ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

Flash மின் புத்தகங்கள் உருவாக்க 2ம்பகுதி சேர்ப்பு

View previous topic View next topic Go down

Flash மின் புத்தகங்கள் உருவாக்க 2ம்பகுதி சேர்ப்பு

Post by kirikasan on Wed Sep 01, 2010 11:03 pm

இந்த ஆக்கம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முதல் எனது web page ல் எழுதியது. இங்கே உங்கள் பார்வைக்கு தருகிறேன்

என் தளத்தை யாரும் பார்க்கவில்லையே என்ற ஆதங்கத்தில் அதை அப்படியே விட்டுவிட்டேன் அந்த ஆக்கத்தில் ஒன்று இது. புணரமைத்து தொடர்ந்து தர எண்ணியுள்ளேன்

இது Flash book செய்வது எப்படி? பல முறைகள் உண்டு. பார்ப்போம்.


1967 காலப்பகுதியில் ஜெய்சங்கர், கே ஆர் விஜயா நாகேஷ் நடித்து வெளியான பட்டணத்தில் பூதம் என்ற திரைப் படத்தை எத்தனைபேர் பார்த்தீர்களோ தெரியாது. அதில் `ஜீ பூம்பா’ என்றொரு பூதம் வரும் அது படத்தில் செய்யும் அட்டகாசங்கள் ஏராளம்.

ஒரு சமயத்தில் அந்தப் பூதம் ஒரு பத்திரிகையில் அச்சாகியிருக்கும் நிழற்படங்களை பத்திரிகைக்குள்ளேயே அசையவைத்து சினிமாவை பத்திரிகைக்குள் ஓடவைத்து வேடிக்கை காட்டும்.அந்த காட்சி சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் Flash book (Flipbook) எனப்படும் மின்புத்தகங்களைப் பார்க்கும்போது கண்முன்னே தோன்றியது.



EBOOK எனப்படும் மின்வடிவ புத்தகங்கள் ஏற்கனவே இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் தரவிறக்கம் செய்ய முடிகிறது. இந்த EBook ஆனது பெரும்பாலும் PDF கோப்பு முறையைக் கொண்டு தயாரனவை. ஆனால் இதிலிருந்து வித்தியாசப்படும் Flashbook ஆனது Swf (Shock wave flash) வகையில் ஆக்கப்படும் மின் புத்தகங்கள் ஆகும்

. மவுஸ் சுட்டியால் வலது பக்க கீழ் மூலையில் கிளிக் செய்து பக்கங்களை புரட்டவும்



உதாரணத்துக்கு ஒரு கதை புத்தகமாக இருந்தால் இடையிடையே காணப்படும் கதாபாத்திரங்களின் ஓவியத்தை, வெறுமனே ஓவியமாகப் பார்த்தோம். இனி இணையத்தில் வரும் குமுதத்திலோ ஆனந்தவிகடனிலோ கதைகளுக்கு நடுவே ஓவியங்கள் அசையப் போகின்றன. அந்தந்த பக்கஙளுக்குள்ளேயே நடக்கவும் ஆடவும் பேசவும் ஏன் பாடவும் போகின்றன. எதிர்காலத்தில் உயிர் ஓவியங்கள் கொண்ட புத்தகமாக மாறி ஒரு புதுவித பரிணாமத்தை எடுக்கப் போகிற இந்த Flash புத்தகங்கள், இணைய சஞ்சிகை உலகில் ஒரு அழகான அனுபவமாக இருக்கப்போகின்றது என்பது நிச்சயம்.

சரி இந்த Flash அல்லது Flip புத்தகங்களை நாமும் செய்ய முடியுமா? முடியும். முதலில் ஒரு சிறிய Flip book ஒன்றை செய்து பார்க்க விரும்பின் இதை தரவிறக்கம். செய்யவும். இலவச மென்பொருள். இது போட்டோ ஆல்பத்துக்காக என்று இருக்கின்றபோதும் புத்தக வடிவமைப்பும் அழகாகவே இருக்கின்றது. இதில் Animation, Movie இவைகளை சேர்க்க முடியாது. அவற்றிற்குரிய மென்பொருளை தொடர்ந்து பார்ப்போம்.

மென்பொருள்
Flip Flash Album Free

தரவிறக்கம்
http://www.goztun.com/products/flipflashalbumfree/


(இன்னும் வரும்)


Last edited by kirikasan on Sun Sep 05, 2010 12:57 am; edited 2 times in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: Flash மின் புத்தகங்கள் உருவாக்க 2ம்பகுதி சேர்ப்பு

Post by T.N.Balasubramanian on Thu Sep 02, 2010 1:04 am

நல்லதோர் செய்தி .மின் படிவ புத்தகங்கள் வரும்காலங்களில் மிக முக்கியமான பங்கேர்க்கப் போகின்றன.
ரமணீயன்

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199

Back to top Go down

Re: Flash மின் புத்தகங்கள் உருவாக்க 2ம்பகுதி சேர்ப்பு

Post by டயானா on Thu Sep 02, 2010 8:47 am


டயானா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 650
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: Flash மின் புத்தகங்கள் உருவாக்க 2ம்பகுதி சேர்ப்பு

Post by கார்த்திக் on Thu Sep 02, 2010 8:56 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி

கார்த்திக்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

தமிழ் Flash book பகுதி 2 இன்னொன்று செய்வோம்

Post by kirikasan on Sun Sep 05, 2010 12:52 am




Flash page Flip free

Flash page Flip free இலவசமாகக் கிடைக்கும் மென்பொருளாகும். இதை கொண்டு மிக இலகுவாக flash book செய்துவிடலாம். இதில் jpg, gif, png வகையிலான படங்களும் swf அசையும் படங்களும் (animated picture) சேர்க்க முடியும். Pdf fileகள் சேர்க்க முடியாது.
ஒரு கதைப் புத்தகமோ சஞ்சிகைகளோ செய்வதாயின் wordpad, MSword போன்றவற்றில் எழுதி கணனி விசைப்பலகையில் Print screen என்ற பொத்தானை அழுத்தி copy செய்து paint programல் அதை paste பண்ணுவதன் மூலம் படமாக்கி கொள்ளலாம். ( screen Hunter என்ற இலவச மென்பொருள் திரையில் இருப்பதை அப்படியே படமாக்கச்சிறந்தது
Screen Hunter
http://wisdom-soft.com/products/screenhunter_free.htm

Flash page Flip free மூலம் எப்படி `பக்கம் புரளும்` புத்தகம் செய்வது என்று பார்ப்போம்.
இந்த மென்பொருளை இலவசமாக கீழுள்ள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

http://www.flashpageflip.com/


தரவிறக்கம் செய்து unrar பண்ணிய Folder ஐத் திறந்து உள்ளே காணப்படும் கோப்புக்களில் free version ஐ திறக்கவும். இதற்குள் ஏழு கோப்புகள் காணப்படும். அவற்றில் நாம் மாற்றம் செய்ய வேண்டியவை pages, xml ஆகிய இரண்டுமே. முதலில் புத்தகம் எப்படி இருக்கிறது என்று பார்க்க அதில் Default.html மீது சுட்டியால் இரட்டை சொடுக்கு போடவும். (mouse click) internet explorerல் Flash புத்தகம் தோன்றும். பக்கங்களைப் புரட்டிப் பார்க்கவும்.

இதை தமிழ் புத்தகமாகவோ உங்கள் விருப்பத்துக்கேற்ற வேறு மொழிப் புத்தகம் அல்லது போட்டோ ஆல்பமாகவோ மாற்ற வேண்டும்.அதற்கு செய்ய வேண்டியது இவைதான்.
இங்கே உள்ள Pages என்ற கோப்பை திறக்கவும். அதற்குள் Flash புத்தகத்தின் பக்கங்கள் காணப்படும். மொத்தம் 14 பக்கங்களாக jpg வகை படங்களும் swf வகையான Shock wave அசையும் படங்களும் கலந்து காணப்படும். இங்கேயுள்ள படங்களுக்குப் பதிலாக உங்கள் படங்களை வைக்கவேண்டும். சிறந்த வழி இந்தப் pages folder ஐ வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு அல்லது அழித்துவிட்டு புதிதாக folder செய்து pages என்று பெயரிடவும் இதற்குள் உங்கள் படங்களை வைத்து அவற்றிற்கு 01, 02 ,03, 04... என்று வரிசையாக பெயரிடவும். இது மிக முக்கியம். நீங்கள் எத்தனை படங்களும் வைக்கலாம். வைத்தபின்னர் pages ஐ மூடிவிட்டு xml கோப்பை திறக்கவும் உள்ளே Pages.xml என்ற பெயரில் documet ஒன்று இருக்கும். இதற்குமேல் சுட்டியை நிறுத்தி வலது பொத்தானை அழுத்தி edit ஐ தெரிவு செய்யவும. edit menu இல்லாவிட்டால் open with notepad ஐ தெரிவு செய்யவும்

Notepad ல் திறக்கும் ஆவணத்தில் 14 படங்களுக்குரிய தரவுகள் page src="pages/01.jpg"/ என்று தொடங்கி page src="pages/14.jpg"/ என்பது வரை இருக்கும். இதிலே நீங்கள் செய்ய வேண்டியது. pages நிரல்களை உங்கள் படங்களுக்குரிய நிரல்களாக மாற்ற வேண்டும். எத்தனை படங்களை (பக்கங்களை) சேர்த்தீர்களோ அத்தனை நிரல்களை உருவாக்குங்கள்.

14 பக்கங்களுக்கு குறைவாக உங்கள் பக்கங்கள் இருந்தால், அங்கேயுள்ள மிகுதி நிரலை நீக்கவும்.. கூடுதலாக செய்ய விரும்பினால் புதிதாக சேர்க்கவும். அதி முக்கிய விடயம் இறுதி சொல்லான படத்தின் format அதாவது jpg, gif, png அல்லது swf என்பதை சரியாக மாற்றிக் கொள்ளவும். pages என்ற folder க்குள் வைத்த படங்களின் வரிசையைப் பார்த்து இந்த நிரலைசரியாக பூர்த்தி செய்து கொள்ளவும்

மேலே முதல் வரியில் புத்தக பக்கத்தின் அளவு நீளம் அகலம் இவற்றை உங்கள் படத்துக்கு ஏற்றவாறு மாற்றலாம். நிறங்களை விருப்பம் போல் மாற்றவும். அவ்வளவுதான் xml கோப்பை சேமித்துவிட்டு default.html ஐ open பண்ணவும். உங்கள் Flash மின் புத்தகம் தயார். அழகாக இருக்கிறதா?

சரி இந்த flash மின் புத்தகம் பல பகுதிகளாக இருகின்றன. js, xml, pages, txt, swf, default ஆகிய பகுதிகள் அனைத்தும் இந்த நூலுக்கு தேவை. இல்லையேல் புத்தகம் இயங்காது. இது இணையத் தளத்தில் புத்தகத்தை பார்வைக்கு வெளியிடுவதற்கே சிறந்த முறை. (உ+ம் சஞ்சிகைகள், catalouge எனப்படும் விளம்பர புத்தகங்கள்)

இவைகளை எல்லாம் ஒன்றாக்கி ஒரே கோப்பாக பிரிக்க முடியாதபடி செய்தால் நன்றாக இருக்குமே. இதை செய்வது எப்படி?
( இன்னும் வரும்)

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2029
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum