ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm

» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by மகா பிரபு Today at 3:08 pm

» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm

» ரசிக்க சில படங்கள்
by பிரசன்னா Today at 3:06 pm

» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by உமா Today at 2:48 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm

» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by முஹைதீன் Today at 1:57 pm

» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm

» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !
by முஹைதீன் Today at 1:47 pm

» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by முஹைதீன் Today at 1:42 pm

» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm

» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by முஹைதீன் Today at 1:37 pm

» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm

» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm

» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by ந.கார்த்தி Today at 12:59 pm

» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm

» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm

» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm

» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm

» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm

» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by இளமாறன் Today at 12:08 pm

» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm

» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm

» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am

» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am

» நாட்டுப் புற பாடல் - 1
by பிளேடு பக்கிரி Today at 11:06 am

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am

» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am

» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am

» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am

» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am

» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am

» கவிதை போட்டி 5 ன் கோலாகல பரிசளிப்பு விழா சென்னையில்- அனைவரும் வருக!
by சாந்தன் Today at 8:19 am

» என் படைப்பாளியின் படைப்பு ,கண்டத்தில் சில காணுங்கள் வர .........
by கோவிந்தராஜ் Today at 7:50 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!

View previous topic View next topic Go down

99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!

Post by மனுபரதன் on Thu Sep 09, 2010 9:09 pm

மாரடைப்பு காரணமாக முரளியின் மூச்சு நின்று ஒரு நாள் கடந்து விட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலத்துக்கும் மேல் தமிழ் சினிமாவில் நிலைத்திருந்த நடிகர் முரளி இதுவரை 99 படங்களில் நடித்திருக்கிறார்.

கடைசியாக நடித்த பானா காத்தாடி படத்தில் கூட எம்.பி.பி.எஸ். மாணவராக நடித்து, காலேஜூக்கு போகணும் என்று சொல்லிவிட்டு தியேட்டரில் குபீர் சிரிப்பை வரவழைத்த முரளி தமிழ் சினிமா பிரபலங்களிலேயே முற்றிலும் வித்தியாசமான குணாதியங்களைக் கொண்டவர். முரளியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ஒருபுறமென்றால்... அவரது மறைவுச் செய்தியை நம்ப முடியவில்லை என்று சொல்பவர்கள் இன்னொருபுறம். அவர்களில் பெரும்பாலானவர்கள் சமீபத்தில் விஜய் டிவி காபி வித் அனு நிகழ்ச்சியில் நடிகர் முரளியும், அவரது மகன் அதர்வாவும் கலந்து கொண்டு பேசியதை நினைவு கூர்ந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் முரளி அளித்த பேட்டி அவரது கடைசி பேட்டியாக அமைந்து விட்டது. அந்த பேட்டியில் முரளி மிகவும் இயல்பாக, கலகலப்பாக பேசிய விதம் அனைவரையும் கவர்ந்திருந்தது. கண் முன்னே சிரித்துப் பேசிய அந்த 46 வயது இளைஞர் இன்று நம்மிடையே இல்லை. முரளியின் கடைசி பேட்டி விவரம் வருமாறு:-

எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். சூட்டிங்கிற்கு போகும்போது கூட கிரிக்கெட் பேட், ‌‌டென்னிஸ் பேட்டெல்லாம் எடுத்துட்டு போயிடுவேன். வீட்டில் இருக்கும்போது என் பசங்களோட கிரிக்கெட்தான் விளையாடிட்டு இருப்பேன். சின்ன வயசுல இருந்தே விளையாட்டுல ரொம்ப ஆர்வம் இருந்துச்சி. தெருவில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடுவேன். எல்லோரும் சபிச்சிட்டு போவாங்க. எப்ப, எந்த வீட்டு கண்ணாடி உடையும்னு தெரியாது. ஆனா உடைஞ்ச கண்ணாடிக்கு பதிலா புது கண்ணாடி வாங்கி மாட்டி கொடுத்துடுவோம்.

ஆனாலும் எங்களை பார்த்தாலே திட்டுவாங்க. கதாநாயகன் ஆனதுக்கு பிறகு அதே ரோட்டில் கிரிக்கெட் விளையாடியிருக்கோம். சின்ன வயசுல எங்களை திட்டுனவங்க கூட... தம்பி நீ நல்லா நடிச்சிருக்கன்னு பாராட்டியிருக்காங்க. நீயெல்லாம் இப்படி வருவேன்னு நான் எதிர்பார்க்கலன்னுகூட ஒரு சிலர் சொல்லியிருக்காங்க. என்னை திட்டுனவங்க, மரியாதையா பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருந்துது.

தமிழ்நாடு மக்கள் ரொம்ப நல்லவங்க. நடிகர்கள் மீது ரொம்ப மரியாதை ‌‌‌வெச்சிருக்காங்க. அவங்கக்கிட்ட நாம ஒரு நடிகரா நிற்கக்கூடாதுங்க. அவங்கக்கிட்ட நானும் மனிதன்ங்கிற மாதிரிதான் நிற்கணும். அப்படி நின்னா எந்த தொந்தரவும் இருக்காது. நான் நடிகனா ரோடுல நின்னாத்தான் தனித்துவம் ஆயிடும். நான் மக்களோடு மக்களா நிற்பேன். எங்க ஏரியா ரோடுல இருக்குற மரங்கள்ல்லாம் நான்தான் வெச்சிருக்கேன். ஞாயிற்றுக்கிழமைகள்ல மரத்தை வெட்டுவேன். களை எடுப்பேன். தோட்ட ‌வேலைகள்லயும் எனக்கு ஆர்வம் அதிகம். நான் ரொம்ப யதார்த்தமான வாழ்க்கையை விரும்புறேன். என் வீட்டில் சினிமா சம்பந்தப்பட்ட எந்த போட்டோவும் இருக்காது. சினிமா வேறு. குடும்பம் வேறு.

என்னோட அப்பா டைரக்டர். இங்கே கே.பாலசந்தர் சார் மாதிரி கன்னடத்துல என்னோட அப்பா பெரிய ‌டைரக்டர். அவரோட படங்கள்ல அசிஸ்டெண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன். நான் 8ம் வகுப்பு பெயில் ஆயிட்டேன். அப்ப இருந்தே அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ண ஆரம்பிச்சிட்‌‌டேன். எனக்கு டைரக்டர் ஆகணும்னுதான் ஆசை. அப்பா படத்துல நடிக்குற சின்னச் சின்ன கேரக்டர்களுக்கெல்லாம் நான்தான் டயலாக் சொல்லிக் கொடுப்‌பேன்.

அந்த டயலாக்கை நைட் பேசிப் பார்ப்பேன். அதை பார்த்த என் அப்பா... நீ ஏன் ஹீரோவா நடிக்கக் கூடாதுன்னு கேட்டார். தெலுங்குல வெளியான பூவிலங்கு படம் செம ஹிட் ஆச்சு. அதை பார்த்த கே.பாலசந்தர் சார், பூவிலங்கு படத்தை தமிழ்ல எடுத்து உன் மகனை ஹீரோவா போடுவோம்னு அப்பாகிட்ட கேட்டாரு. அமீர் ஜான் சார் டைரக்ஷன்ல எடுத்தாங்க. என்னோட வரப்பிரசாதமே இசைஞானி இளையராஜாதான். முதல் படத்தில் இருந்தே என்னோட எல்லா படங்களையும் பாடல்கள் சூப்பர் ஹிட்டா இருக்கும். அதுக்கு காரணம் இளையராஜா சார்தான்.

பூவிலங்கு வெற்றி பெற்றதால எனக்கு அடுத்தடுத்த படங்கள்ல நடிக்கணும்னு ஆர்வம் வந்துச்சி. அதுவும் நல்ல படங்கள்ல நடிக்கணும் ஆசைப்பட்டேன். வெறும் கமர்ஷியல் படங்கள்ல நடிக்கிறதை நான் விரும்பல. குண்டுசட்டிக்கிட்ட நாலு பைட்... நாலு சாங்னு இல்லாம ஒரு கருத்துள்ள படங்கள்ல நடிக்கணும் நினைச்சேன். அதே மாதிரி பெண்மைக்கு முதலிடம் கொடுத்துத்தான் நான் நடிச்சிருப்பேன். எந்த இடத்துலயும் டபுள் மீனிங் டயலாக்கோ, விரசமான டயலாக்கோ, ஆபாசமோ, கவர்ச்சி ஓவராவோ நான் பண்ணுனதே இல்‌ல. என்னோ‌ட படம் பார்த்தீங்கன்னா சேனலே மாத்தத் தேவையில்ல. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை முரளி படம்னா குடும்பத்தோட இருந்து பார்க்கலாம்.

நான் எதுவா இருந்தாலும் என் அப்பாகிட்ட கேட்க மாட்‌டேன். என் அம்மாதான் எனக்கு எல்லாமே. அதே மாதிரிதான் இப்ப என் பசங்க இருக்காங்க. எல்லாத்தையும் அம்மாகிட்டதான் கேட்பாங்க. நான் நடிகன் ஆனாலும் என்னோ‌ட பிரண்ட்ஸ் மாறலை. ராஜா, கந்தா, நந்தா, வினய்னு ஆறேழு பிரண்ட்ஸ் இருக்காங்க. அவங்க எல்லாருமே இன்னிக்கும் என்னை பார்த்தால் ஒரு ஹீரோவா பார்க்க மாட்டாங்க. அவங்கதான் ரொம்ப கமெண்ட் பண்ணுவாங்க. ஓவரா அழுகாத‌டா... நீ நடிச்ச படத்தை பார்க்க நாங்க ஒரு பக்கெட்டை தூக்கிட்டு வர வேண்டியிருக்குன்னு ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க.

இப்ப என் மகனும் ஹீரோவா நடிக்க ஆரம்பிச்சுட்டான். இதுல ஒரு ஆச்சர்யமான விசேஷம் என்னன்னா... 1985 சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் சார் தயாரிப்பாளர், மணிரத்னத்தின் முதல் படம், இசைஞானி இளையராஜாவின் இசை. அது ரொம்ப ஹிட் கூட்டணியா இருந்தது. அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்கள்ல இந்த கூட்டணி தொடர்ந்தது. இப்ப என் மகன் நடிச்சிருக்குற பானா காத்தாடி படத்தை தயாரிச்சிருக்கிறதும் சத்யஜோதி பிலிம்ஸ்தான். தியாகராஜன் சாரோட வாரிசுகள்தான் செந்தில் தியாகராஜன் - அர்ஜூன்தான் தயாரிப்பாளர். இளையராஜா சாரின் வாரிசு யுவன்ஷங்கர் ராஜாதான் இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியா இருக்கிறது.

எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு இதயம் படத்தில் இடம்பெற்ற பொட்டு வெச்ச வட்ட நிலா பாட்டுதான். அந்த பாட்டை எத்தனை த‌டவை கேட்டாலும் சலிக்காது. உன்‌மையான காதலை சொல்ல முடியாமல் தவிக்கிற தவிப்பை நல்லா சொல்லுற பாட்டு. டான்ஸ்னு எடுத்துக்கிட்டா அதர்வா நல்லா டான்ஸ் பண்றாரு. எனக்கு டான்ஸ் ஆடவே தெரியாது. நான் மிகப்பெரிய டான்சரும் கிடையாது. முகபாவனையை வைத்து சமாளிச்சிட்டு போயிடுவேன்.

அந்த காலத்துல எனக்கு நாலே புரொடியூசர்தான். தியாகு சார், சிவசக்தி பாண்டியன், காஜா பாய், ஆர்.பி.சவுத்ரி இவங்கதான் எனக்கு புரொடியூசர்ஸ். இன்னிக்கு இருக்குற ட்ரெண்ட் அந்த மாதிரி இல்ல. ஒரு படம் பண்ணிட்டா, அடுத்த படத்தில் அதிக சம்பளம் வாங்கணும்னு நினைக்கிறாங்க. அதனால முந்தைய பட தயாரிப்பாளரை விட்டுட்டு அடுத்த தயாரிப்பாளருக்கு ஜம்ப் பண்ணிடுறாங்க. அப்படி போகக் கூடாது. பணத்துக்காக குதிச்சி குதிச்சி போயிடுறாங்க. பணத்துக்காக காத்திருக்கணும். அது நம்மை ‌தேடி வரும்வரை காத்திருக்கணும்.இவ்வாறு முரளி அந்த பேட்டியில் கூறியிருந்தார்

மனுபரதன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 120
வசிப்பிடம்: Thoothukudi
சேர்ந்தது: 19/12/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: 99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!

Post by பிச்ச on Thu Sep 09, 2010 9:13 pm

சோகம் சோகம்
100 படங்கள் நடிப்பதற்குள் மரணம் தழுவியதே!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்

வந்தே மாதரம்!

தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே

இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே

தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை

தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை

பாரதம் எங்களின் சுவாசமே

தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: 99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!

Post by அப்புகுட்டி on Thu Sep 09, 2010 9:23 pm

பிச்ச wrote: சோகம் சோகம்
100 படங்கள் நடிப்பதற்குள் மரணம் தழுவியதே!
சோகம் சோகம் சோகம்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: 99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!

Post by புவனா on Thu Sep 09, 2010 9:26 pm

100 படங்கள் நடிப்பதற்குள் மரணம் தழுவியதே!


அவரின் ஆத்மா சாந்தி அடைய பாரத்திப்போம்..

புவனா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: 99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!

Post by ரபீக் on Thu Sep 09, 2010 10:33 pm

நல்ல மனிதர் ,,,,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)


ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: 99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!

Post by drrajmohan on Thu Sep 09, 2010 10:55 pm

எந்த இடத்துலயும் டபுள் மீனிங் டயலாக்கோ, விரசமான டயலாக்கோ, ஆபாசமோ, கவர்ச்சி ஓவராவோ நான் பண்ணுனதே இல்‌ல. என்னோ‌ட படம் பார்த்தீங்கன்னா சேனலே மாத்தத் தேவையில்ல. ஆரம்பத்துல இருந்து கடைசி வரை முரளி படம்னா குடும்பத்தோட இருந்து பார்க்கலாம்.[u]

உண்மைதான் ! அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும் ..


Last edited by drrajmohan on Thu Sep 09, 2010 11:04 pm; edited 1 time in total

drrajmohan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 400
வசிப்பிடம்: TAMILNADU
சேர்ந்தது: 03/07/2010
மதிப்பீடு: 12

http://www.doctorrajmohan.blogspot.com

Back to top Go down

Re: 99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!

Post by கலைவேந்தன் on Thu Sep 09, 2010 11:01 pm

மனிதனாக இருந்து நடிகனாவது சுலபம். நடிகனாக இருந்து மனிதனாக வாழ்வது சிரமம். முரளி சிறந்தவர்....!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: 99 படங்களில் நடித்து மறைந்த‌ நடிகர் முரளியின் கடைசி ‌பேட்டி!

Post by Aathira on Thu Sep 09, 2010 11:05 pm

முரளி இறந்துவிட்டாரா? இரண்டு நாட்கள் முன்பு லக்‌ஷ்மியுடன் அவர பேட்டி ஒலிபரப்பாகிக் கொண்டிருததே...டீவியில்....ஆபாசமற்ற நடிப்புக்குக்கும் குரலுக்கும் சொந்தக்காரர். மகனை களம் இரக்கியுள்ளார். அவரின் வெற்றியைப் பார்க்காமல் இறந்து விட்டாரே. வருத்தமாக இருக்கிறது.
அவர் ஆத்மா சாந்தியடையை இறைவனை வேண்டுவோம்..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9793
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum