி.ஆர்., அதற்காகப் பலமுறை நாகர்கோவில் போய் வந்துள்ளார். குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பின்னர், அம்மாவட்ட நலனுக்கு நெல்லையில் இருந்தே "தினமலர்' பாடுபட முடியும் என்ற அவரது எண்ணத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:18 am

பல்கலைக்கழக அமைப்புக் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்ட பிரமுகர்கள், பத்திரிக்கை நிருபர்கள் கூட்டம் ஒன்றை ஜூன் 11, 1965ல் கூட்டினார் டி.வி.ஆர்.,

"தினமலர்' நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்., கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசினார்.

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம், "கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தகுந்த வாய்ப்பு இருக்கிறது. இங்கு கல்விச் செல்வம் இருக்கிறது. பல்கலைக்கழகம் வேண்டும். அதற்கு நிதியும் தேவை. பல்கலைக்கழகம் பல பிரிவுகள் கொண்டது. கலை, விஞ்ஞானம் முதலிய பிரிவும் அமைக்க 4 கோடி ரூபாய் செலவாகும். பொறியியல் கல்லூரிக்கு கூடுதல் ஒரு கோடி, மருத்துவப் படிப்புக்கு இன்னும் ஒரு கோடியாகும். பல்கலைக் கழகத்திற்கு பெருவாரியான நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. அதற்கு அடுத்து பல்கலைக்கழகக் கமிஷன், பின் ராஜ்ய சர்க்கார், கல்லூரிகள் முதலியவை உதவும். எனவே, இரண்டு கோடியில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க முடியும். குமரி மாவட்டத்தில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் டிரஸ்டுகள் உண்டு. கோயில் டிரஸ்டுகள், மக்களின் அறிவு வளர்ச்சிக்குச் செலவிட வேண்டும். சமுதாய சொத்தைக் கல்விப் பணிக்கு ஒதுக்குவது நல்லது. சொத்தை விற்பனை செய்ய வேண்டாம். அதன் வருமானத்தின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட காலம் வரை பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்தால் போதும்' என்றார்.

பல்கலைக்கழகம் இன்று வரை உருவாகவில்லையானாலும், இன்றும் அதற்கான வாய்ப்புகள் மறைந்து விடவில்லை என்கிறார் பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Oct 24, 2008 2:21 am

நெல்லை மாவட்டத்தில் கல்விப் பணி

சுதந்திரம் வந்த நேரத்தில் தமிழ்நாட்டில் கல்வித் தாகம் மிக அதிகமாக இருந்தது. அன்று சட்டமன்றம் முடிந்ததும் மந்திரிகள், தாலுகா சுற்றுப்பயணம் என்று ஒரு தாலுகாவிற்கு மூன்று நாட்கள் ஒதுக்கி, கிராமம் கிராமமாகச் செல்வர். கிராம மக்களின் கோரிக்கையில் முக்கிய இடம் வகிப்பது பள்ளிகளாகத் தான் இருக்கும். பள்ளிக்கூடம் கட்டுவதற்கான இடம், ஊர்ப் பொதுவில் இருந்து நிதி எல்லாம் தருவதாக ஊரார் கூறுவர். கிராமத்துக்குக் கிராமம் இதற்காகச் சிலர் அலைந்த வண்ணம் இருப்பர்.

இந்தச் சமயத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும், நகரத்திற்கும், பள்ளிகளுக்காகத் தொடர்ந்து செய்திகள், கட்டுரைகள் "தினமலர்' வெளியிட்டு வந்தது. இதில், மிகவும் பிற்பட்ட கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் போன்ற தாலுகாக்களில் கல்விக் கூடங்களுக்காக எழுதியது கொஞ்சமல்ல. இதன் காரணமாக பல ஊர்களுக்கும் பள்ளிகள் வந்தன.

காமராஜர் முதல்மந்திரியாக இருந்தபோது, மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அன்றைய கல்வி இலாகா டைரக்டர் என்.டி.சுந்தரவடிவேலு இத்திட்டத்தை எட்டயபுரத்தில் முதலில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்குப் பெரும் ஆதரவு தந்தது திருநெல்வேலி மாவட்டம் தான்.

இவை மட்டுமல்லாது, நெல்லையில் சித்த வைத்தியக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, வைத்தியக் கல்லூரி, விவசாயக் கல்லூரி இவையும் வேண்டுமென்று கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமாக "தினமலர்' எழுதி வந்துள்ளது. இன்று அவை நெல்லையில் செயல்படுகின்றன என்றால் அதில் "தினமலர்' இதழின் பங்கும் பெரிய அளவில் உண்டு. கன்னியாகுமரியில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க முயன்றது போல, நெல்லையிலும் ஒரு பல்கலைக்கழகத்திற்கான முயற்சிக்கும், "தினமலர்' ஊக்கம் தந்தது.

தூத்துக்குடிக்கு '60ம் ஆண்டு ஜனவரியில் வந்த மத்திய தபால்தந்தித்துறை அமைச்சர் டாக்டர் பி.சுப்பாராயன், வ.உ.சி. கல்லூரியில் பேசுகையில், தூத்துக்குடியில் "கப்பல்துறை பொறியியல் கல்லூரி' ஒன்று அமைப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். இதன் அவசியத்தை வலியுறுத்திப் பல தலையங்கங்களைத் "தினமலர்' எழுதியும் உள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக