|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அழும்வரைக்கும் சிரிப்பேன் !
Page 1 of 1 • Share •
அழும்வரைக்கும் சிரிப்பேன் !
மனம்கொண்ட துன்பங்கள் மனமேதா னறிந்தாலும்
மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
எழில்போல உருமாற்றிடும்
பணமொன்றும் தீர்க்காது பட்டாடை,பல்லக்கு
தலைதூக்கி எவராடினும்
பிணமென்று விதிசொல்லிப் பின்வாசல் வழிவந்தால்
பேசாது உயிரோடிடும்
மணமென்றும் மனையென்றும் மக்கள்மற் றுறவென்று
மறந்தேநம் விழிமூடிடும்
கணந்தன்னில் கரியாகிக் காற்றோடு புகையாகிக்
கனவென்ற நிலையாகிடும்
களவாக எமன்வந்து கயிறானதெறிகின்ற
கணந்தன்னில் எதுகூறினும்
விளையாது பயனேதும் விரைந்தோடி உயிர்சென்று
விளையாட்டு முடிவாகிடும்
களையாது தினம்தோறும் கனவோடு உயிர்கொண்டு
புவிமீது நடந்தோடினேன்
வளமான வாழ்வென்று வருந்தாமல் திமிரோடு
பலநூறு பிழை யாற்றினேன்
எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு
மிரு என்றாய் புவிமீதிலே
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்
வாழ்ந்தேனே அதுபோதுமே
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச
தெரியாமல் அதில்மாண்டிடும்
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது
நிழலாக்கி உயிரோடிடும்
அதுபோலும் விதி சொல்லி அகல்கின்றவரை நானும்
மகிழ்வோடு கூத்தாடுவேன்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
போலாகி ஒளிவீசுவேன்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
அழகாகப் பறந்தோடுவேன்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
போகும்வரை ஆடுவேன்.
மகிழ்வென்ற நிறம்பூசிடும்
தினம்என்றும் துயர்கூடித் துன்பங்கள் மலிந்தாலும்
தித்திப்பை விழிகாட்டிடும்
வனமெங்கும் முள்போல வாழ்வில்பல் லெண்ணங்கள்
வலிதந்து ரணமாக்கிடும்
இனம்காட்ட முடியாது இன்பத்தை முகம்பூசி
எழில்போல உருமாற்றிடும்
பணமொன்றும் தீர்க்காது பட்டாடை,பல்லக்கு
தலைதூக்கி எவராடினும்
பிணமென்று விதிசொல்லிப் பின்வாசல் வழிவந்தால்
பேசாது உயிரோடிடும்
மணமென்றும் மனையென்றும் மக்கள்மற் றுறவென்று
மறந்தேநம் விழிமூடிடும்
கணந்தன்னில் கரியாகிக் காற்றோடு புகையாகிக்
கனவென்ற நிலையாகிடும்
களவாக எமன்வந்து கயிறானதெறிகின்ற
கணந்தன்னில் எதுகூறினும்
விளையாது பயனேதும் விரைந்தோடி உயிர்சென்று
விளையாட்டு முடிவாகிடும்
களையாது தினம்தோறும் கனவோடு உயிர்கொண்டு
புவிமீது நடந்தோடினேன்
வளமான வாழ்வென்று வருந்தாமல் திமிரோடு
பலநூறு பிழை யாற்றினேன்
எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு
மிரு என்றாய் புவிமீதிலே
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்
வாழ்ந்தேனே அதுபோதுமே
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச
தெரியாமல் அதில்மாண்டிடும்
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது
நிழலாக்கி உயிரோடிடும்
அதுபோலும் விதி சொல்லி அகல்கின்றவரை நானும்
மகிழ்வோடு கூத்தாடுவேன்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
போலாகி ஒளிவீசுவேன்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
அழகாகப் பறந்தோடுவேன்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
போகும்வரை ஆடுவேன்.
Last edited by kirikasan on Mon Aug 30, 2010 11:35 pm; edited 1 time in total (Reason for editing : கடைசி வரிகள் மாற்றினேன்)
Re: அழும்வரைக்கும் சிரிப்பேன் !
///அதுபோலும் புவிவிட்டு அகல்கின்றவரை நானும்
மகிழ்வோடு கூத்தாடணும்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
போலாகி ஒளிவீசணும்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
அழகாகப் பறந்தோடணும்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
பொட்டென்று முடிவாகணும்///
இந்த வரிகளைக் கண்டு மனம் குதூகளித்தேன்!!!
மகிழ்வோடு கூத்தாடணும்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
போலாகி ஒளிவீசணும்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
அழகாகப் பறந்தோடணும்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
பொட்டென்று முடிவாகணும்///
இந்த வரிகளைக் கண்டு மனம் குதூகளித்தேன்!!!

பதிவுகள்: 789529 | உறுப்பினர்கள்: 15358 | தலைப்புகள்: 81891 | புதிய உறுப்பினர்: sathiya0606
Contact Administrator
Re: அழும்வரைக்கும் சிரிப்பேன் !
எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு
மிரு என்றாய் புவிமீதிலே
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்
வாழ்ந்தேனே அதுபோதுமே
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச
தெரியாமல் அதில்மாண்டிடும்
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது
நிழலாக்கி உயிரோடிடும்
இதுவும் நல்லாதானிருக்கு
மிரு என்றாய் புவிமீதிலே
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்
வாழ்ந்தேனே அதுபோதுமே
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச
தெரியாமல் அதில்மாண்டிடும்
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது
நிழலாக்கி உயிரோடிடும்
இதுவும் நல்லாதானிருக்கு

முத்தியாலு மாதேஷ்- இளையநிலா

- பதிவுகள்: 326
வசிப்பிடம்: palacode - Tamil Nadu - Indai
சேர்ந்தது: 05/02/2010
மதிப்பீடு: 5
Re: அழும்வரைக்கும் சிரிப்பேன் !
முத்தியாலு மாதேஷ் wrote:எனையாளும் இறைவா நீ இதுகால வரைதானு
மிரு என்றாய் புவிமீதிலே
வினைகொண்டு அழுதாலும் வியந்தேபின் சிரித்தாலும்
வாழ்ந்தேனே அதுபோதுமே
சுனையோடு மீன்துள்ளும் சுழன்றோடும், வலைவீச
தெரியாமல் அதில்மாண்டிடும்
நினையாது ஒருநாளில் நிகழ்கின்ற வாழ்வீது
நிழலாக்கி உயிரோடிடும்
இதுவும் நல்லாதானிருக்கு
இதுல எது நல்லாயில்ல முத்தியாலு...

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: அழும்வரைக்கும் சிரிப்பேன் !
நன்றி ! நன்றி! நன்றி! மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!!
கடைசி பந்தியை இப்படி மாற்றினேன் திருத்த மறந்துவிட்டேன். இதைக் கொள்க
அதுபோலும் விதி சொல்லி அகல்கின்றவரை நானும்
மகிழ்வோடு கூத்தாடுவேன்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
போலாகி ஒளிவீசுவேன்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
அழகாகப் பறந்தோடுவேன்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
போகும்வரை ஆடுவேன்.
கடைசி பந்தியை இப்படி மாற்றினேன் திருத்த மறந்துவிட்டேன். இதைக் கொள்க
அதுபோலும் விதி சொல்லி அகல்கின்றவரை நானும்
மகிழ்வோடு கூத்தாடுவேன்
புதுநாளில் எந்நாளும் புலர்கின்ற வெயிலோனைப்
போலாகி ஒளிவீசுவேன்
மதுவுண்ணும் வண்ணத்து மென்தும்பி எனநானும்
அழகாகப் பறந்தோடுவேன்
பொதுவாக இன்பங்கள் இன்பங்கள் எனபாடிப்
போகும்வரை ஆடுவேன்.

புவனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











