ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by முஹைதீன் Today at 8:15 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm

» ஈகரையில் கோடிங் பயன்படுத்தும் முறை
by வின்சீலன் Today at 5:35 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
நெகிழ வைத்த நிஜங்கள் 5 5 2

நெகிழ வைத்த நிஜங்கள்

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Go down

நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி


வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down


Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Sat Feb 04, 2012 4:36 pm

அல்லல் பட வைத்த அவசர பயணம்!

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்களை ஏற்றிச் செல்ல வழக்கமாக கம்பெனி பஸ் வரும். அன்று அந்த நிறுத்தத்தில் யாரும் இல்லாததால் பஸ் கிளம்பியது.

அப்போதுதான் என்னுடன் பணிபுரியும் ராஜேஷ் பஸ்சுக்குப் பின்னால் ஓடி வந்தார். இதைப் பார்த்ததும் நான் டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொன்னேன். டிரைவரோ `சார், ஏற்கனவே நான் அடிக்கடி லேட்டா வரேன்னு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க. நீங்க வேறு இன்னும் லேட் பண்ண வைக்கிறீங்க` என்று அலுப்புடன் நிறுத்தினார்.

பஸ்சில் ஏறிய ராஜேஷ், அதே வேகத்தில் கையில் வைத்திருந்த இரண்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் ஒன்றை அங்கிருந்த குப்பை மேட்டில் அவசர அவசரமாக வீசினார். பஸ் கொஞ்சதூரம் சென்றிருக்கும். திடீரென ராஜேஷ் "அய்யய்யோ'' என்று அலறினார், என்னவென்று பார்த்தபோது "தவறுதலா பையை மாற்றி குப்பை மேட்டில் வீசி விட்டேன். அதில் வீட்டுச்சாவி, பணம், கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, இன்னும் சில முக்கிய பொருட்கள் உள்ளன. வண்டியை நிறுத்துங்கள்'' என்று அழாத குறையாக கெஞ்சினார்.

ஆனால் டிரைவர் கண்டு கொள்ளவே இல்லை. நிலைமையை புரிந்து கொண்ட மற்றவர்கள் அனைவரும் பஸ்ஸை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதால் பஸ்ஸை திரும்பவும் ராஜேஷ் ஏறிய இடத்திற்கே கொண்டு வந்தார்.

எங்கள் பஸ் வருவதற்கும் குப்பைலாரி வருவதற்கும் சரியாக இருந்தது. கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும் எல்லாம் அம்போ தான், நல்ல வேளையாக பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்குபவரும் அந்த நேரத்தில் வரவில்லை. ராஜேஷ் பை கிடைத்துவிட்டது. லேட்டாக ஆபீஸ் போனாலும் நிம்மதியாக போய்ச் சேர்ந்தோம்.

வாழ்க்கையே அவசர கதியாகி விட்டது. அதனால் நாம் என்ன செய்கிறோம் என்று அறியாமலே பல தவறுகள் நேர்ந்து அல்லல்படுகிறோம். கொஞ்ச நேரம் முன்னதாக கிளம்பினால் இத்தகைய அல்லல்களை தவிர்க்கலாமே!

என்.வி.சுப்பிரமணியன், ஜாகீர் அம்மா பாளையம்.




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Sat Feb 04, 2012 4:36 pm

ஆலோசனை கூறி அழ வைக்காதீர்கள்!

என் சகோதரிக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக அவள் வீட்டைவிட்டு வெளியே வருவதேயில்லை.

உறவினர்கள் வீட்டில் நடைபெறும் எந்த விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் வரமாட்டாள். அதனால் என் சகோதரியை நான் கோபமாக திட்டி விட்டேன். `நாம நாலு பேரோட விசேஷத்துக்கு போனாதானே, நம்ம விசேஷத்துக்கு நாலு சொந்தக்காரங்க வருவாங்க' என்று காரணம் சொன்னேன்.

நான் திட்டியதும் அழுதுவிட்ட என் சகோதரி, தான் மற்றவர் வீட்டு விசேஷங்களுக்கு வராததற்கு காரணம் சொன்னபோது எனக்கே கஷ்டமாகி விட்டது.

`எந்த விசேஷத்திற்கு போனாலும் குழந்தை இல்லையா, குழந்தை இல்லையா? என்று கேட்டு மனதை நோகடிக்கிறார்களாம். அதோடு நிறுத்தாமல் ஏகப்பட்ட வைத்தியங்கள் வேறு சொல்கிறார்களாம். சில வைத்திய முறைகள் படுமோசமானதாக உள்ளதாம். அவள் தாம்பத்ய வாழ்க்கை பற்றியும் துருவித் துருவி பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்கிறார்களாம். அதனால்தான் எங்கும் வருவதில்லை'' என்றாள்.

அவள் சொல்வதும் சரிதானே, நம் ஜனங்களுக்கு எதை கேட்க வேண்டும், எதை கேட்கக்கூடாது என்பது தெரிவதில்லை. அதோடு நிற்காமல் ஆலோசனை என்ற பெயரில் ஆள்ஆளுக்கு டாக்டர் ஆகி விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ?

நா.கோகிலன், ஜோலார்பேட்டை.




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by தம்பி வெங்கி on Mon Feb 06, 2012 7:00 am

அருமையான நிகழ்வு .
தங்கள் பகிர்வுக்கு நன்றி



சிவா wrote:
நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி


வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.

தம்பி வெங்கி
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 46
வசிப்பிடம்: pollachi
சேர்ந்தது: 02/01/2012
மதிப்பீடு: 13

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Wed Feb 15, 2012 8:49 am

புனித யாத்திரையை இப்படியும் புனிதப்படுத்தலாம்!

என் உறவினர் ஒருவர் திருக்கயிலாய யாத்திரை செல்ல இருந்தார். நான் அவரை வழியனுப்ப சென்றிருந்தேன்.

அவர் தனது பயணத்திற்கு வேண்டிய துணிகள், கம்பளி ஆடைகள், மருந்துகளை எடுத்து வைத்ததோடு சில பெட்டிகளில் பென் சில்கள், ரப்பர், ஷார்ப்பனர்கள் மற்றும் பலப்பம் ஆகியவற்றையும் எடுத்து வைத்தார்.

அவரிடம் இதுபற்றி கேட்டேன். "மலைப் பகுதி களில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு இவற் றைக் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார் கள் என்று எனக்கு முன் யாத்திரை சென்றவர் கள் கூறியிருக்கிறார்கள். அது எனக்கும் நல்ல தென்றுபட்டது. இவை எனக்கு அதிக பாரமும் இல்லை, குழந்தைகளும் சந்தோஷப் படுவார்கள். அதனால் கொண்டு போகிறேன்'' என்று அவர் சொன்னார்.

இறைவனைத் தரிசிக்க செல்லும் புனித பயணத்தில் ஏழைகளுக்கு உதவும் உள்ளத்துடன் சென்ற அவரது நல்லெண்ணத்தை எண்ணி வியந்து போனேன்.

-இரா.கணேசன், பட்டைக்கோவில்.




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Wed Feb 15, 2012 8:50 am

சின்னப்பெண்... பெரிய மனசு..!

நான் என் தோழியுடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூட்ட நெரிசல் மற்ற நாட்களை விட அன்று அதிகமாக இருந்தது. கால் வைப்பதற்கு கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம்.

அந்த சமயத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண், நாங்கள் வந்த பேருந்தில் ஏறினார். அந்தக் கூட்டத்தில் யாரும் சீட் கொடுத்து உதவ முன் வரவில்லை. நாங்களும் நின்று கொண்டு பயணம் செய்ததால் உதவ முடியவில்லை.

அப்போது, அருகில் ஒரு சீட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த 10 வயது சிறுமி அந்த கர்ப்பிணிப் பெண்ணை பார்த்ததும் எழுந்து, தனது இருக்கையில் கர்ப்பிணிப் பெண்ணை அமரச் சொன்னாள்.

மேலும் அந்தப் பெண்ணிடம், "உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று குழந்தை மனதுடன் கேட்டாள். "இதுவரை எந்தக்குழந்தை பிறந்தாலும் சரிஎன்று எண்ணியிருந்தோம். ஆனால் இப்போதோ தேடிவந்து உதவும் குணம் கொண்ட உன்மாதிரி ஒரு பெண் குழந்தையே வேண்டும் என்று நினைக்கிறோம்'' என்றாள், கர்ப்பிணிப் பெண். உதவும் குணத்துக்கு கிடைத்த மரியாதை எங்களை ஒருகணம் நெகிழ வைத்து விட்டது.

-மு.ரேணுகா, புதுப்பீர்கடவு.




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Wed Feb 15, 2012 8:51 am

புத்தகப் பையில் பாம்பு... பதறிய பள்ளிக்கூடம்!

எனது பேரன் படிக்கும் பள்ளிக்கு சொந்தமான ஹாஸ்டல் (மாணவர் விடுதி) ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ளது. விடுதியைச் சுற்றி வயல் வரப்புகள் உண்டு. ஒருநாள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவன் ஒருவன் வகுப்பாசிரியையிடம், `எனது பேக்கில் என்னமோ நெளிவது மாதிரி இருக்குது டீச்சர்' என்று கூறி இருக்கிறான்.

அவனது பையை வாங்கி ஜிப்பை லேசாக திறந்து பார்த்த ஆசிரியை, புத்தகப்பையில் பாம்பு கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டார். உடனே உஷாரான அவர், பையின் ஜிப்பை மூடிவிட்டு, தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார்.

பிறகு அந்த ஆசிரியையும் மற்றும் சிலரும் மைதானம் வந்து மெதுவாக ஜிப்பை திறந்து, பாம்பை பையில் இருந்து வெளியே வரச் செய்தனர். தயாராக இருந்த மற்றவர்கள் தடி யால் பாம்பை அடித்துக் கொன்றனர்.

பள்ளிவிடுதி வயல் ஓரமாக இருப்பதால் எப்ப டியோ பாம்பு புத்தகப் பையில் நுழைந்துள்ளது. மாணவனும் விடுதியில் இருந்து பள்ளி வரை, பாம்புடன் பேக்கை சுமந்து வந்துள்ளான். நல்ல வேளையாக பாம்பு மாணவனை தீண்டவில்லை.

குறைந்த வயதுள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் காப்பாளர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகமும் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.

-ம.சாந்தாமணி, அம்மாப்பேட்டை.




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Wed Feb 15, 2012 8:53 am

பிள்ளையை ஏலம் விட்டு... பின்னாலே அவதிப்பட்டு...!

எங்கள் ஊர் கோவிலுக்கு சமீபத்தில் ஒரு தம்பதியினர் குழந்தையுடன் வந்தனர். மெலிந்த தன் குழந்தையின் நலனுக்காக ஜோதிடர் கூறியபடி `குழந்தையை விற்று வாங்கும்' நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக வந்துள்ளனர்.

இந்த நேர்த்திக் கடனின்போது முதலில் வேண்டிக் கொண்டவர், தன் குழந்தையை கோவி லில் வைத்து ஏலமிடுவார். கோவிலுக்கு வரும் பக்தர்களும், இதுபோல் நேர்த்திக்கடன் செய்ய வந்தவர்களும் அந்தக் குழந்தையை ஏலத்தில் கேட்பார்கள். அதிக தொகைக்கு எடுப்பவர் அந்தக் குழந்தையை வாங்கிக் கொள்வார். அதன் பிறகு சம்பிரதாயப்படி அந்த குழந்தையை ஏலம் வாங்கியவர்கள் திரும்பவும் ஏலம் விடுவார்கள். அப்போது முதலில் ஏலம் விட்ட குழந்தையின் பெற்றோரே தங்கள் குழந் தையையே ஏலத்தில் எடுத்தாக வேண்டும். ஏலத்தை மற்றவர்கள் ஏற்றிக்கேட்டாலும் அது பெரிய தொகை என்றாலும் பெற்றவர்களே ஏலத்தில் எடுத்தாக வேண்டும். இது மரபு.

இதில்தான் பிரச்சினை. அன்று கோவிலுக்கு வந்த அந்த ஏழைத்தம்பதிகள் தங்கள் குழந்தையை முதலில் ஏலம் விட்டனர். ஏலம் நூறு ரூபாயில் ஆரம்பித்து ஒரு தொகையில் முடிந்தது. பிறகு குழந்தையை திரும்ப ஏலம் எடுக்கும்போது இவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் ஏலத்தை ஏற்றிக்கேட்டதால், அவர்களின் கையில் இருந்த மொத்த தொகைக்கும் ஏலம் எடுக்கும் சூழல் உருவானது. கடைசியில் கையில் இருந்த தொகையைக் கொடுத்து குழந்தையை திரும்ப பெற்று விட்டனர். ஆனால் ஊருக்குத் திரும்பிச் செல்ல பஸ்சுக்கு காசில்லை.

`இனி ஊருக்கு நடந்துதான் போக வேண்டும்' என்று பேசிக் கொண்டனர். ஆனால் குழந்தையும் இருப்பதால் நீண்ட தூரம் நடந்துபோக முடியாது என்பதும் அவர்களுக்கு விளங்கியது. சிறிது நேரம் யோசனையில் மூழ்கிய அவர்கள் பிறகு உறவினர் ஒருவரை பணத்துடன் வரவழைத்து ஊர் போய்ச் சேர்ந்தனர்.

அவர்களின் நிலைமை என்னை நெகிழ வைத்து விட்டது. கோவிலில் இம்மாதிரி ஏல முறையில் விற்று வாங்க, பெற்றவர்களின் பட்ஜெட் இடிக்காத ஒரு குறைந்த தொகையை நிர்ணயிக்கலாமே.

-எஸ்.ஆறுமுகம், கழுகுமலை.






பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ரா.ரா3275 on Wed Feb 15, 2012 10:02 am

பிள்ளையை ஏலம் விட்டுவிட்டுப் பின்னர் இவர்கள் தாளம் போடுவது எதற்கு?...
என்ன ஜோசியமோ?...இப்படியெல்லாமா கொடுமை நடக்கும்?...போங்கப்பா நீங்களும் உங்க ஜோதிடமும்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5060
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 851

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ரா.ரா3275 on Wed Feb 15, 2012 10:05 am

பையனின் புத்தகப் பைக்குள் பாம்பா?...யம்மோவ்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5060
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 851

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Tue Feb 21, 2012 12:58 pm

உட்கார இடமில்லை... ஆனால் படுத்துக் கொண்டு பயணம்!

நான் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிகிறேன். மாலையில் பணி முடிந்ததும் வழக்கமாக மின்சார ரெயிலில் வீடு திரும்புவேன்.

ஒருநாள் ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். பலரும் பணி முடிந்து திரும்பும் நேரம் என்பதால் நிறைய பேர் ரெயிலுக்காக காத்திருந்தனர். அதேபோல ரெயிலிலும் நெருக்கியடிக்கும் அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது.

ஆனால் ஒரே ஒரு பெட்டியில் மட்டும் அரை பெட்டி அளவுக்கு காலியாக இருந்தது. நிலையத்தில் நிறுத்துவதற்காக ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தபோதே இந்த காலியிடத்தை காத்திருப்பவர்கள் கவனித்து விட்டனர். உடனே அந்த இடத்தைப் பிடித்துவிடும் நோக்கில் பக்கத்து பெட்டிக்காக காத்துக் கொண்டிருந்தவர்களும் அந்தப் பெட்டியை நோக்கி ஓடி வந்தனர்.

ஒட்டுமொத்தமாக அந்தப் பெட்டியில் முண்டியடித்து ஏறினார்கள். உள்ளே சென்று பார்த்தால் அங்கே ஒரு இளைஞர் குடிபோதையில் படுத்துக் கிடந்தார். அவரது முகத்திலும், பக்கத்து சீட்டிலும் அவர் வாந்தியெடுத்த அடையாளங்கள் இருந்தது. யாரும் அமர முடியாத அளவுக்கு வாந்தி சிதறிக் கிடந்தது. குடலைப்பிடுங்கும் அளவுக்கு துர்நாற்றமும் அடித்தது. அதனால்தான் அந்தப் பெட்டி காலியாக இருந்திருக்கிறது.

ரெயில் கிளம்பிய இடத்தில் இருந்து கடைசி நிறுத்தமான தாம்பரம் வரை அந்த இளைஞன் எழுந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அந்த காலி இருக்கைகளுக் காக பயணிகள் முண்டியடித்து ஏறுவதும், பிறகு மூக்கைப் பொத்திக் கொண்டு இறங்கி பக்கத்துப் பெட்டிக்கு ஓடுவதுமாக இருந்தனர்.

நிதானமாக இருந்தவர்கள்தான் புலம்பிக் கொண்டிருந்தனர், ஆனால் குடிகார இளைஞனோ நிம்மதியாக உறங்கிக் கொண்டு பயணித்தான்.

எம்.ராமர், குரோம்பேட்டை.




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Tue Feb 21, 2012 12:59 pm

கலகல திருமணம்... சலசலத்த மொய்ப்பணம்!

எனது நண்பரின் மகள், திருமண விழாவுக்கு போயிருந்தேன். தாலிகட்டியதும் சாப்பிட்டுவிட்டு மொய் எழுதப் போனேன். அங்கு மொய் எழுதும் இடத்தில் ஒரே சச்சரவாக இருந்தது.

என்னவென்று கேட்டபோது, நண்பரின் தூரத்து உறவினர் ஒருவர் பிரச்சினையை உண்டு பண்ணியிருக்கிறார் என்பது தெரிந்தது. அது என்னவென்றால், `அவரது மகனின் திருமணம் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அங்கு தனது மனைவி, இரண்டு மகன்களுடன் சென்ற எனது நண்பர் மொய்ப்பணமாக ரூபாய் 21-ஐ கொடுத்து இருக்கிறார். (மொய் செய்தவர் வீட்டில் விசேஷம் நடக்கும்போது அதே தொகையை திருப்பி மொய் செய்வது எங்கள் பகுதியில் பலரது வழக்கம்.) அவரும் அதுபோலவே நண்பர் வீட்டு திருமணத்திற்கு 21 ரூபாயை கொண்டு வந்திருக்கிறார்.

மொய் பெற்றுக் கொள்ளும் இடத்தில் தன் பெயரை சொல்லி அவர் பணம் கொடுத்தபோது , "இத்தனை பேர் சாப்பிட்டுவிட்டு இவ்வளவு கம்மியா மொய் எழுதுகிறாயே'' என்று கேட்டிருக்கிறார்கள். "அவர் எனக்கு அவ்வளவு தான் செய்தார். நானும் அதே தொகையை செய்கிறேன்'' என்றிருக்கிறார் உறவினர். "ஏம்பா நக்கலா? அன்னிக்கு வெலவாசி என்ன...இன்னிக்கு வெலவாசி என்ன?'' என்று பேசியிருக்கிறார். உடனே இரு தரப்புக்கும் வாக்குவாதம் வர, பெரியவர்கள் கூடி சமரசம் செய்து வைத்தனர்.

மொய்ப்பணம் கொடுப்பது அவரவர் விருப்பம். இருந்தாலும், காலமறிந்து நடந்து கொள்ளாத உறவினரும், பொருளறிந்து பேசாத மொய் பெற்றவரும் கலகலப்பான திருமண வீட்டை சலசலப்பாக்கி விட்டனர்.

- வே.மாரியப்பன், முக்காணி.




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Tue Feb 21, 2012 1:00 pm

வழியறியாத வழிகாட்டி... சுற்றியலைந்த பயணி!

நான் சமீபத்தில் ஹைதராபாத் சென்றிருந்தேன். முதல்முறையாக அங்கு சென்றிருந்ததால் எனக்கு நான் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியாக வழி தெரியவில்லை.

அங்கே சென்று இறங்கியதும் ஒவ்வொருவரிடமாக விசாரித்து விசாரித்து சென்று கொண்டிருந்தேன். கொஞ்சம் மொழிப்பிரச்சினையும் இருந்ததால் சிரமமாக உணர்ந்தேன். அந்த நேரத்தில் ஒரு தமிழரை சந்தித்தேன். அவரிடம் விசாரித்தால் எளிதாக புரியும்படி வழிகாட்டுவார் என்று எண்ணி அவரிடம் வழி கேட்டேன். அவரும் நான் கேட்ட விலாசம் தெரிந்தது போல் வழி சொன்னார். அவர் சொன்னபடி நான் சென்றேன். ஆனால் 2 மணி நேரத்திற்கு மேல் சுற்றியலைந்தும் நான் சேர வேண்டிய இடத்தை அடைய முடியவில்லை. ஒருவழியாக அலைந்து திரிந்து சேரவேண்டிய இடத்தைச் சேர்ந்தேன். சரியான நேரத்திற்கு போக முடியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

ஊர், பேர் தெரியாத இடத்தில் மொழியறிந்த ஒருவரை சந்தித்தபோது சொந்தத்தை சந்தித்ததுபோல சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவரே தவறான வழிகாட்டிவிட்டு சென்றபோது சொல்ல முடியாத அளவுக்கு எரிச்சலும் வந்து விட்டது.

வழி தெரியாவிட்டால் `தெரியாது' என்று சொல்லி விடுங்களேன்.

க.சுல்தான், காயல்பட்டினம்.




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by சிவா on Tue Feb 21, 2012 1:00 pm

மாணவர்களே இப்படி செய்யலாமா?

நான் எங்கள் ஊரில் இருந்து புளியங்குடிக்கு அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். பஸ் சிந்தாமணி அருகே சென்று கொண்டிருந்தது. அந்த வழியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு கல்லூரி உள்ளது. அது பிற்பகல் நேரம் என்பதால் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். கல்லூரி அருகே இரு வேகத் தடைகள் இருந்ததால் பஸ் மெதுவாக சென்றது. அதைப் பயன்படுத்தி இரண்டு மாணவர்கள் பஸ்ஸில் ஏறினார்கள். இன்னும் சிலரும் அதுபோல் ஏறுவதற்காக பஸ்ஸை துரத்தினர்.

உடனே கண்டக்டர், "இது எல்.எஸ்.எஸ். பஸ். இங்கே நிற்காது. கீழே இறங்குங்கள்'' என்று பஸ்சில் ஏறிய மாணவர்களை கண்டித்தார். ஆனால் அவர்கள் ஏதும் கூறாமல் பஸ் படிக்கட்டில் நின்றபடியே வந்தனர். பஸ் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றதும் டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டு இறங்கினார்.

மாணவர்களை கீழே இறங்கச் சொன்னவர், "உங்க ரெண்டுபேருக்காகத்தான் பஸ்ஸை இங்கே நிறுத்தியிருக்கிறேன். இங்கே இறங்கி நடந்துபோங்க. அப்பதான் உங்களுக்கு புத்தி வரும்'' என்றார். ஒரு மாணவன் இறங்கினான், மற்றொருவன் முறைத்துப் பார்த்தான். "உனக்குத் தனியா சொல்லுவாங்களோ, இறங்கு கீழே'' என்று அதட்டும் தொனியில் பேசினார் டிரைவர். உடனே இரு மாணவர்களும் "எங்களை அடிச்சிருவியோ'' என்று எகிறினர். டிரைவரும் "மாணவர்கள் என்றால் சேட்டை செய்யலாமா? என்ன செய்வீங்கன்னு பாத்துருவோம்'' என்று கூறிவிட்டு பஸ்ஸை கிளப்பப் போனார்.

உடனே ஒரு மாணவன், பஸ் முன்பு ஓடி வந்து எகிறி குதித்தபடி கண்ணாடியை கையால் தட்டிக் கொண்டு "ஏய் பஸ்ஸை நிறுத்து'' என்று மறித்து ஆவேசப்பட்டான். அப்போது பஸ்ஸில் இருந்தவர்களோ, "ஐய்யய்யோ... காலேஜ் பசங்ககிட்டபோய் பிரச்சினை வச்சிக்கிட்டீங்களே! நாளைக்கு இந்த வழியாத்தானே திரும்ப போகணும், ஏதாவது செய்யப்போறாங்க'' என்றனர்.

உடனே கண்டக்டரும், டிரைவரும், "ஆமாய்யா இப்ப பேசுங்க. ஓடுற பஸ்ல ஏறக்கூடாது இறங்குன்னு கண்டக்டர் கத்தினார். அப்ப யாரும் சொல்லல. பஸ்ஸை நிறுத்தி நான் மரியாதையா சொல்லிப் பார்த்தேன், அப்பவும் அவங்க கேட்கல. நீங்களும் ஒண்ணும் சொல்லல. ஓடுற பஸ்ல ஏறுறப்ப தவறி கீழே விழுந்து கையை காலை உடைச்சிக்கிட்டாங்கன்னா அப்பவும் நாங்க தானே பதில் சொல்ல வேண்டியிருக்கும்....படிக்கிற பையங்களுக்கு ஒழுக்கம் வேண்டாமா? எனக்கும் காலேஜ் படிக்கிற பையன் இருக்கான்...'' என்று பொரிந்து கொண்டே வண்டியை கிளப்பினார்.

அப்போது தான் அந்த டிரைவரின் கோபம் ஒரு பொறுப்புள்ள தந்தையின் ஆதங்கமாக வெளிப்பட்டதை உணர்ந்து கொண்டோம். நாளைய தேசத்தை ஆளப்போகும் இளைஞர்களே இப்படி அத்துமீறி நடந்து கொண்டால் எப்படி?

மா.களஞ்சியம், அருணாசலபுரம்.




பதிவுகள்: 790446 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81954 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3094

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by இளமாறன் on Tue Feb 21, 2012 1:04 pm

சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: நெகிழ வைத்த நிஜங்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Feb 21, 2012 5:51 pm

உடனே கண்டக்டரும், டிரைவரும், "ஆமாய்யா இப்ப பேசுங்க. ஓடுற பஸ்ல ஏறக்கூடாது இறங்குன்னு கண்டக்டர் கத்தினார். அப்ப யாரும் சொல்லல. பஸ்ஸை நிறுத்தி நான் மரியாதையா சொல்லிப் பார்த்தேன், அப்பவும் அவங்க கேட்கல. நீங்களும் ஒண்ணும் சொல்லல. ஓடுற பஸ்ல ஏறுறப்ப தவறி கீழே விழுந்து கையை காலை உடைச்சிக்கிட்டாங்கன்னா அப்பவும் நாங்க தானே பதில் சொல்ல வேண்டியிருக்கும்....படிக்கிற பையங்களுக்கு ஒழுக்கம் வேண்டாமா? எனக்கும் காலேஜ் படிக்கிற பையன் இருக்கான்...'' என்று பொரிந்து கொண்டே வண்டியை கிளப்பினார்.

அப்போது தான் அந்த டிரைவரின் கோபம் ஒரு பொறுப்புள்ள தந்தையின் ஆதங்கமாக வெளிப்பட்டதை உணர்ந்து கொண்டோம். நாளைய தேசத்தை ஆளப்போகும் இளைஞர்களே இப்படி அத்துமீறி நடந்து கொண்டால் எப்படி?


இப்படி நடந்தால் தான் ஓரளவுக்காவது திருந்துங்க என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1603

Back to top Go down

Page 11 of 15 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14, 15  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum