ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 13:07

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 13:05

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 13:05

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 13:04

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 13:02

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 13:02

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ராஜா Today at 12:03

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 22:53

» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 22:45

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 21:30

» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 21:20

» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 20:06

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

உள் நின்று உடற்றும் பசி.......

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உள் நின்று உடற்றும் பசி.......

Post by Aathira on Sun 8 Aug - 22:27

உள் நின்று உடற்றும் பசி.......

கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்

ஏதோ வைவது போல இருக்கிறதா? ஆம் நாகைக்காத்தான் சத்திரத்தில் சூரியன் மறையும் நேரத்தில் வழிப்போக்கர்க்களுக்கு சோறு ஆக்குவதற்கு அரிசி வரும். அதனைக் குத்தி உலையில் இடும்போதே நடுச்சாமம் ஆகிவிடும். சாமத்தில்
யார் விழித்திருபார்? ஊர் அடங்கி விடும். உண்பதற்காகச் சோற்றை
அள்ளி இலையில் வைக்க விடிந்தே போகும். இது தானே இதன் பொருள். இது இன்றைய மூன்று, நான்கு, ஐந்து நட்சத்திர உணவகங்களின் நடைமுறை.
ஆர்டர் செய்து விட்டு ஒரு ஊருக்குச் சென்று திரும்பி வந்தாலும் நாம் ஆர்டர் செய்தது வந்திருக்காது. (காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி).

காளமெகம் கூறுவது, பஞ்ச காலத்தில் வழிப்போக்கர்களுக்கான இரவு உணவுக்கு மலையி அரிசிவரும். அரிசியைக் கொதிக்கும் உலையில் இடப் பசியால் கொதித்துக்கொண்டிருக்கிற, தங்கள் வயிறு உலை அடங்கி விடும்.என்று மகிழ்ந்து மக்கள் அமைதியடைவர். உண்பதற்காக ஓர் அகப்பைச் சோற்றை அள்ளி இலையில் இட, சோற்றின் வெள்ளை நிறத்தைக் கண்டு வெட்கப்பட்டு வெள்ளி (மின்னும் நட்சத்திரம்) ஓடிப்போகுமாம்.

மருத்துவத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும்போது இடையில் எங்கு கவி காள மேகம் வந்தார் என்று சிந்திக்கிறீர்களா? அந்தக் காலத்தில் அசோகர் சாலையோரத்தில் நிழல் தரும் மரங்களை நட்டார். குளங்களை வெட்டினார் என்று வரலாற்றுப் பாடம் படித்துள்ளோம். அதே போல ஆங்காங்கு அன்னச் சத்திரங்கள் அமைத்து உணவும் வழங்கி வந்தனர் என்றும் படித்துள்ளோமே, அதனையும் நினைவு படுத்துவதற்குத்தான் இப்பாடல்.

தொடர்ந்து அதிகமாக உண்பதையும் அதனால் ஏற்படும் ஒபிசிடி நோயையும் பார்த்துக் கொண்டிருந்தால் பசியினால் விளையும் நோயைப் பார்க்க வேண்டாமா? ஆம், பசியினால் என்ன நோய் வரப்போகிறது? ஒன்றும்
இல்லை. தலை சுற்றல், மயக்கம், வயிற்று உபாதை, வாயுத்தொல்லை, கடைசியில் முகப்பொலிவு இழந்து, கண்கள் மங்கி, உடல் தளர்ந்து உயிர் போகும். அவ்வளவுதான்.

மிகினும் குறையினும் நோய் செய்யும் என்பார் உலகப்புகழ் மருத்துவர் திருவள்ளுவர். உடல் நோய், உள நோய் எல்லாவற்றுக்கும் மருந்து
கண்ட தெய்வப் புலவர் ஆயிற்றே. ‘நாம் உண்ணும் உணவில் ஆற்றலுக்கு உதவும் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உதவும்
புரதச்சத்துக்கள், வைட்டமின் எனப்படும் உயிர்ச்சத்துக்கள், மணிச்சத்து எனப்படும் மினரல்ஸ், நீர்ச்சத்து ஆகியவை அவரவர் பால் பகுப்பு, (ஆண்/பெண்) வயது, உடல் உழைப்பு ஆகியவற்றுக்கு ஏற்றவாறு இருத்தல் அவசியம். இது மிகாமலும் குறையாமலும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு சத்து குறைவதாலும் ஒரு நோய் வரும். ஒட்டு மொத்தமாக பசித்து இருந்தால்.... எல்லா சத்துக்கும் குறைபாடு. இக்குறைபாடுகளால் ஏற்படும் நோய்க்குப் பெயர் பசிப்பிணி. உடலின் உள்ளே இருந்து வருத்துவதால் ‘உள் நின்று உடற்றும் பசிஎன்றும், உயிரையே அழித்து விடுவதால் ‘அழிபசிஎன்றும் மிகப் பொருத்தமாகப் பெயர் சூட்டுவார் தெய்வப்புலவர்.

பசிப்பிணி மருத்துவர் மணிமேகலையைப் பற்றி அறியாதவர் இருக்க முடியாது. அவர்களிடம் இக்கால மருத்துவர்களைப் போல எம்.பி.பி.எஸ், எம்.எஸ். போன்ற பட்டங்கள் இல்லை. மெடிசின் கிட் இல்லை. கழுத்தில் ஸ்டெத் இல்லை. ஆனால் அமுத சுரபி மட்டும் இருந்தது. கையில் அமுதசுரபியை ஏந்தி பசித்தவர்களுக்கு எல்லாம் சோறிட்டு அவர்களின் பசிப்பிணியைப் போக்கினார் அந்தப் புத்தத் துறவி. இச்செய்தியைப் பாடத்தில் படிக்கும்போது நமது ஆசிரியர்கள் கொடை, தானம், பிறருக்கு உணவிடுதல் நல்ல பண்பு என்று விளக்கி இருப்பார்கள்.

மண்டினி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
ஊண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

என்று உயிர் காக்கும் மருத்துவத்தைச் செய்தவர் மணிமேகலை. இவருக்கும் முன்பே சங்க காலத்தில் ஒரு மருத்துவர் இருந்து இருக்கிறார். சிறு குடிக்குச் சொந்தக்காரரான பண்ணன் என்ற இவர் பசியுற்று வந்தவர்களுக்கெல்லாம் சோற்றை வாரி வாரி வழங்கியுள்ளார். அவருக்கு பசிப்பிணி மருத்துவன் என்று தமிழ் டாக்டர் பட்டம் கொடுத்துள்ளான் சோழன் கிள்ளிவளவன் (இது இக்காலக் கெளரவப் பட்டம் போன்றதல்ல). இதனைச் சுட்டுகிறது ஒரு
புறநானூற்றுப் பாடல்.


இவர்களைத் தொடர்ந்து வாடிய பயிரைக் கண்டு இம்மருத்துவத்தை இடைவிடாது செய்தவர் புரட்சித்துறவி அருட்பிரகாச வள்ளலார்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by சிவா on Sun 8 Aug - 22:34

//காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி//

இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?




பதிவுகள்: 790097 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81929 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by Aathira on Sun 8 Aug - 22:35

பசித்தவர்களுக்கு உணவிட்டு டாக்டர் பட்டம் பெறுவது என்பது அந்தக் காலத்தில் சாதாரனமாக இருந்திருக்கிறது. இப்போது முடியுமா? இந்திர லோகத்து அமிர்தமே கிடைத்தாலும் இனிமையானது என்று தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள் நம் முன்னோர்கள். தமிழர்களின் கலாச்சாரச் சிறப்பே பசித்தவர்களுக்குச் சோறிட்டு பிறகு தாம் உண்பதே. இதனை,
“பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது

என்று கூறும் தமிழ் மறை. அதாவது தனக்குக் கிடைத்த உணவைப் பிறருக்கும் கொடுத்து தானும் உண்டு வாழ்பவனுக்குப் பசி என்னும் தீயைப் போன்ற கொடிய பிணி தீண்டாதாம். பசி என்பது பொது நோய். இது உயிர்கள் யாவற்றையும் பற்றியிருப்பது. உடலில் ஏற்படுகிற அனைத்து நோய்களுக்கும் பசியே மூல காரணம்.

பழைய இலக்கியங்களில் பசியை, நோய் என்று எங்கும் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. சங்க இலக்கியம் தொடங்கி திருக்குறள், மணிமேகலை வரை
பசியைப்
பிணி அதாவது பசிப்பிணி என்றே குறித்துள்ளன. எல்லா இலக்கியங்களும் பசியைப் பிணி என்று ஏன் குறிப்பிடுகின்றன. ஆராய்ந்து
பார்த்தால்
நோய்என்ற சொல்லுக்கும் பிணிஎன்ற சொல்லுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. நோய் என்பது நம் உடலை நொய்ந்து போகச்செய்வது. அரிசியின் குருகிய வடிவத்தை நொய் என்பது என்பர். நொய்- நொய்தல் இதுவே நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் விருந்தாளி
போன்றது. அவ்வப்போது
வரும் போகும். விருந்தும் மருந்தும் மூன்று நாள் தானே.

ஆனால் பிணி என்பது பிறப்பு முதல் இறப்பு வரை நம் உடலைப் பிணித்துக் கொண்டிருப்பது. ஜென்மத்தில் பிடித்தது சாகும் வரை விடாது என்பார்களே. அது இதைத்தான். குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது? தொடர்ந்து தொப்புள்கொடி வழியாகச் சென்று கொண்டிருந்த உணவு வெளியில் வந்தவுடன் ஒரு சில மணி நேரங்கள் தடை படுகிறது. உடனே குழந்தை பசியால் அழுகிறது. கருவில் உண்டான பசி இறப்பு வரை தொடர்ந்து உயிர்களைப் பிணித்துக் கொண்டிருப்பதால் பசியைப் பிணி என்று கூறினர். அது மட்டுமல்ல பசியைப் ‘பாவி
என்றுரைக்கும் மணிமேகலை.

குடிப் பிறப்பு அறுக்கும்; விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம்
நாண் அணி களையும்; மாண் எழில் சிகைக்கும்
பூண் முலை மாதரோடு புறங்கடை நிறுத்தும்

என்று பசிப்பிணியைப் பாவி என்றும், அப்பசிக்கொடுமையால் விளையும் துன்பங்களையும் பட்டியல் இடும் மணிமேகலை. அது உண்மைதானே. உடல் நோய்க்கு மட்டுமல்ல, இன்று பல நோய்களுக்கும், சமூக விரோதச் செயல்கள் நடைபெறவும் காரணமாக இருப்பது இந்தப் பசி என்ற பாவிதானே.

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்று
பாடியவன் பாரதி. அவன் அனுபவித்த பசிக்கொடுமைதான் மகாக்கவியாகிய அவனையே,
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இச்செகத்தினை அழித்திடுவோம்என்று ஒரு போராளியைப் போல குரல் கொடுக்க வைத்தது. கவிஞனுக்கும் வயிறு உண்டல்லவா?

இந்தப் பசிக்கொடுமையால் இன்று ஒரு நாடே அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. சோமாலியா என்றால் அனைவர் நினைவிலும் பதிந்துள்ள
காட்சி, விழிகள் குழிவெய்தி, மண்டை பெருத்து, உடல் சுருங்கிய அந்தக் குழந்தைகளின் உருவங்கள்தானே.



மருந்து என்றால் என்ன? உடல் நோய்களைத் தடுப்பது; உள நோய்களைத்
தடுப்பது; நோய் வராமல் தடுப்பது; உயிர் போகாமல் தடுப்பது; உயிர் போகாமல் தடுப்பது. இதைத் திருமூலர் வாக்கால் கேட்க வேண்டுமா?


“மறுப்பது உடல்நோய் மருந்தென லாகும்
மறுப்பது உளநோய் மருந்தென லாகும்
மறுப்பது இனிநோய் வாரா திருப்ப
மறுப்பது சாவை மருந்தென லாகும்


உடல், உள்ள நோய்களைப் போக்கி உயிரைக் காப்பது உணவாகிய மருந்து. அதனால் தான் உடல் நோய்க்கு மருந்து கூற வந்த திருவள்ளுவர் மருந்து என்ற அதிகாரத்தில் ஆறு குறட்பாக்களில் உணவைப் பற்றிப் பேசுகிறார்.

ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

என்று உணவு வழங்கி அப்பசியைப் போக்குபவரை தவ முனிவர்களை
விடவும் மேலானவர்கள் என்பார்.


மணிமேகலையைக் காற்றோட்டமில்லாத ஒரு அறையில் (புழுக்கறை) அடைத்து பட்டினி போட்டாளாம் உதயகுமாரனுடைய தாய். மணிமேகலைக்குப் பல மந்திரங்கள் தெரியுமாம். அதில் ஒன்று பசி ஒழிக்கும் மந்திரம். அப்போது அவள் அந்த மந்திரத்தை ஓதி உடல் வாடாது மகிழ்ச்சியாகஇருந்தாளாம். இந்த மந்திரம் மட்டும் நமக்குத் தெரிந்திருந்தால்.........!!!!!!!!!!!!!! என்ன....??
நாம் செய்கின்ற ஒன்றிரண்டு வேலைகளையும் செய்ய மாட்டோம்.
உழைப்பு என்றால் என்ன என்று கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவோம்.



மாரல்: பசியைப் பற்றி இலக்கியங்கள் கூறும் சான்றுகள் இருக்கட்டும். ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார்த்தால் நாமும் தான் பாடுவோம் பசிப்பாட்டு, பசித்தொகை, பசிப்புராணம் எல்லாம். அதனால் எவரும் பசித்திருக்க நாம் பார்த்திருக்கக் கூடாது. புசித்திருக்கச் செய்வோம். நாமும் புசிப்போம். இதன் தொடர்ச்சியைப் பிறிதொரு பதிவில் பார்க்கலாம்.. இப்போது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்’-- வாருங்கள்.


ஆதிரா..


Last edited by Aathira on Sun 8 Aug - 22:40; edited 1 time in total

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by சிவா on Sun 8 Aug - 22:37

”கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்”


படிக்கும் பொழுதுதான் இந்தப் பிரச்சனை என்றால் இங்கேயுமா? எஸ்கேப்......!!!




பதிவுகள்: 790097 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81929 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by சிவா on Sun 8 Aug - 22:40

”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

சிறந்த கட்டுரை அக்கா!




பதிவுகள்: 790097 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81929 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by Aathira on Sun 8 Aug - 22:45

சிவா wrote://காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி//

இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?


உங்களைப் பற்றி எல்லாம் தெரியாதா சிவா.. என் தம்பிகளைப் பற்றி நானே தெரிந்து கொள்ளவில்லை என்றால்?? எனக்குத் தெரிந்து விட்டதே என்று வருத்தம் தானே?

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by Aathira on Sun 8 Aug - 22:54

[quote="சிவா"]”கத்துங்கடல் சூழ்நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் பொதில் அரிசிவரும்: குத்தி
உலையில்இட ஊர்அடங்கும்; ஓர்அகப்பை அன்னம்
இலையில்இட வெள்ளி எழும்”


படிக்கும் பொழுதுதான் இந்தப் பிரச்சனை என்றால் இங்கேயுமா? எஸ்கேப்......!!![/quo

கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை..
சுகம் பெறும் காலம் இனி உள காலம்..கலங்காதே மனமே....

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by சபீர் on Mon 9 Aug - 9:38

சிவா wrote:”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

சிறந்த கட்டுரை அக்கா!

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by சிவா on Mon 9 Aug - 23:12

Aathira wrote:
சிவா wrote://காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி//

இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?


உங்களைப் பற்றி எல்லாம் தெரியாதா சிவா.. என் தம்பிகளைப் பற்றி நானே தெரிந்து கொள்ளவில்லை என்றால்?? எனக்குத் தெரிந்து விட்டதே என்று வருத்தம் தானே?


தம்பிகள் அனைவரைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் அக்கா! (இதில் என்னைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்)




பதிவுகள்: 790097 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81929 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by Aathira on Thu 12 Aug - 0:07

சிவா wrote:”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

சிறந்த கட்டுரை அக்கா!


பசிப்பிணி போக்க இயன்றதை ஆற்றுவோம்.... மிக்க நன்றி சிவா..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by srinihasan on Sat 14 Aug - 3:20

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote://காதலர்க்குக் கடலை போட இது நல்ல வசதி//

இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியும்?


உங்களைப் பற்றி எல்லாம் தெரியாதா சிவா.. என் தம்பிகளைப் பற்றி நானே தெரிந்து கொள்ளவில்லை என்றால்?? எனக்குத் தெரிந்து விட்டதே என்று வருத்தம் தானே?


தம்பிகள் அனைவரைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் அக்கா! (இதில் என்னைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்)


ஆமாண்ணா... எங்கப்பன் குதிர்குள்ள இல்லேங்கிற மாதிரி...

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by Aathira on Mon 16 Aug - 0:58

சபீர் wrote:
சிவா wrote:”பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

சிறந்த கட்டுரை அக்கா!

மிக்க நன்றி சபீர்..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by Aathira on Sat 11 Sep - 10:24

srinihasan wrote:
சிவா wrote:
Aathira wrote:

உங்களைப் பற்றி எல்லாம் தெரியாதா சிவா.. என் தம்பிகளைப் பற்றி நானே தெரிந்து கொள்ளவில்லை என்றால்?? எனக்குத் தெரிந்து விட்டதே என்று வருத்தம் தானே?


தம்பிகள் அனைவரைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் அக்கா! (இதில் என்னைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்)


ஆமாண்ணா... எங்கப்பன் குதிர்குள்ள இல்லேங்கிற மாதிரி...


அந்தக் குதிருக்குள் ஓரமா நிக்கரது வாசன் தானே...தெரியும்..தெரியும்...

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by kalaimoon70 on Sat 11 Sep - 10:41

ஈகைக்கு ஒரு சிறப்பு
உங்கள் இந்த படைப்பு,
பழங்கால தமிழர்கள் மனதை அறிந்து,
அதை சொன்ன விதம் சிறப்பு.
ஈகை திருநாள் அன்று
தந்த இந்த பதிப்பு
பசியைப் போக்க அழைக்கும் விரிப்பு.
என்றும் உங்கள் கட்டுரை அலங்கரிப்பு.
எழுச்சி தரும் என்பது எனது கணிப்பு.
பாராட்ட வார்த்தில்லை,தொடருங்கள் உங்கள் கட்டுரையின்
அணிவகுப்பு . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: உள் நின்று உடற்றும் பசி.......

Post by srinihasan on Sat 11 Sep - 16:36

Aathira wrote:
srinihasan wrote:
சிவா wrote:

தம்பிகள் அனைவரைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்துள்ளீர்கள் அக்கா! (இதில் என்னைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்)


ஆமாண்ணா... எங்கப்பன் குதிர்குள்ள இல்லேங்கிற மாதிரி...


அந்தக் குதிருக்குள் ஓரமா நிக்கரது வாசன் தானே...தெரியும்..தெரியும்...


ஹலோ நாங்க எல்லாம் ஓரமா நிக்கிற வம்சம் இல்ல... எல்லாருக்கும் முன்னால தைரியமா நிக்கிற வம்சமாக்கும்...

எனக்கு முன்னாடி சிவா அண்ணா நிக்கிறதுனால உங்க கண்ணுக்கு நான் தெரியாம இருக்கலாம் ரிலாக்ஸ்

srinihasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3823
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 53

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum