புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
21 Posts - 66%
heezulia
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
63 Posts - 64%
heezulia
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_m10சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 4:37 am

தமிழர்கள் பலர் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன் வழங்குவதை விரும்பவில்லை. மாறாகக் கடன் வழங்கப்பட்டால் அது தமிழரின் தோல்வி எனக் கருதுகின்றனர். ஆனால் நிலைமை தற்போது வேறுவிதமாகத் திரும்பியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியம் 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டவுடன், கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டை கூட்டிய இலங்கை மத்திய வங்கியின் செயலாளர் அஜித் நிவாட் இலங்கை பெருவெற்றி அடைந்ததாகக் கூறினார்.

மகிந்த சிந்தனை வெற்றிபெற்றதாகவும், அவரின் அரசியல் நகர்வுகள் சர்வதேசத்திற்கு திருப்தி அளிப்பதால் இந்தக் கடனுதவி கிடைத்ததாகவும் கூறினார் அஜித் நிவாட். ஆனால் நிலமை தற்போது தலைகீழாக மாறியுள்ளது. கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், சில செயல்திட்டங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேரடியாகக் கண்காணிப்பர் எனவும் கூறப்பட்டுள்ளது. இலங்கை அரசு வேறுவழி இன்றி இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை மண்டியிட்டு, அவர்களின் இரும்புப் பிடியில் சிக்கி நிற்கிறது என்றுதான் கூறவேண்டும். பின்வரும் பல நிபந்தனைகள் சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தமிழர்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதால் கடன்தொகை அரசியலுக்கோ, ஆயுதம் வாங்கவோ பயன்படுத்தப்படக் கூடாது,

இலங்கை தற்போது கடன்பெற்றிருக்கும் நாடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சேரவேண்டிய மாதாந்தக் கொடுப்பனவுகளை உடனே மேற்கொள்ளவேண்டும், இலங்கை வேறு எந்த நாட்டிடமும் இருந்து 1.7 பில்லியன் டாலருக்குமேல் கடன்தொகையை 20 மாதங்களுக்குள் பெறக்கூடாது.

இலங்கை உடனடியாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்

இலங்கை அதன் அரசியல் ஸ்திரத்தன்மையை முழு அளவில் வெளிக்கொண்டுவர வேண்டும்.

மற்றும் இலங்கையில் நடைபெறும் சில வேலைத்திட்டங்களை சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் மேற்பார்வை செய்வர்.

இவ்வாறு பல கடுமையான நிபந்தனைகளுக்கு மத்தியில் கடன்தொகையைப் பெற இருக்கின்ற இலங்கை அரசானது சிங்கள மக்களுக்கு இது மகிந்தவுக்கு கிடைத்த ஒரு வெற்றி எனப் பொய்ப்பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர்.

காத்திருக்கும் அதிர்ச்சிகள்

இலங்கை அரசின் உற்பத்தி, மற்றும் ஏற்றுமதி என்பன 5 வீதத்தால் வீழ்ச்சிகண்டுள்ளது, தற்போது அரசிற்கு கிடைத்துவரும் வரிப்பண வருமானத்தில்(GDP) பாரிய துண்டுவீழ்வதாகக் கூறப்படுகிறது. 2010 மற்றும் 2011 இல் இலங்கை அரசினால் இராணுவச் செலவிற்கு பெரு நிதி ஒதுக்கமுடியாத நிலை தோன்றவுள்ளது. கணிசமான அளவு நிதி துண்டுவீழ்வதால் இலங்கை அரசு (GDP) வரியை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதால், இனி வரும் ஆண்டில் பொருட்களின் விலை அதிகரிக்கும், ஆதலால் நுகர்வோர் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.

இலங்கை அரசானது பலவெளி நாடுகளிடம் இருந்துபெற்ற கடன் தொகைகளுக்கான கட்டுக்காசை மீளச் செலுத்தாமல் உள்ளது. கடந்த 2 வருடமாகச் சீரான முறையில் இந்தக் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படாததால், பல நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதை அறிந்த நாணய நிதியம், நிலுவையில் நிற்கும் கொடுப்பனவுகளை முதலில் சீர்செய்யுமாறு இலங்கையை கடுமையாக வற்புறுத்துகிறது.

போர் காரணமாக சுமார் 1,60,000 பேரை இராணுவத்தில் புதிதாகக் இணைத்தது இலங்கை அரசு, இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் மக்களின் வருமானமாக கைத்தொழில் இருக்கவில்லை, மாறாக இராணுத்தில் இணைவதையே தொழிலாகக் மேற்கொண்டிருந்தனர். தற்போது யுத்தம் முடிவுற்றதால், இலங்கை அரசு தனது படைபலத்தை நிச்சயம் குறைத்தாக வேண்டும், இல்லையேல் இராணுவச் செலவீனங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு பதில்சொல்லவேண்டி இருக்கும். எனவே பல சிங்கள் இளைஞர்கள் வேலை இழந்து வருவாய் இழக்க நேரிடும்.

ஆதலால் அவர்கள் வயலில் இறங்கவேண்டும் என்று நினைக்கிறார் ராஜபக்ச. இதனால் தான், முன்னோடியாக தாம் வயலில் வேலைசெய்வதுபோல ஒரு கப்ஸா அடித்தும் உள்ளார். ஒட்டுமொத்தத்தில் மகிந்தவின் சிந்தனைகள் தலைகீழாக மாறியுள்ளதை சிங்களவர் உணர வெகுகாலம் இல்லை.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 10:56 am

இது மட்டுமல்ல , இன்னும் நிறைய இருக்கு பொறுத்திருந்து பார்ப்போம் , சிங்களவனின் ராஜதந்திரத்தை !!!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 12:36 pm

இவை எல்லாம் ஒரு பெரிய சிக்கலை இவனுகளுக்கு கொடுக்கப்போவதில்லை. அதுதானே இருக்கிறது இந்தியா சிங்களவனுக்கு, உலக பொலிஸ்காரனென்று கொக்கரித்த அமெரிக்காவையே கால் தூசிக்கும் கணக்கெடுக்காமல் இருக்கிறான் சிங்களவன்.

சிங்களவனிடம் ராஜ தந்திரமே இல்ல, ஆனா அவன நோக்கி எல்லா
ராஜ தந்திரமும் வருகிறது. அதுதானே அவன் இவ்வளவு இறுமாப்புடன் இருக்கிறான்



சர்வதேச நாணய நிதியத்தின் கையில் இலங்கை வீழ்ந்துள்ளது Skirupairajahblackjh18
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 30, 2009 3:36 pm

ரொம்ப நாளைக்கு ராஜதந்திரங்கள் தேடி வராது , அப்போது சொந்த மூளையை (இருந்தா) உபயோகபடுதனும். நான் சொன்னது இந்த நிதி நெருக்கடியில் இருந்து இலங்கையை இந்தியா என்ன சீனா கூட காப்பாத்த முடியாது. எனென்றால் இப்படி ஒரு நிலைமை இலங்கையில் வந்தால் தான் சீனாவிற்கு நன்மை.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தலயிட முடியாததற்கு இரண்டு காரணங்கள் , ஒன்று ஒசாமா பின் லாடேன் இன்னொன்று சீனா, சீனா இந்த பிராந்தியத்தில் சண்டை வரவேண்டும் என விரும்புகிறது, அப்படி வந்தால் தான் அது தன்னுடைய சக்தியை உலகத்துக்கு கண்பித்து தானே உலகின் போலீஸ்கரன் என்று சொல்ல முடியும்.


அமெரிக்கா அணுசக்தி விவகாரத்தில் சமீபத்தில் அடித்த ஆப்பு இந்தியாவை சற்று யோசிக்க வைத்திருக்கிறது ,

இவர்கள் இப்போது எடுக்கும் முடிவுகளையும் , ராஜதந்திர நகர்வுகளையும் அண்ணன் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு முன்னர் யோசித்து வைத்திருப்பார் என்பது என்னுடைய நம்பிக்கை.

பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக