புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Today at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Today at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Today at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Today at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Today at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Today at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Today at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Today at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Today at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
46 Posts - 48%
heezulia
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
44 Posts - 46%
ஜாஹீதாபானு
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
17 Posts - 2%
prajai
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
5 Posts - 1%
jairam
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_m10நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 11:06 pm

மேலை நாட்டவருக்கு சமமாக நாகரீகம் பெற்றுவிட்டதாக நினைத்துக் கொண்டு பெருநகரங்களில் வசிக்கும் நாம் உண்மையில் நாகரீகம் என்றால் என்ன என்பதை மறந்து வருகிறோம். பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன. மத விஷயங்களில் பின்தங்கி உள்ளோம். எளிமையான வாழ்க்கை முறை மாறி பகட்டான வாழ்க்கையில் விழுந்து வெளிவர முடியாமல் தவிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக ஆடை குறைப்பில் ந(ர)கரவாசிகளாகிய நாம் மற்ற நாட்டவரோடு போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகிறோம். நம் நாட்டின் ஜீவன் கிராமங்களிலும் அதன் வாழ்க்கை முறையிலும் தான் உள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இன்றைக்கு நம் சமுதாயம் முக்கியமாக நகரங்களில் மக்கள் எத்தனை மன அழுத்தத்தோடு வாழ்கிறார்கள் என்பதை அங்கே வசிப்பவர்களை கவனித்துப் பார்த்தால் தெரியும். வாய்விட்டு சிரித்து மகிழ்பவர்கள், பேசுபவர்கள் வெகு குறைவே. ஏனைய இடங்களில் ஒருவித டென்ஷன் நிலவுகிறது. இதனால் பணிவோடு நடந்து கொள்ள இயலாமல் போய் எரிச்சல் வெளிப்படுகிறது. மனிதனை மனிதன் மரியாதை குறைவாக நடத்தும் போக்கு நிறைய காணலாம். ஒரு ஆட்டோ ஓட்டுநராகட்டும், பூ விற்பவராகட்டும், வீட்டு வேலை செய்பவராகட்டும்... அவர்கள் பேச்சும் நடவடிக்கையும் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. முகம் கொடுத்து சிரித்து பேசினால் எங்கே தலையில் மிளகாய் அறைத்து விடுவார்களோ என்கிற பயம். வசதி உள்ளவர்கள் இவர்களிடமிருந்து ஒரு போலிச் சிரிப்பையும் போலி மரியாதையையும் விலைக்கு வாங்கிவிட முடியும். தனக்கு டென்ஷன் இல்லாமல் இருக்கும் என்பதற்காக. ஆனால் அது எல்லோராலும் முடியாது. வாழ்க்கை அப்படி இருக்கவும் கூடாது. மனிதனுக்கும் அவன் குணங்களுக்கும்தான் மரியாதை கொடுக்க வேண்டுமே தவிற அவனுடைய அந்தஸ்துக்கோ அவன் வந்து இறங்கும் காருக்காகவோ அல்ல.

வாழ்க்கையில் எப்போதும் ஒரு ஓட்டம். எந்நேரமும் ஒரு பரபரப்பு. சுறுசுறுப்பாக இருக்கிறோமா என்றால் இல்லை. மனம் எதிலும் லயித்திருப்பதில்லை என்றுதான் அதற்கு பொருள். போகும் வழியில் சிறு கோவில் இருந்தால் அதன் அருகே வந்து அங்கே செறுப்பை போட்டுக் கொண்டே நின்று கொண்டு பிரார்த்தனை செய்கிறோம் நம்மில் பலர். சில குழந்தைகள் கோவிலுக்கு உள்ளேயே பூட்ஸை மாட்டிக் கொண்டு செல்கிறது பள்ளி செல்லும் அவசரத்தில். குழந்தைகள் அறியாமல் செய்கிறார்கள் இந்த பிழைகளை. பெரியவர்களாகிய நாம் இந்த தவறுகளை செய்யும் பொழுது புனிதமான ஒரு இடத்தை அலட்சியப் படுத்துகிறோம், அவமரியாதை செய்கிறோம் என்பதை உணருவதில்லை. கடவுளிடம் லௌகிகமாக எத்தனையோ கோரிக்கைகள் வைக்கின்றோம் பலரும். ஆனால் மனதில் நிம்மதி வேண்டும், திருப்தி வேண்டும் என்று பிராப்த்திப்போரை விரல் விட்டு எண்ணி விடலாம். நம் விண்ணப்பத்தின் வேகம் தாளாமல் கர்பகிரகத்திலிருந்து சிலைகள் பெயர்த்துக் கொண்டு ஓடாமல் இருந்தால் சரி புன்னகை). பாதி விஷயங்களை ஏதோ கடமைக்கு செய்கிறோம். எதற்காக செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்று உள் அர்த்தம் தெரியாமலேயே ஒரு இயந்திரத்தைப் போல செய்கிறோம். முழு மனதோடு உணர்ச்சி பொங்க, நம்பிக்கையோடு செய்யும் செயல்கள் மட்டுமே உண்மையான பலனைத் தரும். திருவிழாக்கள் இப்பொழுதெல்லாம் ஒரு ஃபேஷனாகி விட்டது. தீபாவளி பொங்கல் என்றால் முதலில் மனதில் தோன்றுவது அத்திருநாளின் காரணமோ, பட்டாசோ, கரும்போ அல்ல. தியேட்டரில் என்ன படம் ரிலீஸ் ஆகிறது என்பது தான். வைகுண்ட ஏகாதேசிக்கு ஸ்பெஷலாக ஒரு டிக்கெட்டின் விலைக்கு இரண்டு படங்கள் என்று சலுகைகள் கொடுத்து படம் பார்க்க அழைக்கிறார்கள். நான் என்னவோ இரவு கண்விழித்து பகவத் நாமத்தை படிப்பார்கள் என்று நினைத்தேன். மிய+சியத்தில் இருக்க வேண்டிய என்னை யார் வெளியில் விட்டது??

பகட்டான வாழ்வில் நம்மை சுண்டி இழுப்பது கலியின் வேலை. சமீப காலமாக வீட்டு வேலை செய்பவர்கள் கூட செல்ஃபோனுடன் தான் வருகிறார்கள். ஆனால் கூடவே பஞ்சப் பாட்டையும் காணமுடிகிறது. வீட்டில் உள்ள சிலர் கூட பழையதை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஆனால் இன்றைய தினத்தில் பிச்சை எடுப்பவர்கள் கூட டின்னருக்கு சூடாக சிக்கன் பிரியாணி தான் கேட்கிறார்கள் என்று வேடிக்கையாக பல திரைப்படங்களில் பார்க்கிறோம். நம் தேவைகளை நாமே அவசியமில்லாமல் அதிகரித்துக் கொண்டு வாழ்க்கையை சிக்கலாக்கி கொண்டுள்ளோம். எளிமையான வாழ்வில் உள்ள நிரந்திர இன்பம் வேறு எதிலும் இருப்பதில்லை என்பதை உணர வாழ்வில் அனுபவம் தேவைப்படுகிறது. இரவு பகலாக அலைந்து நாம் தேடி அலைந்த பகட்டான வாழ்வை பெற்றவுடன் திரும்பிப் பார்க்கையில் வேறு எத்தனை மதிப்பிட முடியாத விஷயங்களை தொலைத்துவிட்டோம் என்று ஆராய்ந்தோமானால் நெஞ்சை பதைக்கிறது. பல சமயங்களில் ஆசைப் பட்டதை பெற்றவுடன் சீ ! இவ்வளவுதானா என்று சலிப்புத் தட்டி விடுகிறது. தரமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு குறிக்கோளோடு செயல்படுவதில் ஒருபோதும் தவறில்லை. ஆனால் அது வெறும் பொருளாதாரத்தை மட்டுமே மையமாக கொண்டதாக இருக்கக் கூடாது. அது வாழ்வில் இருக்கும் ருசியை போக்கிவிடும். வெறும் கணிப்பொரியிலும், மருத்துவத்திலும் மட்டும் தானா பொருளாதாரம் இருக்கிறது? கூர்ந்து கவனித்தால் அனைத்து தொழில்களிலுமே லாபகரமா செய்யக்கூடிய உத்திகள் இருக்கின்றன. அத்தனைப் பேரும் என்ஜினியராகவோ, டாக்டராகவோ ஆகிவிட்டால் பின்பு மற்ற பணிகளை கவனிப்பது யார்? இன்றைய தேதியில் பல துறைகளில் வேலை செய்ய ஆட்கள் தட்டுப்பாடாகி விட்டது. நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் விவசாயத் தொழில் உட்பட. ஏர் பிடிப்பதை கவுரவ குறைச்சலாக நினைக்கிறது இந்தத் தலைமுறை. இது எங்கு கொண்டு விடும் என்று சொல்ல அவசியமில்லை.

தேவையான அளவிற்கு உற்பத்தி இருப்பதால் நம் நாட்டில் துணிகள் மலிவு என்று நான் கேட்டதுண்டு. ஏழை எளியோர் கூட தன் உடலை நன்கு மறைத்துக் கொள்ள முடிகிறது. மேலை நாட்டவர் பலரும் நம் நாட்டிற்கு வரும் பொழுது நம் ஆடைகளை விரும்பி அணிகிறார்கள். ஆனால் நம்மில் பலருக்கு நாகரீகம் என்கிற பெயரில் துணிகளில் மட்டும் ஏனோ அந்த ஆண்டவன் பஞ்சத்தை கொடுத்து விட்டான். எனக்குத் தெரிந்து வீட்டிற்குதான் ஜன்னல் வைப்பார்கள் அந்தக் காலத்தில். ஆனால் ஜாக்கெட்டுக்கு ஜன்னல் வைத்து தைக்கிறார்கள் இந்தக் காலத்தில். ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா சேர்ந்து வசிக்க... என்று ஒரு அருமையான பாடல் எனக்கு நினைவுக்கு வருகிறது. திருக்குறள் தோத்துது போங்க!! புன்னகை). சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். கோவிலுக்கு ஒரு அழகிய பெண் வந்திருந்தாள். செல்வச் சீமாட்டி என்று அவள் முகமும் அவள் வந்து இறங்கிய காரும் சொல்லியது. அவள் போட்டிருந்த ஆடையில் முதுகுபுறத்திற்கு முற்றிலுமாக துணி வைக்க மறந்து விட்டான் போலும் அவள் தையல்காரன். துணிக்கடை பொம்மையின் ஆடை சற்று விலகியிருந்தாலே ஜொள்ளு விடும் காலம். கோவிலுக்கு வருபவர்கள் சிலையின் தெய்வீக அழகில் லயிப்பார்களா? இல்லை மேனகை போன்ற இவளின் சிலை வடிவில் லயிப்பார்களா?? நான் அவளை மேனகை என்று வர்ணித்ததிலேயே எங்கள் நாட்டம் எங்கு சென்றது என்று தெரிந்திருக்கும். கோவில் அர்ச்சகர் வந்து எங்களை கொஞ்சம் உலுக்கிய பின்னரே எங்கள் சுயநினைவு திரும்பியது. அவர் பாவம் நாங்கள் என்னவோ தீபாராதனையில் மூழ்கிவிட்டோம் என்று நினைத்தார் போலும். அவருக்கு தெரியுமா உண்மை நிலை?? புன்னகை). டைட்டாக பனியன்கள் அல்லது பேண்டுகள் போட்டுக் கொண்டு வீதிகளில் வலம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. மேலே போட்டுக்கொள்ளும் ஆடைகளின் நிறமும், டிசைனும் மட்டும் தெரிந்தால் போதாதென்று உள்ளாடை டிசைன்கள் கூட வெளியில் தெரிய வேண்டுமாம் சிலருக்கு. கண்மணிகளே... பொம்பள சிரிச்சா போச்சு, பொகையிலை விரிச்சா போச்சு என்றொரு பழமொழி தெரியுமா உங்களுக்கு? அது சரி!! தத்துவம் தான் பிறக்கட்டுமே... தப்பு பண்ணேண்டா!! என்று திரைப்பட பாடல் வரிகள் என்கிற பெயரில் புதுமொழி போதிக்கும் காலத்தில் இதுபோன்ற "பழைய"-மொழிகள் தெரிந்திருக்க நியாயமில்லைதான். நாட்டில் நடக்கும் கற்பழிப்புகளின் எண்ணிக்கை தெரியுமா உங்களுக்கு? அல்லது... செக்ஸ்உஅல் ; ஹராஸ்மென்ட்களின் எண்ணிக்கைதான் தெரியுமா? இதற்கெல்லாம் நீங்களே உங்களுக்கு அழைப்பு விடுத்துக் கொள்கிறீர்கள் அறைகுறை ஆடை கலாசாரத்தின் மூலம். வாழ்க்கையில் எல்லாவற்றையும் அடிபட்டுத் தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் போதாது. புத்திசாலிகள் பிறர் அனுபவங்களைப் பார்த்து தன் வாழ்க்கையை சரியாக நடத்த முயற்சிப்பார்கள். நீங்கள் எப்படி??

நகரங்களில் வெகுவாக பரவி வரும் டிஸ்கோ மேடைகள், மேல் நாட்டுப் பாணியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்கங்கள் நம் கலாசாரத்தை குழி தோண்டி புதைக்க வழி வகுக்குகிறது. கட்டிடமே இடிந்து விழுவது போல் தோன்றும் அளவிற்கு அதிரும் இசையரங்கம் அதில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து கண்மூடித்தனமாக போடும் குதியாட்டம். யார் யாரோடு ஆடுகிறார்கள் என்று கூட தெரியாத நிலை. கூடவே இருபாலர்களுக்கும் மது பானம் மற்றும் சிகரெட்டின் துணை. கணிப்பொறித் தொழிலில் முக்கியமாக கால்-சென்டர் பிரிவு நிறைய வந்துள்ளது சமீபகாலமாக. அதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகியுள்ளது என்றாலும் அதில் சில தீய விளைவுகள் அடங்கியுள்ளது. இந்தப் பணிக்கு நிறைய படித்திருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் சம்பளம் அதிகமாக கிடைக்கிறது. கல்லூரி முடித்தவுடனே இளைஞர்கள் பலர் இந்த வேலையை தொடங்கி விடுகிறார்கள். வாழ்வில் அனுபவம் இல்லாத நேரம், அதே சமயம் இளமை துள்ளும் நேரமும் கூட. வாழ்க்கையை அனுபவிக்க துடிக்கும் வயது. அதற்கு உதவியாக கையில் நிறைய பணம். மனம் டிஸ்கோ மேடைகளை தேடிச் செல்கிறது. நேரங்கெட்ட நேரங்களில் ஆண் பெண் இருபாலர்களும் சேர்ந்து பணி செய்யும் பொழுது தவறுகள் அதிகம் நடக்கிறது. பாய்ஃபிரெண்ட,; கெர்ல் ஃபிரெண்ட் இல்லா விட்டால் குறைவாக பேசும் சக ஊழியர்கள். அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு எல்லாவற்றிற்கும் விடுமுறை விட்டுவிட்டு சகஜமாக பலருக்கும் முன்னால் முத்தமிட்டு மகிழும் துணிச்சல் போன்ற பல விளைவுகளைப் நான் கண்கூட பார்த்திருக்கிறேன். கேட்டால் வாழ்க்கையை அனுபவிக்கிறோம் என்று கூறுவார்கள். அந்தோ பரிதாபம்!! இப்படி ஆட்டம் போட்டவர்களெல்லாம் பொட்டிப் பாம்பாக அடங்கிப் போன கதைகள் எத்தனை உண்டு. போகும் வேகத்தில் நமக்கு எதுவும் தெரிவதில்லை. தடுக்கி விழுந்தால் யோசிக்க வைக்கிறது. வாங்கிய அடியில் சிலரால் மட்டுமே மீண்டு எழ முடிகிறது. பலரது வாழ்க்கை சரி செய்ய முடியாமல் சீரழிந்து விடுகிறது.

மேற்சொன்னவைகள் அனைத்தும் பொதுவாக நகர்புறங்களில் வாழ்பவர்களுக்கே பொருந்தும். கையில் எழுதுகோல் இருக்கிறது என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி எழுதி விடவில்லை. வேதனையாக இருந்தாலும், உண்மையாக நடக்கும் விஷயங்கள் தான். இதில் எத்தனை விஷயங்களை நாம் நேரில் அனுபவித்து நொந்திருக்கிறோம் என்று எண்ணிப் பார்த்தால் நமக்கே விளங்கும். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூற நான் நக்கீரனல்ல. என் சகோதரனோ, சகோதரியோ, நண்பனோ, தோழியோ தவறான பாதையில் சென்றால் அவர்களுக்கு நல்ல அறிவுரை கூறுவது எனக்கு பழக்கம். உங்களையும் அப்படி பாவித்துத்தான் இவைகளைச் சொன்னேன். காலத்தின் கோலம் ஒருபுறம். சரியாக அறிவுரை கூற ஆள் இல்லாதது மறுபுறம். ஆனால் குறைகள் இல்லாத சமுதாயம் ஏது? குறைகள் இல்லாத மனிதன்தான் ஏது? குறைகள் இருப்பதனாலேயே நாம் மனிதர்களாக இருக்கிறோம். இல்லையேல் அனைவரும் ஞானிகளாக அல்லவா மாறியிருப்போம்?

எளிமையான, ஆரோக்கியமான, ஆழ்ந்த அர்த்தமுள்ள வாழ்க்கை முறைகள், அமைதியான சூழல், விருந்தோம்பல், மரியாதை, போன்ற மதிப்பிட முடியாத பண்புகளுக்கு இன்றும் இலக்கணமாக விளங்குகிறது நம் நாட்டிலுள்ள கிராமங்கள். கிராமக் குழந்தைகளின் கல்வி விஷயமாக ஒரு முறை பெரம்பலூர் மாவட்டத்தில் திருமானூர் என்றொரு கிராமம் செல்ல நேரிட்டது. அங்கே ஊரில் உள்ள பெரியவர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவருக்கு முன்-அறிமுகம் இருந்த பலரோடு சேர்ந்து நானும் ஒருவனாக அவர் இல்லத்திற்கு சென்றிருந்தேன். நான் ஒரு விருந்தாளி என்பதைத் தவிற நான் யார், எங்கிருந்து வந்திருக்கிறேன் என்ற முழு விபரம் அவருக்கு தெரியாது. வீட்டிற்கு வந்த அனைவருக்கும் அருமையான விருந்து படைத்தார். எவ்வளவு சொல்லியும் எங்களோடு சேர்ந்து அமர்ந்து உண்ண மறுத்து விட்டார். எங்களை நன்றாக கவனித்து நாங்கள் சாப்பிட்டு எழுந்து கைகளை கழுவ சென்ற போது எங்களுக்கு தண்ணீர் எடுத்து கைகளில் விட்டு பின்பு துடைக்க துண்டு கொடுத்து உபசரித்தார். அதன் பிறகே அவர் சாப்பிட்டார். அதோடு இல்லாமல் காலையிலிருந்து விரதம், அவர் ஒன்றும் சாப்பிடவில்லை என்கிற விபரம் பின்புதான் எங்களுக்கு தெரிய வந்தது. அப்பொழுது மணி மூன்று. என் மெய் சிலிர்த்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு உபசாரத்தை நான் கண்டதேயில்லை. அப்பொழுது எனக்கு புரிந்த ஒரு விஷயம் - அவர் ஊரில், வசதியில் மட்டும் பெரியவர் அல்ல மதிப்பிலும் மரியாதையிலும் பெரியவர் என்று. அவரைக் காட்டிலும் வயதில் மிகச் சிறியவனாகிய எனக்கு, என் எச்சில் கைகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று அவருக்கு என்ன அவசியம்?? நான் ஒரு அமெரிக்கவாசி என்பதற்காக கிடைத்த மரியாதையோ அல்லது என் அந்தஸ்திற்காக கிடைத்த போலியான உபசாரமோ கிடையாது. என்னைப் பற்றிய விபரங்கள் அவருக்கு அந்த நேரத்தில் தெரியாது என்று ஏற்கனவே சொன்னேன். அங்கு ஒரு சாதாரண மணிதனுக்கு கிடைத்த மரியாதை அது. ஒரு விருந்தினனுக்கு கிடைத்த உபசாரம் அது. ஆதிதி தேவோ பவ! ஏன்ற வாக்கு அங்கே மெய்ப்பிக்கப்பட்டதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். நம் நாட்டின் விருந்தோம்பல் பண்பு வேறு எங்கு வரும்?? இதே போன்று வேறு ஒரு கிராமத்தில் ஒருவர் வீட்டிற்கு முன் அறிவிப்பு இல்லாமலேயே சாப்பிட செல்ல வேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. வீட்டிற்கு திடீரென ஒரு விருந்தாளி வந்துள்ளார் என்றதும், அந்த குடும்பத் தலைவரின் முகத்தில் ஒரு வேகத்தை பார்க்கணுமே... பசியோடு வந்தவரை கவனிப்பதற்காக, இங்கு ஓடுகிறார் அங்கு ஓடுகிறார்... அதை எடுத்து வைக்கிறார் இதை எடுத்து வைக்கிறார்.... அத்தனை ஒரு மரியாதை, வீட்டிற்கு வந்தவரை புன்முறுவலோடு கவனித்து உபசரிப்பதில். இந்த சுவையான அனுபவங்கள் என்றும் பசுமையாக என் மனதில் நிற்கும். எப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் மெய் சிலிர்க்கும். கிராமத்தில் ஒரு சாவு ஏற்பட்டால் அந்த கிராமம் முழுவதும் துக்கத்திற்கு செல்வது வழக்கமாம், பஞ்சாயத்து தலைவர் உட்பட. மக்கள் அப்படி கூடி வாழ்கிறார்கள் அங்கே. பட்டினத்தில், தாயே செத்தாலும் அழுவதில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. மேலும் கனிவான பேச்சு, தெய்வ விஷயங்களில் முழு அக்கரை, வரைமுறை தாண்டா ஆடை அணிகலன்கள் என்று பல விஷயங்களில் கிராமங்கள் இன்றும் ஒரு எடுத்துக்காட்டாகவே விளங்குகிறது. நாம், நம் கிராமங்களையும், கிராம மக்களையும் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் எண்ணற்றவை.

நம் நாட்டின் உயிரோட்டமான பண்பும், கலாசாரமும், வாழ்க்கை வழி முறைகளும் நாகரீகம் என்கிற பெயரில் நகரவாசிகளாகிய நம்மிடையே செத்துக் கொண்டிருக்கிறது. அந்த நாடித்துடிப்பு நின்று விடாமல் இருக்க நாம் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உண்டு. அதை ஒவ்வொருவரும் உணரும் நேரம் எப்பொழுது வரும்??

சரவணன் சுந்தரேசன்



நாகரீகமே... நீ உயிர்த்தெழுவாயோ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 15, 2010 9:03 am

கண்முன் நடக்கும் கலாச்சார சீர்கேட்டை தட்டி கேட்க்க இயலாமல் தலை குனிந்து செல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது அண்ணா... தங்கள் கட்டுரையின் ஆதங்கம் புரிகிறது..
" தரமான வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு குறிக்கோளோடு செயல்படுவதில் ஒருபோதும் தவறில்லை" கிராம புற பெண்கள் கல்லுரி மற்றும் வேலை காரணமாக நகர்புறங்களுக்கு வரும் பொழுது நகர பெண்கள் சிலரின் பகட்டான வாழ்கை பார்த்து அவர்களை போல் தாங்களும் வாழ எண்ணி இருக்கும் இன்பமதை தொலைத்து விட்டு புதிய இன்பத்தில் சிக்கி சிரழிந்த பின் தான் கலாச்சாரத்தில் அருமைஉணர்கின்றனர் அண்ணா...



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 9:08 am

பதிவுக்கு நன்றி அண்ணா ....

இந்நிலையும் மாறும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக