ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» hai ai am kundalakesi
by கபாலி Today at 12:52 am

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am

» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am

» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

தலைவா இது தகுமா...?

View previous topic View next topic Go down

தலைவா இது தகுமா...?

Post by Tamilzhan on Tue Sep 07, 2010 6:14 pm

[You must be registered and logged in to see this image.]

(தனது மகளின் திருமணத்துக்கு வர வேண்டாம் என்ற ரீதியில் ரஜினி வெளியிட்ட அறிக்கை குறித்து ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கடித வடிவிலான கட்டுரை)

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!

உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்­ர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.

அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்து விடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம்பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!

உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடித் திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்­ர் வடிகிறதே!

எங்களைப் பார்த்து வளர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு,

ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

Tamilzhan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by கார்த்திக் on Tue Sep 07, 2010 6:21 pm

நன்றி அன்பு மலர்

கார்த்திக்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by mini on Tue Sep 07, 2010 6:23 pm

ஆமோதித்தல்

mini
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by சிவா on Tue Sep 07, 2010 7:15 pm

பகிரங்க மடல் அருமை!

பதிவுகள்: 715284 | உறுப்பினர்கள்: 14695 | தலைப்புகள்: 76810 | புதிய உறுப்பினர்: குண்டலகேசி

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54353
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2264

http://www.sivastar.net

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by maniajith007 on Tue Sep 07, 2010 8:38 pm

சினிமா போதை தலை விரித்தாடுவது தான் காரணம்

maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8980
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by T.N.Balasubramanian on Tue Sep 07, 2010 10:24 pm

செம்மேறி ஆட்டு கூட்டம் . பகுத்தறிய தெரியா பாமரக் கூட்டம் . பட்டாலும் தெரியாது, தனக்காகவும் புரியாது.
ரஜினி கர்நாடகாவில் எவ்வளவு சம்பாதித்தார் ? தமிழகத்தில் எவ்வளவு சம்பாதித்தார்? தமிழ்நாட்டுக்கு என்ன செய்தார்?
உதாரணமாக ரசிகர் பணத்தில் கட்டிய ராகவேந்திர கல்யாண மண்டபம் ,ரசிகர்களுக்கு/ ஏழை எளியவர்களுக்கு குறைந்த தொகையில் வாடகைக்கு கிடைக்குமா? லக்ஷதில் ஒரு பங்கு உதவி செய்தது உண்டா? ஹும் .......தமிழர்களே தமிழர்களை சுரண்டும் இந்த காலத்தில், வெளி மாநில மானிடரை நம்புவது நமது மதி ஈனமே. வருத்தம் தான் மேலிடுகிறது.
ரமணீயன்

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1183
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 106

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by gunashan on Tue Sep 07, 2010 10:29 pm

Tamilzhan wrote:
[You must be registered and logged in to see this image.]

(தனது மகளின் திருமணத்துக்கு வர வேண்டாம் என்ற ரீதியில் ரஜினி வெளியிட்ட அறிக்கை குறித்து ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கடித வடிவிலான கட்டுரை)

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!

உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்­ர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.

அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்து விடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம்பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!

உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடித் திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்­ர் வடிகிறதே!

எங்களைப் பார்த்து வளர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு,

ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

மக்களுக்கு புரிஞ்சா நாட்டுக்கே நல்லது நண்பா. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by swamy on Mon Sep 27, 2010 1:31 pm

நன்றி சேர்ந்திசை
ஒரு படம் பிளாப் ஆனால்தலைவர் கிழே எறங்கி வந்துவிடுவார் .ஏ தமிழனே உன்னால் முடியும் .

swamy
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 31
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 20/08/2009
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by கலைவேந்தன் on Mon Sep 27, 2010 10:43 pm

மனம் கலங்கவைத்த கண்ணீர்க்கடிதம்..!

இளைய மகள் திருமணத்தில் விஐபிக்களுக்கு கொடுத்த சிவப்புக்கம்பள வரவேற்பை பார்த்து வயிறு எரிந்தது..!

வெட்கம் கெட்டவர்கள் ரசிகர்கள் தான்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by kalaimoon70 on Mon Sep 27, 2010 11:39 pm

எல்லாம் சரி தோழா ?என்றாவது இந்த தலை அரசியலுக்கு வருவதாக சொன்னதுண்டா ?பின் ஏனோ இவரை அரசிலுக்கு வா வா என்று கூப்பிடுவது வாடிக்கையாய் போனது,வேடிக்கை தான்
இவர் வாழ்க்கை,உன் முடிவை ,இவரிடம் சொல்வது மட்டும் தொடர்கதை.உனக்கும் ஒரு சுயநலம் உண்டு எனபது நீ தந்த கடிதம் மூலம் நான் அறிந்தேன் .

எங்களைப் பார்த்து வளர்ந்த விஜயகாந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

படத்தை படமாகமாக பார்ப்போம்,யாரும் எதையும் எப்போதும்
தரப்போவது இல்லை ,தந்தது இல்லை .நீயே உயர தூக்கிவிட்டு,
நீ ஏறாமல் இருக்க நீ என்ன மூங்கில் ஏணி மரமா ?குறைபோக்க,
நம்மை மாற்றுவோம் ,ஏமாற்றத்தை தவிர்ப்போம்.

உன்னை போல நானும் ஒரு ரசிகன் .
படத்தோடு சரி .

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!

Post by asksulthan on Sat Oct 16, 2010 9:51 am

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!
அன்புத்தலைவனுக்குஅன்பானவணக்கம்

விகடனில் ரஜினிக்கு கடிதம். ( இதுவும் வாசகர் விருப்பம் )

அன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்!

உங்களிடம் நேரில்தான் பேசவே முடியாதே... சில விஷயங்களை மனசைவிட்டு தங்களின் காலடியில் இறக்கிவைக்கவே இந்தக் கடிதம்! தமிழகத்தில் நிறைய அரசியல்வாதிகள் தலைவராக தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டாலும், எல்லோரையும் யாரும் இப்படி அன்பொழுக அழைப்பது இல்லை. எந்தக் கட்சியையும் தொடங்காதபோதே, 'தலைவா' என்று உயிர் உருக உங்களை அழைத்த லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒரு துளி நான்.

நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா தலைவரே? நாங்கள் சந்தோஷமாக இல்லை! 'போக்குவரத்து நெரிசல், கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் மகள் திருமணத்துக்கு வரவேண்டாம்' என்று நீங்கள் சொல்லிவிட்டீர்கள். இதே அறிக்கையை உங்கள் படம் ரிலீஸ் ஆகும்போது விடுவீர்களா? அப்போதும் தியேட்டரைச் சுற்றிலும் கூட்டம், போக்குவரத்து நெரிசல், பிதுங்கும் ஜனத்திரள் எல்லாமே இருக்குமே!

இந்த நேரத்தில், மூத்த மகள் மணவிழா சென்னை பட்டினப்பாக்கம் மேயர் ராமநாதன் ஹாலில் நடந்ததும் ஞாபகம் வருகிறது. கோட்டு சூட்டு போட்டவர்களையும், கார்களில் வந்தவர்களையும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றீர்கள். ஆனால், நாங்களோ மண்டப வாசலிலேயே சத்யநாராயணா மூலம் கெடுபிடியாக வெளியே தள்ளப்பட்டோம். வெள்ளித் திரையில் உங்களுக்கு கற்பூர

ஆரத்தி எடுத்த எங்களின் கண்களில், கண்ணீர்த் திரை அப்போது வழிந்தது நிஜம். உங்களின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஊருக்கே சோறு போட்டவர்கள், 'உள்ளே வராதே' என்று விரட்டி அடிக்கப்பட்டோம்.

அதே மண்டபத்தில் நடிகர் பிரபுவின் மகன் கல்யாணம். திருமணத்துக்கு முதல் நாள் ரசிகர்களை மண்டபத்துக்கு அழைத்து, மணமக்களை அறிமுகப்படுத்தி விருந்து கொடுத்தார். அந்த பாசத்தை உங்களிடம் நாங்கள் எதிர்பார்த்தது தவறா? ரசிகன் கட்டும் தோரணம் வேண்டும்... கட்-அவுட் வேண்டும்... டிக்கெட் காசு வேண்டும்... நாங்கள் மட்டும் வேண்டாமா? பெரிய பெரிய வி.ஐ.பி-க்களோடு எங்களைச் சேர்த்து வைத்து வரவேற்க வேண்டாம்... உங்கள் குடும்பத்தின் இந்த சந்தோஷ நிகழ்ச்சியை முன்னிட்டு எங்களுக்கென்று தனியாக ஓரிரு மணி நேரம் நீங்கள் ஒதுக்கக் கூடாதா? மேடைகளிலும், அறிக்கைகளிலும் உங்களைத் தூற்றி நகையாடியவர்களுக்குக்கூட நேரில் போய் பத்திரிகை வைத்தீர்களே... தூஷித்தவர்களுக்கு விருந்து வைத்து போஷிக்கிறீர்கள்...... உங்களை வாரி அணைத்தவர்களை வாசலுக்கு வெளியே நிறுத்தலாமா?

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும். நீங்கள் திடீரென்று விமான நிலையத்தில் ஸ்டைலாக நின்றுகொண்டு, 'இந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடு' என்று போஸ் கொடுத்துவிட்டுப் பறந்துவிடுவீர்கள். உங்கள் வார்த்தையை உயிராய் சுமந்து ஓடியாடி உழைப்போம். அரசியல்வாதிகள் எங்களைத் தேர்தல் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கறிவேப்பிலையாகத் தூக்கி வீசிவிடுவார்கள். ஒரு தடவை தி.மு.க-வை ஆதரிக்கச் சொல்வீர்கள். அடுத்த தரம், ஜெயலலிதா வீட்டில் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் போட்டோ ரிலீஸ் ஆகும். எது சொன்னால் என்ன... மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்பாக ஆடி, கடைசியில் சொந்தக் காசில் சூடு வைத்துக்கொள்வோம்!

நிதானமாக யோசித்தால், ஒன்று புரிகிறது... நீங்கள் தெளிவினும் தெளிவு. உங்கள் ஒவ்வொரு படம் வரும்போதும், ரசிகர்களின் மனசைக் கரைத்துவிடுவீர்கள். கடந்த முறை 'குசேலன்' படம் ஓடத் திட்டமிட்டு, கரிசனம் காட்டித் திடீரென ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து, 'என்னையும் ரசிகர்களையும் பிரிக்க முடியாது.' என்று சொல்லி, கோடம் பாக்கத்தையே கொடைக்கானல் ஆக்கினீர்கள்! ஆனால், ஒரு படம் ஓகோவென ஓடினால் நன்றி சொல்ல அழைத்தது உண்டா? வெற்றிச் செய்தி காதில் விழுந்ததுமே இமயமலையில் கால்வைத்து விடுவீர்கள்!

உங்களை கேவலமாகத் திருமாவளவன் வசை பாடியபோது, கோபமாகி எதிர்த்தோம். விளைவாக, கட்சியினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் இருந்தோம். நீங்கள் ஒரு வார்த்தையாவது 'என்னாச்சு?' என்று கேட்டதில்லை. இன்று வரை பகை நெருப்புபற்றி எரிகிறது எங்களுக்குள். ஆனால், பெரியவர்கள் ஒன்று சேர்ந்துவிட்டீர்கள். திருமாவின் வீடு தேடி, திருமண அழைப்பு தருகிறீர்கள். ஆனால், அன்று எங்களை அடித்தவர்கள், இன்று மறுபடியும் எங்களைப் பார்த்து மிகக் கேவலமாகச் சிரித்தபடி 'எங்க பவர் புரியுதா?' என்று வாய் கூசாமல் கமென்ட் அடிக்கும் போது உயிரோடு போட்டுச் சிதைப்பது போல் இருக்கிறதே தலைவா!

'பாபா' படம் வந்தபோது, வட மாவட்டங்களில் கலவரம் தலைவிரிக்க... பா.ம.க-வினர் அரங்குகளில் படப் பெட்டிகளையே தூக்கினர். தடுத்த எங்களுக்கு அடி, உதை... ரத்தக் கசிவு நின்றாலும், வடுக்கள் இன்னும் உடலில்! இப்போது நீங்களோ அன்புமணி இல்லம் தேடிப் போய் அழைப்புவைத்து அளவளாவுகிறீர்கள்! 'பகையைப் பாராட்டாத பரந்த உள்ளம்' என்றும் 'நாகரிகம் அறிந்த நல்ல மனிதர்' என்ற பெயர்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்... ஆனால், காயம்பட்ட எங்களை மட்டும் சுத்தமாகப் புறக்கணிக்கும்போது நெஞ்சில் ரத்தக் கண்ணீர் வடிகிறதே!

எங்களைப் பார்த்து வளர்ந்த விஜய காந்த் ரசிகர்கள்கூட கரை வேட்டி கட்டிக்கொண்டு, எங்களை ஏதோ காயலான் கடை பொருள்போல ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக்கொள்ள?

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக் கொண்டு திரும்பத் திரும்ப உங்கள் பின்னால் இன்னும் எத்தனை நாளைக்கு நாங்கள் ஓடி வர முடியும்? காலம் எல்லாம் தாங்கிக்கொண்டு சும்மா இருக்க எங்களுக்கு 'எந்திர' இதயம் இல்லையே! அது ரத்தமும் சதையினாலும் அல்லவா ஆனது?

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள் தலைவா!

இப்படிக்கு
ஈர விழிகளுடன்,
உங்களின் ரசிகன்

( நன்றி: விகடன் )

லூசாப்பா நீ ? நீ இன்னுமா திருந்தலை? யாராவது சீக்கிரமா இந்த கொசுவ விரட்டி வெளி நாட்டில கொண்டு போய் விடுங்கப்பா!

asksulthan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 300
வசிப்பிடம்: Dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by சாந்தன் on Sat Oct 16, 2010 10:08 am

லூசாப்பா நீ ? நீ இன்னுமா திருந்தலை? யாராவது சீக்கிரமா இந்த கொசுவ விரட்டி வெளி நாட்டில கொண்டு போய் விடுங்கப்பா

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்லவை அனைத்தும் நன்மையாகவே முடியும் !
தன்னம்பிக்கையை இழக்கிறவன் தன்னையே இழக்கிறான் !!

[You must be registered and logged in to see this link.]

சாந்தன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 7797
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 86

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by உதயசுதா on Sat Oct 16, 2010 12:12 pm

நம்ம ஆளுகள சினிமாகாரன நம்பி வீணா போகாதிங்கடான்னு சொன்னா எவன் கேக்குறான்? இது மாதிரி பட்டு தெரிஞ்சுகிட்டாதான் உண்டு. இன்னும் எத்தனயோ சினிமா பைத்தியங்கள் இருக்கு அவங்க எல்லாம் இந்த கட்டுரைய
படிச்சா சரி

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]

உதயசுதா
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 10329
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 732

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by கலைவேந்தன் on Sat Oct 16, 2010 12:13 pm

ஏற்கனவே வாசித்த ஒன்று.. ஈகரையிலா என்று நினைவில்லை.ஆனாலும் மீண்டும் ரசித்தேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: தலைவா இது தகுமா...?

Post by மஞ்சுபாஷிணி on Sat Oct 16, 2010 4:11 pm

சரியான சாட்டையடி கேள்விகள்...
சினிமாவை ரெண்டு மணி நேரம் பொழுதுப்போக்கா போய் காசு கொடுத்து ரசித்துவிட்டு வரணும் அவ்வளவு தான்.....

அதை விட்டு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு இத்தனையும் செய்யச்சொல்லி ரஜினி சொல்லலையேப்பா....

உதவி செய்யனுமா செய்யுங்க.... ஆனால் எதிர்ப்பார்ப்பில்லாமல் செய்யுங்க...

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...

ரஜினி நல்ல மனிதர்..... நல்ல நடிகர்.... ஆனால் நல்ல அரசியல்வாதி இல்லை இவர்.... அரசியலுக்கு சிறிதும் பொருத்தமில்லை....

பெரிய வீட்டுக்கல்யாணம் இப்படி தாம்பா....இடையில் ஒரு வரி பிரபுவின் மகன் கல்யாணம் பற்றி எழுதி இருந்தது சிறப்பு.... சிவாஜியின் மகனாயிற்றே... அதான் ரசிகர்களுக்கு முதலிடம் தரார்....

நேத்து சும்மா குமுதம் புக் படிச்சிட்டு இருந்தேன்.... அதில் ரஜினி ஒரு ஹோட்டலில் தன் நண்பருடன் பேச போனபோது ஒரு ஸ்கூல் க்ரூப் வந்து பார்ல அட்டகாசம் ட்ரிங்க்ஸ்னு...ரஜினி இருப்பது தெரியலை பிள்ளைகளுக்கு....

அப்ப லைட் போட சொல்லி ரஜினி கூப்பிட்டு புத்திமதி சொல்லி அனுப்பி இருக்கார்....

எப்பவுமே ஒருவர் செய்த நல்லதை பத்தி மட்டும் பேசுங்கப்பா... ஏன் நல்லது அல்லாததை பத்தி இத்தனை சொல்லனும்?

அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு....

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9681
வசிப்பிடம்: குவைத்
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 813

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum