ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஆனந்த விகடன் 24.01.18
 Meeran

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
மூர்த்தி
 
heezulia
 

Admins Online

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Page 5 of 18 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18  Next

View previous topic View next topic Go down

சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா

Post by கார்த்திநடராஜன் on Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down


சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போட்டி நடத்தும் நாயகிகள்!

Post by ந.கார்த்தி on Sun Apr 24, 2011 7:02 am

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்கும் படம் 'மாற்றான்'. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பெரும் போட்டியே நடக்கிறதாம் இளம் நாயகிகளுக்குள். சூர்யாவுக்கு ஜோடியாக முதலில் பேசப்பட்டவர் மேக்னா ராஜ். ஆனால் ஹீரோவின் பார்வை அவர் மீது படவில்லையாம். அதனால் தப்ஸி, சமந்தா மற்றும் காஜல் அகர்வாலின் புகைப்படங்களைக் காட்டினார்களாம். இதுமட்டும் இல்லாமல், தீபிகா படுகோனை சூர்யாவுக்கு ஜோடியாக முயிற்சிகள் எடுக்கபட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நான் சூப்பர் ஸ்டாரின் ஜோடி இப்போ. சம்பளம் 6 கோடி என தீபிகா படுகோன் கைகளை விரிக்க, தலை தெறிக்க ஓடிவந்திருக்கிறார்கள் படக்குழுவினர். இப்போது காஜல் அகர்வால், டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பரபர ஷூட்டிங்... ரிலீசுக்கு தயாராகும் வேலாயுதம்!

Post by ந.கார்த்தி on Sun Apr 24, 2011 7:03 am

விஜய்யின் அடுத்த படமான வேலாயுதம் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. அதே நேரம் படத்தின் விளம்பரப் பணிகளையும் படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆரம்பித்துள்ளார். விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் ரவிச்சந்திரன்.

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தில் அவருக்கு ஜோடியாக ஜெனிலியா மற்றும் ஹன்ஸிகா நடித்துள்ளனர். பாண்டியராஜன், சரண்யா மோகன், சந்தானமும் படத்தில் உண்டு. ஜெயம் ராஜா இயக்கியுள்ளார்.

இந்தப் படம் தொடர்பாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்தப் படத்தில் பால்காரராக நடித்துள்ளார் விஜய். ஜெனிலியா பெண் பத்திரிகை நிருபராகவும், ஹன்ஸிகா விஜய்யின் காதலியாகவும் நடித்துள்ளனர். 5 பாடல்கள், 6 அதிரடி சண்டைகள் இடம்பெற்றுள்ளன. விஜய்யின் பிறந்த நாளன்று இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறியுள்ளார்.

விஜய் பிறந்த நாள் வரும் ஜூன் 22 ம் தேதி ஆகும்.
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

பிரபுதேவா - நயன் ஜுலையில் டும் டும்!

Post by ந.கார்த்தி on Sun Apr 24, 2011 7:05 am

பிரபுதேவா இயக்கத்தில் வில்லு படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும் பிரபுதேவாக்கும் காதல் ஏற்பட்டு, இப்பொழுது திருமணம் வரை வந்துள்ளது.

திருமணத்திற்கு இவ்வளவு நாட்கள் தடையாக இருந்த பிரபுதேவாவின் மனைவி ரம்லத், இப்போது தனது கணவர் பிரபுதேவாவின் மீது கொடுத்த அனைத்து புகார்களையும் வாபஸ் பெற்று விவாகரத்துக்கு அப்ளை செய்துள்ளனர்.

சில லட்சங்கள், 3 வீடுகள் மற்றும் இரண்டு கார்கள் ஆகியவற்றை ரம்லத்துக்கு அளிக்க ஒப்புக் கொண்டுள்ளார் பிரபுதேவா. இதற்கு முன்னேற்படாக 5 லட்சம் முன்பணம், ஒரு பண்ணைவீடு மற்றும் ஈ.சி.ஆர் சாலையில் உள்ள 22செண்ட் இடம் அனைத்தையும் ரம்லத்திற்கும் மற்றும் அவரது இரண்டு மகன்கள் பேருக்கும் மாற்றி கொடுத்துள்ளார். அதில் பிரபுதேவா தன்னை shareholder ஆக இணைத்துள்ளார் என்றும் கூறுகிறார்கள்.

அண்ணாநகரில் உள்ள வீட்டை தனது மனைவி பெயருக்கும், ஹைதராபாத்தில் உள்ள இடத்தை அவரது பையன்கள் பெயருக்கும் மாற்றி கொடுத்து இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.

இவை அனைத்தும் பிரபுதேவா தரப்பில் இருந்து அவரது மனைவிக்கு கொடுத்து விட்டதால் ஜுன் மாதம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்துவிடும் என்றும் பிரபுதேவாவும், நயன்தாராவும் மும்பையில் திருமணம் செய்ய இருக்கிறார்கள் என்றும் கோடம்பாக்கத்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா இப்பொழுது 'ஸ்ரீ ராம ஜெயம்' படத்தில் சீதாவாக நடித்து வருகிறார். பிரபுதேவாவின் பிரச்னை முடிவுக்கு வரும் போது அவரும் தனது படத்தின் வேலைகளை அனைத்தையும் முடித்து விடுவார் என்கிறார்கள்.
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by அசுரன் on Sun Apr 24, 2011 10:28 am

சரி முக்காடு போட ஆசைபடுறாங்க. (அதான் முழுக்க நனைஞ்சாச்சே) என்ன கொடுமை சார் இது
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Manik on Sun Apr 24, 2011 10:30 am

கொஞ்ச நாளைக்கு முன்னாடி பிரபுதேவாவும் நயந்தாராவை விட்டுவிட்டு போனதாக செய்தி வந்ததே அது பொய்யா இருக்குமோ
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by balakarthik on Sun Apr 24, 2011 10:30 am

@அசுரன் wrote:சரி முக்காடு போட ஆசைபடுறாங்க. (அதான் முழுக்க நனைஞ்சாச்சே) என்ன கொடுமை சார் இது

ஏதோ ஒண்ணு போட்டா சரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by உதயசுதா on Sun Apr 24, 2011 11:12 am

ஆமா இவங்க பெரிய சார்லஸ்,டயானா.
இந்த இத்து போன பிரபுதேவா கல்யாணத்த எதுக்குதான் பத்திர்க்கைக்காரனுகா பெரிசா ஆக்குராங்களோ.இவனே கள்ள காதலா நல்ல காதலா மாத்த கல்யாணம் பண்ணிக்குறான்.
ஆளானபட்ட சார்லஸ் டயானாவே பிரிஞ்சுட்டாங்க.இவனுகா எம்மாத்திரம்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by முரளிராஜா on Sun Apr 24, 2011 11:14 am

நயன்தாராவோட நிறுத்திடாதிங்க
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ரபீக் on Sun Apr 24, 2011 11:17 am

எப்படியோ நல்லா இருந்தால் சரி
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by மஞ்சுபாஷிணி on Sun Apr 24, 2011 3:33 pm

அந்தமட்டில் மனைவி மக்களை நடுத்தெருவில் விடாமல் போனாரே.. சோகம்

இது மட்டும் எத்தனை நாளைக்கு நிலைக்கிறதுன்னு பார்க்கிறேன்...

ரம்லத் வயிறு எரியவெச்சிட்டு பிள்ளைகளை தனியாக்கிட்டு அப்படி என்ன வேண்டி இருக்கு காதல்? சோகம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ஹாசிம் on Sun Apr 24, 2011 3:49 pm

@மஞ்சுபாஷிணி wrote:அந்தமட்டில் மனைவி மக்களை நடுத்தெருவில் விடாமல் போனாரே.. சோகம்

இது மட்டும் எத்தனை நாளைக்கு நிலைக்கிறதுன்னு பார்க்கிறேன்...

ரம்லத் வயிறு எரியவெச்சிட்டு பிள்ளைகளை தனியாக்கிட்டு அப்படி என்ன வேண்டி இருக்கு காதல்? சோகம்

சரியாச் சொன்னிங்க அக்கா சியர்ஸ் சியர்ஸ்
avatar
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12751
மதிப்பீடுகள் : 219

View user profile http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

விஜய்யின் வேலாயுதம் படம் ஒரு ஸ்பெஷல்

Post by ந.கார்த்தி on Sun Apr 24, 2011 7:28 pm

Click image for larger version Name: NT_173329000000.jpg Views: 3 Size: 12.4 KB ID: 31320காவலன் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். இப்படத்தை ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்க, ஜெயம் ராஜா இயக்குகிறார். இப்படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:

* மக்களில் ஒருவனாக இருக்கும் ஓர் இளைஞன், மனித நேயப் பண்பால் மக்களுக்கே தலைவன் என்கிற நிலைக்கு உயருவது தான் படத்தின் கதை. சுருக்கமாக சொன்னால் அகரம் ஒன்று சிகரமாய் மாறும் கதை.

*. படம் ஒரு முக்கோண காதல் கதையாக அமைந்துள்ளது. இந்த காதலுடன் அண்ணன் தங்கை பாசத்தையும் மிக அழககாக, புதுவிதமாக சொல்லும் படமாக இயக்கி இருக்கிறார் ராஜா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பாசமலர் படத்திற்கு பிறகு இப்படியொரு அண்ணன், தங்கை பாசத்தை எந்தபடத்திலும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று கூறுகின்றனர்.

* கிராமமும், நகரமுமாக மாறி, மாறி பயணக்கிறது வேலாயுதம் படத்தின் கதை. கிராமத்துக் கிளர்ச்சியையும், நகரத்து கவர்ச்சியையும் தரிசிக்க வைக்க காட்சி அமைப்புகள் படத்தில் உள்ளன.

* படத்தில் கிராமத்து பால்காரன் வேலுவாக வரும் விஜய் கதையின் நாயகனாகவும், கதாநாயகனாகவும் ஜொலிக்கிறார். அவன் விற்பது பால். ஆனால் அன்பால், நட்பால், பிறரையெல்லாம் தன்பால் ஈர்க்கிறான். அவர் காற்றுமாதிரி இருப்பவன் அந்த ஊருக்கு. காற்றில்லாமல் உயிர் வாழ முடியாது அதுபோலத்தான் ***இந்த வேலு(விஜய்) அந்த ஊருக்கு. காதலனாக, பாசமுள்ள அண்ணனாக, ஆவேச இளைஞனாக விஜய்க்கு ஜீசல்பந்தி நடத்து வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது.

* படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் பத்திரிகையாளராக வரும் ஜெனிலியா, மற்றொருவர் ஹன்சிகா மோத்வானி. இவர்களுடன் சந்தானம் ***காமெடியில் தன் பங்கிற்கு அசத்த இருக்கிறார்.

* படத்தில் பாலிவுட்டை சேர்ந்த இரண்டு பிரபல வில்லன்கள் உட்பட 15 வில்லன்கள் நடித்திருக்கின்றனர்.

* படத்தில் ஒன்றரை கோடி ரூபாயில் ஒரு திருமண காட்சியை அமைத்துள்ளனர். இந்த திருமணத்திற்காக ஊரே பந்தல்போட்டு, கோலம் போட்டு, சீரியல் லைட்கடடி, தோரணம் அமைத்து ஊர்திருவிழா போல் அலங்காரம் செய்து ஆராவரம் செய்திருப்பது பிரமாண்டமான முயற்சி. ஊர் கூடி தேர் இழுப்பது போல, ஒரு ஊரே முன்னின்று நடத்தி வைத்துள்ள அந்த திருமணக்காட்சி, இதுவரை தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு படத்திலும் அமைந்ததில்லை.

* வேலாயுதம் படத்திற்காக அந்த ஊரில் ஒரு கிணறு வெட்டி, அதை அன்பளிப்பாக அந்த ஊருக்கே அளித்திருக்கின்றனர்.

* நடிகர்திலகம் சிவாஜி கணேசன், சாவித்திரி நடித்த பாசமலர் படத்தினை புதுபிரிண்ட் போட் அந்த ஊரில் உள்ள டூரிங் டாக்கீஸில் போட்டு காட்டி மக்கள் பார்ப்பது போன்ற காட்சி படமான போது அனைவரும் படத்தில் மூழ்கிக் கிடக்க டைரக்டர் கட் சொல்ல மறந்து விட்டாராம்.

* படத்தில் விஜய்க்கு ஓபனிங் சாங்கை சுமார் ரூ.2 கோடி செலவில் திருமூர்த்திமலையில் படமாகியுள்ளனர். ஏற்கனவே "சிவகாசி", "போக்கிரி" படங்களில் விஜய்க்கு ஓபனிங் சாங்கிற்கு நடனம் அமைத்த அசோக்ராஜ், இப்பாட்டுக்கு நடனம் அமைத்து இருக்கிறார். கிராமத்து தப்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற ஏராளமான ஆட்டங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் 200கிராமத்து நடன கலைஞர்கள் நயம்காட்ட 150 வெளிநாட்டு நடனக்காரர்கள் ஆடி வெளிநாட்டுக்கலை நயம் காட்டியுள்ளனர். படத்தில் விஜய் எப்படி ஒரு பிரம்மாண்டமோ அதுபோல இந்தபாடலும் பலமடங்கு பிரம்மாண்டமாக இருக்குமாம்.

* இப்படத்தின் சூட்டிங்கில் விஜய் நடிக்க தொடங்கியது முதல் முடியும் வரை ஒருநாள்கூட லேட்டாக வந்ததில்லையாம். அவரால் ஐந்து நிமிடம் கூட சூட்டிங் தாமதமானதில்லையாம். படத்தில் ஒவ்வொரு காட்சியையும், உணர்வுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்து கொடுத்திருப்பதாக கூறும் இயக்குநர், விஜய்க்கு இந்தபடம் உச்சகட்ட ***காமெடி படமாகவும் அமையும் என்று கூறுகிறார்.

* படத்தின் தூணாக ஒளிப்பதிவாளர் ப்ரியன் அமைந்திருக்கிறார். ஒவ்***வொரு காட்சியையும் மிக அழகாக படமாக்கி இருக்கிறாராம். இவர் ஏற்கனவே சாமி, திமிரு, போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

* வேட்டைக்காரன் படத்தை மிஞ்சும் வகையில் இப்படத்தின் இசை வ***ரவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தில் விஜய்***யை பாடவைக்கலாம் என்று முயற்சித்து இருக்கிறார். ஆனால் கடைசியில் விஜய் ஆண்டனியை பாடும்படி செய்துவிட்டார் விஜய்.

* படத்தில் மொத்தம் 5பாடல்கள், 6சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கின்றனர்.
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by கலைவேந்தன் on Sun Apr 24, 2011 7:32 pm

TMT என்றால் என்ன ..?

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by balakarthik on Sun Apr 24, 2011 7:36 pmஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Jayalalitha in Velayutham's Audio Launch ??

Post by ந.கார்த்தி on Sun Apr 24, 2011 8:59 pm

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா பங்கேற்பார் என்று உறுதியாகக் கூறிவருகிறார்கள்.

ராகுல் காந்தியைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு விஜய்க்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையிலான உறவு கெட ஆரம்பித்தது. குறிப்பாக விஜய்யின் காவலன் படத்துக்கு பிரச்சினை ஏற்பட்ட போது, அது திமுக அரசுக்கு எதிரான விஜய்யின் கோபமாக மாறியது.

இதன் விளைவு, எம்ஜிஆர் காலத்திலும் கூட திமுகவுக்கு நெருக்கமானவராக இருந்த இயக்குநரும் விஜய் தந்தையுமான எஸ். ஏ.சந்திரசேகரன், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவில் இணைந்து போட்டியிடக்கூடும் என்றெல்லாம் கூறப்பட்டது. அந்த நேரத்தில் எஸ்ஏசி இயக்கி வந்த 'சட்டப்படி குற்றம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது.

ஆனால், ஜெயலலிதா இந்த விழாவுக்கு வரவில்லை. "தேர்தல் பிரச்சாரத்திற்கு சில நாட்களே இருப்பதால் இன்னொரு பெரிய விழாவில் நிச்சயம் பங்கேற்பேன்" என்று உறுதி அளித்திருந்தாரார்.

இந்த நிலையில், தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் நேரடியாகக் களம் இறங்காவிட்டாலும், அவரது மக்கள் இயக்கம் அதிமுகவுக்காக வேலை பார்த்தது. எஸ்ஏசி தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டது.

தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து முடிவுக்காக காத்திருக்கும் பதட்டமான சூழ்நிலையில் விஜய் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இந்த தாக்குதலுக்கு ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்தார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் விஜய் நடித்து தற்போது ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் 'வேலாயுதம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விழாவிற்கு தலைமையேற்று சிறப்பித்து தருவதாக எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உறுதி அளித்துள்ளாராம் ஜெயலலிதா. இந்தத் தகவல் விஜய் ரசிகர்களைப் பரவசப்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனோ, படத்தை எந்த அரசியல் சாயமும் இல்லாமல் வெளிக் கொண்டு வந்தால் போதும் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறார். எனவே ஜெயலலிதா இந்த விழாவுக்கு வருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

------------------------------------------------------------------------------------------------------------
நன்றி
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by கலைவேந்தன் on Sun Apr 24, 2011 9:03 pm

TMT என்றால் என்ன..? சோகம்

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

ஜில் ஜில் மோர் தரும் ரஜினி!

Post by ந.கார்த்தி on Mon Apr 25, 2011 6:54 pm

ஆண்டுதோறும் கோடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்யும் 'மோர் சேவை' இந்த ஆண்டும் தொடங்கியது.


ஒவ்வொரு ஆண்டும் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இலவச மோர் பந்தல் அமைப்பது வழக்கம். கோடை வெயிலில் வாடுவோருக்கு தாகம் தணிக்க இந்த சேவையை அவர் செய்து வருகிறார். தனது பெயரையோ அல்லது அறக்கட்டளை பெயரையோ பயன்படுத்தாமல் செய்து வரும் சேவை இது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரம் இந்த மோர் பந்தல் செயல் பட துவங்கும். இவ்வாண்டு சட்டமன்ற தேர்தல் நடந்ததால் சற்று தாமதமாக திறக்கப்பட்டுள்ளது. ராகவேந்திரா மண்டபத்தை ஒட்டி விசேஷ பந்தல் அமைத்து பாத்திரத்தில் மோர் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.

தினசரி 2000 லிட்டருக்கும் அதிகமாக இங்கு மோர் விநியோகிக்கப்படுகிறது. மிகத் தரமாகவும், சுத்தமாகவும் வழங்கப்படுவதால், அந்த வழியாக வருவோர் போவோர் அனைவரும் அங்கு சென்று மோர் அருந்துகிறார்கள்.

பொது மக்கள், ஊழியர்கள் தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், ஆட்டோ டிரைவர்கள் என பல தரப்பினரும் இங்கு மோர் அருந்திச் செல்கிறார்கள். இதற்காக தினமும் 200 லிட்டருக்கும் அதிகமாக தயிர் பயன்படுத்தப்படுகிறது.

ரஜினியின் கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தின் முகப்பிலும் இதே போல மோர் பந்தல் அமைக்கப்பட்டு, அனைவருக்கும் மோர் வழங்கப்படுகிறது.

தில் மாங்கே 'மோர்'!
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

"பவர் சோப்" தமன்னா தடை

Post by ந.கார்த்தி on Mon Apr 25, 2011 6:58 pm

பவர் சோப் விளம்பரங்களில் நடிகை தமன்னாவின் படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


முன்னணி நடிகையாவதற்கு முன்பு நிறைய விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் தமன்னா. ஸ்டார் நடிகையான பின்னரும் கூட விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

அந்த வகையில் அவர் புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவன விளம்பரங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் தமன்னா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அதில், புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவனம், சென்னை தி.நகரைச் சேர்நத் ஜே அன்ட் டி கம்யூனிகேஷன் மூலமாக தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசடராக செயல்பட அணுகியது.

இதையடுத்து 2008ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இதுதொடர்பாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் எனது அனுமதியின்றி எனது படங்களை தனது விளம்பரங்களில் அது பயன்படுத்தி வருகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் தமன்னா.

இதை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியம், வருகிற ஜூன் 8ம் தேதி வரை பவர் சோப் விளம்பரங்களில் தமன்னாவின் படங்கள், வீடியோ கிளிப்பிங்குகளைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Tamilzhan on Mon Apr 25, 2011 7:00 pm

பவர் இல்லமா ஆக்கிட்டாங்க..
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by balakarthik on Mon Apr 25, 2011 7:00 pm

அதுசரி சோப்பு கவருளா இருக்குற படங்கள என்ன செயபோகிறார்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

சிம்பு திட்டினாரா? - ஜீவா

Post by ந.கார்த்தி on Mon Apr 25, 2011 7:01 pm

கோ பட விவகாரத்தில் என்னை சிம்பு திட்டினாரா இல்லையா என்பது பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை, என்றார் நடிகர் ஜீவா.


ஜீவா-பியா-கார்த்திகா நடித்த கோ படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் வெற்றியை செய்தியாளர்களுடன் இன்று பகிர்ந்து கொண்டார் ஜீவா. போர் பிரேம்ஸ் திரையரங்கில் நடந்த இந்த சந்திப்பின் போது, "கோ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நான் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் எனக்குப் பாராட்டுக்கள் வந்தவண்ணம் உள்ளன.

குறிப்பாக என்னை அத்தனை அழகாகக் காட்டியிருந்தனர் இயக்குநர் கேவி ஆனந்தும் காமிராமேன் ரிச்சர்ட் எம் நாதனும். இந்தப் படத்தைப் பார்த்த என் மனைவியால் அது நான்தானா என்று நம்பவே முடியவில்லை. "இது நீங்கதானா... வேற பொண்ணு யாரையாவது உஷார் பண்ணிடப் போறீங்க. எதுக்கும் இனிமே நான்தான் ஜாக்கிரதையா இருக்கணும் போல" என்று கிண்டலடித்துக் கொண்டே இருக்கிறார்.

அந்த அளவுக்கு படம் எல்லாரையும் கவர்ந்திருக்கிறது. பத்திரிகையுலகில் நானும் ஒருவனாகவே இப்போது உணர்கிறேன்," என்றார்.

அவரை இடைமறித்த நிருபர்கள், 'இந்தப்படம் குறித்து ஃபேஸ்புக்கில் உங்களைத் திட்டி எழுதியிருக்கிறாராமே சிம்பு?' என்றனர்.

அதற்கு பதிலளித்த ஜீவா, "இதெல்லாம் எதுக்கு சார்... நான் அது என்ன விவகாரம் என்று கூட தெரிந்து கொள்ள விரும்பவில்லை", என்றார்.

கோ படத்தில் முதலில் சிம்புதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதை மற்றும் ஹீரோயினை மாற்றச் சொல்லி அவர் வற்புறுத்தியதால், படத்திலிருந்தே அவரை நீக்கிய இயக்குநர் கேவி ஆனந்த், ஜீவாவை வைத்து எடுத்தார்.

சிம்பு - ஜீவா ரசிகர்கள் மோதல்...

படம் வெளியான பிறகு, சிம்புவின் ரசிகர்கள் சிலர் பேஸ்புக், ஆர்குட் போன்ற சமூக நெட்வொர்க் தளங்களில், "நல்ல வேளை இந்தப் படத்தில் சிம்பு நடிக்கவில்லை. அவர் நடிக்க வேண்டிய கதை இல்லை. ஒரு ஹீரோவுக்குரிய ஸ்கோப் இல்லை. நன்றி சிம்பு" என எழுதி வருகின்றனர்.

ஜீவாவின் ரசிகர்களோ, "கோ மாதிரி ஒரு நல்ல படத்தை கெடுக்காமல் விட்ட சிம்புவுக்கு நன்றி" என்று எழுதி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிம்பு, "ஒரு படத்தில் நடிப்பதும் நடிக்காமல் போவதும் அந்த ஹீரோவின் விருப்பம். அதுகுறித்த ரசிகர்களின் கமெண்ட்களை நான் வரவேற்கிறேன். ஆனால் அது மற்ற ஹீரோக்களைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்", என்று கூறியுள்ளார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

7-ஆம் அறிவில் ஹாலிவுட் வில்லன்!

Post by ந.கார்த்தி on Mon Apr 25, 2011 7:02 pm

சூர்யா நடிக்கும், '7-ஆம் அறிவு' படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜானி ட்ரை குயன் வில்லனாக நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம், '7-ஆம் அறிவு'. ரெட்ஜெயண்ட் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் ஹாலிவுட் நடிகர் ஜானி ட்ரை குயன் வில்லனாக நடித்துள்ளார். இவர், 'மொங் ஆன் ஃபயர்', 'தி ரிபல்', 'பவர் கிட்ஸ்' உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தற்காப்பு கலை சண்டைகளில் சிறந்தவரான இவர், 'த பெர்பக்ட் ஸ்லீப்', 'ஸ்பைடர் மேன்' உட்பட ஏராளமான படங்களுக்கு சண்டைக்காட்சிகளும் அமைத்துள்ளார். தமிழ் படத்தில் நடித்தது பற்றி அவர் கூறும்போது, "இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளேன். சூர்யாவுக்கும் எனக்குமான சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைக்கும். சூர்யா திறமையான நடிகர். ஒரே ஒரு சண்டைக்காட்சிக்காக நாங்கள் இருவரும் 42 நாட்கள் உழைத்துள்ளோம். இதில் வெளிநாட்டுக்காரனாக நான் நடித்துள்ளதால் தமிழ்ப் பேச வாய்ப்பில்லை. இருந்தாலும் சில தமிழ் வார்த்தைகளை கற்றுள்ளேன்" என்றார். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிக்காக சூர்யா, சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்ன...கோலிவுட்டயும் ஒரு கலக்கு கலக்க வேணாமா.....
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

'கிக்' ரீமேக்கில் சல்மானுடன் ஷாம்!!

Post by ந.கார்த்தி on Mon Apr 25, 2011 7:03 pm

தெலுங்கில் சுதாகர் ரெட்டி இயக்கத்தில் ரவிதேஜா - ஷாம் நடிப்பில் வெளியான கிக் படம் கிட்டத்தட்ட இந்தியாவையே ஒரு ரவுண்ட் வரும் போலிருக்கிறது.


தெலுங்கில் இந்தப் படம் பெற்ற வெற்றி மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையில் மயங்கித்தான் தமிழில் தில்லாலங்கிடி என எடுத்தனர். தெலுங்கில் தான் செய்த அதே வேடத்தை தமிழிலும் செய்தார் ஷாம். படம் பரவாயில்லை எனும் அளவுக்கு போனது. அடுத்து கன்னடத்திலும் கிக் என்ற பெயரில் வெளியானது. படம் ஹிட்.

இப்போது இதே கிக் இந்திக்கும் போகிறது. இதில் நடிக்கப் போகிறவர் சல்மான் கான். சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் ஷாமைச் சந்தித்த சல்மான், கிக் படத்தில் ஷாம் நடிப்பை புகழ்ந்து தள்ளினாராம்.

இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் கண்டிப்பாக ஷாம் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ஷாம், "தெலுங்கு, தமிழ், கன்னடம் என மூன்று மொழிகளும் அந்த வேடத்தை நடித்துவிட்டேன். இப்போது இந்தியிலும் அந்த வாய்ப்பு தொடர்ந்தால் மகிழ்ச்சி", என்று கூறினாராம்.

உடனே சல்மான், 'இந்தியில் உங்கள் ஆரம்பம் இந்தப் படம் மூலம் இருக்கட்டும்' என்று கூற, ஷாம் சந்தோஷத்துடன் கடவுளுக்கு நன்றி சொன்னாராம்!

இப்போதைக்கு ஷாம் தமிழில் துரை இயக்கத்தில் '6' என்ற படத்திலும், தெலுங்கில் 4 படங்களிலும் நடித்து வருகிறார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by balakarthik on Mon Apr 25, 2011 7:04 pm

இப்படியே சொல்லி சொல்லி நல்லா இருக்குற ரெண்டுபேர நாசமாகிடராங்கப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ரபீக் on Mon Apr 25, 2011 7:12 pm

என்னது !! ஜீவாவுக்கு ரசிகர்மன்றம் உள்ளதா ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 5 of 18 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11 ... 18  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum