புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_m10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10 
30 Posts - 50%
heezulia
இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_m10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_m10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_m10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10 
72 Posts - 57%
heezulia
இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_m10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_m10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_m10இயற்கை மருத்துவம்  (நோய் ஒன்றே; பல அல்ல  ) Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை மருத்துவம் (நோய் ஒன்றே; பல அல்ல )


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 28, 2010 5:32 am

நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கென அமைந்தது

உலகிலுள்ள எல்லா உயி¡¢னங்களின் உடம்பைப் போல மனித உடம்பும் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும் தன்மையது. நிலையற்ற தன் இயல்பைக் கண்ட மெய் ஞானியர் சிலரும், சித்தர்கள் பலரும் இதனை இழிவாகவே கருதியுள்ளனர். சைவ சமயக் குறவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் இதனை,

பொத்தை யூன்கவர் புழுப்பொதிந்துளுத்தகம்
பொழுகிய பொய்க்கூரை
இத்தை மெய்யெனக் கருதி நின்றிடர் கடற்
கழித்தலைப் படுவேனை

என்று பாடுகின்றார். பிறரும் இதனைப் ‘புன்புலால் யாக்கை’ என்றும் காற்றடைத்த பை என்றும் கருதி அலட்சியம் செய்துள்ளனர். திருமூலர் போன்ற யோகியர் கூட ‘உடம்பினை முன்னம்’ இழுக்கென்றிருந்திருக்கின்றனர். அவர்கள் இவ்வுடம்புள்ளே ‘உத்தமன்’ இருப்பதைக் கண்ட பின்னரே உடம்பினை ஓம்பும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்துள்ளனர். ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ என்பது இவர்கள் கண்ட உண்மை ஊன் உடம்பு ஆலயம், இதனை உ¡¢ய வகையில் போற்றிப் பேண வேண்டுமென்பது இவர்களது உறுதியான முடிவு.

மனித உடல் அற்புதமான இயந்திரம். இது புரதம், மாவுப் பொருள், சர்க்கரை, கொழுப்பு, தாது உப்புக்கள், தண்ணீர் முதலியவைகளாலும் ஓரளவு பலவித வைட்டமின்கள் சேர்க்கையாலும் ஆனது என்று புறக்கருவிகள் கொண்டு ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். இந்தப் பொருள்கள் ரசாயன முறையில் கூடுவதாலேயே உயிரும் தோன்றுகிறது. அதற்கு தனியே இருப்புக் கிடையாது என்பது இவர்களது கூற்று. மெய்ஞானியர்களோ இதற்கு மாறாக இப்பொருள்களைக் கூட்டுவதே உயிர்தான் இவ்வுயிரைப் பலரும் பல பெயா¢ட்டு அழைக்கின்றனர். ஜீவன் என்றும், ஆத்மா என்றும், பிராணசக்தி என்றும் பலர் பலவாறாகக் கூறுகின்றனர். உடல் பஞ்ச பூதங்களாலானது என்பது இவர்கள் கண்டது பஞ்சபூதங்களே புரதம், சர்க்கரைப்பொருள், மாவுப் பொருள், கொழுப்பு, தாதுப்பொருள், வைட்டமின் முதலியவையாக உருவெடுத்துள்ளன. இப்பொருட்கள் எல்லாம் சேர்ந்து 30 சதவிகிதம்தான். உடம்பின் எடையில் எஞ்சிய எழுபது சதவிகிதமும் தண்ணீர் இது மட்டுமல்லாமல் காற்றும் ஆகாயமும் மனித யாக்கையை பிணைத்து வைத்து இயக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

திருவள்ளுவர் போன்றவர்கள் வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள். பஞ்சபூதங்களைத்தான் இவர்கள் முக்கூறிட்டுக் கூறுகின்றனர். ஆகாயமும் காற்றும் சேர்ந்து வாதமாகவும், சூடு, பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும், கபமாகவும் பெயா¢டப்படுகின்றன. ஒன்றை ஐந்தாகவும், மூன்றாகவும் பகுத்துப் பேசுவது நமது மரபு. தத்துவங்களை முப்பத்தாறாகவும், தொண்ணூற்றாறாகவும் பேசுவதும் உண்டு. வி¡¢தலும், சுருங்குதலும் வசதி கருதியேயாகும்.

உண்மை என்னவென்றால் நுண்மையிலும் நுண்மையான ஒன்றாகிய இம்முதற்பொருளின் தன்மை அல்லது குணம். அறிவும் ஆனந்தமும் உடையது என்று பருமையிலிருந்து உண்மைக்கு ஆழ்ந்த தியானத்தின் மூலம் சென்ற சித்தர்கள் கண்டு கூறுகின்றனர்.

இந்நுண் பொருளே தனது ஆற்றலினால் அருவப் பொருளாகவும், அருவுருவப் பொருளாகவும், உருவம் தாங்கிய பருப்பொருட்களாகவும் மலர்ந்துள்ளது. இதனைத் திருமூலர் திருமந்திரப் பாடல் ஒன்றில் தெளிவாக விளக்குகின்றார்.
'ஒன்றவன்தானே, ரண்டவன் இன்னருள்
மூன்றுள் நின்றனன், நான்கு உணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு வி¡¢ந்தனன், ஏழு உண்பர்ச்
சென்றனன், தானிருந்தான் உணர்ந்து எட்டேன்’
இவ்வாறு மூலப்பொருளாகிய அவ்வொன்றே பலவாக உருவெடுத்துள்ளது.

இரத்தம், எலும்பு, தசை, கொழுப்பு, நரம்பு, ரசம் முதலியவற்றின் கூட்டால் ஆனது இவ்வுடம்பு என்பது சாதாரண மக்களும் பார்த்துத் தொ¢ந்து கொள்ளக்கூடியது. இதனையே துவர்ப்பு, உப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, காரம் என்ற அறுசுவைகளின் சேர்க்கையாலும் உண்டாவது எனலாம். துவர்ப்பும் புளிப்பும் வாதம்; உப்பும் கசப்பும் பித்தம்; இனிப்பும் காரமும் கபம் என முப்பொருளாகப் பி¡¢க்கலாம். இப்படி பி¡¢த்தறிதல் உடல் ஓம்பலுக்கு உதவியாக இருக்கும்.

இந்த உடம்பு தன்னிறைவுடையது; தானியங்கி. இதனுள் நாம் உணவுப்பண்டங்களைப் போட்டால், அவற்றை உயிர் பண்டங்களாக்கி, உடல் வளர்ச்சிக்கும் வேலையால் உண்டாகும், குறைவை நிரப்புவதற்கும் உடல் தானே பயன்படுத்திக் கொள்கின்றது.

உடல் ஒரு அற்புத இயந்திரம். இதனைப் பார்த்தே பிற இயந்திரங்களும் ஆக்கப்பட்டுள்ளன என்றால் அது மிகையாகாது. இது தனக்கு வேண்டிய பொருள்களைத்தானே உண்டாக்கிக் கொள்ளும் ஒரு பொ¢ய பாக்டரி. இதில் எத்தனையோ பி¡¢வுகள் இயங்குகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பணியாற்றுவதை எண்ணி எண்ணி வியப்பிலாழ்கின்றனர் அறிஞர்.

பஞ்சபூதங்கள் அல்லது வாத, பித்த, கபம் என்னும் முப்பொருள்களும் சா¢யான அளவில் இருப்பதே ஆரோக்கியநிலை. இதில் ஏதாவதொன்று மிகுதியாகவோ, குறைவாகவோ இருப்பது நோயின் அறிகுறி. இதனைத்தான் திருவள்ளுவர் ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்கின்றனர். இம்மூன்றின் சமநிலை தவறியபோது உடம்புக்குத் துன்பம் உண்டாகும். மிகுதியானதைக் குறைப்பதும் குறைவை நிறைப்பதும் ஆரோக்கியத்திற்கு வழிகோலும்.

அற்புதமான தானியங்கியாகிய இவ்வுடலில் சமநிலை ஏன் தவறுகின்றது? மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தால் சமநிலை தவற இடமிருக்காது. ஆனால் பெரும்பாலோர் இயற்கைக்கு முரணாக வாழ்கின்றனர். எனவே நோயின் பெருக்கம். சூ¡¢யனுடன் எழுந்து வேலைகளைக் கவனித்துப் பின் சூ¡¢யன் மறையும் போது ஓய்வு கொள்வது இயற்கை வாழ்வு. நல்ல காற்றோட்டம் இல்லாததும் இயற்கை ஒளியும் இல்லாததுமான செயற்கைச் சூழலில் நமது வேலைகள் நடக்கின்றன. நமது நடை, உடை, பாவனைகளும் இயற்கை அன்னையிடமிருந்து நம்மைப் பி¡¢த்து வைப்பனவாகவே உள்ளன. எனவே போதுமான ஆகாயக்கூறு நமது உடலில் இல்லாதபோது வலியும், துன்பமும் ஏற்படுவது இயல்பே.

நமது உணவுப் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் செயற்கை மயமாக ஆகியுள்ளது. தேவையைக் கருதியில்லாமல் நாவின் சுவை கருதிச் சாப்பிடுகின்றோம். பசித்துப் புசிப்பதில்லை. காலம் கருதிச் சாப்பிடுகின்றோம். எந்த உணவு எந்தக் குறைவை நிறைவு செய்யும் என்ற அறிவும் நம்மில் மிகப்பெரும்பாலோருக்கு இல்லை. இயற்கை உணவின் இடத்தை செயற்கை உணவு பிடித்துக்கொண்டுள்ளது. பல தடவைகள் உண்கின்றோம். அவசர அவசரமாக உண்கின்றோம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதில்லை. புதிய செயற்கைப் பானங்கள் பல பழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றால் உடம்புக்கு வேண்டாத அளவு சிலவகை உணவுகள் சேர்ந்து விடுகின்றது. வேறு சிலவகை இல்லாது போகின்றன. பயன் நோய் நிலை. இதனை நீக்க மருத்துவர்களையும் மருந்துகளையும் நாடுகின்றோம். நம்மீது கருணையால் திருவள்ளுவர் நோயின்றி வாழ நமக்கு ஒரு எளிய வழி காட்டுகின்றார்.

‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்’.

பசித்துப் புசித்தலும் அற்றதறிந்து அருந்துதலும் இயற்கை வழி இயற்கையுடன் இயைந்து வாழவேண்டும் என்பது மருந்தில்லா மருத்துவமாகிய இயற்கை மருத்துவ தத்துவங்களில் அடிப்படையானது. இதனை அறிந்து கடைப்பிடித்தால் ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.

உடலில் பஞ்சபூதங்களின் சேர்க்கை அதனதன் விகிதாச்சாரப்படி சமநிலையில் இருக்கும்போது நமது உடம்பு இருப்பதே நமக்குத் தொ¢யாது. சமநிலை தவறும்போதுதான் கையோ, காலோ, மூக்கோ, மார்போ இருப்பது நமக்குத் தோன்றுகிறது. இது ஆரோக்கியம் குறைந்த நிலை. ஆரோக்கியமாக இருக்கும் மனிதன் எப்போதும் ஆனந்தமாக இருப்பான். இதைத்தான் அன்றாட வாழ்க்கையில் நாம் இயற்கை விதிகளுக்கு முரணான பழக்கவழக்கங்களிலும், செயல்களிலும், சிந்தனைகளிலும் ஈடுபடுகின்றோம். இதனால் துன்பம் ஏற்படுகின்றது. இக்கோணல் வழியிலிருந்து திரும்பி நேர்மையான இயற்கை வழியில் சிக்கலற்ற எளிமையான பாதையில் செல்லும் இயற்கை வாழ்வின் ரகசியத்தைக் காட்டுவதே இயற்கை மருத்துவத்தின் குறிக்கோளாகும்.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 28, 2010 5:33 am

ஆரோக்கிய வாழ்க்கை எது?

ஒருவர் மற்றொருவரைக் காணும்பொழுது ‘நலமா?’ என்று கேட்கின்றோம். அவரும் நலமே என்று பதில் அளிக்கிறார். தன் பொருள் என்ன? மனிதனுக்கு பருஉடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்று உடல்கள் இருக்கின்றன. நமது புறக்கண்ணிற்குத் தோன்றுவது பருஉடல் ஒன்றேதான். எனினும் இப்பரு உடலின் உள்ளும் புறமுமாக மற்ற இரு உடல்களும் சுரந்தும் மறைந்தும் இருக்கின்றன என்பது சிந்திப்பவர்களுக்கு இலகுவில் புலப்படும் இந்த மூன்று உடல்களும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி, ஒரேவழி உராய்தலின்றி இயங்குவதிலே நலவாழ்வு அமைந்துள்ளது.

நல்வாழ்வை ஆரோக்கியம் என்றும் சுகம் என்றும் கூறுகின்றோம். ஆரோக்கியம் தான் ஆக்க வாழ்விற்கு அடிப்படையானது. நலமற்ற விவசாயி தன்கு வேறு எத்தனை வசதிகளிருப்பினும் விளைவைப் பெருக்க முடியாது. எத்தனை நவீன இயந்திரங்கள் இருந்தபோதிலும் நலமில்லாத உழைப்பாளியால் தொழில் துறையில் நுகர்வுப் பொருள்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியாது. விவசாயத் துறையிலும், தொழில் துறையிலும் வளர்ச்சி இருந்தபோதிலும் நலம் இல்லையேல் நம்மால் வாழ்க்கை இன்பங்களை அனுபவிப்பது இயலாததாகும். குடும்ப சமூக வாழ்க்கைகளையும் கூட செவ்வனே நடத்த முடியாது.

பொதுவாக, நோயின்மையே ஆரோக்கியம் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் ஆரோக்கியத்திற்கு மூன்று பக்கங்கள் இருக்கின்றன. ஒரு பொருளுக்கு அகலம், நீளம், உயரம் என்ற மூன்று பக்கங்கள் இருப்பது போல ஆரோக்கியத்திற்கு உடல், மனம், சமூகம் என்ற மூன்று பக்கங்கள் உண்டு. உடற்குறைமனதைப் பாதிக்கும். மன நிலையும் உடலைப் பாதிக்கவே செய்யும். சமூகச்சூழல் ரண்டையும் பாதிக்கும். இம்மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. அதுபோலவே ஆன்ம உணர்வும், உடலையும், மனதையும் மாற்றவல்லது.

மனிதர்களுக்கு நல்வாழ்வு கொடுக்க எண்ணி அரசுகள் மருந்தகங்களைப் பெரும் செலவில் நடத்துகின்றன. ஆனால் மனக்குறைவின் காரணமாகவும், சமூகச் சூழலின் போக்குகளாலும் மனிதனுக்கு சுகக் குறைவு ஏற்படுகிறது. சுகக்குறைவை நோயென நினைத்து ஒருவன் மருந்தகங்களுக்குச் சென்றால் பல பா¢சோதனைகளுக்குப் பின்னால் உடலும், உடலுறுப்புகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவே டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால் பாவம்! அவன் என்ன செய்வான்? சோர்வும், பிணிநிலையும் அவனை வருத்துகின்றன. எல்லாம் சா¢யாய் இருக்கிறது. ஆனால் உடலால் உழைக்க முடியவில்லையே என்று வருந்துகின்றான். நவீன முறைகளில் இதனை மனநோய் என்று சொல்கின்றனர். சில சமயங்களில் இந்த மனநோய் உடலையும் சமூக வாழ்வையும் கூடப் பாதிக்கும். மனதிலே ஆரம்பித்தது இருதயநோயாக மாறுகிறது. மனநோய் நகர வாழ்வில் நாம் நாள்தோறும் காணும் உண்மை ஏதாவது ஒரு காரணத்தால் கோபம் உண்டாகிறது. இது மனதிலேதான் ஆரம்பிக்கிறது. முகம் சிவப்பதும், நாடி நரம்புகள் துடிதுடிப்பதும், நிலை தடுமாறி தாறுமாறாகப் பேசுவதும் கோபத்தின் விளைவுகளாகும். அது இதற்கு மேலும் சென்று எதி¡¢ல் உள்ளவர்களைக் கையிற் கிடைத்ததைக் கொண்டு அடித்து விபா£தமாகக் கொலையில் முடிவதைக்கூட நாம் கேட்டுள்ளோம். கோபத்தில் பித்தநீர் அமிலத்தன்மை அடைந்து உடல் அழற்சியினை ஏற்படுத்துகின்றது. அதனால் ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

திடீரென ஏற்படும் பயம், சிலசமயங்களில் இதயத் துடிப்பை நிறுத்தும் பயத்தால் உடம்பு நடுக்குறும். உணர்ச்சி மிகும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்கள் ஏற்படும். குருதியில் சர்க்கரையின் அளவுமிகுந்து ஏற்கனவே நீரழிவு நோயுள்ளவர்களாயிருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். பயத்தால் வயிற்றோட்டம் உண்டாகலாம். சிறுவர்கள் பயமுறுத்தலுக்கு ஆளாகும்போது நடுநடுங்கி, நரம்பு தளர்ந்து சிறுநீர் கழிக்கின்றனர். எதிர்மறையான வெறுப்பு, திகைப்பு, பயம் போன்றவை உடலை உலரச்செய்து, குருதி குன்றி பலத்தை போலவே அன்பு, ஆதரவு, நம்பிக்கை, உற்சாகம் போன்ற நல்லுணர்வுகள் உடலை வளர்த்து இன்ப வாழ்வைக் கொடுக்கும்.

சுகம் பிறரால் கொடுபடக்கூடியதல்ல. அதனை நாமேதான் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். இதற்கு வேண்டியவை எல்லாம் சுயஅறிவும், சா¢யான வழி நடத்தலுமேயாகும். தன்னுடைய சூழலுடன் இணைந்து வாழும் ஒருவன் எப்பொழுதுமே மகிழ்ச்சியுடனும், நலமுடனும் இருக்க முடியும். மாறிவரும் சமூக வாழ்வு மக்களின் உடல், மனவாழ்வினைப் பாதிப்பதைப் போலவே மக்களின் உடல் மனவாழ்வு சூழலையும் பாதிக்கும் இன்றைய மாறிவரும் தொழில் நுணுக்க வளர்ச்சி தனி வாழ்வையும், இல்வாழ்க்கையையும் பொ¢ய அளவில் மாற்றி உள்ளது. இயந்திரங்களால் கடின உழைப்பை நீக்கிக்கொள்ள வசதியும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பலர் பார்த்தையே பார்த்தும், செய்ததையே செய்தும் சலிப்படைந்து போயிருக்கிறார்கள். கூடிவிளையாடும் ஆடல், பாடல்களும், கூத்துகளும், திருவிழாக்களும் சிலரது வாழ்வில் புத்துணர்வு அளித்து மகிழ்ச்சியூட்டுகின்றனவாயினும், நவீன வாழ்க்கை முறை எதிர்பாராத புத்தம் புதிய நோய்நொடிகளையும் உண்டு பண்ணி மனிதனை வேண்டாத பழக்கவழக்கங்களுக்கு ஆளாகியுள்ளன.

நலவாழ்வைப் பாதிப்பவைகளை 1. பரம்பரை, 2. சூழ்நிலை, 3. தனியாள் என்று மூன்று விதமாகப் பி¡¢க்கலாம். பரம்பரையிலிருந்து பெறுகிற நோய்நொடிகள், எண்ணப் போக்குகள் முதலியன உடலைப் பாதிக்கும் சூழ்நிலையும் மனித வாழ்வைப் பாதிக்கிறது. கெட்ட காற்று, கெட்ட தண்ணீர் போன்றவை இன்றைய நிலையில் மனிதனுடைய ஆரோக்கியத்தைப் பாதிப்பதில் முக்கிய இடம் பெறுகின்றன. தனிப்பட்டவர்களும், தங்களுடைய வேண்டாத பழக்க வழக்கங்களால் தமக்கும் சமூகத்திலுள்ள மற்றவர்களுக்கும் துன்பம் விளைவிப்பவர்களாக மாறுகின்றனர். இதைப்போலவே நலவாழ்வை நிர்ணயிப்பவைகளையும் மனநிலை, ஆன்மநிலை, உடல்நிலை என்று முக்கூறாகப் பி¡¢க்கலாம். இம்மூன்று நிலைகளையும் செம்மைப்படுத்துவது கல்வி, கேள்விகளேயாகும்.


நோய் ஒன்றே; பல அல்லஇயற்கை மருத்துவம் உலகில் இப்பொழுது அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானம் வளர்ந்துள்ள மேலை நாடுகளிலும் அறிஞர்கள் இதனை வரவேற்று ஆதா¢க்க ஆரம்பித்துள்ளனர். ஆராய்ச்சி மனப்பான்மையுடைய அலோபதி வைத்தியர்கள் கூட இயற்கை முறைகளைக் கையாள ஆரம்பித்துள்ளனர். எனினும் இவர்கள் இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைத் தொ¢ந்து கொள்ளவோ, தொ¢ந்தாலும் அவற்றில் நம்பிக்கை பெருகும் அளவு தெளிவு பெறவோ முயலுவதில்லை. இதன் விளைவாகத்தான் சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவர்கள் ஊசிபோடுதல், அலோபதி பொது மருந்துகள் ஆகியவைகளைக் கையாளுகிறார்கள். அதைப்போலவே இயற்கை மருத்துவத்தில் உள்ள முறைகளில் சிலவற்றை ஹைட்ரோபதி, குரோமோபதி பிஸியோதெரபி என்கிற பெயர்களால் ஆங்கில முறை மருத்துவர்களான அலோபதிக் முறை மருத்துவர்களும் கையாளுகின்றனர். இவற்றால் முழுப்பயன் கிடைப்பது அ¡¢தேயாகும். இயற்கை மருத்துவத்திற்கு அதன் அடிப்படைத் தத்துவங்களின் அறிவும் தெளிவும் மிக இன்றியமையாதது எனவே முந்திய அத்தியாயங்களில் ஒன்றாகிய "நமது உடல் இயற்கையோடு இயைந்து வாழ்வதெற்கென அமைந்தது" என்பதைப் பற்றிப் பார்த்தோம். இங்கு "நோய் ஒன்றே பல அல்ல" என்னும் இன்னமொரு அடிப்படை உண்மையைப் பற்றி ஆராய்வோம்.





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 28, 2010 5:34 am

நோய் ஒன்றுதான் என்றால் யாரும் ஆச்சா¢யப்படுவார்கள். அனுபவத்தில் தலையிலும், மார்பிலும், வயிற்றிலும் கைகால்களிலும், ஏன் அங்க அவயவங்கள் அனைத்திலும் வலி வந்து நம்மை வாட்டுவதை யார்தான் அறியார்? நோய்கள் பல என்பது தொன்றுதொட்டு பாமரர் முதல் அறிஞர் வரை எவரும் அறிந்த உண்மை இதனை மறுத்து நோய் ஒன்றுதான் என்பதன் பொருள் என்ன? இயற்கை மருத்துவர்கள் உலகை ஏமாற்ற விரும்புகின்றனரா? அப்படி இல்லை அவர்கள் கூட காதில் வலி ஏற்பட்டால் அதைக் காதுவலி என்றும் வயிற்று வலி ஏற்பட்டால் அதனை வயிற்று வலி என்றும் சொல்லுகின்றனர். உள்ளே உள்ள பொருள்கள் வாய்வழியாக வந்தால் அதை வாந்தி என்றும், மலவாய்வழியாக வந்தால் அதைக் கிராணி அல்லது பேதி என்றும், துன்பம் தோன்றும் இடம், இயல்பு முதலியவற்றை ஒட்டிப் போ¢ட்டழைக்கின்றனர். பெயர்களே நோய்கள் அல்ல. இயற்கை வாழ்வுக்கு அவ்வழியில் உடலில் தோன்றும் துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்கும் நோய்நாடலும் இன்றியமையாதன இதை உணர்ந்த பொய்யாமொழிப் புலவரும்
"நோய் நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"
என்ற மருத்துவர் கடமையினை விளக்குகிறார்.

இயற்கை வாழ்வைப் போற்றும் பலர் நோய் நாடவே அவசியமில்லை என்ற கருத்துக் கொண்டுள்ளார்கள் வேறுசிலர் இதற்கு மாறாக நோய்நாடலை ஒரு சுவையாகவே வளர்ந்துள்ளனர். புற ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தமது வாழ்க்கைத்தொழிலாகவே மருத்துவத்தைக் கொண்டுள்ள நிபுணர்கள் செய்வதையே தாங்களும் செய்கின்றனர். மிகச் சிலர்தான் வள்ளுவர் சொல்லுகின்ற நோய்முதல் நாடலை கருத்தில் கொண்டு முதலில் கவனம் செலுத்துகின்றனர். இக்காலத்தில் நோய்நாடும் முறை நன்க வளர்ந்துள்ளது. நோய் முதல் நாடும் முறை போதிய அளவுக்கு வளரவில்லை. இது ஆராய்ச்சிக்கு¡¢ய ஒன்று.

தலைவலி என்றவுடன் அது எந்த இடத்தில் நெற்றியிலா, வல, இடப்பக்க பொட்டுக்களிலா, முண்மண்டையிலா, பின் மண்டையிலா என்று கேட்டு அறிந்து அந்த இடத்தில் பற்றுப் போடுகிறவர்கள் பல வலி உண்டாவது அதிகச் சூட்டினாலா, நரம்புத்துடிப்பினாலா என்று தொ¢ந்து வியர்வை உண்டு பண்ணும் ஒரு மருந்தைக் கொடுத்து சூட்டைக் குறைத்தோ, நரம்புத் துடிப்பினைத் தளர்த்தி விடும் உணர்வை மறத்துப்போகச் செய்யும் மயக்க மருந்துகளைக் கொடுத்தோ, குணப்படுத்துவோரும் உண்டு. ஆனால் இவற்றால் நோய் நீங்குவதில்லை. மேலும் இவர்கள் நோய் நாடினார்களேயல்லாமல் நோய்முன் நாடவில்லை. தலைவலி எங்கு என்று கண்டார்கள். ஏன் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுமையில்லாமல் கண்டிருந்தால் இன்னும் சிறிது, ஆழமாகச் சென்று உண்மையைக் கண்டிருப்பார்கள் உலகில் உள்ள எல்லாபொருள்களும் அசைகின்றன. ஆண்டவன் கூட ஆடித்தான் தா¢சனம் கொடுக்கிறான் இவன் கூத்துப்பெருமாள் ஆடும் கடவுள் ஒவ்வொன்றின் அசைவிற்கும் ஒரு அளவு உண்டு ஒரு வரையறையும் உண்டு கூடினாலோ, குறைந்தாலோ இசைவு குறைந்து துன்பம் நோ¢டும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் இசையில் இன்பமும் ஆனந்தமும் பெருங்கெடுக்கின்றது, குறையும்போது, கூடும்போதோ துன்பமும் நோயும் தோன்றும்.

தலையில் உள்ள நரம்புத் துடிப்பு ஏன் கூடவோ குறையவோ செய்கின்றது? உடம்பின் தேவைக்கு நாம் உணவு உண்கின்றோம் அதில் வேண்டியதை எடுத்துக் கொண்டு வேண்டாததை விட்டு விடுகின்றது வேண்டாதது வெளியேற்றப்பட வேண்டும். இவை ஏதோ ஒரு காரணத்தால் அவ்வப்போது வெளியேற்றப்படாமல் உள்ளே வயிற்றிலோ, மலக்குடலிலோ தேங்கி நின்றால் அவை அழுகி அல்லது புளித்து நச்சுக் காற்றாகவும் நச்சுப் பொருள்களாகவும் மாறுகின்றன. இவையும் வெளியேறவே முயல்கின்றன. இவை வெளியேறும் முயற்சியில் அவ்வப்பகுதியில் துன்பம் ஏற்படுவதைதான் அந்தந்த இடத்தையும் வெளியேறும் பாங்கினையும் ஒட்டி வெவ்வேறு பெயர் கொடுக்கின்றோம். எனவே வேண்டாத பொருள்கள் வெளியேறும் முயற்சிதான் நோய் இது ஒன்றுதான் உண்மை பிறவெல்லாம் பெயர்களேயாகும். பெயர்கள் பலவாயினும் நோய் ஒன்றுதான் இதனை ஆங்கிலத்தில் "யூனிட்டி ஆப் டிஸ்ஸிஸஸ்" (Unity of Diseases)என்கின்றனர். மனித இனம் ஒன்றே எனினும் குலத்தாலும் நிறத்தாலும். மொழியாலும், தொழிலாலும், இடத்தாலும், கூட்டத்தாலும் பி¡¢த்து வெவ்வேறு பெயா¢ட்டு அழைக்கின்றனர். எத்தனையோ பேதங்கள், இவைகள் கற்பிதம், நிரந்தரமல்ல் நிலையானது ஒன்றே மனித இனம் ஒன்று என்பதுதான் உண்மை அதுபோலவே நோய்கள் நாலாயிரத்து நானூற்றி நாற்பது என்று பெயா¢ட்டழைத்த போதிலும் அவைகள் உண்மையில் அனைத்தும் ஒன்றே நோயின் மூலக்காரணம் ஒன்றுதான் அதைக் கண்டுபிடித்துச் சா¢செய்வதே நோயற்ற ஆரோக்கிய வாழ்வு வாழ்வதற்கான வழியாகும்.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 28, 2010 5:35 am

வேண்டாத பொருள் தேங்கி நின்று நச்சுப் பொருள்களாக மாறி வெளியேறும் போது துன்பம் தருகின்றன. இந்த வெளியேற்றத்தில் ஏற்படும் துன்பமே வலியே நோய் எனப்படுவது என்றோமே. அப்படியானால் வெளியிலிருந்து உள் நுழையும் விஷங்களைப் பற்றி என்ன என்று வினவலாம். ஆம் வெறிநாய்க்கடி தேன் கொட்டுதல், பூச்சிகள் எச்சமிடுதல், வண்டுகள் கடித்தல், தேம்மை அறியாமலே தவறாக விஷப்பூண்டுகளை உண்பது போன்றவற்றால் வெளியிலிருந்தும் உடலில் உள்ள உயிரணுக்களுக்குள்ளும் திசுக் கூட்டங்களுக்குள்ளும் வேண்டாத பொருள்கள் நுழைகின்றன. இந்த நச்சுப் பொருள்களை வெளியேற்றுவதில் உள்ள துன்பம் பொ¢தாகக் உள்ளதைக் காணலாம். வேறு, வேறு காரணங்களால் வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு இடங்கள் மூலமாக உட்சென்றாலும் அவை எல்லாம் வெளியேற்றப்பட வேண்டியவைகளே. அவைகளை அடக்கி வைக்கவோ, தற்காலியமாக உடலில் உள்ள பொறி புலன்களின் உணர்வைக் குறைத்து வைக்கவோ முயற்சிப்பதால் நிலைத்த பயன் கிடைக்காது மாறாக அவை நாளடைவில் வேறு உருத்தில் வெளியேறும். அப்போது துன்பம் அதிகமாகும்.

கடிகாரம் காலம் காட்டுகின்றது. அதில் சிறிய முள் என்றும் பொ¢ய முள் என்றும் வெவ்வேறு முட்கள் உள்ளன. ஒன்று விநாடியும் மற்றொன்று நிமிடமும் பி¡¢தொன்று மணியும் காட்டுகின்றன. சில கடிகாரங்களில் கிழமையும் தேதியும் கூடக் காணலாம். இவற்றிற்கெல்லாம் பின்னணியில் வெவ்வேறு பல் சக்கரங்கள் உள்ளன. இவற்றிற்கிடையே தொடர்பு உண்டு. எல்லாவற்றிற்கும் ஆதா¡ரமாக இருப்பது முக்கியச் சுருள்கம்பி (Main spring) தான் இது நாளுக்கு ஒரு தடவையோ சுரட்டி விடப் பட்டால் ஒரே சீராண வேகத்தில் காலம் முழுவதும் வி¡¢ந்து பிற சக்கரங்களும் சுழலுகின்றன. (1) சுருள் கம்பியில் விசை குறைந்து விட்டாலோ (2) சீதோஷ்ண மாற்றத்தால் கம்பி வி¡¢ந்து சுருங்கி வேகம் மாறுபட்டாலோ (3) தூசு தும்புகளாலான வெளித்தடைகள் ஏற்பட்டாலோ காலம் காட்டுவதில் தடை உண்டாகும் அதுபோலவே உடம்பும் பிராணசக்தியால் இயங்குகின்றது. பிராணசக்தி குறைந்தால் இயக்கம் குறைந்து மலத்தை வெளிப்படுத்தும் வேலை தடைப்படுகின்றது. இரண்டாவதாக சீதோஷ்ண மாற்றங்களில் கடிகாரம் வேகமாகவோ, மெதுவாகவோ போகிறமாதி¡¢ வெப்ப மாற்றங்களாலும் சூழ்நிலை மாற்றங்களாலும் உடலும்; உடலியக்கமும் பாதிக்கப்படும் மூன்றாவதாக கடிகாரத்தில் வெளி அழுக்குகள் நுழைந்து சக்கரச் சுழற்சிகளைத் தடை செய்வது போல் வெளி அழுக்குகள் உடம்பினுள் நுழைவதால் உள் உறுப்புகளாகிய இருதயம், நுரையீரல், கல்லீரல் மண்ணீரல், சிறுநீர்ப்பி¡¢தி, தசைக்கோள்கள் முதலியவற்றின் இயக்கம் தடைப்படலாம். இவற்றில் தடை ஏற்படும்பொழுது வேண்டாத பொருள்களும், நச்சுப்பொருள்களும் உடம்பினுள் தேங்கி நின்று உடலுக்குத் துன்பம் விளைவிக்கின்றன. இதைப் பு¡¢ந்து கொண்டால் நோய்க்கு இயற்கைவழி சிகிச்சை செய்வது எளிதாகும். மேலும் உடம்பில் வெவ்வேறு காரணங்களால் துன்பம் வந்தபோதிலும் மூல உருவம் ஒன்றுதான். அதாவது வேண்டாதவற்றை வெளியேற்றும் முயற்சி இவ்வேண்டாதலை உணவு முதலிய பருப்பொருளாக இருக்கலாம் அல்லது, கருத்து கற்பனை எண்ணம் நுண் பொருளாகவும் இருக்கலாம் நுண்ணுடம்பாகிய மனதில் ஏற்படும் நினைவு, குறைவுகளும் பருஉடம்பையும் பாதிக்கும். இதனையும் இவ்வொன்றுள் அடக்கிக் காண்பதும் சிகிச்சைக்கு உதவும்.

ஒரே அடிமரத்தைக் கொண்ட மரத்தில் பல கிளைகளும் இலைகளும் பூக்களும் காய்கறிகளும் இருப்பினும் மரம் ஒன்றேதான், அதுபோலவே உடலில் தோன்றும் நோய் ஒன்றதான் என்றாலும் மனித உடம்பின் வெவ்வேறு பாகங்களான தலை, கழுத்து, மார்பு, வயிறு, இடுப்புக்குழி, கை, கால், முதலியவற்றின் வாயிலாக வெளி வரும்போது பலவாகத் தோற்றமளிக்கிறது. நாடகங்களில் பல வேடங்களில் ஒருவர் தா¢க்கின்றார். ஒரே ஆள் சமயத்திற்கு ஏற்றமாதி¡¢ வேடந்தாங்கி நடிக்கின்றார். இருப்பினும் ஒரே ஆள்தான் பலவேஷம் தா¢க்கின்றார் என்பது அறிவாளிக்களுக்குத் தொ¢யும் சிறு குழந்தைகள், சாதாரண மக்கள் வெவ்வேறு ஆள் என்று நம்பி விடுகிறார்கள். நாடகத்தைப் பற்றி எவ்வித நம்பிக்கை கொண்டாலும் தீங்கு விளைவதில்லை. ஆனால் நோயைப்பற்றியோ முதற்காரணத்தைக் காணாமல் வெளித்தோற்றத்திற்குச் சிகிச்சை அளிப்பது பூரண குணத்தை கொடுப்பதில்லை. சில சமயங்களில் அரைக்குறைச் சிகிச்சைகளால் நோய் மேலும் உள்ளத்தள்ளப்பட்டு நாட்பட்ட நோயாகவும சீரழிக்கும் நோயாகவும் பின்னர்அதிகத் தொந்தரவைக் கொடுக்கலாம் எனவேதான் "நோய் ஒன்றே பல அல்ல" என்னும் அடிப்படையை இயற்கை மருத்துவ தத்துவம் வற்புறுத்துகின்றது.

மாலை ஐந்து மணி சுமாருக்கு மலர்ந்த முகத்துடன் நண்பர் சோமு எனது அறைக்குள் நுழைந்தார் 'ஐயா என் வயிற்று வலி இப்பொழுது பரவாயில்லை ஆனால் முழங்கால் இரண்டிலும் நல்லவலி இதற்கு ஏதாவது பா¢காரம் சொல்லுங்கள்"

"சென்ற தடவை சந்தித்த போது நான் வி¡¢வாகச் சொன்னது நினைவிருக்கலாம் அடிவயிற்றில் தொடர்ந்து காலையிலும், மாலையிலும் மண்பட்டி போட்டு வருகிறீர்களல்லவா? தொடர்ந்து செய்து வாருங்கள்.






புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Oct 28, 2010 5:37 am

ஐயா! வயிற்றுவலி என்று நான் சொன்ன பொழுது எனக்கு உள்ள குறைபாடுகளைப் பற்றியெல்லாம் கேட்டு விசா¡¢த்து நோய் ஒன்றுதான் பல அல்ல என்பதைப் பற்றிச் சொன்னீர்கள் வயிற்றுக்குப் படுக்கப் போகுமுன்னும் காலை எழுந்தவுடனும் நல்ல புற்றுமண்ணோ அல்லது களிமண்ணோ எடுத்து வந்து மண்பட்டி போட்டக்கொள்ள வேண்டுமென்று சொன்னீர்கள் நீங்கள் தொ¢வித்தபடியே இரண்டு நாட்கள் செய்தேன். வலி மிகவும் குறைந்து விட்டது. ஏன்? வலியே இல்லையென்று கூட சொல்லலாம் அதன் பின்னால் மண்பட்டி போட்டுக் கொள்வதை நிறுத்தி விட்டேன். இரண்டு மூன்று நாட்கள் சுகமாக இருந்தது ஆனால் நேற்றும் இன்றும் தான் முழங்கால் மூட்டுக்களில் நல்ல வலி தயவு செய்து ஏதாவது பா¢காரம் சொல்லுங்கள் எனக்கு வயிற்றுவலி இல்லை.

இவருக்கு இயற்கை மருத்துவத் தத்துவத்தை எப்படி விளங்க வைப்பது என்பதைப் பற்றி ஆழ்ந்து யோசித்தேன். வயிற்றுவலி வேறு, முழங்கால் வலி வேறு என்ற கருத்து நெடுநாள் இவர் மனதில் ஊறிப்போய் இருந்தது. ஒவ்வொரு நோய்க்கும் வெவ்வேறு மருத்துவம் என்ற எண்ணமும் பொதுவாக இவர் ஏற்றுக்கொண்டிருந்தது. ஒன்று இதனை இவருக்கு விளங்க வைப்பது அவ்வளவு எளிதாக எனக்குத் தோன்றவில்லை இருப்பினும் எனது முயற்சியை விட்டுவிடவில்லை. "ஐயா! குழந்தையாய் இருந்தபொழுது உங்களைச் சோமு என்றுதான் அழைத்தார்கள் பின்னர் வாலிபரானீர்கள் இப்போது சில குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறீர்கள் உங்கள் உருவத்தில் மாறுதல் வேலையில் மாறுதல், செயல்களில் மாறுதல் இருப்பினும் நீங்கள் சோமுதான் அதுபோல உங்கள் உடம்பில் தோன்றுகிற வலிகளுக்கும்; மூலகாரணம் ஒன்றே உடம்பினுள் வேண்டாத சில அந்நியப் பொருள்கள் தேங்கியிருக்கின்றன. அவற்றை வெளியேற்றும் முயற்சி நடக்கும் பொழுது உங்களுக்கு வலியோ துன்பமோ ஏற்படுகின்றது ஒரு தடவை வயிற்றின் மூலம் அழுக்கு வெளியேற முயன்று அதனால் உங்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. மண்பட்டி போட்டதினால் குடல்களிலிருந்த உஷ்ணமும் துடிப்பும் குறைந்தன. அந்த அளவுக்கு அழுக்குகள் வெளியேறியுள்ளன. உங்கள் உடம்பில் காலப் போக்கில் சேர்ந்துள்ள அழுக்கு பரவலாக உடல்முழுவதும் இருக்கிறது. அதனை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வெளியேற்ற வேண்டும். பூரண குணமடையக் கொஞ்சம் நாளாகலாம் எனவேதான் தொடர்ந்து மண்பட்டி போடுங்கள் என்று சொன்னேன். இது இப்போது உங்களுக்கு விளங்குகிறதா?"

"நீங்கள் சொல்வது விளங்குகிறது வயிற்றுவலி இப்போது இல்லை; முழங்காலில் தான் வலி இருக்கிறது அதற்கு ஏதாவது பா¢காரம் வேண்டும்.

"அதற்குத்தான் அடிவயிற்றில் தொடர்ந்து மண்பட்டி போட வேண்டுமென்று சொல்கிறேன். அப்படியே செய்யுங்கள்"

"வயிற்று வலிக்கு மண்பட்டி போடுவதுசா¢ முழங்கால் வலிக்கும் அடிவயிற்றில் மண்பட்டி போடுங்கள் என்கிறீர்களே! அதுதான் விளங்கவில்லை மண்ணைக் குழைத்து முழங்காலில் போட்டுக் கொள்ளலாமா?"

"முழங்காலில் போட்டுக் கொள்வதை விட அடிவயிற்றில் மண்பட்டி முறையாகப் போடுவதன் மூலமாகத்தான் உங்களுக்கு விரைவில் பூரணசுகம் கிடைக்கும் நாம் சாப்பிடும் உணவு எப்படி உருமாறி இரத்தமாக உடவெல்லாம் பரவுகிறதோ அதுபோல நமது உடம்புக்கு வேண்டாத அந்நியப் பொருள்கள் நெடுநாள் தங்கியிருந்தால் அவை உருமாறி உயிரணுக்கள் பலவற்றுள்ளும் போய்ச் சேர்ந்து விடுகிறது. அவற்றை வெளியேற்றுவதற்குச் சிறந்தவழி. அடிவயிற்றில் மண்பட்டி போட்டுக் கொள்வதுதான் இதன்மூலம் நல்ல பலக்கழிவு ஏற்படும் உடலில் மூலாதாரத்தில் உள்ள உஷ்ணம் சமநிலைக்கு வரும். இரத்த ஓட்டமும் தடையின்றி நடைபெறும். இன்று உங்களுக்கு இருக்கிற முழங்கால் வலிக்குக் காரணமான வாதம் இரத்த ஓட்டத்தின் மூலம் பல வழிகளிலும் வெளியேறி இன்னும் சில தினங்களில் வலி குறைந்து விடும் இன்று முழங்காலில் தோன்றுகிற வலி குறைந்து இடுப்பிலோ முதுகிலோ கூட வரலாம். பயப்பட வேண்டிய தேவையில்லை. வயிற்றில் ஏற்படும்பொழுது அதனை வயிற்றுவலி என்றும் முழங்கால் வழியே வெளியேற முயலும்போது அதை முழங்கால் வலியென்றும், இடுப்புக்குப் பக்கமாக வந்தால் அதனை இடுப்பு வலி என்றும் வெவ்வேறு பெயா¢ட்டு அழைக்கின்றனர். அவ்வளவுதான், நோய் ஒன்றே எனவே தான் நமது மருத்துவமும் ஒன்று' என்று சொல்லி அனுப்பினேன்.

இந்த இயற்கை மருத்துவ தத்துவம் முதலில் பு¡¢ந்து கொள்ளப்பட வேண்டும். அந்த எண்ணத்தை திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து அது நம்பிக்கையாக மனத்தில் உறுதிப்பட வேண்டும். இல்லையேல் இந்த மருத்துவருக்கு ஏதோ மனக்கோளாறு என்று சொல்லி நோயாளிகள் வேறு மருத்துவா¢டம் போய் விடுவார்கள். மாத்திரைகளை விழுங்குவதினாலோ, ஊசிகள் போட்டுக் கொள்வதினாலோ தற்கால சாந்தி கிடைப்பதனால் அத்தகைய மருத்துவர்களை நாடியே உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது தற்காலிக சாந்திக்குப் பின்னால் வரும் விளைவுகள் தங்கள் மருத்துவத்தினால் வந்தவை என்பதை விட்டுவிட்டு ஏதோ ஒரு பூச்சியினால் ஏற்பட்ட புது விளைவு என்று வாழ்நாள் முழுவதும் மருத்துவரை நாடி அவையும் உலகைத் திருத்துவது கடினமேயாயினும் மெய்யறிவைப் பரப்புவதில் தளர்ந்து விடாது முயல வேண்டும். சத்தியம் வெல்லும் என்ற நம்பிக்கை இருந்தால் இயற்கை மருத்துவம் கூடிய விரைவில் பலருக்கும் பணிபு¡¢யும் வாய்ப்பினைப் பெறும்.



நன்றி ஜயா - மகா¢ஷி க. அருணாசலம்





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக