புதிய பதிவுகள்
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Today at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Today at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Today at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Today at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Today at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
48 Posts - 45%
heezulia
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
43 Posts - 41%
T.N.Balasubramanian
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
3 Posts - 3%
jairam
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
2 Posts - 2%
சிவா
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
1 Post - 1%
Manimegala
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
173 Posts - 50%
ayyasamy ram
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
131 Posts - 38%
mohamed nizamudeen
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
14 Posts - 4%
prajai
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
5 Posts - 1%
jairam
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
4 Posts - 1%
Jenila
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
3 Posts - 1%
Rutu
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_m10முருங்கை மரத்தில் பூசணிக்காய் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருங்கை மரத்தில் பூசணிக்காய்


   
   
sriramanandaguruji
sriramanandaguruji
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 28/06/2010
http://ujiladevi.blogspot.com

Postsriramanandaguruji Tue Sep 14, 2010 8:17 am

முருங்கை மரத்தில் பூசணிக்காய் Saffron
அறிவில் சிறந்த முன்னோர்கள் எத்தனையோ ஆதாரங்களை நமக்கு விட்டு சென்றிருக்கிறார்கள், நமது நாட்டில் வேதகாலம் தொட்டு இன்றுவரை இருந்த இருக்கின்ற பல தவ சிரேஷ்டர்கள் இலக்குகளை அடைய மிகப்பெரும் ராஜபாட்டை அமைத்து கொடுத்தவர் பதஞ்சலி முனிவர், அவர் தமது பதஞ்சலி யோக சூத்திரம் எனும் நூலில் அஷ்ட்டமாசித்துக்களைப் பற்றியும். அவைகளை அடையும் விதங்கள். மந்திரம். ரசவாதக்கலை என அனைத்தையும் மிக விரிவாக கூறியிருக்கின்றார், உதாரணமாக பதஞ்சலி சூத்திரம் கைவல்ய பாதம் முதலாம் ஸ்லோகத்தில்


ஜன்மௌஷதி மந்த்ரதப : ஸமா
திஜா : ஸித்தய : //


அதாவது. பிறவி. இரசாயன மருந்துகள். மந்திரம். தவம். சமாதி இவற்றின் மூலம் சித்துக்கள் (சித்திகள்) உண்டாகின்றன, சித்துக்கள் என்பது எட்டு வகையானது என்பதை நாம் அறிவோம்.


முருங்கை மரத்தில் பூசணிக்காய் Fire
மிகப்பிரமாண்டமான தோற்றமாகவும். அணுவிலும் சிறிய தோற்றமாகவும் தோன்ற வைப்பது “அனிமா” என்றும் வானையே சிம்மாசனமாகவும் பூமியை படியாகவும் விசுவரூபம் கொண்ட இயேசு கிறிஸ்துவைப் போல் இருப்பது “மகிமா” என்றும் மிக ஒல்லியான சரீரத்தை கூட மிக அதிக கனமாக காட்டுவது “கரிமா” என்றும் பீமனைப் போல் தோற்றம் உடையவர்கள் தங்களை பஞ்சு போல் லேசாக்கி கொள்வதை “லகிமா” என்றும். சூரிய சந்திரர்களை தங்களது விருப்பப்படி தோன்றவும் மறையவும் செய்வதை “பிராப்தி” என்றும். அருணகிரிநாதரைப் போல் தன் உடலைவிட்டு இன்னொரு உடலுக்குள் பரகாயம் பிரவேசம் செய்வதை “பிராகாமியம்” என்றும். விசுவாமித்திரர் போல் பலவற்றை சிருஷ்டித்து காட்டுவதை “ரசத்துவம்” என்றும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல் அண்ட சராசரங்களை தனக்குள் அடக்கி காட்டுவதை “வசித்துவம்” என்றும். சித்துக்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள், இந்த அஷ்டமாசித்துக்களை முழுவதும் அறிந்தவர்கள் உண்டு, சிலவற்றை மட்டும் அறிந்தவர்கள் உண்டு



முருங்கை மரத்தில் பூசணிக்காய் Ganga


இந்த மாதிரியான சித்துக்களை இறைவனின் அனுக்கிரஹத்தால் பிறக்கும் போதே எந்தவித முயற்சியும் இன்றி பெற்றவர்கள் பல பேர் உண்டு, இவர்களை அவதார புருஷர்கள் என்றும். சரித்திரத்தின் ஓட்டத்தையே மாற்றி அமைக்க கூடிய யுக புருஷர்கள் என்றும் நாம் அழைக்கிறோம்,
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். இயேசு நாதர். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் போன்றோர்களை இந்த வரிசையில் நாம் குறிப்பிடலாம், இவர்களால் நலிவுற்ற மனித சமுதாயம் அடைந்திருக்கின்ற நன்மைகளை அளவிட்டு சொல்லிவிட இயலாது, சுருங்கச் சொன்னால் இன்று மனித சமுதாயம் மனித சமுதாயமாக இருக்கிறது என்றால் இவர்களுடைய அவதாரமே காரணம் ஆகும்,
பிறப்பால் மட்டுமின்றி சில இரசாயன மருந்துகள் மூலமாகவும். சித்துக்களை அடையலாம் என்று பதஞ்சலி முனிவர் கூறி இருக்கிறார், ஈயம். இரும்பு போன்ற சாதாரண உலோகங்களை தங்கமாக மாற்றும் ஸ்பரிசமணி பற்றியும் குறிப்பிடுகிறார்.



முருங்கை மரத்தில் பூசணிக்காய் Tree-Downside

ஞானம். வேதஅறிவு. ஆன்மீக உணர்வு எல்லாம் ஒரு மனிதனுக்கு தேவைதான், ஆனால் இவற்றையெல்லாம் நல்ல முறையில் பயன்படுத்த திடகாத்திரமான சரீரமும் வேண்டுமல்லவாõ உறுதியான உடல் இருந்தால்தான் நாம் பெற்ற ஆன்மீக பொக்கிஷத்தை அனைவருக்கும் பயன்படுத்த கொடுக்க இயலும்,
நாம் பெற்ற செல்வம் அதிகமாக இருந்து நமது ஆயுள் குறைவாக இருந்தால் அதனால் என்ன பிரயோஜனம் என்று அன்று பலர் எண்ணினர், சிறந்த யோகாப்பியாசம் உள்ளவன் சில வருடங்களில் இறந்துவிட்டால் மறுபிறவியில் அவன்விட்ட இடத்திலிருந்து துவங்க வேண்டும், அந்த வாழ்நாளும் குறைவாக இருந்துவிட்டால் அவனது லட்சியமான யோகப்பியாசத்தை அடையாமலே போய்விடக்கூடும், பிறப்பு இறப்புகளால் காலம் புல்லுக்கு பாய்கின்ற நீர் போல் ஆகிவிட்டால் என்ன செய்வது?



முருங்கை மரத்தில் பூசணிக்காய் Aruanachala+sadhu

எனவே வலிமையாகவும். பூரண உடல் நலத்துடனும் இருந்தால்தான் வெகுவிரைவில் ஆன்மீக குறிக்கோளை அடைய முடியும், ஆதலால் உடலை உறுதியாகவும். அழியாமலும் பாதுகாக்க வேண்டுமென்று கருதி பலவித மூலிகைகளையும். ரசங்களையும் அந்த கால ரசவாதிகள் கண்டுபிடித்தார்கள்,
மனித உடலை உருவாக்குவது மனிதர்களின் எண்ணம்தான் என்றும் மனம் அண்டவெளியில் பரவியுள்ள பல சக்திகளை கிரஹிக்க வல்லது என்றும் மனம் தனது வலிமைமிக்க உடல் மூலமாக பல சக்திகளை அண்டவெளியில் இருந்து எடுத்துக் கொள்கிறது என்றும் அவர்கள் கருதினார்கள், தனக்கு வெளியே இருந்துதான் பல சக்திகளை பெறுகிறோம் என்றால் அந்த சக்திகளுக்கு எல்லையே இல்லையல்லவா, அந்த சக்திகளைப் பயன்படுத்தி மனமானது புதிய உடல்களை உருவாக்குகிறது என்றால் ஏன் இருக்கும் உடலையே அதிக நாள் பாதுகாத்துக் கொள்ளமுடியாது என்று அவர்கள் நம்பினார்கள், இதை பதஞ்சலி மகரிஷி வரவேற்று அதற்குப் பல உபாயங்களை கூறியுள்ளார்.





முருங்கை மரத்தில் பூசணிக்காய் Mantra2

பல வருடங்கள் மண்ணுக்குள்ளேயே புதைந்திருந்து வெளியே வந்த ஞானிகளையும். உணவு தண்ணீர் எல்லாவற்றையும் துறந்து காற்றை மட்டுமே உண்டு வாழும் சித்தர்களையும் நாம் காண்கிறோம் அல்லவாõ கந்தகத்திலும். பாதரசத்திலும் பல அற்புத ஆற்றல்கள் மறைந்துள்ளன, இவற்றிலிருந்து செய்யப்படும் மருந்துகள் பல காலம் மனித உடம்பு அழியாமல் இருக்க செய்கிறது, இத்தகைய சில மருந்துகள் பறவை போல் மனிதனை பறக்கவும செய்கிறது,
வால்நீண்ட கருக்குருவி பிச்சு வாங்கி
உரிசையுள்ள ஏரண்டத்
தெண்ணைய் விட்டு
ஓமெனவே மத்தித்து ரவியில் வைக்க
முரசதிரத் திருவேறி மையமாய்
போகும் .......
கோளப்பா மிகப்பேசி சண்டை
செய்வார்
குணமாக நீயங்கும் போகும் போது
வேளப்பா மதன்ரதி போல் இணங்கி
நிற்பரே.....



என்று ரசவாதக் கலையில் தேர்ச்சியுள்ள ஒரு சித்தர் கூறியுள்ளார், இந்த பாடலில் பொருள் என்னவென்றால் காய்ந்த மீன்போல் வால் நீண்டு இருக்கும் கருங்குருவியின் பித்தநீரை எடுத்து ஆமணக்கு எண்ணெய்யுடன் கலந்து அரைத்து அதற்குரிய மந்திர உச்சாடனம் செய்து வெயிலில் வைத்து மைபோல் ஆனபின் அதை நெற்றியில் இட்டுக் கொண்டால் ஆயுதங்கள் எடுத்து ஆர்ப்பரித்து சண்டையிடும் கும்பல்கூட காதலனும் காதலியும் போல் இணைந்து அமைதியுற்று அன்பாக விலகிச் செல்வார்கள்.


முருங்கை மரத்தில் பூசணிக்காய் Kan
இதைப்போன்று எத்தனையோ மருந்து மாயங்கள் தந்திர சாஸ்திரங்ளில் தேர்ச்சியுற்ற இத்தகைய சித்தர்கள் சொல்லிச் சென்றுள்ளனர், இப்படி இவர்கள் அரும்பாடுபட்டு கண்டுபிடித்த இரசாயன பொருட்களும் மருந்தில் கலக்கப்படும் சில உலோகங்களும் இன்று வரை மனித குலத்திற்கு பெரும் நன்மையை தந்து மனிதர்களின் ஆரோக்கியத்தை பேணி வருகிறது,
மருந்துகள் வழியிலும் சித்துக்களை அடையலாம் என்ற பதஞ்சலி மகரிஷி மந்திரங்களின் வழியாகவும் சித்துக்களை அடையலாம் என்றும் கூறுகிறார், மந்திரங்கள் என்பது பிரபஞ்ச வெளியில் ஷனநேரம் கூட ஓய்வில்லாமல் சுற்றிவந்து கொண்டிருக்கும் ஒலி அலையாகும், புலன்களையும் மனதையும் அடக்கி மோனநிலையில் நிலைத்து நின்ற மகரிஷிகள் இந்த மந்திர ஒலி அலையை தமது ஞானக்கண்ணால் கண்டு நமக்கு கூறிச்சென்று இருக்கிறார்கள், இதனால்தான் அவர்களை “மந்திர திரஷ்டா” என்று அழைக்கப்படுகிறார்கள்.



முருங்கை மரத்தில் பூசணிக்காய் Sidha

இந்த மந்திரங்களை சரியான காலநேரத்தில் நியமநிஷ்டையோடு தொடர்ந்து ஜெபித்து வந்தால் அஷ்டமாசித்துகள் அனைத்தையும் நாம்அடையலாம், அதர்வண வேதத்தில் கிருஷ்ண காண்ட சாகைகளில் சொல்லப்பட்டிருக்கிற பல மந்திரங்கள். சௌந்தர்ய லஹரியில் ஸ்ரீவித்யா ரகசியத்தில் சொல்லப்பட்டு இருக்கிற பல மந்திரங்களும் மந்திர சாதகர்கள் பலருக்கு மக்களின் துயர்துடைக்கும் ஓளஷதமாக பயன்பட்டு வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது,
இந்த மந்திரங்களில் உள்ள ஆகர்ஷ்ண சக்தியானது நலிந்து போன எத்தனையோ இதயங்களில் மேடையில் வீசுகின்ற மெல்லிய பூங்காற்றாக இதமளித்து சுகம் தந்திருக்கிறது, கல்வியில் நாட்டமில்லாது குடும்ப நலத்திலும் அக்கறை இல்லாமல் பெற்றோர்களின் சொல்லையுó அலட்சியப்படுத்திய ஒரு இளைஞனைப் பற்றி அவனது தாயார் மிகவும் மன வேதனைப்பட்டு என்னிடம் முறையிட்டார்.



முருங்கை மரத்தில் பூசணிக்காய் DSC00028

ஒரு குடும்பத்தை தூக்கி நிறுத்த வேண்டிய தலைமகன் தரங்கெட்டு போவதை எந்த தாயால்தான் தாங்கிக் கொள்ள இயலும், அவர்துயரை துடைக்க அன்னையிடம் முறையிட்டேன், ஸ்ரீ அன்னையின் உத்தரவுப்படி சௌந்தர்ய லஹரி முதல் பாதத்தில் உள்ள ஸ்லோகம்
ஸவித்ரீபிர் - வாசாம் சசிமணி-
சிலாபங்க - ருசிபிர்
வசின்யாத்யாபிஸ் - த்வாம்ஸவ
ஜனனி ஸஞ்சிந்தயதிய
ஸகர்த்தா காவ்யானாம் பவதி
மஹதாம் பங்கிருசிபிர்
வசோபிர் - வாக்தேவீ - வதன-
கமலா மோத மதுர :

இதில் உள்ள மந்திர அட்சரங்களை பிந்துவின் திரிகோணத்திலும் வசினி. காமேஷ்வரி. மோதினி. விமலா ஆகியவர்களை அஷ்ட கோணம். உள்பத்து கோணம். வெளிபத்து கோணம். 14 கோணம் ஆகியவற்றிலும் அருணா. ஜெயினி. சர்வேஸ்வரி. கௌலினி. ஆகியவர்களையும் புவனேஸ்வரி என்ற ஜகன்மாதாவுடன் இணைத்து கிரமப்படி பூஜை செய்து யந்திரம் தரப்பட்டது, சில நாட்களில் முன்னேற்றகரமான பாதையை நோக்கி அவர்கள் குடும்பம் சென்றது.



முருங்கை மரத்தில் பூசணிக்காய் 1234567

இப்படி மந்திரங்கள் செய்த பல மகத்தான சாதனைகளை கூறிக்கொண்டே செல்லலாம், மந்திரசித்தி ஏற்படுவதற்கு பதஞ்சலி முனிவர் பல வழிமுறைகளைக் கூறி தவங்கள் மூலமாகவும். பல சித்துகளை அடையலாம் என்று கூறுகிறார்,
தவம் என்பது ஒன்றை நோக்கி ஒன்றுக்காக ஆடாமல் அசையாமல் மன ஒருநிலைப்பாட்டுடன் மந்திர ஜபம் செய்வதே ஆகும், புராணங்களில் தேவர்களும். அசுரர்களும். கடுந்தவம் மேற்கொண்டதை நாம் படித்து இருக்கிறோம்
இராவணன் பெற்ற பராக்கிரமங்கள் அனைத்தும் அவனது தவப்பயனால் கிடைத்தவைகள்தான். ராவணன் தனது தவறான செயல்மூலம் அழிந்தான் என்றாலும் அவன் தவவலிமையை வால்மீகியும். ஒட்டக்கூத்தரும் மிக விரிவாக எடுத்து கூறுகிறார்கள், அத்தகைய தவங்களை விருப்பமும். சிரத்தையும் உடையார் வேண்டுமானாலும் எந்த காலத்திலும் செய்யலாம், சுவாமி விவேகானந்தர் தமது ராஜயோக சொற்பொழிவுகளில் இமய சாரல்களிலும். கங்கை சமவெளியிலும் கடுந்தவம் மேற்கொண்ட பலரை பார்த்திருப்பதாக கூறியிருக்கிறார், இன்றுகூட அமர்நாத் குகைகளில் உயிரை உறைய வைக்கும் கடும் குளிரில் கூட உடலில் வஸ்திரமே இல்லாது கடுந்தவம் மேற்றுக்கொள்ளும் பல முனிவர்களைக் காணலாம், அவர்களின் மீது ஈரத்துணியை போர்த்தினால் அது சில நிமிடங்களிலேயே காய்ந்து விடுவதையும் மூலர் வியப்போடு கண்டிருக்கிறார்கள்.



முருங்கை மரத்தில் பூசணிக்காய் Untitled-1+copy மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள். விலங்குகள் உட்பட பல ஜீவராசிகளும் தவம் செய்வதாக நமது புராணங்கள் கூறுகின்றன, இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம், ஆறறிவு படைத்த மனிதன் ஆண்டவனை வழிபடுவது இயற்கை, ஐந்தறிவு ஜீவராசிக்கும் இறைஞானம் ஏற்படுமா? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது
முதலில் அத்தியாத்தில் கூறியுள்ள படி நாம் நம்மை பற்றியே முழுவதும் அறியாமல் இருக்கிறோம், அப்படியிருக்க பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ரகசியங்களையும் அறிந்து கொண்டோம் என கூற இயலாது, இருப்பினும் தற்கால விஞ்ஞானத்தில். பறவைகளும். விலங்குகளும் ஏன் மரம். செடி. கொடிகளும் கூட தங்களுக்குள் பேசி கொண்டிருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளனர், சிந்தனையின் வெளிப்பாடு தான் பேச்சாக அமையும், அதன் அடிப்படையில் அந்த ஜீவராசிகளும் சிந்திக்க வேண்டும், சிந்தனை தானே இறை அனுபுதிக்கு நம்மை இட்டு சேல்கிறது, விலங்குகளும். மரங்களும் செய்கின்ற தவம் நம் புறக்கண்ணுக்கு தெரியவில்லை என்பதனால் அப்படி ஒன்று இல்லை என்று கூறி விடமுடியாது, எனவே பதஞ்சலி முனிவர் கூற்றுப்படியும் நமது புராணங்கள் குறிப்பிட்டுள்ள படியும் அனைத்து ஜீவராசிகளும் தவம் செய்யும் அந்த தவத்தினால் சித்துக்களை பெற்றிருக்கவும் முடியும்.



முருங்கை மரத்தில் பூசணிக்காய் Rapper+guruji+photto+1

அடுத்து சமாதி நிலையில் சித்துக்களைப் பற்றி பார்ப்போம், சமாதி நிலை என்றால் என்ன?
நான் என்கிற அகங்காரத்தை கடந்து பரப்பிரம்ம தரிசனத்தை பெறுவதே சமாதியாகும், நான் என்றால் யார்? என் உடலா? என் உயிரா? (அ) என் உணர்வா நான் உயிர் என்கிறபோது உயிர்போய் விட்டால் என் உயிர்போய் விட்டதாக கூறுகிறார்கள், ஆக நான் போகவில்லை என் உயிர்தான் போகிறது அப்போது நானும் உயிரும் ஒன்றல்ல என்ற நிலை வருகிறது. என் உடலும் உணர்வும் போய்விட்டாலும் இதே நிலை தான் நான் உடலுமல்ல. உணர்வுமல்ல உயிருமல்ல என்கிறபோது நான் யார்? இந்த ரகசியத்தை அறிந்து அனுபூதியில் கரைவதே சமாதியாகும், இதைவேறொரு கோணத்திலும் பார்ப்போம்,
சாப்பிடும்போது உணவை அறிந்தே சாப்பிடுகிறோம், ஆனால் அது நம்மை அறியாமலே ஜீரணமாகிறது, ரத்தத்தோடு கலக்கிறது, ரத்தத்தில் இருந்து பல உறுப்புகளுக்கு சக்தியாக அந்த உணவு செல்கிறது, ஆனால் இந்த செயல்பாடு நமது கட்டளையின்றியே நடக்கிறது, இதை செய்வது யார்? நாம்தான், உண்டதும் நாம்தான், செரிக்க வைத்து சக்தியாக்கி ரத்தத்தோடு ஊற வைப்பதும் நாம்தான், உடலுக்குள் வேறொருவர் இருந்து இதை செய்ய முடியாது அல்லவா? நம் உணர்வின்றி நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் இந்த வகையில் நிருபித்து காட்டலாம், நமக்குள் இதயம் துடிக்கிறது, நம்மால் இதை கட்டுப்படுத்த இயலாது, அதுதன் வழியிலேயே செயல்பட்டு கொண்டிருக்கிறது, ஆனால் சில பயிற்சிகளின் மூலம் இதயத்துடிப்பை குறைக்கவும். சிறிது நேரம் முற்றிலுமாக நிறுத்தவும் நம்மால் முடியும், இதிலிருந்து என்ன தெரிகிறது நமது உணர்வுக்கு புலப்படாத பல செயல்களையும் நாம்தான் செய்கிறோம், ஆனால் நாம் அதை புரிந்து கொள்வதில்லை, இந்த உதாரணங்களை ஒட்டி பார்க்கின்ற போது நமது மனம் 2 நிலைகளில் செயல்படுவதை அறிய முடிகிறது, முதலாவதாக
நினைவு - உணர்வுநிலை இது ஒவ்வொரு செயலும் நான் செய்கிறேன் என்ற உணர்வோடு செய்வது, அடுத்தது. அறியா - உணர்வுநிலை இதில்நான் செய்கிறேன் என்ற எண்ணமில்லாமல் நிகழ்வது, விலங்குகளிடம் கூட இந்த உணர்வற்ற செயல் இயல்புணர்வு (ஐய்ள்ற்ண்ய்ஸ்ரீற்) இருக்கிறது, மிக உயர்ந்த மனிதனிடமும் இந்த உணர்வு நிலை உண்டு,
இந்த 2 நிலைகளையும் தாண்டி மனதிற்கு இன்னொரு நிலை உண்டு, அது உணர்வையும் தாண்டி செல்லும் நிலை மனதிற்குள் புதைந்துள்ள ஆசாபாசங்கள். மோக. ஆவேக. காம. குரோதம். கருணை. அன்பு. கனிவுகள் ஆகியவற்றை கீழே போட்டு நசிக்கி வானத்தை கட்டிபிடிப்பது போன்று இருக்கும் நிலை இதுதான் சமாதியின் முதல்படி எனலாம்,
நம்மிடையே வாழ்ந்து நமது வாழ்விலும். வாக்கிலும் நாம் உயர்வதற்கு வழிகாட்டிய அவதார புருஷர் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியாகவும். கிருஷ்ண பரமாத்மாவகவும் நம்மிடையே நடமாடிய ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸ தேவர் தான் அடைந்த சமாதியின் அனுபவத்தை மிக அழகாகவும். ஆணித்தரமாகவும் நமக்கு கூறி சென்றிருக்கிறார், அவரது அமுத மொழிகளை அறிந்தவர்கள் இந்த அபரோஷ அனுபூதிகளை அறிந்திருப்பார்கள்,
மனமெனும் கோவிலில் எழுந்தருளியிருக்கும் இஷ்ட்டதேவ மூர்த்தியை வீழ்த்தி ஆழ்ந்து செல்லும் போது மிகப்பெரும் பேரொளியை கண்டதாக கூறுகிளார், அந்த பேரொளியின் இயல்பை அவரால் விவரித்து கூற இயலவில்லை, காரணம் அதனை நினைத்தவுடன் மீண்டும் சமாதியில் ஆழ்ந்துவிடுவார், அந்த சமாதி நிலைக்கு சென்றவர்கள் முருங்கை மரத்தில் பூசனிக்காய் காய்க்க வேண்டும் என்று வெறும் வார்த்தையில் சொன்னாலும் காய்த்துவிடும், அவர்கள் வாழ்க்கை முழுவதும் அற்புதங்களும் சித்துக்களும் நிறைந்திருக்கும்,
பதஞ்சலி மகரிஷி மருந்து. மந்திரம். இவைகளால் கிடைக்கும் சித்துகளை தாண்டி தவம். சமாதி இவைகளால் கிடைக்கும் சித்துக்களையே சிலாகித்து கூறுகிறார்,
மருந்து. மந்திரங்களால் சித்துக்களை செய்பவர்கள் இவைகளை தாங்கள் தான் செய்கிறோம் என்கிற அகங்காரத்தில் இறைநிலையை அடையாமல் சம்சார சாகரத்தில் உழன்று கொண்டிருப்பார்கள் என்றும் தவம். சமாதி மூலம் சித்துகளை பெற்றவர்கள் இறைவனே தங்கள் மூலம் நிகழ்த்துகிறான், தாங்கள் வெறும் சிறுதுரும்பு என்ற பராபவ பக்தி நிலையில் ஜனன. மரணங்களை கடந்து பேரின்ப பெருநிலையில் என்றும் நிலைத்திருப்பார்கள்,


sourse http://ruthra-varma.blogspot.com/2010/09/blog-post_12.html




முருங்கை மரத்தில் பூசணிக்காய் Asrwe





எனது இணைய தளம் www.ujiladevi.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக