ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 M.Jagadeesan

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 ரா.ரமேஷ்குமார்

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 T.N.Balasubramanian

இயற்கையின் மொழிகள்!
 ayyasamy ram

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

காஷ்மீரில் பாக்., ராணுவம் தாக்குதல்: 5 பேர் பலி
 ayyasamy ram

அதிநாயகே' என்ற வார்த்தையை திருத்த வேண்டும் : அரியானா அமைச்சர்
 பழ.முத்துராமலிங்கம்

நடிகர் விஷால், கமல்ஹாசனுடன் திடீர் சந்திப்பு
 பழ.முத்துராமலிங்கம்

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 பழ.முத்துராமலிங்கம்

மொபைல் மணி டிரான்ஸ்பர்' நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

இடைத்தேர்தல் தோல்வி: யோகியை விமர்சித்த சுப்ரமணிய சுவாமி
 பழ.முத்துராமலிங்கம்

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 பழ.முத்துராமலிங்கம்

சுத்தமாகிறது தாஜ் மஹால்!
 பழ.முத்துராமலிங்கம்

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 Sanjusri

இந்திரா சவுந்தர்ராஜன் நாவல்கள்
 ரா.ரமேஷ்குமார்

புத்தகம் வேண்டும் - என் சரித்திரம் - டாக்டர் சாமிநாதையர்
 ரா.ரமேஷ்குமார்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 T.N.Balasubramanian

இரசித்துக் கேட்ட இரண்டு பழைய பாடல்கள்.(காணொளி+வரிகள்)
 ayyasamy ram

மூன்றாவது அணிக்கு முயற்சி: மம்தாவை சந்திக்கிறார் ராவ்
 ayyasamy ram

காவிரி வழக்கில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் முடிவிலிருந்து பின்வாங்கியது கர்நாடக அரசு
 பழ.முத்துராமலிங்கம்

இளைஞர்களைத் தாக்கிய போலீஸ்: காவல் ஆணையர் உத்தரவின் பேரில் வீட்டுக்கே சென்று மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்: சென்னையில் நெகிழ்ச்சி
 SK

பேஸ்புக் தகவல்களை ‘கசிய விடும்’ ஊழியர்கள்: பொறி வைத்து பிடிக்கும் ஜுகர்பெர்க்கின் ‘ரகசிய போலீஸ்’
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பங்குனியில் பொங்கிய கங்கை!
 பழ.முத்துராமலிங்கம்

மல்லையா, நிரவ் மோடி போல 31 பேர் இந்தியாவை விட்டு தப்பி ஓடியுள்ளனர் - மத்திய மந்திரி தகவல்
 T.N.Balasubramanian

ஒரு பக்கக் கதை - மந்திரம்
 SK

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘நான் ருத்ரன்’?
 SK

ஓட்டுக்குப் பணம் தர நாங்கள் தயார்....
 ஜாஹீதாபானு

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 SK

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 T.N.Balasubramanian

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு பக்கக் கதை - மெசேஜ்
 ஜாஹீதாபானு

சுவீடனில் கிம்ஜோங்-,டிரம்ப் சந்தித்து பேச திட்டம்
 SK

ஆத்மாவுக்கு பயன்படும் புறச்சின்னங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விவசாயிகள் பிரச்சினையை வலுவாகப் பேசிய ‘கத்துக்குட்டி’ மீண்டும் ரிலீஸ்!
 ரா.ரமேஷ்குமார்

பெண் நிருபரை சீண்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்
 SK

ரயிலில் பயணிக்க சலுகை அறிய ரயில் நிலையத்தை அணுகலாம்: அதிகாரிகள் தகவல்
 SK

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

வருமான வரி கட்டாததால் நடவடிக்கை சென்னையில் வரும் 27ம்தேதி நடிகை ஸ்ரீவித்யா வீடு ஏலம்
 பழ.முத்துராமலிங்கம்

இரும்பு இதயங்களுக்கான திறவுகோல்
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
 பழ.முத்துராமலிங்கம்

சுசீந்தரனின் ’ஏஞ்சலினா’ படப்பிடிப்பு நிறைவடைந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு ஜப்பான் முட்டை...
 பழ.முத்துராமலிங்கம்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

தேசிய கீதத்தில் திருத்தம்: காங்., எம்பி., தீர்மானம்
 SK

12 கி.மீ தூரத்தை 2 மணி 44 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்த சைலேந்திரபாபுவின் நீச்சல் குழு!
 பழ.முத்துராமலிங்கம்

மோடியின் அடுத்த இலக்கு யார் ? ராகுல் கேள்வி
 SK

புத்தகம் தேவை : அஞ்சலை - கண்மணி குணசேகரன்
 ManiThani

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

கொஞ்ச நேரம் நடிக்கலாம்
 SK

போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
 SK

எல்லா வித்தையும் தெரிந்தவன்...(விடுகதைகள்)
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்ட்ராங் உமன்' சூரியபிரபா !

View previous topic View next topic Go down

ஸ்ட்ராங் உமன்' சூரியபிரபா !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 1:03 am

ஸ்ட்ராங் உமன்' சூரியபிரபா !

வீட்டில் சுமார் 30 கிலோ எடையிருக்கும் கேஸ் சிலிண்டரை நகர்த்தி வைப்பதற்கே பெருமூச்சு விடுவார்கள் பலரும். ஆனால், வலுதூக்கும் (Powerlifting) வீராங்கனையான சூரியபிரபா... பயிற்சிக்காக 185 கிலோ எடையை சர்வசாதாரணமாக லிஃப்ட் செய்து கொண்டிருந்தார்! மூளையின் கட்டளையை, உடலின் அத்தனை தசைகளும் இணைந்து செயல்படுத்திய அந்த உழைப்பை பார்த்தபோது, பிரமிப்பாக இருந்தது நமக்கு!

''சின்ன வயசுல எனக்கும் அப்படித்தான். பாண்டிச்சேரி ஸ்போர்ட்ஸ் கவுன்சில்ல, எங்கப்பா வெயிட் லிஃப்ட்டிங் கோச். அவர் கிளாஸ் எடுக்கப் போகும்போது, கூடவே போவேன். 'இந்த அண் ணன் எல்லாம் எப்படி இவ்வ்வ்வளவு வெயிட்டைத் தூக்கறாங்க?!’னு ஆச்சர்யமா இருக்கும். இப்போ, ஏதோ தண்ணி வாளியைத் தூக்கற மாதிரி எனக்கே பழகிடுச்சு!'' என்று சுவாரஸ்யமாக ஆரம்பிக்கும் சூரியபிரபா, வலு தூக்கும் போட்டி களில் சர்வதேச அளவில் முத்திரை பதித்து வரும், புதுச்சேரியைச் சேர்ந்த இருபது வயது இளம் விளையாட்டு வீராங்கனை!

''அப்பாவோட வெயிட் லிஃப்ட்டிங் கிளாஸுக்கு போய் போய்... ஒரு கட்டத்துல எனக்கும் அதுல ஆர்வம் வந்துச்சு. ஆனா, 'நாமளும் கொஞ்சம் கத்துக்கலாம்னு பொழுதுபோக்கா நினைச்சு வரக்கூடாது. சாதிக்கணும்ங்கற எண்ணம் உறுதியா இருந்தா மட்டும் கிளாஸுக்கு வா’னு கோச்சுக்கு உண்டான கண்டிப்போட அப்பா சொல்லிட்டார். அதையே சவாலா எடுத்துக்கிட்டேன். ஆனா, வெயிட் லிஃப்ட்டிங்கல சேராம... பவர்லிஃப்ட்டிங் பக்கம் என் கவனத்தைத் திருப்பினேன். ரெண்டுமே பார்க்கறதுக்கு ஒரே மாதிரி இருந்தாலும்... தூக்கற முறைகள்ல வேறுபாடு இருக்கும். அப்பாவோட இருந்தவங்கள்லாம் பவர்லிஃப்ட்டிங் பத்தி நிறைய சொல்லி ஊக்கப்படுத்தினாங்க. அதனாலதான் நான் பவர் லிஃப்ட்டிங்கை செலெக்ட் பண்ணினேன்.ஆறாவது படிக்கறப்பதான் பவர் லிஃப்ட்டிங்குக்காக கோச்சிங் போக ஆரம்பிச்சேன். ஏழாம் வகுப்பு படிக்கறப்ப... முதல் முறையா போட்டியில கலந்துக்கிட்டேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கறப்ப... நேஷனல் லெவல் போட்டிகள்ல கலந்துக்கற அளவுக்கு முன்னேறினேன்.

ப்ளஸ் டூ வரைக்கும்தான் படிச்சேன். அப்புறம் முழு நேரமும் பயிற்சிக்கே செலவழிச்சேன். 2008-ம் வருஷம் உஸ்பெக்கிஸ்தான் தலைநகர் டாஷ்கன்ட்ல நடந்த ஆசிய சாம்பியன்ஷிஃப் போட்டிகள்ல நாலு தங்கப் பதக்கத்தோட 'சாம்பியன்ஷிப்’ ஜெயிச்சேன். அதே வருஷம் ராஜஸ்தான் மாநிலம், 'மவுண்ட் அபு’ல நேஷனல் லெவல் சேம்பியன்ஷிப் போட்டியில, 162.6 கிலோ தூக்கி ரெக்கார்ட் செய்தேன். அதுக்காக 'ஸ்டிராங் உமன்’ பட்டம் கொடுத்தாங்க.

2009 வருஷம் புனேவுல நடந்த காமன்வெல்த் பவர் லிஃப்ட்டிங் சேம்பியன்ஷிப் போட்டியில, சப் ஜுனியர் பிரிவுல 155.5 கிலோ தூக்கினது மூலமா, இன்டர்நேஷனல் ரெக்கார்டான 150 கிலோவை முறியடிச்சேன்!'' என்று சொல்லும் சூரியபிரபா, உலக பவர் லிஃப்ட்டிங் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார்!

''இடையில... பவர் லிஃப்ட்டரான பாக்கியராஜ்கூட திருமணம் ஆனதும், 'இனி விளையாட்டை மூட்டை கட்டிடு’னு பலரும் சொன்னாங்க. ஆனா... கணவர், மாமனார், மாமியார்னு ஒட்டுமொத்த குடும்பத்தோட புரிதலால... எப்பவும் போல பயிற்சிகள் தொடருது'' என்ற சூரியபிரபா, தற்போது... மதியழகன், மாசிலாமணி என்று இருவரிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

''இந்திய அளவுல முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கறவங்களுக்குத்தான், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள்ல கலந்துக்கற வாய்ப்பு கிடைக்கும். நான் முதல் இடத்தில் வந்தாலும், வெளிநாட்டுல நடக்கற அந்தப் போட்டியில கலந்துக்கறதுக்கு 50 ஆயிரம் ரூபாய் இல்லாம திணறிட்டேன். அப்போதைய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்து 'இந்தியாவுக்கு பெருமை சேர்க்கணும்’னு வாழ்த்தினார். பதக்கத்தை ஜெயிச்சதும், அவருக்குதான் முதல்ல போன் போட்டு நன்றி சொன்னேன்'' என்று சொல்லும் சூரியபிரபா, இப்போது கரஸ்ஸில் பி.ஏ., வரலாறு படித்துக் கொண்டிருக்கிறார்.

''பவர் லிஃப்ட்டிங்கைப் பொறுத்தவரைக்கும் ஸ்குவாட், பென்ச் பிரஸ், டெட் லிஃப்ட்னு மூன்று சுற்றுகள் உண்டு. மூணுலயும் ஜெயிச்சாதான், கடைசி சுற்றுக்கு முன்னேற முடியும். நான் இதுவரை கலந்துகிட்ட எல்லா போட்டிகள்லயும் கடைசி சுற்று வரை வந்து தங்கம் வாங்காம திரும்பினதில்ல.

இதுவரைக்கும் காமன்வெல்த், ஒலிம்பிக் ரெண்டுலேயும் பவர் லிஃப்ட்டிங் விளையாட்டை சேர்க்கவே இல்ல. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள்ல சேர்க்கப் போறதா அறிவிச்சிருக்காங்க. அதுல கலந்துட்டு இந்தியாவுக்கு பெருமை தேடி தரணும்கிறதுதான் என்னோட ஒரே லட்சியம்'' என்றார் துளிர்த்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்தபடி!

நன்றி விகடன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஸ்ட்ராங் உமன்' சூரியபிரபா !

Post by md.thamim on Sat Mar 19, 2011 1:19 am

அப்ப வர ஒலிம்பிக் ல இந்தியாவுக்கு ஒரு தங்க மெடல் நிச்சியம்!

avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: ஸ்ட்ராங் உமன்' சூரியபிரபா !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 1:23 am

அன்பு நன்றிகள் தமீம் நன்றி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஸ்ட்ராங் உமன்' சூரியபிரபா !

Post by md.thamim on Sat Mar 19, 2011 1:26 am

[quote="மஞ்சுபாஷிணி"]அன்பு நன்றிகள் தமீம் குஓட்டே

ஸ்ட்ராங் உமன்' சூரியபிரபாக்கு நன்றிகள் சொல்வோம் அக்கா
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: ஸ்ட்ராங் உமன்' சூரியபிரபா !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 1:38 am

அப்படியே தம்பி.... நன்றி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ஸ்ட்ராங் உமன்' சூரியபிரபா !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum