புதிய பதிவுகள்
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by ayyasamy ram Today at 9:37 am

» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Today at 9:32 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Today at 9:31 am

» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Today at 9:30 am

» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Today at 8:39 am

» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Today at 8:38 am

» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Today at 8:37 am

» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Today at 8:36 am

» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Today at 8:34 am

» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Today at 8:32 am

» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Today at 8:30 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 8:26 am

» Finest Сasual Dating - Actual Girls
by cordiac Today at 3:15 am

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
67 Posts - 64%
heezulia
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
24 Posts - 23%
mohamed nizamudeen
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
3 Posts - 3%
cordiac
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
2 Posts - 2%
prajai
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
2 Posts - 2%
Geethmuru
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
194 Posts - 57%
heezulia
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
107 Posts - 32%
T.N.Balasubramanian
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
12 Posts - 4%
prajai
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
4 Posts - 1%
cordiac
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
கடவுளும் நானும் ! Poll_c10கடவுளும் நானும் ! Poll_m10கடவுளும் நானும் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளும் நானும் !


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Feb 12, 2011 2:00 pm

கடவுளும் நானும்

ஒருநாள் இரவில் நான் கடவுளைச் சந்தித்தேன்... நீண்ட நேரம் நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பல சந்தேகங்களைக் கேட்டேன். அனைத்திற்கும் அவர் பொறுமையுடன் பதிலளித்தார். அதை இங்கே பதிகின்றேன்...

நான்: கும்பிடுகிறேன் கடவுளே...

கடவுள்: நீ இப்போது என்ன செய்தாய் தம்பீ!?

நான்: உங்களை வணங்கினேன் கடவுளே...

கடவுள்: ஓ! எதற்காக என்னை வணங்கினாய்?

நான்: என்னை இந்த பூமியில் படைத்ததற்காக, நன்றி சொல்லும் விதமாக அவ்வாறு வணங்கினேன்.

கடவுள்: உன்னை ஏன் படைத்தேன் என்று உனக்குத் தெரியுமா?

நான்: நான் சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே...?

கடவுள்: ஆம், அதற்காகத்தான்.... ஆனால் நீ படைக்கப்பட்டதன் நோக்கம் அது மட்டுமல்ல.
எனது தேவைக்காகவே உன்னைப் படைத்திருக்கின்றேன். எனவே, நீ எனக்கு நன்றியும் சொல்ல வேண்டாம், என்னை வணங்கவும் வேண்டாம்.

நான்: என்ன சொல்கிறீர்கள்,!?... எனக்குப் புரியவில்லை...

கடவுள்: அதாவது.... (கடவுள் சற்று யோசித்தார்..) ஆம், உனக்குப் புரியும்படி சொல்கிறேன் கேள்...
நீங்கள் இப்போது செல்போன் பயன் படுத்துகிறீர்கள் அல்லவா? அந்த செல்போனை உருவாக்கியது யார்?

நான்: என்னை போன்ற ஒரு மனிதன் தான் உருவாக்கினான்.

கடவுள்: அதைப் பயன் படுத்துவது யார்?

நான்: அதுவும் மனிதன் தான்.

கடவுள்: ஆம், நன்றாகப் புரிந்து கொண்டாய். உங்களின் தேவைக்காக செல்போனை உருவாக்கினீர்கள் அதை நீங்களே
பயன் படுத்துகிறீர்கள். எந்த ஒரு செல்போனும் தானாக இன்னொரு செல்போனுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்வதில்லை.
இதற்காக செல்போன் உங்களுக்கு நன்றி சொல்கிறதா? அப்படியே சொன்னாலும் அது உங்களுக்கு புரிந்து விடப்போகிறதா?
அதோபோலவே, நான் உங்களைப் படைத்தது எனது தேவைக்காகத்தான். அதனால் நீங்கள் எனக்கு நன்றி சொன்னால் எனக்குப்
புரியப்போவதும் இல்லை, நீங்கள் என்னை கும்பிடுவது எனக்குத்தெரியப் போவதும் இல்லை.

நான்: அப்படியானால் இந்தப்பூமியில் பல கோவில்கள் கட்டி, வழிபாடுகள் எல்லாம் நடக்கிறதே...

கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....


தொடரும்...

"அந்தப்பார்வை"





[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Feb 12, 2011 3:15 pm

[You must be registered and logged in to see this image.]



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
[You must be registered and logged in to see this image.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Thu Apr 21, 2011 6:28 am

தொடர்ச்சி.....

கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....

நான்: என்ன கடவுளே.... இது உங்களுக்கு தெரியாதா? இந்த உலகில் எத்தன எத்தனை உயரமான கோபுரங்களுடன் உங்களுக்காக கோவில்கள் கட்டப் பட்டிருக்கிறது...

கடவுள்: இல்லை குயிலன், நீ தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய்! அந்தக் கோபுரங்கள் எனக்காக கட்டப் பட்டதில்லை. அதெல்லாம் இறந்து போன அவரவர் உறவினர்களுக்காக கட்டப் பட்டவை.

நான்: இல்லையே, அங்கு அவர்களின் உறவினர்களின் புகைப்படங்கள் மாட்டப் படவில்லை, மாறாக உங்கள் படங்கள் தான் மாட்டப் பட்டிருக்கிறது. எனவே அது நீங்கள் தான். அந்தக் கோவில்கள் உங்களுக்கானதுதான். என்னை ஏமாற்றாதீர்கள்.

கடவுள்: குயிலன்!... (கோபமாக...) நீ படித்தவன்... நான் படைத்தவன்! எனக்குத் தெரியாததா உனக்குத் தெரிந்துவிடும்...
உன் கண்களைத் திறந்து என்னை நன்றாகப் பார்...!

நான்: கண்ணைத் திறந்தால் "கனவு" கலைந்து விடுமே கடவுளே...?! ஜாலி

கடவுள்: கிண்டல் செய்யாமல், என்னை நன்றாக உற்றுப் பார்! எனது புகைப்படமா அங்கு மாட்டப் பட்டிருக்கிறது?...

நான்: (கண்களை நன்றாகத் திறந்து பார்த்தேன்...பயம்) ஒண்ணுமே தெரியலையே கடவுளே..!?

கடவுள்: பிறகு எப்படி..., அங்கு இருப்பது நான் தான் என்று அடித்துச் சொல்லுகிறாய்?... மண்டையில் அடி

நான்: அட ஆமா....!, அதுக்கு ஏன் நீங்க என்னை அடிக்கிறீங்க?...

கடவுள்: பிறகு.... கண்ணைத் திறந்து பாருன்னு சொன்னா, கனவு கலைஞ்சிடும்ன்னு கிண்டலா பண்ணுறே... நான் திறக்கச் சொன்னது உன்னோட பார்வையை இல்லை, உன்னோட அறிவை!!!

நான்: இப்ப புரிஞ்சிடுச்சி கடவுளே.... அடிச்சி சொன்னாத் தான் புரியும் போல இருக்கு! சரி கடவுளே.... நான் உங்ககிட்ட கேட்கனும்ன்னே இருந்தேன். ஆமா... எதுக்காக எல்லாத்துக்குமே எதிர்ப்பதமா ஒண்ணை படைச்சிருக்கீங்க?

கடவுள்: எதிர்ப்பதம்-ன்னா? எனக்குப் புரியிர மாதரி கேளு குயிலன்!

நான்: (Mind Voice) ம்கும்.... நான் பேசுறது மனுசங்களுக்குத்தான் புரியாதுன்னு நினைச்சேன்... உங்களுக்குமா புரியல?...

கடவுள்: உன்னோட Mind Voice எனக்குப் கேக்குது குயிலன்....

நான்: ஆம்! இதெல்லாம் கரைக்டா கேக்கும்... ஆனா, நான் சொல்லுறது மட்டும் புரியாதா?...

கடவுள்: எல்லாம் காரணமாத்தான் கேக்குறேன்... நீ சொல்லு..!

நான்: அதாவது... இப்போ, நல்லதுன்னு ஒண்ணு இருந்தா அதுக்கு நேர் மாறா கெட்டதுன்னு ஒண்ணு இருக்கு! இன்பம்ன்னு இருந்தா, துன்பம்ன்னு ஒண்ணு இருக்கு!
பகல்ன்னு இருந்தா.....

கடவுள்: (குறுக்கிட்டு..) கொஞ்சம் இரு குயிலன்! நீ எதை நல்லதுன்னு சொல்லுறே? எதை கெட்டதுன்னு சொல்லுறே? முதல்ல... எது நல்லது? எது கெட்டது? அப்படின்னு நான் உனக்கு எப்ப சொல்லிக் கொடுத்தேன்?

நான்: ஆஹா.....! இதுல இப்படி ஒண்ணு இருக்கா?... (உடனே சமாளித்து....) ம்‌ம்.... நல்லா இருக்கு கடவுளே நீங்க சொல்லுறது... எல்லாத்தையும் உங்க கிட்டயே கேட்டுக்கிட்டு இருக்க முடியுமா? நீங்க எங்க இருக்கீங்கன்னு யாருக்குத் தெரியும்?... நான் மனுசங்க கூடத் தான் பேசுறேன், பழகுறேன், வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்... அப்போ மனுசங்க சொல்லுறதைத் தானே நான் நம்ப முடியும்?...

கடவுள்: உன்னோட பேச்சுத் திறமையால நீ என்னை மடக்கிட்டதா நினைச்சுக்காதே குயிலன்...! மத்தவன் சொல்லுறதை அப்படியே நம்புறதுக்காகவா, நான் உனக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன்? நீ யாறுக்கிட்டா பேசி கிட்டு இருக்கேன்னு உனக்கு நியாபகம் இருக்கா?!

நான்: ஆ..ங்...! நான் ஒண்ணும் தப்பா கேக்கலையே... சரியாத்தானே சிந்திச்சி கேட்டுருக்கேன்?...

கடவுள்: ஆமா குயிலன், நீ சரியாத்தான் சிந்திச்சி கேட்டுருக்கே...! நீ கேட்டதிலேயோ, சிந்திச்சதிலேயோ எந்தத் தவறும் இல்லை. ஆனா, நான் உனக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன் பாரு... அதிலே தான் தவறு இருக்கு! ஆறாவது அறிவை நீ எப்படி பயன் படுத்திக்கிட்டு இருக்கேன்னு நினைக்கும் போது.... ஏண்டா, நாய்களுக்கும், கழுதைகளுக்கும் அந்த அறிவை கொடுக்காமல் போனேன்னு நினைச்சி, நான் ரொம்ப வேதனைப் படுறேன்.....

நான்: மன்னிச்சிடுங்க கடவுளே!....

கடவுள்: இல்லை குயிலன்..., நீ உன்னோட ஆறாவது அறிவை பயன் படுத்தி, எப்படி வேனாலும் பேசலாம்! எதை, ஏதோட வேணும்னாலும் முடிச்சு போடலாம், உண்மையை பொய்'ன்னு சொல்லலாம்... பொய்'யை உண்மை'ன்னு சொல்லலாம்... எல்லாத்துக்கும் உதாரணம் காட்டி நிரூபிக்கலாம். ஆனால், அதனால என்ன பயன்....? அங்கதான் இருக்கு இந்த ஆறாவது அறிவோட வெற்றி! அதை நான் மனிதனுக்கு மட்டுமே கொடுத்திருக்கிறேன்...!

நான்: கடவுளே... கேக்குறேனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க... மற்ற உயிரினங்களுக்கு, நீங்க ஏன் சிந்திக்கிற அறிவை கொடுக்க வில்லை?

கடவுள்: மற்ற உயிரினங்கள் சிந்திக்க வில்லை என்று யார் சொன்னது குயிலன்..? இந்த வீடியோவை கொஞ்சம் பார்!

Spoiler:

புரிஞ்சுதா...? நான் எல்லா உயிரினங்களுக்கும் சிந்திக்கிற அறிவைக் கொடுத்திருக்கிறேன்.... ஆனால், மனிதனுக்கு மட்டுமே "சிந்தித்து செயல்படுத்தக்கூடிய" அறிவைக் கொடுத்தேன். அதுதான் ஆறாவது அறிவு!!! நான் ஏன் உன்னை மாதரி மனிதனுக்கு மட்டும் இந்த ஆறாவது அறிவைக் கொடுத்தேன் தெரியுமா? மற்ற உயிரினங்கள் எல்லாம், சாப்பிடும்... தூங்கும்... இனப்பெருக்கம் செய்யும்! ஆனா, மனிதன் மட்டும் தான் புதுசு புதுசா எதையாவது உருவாக்குவான்!.... மனிதன் மட்டும் தான் மற்ற உயிரினங்களை அரவணைக்கிறான்!... அதனாலதான் மனிதனுக்கு ஆறாவது அறிவைக் கொடுத்தேன்.

நான்: நான் எனது தவறை உணர்ந்து கொண்டேன் கடவுளே...

கடவுள்: தவறைக்கூட உணர வேண்டாம் குயிலன், உன்னை நீ உணர்ந்தால் போதும்! உன் வாழ்க்கையை சரியாக வாழ்ந்து, உன்னால் முடிந்ததை இந்த உலக மக்களுக்கு உணர்த்து! அதற்காக என்னைப் பற்றி பெருமை பேசிக் கொண்டிருக்காதே...

நான்: சரி கடவுளே... ஆனால், எங்கள் திருப்திக்காக, நாங்கள் உங்களுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து கொள்கிறோமே... அதில் என்ன தவறிருக்கிறது?

கடவுள்: உன்னை உருவாக்கியவன் நான். நான்தான் உனக்காகக் கவலைப் பட வேண்டும். நீ பெருமை பேசியோ, நீ அர்ச்சனை செய்வதாலோ நான் உயர்வடையப் போவதில்லை. நான் உயரத்தில் தான் இருக்கிறேன். நீ உயரத்திற்கு வா! உன்னை நீ சுத்தப்படுத்திக் கொள்!! நீ எனக்கு பாலாபிஷேகம் செய்வது எப்படி தெரியுமா இருக்கிறது? உன் பெற்றோரை சாவடித்து சாமாதி செய்து, அதுதான் என் பெற்றோர் என்று சமாதிக்கு பாலாபிஷேகம் செய்வது போல் உள்ளது!! உன்னை வடிவமைத்தவன் நான். எனவே நீ என்னை சாதாரணமாக அடையாளப் படுத்தாதே!! கடவுள் இல்லை என்று சொன்னால் உனக்கு எவ்வளவு ஆத்திரம் வருகிறது? உறவு, நட்பு என்று கூட பார்க்காமல் எத்தனை எடுத்தெறிந்து பேசுகிறாய்.... அப்படி இருக்கும் போது, நான் மகா சக்தி...! நான் பேரொளி...! நான் அண்டங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் அதிகாரத்தில் இருக்கிறேன்.... என்னை ஒரு சிறிய கல்லோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாயே, வாழைப் பழத்திற்கும், தேங்காய்க்கும் நான் பிச்சை எடுப்பது போல் என்னை கேவலப் படுத்துகிறாயே... அதைப் பார்த்து நான் எவ்வளவு ஆத்திரப் பட வேண்டும்? எவ்வளவு கொந்தளிப்பு அடைய வேண்டும்?... பூகம்பங்களையும், சுனாமிகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கச் செய்துவிடாதே!! எனது பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கிறது... அந்த எல்லைவரை மட்டுமே உங்களுக்கு அனுமதி....!! எல்லையைத்தாண்ட முயற்ச்சித்தால் பூமியையே இரண்டாகப் பிளந்தெரிந்து விடுவேன்!! அதனால் யாருக்கு என்ன விளைவு என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்!!

நான்: கடவுளே!... அமைதி!... அமைதி..! சாந்தமாகுங்கள்!... எனது அறியாமையினால், உங்கள் கோபத்தை நான் தூண்டி விட்டேன்... இருங்கள்.. இருங்கள்...
விபூதி, தேங்காய், பழம், கற்பூரம் கொண்டு வந்து உங்களை சாந்தப் படுத்துகிறேன்...!

கடவுள்: அடே... முட்டாள்!! நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்று உனக்குப் புரிய வில்லையா?... மீண்டும் மீண்டும் அதையே செய்வேன் என்கிறாய்...?

நான்: ஐயோ...! கடவுளே....! மன்னித்து விடுங்கள்... மன்னித்து விடுங்கள்...! எனக்குத் தூக்கக் கலக்கமாக உள்ளது... அதனால் தான் இந்தத் தடுமாற்றம் என்று நினைக்கிறேன்... சரி கடவுளே... நாம் ஆரம்பத்தில் பேசியது போல் சாதாரணமாக பேசலாமா?

கடவுள்: தூங்கி வழியும் உன்னோடு நான் பேசத்தயாராக இல்லை!! நான் செல்கிறேன்...!

நான்: என்ன கடவுளே, அதற்குள் கோபித்துக் கொண்டீர்கள்!

கடவுள்: அதெல்லாம் நான் ஒன்றும் கோபம் கொள்ள வில்லை! என் கோபத்தைக் காட்டினால் நீ தாங்கமாட்டாய்! நீ நன்றாக தூங்கு, நாம் இன்னொரு நாள் பேசலாம்..!

நான்: ஆம்! சரி கடவுளே... எனக்கும் கொஞ்சம் கண்களை வாட்டத்தான் செய்கிறது... இந்த நிலையில் உங்களோடு பேசினால், நீங்கள் பார்த்திபன் போல் குண்டக்க மண்டக்க எதையாவது சொல்லி, என்னை ஆஃப் பண்ணி விடுவீர்கள். எனவே நானும் நன்றாகத் தூங்கி தெளிவாக வருகிறேன்... உங்களிடம் நிறைய பேசவேண்டும். உங்களால் படைக்கப் பட்ட நான் எத்தனை திறமையாகப் பேசுகிறேன் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?...

கடவுள்: அடக்குடா...! நான் உன்னைப் படைத்தவன்...

நான்: (Mind Voice) அதைத்தானே நானும் சொன்னேன்... ஏன் அடக்கச்சொல்கிறார் இந்தக் கடவுள்..?

கடவுள்: ம்‌ம்....!

நான்: ஆங்! ஒன்றுமில்லை கடவுளே... நாம் நாளை பேசுவோம்... குட் நைட் !

கடவுள்: அது என்ன குட்டு... நைட்டு...?

நான்: எல்லாம் தெரியும்ன்னு சொல்ல வேண்டியது... அப்பறம் அது என்ன? இது என்ன? ன்னு என் வாயைப் புடுங்க வேண்டியது...
அதாவது ராத்திரியில, தூங்கப் போகும் போது இப்படி சொல்லிக்கறது எங்களை மாதரி மனிதர்களோட வழக்கம். அதைத்தான் சொன்னேன்...

கடவுள்: எனக்கு ராத்திரியும் இல்லை, பகலும் இல்லை. நீ தூ...ங்கு...! (என்று கூறி கடவுள் சென்று விடுகிறார்..)

நான்: ஆமா... நான் இதுவரைக்கும் கடவுளோடவா பேசிக் கிட்டு இருந்தேன்...? கடவுள் மனிதர்களோடு பேசுவாரா? ஒருவேளை... எனக்கு பைத்தியம் பிடிச்சிருக்குமோ...?
இல்லைன்னா... நான்தான் கடவுளா இருப்பேனோ...? ஐயோ! கடவுள்ன்னு சொன்னா அப்புறம் புடிச்சி அரஸ்ட் பண்ணி உள்ள போட்டுடப் போறாங்க....
எல்லாரும் கேட்டுக் கோங்க.... நான் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லை...!! இது என்ன கடவுள் இல்லைங்கர மாதரி வருது.... அய்யய்யோ.. வம்பே வேண்டாம், ஐயா, நான்... என்னைப் பார்த்து... நான் கடவுள் இல்லைன்னு... என்னையே நான் சொல்லிக்கிட்டேன்...!! அப்பா.......டா.....!!

கடவுள் குரல்: தூங்குடா டேய்!...

தொடரும்...

"அந்தப்பார்வை"




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Apr 22, 2011 1:04 pm

தவறாக புரிந்து கொள்பவர்கள் மன்னிக்கவும்!!



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 22, 2011 1:13 pm

நல்ல காமெடியா இருக்கு குயிலன்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 22, 2011 1:15 pm

அருமையான கற்பனை நண்பா உங்களின் இந்த முயற்சி ரொம்ப நல்லா இருக்கு ஆனால் கடவுளோட பேசுறது தான் ரொம்ப கற்பனையா இருக்கு இருந்தாலும் நல்லாதான் இருக்கு........ நம்ம கடவுள் கிட்ட என்ன என்ன கேக்கணும்னு நினைச்சிட்டு இருக்கிறோமோ அதை எல்லாம் நீங்க கேக்குற மாதிரி இருக்கு சூப்பர் நண்பா



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 22, 2011 1:21 pm

வித்தியாசமான கற்பனை
வாழ்த்துக்கள் குயிலன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Apr 22, 2011 1:50 pm

உங்க கனவுல கடவுள் வந்தது மட்டும் தான் இதுல காமெடியா தெரிஞ்சுச்சு... [You must be registered and logged in to see this image.]

இந்த பதிவு யாருக்காக? இனியும் தொடருமா? அதிர்ச்சி [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Apr 22, 2011 1:52 pm

பிளேடு பக்கிரி wrote:உங்க கனவுல கடவுள் வந்தது மட்டும் தான் இதுல காமெடியா தெரிஞ்சுச்சு... [You must be registered and logged in to see this image.]

இந்த பதிவு யாருக்காக? இனியும் தொடருமா? அதிர்ச்சி [You must be registered and logged in to see this image.]

தொடரும் மாப்ள


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Apr 22, 2011 2:08 pm

பிளேடு பக்கிரி wrote:உங்க கனவுல கடவுள் வந்தது மட்டும் தான் இதுல காமெடியா தெரிஞ்சுச்சு... [You must be registered and logged in to see this image.]

இந்த பதிவு யாருக்காக? இனியும் தொடருமா? அதிர்ச்சி [You must be registered and logged in to see this image.]

தனிப்பட்ட யாரையும் புண் படுத்த இதை நான் சொல்லவில்லை நண்பா!
எனக்கு எதிரிகளே இல்லை! இருந்தாலும் அது நீடிப்பதும் இல்லை....
எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.... யாராவது புரிந்து, உணர்ந்து கொண்டால் நான் சந்தோஷப் பாடுவேன்!
இதில் காமெடி கொஞ்சம் அதிகமாக இருக்கும்.!!

இதை தொடரவேண்டாம் என்று 25 அதிகப்படியான நண்பர்கள் (250 பதிவுகளுக்கு மேல் செய்தவர்கள் மட்டும், அல்லது 5 நிர்வாகத்தில் இருப்பவர்கள்) )கேட்டுக் கொண்டால்
கண்டிப்பாக இதை "இங்கு" தொடர மாட்டேன்!!

எனது கருத்துக்களை விட, நண்பர்களே எனக்கு முக்கியம்!!


"அந்தப்பார்வை"



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக