ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன்

View previous topic View next topic Go down

சமையலுக்கு சர்வதேச விருது! - விஜி வரதராஜன்

Post by தாமு on Thu Dec 02, 2010 6:56 am

சமையல் குறிப்புகள் பற்றி எழுதிய புத்தகத்திற்கு சர்வதேச விருதான "கோர்மேன்ட் வேர்ல்டு குக் புக்" (Gourmand World Cook Book Awards) விருதைப் பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த விஜி வரதராஜன். ஆஸ்கார் விருதுக்கு இணையாகக் கருதப்படும் இந்த விருதைப் பெற்ற முதல் தென்னிந்தியப் பெண்மணி என்ற பெருமையும் பெற்றுள்ளார். இதன் மூலம், நம்முடைய பாரம்பரிய உணவான தயிர் சாதத்தையும், மாவடுவையும் சர்வதேச "டைனிங் மெனு"வில் இடம் பெறச் செய்துள்ளார். பாராட்டு மழையில் நனைந்துக் கொண்டிருந்த அவரைச் சுட்டெரிக்கும் ஒரு மதிய வேளையில் சந்தித்துப் பேசினோம்.

"நான் எத்திராஜ் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தேன். திருமணத்திற்குப் பிறகு என்னுடைய கணவருடைய பிசினஸீக்கு உறுதுணையாக இருந்தேன். இடையில் என்னுடைய அம்மா மற்றும் மாமியாரிடம் இருந்து சமையல் கலையைக் கற்றுக் கொண்டேன். அவர்கள் சமையலைப் பற்றி சொல்லிக் கொடுத்த விதம் எனக்கு அதன் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது. விதவிதமாக சமையல் செய்யத் துவங்கினேன். என்னுடைய சமையலை ருசித்த நண்பர்கள், சமையல் பற்றிய தகவல்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டால் அனைவரும் பயன்பெறுவார்களே என்று யோசனைத் தெரிவித்தனர்.

இதையடுத்து, நான் 2001-ம் ஆண்டு "சமையல்-தி பிளஷர்ஸ் ஆஃப் சவுத் இன்டியன் வெஜிடேரியன் குக்கிங்" (Samayal-The Pleasures of South Indian Vegetarian Cooking) என்ற முதல் புத்தகத்தை எழுதினேன். இதையடுத்து, "ஃபெஸ்டிவல் சமையல்-ஆன் ஆஃபரிங் டு தி காட்" (Festival Samayal-An Offering To The Gods) மற்றும் "எ ஹெல்தி டேஸ்ட் ஆஃப் தி இன்டியன் கல்ச்சர்:குக்கிங் வித் யோகர்ட்" (A Healthy Taste of Indian Culture:Cooking with Yoghurt) ஆகிய மூன்று புத்தகங்களை எழுதினேன்.

சமையல் குறிப்புகள் பற்றி எழுதப்படும் புத்தகங்களுக்குச் சர்வதேச அளவில் கோர்மேன்ட் என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது. ஃபிரெஞ்சு நாட்டில் பிறந்து தற்போது ஸ்பெயினில் வசித்து வரும் எட்வர்டு காய்ன்டிரியோ என்பவர்தான் இந்த விருதை நிறுவியவர். இவர், 1995-ம் ஆண்டு முதல் சமையல் குறிப்புகள் பற்றி எழுதப்படும் சிறந்த புத்தகங்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்து வருகிறார். திரைப்படத் துறைக்கு ஆஸ்கார் விருது எவ்வளவு முக்கியமான விருதாகக் கருதப்படுகிறதோ, அந்த அளவுக்கு உணவுத் துறையில் இந்த விருது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மேலும், இந்த விருதைப் பெற்ற எழுத்தாளர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைக்கும்.

இந்த விருது, நல்ல உணவுகள் தொடர்பான சமையல் குறிப்புகள் பற்றி எழுதுபவர்களைக் கௌரவிப்பதற்காக வழங்கப்படுகிறது. அதேபோல், ஆண்டுதோறும் சமையல் குறிப்புகள் தொடர்பாக மட்டும் 24,000 புத்தகங்கள் வெளியாகின்றன. இதில் சிறந்த புத்தகங்கள் எவை என்பதைத் தேர்வு செய்யவும் இந்த விருது வாசகர்களுக்கு உதவி புரிகிறது. அத்துடன், சமையல் குறிப்புகள் தொடர்பான புத்தகங்களை மொழிப் பெயர்ப்பு செய்ய பதிப்பாளர்களுக்கு சர்வதேச உரிமையைப் பெறவும், புத்தக நிலையங்கள் சிறந்த புத்தகங்களை தங்கள் கடையில் விற்பனைக்கு வைக்கவும் இந்த விருது பெரிதும் உதவுகிறது.

கடந்த 13 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இந்த விருது குறித்த தகவலை நான் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதற்கு விண்ணப்பித்தேன். நிபுணர்கள் கொண்ட குழு பரிசுக்குரியதாக இந்தப் புத்தகங்களைத் தேர்வு செய்தது. என்னோடு சேர்த்து இதுவரை இந்தியர்கள் மூன்று பேர் மட்டுமே பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த விருதைப் பெற்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமையும் எனக்குக் கிடைத்துள்ளது. 2005-ம் ஆண்டு ராஷ்மி உதய் சிங் எழுதிய "அரவுன்ட் தி வேர்ல்டு இன் எய்ட்டி பிளேட்ஸ்" (Around the World In Eighty Plates) என்ற புத்தகமும், ஜிக்யாசா கிரி மற்றும் பிரதிபா ஜெயின் ஆகிய இருவர் எழுதிய "குக்கிங் அட் ஹோம் வித் பெடாதா" (Cooking at home with Pedatha) என்ற புத்தகமும் சர்வதேச அளவில் சிறந்த வெஜிடேரியன் உணவுக்கான விருதைப் பெற்றன.

இந்நிலையில், கடந்த 2007-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு நான் என்னுடைய மூன்று புத்தகங்களையும் அனுப்பி வைத்தேன். உலகம் முழுவதிலும் இருந்து 107 நாடுகளைச் சேர்ந்த ஆறாயிரம் புத்தகங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டன. இதில் என்னுடைய மூன்று புத்தகங்களுக்கும் விருது கிடைத்தது. சமையல் புத்தகம் சிறந்த வெஜிடேரியன் உணவுக்கான புத்தகம் என்ற கேட்டகிரியிலும், ஃபெஸ்டிவல் சமையல் புத்தகம் சிறந்த லோக்கல் குக்கரி புத்தகத்துக்கான கேட்டகிரியிலும், குக்கிங் வித் யோகர்ட் புத்தகம் சிறந்த சிங்கிள் சப்ஜெக்ட் மற்றும் சிறந்த ஹெல்த் அண்ட் நியூட்ரிஷியன் புத்தகத்துக்கான கேட்டகிரியிலும் தேர்வு பெற்றன.

என்னுடைய புத்தகங்கள் அனைத்தும் தென்னிந்திய சைவ உணவுகள் பற்றி எழுதப்பட்டவை. மேலும், சமையல் குறிப்புகள் அனைத்தும் எளிமையாகவும், நம்பகத்தன்மை கொண்டதாகவும், எளிய நடையிலும் எழுதப்பட்டுள்ளன. இதனால், என்னுடைய புத்தகத்தைப் பார்த்து யார் வேண்டுமானாலும் எளிதாகவும், ருசியாகவும் சமைக்க முடியும்.

குறிப்பாக, வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கும் மாணவர்களும் சரி, அங்கு சென்று செட்டில் ஆகும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த யுவதிகளும் சரி என்னுடைய புத்தகத்தைப் படித்து பார்த்துதான் சாம்பாரே வைக்கக் கற்றுக் கொள்கின்றனர். நம்முடைய பாரம்பரிய சமையல் என்பது ஒரு மனிதனை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒழுங்குபடுத்தும்.

ஆனால், இன்றைய சமையல் முறைகள் இவற்றுக்கு நேர் மாறாக உள்ளன. இவற்றைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய முக்கிய நோக்கம். இந்த விருதைப் பெற்றுள்ளதன் மூலம் நம்முடைய பாரம்பரிய சமையலின் புகழ் உலகமெங்கும் பரவும். அதேபோல், சர்வதேச அளவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் என்னுடைய புத்தகங்கள் இடம் பெறும்.

மேலும், இந்தப் புத்தகங்களை சர்வதேச மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கான உரிமத்தைப் பெற பதிப்பாளர்களுக்கு வழிவகை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்தப் புத்தகங்கள் விரைவில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழிலும் வெளியாக உள்ளது. இதேபோல், தமிழ் பிராமணர்களுடைய சமையல் தொடர்பான புத்தகம் ஒன்றை நானும், பத்மினி நடராஜன் என்பவரும் இணைந்து எழுதி வெளியிட்டுள்ளோம். இந்த ஆண்டுக்கான விருதுக்கு இப்புத்தகத்தை அனுப்பி வைக்க தீர்மானித்துள்ளோம்" என்றார்.


--பி.முரளிதரன்
நன்றி
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum