|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by balakarthik Today at 7:37 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 7:34 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Aathira Today at 7:19 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by முஹைதீன் Today at 6:35 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm
» பென் டிரைவ் format - உதவி
by பிளேடு பக்கிரி Today at 5:31 pm
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by கேசவன் Today at 5:31 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by vendan.vetri Today at 5:21 pm
» ஏழை
by ஜாஹீதாபானு Today at 5:20 pm
» அறிமுகம்
by வின்சீலன் Today at 5:07 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by வை.பாலாஜி Today at 4:48 pm
» தன்னம்பிக்கை
by யினியவன் Today at 4:45 pm
» IDM அனின்ஸ்டால் செய்ய முடியவில்லை
by முத்துராஜ் Today at 4:35 pm
» ஏதாவது சிறந்த burning சாப்ட்வேர் இருந்தால் கொடுக்கவும்
by SajeevJino Today at 3:48 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Today at 3:31 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by balakarthik Today at 2:56 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை
குறைபாடும்....

குறைபாடும்....
பெண்மை அழகு. அதிலும், தாய்மை அழகுக்கு அழகு. அப்பறம் ஏன் இந்த அழகு சாதன பொருள்கள் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆசை? பெண்களே கொஞ்சம் கவனத்தில வச்சுக்கோங்க. ’ஈன்று புறந்தருதல்’ மட்டுமா உங்கள் கடமை. அக்குழந்தையைச் சான்றோனாகவும், நோயகள் அற்றவனாகவும் ஆக்குவதும் உங்கள் கடமை இல்லையா? அதுவும் போட்டிகள் நிறைந்த இந்தக் காலத்தில்!!
உங்கள் அழகு சாதனப் பொருள் ஆசையால் எதிர்காலத்தில் வாரிசு இல்லையே என்று உங்கள் மகனும், பேரப்பிள்ளைகள் இல்லை என்று நீங்களும் சேர்ந்து வருந்த வேண்டிய சூழல் உருவாகிறதாம். உங்களுக்கே தெரியும் இப்போது பரவலாகப் குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் ஆண்களே என்கிறது மருத்துவ ஆய்வு. ஆண்களுக்கு முக்கியமான குறை ஆண்மைக் குறைவு குறைபாடு.

’ஓராம் மாசம் உடலது தளரும், ஈராமாசம் இடையது மெலியும், மூணாமாசம் முகமது வெளுக்கும், நாலாமாசம் நடந்தால் இரைக்கும், மாங்காய் இனிக்கும் …, சாம்பல் ருசிக்கும், மசக்கையினாலே அடிக்கடி மயக்கம் , சுமந்தவள் தவிக்கும்
மாசங்கள் பத்து, சிப்பியின் வயிற்றில் இருப்பது முத்து’ எவ்வளவு அழகான பாடல்.
அது விலை கொடுத்து வாங்கும் முத்து இல்லங்க. என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத உங்க வீட்டுச் சொத்து. மூன்றாம் மாதம் முகம் அது வெளுக்கும்’ என்பது உண்மைதானே.. பின் ஏன் இந்த முகப்பூச்சுகள்? பொதுவாகக் கருவுற்றப் பெண்களுக்கு அழகு கூடிக் கொண்டே வ்ரும். கண்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கருப்புப் புடவை வாங்கிக் கொடுப்பது வழக்கம். அது இன்னும் அழகைக் கூட்டும் அது வேறு விஷயம். ஆனால் கருப்புக்கு கண் திருஷ்டியைக் கழிக்கும் சக்தி உள்ளதாம்.
இப்ப தொடங்கிய விஷயத்துக்கு வருகிறேன். இயற்கையாகக் குளித்ததும் சாம்பராணி புகை போடுவதும், மணமுள்ள மலர்களைச் சூடுவதும் உடலை நறுமணத்துடன் வைக்கிறது. மேலும் ஏன் இந்த வாசனைத் திரவியங்கள்
மேல் மோகம்?. நீங்கள் எல்லோரையும் போலத்தான் இவைகளை எல்லாம் பயன் படுத்த நினைக்கிறீர்கள். தவறு இல்லை. ஆனால் அது கருவில் இருக்கும் உங்கள் குழ்ந்தைக்குக் கேடு விளைவிக்கிறது என்பதை அறியாமல் இருக்கலாமா? நீங்கள் அந்தக் காலம் போல பேர் சொல்ல மட்டும் பிள்ளையையா பெற்றெடுக்கப் போகிறீர்கள். உலகையே வலம் வர ஒரு வைரத்தை அல்லவா பெற்றெடுக்கப் போகிறீர்கள்.
ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப் சொல்றதைக் கேட்டுக்கோங்க...
புற்றீசல் போலக் கிளம்பும் அழகுசாதனப் பொருட்கள் கருவிலிருக்கும் குழந்தையையே பாதிப்படைய வைக்கிறது எல்லோரையும் போலவே தாய்மை நிலையிலிருக்கும் பெண்களும் கிரீம்களும், ஃபெர்பியூம்களும் பயன்படுத்துவது
நாம் அறிந்ததே. ஊடகங்களும் தேவையற்ற பல பொருட்களை “தாயின் அத்தியாவசியத் தேவை “ எனக் கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் அது தாய் தன்னை அறியாமலேயே தன் குழந்தைக்கு வழங்கும் நோய்.
அதிலும் குறிப்பாக கருவில் இருக்கும் குழந்தை ஆணாய் இருந்தால்
அந்தக் குழந்தைக்குப் பிற்காலத்தில் ஆண்மைக் குறைவு, குறைந்த உயிரணுக்கள் எண்ணிக்கை போன்ற சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாம்.
எட்டு வாரம் முதல் பன்னிரண்டு வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. சில ஹார்மோன்கள் இந்த கால கட்டத்தில் தூண்டப்பட்டு ஆண் குழந்தைகளின்
இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் தாய் பயன்படுத்தும் அழகுப் பொருட்கள் குழந்தையின் ஹார்மோன் தூண்டுதலைத் தடை செய்கின்றன.
டெஸ்டோஸ்ரோன் எனும் ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் ஆண்களின் இனப்பெருக்க வளர்ச்சிக்குப் பெரிதும் தேவையானது. அதன் மீது இந்த அழகு சாதனப் பொருட்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்படியெல்லாம் பட்டியலிட்டு
தாய்மை நிலையில் இருக்கும் பெண்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகின்றார் பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப்.
இந்த அமிலங்களால் புற்று நோய் வரும் வாய்ப்பு கூட இருப்பதாக அவர் அச்சம் தெரிவிக்கின்றார். எனவே தாய்மை நிலையில் இருக்கும் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை அறவே தவிர்ப்பதே நல்லது என அவர் வலியுறுத்துகின்றார்.
இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்லுவது.

அழகு சாதனப் பொருட்களே வேண்டாமுனு தலையில அடிச்சுகிட்டு சொல்லிகிட்டு இருக்கோம். இதுங்களுக்கு இப்படியெல்லாம் ஆசை எங்கே இருந்து வருதுன்னே தெரியலை. தலைவிரிச்சுட்டு ஆடுற இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல!! கருமண்டா சாமி... இதுங்களயெல்லாம் திருத்தவே முடியாது. இன்னும் விபரீத ஆசையுள்ள பெண்களும்
இருக்கிறார்கள். அந்தப் படத்தையெல்லாம் பகிர மனசு வரலை. அதனால்
சாம்பிளுக்கு ஒன்னோட நிறுத்திட்டேன்.
தாய்மை
ஒரு வரம். பெண்களுக்கு மட்டுமே கிடைத்த வரம். இந்தத் தாய்மைக்காக ஏங்கும்
எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எதுவும் எளிதில் கிடைத்துவிட்டால்
இப்படித்தான்.
தன்னை மறந்து கருவில் இருக்கும் தன் குழந்தையின் நலம் ஒன்றையே பத்துத்திங்களும் காத்து வந்ததாலேயே,
” ஐயிரண்டு திங்கள் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பைய லென்றபோதே பரிந்தெடுத்துச் -செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாள்
‘ முந்தித் தவங்கிடந்து முந்நூறுநாட் சுமந்தே
யந்திபகலாச் சிவனை யாதரித்துத் -தொந்தி
சரியச் சுமந்துபெற்ற தாயார்’
என்று அன்று தொடங்கி
’காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தெய்வம் அம்மா’
என்று இன்று வரை தாய்மையைப் போற்றும் புண்ணிய மண் இது. இப்படி தாய்மையை இறைமையாகப் போற்றக் காரணமே பெண்மையின் தியாகம்தான்.
பெண் சுதந்திரம் முக்கியம். அது வேண்டாம் என்று கூறவில்லை. பெண்ணியம் பேசுவோம். சுதந்திரம் பேணுவோம். ஆனால் நம் கடமையைத் தவறாது செய்வோம். நல்ல ஆண்மையுள்ள சமுதாய்த்தை உருவாக்குவது நம் கையில் என்பதை மறக்க வேண்டாம்.
செயற்கை அழகுப் பொருட்களுக்கு மொத்தமா விடை கொடுக்க வேண்டாம். அது நம்மால் முடியவும் முடியாது. அப்பறம் கணவர்களின் பணப்பைக்குச் செலவு இல்லாமல் போய் விடும். அப்படியும் விடக்கூடாதே. பத்துத் திங்கள் மட்டும் விடை கொடுப்போம். அந்தப் பத்துத் திங்களும் மார்க்கெட்டில் என்னென்ன பொருள்கள் வருகின்றன என்ற பட்டிலைப் போட்டு வைத்துக்கொண்டு மொத்தமாக வைத்துவிடுவோம் வேட்டு. அதுவரை இயற்கையான அழகில் தாய்மையை ரசிப்போம் பெண்களே...
ஆதிரா...

Last edited by Aathira on Thu Dec 30, 2010 12:13 pm; edited 2 times in total
Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
அவசியமான அறிந்துகொள்ளவேண்டிய பதிவுக்கு நன்றி அக்கா ,,ஏம்மா இந்த மகளிரணி இதை கொஞ்சம் நல்லா பாருங்கம்மா

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
பகிர்வுக்கு நன்றி அக்கா ...
வளரும் சேயிக்காக உங்கள் அழகு குறைந்தால் தப்பு இல்லை ...

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
தாய்மையின் சிறப்பையும், ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்கும் வழிமுறைகளையும் மிக அழகான எடுத்துக் காட்டுகளுடன் எழுதியுள்ளீர்கள் அக்கா!
பெண்களுக்கு பயனுள்ள கட்டுரை! ஆண்களுக்கு பணத்தைப் பாதுகாக்கும் கட்டுரை!
இப்படியே தங்க நகையை அணியாமல் இருக்க ஏதும் கட்டுரைகள் எழுதினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்! - ஆண்களுக்கும்!

பதிவுகள்: 790423 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81947 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
ரபீக் wrote:அவசியமான அறிந்துகொள்ளவேண்டிய பதிவுக்கு நன்றி அக்கா ,,ஏம்மா இந்த மகளிரணி இதை கொஞ்சம் நல்லா பாருங்கம்மா
நன்றி ரபீக்.. இப்ப எதுக்கு மகளிரணியைக் கூப்பிடுறீங்க...
என்னை மாட்டி விடுவது என்று முடிவே செஞ்சுட்டீங்களா?

கார்த்திக் wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா ...
வளரும் சேயிக்காக உங்கள் அழகு குறைந்தால் தப்பு இல்லை ...
அழகு அந்தக் காலத்தில் கூடும் கார்த்திக். படித்துக் கருத்துச் சொன்னமைக்கு நன்றி.

Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
ரபீக் wrote:அவசியமான அறிந்துகொள்ளவேண்டிய பதிவுக்கு நன்றி அக்கா ,,ஏம்மா இந்த மகளிரணி இதை கொஞ்சம் நல்லா பாருங்கம்மா

பதிவுகள்: 790423 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81947 | புதிய உறுப்பினர்: malinimohan
Contact Administrator
Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
சிவா wrote:தாய்மையின் சிறப்பையும், ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்கும் வழிமுறைகளையும் மிக அழகான எடுத்துக் காட்டுகளுடன் எழுதியுள்ளீர்கள் அக்கா!
பெண்களுக்கு பயனுள்ள கட்டுரை! ஆண்களுக்கு பணத்தைப் பாதுகாக்கும் கட்டுரை!
இப்படியே தங்க நகையை அணியாமல் இருக்க ஏதும் கட்டுரைகள் எழுதினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்! - ஆண்களுக்கும்!
அப்படியெல்லாம் நாங்க எழுதிறமாட்டோம்ல..
முடிவை இப்புடி மாத்திட்டோம்ல..
//செயற்கை அழகுப்
பொருட்களுக்கு மொத்தமா விடை கொடுக்க வேண்டாம். அது நம்மால் முடியவும்
முடியாது. அப்பறம் கணவர்களின் பணப்பைக்குச் செலவு இல்லாமல் போய் விடும்.
அப்படியும் விடக்கூடாதே. பத்துத் திங்கள் மட்டும் விடை கொடுப்போம். அந்தப்
பத்துத் திங்களும் மார்க்கெட்டில் என்னென்ன பொருள்கள் வருகின்றன என்ற
பட்டிலைப் போட்டு வைத்துக்கொண்டு மொத்தமாக வைத்துவிடுவோம் வேட்டு. அதுவரை
இயற்கையான அழகில் தாய்மையை ரசிப்போம் பெண்களே...//
என்ன ஆசை.. எப்பவும் பர்ஸுலயே கண்ணா இருந்தா கண்ணாலம் கட்டிக்கிட்டவளுக்கு இதெல்லாம் வாங்கித்தாரது ஆறாக்கும்?

Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
செயற்கை அழகுப் பொருட்களுக்கு மொத்தமா விடை கொடுக்க வேண்டாம். அது நம்மால் முடியவும் முடியாது. அப்பறம் கணவர்களின் பணப்பைக்குச் செலவு இல்லாமல் போய் விடும். அப்படியும் விடக்கூடாதே. பத்துத் திங்கள் மட்டும் விடை கொடுப்போம். அந்தப் பத்துத் திங்களும் மார்க்கெட்டில் என்னென்ன பொருள்கள் வருகின்றன என்ற பட்டிலைப் போட்டு வைத்துக்கொண்டு மொத்தமாக வைத்துவிடுவோம் வேட்டு. அதுவரை இயற்கையான அழகில் தாய்மையை ரசிப்போம் பெண்களே
ரொம்ப சரி ஆதிரா
குறைந்த பக்ஷம் அந்த 10 மாதங்கள் வாயை கட்டி , தினமும் ஸ்லோகம் சொல்லி , கேட்டு, நல்ல விசயங்களை யே மனதில் நினைத்து, ஒரு யாகம் போல் செய்யனும். ஏனென்றால் நாம் இப்பவெல்லாம் ஒன்று போரும் என் நெணைக்கிறோம் இல்லயா? ஆதாய நன்றாக பெறனுமே. என்வே தபஸ் மாதிரிதான் இருக்கணும்.
முன்பு வைற்றில் உள்ள குழந்தை கதை கேட்கும் என் சொன்னால் சிரித்தவர்கள் இப்ப வாசனை யையே நுகரும் என்பதை ஒப்ப்க்கொள்கிறார்களே பார்த்தீர்களா? நாம் முன்னோர் எப்பவோ சொன்னதை வெள்ளைக்காரன் இப்ப சொல்றான் , அது தான் சிப்படி சொல்வா பெரிவா "ஏழை சொல் அம்பலம் ஏறாதுணு ".
அதனால் இளய பெண்களே ! அந்த 10 மாதத்தையும் பெரியவா மற்றும் டாக்டர் சொல்வது போல் இருந்து ஒரு நல்ல குழந்தையை பெற்றுக்கொடுங்கள் இந்த நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக்குங்கள்

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
ஆதிரா, செயற்க்கை அழகுப்பொருட்களை ஒரு 10 மாதம் விட்டுக்கொடுப்பதால் , அந்த சமயத்தில் pure gold தான் வாங்கி தரணும்
இப்ப என்ன் சொல்றீங்க சிவா ? 
இப்ப என்ன் சொல்றீங்க சிவா ? 
krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
krishnaamma wrote:ஆதிரா, செயற்க்கை அழகுப்பொருட்களை ஒரு 10 மாதம் விட்டுக்கொடுப்பதால் , அந்த சமயத்தில் pure gold தான் வாங்கி தரணும்
![]()
![]()
இப்ப என்ன் சொல்றீங்க சிவா ?
அதானே.. ரொம்பச் சரி..சுமதி..

குடும்பத்துக்கு இப்படி ஒரு பெரிய தியாகத்தைச் செய்யும் போது இவுங்க கணக்கையே பார்ததுட்டு இருப்பாங்க... அதுவும் இந்த சிவா கல்யாணத்துக்கு முன்னாடியே..

Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
Aathira wrote:ரபீக் wrote:அவசியமான அறிந்துகொள்ளவேண்டிய பதிவுக்கு நன்றி அக்கா ,,ஏம்மா இந்த மகளிரணி இதை கொஞ்சம் நல்லா பாருங்கம்மா
நன்றி ரபீக்.. இப்ப எதுக்கு மகளிரணியைக் கூப்பிடுறீங்க...
என்னை மாட்டி விடுவது என்று முடிவே செஞ்சுட்டீங்களா?
ஏதோ என்னாலான உதவி ,,,,

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
இல்ல ஆதிரா, அவர் (சிவா) நிறைய வாங்கிதரனும் என்று தான் கல்யாணத்த தள்ளி போடுராரோ என்னவோ ?
(நிஜமாக வே அவருக்கு கல்யாணம் ஆகலயா? )
(நிஜமாக வே அவருக்கு கல்யாணம் ஆகலயா? )

krishnaamma- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617
Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
தங்க நகை அணிந்தால் பெண்களுக்கு கேன்சர் வரும்னு எங்காவது ஆராய்ச்சி கட்டுரை இருக்கான்னு தேடப்போறேன்... அதுக்கு ஊக்கம் அளித்த உங்க கட்டுரைக்கு ரெம்ப நன்றிங்கோ...!
Re: தாயின் அழகு சாதன ஆசையும் சேயின் ஆண்மை குறைபாடும்....
கலை wrote:தங்க நகை அணிந்தால் பெண்களுக்கு கேன்சர் வரும்னு எங்காவது ஆராய்ச்சி கட்டுரை இருக்கான்னு தேடப்போறேன்... அதுக்கு ஊக்கம் அளித்த உங்க கட்டுரைக்கு ரெம்ப நன்றிங்கோ...!

அகீல்- இளையநிலா

- பதிவுகள்: 338
வசிப்பிடம்: இலங்கை
சேர்ந்தது: 22/12/2010
மதிப்பீடு: 8
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum