புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
5 Posts - 4%
prajai
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
4 Posts - 3%
Jenila
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
2 Posts - 2%
jairam
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
1 Post - 1%
kargan86
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
97 Posts - 55%
ayyasamy ram
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
51 Posts - 29%
mohamed nizamudeen
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
9 Posts - 5%
prajai
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
2 Posts - 1%
jairam
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
2 Posts - 1%
viyasan
ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_m10ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Jan 10, 2011 2:37 am

ஜனவரி 4 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் சீனாவின் உதவிப் பிரதமர் லீ கெகுவாங் (Li keqiang) மேற்கொள்ளும் ஐரோப்பியப் பயணம், புதிய சகாப்தமொன்றினை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

35
வருட சீன ஐரோப்பிய இராஜதந்திர உறவுகள், காத்திரமான கூட்டு, முழுமையான கூட்டு, முழுமையான மூலோபாய இருதரப்புக் கூட்டு என்கிற வகையில் விரிந்து செல்வதைக் காணலாம்
.

இரு தரப்பு பொறிமுறைகளை கையாள்வதன் ஊடாக, பல பரிமாண வேலைத் திட்டங்களை வகுத்து நுண் பொருளாதார கொள்கைகளை உருவாக்கி அதன் சவால்களை எதிர்கொண்டு, உலகப் பொருளாதார உயர்விற்கு உதவலாமென இவர்கள் கூறுகின்றார்கள்
.

ஐரோப்பாவின் பல நாடுகளில் குறிப்பாக யூரோ நாணயம் புழக்கத்திலுள்ள கிறீக், அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் போன்றவற்றில் திறைசேரிகள் ஆட்டங்காணும் நிலையில் சீனாவின் வரவு, பல உள் நோக்கங்கள் கொண்டதாக இருக்குமென நம்பப்படுகிறது
.

நொந்து போயுள்ள ஐரோப்பிய நாடுகளின், அரசாங்க முறிகளை (Bond) வாங்குவதற்கு சீன மார்வாடி வருகின்றார் என்கிற கருத்து நிலை காணப்பட்டாலும் உதவி செய்வது போல் உள்ளே வருபவருக்கென்று பல தேவைகள் உண்டென்பதை மறுக்க முடியாது
.

இரு தரப்பு பொருளாதார உடன்பாட்டினூடாக ஐரோப்பிய நாடுகளின் உயர் தொழில்நுட்பங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்கிற எதிர்பார்ப்பு, சீனாவிடம் இருப்பது போல் தோன்றுகிறது
.

அதேவேளை, சீனாவின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பில் (Foreign Currency Reserve) இருக்கும் 2.648 ரில்லியன் டொலர்களை குறி வைத்தே ஐரோப்பிய நாடுகளும் சீனாவுடனான இரு தரப்பு பொருளாதார உறவினை வலுப்படுத்த முற்படுகிறது என்பதனை புறக்கணிக்க முடியாது
.

இவை தவிர, 1989 இல் ஏற்பட்ட ரியனன்மன் சதுக்க பிரச்சினைக்குப் பிற்பாடு, ஐரோப்பாவால் தடை செய்யப்பட்ட ஆயுத ஏற்றுமதியை மீளப் பெற வேண்டுமென்கிற எதிர்பார்ப்பும் சீனாவிடம் உண்டு. அத்தோடு வளர்ச்சியடைந்த ஐரோப்பிய அறிவியல் தொழில்நுட்பத்தினை எவ்வாறு சீனாவிற்குக் கொண்டு செல்வது என்கிற சிக்கலே அதன் அரச உயர்மட்டத்தினரின் மனதைக் குடைந்து கொண்டிருக்கும் முக்கிய விவகாரமாக இருக்கிறது
.

இதேபோன்ற பிரச்சினை சீனாவிற்கும் ஜப்பானிற்குமிடையில் உண்டு
.

900
பில்லியன் டொலர் பெறுமதியான அமெரிக்க திறைசேரி முறிகளை வாங்கிக் குவித்துள்ள சீனா, அதன் கொள்வனவினை குறைந்தவாறு ஜப்பான் அரச முறிகளையும் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றின் முறிகளையும் அதிகம் வாங்கிக் கொண்டிருக்கிறது
.

கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலத்தில் 6.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஜப்பானிய அரச முறிகளை சீனா வாங்கிய விடயம் கவனிக்கத்தக்கது
.

அதேவேளை, 2010 இல் 20,000 மெட்ரிக் தொன் அரிதான கனிமங்களை (Rare Earth Minerals) ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்த சீன தேசம், இந்த ஆண்டு அதன் ஏற்றுமதியில் 33 சதவீதத்தை குறைக்கப் போவதாக, வெளியிட்ட செய்தி, உள்நாட்டுக் கடன் நெருக்கடியில் மூழ்கியுள்ள ஜப்பானிற்கு பெரும் தலைவலியை உருவாக்குமென எதிர்பார்க்கலாம்
.

இத்தகைய அரிதான கனிமங்களை, தமது மூலப் பொருட்களாகப் பயன்படுத்தும் சொனி (Sony) போன்ற பெரிய ஜப்பானிய நிறுவனங்களின் உற்பத்தியானது ஏற்றுமதி மட்டுப்படுத்தல்களால் பாதிப்படையும்
.

ஆனாலும் சொனி நிறுவனத்தின் தொழிற்சாலைகளை சீனாவில் நிறுவினால் இந்தப் பாதிப்பு ஏற்படாதென்பதே சீனாவின் வாதம். கனிமப் பொருட்களுக்காகச் சீனாவிற்குச் சென்றால் பொருட்களின் உற்பத்தியில் பிரயோகிக்கப்படும் உயர் தொழில்நுட்ப நுணுக்கங்களை சீனா அறிந்து கொள்ளுமென்கிற கவலை, ஜப்பானிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு உண்டு
.

இதே கவலைதான் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்படுமென்பதை மறுக்க முடியாது
.

இருப்பினும், ஜேர்மனியைத் தவிர, ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஏற்படும் வர்த்தக பற்றாக்குறை மற்றும் பொருளாதார கடன் சுமைகள் என்பன, சீனாவின் உதவியை உள்வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்துள் இந்நாடுகளை தள்ளி விடக் கூடிய சூழலை ஏற்படுத்துகிறது
.

உதாரணமாக 2010, மே மாதமளவில் ஐரோப்பிய ஒன்றியமும், சர்வதேச நாணய நிதியமும் இணைந்து வழங்கிய 151 பில்லியன் டொலர் கடனுதவியை, கிரேக்க அரசாங்கம் பெற்றுக் கொண்டாலும் சீனப் பிரதமர் வென் ஜியாபவ் நீட்டிய நேசக் கரத்தினை அந்நாடு புறந்தள்ளவில்லை
.
அதேபோன்று 5.3 தொடக்கம் 6.6 பில்லியன் டொலர் வரையிலான போர்த்துக்கல்லின் திறைசேரி கடனை, முறிகள் ஊடாக வாங்குவதற்கு சீனா தயாராக இருக்கும் நிலையையும் குறிப்பிடலாம்
.

கடந்த வருடத்தில் மட்டும் 1.4 ரில்லியன் கடன் சுமையில் தவிக்கும் அமெரிக்க தேசம், ஐரோப்பிய நாடுகளைக் காப்பாற்ற முன்வருமா என்கிற கேள்வி இயல்பானது
.

அதேவேளை இச்சிக்கலைத் தீர்க்க ஐரோப்பிய முறிகளை (European Bond) உருவாக்க வேண்டுமென அதன் மத்திய வங்கி தெரிவிக்கும் ஆலோசனைகள், தீவிரமான பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவது போல் தெரியவில்லை
.

இந்நிலையில் சீனாவின் பாரிய சந்தையாகக் கருதப்படும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், தமது வெளிநாட்டு ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டுமாயின் கடன் சுமையைக் குறைக்கும் நடவடிக்கைகளிலேயே தமது கவனத்தைச் செலுத்த முற்படுமென எதிர்பார்க்கலாம்
.

அண்மையில் வெளியிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய புள்ளி விபரத் திணைக்கள அறிக்கையில், கடந்த வருடம் ஜனவரியிலிருந்து செப்டெம்பர் மாதம் வரையான சீனாவிற்கான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஏற்றுமதி 107.8 பில்லியன் டொலர்களெனக் குறிப்பிடப்பட்டுள்ளது
.

2009
ஆம் ஆண்டு இதே காலப் பகுதியை விட 39 சதவீதத்தால் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேவேளை சீனாவில் ஐரோப்பிய ஒன்றிணை நாடுகள் செய்த முதலீடு 5.1 பில்லியன் டொலர்களாகும்
.

இவ்வாறாக இரு தரப்பு பொருண்மிய உறவுகள் இறுக்கமடையும் நிலையில் சர்வதேச உறவுகள் (International Relations) இதில் வகிக்கும் பங்கினை உற்றுநோக்க வேண்டிய அவசியமேற்படுகிறது
.

சமகால சர்வதேச உறவில் இருவகையான கருத்து நிலைச் சிந்தனைகள் கையாளப்படுவதைக் காணலாம்
.

நியமங்கள், அதிகார மையங்கள் மற்றும் நிறுவனங்கள் என்பவற்றை உயர் நிலைக்கு தரமுயர்த்துவதன் ஊடாக, உலக மயமாதலின் இறுக்கத்தைப் பேணலாம் என்பதனை அடிப்படையாகக் கொண்டு தாராளவாத நிறுவனமயமாதல் (Liberal Institutionalism) என்கிற கருத்துருவம் கட்டமைக்கப்படுகிறது. அடுத்ததாக நவயதார்த்தவாதம் (Neorealism) என்ற கருத்துருவம், ஒரு நாடானது, ஏனைய நாடுகளின் தோளில் நின்றவாறு, தனது நலன்களை உயர்த்திக் கொள்வது என்பதை அடிப்படையாகக் கொண்டது
.

இதில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள கருத்து நிலையை உயர்த்திப் பிடித்தவாறே, ஜனநாயக ஏற்றுமதிக்கான பல யுத்தங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன
.

சீனா தனது நாணயத்தின் பெறுமதியை, செயற்கையாகக் குறைத்துக் காட்டியவாறு, உலகின் ஏற்றுமதிச் சந்தையை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது என்பதனை தாராளவாத பொருளாதார நியமங்களின் அடிப்படையில் நின்றவாறு, அந்நாட்டின் மீது குற்றச்சாட்டுக்களும் முன் வைக்கப்படுகின்றன
.

தற்போது நலிவுற்றுள்ள அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் இறக்குமதியை கட்டுப்படுத்த, தற்காப்புவாதம் (Protectionism) மேசி, தாராளவாத பொருண்மிய கோட்பாட்டிற்கு எதிராகச் செயற்படும் நிலையை காண்கிறோம்
.

இந்த தாராளவாத ஜனநாயக (Liberal Democrats) ஜாம்பவான்கள், ஏனைய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்பாடு, பொருளாதார அபிவிருத்தி போன்ற ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் போது ஆயுத வர்த்தகத்தையும் அதில் இணைத்து விடுவதைக் காணலாம்
.

உதாரணமாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் ஜப்பானின் தற்பாதுகாப்பு படைகள் (Self Defense Forces) நிலை கொள்ள வேண்டுமெனவும் அதேவேளை தென்சீனக் கடலில் சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக, இந்தியக் கடற்படையும் எஸ். டி. எவ். உம் (SDF) இணைந்து செயற்பட வேண்டுமென ஜப்பான் எதிர்பார்ப்பது பாதுகாப்பிற்கு இத்தாராளவாதிகள் வழங்கும் முக்கியத்துவத்தை விளக்குகிறது
.
ஏனெனில் பொருளாதாரம், பாதுகாப்பு என்கிற இரு முக்கிய விடயங்களை மையப்படுத்தியே இந்த உலக உறவுகள் தீர்மானிக்கப்படுகின்றன
.
முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களிலிருந்து கற்று அறிந்து கொள்ள வேண்டிய பாடங்கள் இவை
.

ஆசிய நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தற்போது சீனா செலுத்த முற்படும் பொருளாதார ஆதிக்கமானது, முதலாம், இரண்டாம் உலகப் போர் காலத்தில் அமெரிக்கா மேற்கொண்ட கடனுதவி ஊடாக காலூன்றிய நிகழ்வுகளை நினைவுபடுத்துகிறது
.

நான்கு வருடங்களாக நடைபெற்ற முதலாவது உலக மகா யுத்தம் 1918 இல் முடிவடைந்து, ஜேர்மனி உட்பட பல நாடுகள், யுத்தக் கடன்களை சுமந்து முறிந்து போகும் நிலையை அடைந்திருந்தது
.

தனது ஆதரவு அணி நாடுகளுக்கு மீளச் செலுத்தும் நிபந்தனையின் அடிப்படையில் 7000 மில்லியன் டொலர்களை யுத்த கடனாக அமெரிக்கா அன்று வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது
.
போர் காலத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் பொருளாதாரம் சிதைவுற்று திறைசேரி வங்குரோத்து நிலையை அடைந்த வேளையில்தான் உலக மகா சக்தி என்கிற தளத்தில் அமெரிக்கா நிலைகொள்ள ஆரம்பித்தது
.

அதேவேளை போரினால் பலவீனமடைந்த இந்நாடுகள், வாங்கிய கடனை மீளச் செலுத்த முடியாமல் தவிப்பதை உணர்ந்த அமெரிக்கா, மேலதிகமாக 3 பில்லியன் டொலர்களை இந்நாடுகளுக்கு வழங்கியது
.

இக்கடனுதவியை ஆயுத உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களாகவே ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கியதால் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு இது ஒரு உந்துசக்தியாக அமைந்து விட்டது
.

போருக்கு ஆதரவளிப்பதன் மூலம், அந்த நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியுறலாம் என்பதற்கு இது நல்ல எடுத்துக் காட்டு. பொருளாதாரம் சீரழிந்து, பண்ட ஏற்றுமதி வர்த்தகம் நலிவுற்ற நிலையிலிருந்த நாடுகளுக்கு தனது ஆயுத ஏற்றுமதியை அமெரிக்கா கைவிடவில்லை என்பதனை கவனிக்க வேண்டும்
.

கடனை மீளப் பெற வேண்டும் என்கிற அடிப்படையில் 1922 இல் வெளிநாடுகளின் உலக யுத்த கடன் (World war Foreign Dedts Commission) கமிஷனை அமெரிக்கா கூட்டியது
.

ஐரோப்பிய நாடுகளுடன் இது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அமெரிக்க கமிஷன், முதலும் வட்டியுமாக 62 வருட காலத் தவணையில் இக்கடன் மீளச் செலுத்தப்பட வேண்டுமெனவும், முழுக் கடன் தொகை 22 பில்லியன் டொலர்களெனவும் ஏற்றுக் கொண்டது
.

அதேவேளை 1919 இல் ஏற்பட்ட வெசெயில்ஸ் ஒப்பந்தம் (Treary of Versailles) அமெரிக்க அணிகளுக்கு ஜேர்மனி வழங்க வேண்டிய யுத்த தண்டப் பணத்தை உள்ளடக்கி இருந்த விவகாரத்தை இங்கு அவதானிக்க வேண்டும்
.
ஐரோப்பா வரை. (தொடர்ச்சி
)

1931
இல் ஏற்பட்ட உலகளாவிய ரீதியிலான பொருளாதாரப் பின்னடைவு, போரில் நொந்து போன ஐரோப்பிய நாடுகளை வெகுவாகப் பாதித்ததோடு, 1934 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவிற்கு செலுத்தி வந்த கடன் மீள் அளிப்பும் நிறுத்தப்பட்டு விட்டது
.
பொதுவான பார்வையில் ஐரோப்பாவின் பொருளாதார சிதைவின் எதிர்வினையாகவே இரண்டாம் உலக மகா யுத்தம் ஏற்பட்டதாக கருத்து நிலையொன்றும் உண்டு
.

ஜேர்மனி சர்வாதிகாரி அடோல்ப் ஹிட்லர் முன்னெடுத்த ஐரோப்பிய ஆதிக்க யுத்தம், இப் பிராந்தியத்தின் சகல அடிப்படைக் கட்டுமானங்களையும் தகர்த்தெறிந்து விட்டன
.

இதனையடுத்து போர் நிறைவிற்கு வந்த பின்னர் 1947 ஜூன் மாதமளவில் அன்றைய அமெரிக்க அதிபர் ஹரி எஸ். ட்ரூமன் (Harry S. Trumen) வழிநடத்தலில் இராஜாங்க செயலாளர் ஜோர்ஜ் மார்ஷல் தலைமையில் ஐரோப்பியமீள் கட்டுமான வேலைத் திட்டமொன்று முன் வைக்கப்பட்டு அதற்கு மார்ஷல் திட்டம் (Marshall Plan) என்று பெயரிடப்பட்டது
.

அழிவடைந்த ஐரோப்பாவை மீளக் கட்டியெழுப்புவதற்கு உருவாக்கப்பட்ட இத்திட்டத்தால் 17 நாடுகள் பலனடைந்தன
[size=12][color=#000000].

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 10, 2011 12:04 pm

பயனுள்ள தகவல் நன்றி சாந்தன் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 10, 2011 12:07 pm

நன்றி சாந்தன்!



ஐரோப்பா வரை நீளும் சீனப் பெருஞ்சுவர்-1 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue Jan 11, 2011 2:45 am

அடப் பாவமே என் பெயர் நிசாந்தன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக