ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 2:14 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 2:13 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 2:11 pm

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by ஜேன் செல்வகுமார் Today at 1:58 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by Aathira on Sat Nov 27, 2010 9:26 am

பிஸ்தா எடு!! கொண்டாடு.....






அவன் பெரிய பிஸ்தாடா! என்று சொல்வது ஒரு வகை என்றால், அவன் பெரிய பிஸ்தாவாடா?‘ என்று கேட்பது மற்றொரு வகை. இவை இரண்டும் ஃபுல் அடிக்கும் பயில்வானாகஇருந்தாலும், புல் தடுக்கி பயில்வானாக இருந்தாலும் ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் சொற்களாகிப்போயின. பிஸ்தாவுக்கும் ஆண்களுக்கும் அப்படி ஒரு நெருங்கிய தொடர்பு. அதிலேயும் பிஸ்தாவோடுமிகுந்த தொடர்புடையவர்கள் ரொம்ப நோஞ்சான் ரொம்ப பலசாலி இருவரும்தான். குடிக்கறது கூழாகஇருந்தாலும் பெரிய பிஸ்தா மாதிரி உதார் விடுவதற்கு ஒரு குறைவும் இருக்காது. பாவம் இந்தநடுத்தரம் அவர்களை விட பாவம் பெண் தாதாக்கள். என்னதான் பலசாலிகளாய் இருந்தாலும் கண்டிப்பாகசொர்ணாக்கக்களுக்குப் இந்த பிஸ்தா ஜம்பம் எல்லாம் பொருந்தாது.

ஒருவருக்குத் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டால்போதும். அவனுக்கு இலவச அறிவுரை என்று வழங்குபவர்களின் வாய் உதிர்க்கும் முத்துக்களில்இந்த பிஸ்தா முக்கியமாக இடபெறும். `பாதாம், பிஸ்தா, முந்திரி எல்லாம் சாப்பிட்டு, உடம்பைதேத்துபா…’ இப்படி...அப்படி என்னதான் உள்ளது இந்த பிஸ்தாவில்?.



ஒரு 100 கிராம் பிஸ்தாவில்
557 கலோரி உள்ளது. அதாவது 29%
கார்போஹைடிரேட்ஸ் 27.97 கிராம். இது 21.5%
புரதம் 20.60 கிராம். 37%
மொத்தக் கொழுப்பு 44.44 கிராம் 148%
கொழுப்பு 0.0 மிலிகிராம் 0%
நார்ச்சத்து 10.3 கிராம் 27%




விடமின் A -553, 18% விட்டமின் C -5. 12% விட்டமின் E-150% தியாமின் 72.5% சோடியம்1 மி.கி..பொட்டாசியம் 1.025 மி.கி., கால்சியம்107மி.கி. 11% காப்பர் 1.3 மி.கி. 144% இரும்புச்சத்து 4.15 மி.கி. 52% மக்னீசியம்121மி. கி. 30% மாங்கனீசு 1.2 மி.கி. 52% பிராஸ்பரஸ் 376 மி.கி. 54% செலினியம் 7 மிசிகி.13% சின்க் 2.20 மிகி. 20% இத்தனையும் நிறைந்து உள்ளது. இவை முக்கியமானவை. 30 வகையானவைட்டமின்கள், மினரல்கள், உட்டச்சத்துக்கள் ஆகியவை பிஸ்தாவில் நிறைந்துள்ளன என்கின்றது. இத்தனை சத்துக்களை உள்ளடக்கிய அது தானே பிஸ்தா.

மூடிய கிளிஞ்சல்கள் போலக் காணப்படும், இதன் உடபுறம் பச்சை நிறத்தில்காணப்படும் பிஸ்தாவை `பிஸ்தாச்சியோ (Pistachio)என்று உலக அளவில் அழைக்கிறார்கள்.

மத்திய கிழக்கு பகுதியில் முதன் முதலாக கண்டுபிடிக்கபட்ட பிஸ்தா மரம், உலகின் மிகப் பழமையான பருப்பு வகை மரங்களுள் ஒன்று என்பர். சுமார் 7000 ஆண்டுகளுக்கும் முன்பே பிஸ்தா மரத்தைப் பயிரிட்டு வளர்த்துள்ளனர். பிஸ்தாவிலும் வளர்ப்பிலும் அமெரிக்காதான் பிஸ்தா. ஆம் உலகிலேயே அதிக அளவில் பிஸ்தாக்கள் (பிஸ்தா மரங்கள்) நிறைந்த நாடு அமெக்கா. 1903 முதலே கலிஃபோர்னியாவில் பிஸ்தா மரங்கள் பயிர் செய்யப்பட்டு வந்துள்ளன என்கிறது ஆய்வு. .

இனிப்பான சம்பவத்தைப் போல கசப்பையும் ஜீரணிக்கப்பழகிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்த தமிழர்கள் தமிழ்ப் புத்தாணடில் வேப்பம்பூ பச்சடிசெய்து கொண்டாடுகிறோம்.. அதுபோல சீனர்கள் ஒவ்வொரு புத்தாண்டையும் கொண்டாடும்போது, இந்த பிஸ்தா பருப்புகளை அனைவருக்கும் வழங்கி மகிழ்கிறார்கள். உடல்நலம், மன நலம், ஒளிமயமான எதிர்காலம், மகிழ்ச்சி, துள்ளல்ஆகியவற்றின் அடையாளமாக பிஸ்தாவை நினைக்கின்றனர்.அதனால் புத்தாண்டில் பிஸ்தாவே முதலிடம் பிடிக்கிறது. அதுமட்டுமல்ல அவர்கள் பிஸ்தாவைமகிழ்ச்சி பருப்பு (Happy nut), என்றே அழைக்கிறார்கள். உலகிலேயே அதிக அளவில் பிஸ்தா ஈட்டர் யார் என்றால்சீனர்களே. அவர்களின் நொறுக்ஸில் முக்கிய இடமும் பிஸ்தாவுக்கே.

ஈரானியர்களும் பிஸ்தாவை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இவர்கள் பிஸ்தாவை சிரிக்கும் பருப்பு (smiling nut)என்று அழைக்கின்றனர்.

ரஷ்யாவில் கோடைக்காலத்தில் பிஸ்தா பருப்புஅதிகப் பயன்பாட்டில் உள்ளது என்கிறது ஒரு ஆய்வு. கோடைக்காலத்தில் அடிக்கும் பீருக்குஇது தான் உடன் துணையாம்.

ஒரு காலத்தில் சரியான செரிமானத்திற்காக சாப்பிடும்போதுரசம் ஊற்றி சாப்பிடுவோம். அந்த ரசத்தை இப்போது ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளில் சூப்புஎன்று சாப்பிடுவதற்கு முன்னால் ஒரு கின்னியில் ஊற்றி கொடுக்கின்றனர். நாமும் ஸ்பூனால்உரிஞ்சி உரிஞ்சிக் குடிக்கிறோம். இது பசியைத் தூண்டி அதிகம் சாப்பிட வைக்கும். இதேபோல பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரிக்கச்செய்ய மது அருந்துவார்களாம். அப்போது மதுவுடன் இசைக்கும் பக்க வாத்தியம் பிஸ்தாவாம்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஏழை நாடு இந்தியா, பிஸ்தா சாப்பிடுவதிலும் ஏழைதான். குடிப்பது கூழ் கொப்பளிப்பதுபன்னீராகவா இருக்க முடியும்? .ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக அயல்நாட்டு டாலர் புழக்கம்நிறைந்த வீடுகளில் பிஸ்தாவும் இடபிடிக்கிறது. மற்றவர்கள் படம் போட்டுக் காட்டினால்தான்பிஸ்தா எப்படி இருக்கும் என்று அறியும் நிலையில் இன்றும் உள்ளனர்.

சரிங்க.. அப்படி என்னதான் இந்த பிஸ்தாவில்நம் உடலுக்கு நன்மை தரும் விஷயம் இருக்கிறது?

முக்கியமாக மூன்று நோய்கள் உலகில் உலாவந்து தன் இஷ்டம் போல மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. அவை புற்று நோய்,இதய நோய், சர்க்கரை நோய். இந்த மூன்று நோய்களும் பிஸ்தா என்றால் கண்ணுக்கு எட்டாத தூரத்திற்குஓடி நிற்குமாம். இதைக் கூறுவது அமெரிக்க ஆய்வறிக்கை.

தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் எந்தவகையான புற்று நோயும் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் நான்கு கோடி பேர்சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வறிக்கை. ரொட்டியுடன் கையளவுபிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும்.மேலும், பசியைத் தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர்.

பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல்எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாகபிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும் பிஸ்தாசாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும் என்கிறது ஒரு ஆய்வு.

நாள்தோறும் 1 அல்லது 2 பிஸ்தா பருப்புகளைச்சாப்பிடுவதன் மூலமாக, 9 முதல் 12 சதவீதம் உடலுக்கு தீமைசெய்யும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். இதைக் கூறுவது டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு.பிஸ்தா சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகட்டுப்பாட்டுக்குள் இருப்பதை டொரண்டோ பல்கலைக்கழக ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது. கார்போஹைட்ரேட்அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிடும் போது, அதனுடன் உணவுப்பொருளாக (சைட் டிஸ்ஸாக)பிஸ்தாவைச் சேர்த்துச் சாப்பிடும் போது, கார்போஹைட்ரேட்டை உடல் உள்ளிழுத்துக்கொள்வது மட்டுப்படுகிறது. கார்போஹைட்ரேட் அதிக அளவில் உள்ள பிரெட் சாப்பிட்டால்கூட, அது ரத்தத்தில் படியாமல் பார்த்துக் கொள்கிறது இந்த பிஸ்தா. இதனால்ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என ஆய்வு கூறுகிறது.

நாகரிக மோகம் நிறைந்த, வேக உணவு எங்கும்பரவி விட்ட நகர்ப்புறங்களில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த 50ஆண்டுகளில் 4 சதவீததில் இருந்து 11 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிலும் இந்தியாவில்குறிப்பாக இளம் வயதினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளி விவரம் கேட்கக்கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை நிலை. பிஸ்தா பருப்பைச் சாப்பிட்டால் ரத்தத்தில்கொழுப்பு அளவு குறையும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிஸ்தா பருப்புகளில்ஓமேகா-3 வகை கொழுப்பு உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது எனவே, இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாமாம்.
.
கலர் பார்க்கும் ரோட்டோர ரோமியோக்களுக்கு மிகவும் நற்செய்தி இது. பிஸ்தாவைப் பச்சைப் பாதாம் என்றும் அழைக்கின்றனர். இதில் உள்ளபச்சை கண்களுக்கு ஒளியூட்டுவதை வெகு நேர்த்தியாகச் செய்கிறதாம். அப்பறம் என்ன கலர்பார்த்துக் கலக்க வேண்டியதுதானே.

செக்ஸ் உணர்வு குறைபாடு இக்காலத்தில் பரவலாகஆண்களிடம் காண்ப்படுகிறது என்கிறது புள்ளி விவரம். இந்த உடலுறவு ஆர்வம் இன்மை உடல்,உள நோய்களுக்கு பெரும்பாலும் காரணமாகி விடுகின்றது.

காதலினால் மானிடர்க்குக் கலவிஉண்டாம்
கலவியிலே மானிடர்க்கு கவலை தீரும்
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே




என்பார் பாரதி. பெண் என்றால் அழகு, ஆண்என்றால் ஆண்மை. என்பது தொன்று தொட்டு நிலவி வரும் சமூகக் கட்டு. இதில் பெண்மையை ஒளிவீசச்செய்ய எந்த அளவு ஈஸ்ட்ரோஜன் பயன் படுகிறதோ அதே அள்வு ஆண்மையைக் கூட்டுவதில் டெஸ்ட்டோஸ்டீரான்முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த டெஸ்ட்டோடிரானை மருந்துகளால் அதிகரிக்க முடியாதாம்.. டெஸ்ட்டோடிரானை அதிகரிக்கச் செய்வதில் பிஸ்தாவின் வேலை படு சுத்தமாக இருக்குமாம்.தன் ஐந்தாவது வயதில் பழுக்கத்தொடங்கி 200 வயது வரை ஓயாது கனி ஈனும் பிஸ்தா ஈடு இணையற்றஇயற்கை வயாகராவாகி அரிய பயனைத் தருகிறது..



இது செரிக்க சற்று கடினமாக இருக்கும் ஆதலால்கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம். பிஸ்தாவைத் தேனுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளும் போதுசுலபமாகச் செரிக்கும்.

ஒரு சுவையான செய்தி.. பிஸ்தாவுக்கு என்றேஒரு தினம் கொண்டாடுகிறார்கள் என்றால் நம்புவீர்களா? ஆம் பைபிளில் இடம் பிடித்த(Genesis 43:11)இந்த வரலாறு படைத்தபருப்புக்குப் நன்றி சொல்லும் விதமாக பிப்ரவரி 26 உலக பிஸ்தா நாளாகக் கொண்டாடப் படுகிறது.

அப்பாடா.. இதுவரை நீங்கள் பிஸ்தாவோ, இல்லையோஇந்த மகிழ்ச்சிப் பருப்பைக் கையில் எடுத்து விட்டீர்கள் அல்லவா. இனிமேல் நீங்கள் பிஸ்தாதான்..பிஸ்தா எடு!! கொண்டாடு....




நன்றி குமுதம் ஹெல்த்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by ரிபாஸ் on Sat Nov 27, 2010 9:34 am

தகவலுக்கு நன்றி அக்கா

ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 11744
வசிப்பிடம்: Doha-Qatar
சேர்ந்தது: 20/08/2009
மதிப்பீடு: 195

http://eegarai.com/

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by maniajith007 on Sat Nov 27, 2010 3:32 pm

அரிய விசயங்களை அறிய தந்தமைக்கு நன்றி

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by Aathira on Sat Nov 27, 2010 3:39 pm

maniajith007 wrote:அரிய விசயங்களை அறிய தந்தமைக்கு நன்றி


மிக்க நன்றி அஜித்

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by kungumapottu gounder on Sat Nov 27, 2010 3:43 pm

அருமை .போக்கிச பதிவு அக்கா. அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி

kungumapottu gounder
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 191
வசிப்பிடம்: pollachi
சேர்ந்தது: 01/11/2010
மதிப்பீடு: 3

http://ஒன்லயேர்ஸ்க்லுப்.கொம்/கொங்குநாடுலயேர்ஸ்க்லுப்/

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by அப்புகுட்டி on Sat Nov 27, 2010 5:02 pm

மிகவும் பயனுள்ள பதிவு அம்மணி நன்றி
நான் அதிகமாக பிஸ்தா சாப்பிடுகிறேன் நன்றி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by கார்த்திக் on Sat Nov 27, 2010 5:05 pm

தெரியாத தகவல் தெரிந்தமைக்கு நன்றி அக்கா

கார்த்திக்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by Aathira on Sat Nov 27, 2010 9:02 pm

ரிபாஸ் wrote:தகவலுக்கு நன்றி அக்கா

நன்றி ரிபாஸ்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by கலைவேந்தன் on Sat Nov 27, 2010 9:22 pm

பிஸ்தா அறிவுரைக்கு நன்றி... பிஸ்தா ஒரு கிலோ பார்சல் அனுப்பவும்...!

- ஏழை கலை

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by சிவா on Sat Nov 27, 2010 10:24 pm

பிஸ்தா பற்றிய பிரமாண்டமான பதிவு பயனுள்ளது!


பிஸ்தாவுக்கு தமிழில் ஏதும் பெயர் இல்லையா அக்கா!

///பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரிக்கச்செய்ய மது அருந்துவார்களாம். அப்போது மதுவுடன் இசைக்கும் பக்க வாத்தியம் பிஸ்தாவாம்.///

அதனால்தான் அதிகமா பசிக்குதா?




பதிவுகள்: 790133 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by Aathira on Sat Nov 27, 2010 10:37 pm

சிவா wrote:பிஸ்தா பற்றிய பிரமாண்டமான பதிவு பயனுள்ளது!


பிஸ்தாவுக்கு தமிழில் ஏதும் பெயர் இல்லையா அக்கா!

///பிரான்ஸ் நாட்டினர், சாப்பிடுவதற்கு முன்பு பசியை அதிகரிக்கச்செய்ய மது அருந்துவார்களாம். அப்போது மதுவுடன் இசைக்கும் பக்க வாத்தியம் பிஸ்தாவாம்.///

அதனால்தான் அதிகமா பசிக்குதா?


இந்தப் பக்க வாத்தியத்துக்கு தலையாட்டற ஆள் ஒருத்தர் இருக்க்காறேன்னு நெனச்சிகிட்டேதான் பதிவிட்டேன். அப்ப வெறும் வயிற்றில் வேறயா?

தமிழ் பெயர் கிடைக்கல சிவா.. தெரியல.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by கலைவேந்தன் on Sat Nov 27, 2010 10:39 pm

கலை wrote:பிஸ்தா அறிவுரைக்கு நன்றி... பிஸ்தா ஒரு கிலோ பார்சல் அனுப்பவும்...!

- ஏழை கலை

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by Aathira on Sat Nov 27, 2010 10:42 pm

கலை wrote:
கலை wrote:பிஸ்தா அறிவுரைக்கு நன்றி... பிஸ்தா ஒரு கிலோ பார்சல் அனுப்பவும்...!

- ஏழை கலை

இந்தியாவுல வடக்கேதான் அதிகம் கிடைக்குதாம்.. மலிவா..

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by கலைவேந்தன் on Sat Nov 27, 2010 10:46 pm

Aathira wrote:
கலை wrote:
கலை wrote:பிஸ்தா அறிவுரைக்கு நன்றி... பிஸ்தா ஒரு கிலோ பார்சல் அனுப்பவும்...!

- ஏழை கலை

இந்தியாவுல வடக்கேதான் அதிகம் கிடைக்குதாம்.. மலிவா..


கஞ்சத்தனமான சமாளிப்பு..! மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: பிஸ்தா எடு!! கொண்டாடு.....

Post by Aathira on Sat Nov 27, 2010 10:57 pm

உங்களுக்கு இல்லாததா கலை. இந்தாங்க..
Spoiler:

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10850
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 700

http://aathira.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum