புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018தமிழ்நேசன்1981
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
ayyasamy ram
வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
ayyasamy ram
இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
ayyasamy ram
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
ayyasamy ram
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
ayyasamy ram
உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
ayyasamy ram
என்னைப் பற்றி...
Panavai Bala
சில்லுகள்...
Panavai Bala
நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
ayyasamy ram
காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
ayyasamy ram
இலக்கியத்தில் 'பேராசிரியர்'
ayyasamy ram
'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
ayyasamy ram
தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
ayyasamy ram
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
valav
அறிமுகம்-சத்யா
ரா.ரமேஷ்குமார்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ஜாஹீதாபானு
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ஜாஹீதாபானு
எனக்குள் ஒரு கவிஞன் SK
ஜாஹீதாபானு
காத்திருக்கிறேன் SK
ஜாஹீதாபானு
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
T.N.Balasubramanian
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
சிரிக்கும் பெண்ணே-சுபா
SK
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
SK
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
திட்டி வாசல்
T.N.Balasubramanian
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
T.N.Balasubramanian
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
prevel
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Panavai Bala |
| |||
valav |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்!

நமக்கு மிகவும் விருப்பமான யாரோ ஊரிலிருந்து வந்திருக்கிற பெரியப்பா, சித்தப்பா ஒருவர் நம்மோடு உட்கார்ந்து கொண்டு கதைசொல்லி நம்மோடு பேசிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்... அப்படித்தான் இருந்தது அன்றைக்கு.
புதுவைப் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலத்தில் ஆய்வு மாணவர்கள் சூழ்ந்து கொண்டு கேள்விகளால் துளைத்தெடுக்க சிரித்துக் கொண்டே, பாடம் நடத்துகிற பேராசிரியரைப் போல அவர்களுக்குப் பதில் சொல்கிறார் அவர்.. தமிழ்ச் சினிமா உலகில் குறிப்பிடத்தக்க கலைஞர் நாசர்.
'இன்றைய சினிமா மொழி மற்றும் பண்பாட்டு போக்குகள் குறித்து நாசருடன் ஓர் உரையாடல்' என்ற பொருளில் மாணவர்களின் சினிமா குறித்த தேடல்களுக்கான விடைகளோடு அவர்களோடு நான்கு மணிநேரம் எந்த விதமான நடிகர் பந்தாவும் இல்லாமல் எளிமையாகவும் இனிமையாகவும் கலந்துரையாடினார்.
ஆய்வு மாணவர்கள் என்பதால் சினிமாவின் எதிர்முகம் குறித்த கேள்விகளும் இடம் பெற்றிருந்தன என்றாலும், அவற்றையெல்லாம் ஒருவிதமான பொறுப்புணர்வோடு ஏற்றுக் கொண்டு சிரித்தபடியே அவர்களைப் பார்த்துக் கேட்கிறார்.
'அந்தச் சினிமாவை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?' மாணவர்கள் மத்தியில் சற்று அமைதி, அப்புறம் தெளிவு... இப்படித் தொடங்கிய உரையாடல் ஒருகட்டத்தில் மிகக் காரசாரமாகவும், விறுவிறுப்பாகவும் மாறியது.
தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என விரிந்த அளவில் பேச்சு சென்றது. தமிழ் சினிமாக்களில் இன்றைய இளைஞர்களின் பங்களிப்புக் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. சிரித்துக் கொண்டே பாடம் நடத்துகிற மாதிரியே பதில் சொல்லுகிறார்... அனுபவத்தின் தெறிப்பு முகத்தில் தெரிய, கேமராவுக்கு வெளியிலான அவரது வாழ்வியல் பதிவுகளும் இடம்பெறுகின்றன.
'சினிமா பற்றி மற்றவர்களுடைய புரிதலை அறிந்து கொள்வதற்காகவும், சினிமாவை உருவாக்குகின்ற ஒரு மையத்தில் இருந்து கொண்டு பார்க்கிற நான், சினிமாவை இன்னொரு கோணத்தில் இருந்து கொண்டு பார்க்கிற விரும்புகிற ரசிக்கிற உங்களுடைய கருத்துகளையும், அணுகுமுறைகளையும் அறிந்து கொள்வதற்காகவே இந்தச் சந்திப்புக்கு நான் ஒத்துக் கொண்டேன்,' என்றார்.
'எதை வேண்டுமானாலும் பேசலாம் என்றாலும் நான் ஒரு சினிமாக்காரன் என்பதால் அதை முன்னிறுத்தியே பேச விரும்புகிறேன். அதற்குக் காரணமும் இருக்கிறது. இன்றைக்குச் சினிமாக் குறித்த தவறான புரிதல்கள் பல இருக்கின்றன. அதைக் குறித்த விவாதத்தை விரும்புகிறேன்' என்றும் கூறினார்.
'கோட்பாட்டு ரீதியாக சினிமா வலிமையான ஊடகம் என்றாலும் தமிழ்ச் சமூகத்தில் அத்தகைய வலிமை பயன்படுத்தப்படுகிறதா?' என்ற கேள்வியை அவரே எழுப்பி, உலகம் முழுவதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் சினிமாவைப் பற்றிய பாடம் கண்டிப்பாய் இருக்கிறது. ஏனென்றால் வாழ்வியல் வளர்ச்சிக்குச் சினிமாவின் பங்கு மிக முக்கியமானது என்பதால் அங்கு சினிமா கட்டாயப் பாடமாகவே இருக்கிறது. ஆய்வியல் மாணவர்களுக்கு இன்றைய சமூகத்தின் தேவைக்குச் சினிமாவின் பங்கு குறித்த தெளிவு மிகவும் அவசியம்' என்பதாய் அவர் விளக்கமளித்தார்.
'இந்த அமர்வு சினிமாவைக் குறித்த ஒரு புரிதலாக உங்களுக்கும் எனக்கும் அமையும். நான் ஒன்றும் சினிமாவைக் கரைத்துக் குடித்தவன் அல்லன். உங்களைப் போல நானும் ஒரு மாணவன்தான். சற்று முன்னால் அனுபவப்பட்டு விட்ட மாணவன் என்ற நிலையில்தான் உங்களோடு கலந்துரையாடுகிறேன். நான் நடித்த, நான் ரசித்த சினிமாக்களைக் குறித்து நீங்கள் ரசித்தவற்றோடு சேர்த்து ஒப்பிட்டுப் பேசுவது இன்னும் இனிமையாக இருக்கும்,' என்றார்.
பொதுவான மேடைப் பேச்சுப் போலவோ அல்லது கேமிராவிற்கு முன்னால் நிகழ்த்துகிற நடிப்பைப் போலவோ அல்லாமல் இயல்பாகவும், யதார்த்தமாகவும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்த விதம் மாணவர்களை எளிதில் ஈர்த்து அவரோடு ஒட்டி உறவாட வைத்தது என்பது உண்மை.
சினிமா உலகில் தான் கடந்து வந்த பாதைகளை அதே பசுமையோடு அனுபவப் பூர்வமாக மனந்திறந்து மாணவர்களோடு மீள்நினைவு கூர்ந்தார். எங்கோ எட்டாத தூரத்தில் இருக்கிற நட்சத்திரத்தைப் போலத் தெரிகிற சினிமா நடிகர்களைப் பார்க்கிற கிராமத்து ஆய்வு மாணவர்கள் தம்முடைய அத்தனை நாள் கேள்விகளையும் இடைவிடாது தொடுத்துக் கொண்டேயிருந்தனர்.
நான்கு மணிநேரமும் சற்றும் அயர்ந்து விடாமல் நின்று கொண்டே, இடையில் கரும்பலகையில் படம் வரைந்து விளக்கம் சொல்லி சினிமாவைக் கோட்பாட்டு முறையிலேயே கற்றுக் கொடுத்தார்.
பதில்கள் அத்தனையும் அனுபவப் பிழிவு என்பதற்கு ஒரு சான்று.
ஒரு மாணவரின் கேள்வி, 'ஒரு சினிமா என்றால் பலநூறு பேர் கலந்த ஒரு கூட்டுச் செயல்பாடு என்றாலும், உங்களுக்குத்தானே பெருமையெல்லாம் வந்து சேர்கிறது? இது எப்படி?'
சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டுப் பதில் சொல்கிறார். (தனக்குத் தேநீர் கொண்டு வந்த புலத்தின் பணியாளரான ஓர் அம்மாவைக் காட்டி) 'இவர் யார் என்று தெரியுமா' என்று கேட்டார்.
'தெரியும்' என்றார் அந்த மாணவர்.
'அப்படியானால் அவர் பெயர் என்ன?' என்று கேட்டார்.
அந்த மாணவரிடத்தில் மௌனம்...
அப்புறம் தொடர்கிறார்...
'காலையில் வந்தவுடன் யாருக்கு முதலில் வணக்கம் செய்வீர்கள்?'
'பேராசிரியர்களுக்கு' என்றார் அந்த மாணவர்
'ஏன் இந்த அம்மாவுக்கு வணக்கம் செய்யவில்லை'
'நீங்கள் உட்கார்ந்து பாடம் படிப்பதற்கு போதிய சுத்தத்தையும், அழகையும் அதிகாலையில் இங்கு வந்துசெய்து தருபவர் அவர்தான் என்றாலும் நீங்கள் உங்களுக்கு முக்கியமானவர்களுக்குத்தானே வணக்கம் செய்கிறீர்கள்?' என்று அவர் முடிக்கும் முன்பாகவே கைதட்டல் உரத்து ஒலிக்கிறது.
மாணவர்கள் மட்டுமல்லாமல் புலத்தின் பேராசிரியப் பெருமக்களும் தங்களது வினாக்களை எழுப்பினர். எல்லாருடைய கேள்விகளையும் பொறுமையோடு அமைதியாகக் கேட்டு ஒருமுறை உள்ளூறச் சிந்தித்து அவர்களின் கேள்வியின் ஆழம் புரிந்து அதற்கேற்றவாறே பதில் சொன்னார் என்பதைக் கேள்வி கேட்டவர்களின் முகங்களில் ஏற்பட்ட மகிழ்ச்சியை வைத்தே அடையாளம் காணலாம்.
இலக்கியம், வரலாறு, பண்பாடு என்பதாகவே விளங்கும் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு சினிமாக் குறித்த இந்தச் சந்திப்பு ஊடகங்கள் குறித்த ஒரு புதிய வாசலைத் திறந்து விட்டது எனலாம்.
புலத்தின் முதன்மையர் எஸ்.ஆரோக்கியநாதன், நாசரின் நெருங்கிய தோழராகவும் கவிஞராகவும் விளங்கும் விரிவுரையாளர் பா.இரவிக்குமார் உள்ளிட்ட பேராசிரியப் பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அதிக மகிழ்ச்சி மாணவர்களின் முகத்திலேதான்... மதிய உணவு வேளை கடந்த பின்னும் 'இன்னும் கேளுங்கள்' என்பதாய்த் தன்னை நோக்கி வரும் கேள்விக் கணைகளுக்காய்க் காத்துக் கொண்டிருந்தார் நாசர்.
இன்னொரு சமயம் வாய்க்காமலா போய்விடும்? என்பதாய் அவர் விடைபெறும்போதில் 'அதே சித்தப்பா ஊருக்குப் போகும்போது சின்னக் குழந்தைகள் முகத்தில் ஓர் ஏக்கமும் வருத்தமும் தோன்றுமே' அதுபோலவே ஒரு பிரிவுணர்ச்சி மாணவர்களின் முகத்தில் தென்பட்டது. முறையாக எல்லோரிடமும் விடைசொல்லிப் புறப்பட்டபோது நாசருடைய முகத்திலும் அது தென்பட்டது இயல்பாக இருந்தது.
தாங்க்ஸ் : - அருணன்
http://youthful.vikatan.com/youth/nyouth/nazar_170910.php

Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Re: நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்!
நாசர் ஒரு அமைதியான அருமையான நடிகர் அறிஞர்..! நன்றி உதுமான்..!
கலைவேந்தன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684
Re: நடிகர் நாசர் பார்வையில் சினிமா... ஓர் உரையாடல் அனுபவம்!
கலை wrote:நாசர் ஒரு அமைதியான அருமையான நடிகர் அறிஞர்..! நன்றி உதுமான்..!
2010 தில் போட்டோ போடுங்க கலை அண்ணா. 2005 -ல் ரொம்ப நல்ல இருக்கீங்க.
Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum