|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!by முரளிராஜா Today at 1:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மரங்களை வெட்டுங்கள் (???!!!)
Page 3 of 3 • Share •
Page 3 of 3 •
1, 2, 3
மரங்களை வெட்டுங்கள் (???!!!)
First topic message reminder :
எனக்கு வந்த மின்னஞ்சல் செய்தி (நன்றி:திரு கார்த்திக் பாலசுப்ரமணியன்)
உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.
மண்ணின் வில்லன்
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )
நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.
இதன் கொடூரமான குணங்கள்
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.
தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.
உடம்பு முழுதும் விஷம்
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!
ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.
காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.
அறியாமை
நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.
கேரளாவின் விழிப்புணர்வு
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.
நல்ல மரம் ஆரோக்கியம்
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .
சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?
இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....
இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!

Cynthia Francis- பண்பாளர்

- பதிவுகள்: 63
வசிப்பிடம்: Pune,India
சேர்ந்தது: 17/02/2010
மதிப்பீடு: 1
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
சிவா wrote:பயனுள்ள கட்டுரையை வழங்கியுள்ளீர்கள் சிந்தியா! வேலிக்கருவை பற்றி மேலும் சில தகவல்களை இங்கு வழங்குகிறேன்!![]()
அறிவியல் பெயர்: Prosopis Juliflora
தமிழில்: வேலிக்கருவை, வேலிகாத்தான்.
யூகலிப்டஸ் மற்றும் வேலிக்கருவை, இரண்டுமே காற்றின் ஈரப்பசையை இலைகள் மூலம் கிரகித்துக் கொண்டு, புவி வெப்பத்தை அதிகப்படுத்துகிறது! இதனால் இதன் அருகில் வேறும் மரங்கள் வளர முடியாத சூழல் நிலவுகிறது!
தமிழகத்தின் விவசாயிகள் அனைவரும் நகர வாழ்க்கைக்கு மாறிவருவதால், அவர்களின் விளை நிலங்களை இந்த வேலிக்கருவை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது! இந்த மரத்தை எப்படி வெட்டினாலும், வேருடன் பிடுங்கினாலும் அடுத்த சில தினங்களில் மீண்டும் தளைத்துவிடும்.
வெப்பமான பகுதிகளில் வேலிக்கருவை செழிப்புடன் வளர்கிறது. அதனால் தான் தமிழகத்தில் அதன் ஆக்கிரமிப்பை அதிகரித்துக் கொண்டே வருகிறது!
வளர்ச்சியடைந்த நாடுகளில் விவசாயத்தின் எதிரி என்று முத்திரை குத்தப்பட்டு கண்காட்சிகளிலும், குறிப்பேடுகளிலும் மட்டுமே காணப்படும் இம்மரம் இந்தியாவிலும், எத்தியோப்பியாவிலும் பல்கிப் பெருகி வருகிறது.
அண்டை மாநிலமான கேரளாவில் கூட வேலிக்கருவை மரத்தை அழிக்கும் திட்டத்தை அரசாங்கமே ஆரம்பித்து, இன்று மாநிலம் முழுதும் வேலிக்கருவை முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
இதன் கூரிய முள் காலில் குத்தினால் அது விஷமாக மாறி காலை வெட்டி எடுக்கும் அளவிற்குக் கூட விபரீதமாகிவிடும். சிலரின் உயிரையும் பறித்துள்ளது இந்த விஷ முள்.
பயனுள்ள கட்டுரை
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
ஆப்பிளில் தான் சயனைடு விஷம் இருக்கிறது. அதை தள்ளி வைத்துவிட்டோமா.. என்ன! இந்த கருவை முள் விஷம் தோய்ந்தது என்றாலும் கையாள்கிற முறைப்படி கையாண்டால் தொல்லை இல்லை. எங்கள் ஊர் (தஞ்சை) பகுதிகளில் இதை சகஜமாக நெல் வயல் வெளிகளில் பிற தாவரங்களோடு செழித்து வளர்ந்திருப்பதைக் காணலாம். இது எந்த பிற தாவரத்தையும் அழிப்பதில்லை. தானும் எளிதாக அழிவதுமில்லை. எல்லாம் பொய் பிரச்சாரம். நெல் விளைச்சல் இதனால் குறைந்தா போய்விட்டது?
மேற்கத்திய நாடுகளின் இந்த தாவரத்தினைப் பற்றி கண்டபடி தவறாக இப்படி பிரச்சாரம் செய்து இந்த பாலை நிலத்து பொக்கிஷத்தை திருடி அதன் பயன்களை உலக நாடுகளில் விற்று பணம் பண்ண சதி வேலை நடக்கிறது. ஜவஹர்லால் நேருதான் இந்த தாவரத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என நினைக்கிறேன். அவரது முன்னோக்குப் பார்வையின் காரணமாய் கூடிய சீக்கிரத்தில் இந்த தாவரம் கரிசல் காட்டு மக்களுக்கு பெரும் செல்வத்தை அளிக்கப் போகிறதை பலரும் அறிந்துகொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்த இணைப்பைப் பாருங்கள். பாலை நில வாழ்க்கை எனும் தீமில் மக்கள் இந்த கருவை மரத்தினைக் கொண்டே சோலை அமைத்திருக்கிறார்கள். அதன் பயன்பாடுகளை உணர்ந்து கொண்டு அதனையே உண்டு உய்கிரார்கள்.http://www.desertharvesters.org

tthendral- பண்பாளர்

- பதிவுகள்: 189
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 06/04/2010
மதிப்பீடு: 9
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
தகவலுக்கு நன்றி தோழியே , நீங்கள் கொடுத்த இணைப்பு திறக்க வில்லை . நானும் தஞ்சை தான். கோபம் வேண்டாம் .
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
tthendral wrote:ஆப்பிளில் தான் சயனைடு விஷம் இருக்கிறது. அதை தள்ளி வைத்துவிட்டோமா.. என்ன! இந்த கருவை முள் விஷம் தோய்ந்தது என்றாலும் கையாள்கிற முறைப்படி கையாண்டால் தொல்லை இல்லை. எங்கள் ஊர் (தஞ்சை) பகுதிகளில் இதை சகஜமாக நெல் வயல் வெளிகளில் பிற தாவரங்களோடு செழித்து வளர்ந்திருப்பதைக் காணலாம். இது எந்த பிற தாவரத்தையும் அழிப்பதில்லை. தானும் எளிதாக அழிவதுமில்லை. எல்லாம் பொய் பிரச்சாரம். நெல் விளைச்சல் இதனால் குறைந்தா போய்விட்டது?
மேற்கத்திய நாடுகளின் இந்த தாவரத்தினைப் பற்றி கண்டபடி தவறாக இப்படி பிரச்சாரம் செய்து இந்த பாலை நிலத்து பொக்கிஷத்தை திருடி அதன் பயன்களை உலக நாடுகளில் விற்று பணம் பண்ண சதி வேலை நடக்கிறது. ஜவஹர்லால் நேருதான் இந்த தாவரத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என நினைக்கிறேன். அவரது முன்னோக்குப் பார்வையின் காரணமாய் கூடிய சீக்கிரத்தில் இந்த தாவரம் கரிசல் காட்டு மக்களுக்கு பெரும் செல்வத்தை அளிக்கப் போகிறதை பலரும் அறிந்துகொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை. இந்த இணைப்பைப் பாருங்கள். பாலை நில வாழ்க்கை எனும் தீமில் மக்கள் இந்த கருவை மரத்தினைக் கொண்டே சோலை அமைத்திருக்கிறார்கள். அதன் பயன்பாடுகளை உணர்ந்து கொண்டு அதனையே உண்டு உய்கிரார்கள்.http://www.desertharvesters.org
கருத்துக்கு நன்றி தென்றல்!

பதிவுகள்: 790101 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81931 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
drrajmohan wrote:தகவலுக்கு நன்றி தோழியே , நீங்கள் கொடுத்த இணைப்பு திறக்க வில்லை . நானும் தஞ்சை தான். கோபம் வேண்டாம் .
திருத்தம்: தோழி அல்ல. தோழர்.
இணைப்பு திருத்தப்பட்டுவிட்டது. சுட்டியமைக்கு நன்றி.
tthendral- பண்பாளர்

- பதிவுகள்: 189
வசிப்பிடம்: world
சேர்ந்தது: 06/04/2010
மதிப்பீடு: 9
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
[quote="சிவா"][quote="tthendral"]ஆப்பிளில் தான் சயனைடு விஷம் இருக்கிறது. அதை தள்ளி வைத்துவிட்டோமா..
"ஆப்பிளில் சயனைடு விஷம் இருக்கிறது " இதை மேல் எழுந்தவாரியாக படித்தால்,மக்கள் மனதில் பீதி கிளம்பிவிடும் என்றே நினைத்ததால், அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் என ஆவலில் படித்தப் போது நான் அறிந்த சில தகவல்கள்.
ஆப்பிளின் விதைகளில்,( காயிலோ/ பழத்திலோ இல்லை) சிறிய அளவு cyanogenic glycoside (சயனைட்) என்ற வேதி பொருள் உள்ளது. இது மாம்பழத்திலும், பீச் (peach ) இலும் உண்டு. இந்த அளவு மனித உயிருக்கு,அபாயத்தை கொடுக்காது ஆனால் பறவைகள் உண்ணாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி உண்டு.
உபயோககரமாக இருக்கும் என நினைக்கிறேன்.
ரமணீயன்.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

முத்தியாலு மாதேஷ்- இளையநிலா

- பதிவுகள்: 326
வசிப்பிடம்: palacode - Tamil Nadu - Indai
சேர்ந்தது: 05/02/2010
மதிப்பீடு: 5
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
முத்தியாலு மாதேஷ் wrote:![]()
![]()
![]()
![]()
நண்பரே ,
எதிர்பதற்காக எழுதப்பட்ட பதிவு அல்ல.
ஒரு விதத்தில், திரு தென்றல் அவர்களுக்கு நான் நன்றி கூறவேண்டும்.
அவர் பதிவைப் படித்தபின், ஆப்பிளை பற்றி மேலும் அறிய ஆவல் ஏற்பட்டது. அறிந்த தகவலை, ஈகரை அன்பர்களுடன் பகிர்கிந்து கொண்டேன்.
ரமணீயன்

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
தமிழகத்தில் பஞ்சம் வந்த காலத்தில் காமராஜர் அவர்களால் ருஸ்யாவில் இருந்து விதைகள் கொண்டு வரப்பட்டு விமாணம் மூலம் தூவப்பட்ட விதைகள், (விஷம் என்று கூட சொல்லாம்) யூக்களிப்டக்ஸ் முக்கியமாக குளிர் பிரதேசங்களில் காற்றில் அதிகம் கலந்து இருக்கும் ஈரப்பத்த்தை உறுஞ்சுவதற்காக இயற்கை கொடுத்த ஒரு வரம், இதே நிலைதான் வேலிக்கருவேல ம்ரங்களுக்கும், இதன் பிறப்பிடமாக மத்திய ஆசியாவில் இன்று ஒரு நாட்டில் கூட பார்க்க முடியாது, எங்கு எங்கு பஞ்சம் பட்டினி அதிகம் காணபப்டு கிறதோ அங்கு இந்த மரம் இருக்கும், இத மரம் அதிகம் இருக்கும் பகுதியில் அதிகம் கருச்சிதைவு, மற்றும் உடற்குறைபாடுள்ள குழந்தைகள் (படிப்பில் மனமின்றி இருப்பதும் ஒரு குறை பாடுதான்) இந்த மரத்தை மாதிரி கிராமம் கொண்டு முழுக்க முழுக்க ஒழித்து விட்டால் அந்த கிராமத்தில் அமைதி நிலவும் என்பது என்னுடைய சொந்த அபிப்பிராயம்

சரவணா- புதியவர்

- பதிவுகள்: 6
வசிப்பிடம்: mumbai
சேர்ந்தது: 07/10/2010
மதிப்பீடு: 0
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
தாமு wrote:இதனை என் தளத்தில் நான் முன்பு பதித்து இருக்கிரின்
இங்குள்ள கருத்துகள் அனைத்தும் நாங்கள் எழுதியது. வேறெங்கும் இருந்து எடுத்துக் கையாளப்படவில்லை.

பதிவுகள்: 790101 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81931 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
அடேய்ங்கப்பா !அருமையான தகவல்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4575
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: மரங்களை வெட்டுங்கள் (???!!!)
அசுரன் wrote:அடேய்ங்கப்பா !அருமையான தகவல்
நம் தளத்தில் இதுபோன்ற ஆரோக்கியமான, அறிவுப்பூர்வமான கலந்துரையாடல்கள் குவிந்து கிடக்கிறது. இன்னும் நிறைய விடயங்களைப் பற்றிய கலந்துரையாடல்கள் வரவேற்கப்படுகிறது.
யார் வேண்டுமானாலும் தலைப்பைத் துவங்கி வைக்கலாம்.

பதிவுகள்: 790101 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81931 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Page 3 of 3 •
1, 2, 3
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum