புதிய பதிவுகள்
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
15 Posts - 35%
T.N.Balasubramanian
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Guna.D
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%
prajai
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
158 Posts - 36%
mohamed nizamudeen
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
17 Posts - 4%
prajai
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
11 Posts - 3%
T.N.Balasubramanian
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
9 Posts - 2%
Jenila
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
jairam
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Baarushree
பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_m10பாரதியார் சிறுகதைகள் - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதியார் சிறுகதைகள்


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 13:28

First topic message reminder :

குதிரைக் கொம்பு

சிந்து தேசத்தில் அந்தப்புரம் என்கிற நகரத்தில் ரிவண நாயக்கன் என்ற ராஜா இருந்தான். இவன் ஒரு சில யுகங்களின் முன்பு இலங்கையில் அரசாண்ட ராவணனுடைய வம்சம் எனறு சொல்லிக் கொண்டான். இவனுடைய சபையில் எல்லா சாஸ்திரங்களையும் கரைத்து குடித்த பல பண்டிதர் விளங்கினார்கள். ஒரு நாள் அரசன் தனது சபையாரை நோக்கி குதிரைக்கு ஏன் கொம்பில்லை? என்று கேட்டான். சபையிலிருந்த பண்டிதர்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். அப்போது கர்நாடக தேசத்திலிருந்து அந்த அரசனிடம் சன்மானம் வாங்கும் பொருட்டாக வந்திருந்த வக்ரமுக சாஸ்திரி என்பவர் தான் அந்தக் கேள்விக்கு விடை சொல்வதாகத் தெரிவித்தார். அரசன் அனுமதி தந்தவுடன் மேற்படி வக்ரமுனி சாஸ்திரி பின்வருமாறு கதை சொல்லத் தொடங்கினார்.


கேளீர், ரிவண மஹாராஜா, முற்காலத்தில் குதிரைகளுக்கெல்லாம் கொம்பிருந்தது. இலங்கையில் அரசாண்ட தமது மூதாதையாகிய ராவணேசுரன் காலத்தில், அந்த ராஜனுடைய ஆக்கினைப்படி பிரமதேவன் குதிரைகளுக்குக் கொம்பு வைக்கும் வழக்கத்தை நிறுத்தி விட்டான் என்றார்.


இதைக்கேட்டவுடன் ரிவண நாயக்கன் உடல் பூரித்துப் போய், அதென்ன விஷயம்? அந்தக் கதையை ஸவிஸ்தாரமாகச் சொல்லும் என்றான்.


வக்ரமுக சாஸ்திரி சொல்லுகிறார்-


இலங்கையில் ராவணன் தர்மராஜயம் நடத்திய காலத்தில் மாதம் மூன்று மழை பெய்தது. அந்தக் காலத்தில் ஒரு வருஷத்துக்குப் பதின்மூன்று மாசமும், ஒரு மாசத்துக்கு முப்பத்துமூன்று தினங்களும் ஒரே கணக்காக ஏற்பட்டிருந்தன. ஆகவே பதினொரு நாளுக்கு ஒரு மழை வீதம், வருஷத்தில் முப்பத்தொன்பது மழை பெய்தது. பிராமணர் நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், அறுபத்து நாலு கலை ஞானங்கள், ஆயிரத்தெட்டுப் புராணங்கள், பதினாயிரத்தெண்பது கிளைப் புராணங்கள், எல்லாவற்றிலும் ஒரெழுத்துக்கூடத் தவறாமல் கடைசியிலிருந்து ஆரம்பம்வரை பார்க்காமல் சொல்லக்கூடிய அத்தனை திறமையுடைனிருந்தார்கள். ஒவ்வொரு பிராமணன் வீட்டிலும் நாள் தோறும் தவறாமல் இருபத்து நாலாயிரம் ஆடுகள் வெட்டிப் பலவிதமான யாகங்கங்களை நடத்தி வந்தார்கள்.ஆட்டுக் கணக்கை மட்டும் தான் புராணக்காரர் சொல்லியிருக்கிறார். மற்ற மிருகங்களின் தொகை அவர் சொல்லி இருக்கலாம். இப்படியே மற்ற வருணத்தாரும் தத்தம் கடமைகளை நேராக நிறைவேற்றிக் கொண்டு வந்தார்கள். எல்லா ஜிவர்களும் புண்யத்மாக்களாகவும், தர்மிஷ்டராகவும் இருந்து இகத்தில் இன்பங்களையெல்லாம் அனுபவித்துப் பரத்தில் சாட்ஷாத் பரமசிவனுடைய திருவடி நிழலைச் சார்ந்தனர்.


அப்போது அயோத்தி நகரத்தில் அரசு செலுத்திய தசரதராஜன் பிள்ளையாகிய ராமன் தனக்கு மூத்தவளாகிய பரதனுக்கு பட்டங் கட்டாமல் தனக்கே பட்டங் கட்டிக் கொள்ள விரும்பித் தனது தந்தையை எதிர்த்துக் கலகம் பண்ணினான். பிதாவுக்கு கோபமுண்டாய், ராமனையும் லக்ஷமணனையும் ராஜயத்தை விட்டு வெளியே துரத்தி விட்டான். அங்கிருந்து அவர்கள் மிதிலை நகரத்துக்கு ஓடிபோய், அந்நகரத்து அரசனாகிய ஜனகனைச் சரணமடைந்தார்கள். அவன் இவர்களுக்கு அபயம் கொடுத்துக் காப்பாற்றி வருகையில் ராமன் மேற்படி ஜனகராஜன் மகளாகிய சீதையின் அழகை கண்டு மோகித்து, அவளை திருட்டாகக் கவர்ந்து கொண்டு தண்டைகாரண்யம் புகுந்தான். அங்கு ராமர், லக்ஷமணர் முனிவர்களையெல்லாம் பலவிதங்களிலே ஹிம்சை செய்தனர். யாகங்களைக் கெடுத்தனர். இந்த விஷயம் அங்கே அதிகாரம் செய்து வந்த சூர்ப்பநகை தேவியின் காதில் பட்டது. ராவணனின் தங்கையாகையாலும், பிராமணக்குலமானபடியினாலும், ரிஷிகளுக்கு ராமன் செய்யும் துன்பத்தைப் பொறுக்கமாட்டாதவளாய், அவள் அந்த ராமனையும் அவன் தம்பி லக்ஷமணனையும் பிடித்துக் கட்டிக் கொண்டுவரும்படி தனது படையினிடம் உத்தரவு கொடுத்தாள்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 15:41

கவிராயனும் கொல்லனும்




ஐரோப்பாவிலே மகா கீர்த்தி பெற்ற கவியொருவர் ஒரு கொல்லன் பட்டறை வழியாகப் போய்க் கொண்டிருந்தார். அப்போது பாட்டுச் சத்தம் கேட்டது. கவிராயர் உற்றுக் கேட்டார். உள்ளே கொல்லன் பாடிக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டு அந்தக் கவிராயராலே எழுதப் பட்டது. அதை அவன் பல வார்த்தைகளைச் சிதைத்தும் மாற்றியும் சந்தந் தவறியும் மனம் போன படிக்கெல்லாம் பாடிக் கொண்டிருந்தான். கவிராயருக்கு மகா கோபம் வந்து விட்டது. உடனே உள்ளே போய்க் கொல்லனுடைய பட்டறையிலிருந்த சாமான்களையும் கருவிகளையும் தாறு மாறாக மாற்றி வைத்துக் குழப்பமுண்டாக்கத் தொடங்கினார்.

கொல்லன் கோபத்துடன், நீ யாரடா. பயித்தியம் கொண்டவன், என்னுடைய சாமான்களையெல்லாம் கலைத்து வேலையைக் கெடுக்கிறாய்? என்றான்.

உனக்கென்ன? என்று கேட்டார் கவிராயர்.

எனக்கென்னவா* என்னுடைய சொத்து தம்பீ, என்னுடைய ஜீவனம்* என்றான் கொல்லன்.

அதற்கு கவிராயர், அதுபோலவே தான் என்னுடைய பாட்டும். நீ சில நிமிஷங்களுக்கு முன்பு பாடிக் கொண்டிருந்த பாடடை உண்டாக்கிய கவிராயன் நானே. என்னுடைய பாட்டை நீ தாறுமாறாகக் கலைத்தாய். எனக்கு அது தான் ஜீவனம். இனிமேல் நீ சரியாகப் படித்துக்கொள்ளாமல் ஒருவனுடைய பாடடைக் கொலை செய்யாதே என்று சொல்லிவிட்டுப் போனார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 15:44

கிளிக் கதை



எண்ணூறு வருஷங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மிளகாய் பழச் சாமி என்றொரு பரதேசி இருந்தான். அவன் நாள்தோறும் இருபது மிளகாய் பழத்தைத் தின்று ஒரு மிடறு தண்ணீரும் குடிப்பான். அவனிடம் ஒரு கிளியுண்டு. மடத்துக்கு வரும் ஜனங்களிடம் ஸ்கந்த புராணம் சொல்லிப் பிரசங்கம் செய்வது அந்தப் பரதேசியின் தொழில். பிரசங்கம் தொடங்குவதற்கு முன்பு பரதேசி கிளியை நோக்கி -

முருகா, முருகா, ஒரு கதை சொல்லு என்பான்.

உடனே கிளி கங்கா மங்கா வென்று ஏதோ குழறும். பரதேசி சொல்லுவான்

அடியார்களே, இங்கிருப்பது கிளியன்று. இவர் சுக பிரம ரிஷி. இவர் சொல்லிய வசனம் உங்கள் செவியில் தெளிவாக விழுந்திருக்கும். சிறிது கவனக் குறைவாக இருந்தாலும் நான் அவர் சொல்லியதை மற்றொரு முறை சொல்லுகிறேன்.

கங்கா மங்கை மைந்தன்
பாம்பைத் தின்றது மயில்
மயிலின் மேல் கந்தன்

இதன் பொருள் என்னவென்றால்..., இவ்விதமாக தொடங்கிப் பரதேசி கந்தப் புராண முழுவதையும் நவ ரசங்களைச் சேர்த்து சோனாமாரியாகப் பொழிவான். ஜனங்கள் கேட்டுப் பரவசமடைந்து போய் பொன் பொன்னாகப் பாத காணிக்கை குவிப்பார்கள். அவன் அந்தப் பணத்தை எவ்விதமாகச் செலவழிப்பானோ யாருக்கும் தெரியாது. அது தேவர் மனுஷ்யர் அசுரர் மூன்று ஜாதியாருக்கும் தெரியாத ரகஸ்யம். இருந்தாலும் ஊரில் வதந்தி யெப்படி யென்றால், இவன் மேற்படி பொன்னையெல்லாம் மலையடிவாரத்தில் ஏதோ ஒரு குகைகுள் பதுக்கி வைத்திருப்பதாகவும், இருபது வருஷத்துக்குப் பிறகு அத்தனை பொன்னையும் எடுத்துப் பெரிய கோவில் கட்டப் போவதாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 15:45

இப்படி யிருக்கும்போது ஒரு நாள், திடீரென்று மிளகாய்ப்பழசாமி மறைந்து போய் விட்டான். பொழுது விடிந்து துப்புரவு வேலை செய்யும் கிழவி வந்து பார்க்கும் போது மடம் திறந்தே கிடந்தது. உள்ளே போய்ப் பார்த்தால் சாமியார், கூடு, கிளி, புஸ்தகம், திருவோடு முதலிய யாதொரு வஸ்துவும்மில்லை. கிழவி கூவி விட்டு வீடு போய்ச் சேர்ந்தாள். ஊரதிகாரிக்குத் தெரிந்தது. பொன்னை ஒரு வேளை பரதேசி மறந்து போய் வைத்து விட்டுப் போயிருக்கக் கூடும். அதையெடுத்து யாதேனும் ஓர் தர்மம் பண்ணலாமென்ற தர்ம சிந்தையினால் அதிகாரி சேவகரை விட்டு மலையிலுள்ள பொந்து முழுவதையும் தொளை போட்டுப் பார்க்க சொன்னான். சிற்சில இடங்களில் ஓரிரண்டு பொன் அகப்பட்டது. தேடப் போனவர்களில் பலரை தேள் கொட்டிற்று. அநேகரைப் பாம்பு தீண்டிற்று. அதிகாரி தேடுவதை நிறுத்தி விட்டான்.

சில தினங்களுக்கப்பால் வாழைப் பழச் சாமியாரென்ற மற்றொரு பரதேசி ஒரு கட்டு கட்டி விட்டான். அதெப்படி யென்றால், மிளகாய்ப்பழச்சாமி பொற்குடத்துடன் ஆகாயத்தை நோக்கிப் பறந்து போய் மேக மண்டலத்துக்குள் நுழைந்ததை தான் பக்கத்திலேயிருந்து பார்த்ததாகவும், தானே யிருந்து வழியனுப்பினதாகவும், புரளி பண்ணினான். அதிகாரி அடியார் விசுவாசமுள்ளவனாகையால் அந்தப் பரதேசி சொன்னதை நம்பி, அவர் பொன்னை தேடப் போனது குற்றமென்று நினைத்து, மேற்படி மிளகாய்ப்பழச்சாமிக்கு வருஷந்தோறும் மேற்படி மடத்தில் குரு பூiஜ நடத்தி வைப்பதாகவும், மடத்தை வாழைப்பழச்சாமி வைத்துக் கொண்டு கந்த புராணப் பிரசங்கஞ் செய்து வந்தால் திருவிளக்குச் செலவு தான் கொடுத்து விடுவதாகவும் சொன்னான். வாழைப்பழ சாமி சம்மதி கொண்டு மடத்தை ஒப்புக் கொண்டான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 15:45

இவனுடைய விசேஷ மென்னவென்றால் இவன் நாளொன்றுக்கு இருபது வாழைப் பழம் தின்று ஒரு மிடறு தண்ணீர் குடிப்பான். அதன் பிறகு ஜலபானம் கிடையாது. இவனும் ஒரு கிளி வளர்த்தான். அதற்கும் கங்கா மங்கா என்று கற்றுக் கொடுத்து, அதை சுகப்பிரம ரிஷியென்று சொன்னான். ஆனால் பிரசங்கம் செய்வதில் பழைய சாமியாருக்குள்ள திறமையில் நு}ற்றிலொரு பங்குகூட இவனிடம் கிடையாது. ஆகையால் இவனுக்குப் பழைய வரும்படியில் நு}றிலொரு பங்குகூடக் கிடையாது. இருந்தாலும் சொற்பத்தைக் கொண்டு ஒருவாறு வாழைப் பழச் செலவை நடத்தி வந்தான்.

அப்படியிருக்கையில் ஒரு நாள் புதிய சீடருக்குக் கந்த புராணம் சொல்லத் தொடங்கி வாழைப்பழசாமி தனது சுகப்பிரம்ம ரிஷியிடம் கேள்விப் போட்டுக் கொண்டிருக்கையிலே, திடீரென்று மடத்திற்குள் பழைய மிளகாய்ப்பழச்சாமி தனது கிளிக்கூடு சகிதமாக வந்து தோன்றினான். சாமிக்கும் சாமிக்கும் குத்துச் சண்டை. மிளகாய்ப்பழச்சாமி காலை வாழைப்பழசாமி கடித்துக் காலிலே காயம் . வாழைப்பழச்சாமிக்கு வெளிக்காயம் படவில்லை. உடம்புக்குள்ளே நல்ல ஊமைக்குத்து. அப்போது வந்த ஜ;வரத்தில் ஆறு மாசம் கிடந்து பிழைத்தான்.

குத்துச் சண்டையின் போது கிளியும் கூட்டுக்குள் இருந்தபடியே ஒன்றுக் கொன்று கங்கா மங்கா என்று அம்பு போட்டதுபோல் தூஷணை செய்து னொண்டன. அந்தச் சமயத்தில் ஊர்க்கூட்டம் கூடி, அதிகாரியிடமிருந்து சேவகர் வந்து இரண்டு பரதேசிகளையும் பிடித்துக் கொண்டு நியாய ஸ்தலத்தில் விட்டார்கள். வாழைப் பழச்சாமியை ஊரை விட்டுத் துரத்தி விடும் படிக்கும். மிளகாய்ப்பழச்சாமி மடத்தை எடுத்துக் கொள்ளும் படிக்கும், இனிமேல் கந்த புராண உபந்யாஸத்தில் வரும் பொன்னில் ஆறிலொரு பங்கு கோயிலுக்கும், நாலில் ஒரு பங்கு அதிகாரிக்கும் செலுத்தி விடும்படிக்கும் நியாய ஸ்தலத்தில் தீர்ப்புச் செய்யப்பட்டது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 15:46

ஓர் வியாதிக்கு ஓர் காரணம்



வேதபுரி என்ற ஊரில் ஒரு பள்ளிக்கூடத்து வாத்தியாரும் ஒரு செட்டியாரும் சிநேகமாக இருந்தார்கள். வாத்தியார் செட்டியாரிடம் கடன் வாங்கியிருந்தார். செட்டியாருக்கு ஒரு நாள் காலிலே முள் தைத்துப் பிரமாதமாக வீங்கியிருந்தது.

செட்டியாரே, கால் ஏன் வீஙகியிருக்கிறது? என்று வாத்தியார் கேட்டார்.

எல்லாத்துக்கும் காரணம் கையிலே பணமில்லாதது தான் என்று செட்டியார் சொன்னார்.

சில தினங்களுக்கு பின் வாத்தியாருக்குப் பலமான ஜலதோஷம் பிடித்திருந்தது, செட்டியார் வந்தார். ஏன் ஐயரே, ஜலதோஷம் பலமாக இருக்கிறதே என்று கேட்டார்.

கையிலே பணமில்லை. அதுதான் சகவத்துக்கும் காரணம் என்று வாத்தியார் சொன்னார். செட்டியாரும் புன்சிரிப்புடன் போய் விட்டார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 15:50

அந்தரடிச்சான் சாஹிப் கதை




மொகலாய சாம்ராஜ;ஜீயத்தின் போது, தில்லி நகரத்தில் அந்தரடிச்சான் சாஹிப் என்ற ஒரு ரத்ன வியாபாரி இருந்தான். அவனுக்குப் பிதா பத்து லக்ஷம் மதிக்கத் தகுந்த பூஸ்தியும் பணமும் நகைகளும் வைத்து விட்டுப் போனார். இவன் அற்றை யெல்லாம் பால்யத்தில் சூதாடித் தோற்றுவிட்டான். அந்தரடிச்சான் சாஹிப்புக்கு ஒரு பிள்ளை பிறந்தது. அவனுக்கு செத்தான் சாஹிப் என்று பெயர். இந்த பிள்ளையும் அவன் மனைவியாகிய வில்லரில்லாப்பா என்பவளும், அவனுடைய சிறிய தகப்பன், ஒரு கிழவன் - அவன் பெயர் மூர்ச்சே போட்டான் சாஹிப் ஆகிய மேற்படி கிழவனுமாக - இத்தனை பேர் அடங்கிய, பெரிய குடும்பத்தை அவன் புகையிலைக்கடை வைத்து சம்ரக்ஷணை செய்து வந்தான்.


இப்படியிருக்கையில் அந்தரடிச்சானுக்குத் தீராத வயிற்று வலி வந்தது. அத்துடன் கண்ணும் மங்கி விட்டது. எட்டு யோஜனை தூரத்திற்கப்பால், ஒரு அதிர் வெடிச் சத்தம் கேட்டால் அவன் இங்கே பயந்து நடுங்கிப் போய், நு}று குட்டிக்கரணம் போடுவான்.


தலைக்கு மேல் காக்கை பறக்கக் கண்டால், தெருவிலே போகையில் ஆந்தை கண்டால், பூனை குறுக்கிட்டால், வண்டி எதிரே ஓடி வந்தால், சிப்பாயைக் கண்டால் இப்படி எவ்வித அபாயக் குறி நேரிட்டாலும் ஒவ்வொரு முறையும் நு}று குட்டிக் கரணம் போடுவது அவனுடைய வழக்கம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 15:51

இங்ஙனம் தெருவில் போகும் போதும், வீட்டில் இருக்கும் நேரத்திலும் குட்டிக் கரணம் போட்டுப் போட்டு அவனை நெட்டைக் குத்தலாக நிறுத்துவதே கஷ்டமாய் விட்டது. ஒரு நாள் மேற்படி அந்தரடிச்சானிடம் அவனுடைய பிள்ளையாகிய செத்தான் சாஹிப் பின்வருமாறு சொல்லலானான் -


பப்பாரே* சுத்தமாக ரஸமில்லை. காசு கொண்ட காலையில் நம்கீ ரொட்டி ஜாஸ்தி. மீன் இல்லை. சாப்பாட்டுக்கு கஷ்டம். நமக்கு எதுவும் கைகூடவில்லை. ஹிம் ஹீம் ஹூக்கும்* நீ ரொம்ப கெட்டிக்காரன் என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். உம் ஹூம்* உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். நாளை கேட்கிறேன். ஹிக்கீம் * ஹிக்கீம் * இப்போதே கேட்டு விடட்டுமா? ஹிக்கா ஹிக்கா* ஹ்ம். ஹ்ம் ஜீம். பஸ்ஸ்ஸ்ஸ் நீ யன்றோ இந்த நிலைமையே குடும்பத்தைக் கொண்டு வந்து விட்டாய். ஒய்யோம் * ப்யோம் * ப்யோம் * நம்கீ ரொட்டி ஜாஸ்தி, மீன் இல்லை. சாப்பாட்டுக்கு கஷ்டம்* பாலா, மணிலாக் கொட்டை வாங்கி கொடு. என்றான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 15:51

அப்போது அந்தரடிச்சான் சொல்லுகிறான் -


கியாரே? நம்கீ ரொட்டி இல்லை. நீ மீனில்லை யென்று கோபிக்கிறாயே? அந்தக் கிழ மூச்சே போட்டான் சாஹிப் இருக்கிறார். அவராலே வீட்டுக்கு ஒரு தம்படி வருமானம் கிடையாது. ஹாம். என்ன சொன்னாயடா? நா சூதாடினேன்? என்னையாடா சொன்னாய்? என்று கேட்டான். உடனே முந்நூறு பல்டியடித்துச் செத்தான் சாஹிப் மேலே விழுந்தான்.


இப்படி இருக்கையில் அந்த ஊர் பாத்ஷாவுக்குப் பிறந்த நாள் பண்டிகை வந்தது. பெரிய கூட்டம். தோரணங்கள், டால்கள், பந்தர்கள், மாலைகள். விளக்கு வரிசைகள், புலி வேஷங்கள், பெரிய பெரிய வஸ்தாதுகள் வந்து குஸ்தி சண்டைகள். அதிர் வெடி ஜமா *


அதுக்கு நடுவே அந்தரடிச்சான் சாஹிப் போய் நுழைந்தான். இத்தனை ஜமாவையும் பாத்ஷா ஏழாம் உப்பரிகையின் மேலே இருந்து பார்த்துக் கொண்டிருந்தான். ஓரிடத்தில் கத்திச் சண்டை நடந்து கொண்டிருந்தது.


காலை ஏழு மணி முதல் பகல் பத்து மணி வரையில் மூன்று மணி நேரமாக ஒரு க்ஷணம் கூட சிரம பரிஹாரமில்லாமல் அங்கு இரண்டு பயில்வான்கள் கத்திப் போர் செய்து கொண்டிருந்தனர். கத்திப் போர் வெகு ஜீமூதமாக நடக்கிறது. அந்த இடத்தில் பெரிய கும்பல் கலையாமல், அத்தனை பேரும் சித்திர பதுமைகள் போலே அசையாமல் மேற்படி பயில்வான்களின் சண்டையைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 15:52

பல இடங்களில் அந்தரடிச்சான் சாஹிப் தட்டுண்டு கொட்டுண்டு அங்கே வந்து விழுந்தான். கூட்டம் பளீரென்று விலகிற்று. ஒருத்தன் ஹோ என்று கத்திக் கொண்டோடிப் போனான். அத்தனை கூட்டமும் ஹோ,ஹோ,ஹோ என்று கத்திக் கொண்டு ஓடிப் போயிற்று. இவன் படபட வென்று குட்டிக்கரணம் போட்டுக் கொண்டே கத்திச் சண்டை வஸ்தாதுகளின் மேலே போய் விழுந்தான். அவர்கள் ஹோ என்று கதறிக் ஒருவர் வாள் ஒருவர் மீது பாய இரத்தம் பீறிட்டுக் கீழே சாய்ந்தனர். இதையெல்லாம் ஏழாம் உப்பரிகையின் மேலேயிருந்துக் கொண்டிருந்த பாத்ஷா ஹோ ஹோ, இவனையன்றோ நமது சேனாதிபதியாக நியமிக்க வேண்டும் * என்று கருதி அவனை அழைத்து நீ நமது சேனாதிபதி வேலையை ஏற்றுக் கொள் என்றான். இவன் அந்த வார்த்தையைக் கேட்டவுடனே சேனையென்ற ஞாபகமும், சண்டை யென்ற நினைவும், அதிலிருந்து மரணமென்ற ஞாபகமும், மனதில் தோன்ற உடனே பயந்து நடுங்கிப் போய் முப்பது குட்டிக்கரணம் போட்டுப் பாத்ஷாவின் மேலே போய் விழுந்தான்.


ஓஹோ* இவன் தன்னுடைய வணக்கத்தையும், பராக்ரமத்தையும் நம்மிடத்தில் நேரே காண்பித்தான் என்று பாத்ஷா சந்தோஷத்துடன் வியந்து அவனுக்கு லக்ஷம் மோஹரா விலையுள்ள ஒரு வயிர மாலையை ஸம்மானம் கொடுத்து, சேனாபதி நியமன உத்தரவும் கொடுத்தனுப்பினார்.


அந்த பாத்ஷாவின் காலத்தில் எங்கும் சண்டையே கிடையாதாகையால், அந்தரடிச்சான் ஸாஹிப் போரில் தனது திறமையைக் காட்டச் சந்தர்ப்பமே வாய்க்காமல் சாகுமளவும் , சேனாதிபதி என்ற நிலைமையில் சௌக்கியமாக நாளொன்றும் லக்ஷம் குட்டிக் கரணங்கள் போட்டுக் கொண்டு. இதனாலேயே எட்டுத் திசைகளிலும் கீர்த்தி யோங்க மிகவும் மேன்மையுடன் வாழ்ந்திருந்தான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed 15 Oct 2008 - 18:32

பிழைத்தோம்



மாலை நான்கு மணியாயிருக்கும்.

நான் சிறிது ஆயாஸத்தில் படுத்து இலேசான தூக்கம் தூங்கி விழித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு தாம்பூலம் போட்டுக் கொள்ள யோசனை செய்து கொண்டிருந்தேன். அப்போது வீரபுரம் கிருஷ்ணய்யங்கார் வந்து சேர்ந்தார். இவர் நமக்கு ஆப்த சிநேகிதர். நல்ல யோக்கியர். ஆனால், சூதுவாது தெரியாத சாதுவான பிராணி;

இவர் வந்தவுடனே ஓராச்சரியம் * என்று கூவினார். என்ன விஷயம்? என்று கேட்டேன். நேற்று ராத்திரி ஒரு கனவு கண்டேன் என்றார். என்ன கனவு? சொல்லும் என்றேன்.

வீரபுரம் கிருஷ்ணய்யங்கார் பின்வருமாறு சொல்லவானார்.

டாம், டாம், டாம் என்று வெடிச் சத்தம் கேட்கிறது. எங்கு பார்த்தாலும் புகை. அந்தப் புகைச்சலுக்குள்ளே நான் சுழற்காற்றில் அகப்பட்ட பட்சிபோல அகப்பட்டுக் கொண்டேன். திடீரென்று எனக்குக் கீழே ஒரு வெடி கிளம்பும். அது என்னைக் கொண்டு நூறுகாதவழி தூரத்தில் ஒரு கணத்திலே எறிந்து விடும் . அப்படிப்பட்ட வேகத்தை சாமானியமாக விழித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நம்மாலே ஸ்மரிக்கக்கூட முடியாது.

மனோ வேகம் என்பதின் பொருளை நேற்று தான் கண்டேன். அடே ராமா* ஒரு தள்ளு தள்ளினால் நேரே தலையை வானத்திலே கொண்டு முட்டும். அங்கே போனவுடன் மற்றொரு வெடி. அது பாதாளத்திலே வீழ்த்தும். எட்டுத் திசையும் பதினாறு கோணமும், என்னைக் மோதினபடியாக இருந்தது. வெடியின் சத்தமோ சாமானியமன்று. அண்ட கோளங்கள் இடிந்து போகும்படியான சத்தம். இப்படி நெடு நேரம் கழிந்தது. எத்தனை மணி நேரம் இந்தக் கனவு நீடித்ததென்பதை என்னால் இப்போது துல்லியமாகச் சொல்ல முடியாது. ஆனால் சொப்பனத்திலே அது காலேயரைக்கால் யுகம் போலிருந்தது. மரணவஸ்தை இனிமேல் எனக்கு வேறு வேண்டியதில்லை. மூச்சுத் திணறுகிறது. உயிர் தத்தளிக்கிறது. அந்த அவஸ்த்தை ஒரு முடிவுக்கு வருமென்றாவது, என் பிராணன் மிஞ்சுமென்றாவது, எனக்கு அப்போது தோன்றவேயில்லை.

Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக