|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....by சார்லஸ் mc Today at 7:47 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm
» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm
» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:56 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சாவின் சுவை....
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
சாவின் சுவை....
சாவின் சுவை....
தலைப்பை பார்த்து பயந்துட்டீங்களா? சாவுக்கு ஒரு சுவையா என்று? எல்லாவற்றிலும் ஒரு சுவை, ஒரு திரில் இருக்குதுங்க। அதை நாம ரசிக்க கற்றுக்கொண்டால் சாவும் சுவைக்கும் தானே।
”என்ன பொழப்புடா இது செத்த பொழப்பு” என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வார்கள் சிலர். இன்னும் சிலர் ”இப்படி வாழ்றத விட செத்து ஒழியலாம்”
என்று அலுத்துக் கொள்வர். இப்படியெல்லாம் சொன்னாலும் சாவை மட்டும்
ஒருவரும் விரும்புவதே இல்லை. அதை விட ஒரு சிலர் என்ன சொல்லி திட்டினாலும் பொறுத்துக்கொள்வார்கள். ”செத்துத் தொலைய வேண்டியதுதானே” என்று ஒரு வார்த்தையைக் கேட்டால் மட்டும் போதும்; சொன்னவரைச் சாகடிக்காமல் விட மாட்டார்கள். ஆனா நான் என்ன சொல்ல வர்றேன்னா “ஏம்மா சாவுகிராக்கி; வூட்ல சொல்லிட்டு வந்துட்டியா”ன்னு யாராவது நம்பள திட்டினாலும் சுவாரசியமா எடுத்துட்டு சிரிக்கக் கத்துக்கிடனும்। அவ்வளவு சுவையானது சாவு.
”சாதலும் புதுவதன்று” என்று நம் பாட்டன், அவர்தான் கணியன் பூங்குன்றன் சொன்னது போல பிறக்கும் போதே இறப்பு உண்டு என்பது தெரிந்திருந்தாலும் சாவு என்று சொல்லும் போதே நம் குலை நடுங்குகிறது. நாம் ஒவ்வொருவரும் வரும்போதே திரும்பிப் போகப் பயணச்சீட்டோடு வந்திருக்கிறோம்.. நாள் மட்டுமே குறிக்கப் படாத பயணச்சீட்டுடன் (Return Journey) வந்துள்ளோம் என்பது கண்டிப்பாக நாம் அறிந்ததே. குத்து மதிப்பாகச் சொல்லப் போனால் (RAC) என்று கூறிக்கொள்ளலாம். புறப்பட்ட இடத்துக்குப் போய்த்தானே ஆக வேண்டும் என்பதும் தெரியும். ”ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற பழமொழியை, வாய் நிறைய அடிக்கடி கூறிக் கொண்டிருந்தாலும் உள்ளூற பயம். அப்படி என்ன பயம் இந்தச் சாவில்?.
இதைவிட சாவு நிகழ்ந்த வீட்டில் அழுகை வந்தாலும் வராவிட்டாலும் அழுதாக வேண்டும் என்று அழுபவர்களைப் பார்த்தால், பட்டினத்தார் பாடும் பாடலடிகள்தான் எனக்கு நினைவுக்கு வரும்.
”செத்துகிடக்கும் பிணத்தருகே இனிசாம் பிணங்கள்
கத்தும் கணக்கென்ன? காண்கயிலாயபுரி காளத்தியே!”
என்று கிண்டல் செய்வதைப் பார்த்தால் இந்த ஆசாமிகள் மாதிரி நாம் இருக்க முடியுமா என்று தோன்றும். ஆனால் பட்டினத்தாரும் தன் தாயின் சாவுக்கு இரங்கி
”நொந்து சுமந்து பெற்று நோவாமல்
ஏந்தி முலைதந்து வளர்த்தெடுத்துத் தாழாமே –அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டுவேன்!
என்று அழுத பாடல்கள் இன்றளவும் தாய்மையின் சிறப்பைக் கூறி நிற்கிறது.
இந்தச் சாவு பாருங்க எல்லோருக்கும் ஒரே மாதிரி வருவது இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக வருகிறது. தூங்கிக்கொண்டு இருக்கும் போதே சிலர் மரணத்தை அடைந்து விடுகின்றனர். மரணமும் ஒரு தூக்கம் தானே. அதனால்தான் சாவைச் சொல்லும்போது உறக்கத்தோடு ஒப்பிடுவார் வள்ளுவர்.
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”
என்பார். தூங்கி விழிப்பது போல பிறப்பும் இறப்பும் என்று கூறுவார்.
ஒரு சாவில் பிறந்ததே ஒரு பெரும் சமயம் என்றால் அந்தச் சாவு குறித்தத் தெளிவு நமக்கு வேண்டுமல்லவா? இறப்புக் கொடுமையைப் பார்த்துப் பயந்ததால் ஒரு சமயமே உருவாகியது என்றால் இறப்பு எத்தனை கொடுமையானது. ஒரு முடிவின் (சாவின்) ஆரம்பமே, சித்தார்த்தரைப் புத்தராக ஆக்கியது, புத்த சமயத்தைத் தோற்றுவித்தது எனலாம்.
சமீபத்தில் இணையத்தில் ஒரு மருத்துவக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.. நல்ல
நம்பிக்கையூட்டும் கட்டுரை. மருத்துவக் கட்டுரை. படித்தவுடன்
அக்கட்டுரைப்படி நடந்தால்....எப்படி இருக்கும்? என்ற கற்பனைச் சிறகுகள்
விரிந்து கொண்டே சென்றன.
இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்கிறது அம்மருத்துவ கட்டுரை.
பிறகென்ன.... அப்படியென்றால் இறப்புத் துக்கமே காசு உள்ள செல்வந்தர்
இல்லங்களில் இனிமேல் இருக்காது. மனித வாழ்வு நிலையற்றதாக இருக்கும் போதே இத்தனை ஆட்டம் போடும் பணக்கார வர்க்கம். பணத்தால் உயிரை வாங்க முடியும் என்றால் பிடித்த உயிர்களை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்து, வைத்துக் கொண்டு கும்மாளம் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அரசியல் வாதிகள் கேட்கவே வேண்டாம். தங்கள் அபிமான ரவுடிகள், கள்ள ஓட்டுப் போடும் ஆசாமிகள் என்று எல்லோரையும் எத்தனை கோடி கொடுத்தேனும் காப்பாற்றி விடுவார்கள். தலைவனுக்காகத் தீக்குளிக்கும் தொண்டர்கள் கூட்டம் பெருகும்.
மனைவிமார்கள் எல்லாம் ”அதான் பணமும் தர்றேன்; உயிரையும் காப்பாத்தித் தரேங்கறாரே; போய்யா போய்த் தீக்குளிய்யா என்று தங்கள் கணவன்மார்களைத் நச்சறிக்க ஆரம்பித்து விடுவார்கள்...
தன் குடும்பத்துக்கு ஏதோ சிறிதளவு பணம் கிடைக்கிறது என்னும் போதே
உயிர்த்தியாகம் செய்ய எண்ணும் தொண்டர்ப் படை, தன் உயிரே திரும்ப
கிடைக்கும் என்றால் என்ன செய்யத் துணியமாட்டார்கள். ”என் தலைவனுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் உயிர் விடுவேன்” ”உயிர் தலைவனுக்கு உடல் மண்ணுக்கு” போன்ற மேடைகளில் எப்போதும் ஒலிக்கும் வீர வசனங்களுக்கு உயிர் வந்து விடும்.
இது கெடக்குது. சந்திரன் இந்திரன் எங்கு வீடு கட்டிக் குடியேறினாலும் பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். இப்போது அவசர அவசரமாக கட்டப்படும் அடுக்கு மாடி வீடுகளும் கிடைக்காமல் போகும். ஒவ்வொரு அலமாரியிலும் ஒவ்வொரு குடும்பம் உட்கார்ந்தே தூங்க வேண்டியிருக்கும். அப்ப்பபா.... நினைக்கவே அச்சமாக இருக்கிறது.!!!
இப்படி வரிசை வரிசையாகக் கற்பனை எழுந்தாலும் ஒரு முன்னேற்றம் ஏற்படுகிறது என்றால் குறைகளைக் களைந்து அதனை ஏற்றுக்கொள்ளுவதே அறிவுடைமை. ஆனால் இந்தச் சாவு என்பது என்ன? செத்தாரைக் காப்பாற்றுவது என்பது குறித்து மருத்துவ அறிவியல் என்ன கூறுகிறது என்று பார்க்கும் முன் நடந்த சம்பவம் ஒன்றைப் பார்க்கலாம்.
ஒருவர் திடீரென்று இதயத்தைப் பிடித்துக் கொண்டு மார்பு வலி என்கிறார். ஐந்தே நிமிடத்தில் படுத்து விடுகிறார். அவரது உறுப்புகள் யாவும் இருந்தது இருந்தபடியே எத்தகைய சேதமுமின்றி அப்படியே இருக்கின்றன முதலுதவி பலனின்றி இறந்து விடுகிறார். என்ன நடந்தது இருக்கும்? இரத்தம் இல்லை. கத்தல் இல்லை. ஆனால் இருதயமும் துடிக்கவில்லை, சுவாசப் பையும் இயங்கவில்லை. மூளை பிராண வாயுவைச் சேமிப்பதற்கான் தன் இயக்கத்தை நிறுத்தி விட்டது. அவ்வளவுதான். மருத்துவ ரீதியாக இறந்து விட்டதாக கூறி விடுகிறார்கள். இதனை மூளைச்சாவு என்கின்றனர்.
முழுமையான கோமா நிலை, வலியை உணர முடியாத நிலை, சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசித்தல், சுயநினைவு திரும்பாதிருத்தல், மூளைக்கு ரத்தம் செல்லாமல் இருக்கும் நிலை ஆகியவற்றையே மூளைச்சாவு என்கிறார்கள்.
இறப்பு என்பது என்ன? இரத்த அணுக்களின் அல்லது கலங்களின் (Cell) இறப்புத்தான், ஒருவனின் இறப்பு என்று கூறப்படுகிறது. அதாவது அந்த மனிதனின் இருதயத் துடிப்பு நின்றாலும், சுவாசம் நின்றாலும் மனிதன் உடனடியாக இறப்பதில்லை. இவை இரண்டும் செயற்படுவது நின்று நான்கு முதல் ஐந்து நிமிடங்களுக்குப் பின்னரே அவனது செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. அவர் இறந்ததற்குக் காரணம் குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் அவரது கலங்களுக்குப் ஆக்சிஜன் கிடைக்காததால் அவரது மூளையினது கலங்கள் செயற்பட முடியாதவாறு பாதிக்கப் பட்டதேயாகும். அதாவது அக் குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவரது இருதயத்தையும், சுவாசப் பையையும் மூளைச் செல்களையும் இயங்க வைக்க முடிந்திருந்தால் அவர் பிழைத்திருப்பார்.
இறப்புப் பற்றிய இக் கருத்துத்தான் இது வரை மருத்துவ உலகினால் ஏற்றுக் கொள்ளப் பட்டதாக இருந்தது. ஆனால் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள ஒரு கண்டுபிடிப்புக் காரணமாக மேற் கூறிய கருத்து கேள்விக்கு உரியதாகியுள்ளது. University of Pennsuylvanவைச் சார்ந்த Dr. Lance Becker ஒரு பிரேதப் பரிசோதனை செய்து கொண்டிருந்த போதுதான் அந்த ஆச்சரியம் ஊட்டும் உண்மை வெளிப்பட்டது. இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் அந்த மனிதனது (அல்லது பிணத்தினது) கலங்கள் உயிரோடு இருந்தனவாம். வியப்படைந்த அவர் தனது பரிசோதனையைத் தொடர்நதார்..
இறந்து சில மணி நேரங்கள் செல்கள் உயிரோடு இருந்த போதும் மருத்துவர்களால் ஏன் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் முதல் ஐந்து நிமிடங்கள் பிராண வாயு இல்லாதிருந்ததால், பின்பு அக்கலங்களுக்குப் ஆக்சிஜன் கிடைத்த போதும் அதை ஏற்றுக்கொள்ளும் வலு செல்களுக்கு இல்லாது போய் விட்டது.
இருதயம் நின்று விட்ட ஒருவரை மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து சேர்க்க குறைந்தது பதினைந்து நிமிடமாவது ஆகிவிடுகிறது. இது மிகவும் குறைவு. உடனே இருதயத்தைத் துடிக்க வைக்க ஆக்சிஜன் பம்ப் செய்யப் படுகிறது.
இரத்த ஓட்டம் இல்லாததால் பட்டினி கிடந்த செல்களை ஆக்சிஜனில்
மூழ்கடிக்கிறார்கள். இது அவற்றின் மரணத்திற்கு ஏதுவாகிறது..
மாற்று சிகிச்சை முறையில், அதாவது இரத்தக் குழாய்களை இரத்தத்தால் நிறப்பாமல் அப்படியே விட்டுவிட்டு உடலுக்கான இரத்த ஓட்டத்தைச் செயற்கையாகக் heart-lung bypass machine மூலம் கொடுத்துக் கொண்டு இதயத்தைத் துடிக்க வைத்தால். 80 சதவிகித இதய நோயாளிகளைக் காப்பாற்ற முடியும் என்கிறது ஆய்வு.
அத்துடன் இரத்தத்தின் வெப்பத்தை 37 இலிருந்து 33 டிகிரி செல்சியஸ்க்கு குறைப்பதன் மூலம், ஆக்சிஜனால் வாயுவால் மூழ்கடிக்கும் போது கலங்களில் ஏற்படும் இரசாயன மாற்றங்களைக் குறைக்க முடியும் என்றும் கண்டு
பிடித்திருக்கிறார்கள். இதை வெளியிடங்களிலும் செயற்படுத்தக் கூடியதாக
உப்பும் ஐசும் சேர்ந்த ஒரு வித கலவையை ஊசி மூலம் ஏற்றும் முறையையும் கண்டு பிடித்திருக்கிறார்கள். (நன்றி மருத்துவர் எம்.கே.முருகானந்தன்)
மூளைச்சாவு ஏற்பட்ட நிலைகளில் உள்ள நோயாளிகளைக் குணப்படுத்துவது கடினம். மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்குப் பொருத்தினால், உறுப்புகள் பழுதடைந்த நிலையில் உள்ளவர்கள் மறுவாழ்வு பெறமுடியும். நுரையீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளையும், திசுக்களையும் தானம் செய்யலாம் இவையெல்லாம் நாம் அறிந்தவையே. ஆனால் இந்த மூளைச் சாவு பற்றி நம் முன்னோர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பது நாம் அறியாதவை..
நான் என்ன கூறப்போகிறேன்.. வழக்கமாகக் கூறுவதைப்போல வியக்க வைக்கும் நம் முன்னோர்களின் அறிவுத்திறனை எடுத்துக்கூறப் போகிறேன்.. அவ்வளவுதான்.
எப்போதும் போல் நம்மவர்கள் அடக்கமாகவே இருந்து அமரர்களானவர்கள். அதிலும் சித்தர்கள் எதையும் மூடி மறைத்து அடங்கித் தம் திறமையை வெளியுலகுக்குக் காட்டாமலே பித்தர்களைப் போலத் திரிந்தவர்கள். ஆனால் இவர்களிடம், இந்த நுன்னறிவு எங்கிருந்து வந்தது என்பதுதான் நம்மால் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இன்றுவரை இருக்கிறது.
சாவாமையை வேண்டி மருத்துவர் இடைக்காட்டுச் சித்தர் எப்படி நுட்பமாக வரம் கேட்கிறார் என்பதைப் பாருங்கள். இது வெறும் பால் கறக்கும் பாடல்தான். பால் மனிதனின் பிறப்பிலும் இறப்பிலும் சம்பந்தப் படும் பொருள் ஆயிற்றே. சாவாமல் இருக்க வேண்டுமென்றால் மூளை செல்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதைப் புலப்படுத்திய இதய நோய் வல்லுநராக என் கண்களுக்குக் காட்சி அளிக்கிறார் இவர் நீங்களும் பாருங்கள் பாடலை.
சாவாது இருந்திட பால்கற - சிரம்
தன்னில் இருந்திடும் பால்கற
வேவாது இருந்திட பால்கற - வெறு
வெட்ட வெளிக்குள்ளே பால்கற.
என்று அன்றே இறவாமை வேண்டி பாடியுள்ளார் இடைக்காட்டுச் சித்தர். அப்போது
நம்ம இராமராஜனும் இது போல தத்துவங்கள் ஏதேனும் கூறியிருப்பாரோ என்று
எண்ணுவது புரிகிறது. இவர் பாடலையும் ஆராய்ந்துவிட வேண்டியதுதான். இந்தப்
பால் குறித்து சித்தர்கள் பலரும் பல்வாறு கூறியுள்ளனர். நான் சாவாமல்
இருந்தால் இன்னும் சாவின் சுவை அடுத்த பதிவிலும் கூடும்..
நன்றி குமுதம் ஹெல்த்.

Re: சாவின் சுவை....
மரணத்தைப்பற்றி எத்தனை விஷயம் இத்தனை நுணுக்கமாக பானுன்னா பின்ன என்னவாம்..... எப்படிப்பா?
உண்மையே.... இறப்பவரெல்லாம் உயிர்த்தெழ ஆரம்பித்துவிட்டால் பாரம் தாங்காமல் பூமித்தாயின் நிலை என்னவாது?
நாம் எல்லோருமே ஒரு நாள் சாகப்போறவங்க தான் ஆனால் நீங்க சொன்னது போல ரிட்டர்ன் டிக்கெட் தேதி குறிப்பிடப்படாத டிக்கெட் ஹோல்டர்ஸ்...
இறப்புக்குப்பின்னும் செல்கள் ஒரு பிரேதத்துக்கு ஒரு மணி நேரமாகியும் உயிர்ப்பாக இருந்தது ஆச்சர்யமான விஷயம்..
இறப்பே இல்லன்னா அப்ப உடல்பாகங்கள் கண் போன்றவற்றை எப்படி டொனேட் செய்ய முடியும்?
யோசிக்கக்கூடிய விஷயமே...
சித்தர்கள் மரணத்தை வென்றவர்கள்.... ஆசை துறந்தவர்கள்.....
கிட்டதட்ட பீஷ்மரைப்போல்....
யப்பா உதாரணங்கள் படிக்கும்போது கொஞ்சம் பயமாக தான் இருந்தது.... எல்லா விஷயத்திலும் ரெண்டு பக்கம் இருப்பது போல் இதில் அட்வாண்டேஜ் டிஸ் அட்வாண்டேஜும் இருப்பதை அறிய முடிகிறது....
எத்தனை புதிய ப்ராடட்க்ஸ் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தினாலும் அதனால் செல்வந்தரும் அரசியல்வாதியும் மட்டுமே கொழிக்க முடியும்...
இயற்கைக்கு புறம்பாக என்னத்தொடங்கினாலும் அது நல்லதில் போய் முடியுமா?
மிக அருமையான தலைப்பு பானு... மரணத்தின் சுவை.....
அட என் ஆசியும் பிரார்த்தனையும் எப்பவும் என் பானு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்கவேண்டும்....தொடருங்க சுவாரஸ்யமாக இருக்கிறதுப்பா...

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: சாவின் சுவை....
மஞ்சுபாஷிணி wrote:மரணத்தைப்பற்றி எத்தனை விஷயம் இத்தனை நுணுக்கமாக பானுன்னா பின்ன என்னவாம்..... எப்படிப்பா?

நீண்ட நாட்களாயிற்று .. இப்படி நீண்ட விமரிசனங்களைப் படித்து ம்ஞ்சு.. ஈகரை விரிச்சோன்னு இருந்தது நீங்க இல்லாம... என்னவோ வெறுமையா உணர்ந்தேன் இவ்வளவு நாளா.. அப்பா... கடவுளுக்கு நன்றி.. மீண்டும் இணையச் செய்த கருணைக்கு..
என்னோட ஆர் ஏ சி எப்போ கன்ஃபாம் ஆகுமோ தெரியலை. ஆனா அதுவரைக்கும் இதுபோல அறுவையை எல்லாம் கொடுத்து உங்களையெல்லாம் கொல்லாம கொல்லுவேன்... மன்னிப்பீர்களா க நன்றி மஞ்சு..
அறுவைன்னு சொன்னவுடன் தான் நினவு வருகிறது.. அறுவை என்ற தலைப்பில் இரண்டு கட்டுரை போட்டுள்ளேன் படிச்சு கருத்து சொல்லுங்க.. காத்திருக்கிறேன்.. வசிஸ்டர் வாயால பிரம்ம ரிஷி பட்டம் பெற...

Re: சாவின் சுவை....
ஆவி பறக்கும்(!!)
சாவின் சுவையில்
மேவிய மனம்
தாவியே ஓடுகிறது.

சாவின் சுவையில்
மேவிய மனம்
தாவியே ஓடுகிறது.

Ganesh1- பண்பாளர்

- பதிவுகள்: 140
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 05/08/2010
மதிப்பீடு: 0
Re: சாவின் சுவை....
நமக்கு தெரிஞ்ச TTE ஒருத்தர் இருக்காரு , வேணுமின்ன சொல்லுங்க RAC கன்பர்ம் பண்ண சொல்லுறேன் ,பட் ஒன் கண்டிஷன் "ஒன்லி அப்பர் பெர்த் தான்" , அப்பதாஎன் மேலே போவ ஈசியா இருக்கும் ??Aathira wrote:என்னோட ஆர் ஏ சி எப்போ கன்ஃபாம் ஆகுமோ தெரியலை. ஆனா அதுவரைக்கும் இதுபோல அறுவையை எல்லாம் கொடுத்து உங்களையெல்லாம் கொல்லாம கொல்லுவேன்... மன்னிப்பீர்களா க நன்றி மஞ்சு..![]()

Re: சாவின் சுவை....
ராஜா wrote:நமக்கு தெரிஞ்ச TTE ஒருத்தர் இருக்காரு , வேணுமின்ன சொல்லுங்க RAC கன்பர்ம் பண்ண சொல்லுறேன் ,பட் ஒன் கண்டிஷன் "ஒன்லி அப்பர் பெர்த் தான்" , அப்பதாஎன் மேலே போவ ஈசியா இருக்கும் ??Aathira wrote:என்னோட ஆர் ஏ சி எப்போ கன்ஃபாம் ஆகுமோ தெரியலை. ஆனா அதுவரைக்கும் இதுபோல அறுவையை எல்லாம் கொடுத்து உங்களையெல்லாம் கொல்லாம கொல்லுவேன்... மன்னிப்பீர்களா க நன்றி மஞ்சு..![]()
![]()
![]()
//வேணுமின்ன சொல்லுங்க RAC கன்பர்ம் பண்ண சொல்லுறேன்//
விடுதலை..'' விடுதலை..விடுதலை.. விடுதலை.....
//பட் ஒன் கண்டிஷன் "ஒன்லி அப்பர் பெர்த் தான்"// ,
எனக்கு அப்பர்தான் பிடிக்கும்.. தொந்தரவு இல்லாத பயணத்திற்கு தேர்ந்து எடுப்பீர் அப்பர் பர்த்.
//அப்பதாஎன் மேலே போவ ஈசியா இருக்கும் ??//
(நான் பெரும்பாலும் அதைதான் விரும்புவேன்..
தூங்குமூஞ்சி..ஆதிரா)
ஆனாலும்
- Spoiler:
Re: சாவின் சுவை....
மேக்கப் போட்டுகிட்டு அழகா இருக்கீங்க ,Aathira wrote:
தூங்குமூஞ்சி..ஆதிரா)
ஆனாலும்வந்து தொல்லை கொடுப்போமே.. ஈகரையைச் சுத்திச் சுத்தி..
- Spoiler:

Re: சாவின் சுவை....
[ [/spoiler] வந்து தொல்லை கொடுப்போமே.. ஈகரையைச் சுத்திச் சுத்தி..[/quote] மேக்கப் போட்டுகிட்டு அழகா இருக்கீங்க ,
[/quote]
அவங்க விட நினைத்ததையும் நீங்க 'மேக்கப்' செய்துட்டீங்க ராஜா.
[/quote]அவங்க விட நினைத்ததையும் நீங்க 'மேக்கப்' செய்துட்டீங்க ராஜா.
Ganesh1- பண்பாளர்

- பதிவுகள்: 140
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 05/08/2010
மதிப்பீடு: 0
Re: சாவின் சுவை....
ராஜா wrote:மேக்கப் போட்டுகிட்டு அழகா இருக்கீங்க ,Aathira wrote:
தூங்குமூஞ்சி..ஆதிரா)
ஆனாலும்வந்து தொல்லை கொடுப்போமே.. ஈகரையைச் சுத்திச் சுத்தி..
- Spoiler:
ஆவியா வந்தாலும் அழகா வருவோம்ல..காமாலைக் கண்ணன்..
Re: சாவின் சுவை....
ஆ(வி)திரா !!

Ganesh1- பண்பாளர்

- பதிவுகள்: 140
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 05/08/2010
மதிப்பீடு: 0
Re: சாவின் சுவை....
மேக்கப் போட்டுகிட்டு அழகா இருக்கீங்க ,Ganesh1 wrote:[ [/spoiler] வந்து தொல்லை கொடுப்போமே.. ஈகரையைச் சுத்திச் சுத்தி..
[/quote]அவங்க விட நினைத்ததையும் நீங்க 'மேக்கப்' செய்துட்டீங்க ராஜா.[/quote]
அவரே மேக்கப் மேன் கில்லாடி!!!! கூட நீங்க வேற அசிசிஸ்டெண்டா?
Re: சாவின் சுவை....
Ganesh1 wrote:ஆ(வி)திரா !!![]()
பேர் சும்மா அதிருதே....
ராத்திரி விபூதியெல்லாம் பூசிகிட்டு பக்கத்தில இரும்புத்துண்டெல்லாம் போட்டுட்டு படுங்க...

Re: சாவின் சுவை....
Aathira wrote: நீண்ட நாட்களாயிற்று .. இப்படி நீண்ட விமரிசனங்களைப் படித்து ம்ஞ்சு.. ஈகரை விரிச்சோன்னு இருந்தது நீங்க இல்லாம... என்னவோ வெறுமையா உணர்ந்தேன் இவ்வளவு நாளா.. அப்பா... கடவுளுக்கு நன்றி.. மீண்டும் இணையச் செய்த கருணைக்கு..
என்னோட ஆர் ஏ சி எப்போ கன்ஃபாம் ஆகுமோ தெரியலை. ஆனா அதுவரைக்கும் இதுபோல அறுவையை எல்லாம் கொடுத்து உங்களையெல்லாம் கொல்லாம கொல்லுவேன்... மன்னிப்பீர்களா க நன்றி மஞ்சு..![]()
அறுவைன்னு சொன்னவுடன் தான் நினவு வருகிறது.. அறுவை என்ற தலைப்பில் இரண்டு கட்டுரை போட்டுள்ளேன் படிச்சு கருத்து சொல்லுங்க.. காத்திருக்கிறேன்.. வசிஸ்டர் வாயால பிரம்ம ரிஷி பட்டம் பெற...![]()
உங்க ஆர் ஏ சி கன்பர்ம் ஆகாம நீங்க நீண்ட ஆயுளுடன் இருந்து உங்க சேவையால் எல்லோரும் பயனடைவதே என் வேண்டுதல் பானு...
என்னுடையது கன்பர்ம் ஆயிருச்சுப்பா.. வருடம் தெரியும் ஆனால் தேதி மாசம் தெரியலை.. சொல்றவங்க ப்ராப்பரா சொல்லத்தல? முதல்ல கஷ்டப்பட்டேன். உலகத்தின் மீது ஆசைக்கொண்டு அல்ல. பிள்ளைகளை அவர்கள் செட்டில் ஆகுமுன் விட்டு போகிறோமே என்று. அதன்பின் இறைவன் மீது பாரத்தைபோட்டுவிட்டேன். அவனின்றி அணுவும் அசைவதில்லை. அதனால் பயம் இனி எதற்கு என்று....
ஈகரையை விட்டு இருப்பேனா நான் பானு? கண்டிப்பா கோபம் இல்லப்பா மனம் துக்கமாக இருந்தது. வேதனையுடன் வரவேண்டாம் என்றே வராமல் இருந்தேன். மஞ்சுன்னா எல்லோரையும் மகிழ்வைக்கவும் சிரிக்கவைக்கவும் மட்டுமே எல்லோரும் அறியனும் என்றே எப்போதும் நினைப்பேன். வேதனைகள் மறைந்து (காலம் மனப்புண்ணை ஆற்றும் மருந்தாமே பானுக்குட்டி) மீண்டும் அதே சந்தோஷத்துடன் இணைந்துவிட்டேன் ஈகரையுடன் எல்லோரையும் மகிழ்விக்கும் அதே மஞ்சுவாகவே....
கண்டிப்பா படிப்பேன். நீங்க எழுதியதை.... படிச்சு பின்னூட்டமும் போடுவேன்... இங்க வாங்க உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்றேன். இந்த பானுப்பொண்ணு குமுதம் ஹெல்த் ஸ்பெஷல் என்னென்னவோ எழுதுதாமே படிக்க ஆசைப்பட்டு இங்க இருக்கும் கடையில் போய் புக் வாங்கி அம்மா கிட்ட காமிச்சேன். இந்த அழகான ராட்சசி என் இனிய தோழி ஆதிரா என்னும் பானு தான் சந்தனம் பற்றிய மகத்துவம் எல்லோரும் சிலாகிக்கும்படி ரசிக்கும்படி எழுதி இருப்பது அப்டின்னு சொன்னேன் அம்மா கிட்ட.... நல்லா சாப்பிடனும் பானு நீங்க.... என்னைப்போல் குண்டா இருக்கணும்... சரியாப்பா?

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: சாவின் சுவை....
ஐயடா பிரம்மரிஷியா? சாவே அண்டாத பீஷ்மரைப்போல் நீங்க. உங்க எழுத்துக்களில் இருக்கும் முதிர்ச்சி யப்பா என்னால இப்படி எல்லாம் யோசிக்கமுடியாது. கலைக்கிட்ட பலமுறை நான் வியந்ததுண்டு இப்படி கேட்டு. எப்டி இப்படி எல்லாம் எழுத தெரியுது... யோசிச்சாலும் தெரியாதே எனக்கு... 

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum