|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm
» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:23 pm
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by gilmakvp Today at 8:13 pm
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by முஹைதீன் Today at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ராஜா Today at 7:32 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm
» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm
» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm
» முருங்கை
by vvraman2008 Today at 5:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
போடு...போடு.....உக்கி போடு.
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
போடு...போடு.....உக்கி போடு.
போடு...போடு.....உக்கி போடு
”உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்காடா? ன்னு பிளட் பிரஷர் ஏறிக் கோபமா கத்திகிட்டு இருக்கும் போது, “உங்க பிள்ளைதானே” என்று கூறி நம் கோபத்தைக் குறைக்கும் (இரத்தக் கொதிப்பையும்) அளவுக்கு நம் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்பது உண்மைதான். ஆனால் போட்டிக்குத் தயார் ஆகனும்னா இந்த நகைச்சுவை உணர்வு மட்டும் போதுமா? ஆழமான சிந்தனையும் தேவை இல்லையா? அபாரமான அறிவுத்திறன் உள்ளவனா ஆக வேண்டாமா?
உங்களுக்கே நல்லா தெரியும். முருகனுக்கும் விநாயகனுக்கும் நடந்த போட்டியில மாம்பழம் யாருக்குன்னு முடிவு செஞ்சது எது? மூளை. பலமா இல்ல உடல் பலமா? தன்னோட தொப்பையைக் கூட தூக்கிட்டு ஒட முடியாத
ஒரு குண்டுப் பிள்ளை, போட்டியில ஜெயிச்சதுன்னா. அது சூப்பர் பெரெயினாலதானே. அந்தக் காலத்திலேயே, புராண காலத்திலயே ஒரு சின்ன மாம்பழத்தை ஜெயிக்க மூளை வேண்டியிருந்திருக்கு. இந்தக் காலத்தில???
உலகத்தைச் சுத்திட்டு வான்னு சொன்னா செஞ்சிடலாம். முருகன் சுத்தன மாதிரி ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வந்து பரிசை வாங்கிடலாம். இருக்கவே இருக்கு ஏரோ மயில். பல வண்ணங்கள்ள.. ஆனா அதை யாரு மதிக்கறாங்க.. மூளை இருக்கா? மூளைதான் முதல்லன்னு கேக்கற காலமா இல்ல இருக்கு.. இந்தக் காலத்தில படிப்புக்கும் வேலை வாய்ப்புக்கும்... அப்பப்பா!! பிள்ளைகள் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு வாய்ப்புக்கு நூற்றுக்கணக்கானவர்கள்
போட்டி போடுற இந்தக் காலத்தில் மூளை இல்லாம என்ன செய்ய முடியும்.
மூளை என்பதெல்லாம் இயற்கையில் இருக்கனும். திடீர்னு மூளை வளரனும்னு சொன்னா எப்படி வளரும். அது என்ன மரம் செடி கொடியா? கொஞ்சம் தண்ணீரும் கொஞ்சம் ஆட்டுப்புளிக்கையையும் போட்டு நல்லா கொத்தி விட்டு வளர்க்க? மண்டை ஆயிற்றே.. ரணகளமா இல்ல போயிடும்.
அதனால்தான் அந்த யானை பலமுள்ள மூளைக்கார பிள்ளை சொல்லிக்கொடுத்த ஒரு யோகாவைச் செஞ்சா அவரு மாதிரியே மூளை வளரும். அப்பரம் மாம்பழம் என்னங்க மாம்பழம்? ஒரக்கண்ணாலகூட உங்களத் திரும்பிப்
பாக்காத உங்க மாமா பொண்ணைக் கூட நீங்க ஈசியா மடக்கிடலாம்.
[justify]அதுக்கு ஒரு எளிமையான வழி இருக்கிறதுன்னு சொல்றாரு..லாஸ் ஏஞ்சல்ஸ் நாட்டைச் சேர்ந்த எரிக் ராபின்ஸ் (Dr. Eric Robins) என்ற மருத்துவர்.
ஒரு சின்ன யோகா செய்தால் மூளை பெரிய அளவில் வளர்ச்சி அடைகிறதாம். ஆமாங்க உடல் பயிற்சி என்பது வெறும் உடலுக்கு மட்டும் இல்லையாம். உணர்வைத்தூண்டும் மூளையையும் தூண்டுவதே உடற்பயிற்சியாம். மூளையில் உயிரணுக்கள் இறந்து விட்டால் மீண்டும் புதிய உயிரணுக்கள்உற்பத்தி ஆவது இல்லை என்ற பழைய அறிவியல் இந்தப் புதிய உடற்பயிற்சியால் புது முடிவை
அடைந்துள்ளதாம். இந்த உடற்பயிற்சியினால் மூளையில் நினைவாற்றல், படிப்புத்திறன் இரண்டையும் அதிகரிக்கச் செய்யும் ஹிப்போகேம்பஸ் (Hippocampus) என்ற நரம்பு மண்டலப் பகுதியில் புதிய செல்கள் உருவாகின்றனவாம்.
யேல் பல்கலைக் கழக நரம்பியல் நிபுனர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Aung) அவர்களும் இந்த யோகாவால் அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதால் மூளை பலம் பெறும் என்கிறார்.
இந்த யோகாவால் ஆட்டிசம் போன்ற மூளை நோய்களும் குணமடைகிறதாம். அப்படி என்னதான் யோகா என்று கேட்கிறீர்களா?
சரி யோகாவைத் தொடங்குவோம். முதலில் இரண்டு கால்களையும் நேராக வைத்துக்கொண்டு நிறகவேண்டும். முதுகு வளையக் கூடாது. அது மிகவும் முக்கியம்
நின்றவுடன் இரண்டு கைகளையும் மாற்றிப் பிடித்துக் கொண்டு வலது கையால் தலையின் இடப்பக்கத்திலும், இடக் கையால் தலையின் வலப் பக்கத்திலும்
நங்கு நங்கு என்று இல்லை. லேசாகப் பனிரெண்டு முறை கொட்டிக் கொள்ளவும்.
நங்கு நங்கு என்று இல்லை. லேசாகப் பனிரெண்டு முறை கொட்டிக் கொள்ளவும்.
அடுத்து வலது கையால் இடது காது மடலையும் இடது கையால் வலது காது மடலையும் பிடித்துக் கொள்ளவேண்டும். கட்டை விரல் முன்பக்கமும் சுட்டு
விரல் பின்பக்கமும் இருக்குமாறு பிடித்துக்கொள்ள வேண்டும்.
இப்போது உங்கள் முன்கை உங்கள் முன்புறம் மார்போடு லேசாக உராய்வது போல இருக்க வேண்டும். இதுவும் ரொம்ப முக்கியம். இதைவிட ரொம்ப ரொம்ப முக்கியம் என்னவென்றால் இடது கை உட்புறமும் வலது கை வெளிப்புறமும் இருக்க வேண்டும்.
அடுத்து என்ன அப்படியே எத்தனை முறை கொட்டிக் கொண்டீர்களோ அத்தனை முறை சும்மா உட்கார்ந்து எழுந்திருங்கள். முடிந்து போயிற்று பிரெயின் வாஷ் யோகா.. இல்லீங்க . சூப்பர் பிரெயின் யோகா..
இப்ப என்னன்னு புரிஞ்சி இருக்குமே.. நம்ம புள்ளையார் தோப்புக்கரணம் தான் இப்ப வெளி நாடு போயி சூப்பர் பிரெயின் யோகாவாக (Super Brain yoga) ரெஃப்ரெஷ் ஆயிருக்கு. இப்படி நம்ம ஆளுங்க கண்டு பிடிச்சதையெல்லாம் சுட்டுட்டுப் போயி காசு பண்ணிடறாங்களே. அதுமட்டுமில்லை. நம்மளயும் ஏதோ புதிசு கண்டு பிடிச்ச மாதிரி பிரெயின் வாஷ் செஞ்சிடறாங்க.
இத்தனை காலமா நாம் புள்ளையாரு முன்னால இந்த யோகாவைச் செய்து கொண்டு இருக்கிறோமே. இதற்கு ஒரு படம் போட்டு (யூ டியூப்) விளம்பரம் செய்யனும்னு யாருக்காவது தோனிச்சா? பக்திமான்னு சொல்லிக்கற ஆன்மிக வாதிகளையும் சேர்த்துத் தான்.
இதுக்கு கைவசம் புராணமெல்லாம் வேற வெச்சிருக்கோம். ஆமாம்ங்க. புள்ளையாருக்கு இப்படி தோப்புக்கரணம் போடுவது ஏன்? எதனால் தொடங்கியது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? .
காவிரியின் துள்ளலை அடக்க தன் கமண்டலத்தில் பிடித்து அடைத்து விட்டார் குருமுனி அகத்தியர். அவர் தவத்தில் இருக்கும் போது காகம் வடிவில் அந்த இந்த குரும்புப் பிள்ளையார் அந்தத் தண்ணீரைக் கொட்டிவிட்டுட்டார். பயங்கர கோபத்துடன் அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினாராம். காகமாக இருந்த விநாயகர் சுய உருவம் எடுத்து உலக நனமைக்காகத்தான் காவிரியை ஓட விட்டேன் என்றாராம்.. பிள்ளையாரால கமண்டலத்தில இருந்து ரிலீஸ் ஆனது. ஆனால் கர்நாடக கமண்டலத்தில் இருந்து இன்னும் ரிலீஸ் ஆக முடியாமல் அடைபட்டுக் கிடக்கிறது. அது வேறு விஷயம். மறுபடியும் பிள்ளையார்தான் வரனும். அது இருக்கட்டும். விட்ட இடத்திற்கு வருவோம். தன் தவறை உணர்ந்த அகத்தியர் தன் தலையில் குட்டிக்கொண்டாராம். அதனால் தான் விநாயகரை வழிபடும்போது தலையில் குட்டிக்கொள்கிறோம். இது குட்டிக் கொள்வதற்குக் காரணமாக அமைந்த புராணம்.
சரி... தோப்புக்கரணம் எப்படி வந்தது என்று கேட்பது புரிகிறது? சொல்றேன்.. சொல்கிறேன். ஒரு முறை விளையாட்டுப் பிள்ளை பிள்ளையார், திருமாலின் சக்கரத்தை எடுத்து வாயில் போட்டுக்கொண்டுக் கொண்டு விட்டாராம். சின்னக் குழந்தைதானே. போலோ என்று நினைத்து இருப்பார். பிள்ளையார் சிறு வயதிலேயே ரொம்ப பிடிவாதக்குணம் கொண்டவராம். அது மட்டுமல்ல யானை பலம் கொண்டவராம். கஜமுகனான அந்த விடாக்கொண்டனிடம் இருந்து தன்னுடைய தர்மச் சக்கரத்தை வாங்க திருமால் ஒரு பிளான் செய்தாராம். பிள்ளையாரைச் சிரிக்க வைத்து விட்டால் சக்கரம் வாயிலிருந்து கீழே விழுந்து விடும். எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாராம். பிள்ளையார் முன்பு இடக்காதை வலக்கையாலும் வலக்காதை இடக்கையாலும் பிடித்துக் கொண்டு
தோப்புக்கரணம் போட்டாராம். இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட்டாலே சிரிப்புத் தாங்க முடியாது. திருமால் நான்கு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட்டால் விடாக்கண்டன் என்ன கொடாக்கண்டனாக இருந்தாலும் சிரிக்காமல்
இருக்க முடியுமா? சிறு பிள்ளையான பிள்ளையாரும் சிரித்து விட்டாராம். அப்பரம் என்ன வடை கீழே விழுந்து விட்டதாம். நரி எடுத்துக்கொண்டு ஓடி விட்டதாம். சக்கரத்தைத்தான் சொன்னேன்.. திருமால் எடுத்துக்கொண்டு ஓடினாராம். அன்று முதல் பிள்ளையார் முன்பு தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்ததாம்.
புத்தியும் அந்தப் புத்தியால காரிய சித்தியும் தருவதற்காகவே இரு தேவிகளை அமர்த்தியிருக்கும் விநாயகர், ஷேமம் லாபம் இரண்டையும் தர இரண்டு மகன்களையும் அமர்த்தி இருக்கிறார் அப்படின்னு சொல்ற புராணமும் நம்மகிட்ட உள்ளது.
தோப்புக்கரணத்தால் உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை உள்ள நரம்புகள் தூண்டப்படுவதால் மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு கிடைக்கும். சரியான
இரத்த ஓட்டம் மூளைக்குக் கிடைப்பதால் அமைதியான நினைவுகள் தோன்றும்.
இரு கரங்களால் தலையில் குட்டிக்கொள்வதால் சகஸ்ராரம் என்ற இடத்தில் அமுதம் சுரக்கும். தோப்புக்கரணம் போடும்போது சுஷீம்னா என்ற என்ற நாடி தூண்டப்படுகிறது. விநாயகரைக் இம்முறையில் வணங்குவதால் நாடி சுஷீம்னாவும் தூண்டப்பட்டு அமிர்த கலசமும் சுரப்பதால் நல்ல ஞானத்தை அடைய முடியும் என்று சித்தர்களான தமிழ் யோகா மாஸ்டர்கள் என்றோ சொல்லிச் சென்றார்கள்.
நம்ம வாத்தியாருங்க.. படிக்காத மக்குப் பிள்ளைங்களுக்குக் கொடுக்கற தண்டனை என்னவாக இருந்தது. வீட்டு வேலை செய்துட்டு வரலையா? போடு இருபத்தைந்து. தப்பு பண்ணினியா போடு இருபத்தைந்துன்னு சொல்லி குழந்தைகளைப் போட வைத்துத் தண்டனைக் கொடுக்கற சாக்கில் மூளையை வளர்த்தாங்கள். இது அந்தக் காலத் தமிழ் பள்ளியில் மட்டுமல்ல. இப்ப இருக்கிற மெட்ரிகுலேஷன் பள்ளியா இருந்தாலும் தண்டனை ஒன்னுதான். பேருதான் வேற. இவங்க Sit ups னு .சொல்லுவாங்க. இதெல்லாம் இந்தக் காலத்திலயும் நடைமுறையில் இருக்கு. அதனால்தான் இந்தியர்களின் பிரெயின் சூப்பர் பிரெயினாக இருக்கிறது என்கிறார்களோ.... என்ன இருந்து என்ன... வடை பொச்சே....
சரி. சரி.. எல்லோரும் காலையிலயும் மாலையிலயும் பிள்ளையார் முன் போடுங்க ஒரு பனிரெண்டு..... ஏன் சொல்றேன்னா, தோப்புக்கரணம் போட்டாவது மூளையை வளர்க்க வேண்டுவது அவசியம். அதைவிட மிகவும் அவசியம் குட்டிக்கரணம் போட்டாவது நம்ம புராதனச் சொத்தை இந்தத் திருட்டுக் கும்பலிடம் இருந்துக் காப்பாற்ற வேண்டுவது.
பின்குறிப்பு:
”உடல் உறவுக்காக உயிரையும் கொடுக்கும் ஆண்கள், உளவியல் ஆய்வு” என்ற தலைப்பில் பதிவான கட்டுரைக்குக் கலை அவர்களின் கீழ்க்கண்ட பின்னூட்டம் கண்டதால் இந்தக் கட்டுரையைப் பதிவு செய்யும் எண்ணம் எழுந்தது. நன்றி கலை.
//சிலபல நல்ல ஆய்வு முடிவுகளுக்குப்பின் ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கொள்கையைஇறுதியில் மொழிந்த இந்த வல்லுனர்களுக்கு பல ஆண்டுகள் முன்னதாகவே நம்மிழர் குறிப்பிட்டுச் சென்று விட்டார்களே..
நம் வீட்டு அரிசியை வெளிநாட்டவன் வாங்கி அதில் ரைஸ் புட்டிங் செய்து நம்ம வீட்டு இட்லியை நமக்கே அல்வாவாக்கி தரும் போது அதை நாம்ம் வெகுவாகப் பாராட்டி மகிழ்கிறோம் என்பதே கொடுமைதான்..//
Re: போடு...போடு.....உக்கி போடு.
தகவலுக்கு நன்றி அக்கா

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: போடு...போடு.....உக்கி போடு.
கட்டுரை மிக மிக அருமை என்று வாசித்து முடிக்கும் போது... அட ... என் பின்னூட்டம் கூட ஒரு கட்டுரைக்கு வழி கோலுமா என்று வியந்தேன்..
பாராட்டும் நன்றியும் ஆதிரா..!
பாராட்டும் நன்றியும் ஆதிரா..!
Re: போடு...போடு.....உக்கி போடு.
நல்ல கட்டுரை.. நாளை முதல் இந்த யோகா தான்.
என் ஜூனியர் க்கு...
நன்றிகள்...பல...

என் ஜூனியர் க்கு...
நன்றிகள்...பல...

Re: போடு...போடு.....உக்கி போடு.
நல்ல பதிவு . நன்றி பல 


பிரகாசம்- இளையநிலா

- பதிவுகள்: 944
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 08/07/2009
மதிப்பீடு: 21
Re: போடு...போடு.....உக்கி போடு.
தமிழ்ஹிண்டுவில் இந்த தலைப்பில் சென்ற பிப்ரவரி 16 வெளிவந்த கட்டுரை தோப்புக்கரண நன்மைகள் அமெரிக்கன் சொன்ன ஏத்துக்கொங்க இந்தியன் சொன்ன சிரிக்கிறது
Re: போடு...போடு.....உக்கி போடு.
ஆஹா மிக அருமையா இருக்கு பானு.... டெஸ்ட் ட்யூப் பேபி கூட முதன் முதல் கண்டுபிடிச்சது நம்ம இந்தியர் தான்.. ஆனால் பேர் வாங்கினது என்னவோ அமெரிக்கா... அதென்னமோ அழகா இங்க இருந்து எல்லாம் சுட்டுக்கிட்டு நீங்க சொன்னது போல அமெரிக்கா பேரு வாங்குதுடோய்...
உங்க கட்டுரை எழுத தூண்டுகோலாய் இருந்த கலையின் பின்னூட்டத்திற்கும் ஒரு சல்யூட். கலையின் ஒவ்வொரு வார்த்தையிலும் டைமிங் நச் ஒரு வசனம் இருக்கும். அது கண்டிப்பா சிரிப்பு வரவெச்சிரும்.....
அன்பு நன்றிகள் பானுவின் கட்டுரைக்கும் கட்டுரை எழுதவைத்த கலையின் பின்னூட்டத்திற்கும்...
உங்க கட்டுரை எழுத தூண்டுகோலாய் இருந்த கலையின் பின்னூட்டத்திற்கும் ஒரு சல்யூட். கலையின் ஒவ்வொரு வார்த்தையிலும் டைமிங் நச் ஒரு வசனம் இருக்கும். அது கண்டிப்பா சிரிப்பு வரவெச்சிரும்.....
அன்பு நன்றிகள் பானுவின் கட்டுரைக்கும் கட்டுரை எழுதவைத்த கலையின் பின்னூட்டத்திற்கும்...

மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி

- பதிவுகள்: 9686
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816
Re: போடு...போடு.....உக்கி போடு.
அருமையான பதிவு ஆதிரா அக்கா

sshanthi- இளையநிலா

- பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121
Re: போடு...போடு.....உக்கி போடு.
மஞ்சுபாஷிணி wrote:ஆஹா மிக அருமையா இருக்கு பானு.... டெஸ்ட் ட்யூப் பேபி கூட முதன் முதல் கண்டுபிடிச்சது நம்ம இந்தியர் தான்.. ஆனால் பேர் வாங்கினது என்னவோ அமெரிக்கா... அதென்னமோ அழகா இங்க இருந்து எல்லாம் சுட்டுக்கிட்டு நீங்க சொன்னது போல அமெரிக்கா பேரு வாங்குதுடோய்...
உங்க கட்டுரை எழுத தூண்டுகோலாய் இருந்த கலையின் பின்னூட்டத்திற்கும் ஒரு சல்யூட். கலையின் ஒவ்வொரு வார்த்தையிலும் டைமிங் நச் ஒரு வசனம் இருக்கும். அது கண்டிப்பா சிரிப்பு வரவெச்சிரும்.....
அன்பு நன்றிகள் பானுவின் கட்டுரைக்கும் கட்டுரை எழுதவைத்த கலையின் பின்னூட்டத்திற்கும்...
Re: போடு...போடு.....உக்கி போடு.
அடடா நான் இப்பதான் ஆதிரா அக்கா இந்த பதிவையே பார்க்குறேன்.இத்தனை பலன்கள் இருக்கா இந்த ukkila? என்னோட குட்டி பொண்ணையும் போட சொல்லணும்.நன்றி அக்கா

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: போடு...போடு.....உக்கி போடு.
கடந்த ஒரு வாரம்மாக இத நாங்க ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கோம் 


பிரகாசம்- இளையநிலா

- பதிவுகள்: 944
வசிப்பிடம்: qatar
சேர்ந்தது: 08/07/2009
மதிப்பீடு: 21
Re: போடு...போடு.....உக்கி போடு.
உதயசுதா wrote:அடடா நான் இப்பதான் ஆதிரா அக்கா இந்த பதிவையே பார்க்குறேன்.இத்தனை பலன்கள் இருக்கா இந்த ukkila? என்னோட குட்டி பொண்ணையும் போட சொல்லணும்.நன்றி அக்கா
எல்லாம் பழைய விஷயம்தான். ஜுரிஜ் போய் மெருகேறி வந்திருக்கு..
குட்டியை மட்டும் இல்ல எல்லாரும் போடலாம். கருத்துக்கு நன்றி சுதா.

Re: போடு...போடு.....உக்கி போடு.
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:நல்ல கட்டுரை.. நாளை முதல் இந்த யோகா தான்.
என் ஜூனியர் க்கு...
நன்றிகள்...பல...![]()
உங்க ஜூனியர் தொடுக்கும் கேள்விக்கணைகளுக்கு பதில் சொல்ல வேண்டாமா சூர்யா? அப்ப(பா) நீங்களும்.....
நன்றி சூர்யா..
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum













