ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின்

View previous topic View next topic Go down

எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின்

Post by மகா பிரபு on Wed May 25, 2011 11:36 am

நன்றி நக்கீரன் :::


""காகரின் விண்வெளியில் நுழைந்துவிட்டார். ஆனால் அங்கு அவர் எந்த கடவுளையும் பார்க்கவில்லை.''
- நிகிட்டா குருசேவ், 1961.

மனிதன் முதன் முதலில் விண்வெளியில் பயணம் செய்து 50 ஆண்டுகளாகின்றது. இந்த மாபெரும் சாதனையை புரிந்தவர் ரஷ்ய விண்வெளி வீரர் யூரிஅலெக்சேவிச் ககாரின். இவர் 1961 ஏப்ரல் 12-ஆம் தேதி, வாஸ்டாக்-1 விண்கலத்தில், விண்வெளியில், 1 மணி 48 நிமிடங்கள் பறந்து சாதனை படைத்தார். பூமியின்
சுற்றுப்பாதையில் பூமியை வலம் வந்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அன்று இந்த விண்வெளி சாதனையை உலகமே பாராட்டி மகிழ்ந்தது. இந்த அரிய நிகழ்வு நடந்து, 50 ஆண்டுகள் ஆனதை, ரஷ்ய அரசு மிகச்சிறப்பாக அண்மையில் கொண்டாடியது.

1961-இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் தேதி விண்வெளி வீரர்கள் தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் தேதி
கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த ரஷ்யரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் யூரி ககாரின் விண்வெளி பயண அனுபவத்தை இங்கு வெளியிடுகிறோம். இது விண்வெளிக்கு சென்று திரும்பியவுடன் யூரி ககாரின் பேசிய முதல் சொற்பொழிவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்று என்னுடைய சுயசரிதையை அறிந்து கொள்வதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதனால் என்னைப்பற்றி முதலில் அறிமுகம் செய்து கொள்கிறேன்.

நான் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 1934-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி
பிறந்தேன். என்னுடைய பிறப்பிடம் ஸ்மோலன்ஸ்க் பகுதி. என்னுடைய பரம்பரையில் இளவரசர்களோ அறிஞர்களோ பிறந்ததில்லை. ரஷ்ய புரட்சிக்கு முன்னர் என்னுடைய பெற்றோர் மிகவும் ஏழை விவசாயிகளாக இருந்தனர்.

நான் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள லூயிபெர்ஸ்டி என்னுமிடத்தில் சாதாரண பள்ளியில் படித்தேன். அதற்கு பிறகு சாராடாவ் தொழில் நிறுவனத்தில் பொறியியல்
வடிவமைப்பாளராக பணிபுரிந்தேன். இருந்தபோதிலும் என்னுடைய நீண்டகால கனவு, நான் ஒரு விமான ஓட்டியாக வேண்டுமென்பதுதான். 1955-இல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்து, சாராடோ விமான அகாடமியில் பைலட் படிப்பை முடித்தேன். அதன் பிறகு ஒரன்பர்க் விமான பள்ளியில் சேர்ந்தேன். 1957-இல் அங்கு நான் ஏர்போர்ஸ் பைட்டர் பைலட் என்ற பட்டம் பெற்றேன். பின்பு சோவியத் விமானப்படை பிரிவில் பணிபுரிந்தேன். என்னுடைய லட்சியம், நான் விண்வெளி வீரராக வர வேண்டும் என்பதுதான். பல்வேறு தேர்விற்கு பிறகு விண்வெளி வீரரானேன்.

அடுத்து விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட பல கட்ட பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றேன்.
விண்வெளிக்கு பயணிக்க தேவையான தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டேன். நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை இந்த விண்கலத்தில் அனுப்பிய நமது கட்சிக்கும், நமது அரசாங்கத்திற்கும் எனது குழுவிற்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். நமது நாட்டிற்கும், மக்கள் மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

விண்வெளி பயணத்திற்கு முன்னர் நான் நலமாகவும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தேன். எனக்கு இந்த விண்வெளிப் பயணம் வெற்றியை அளிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எனது திட்டம் மிகவும் சவாலானது. நமது தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், என்ஜினியர்கள் மற்றும் தோழர்கள் என்னுடைய வெற்றியை குறித்து ஒரு நொடிக்கூட சந்தேகப்படவில்லை. நான் சென்ற விண்கலம் மிகச்சிறந்ததாக வடிவமைக்கப்பட்டது. என்னுடைய விண்வெளி ஓடம் விண்வெளியில் நுழைந்தபோது அதனுடைய செயல்பாடு, அதிர்வு, சத்தம் போன்றவை என்னிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

விண்வெளி சுற்றுப்பாதையில் நுழைந்தபோது நான் இருந்த கலம் தனியாக பிரிந்தது. அப்போது விண்வெளியில் நான் எடையின்மையை உணர்ந்தேன். ஆரம்பத்தில் இந்த உணர்வு எனக்கு ஒருமாதிரியாகதான் இருந்தது. ஆனால் இந்த பயணத்திற்கு முன்னர் விண்வெளிக்கு சென்றால் அங்கே எடையின்மையை குறித்து சிறப்பாக பயிற்சி பெற்றதால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்த சூழ்நிலைக்கேற்ப பழக அதிக நேரம் தேவைப்படவில்லை.

என்னுடைய சொந்த கருத்து என்னவெனில், எடையின்மை உடல் உறுப்புகள் நம்மிடத்தில் இல்லாதது போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தும். அவ்வளவுதான். அதனால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. என்னுடைய விண்வெளி பயணத்தின்போது சாப்பிட்டேன். தண்ணீர் குடித்தேன். தொடர்ந்து ரேடியோ மூலம் பூமியில் உள்ள அனைத்து சேனல்களிலும் தொடர்பு வைத்திருந்தேன். என்னை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை புரிந்துக் கொண்டேன். நான் விண்வெளி ஓடத்தின் செயல்பாடுகள் குறித்து பூமிக்கு தகவல் அனுப்பினேன். சுயமாக தகவல்களை பதிவும் செய்தேன். என்னுடைய குறிப்பு புத்தகம் மற்றும் டேப்ரெக்காடர்களிலும் நான் என்னுடைய எடையின்மையை உணர்ந்து செய்த வேலைகள் அனைத்தும் அருமையாக இருந்தது.

விண்வெளி ஓடம் தானாகவே தனது நிலைப்பாட்டை சரி செய்துகொண்டது. பிரேகிங் முறை செயல்படுத்தப்பட்டதால் விண்வெளி ஓடத்தின் வேகம் குறைய தொடங்கியது. விண்வெளி ஓடம் பத்திரமாக தரை இறங்கியது.

எனக்கு பெரும் வரவேற்பு செய்த எனது சோவியத் மக்களை சந்தித்தேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், அளவில்லா மகிழ்ச்சியையும் தந்தது. விண்வெளி ஓடம் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் பத்திரமாக தரை இறங்கியது.

அடுத்து, நான் விண்வெளியில் எவற்றை கண்டேனோ அவைகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

175-300 கி.மீ. செங்குத்து உயரத்திலிருந்து பூமியை பார்க்கும்போது பூமி மிகவும் துல்லியமாக தெரிந்தது. இன்னும் தெளிவாக தெரிந்தது பெரிய மலை சிகரங்கள், பெரிய நதிகள், பெரிய வன பகுதிகள், கடற்கரைகள் மற்றும் தீவுகள். பூமியின் பரப்பை மறைத்து செல்லும் மேகங்கள், அவற்றின் நிழல்கள் பூமியின் மீது விழுவது ஆகியவை தெளிவாக தெரிந்தது.

வானத்தின் நிறம் முற்றிலும் கருப்பாக இருந்தது. இந்த கருப்பின் பின்னணியில் நட்சத்திரங்கள் தெளிவாகவும், பிரகாசமாகவும் தெரிந்தன. இந்த பூமியானது நீலநிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருந்தது. இந்த ஒளிவட்டம் குறிப்பாக தொடுவானத்தில் நன்றாக தெரிந்தது. மெல்லிய நீலநிறத்தில் இருந்த வானம், பிறகு அடரத்தியான நீலநிறம், பிறகு கருநீலநிறமாகவும் பின்பு ஊதா நிறமாகவும் இறுதியில் முழுவதும் கருமை நிறமாகவும் இருந்தது.

நான் இங்கே விண்கல வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப
வல்லுனர்கள் மற்றும் சோவியத் நாடு முழுமைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். "வோஸ்டக்' மிக சிறந்த அற்புதமான விண்கலம். இதனை உருவாக்கியதற்காக நாம் பெருமைபடுவோம்.

எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஏனெனில் சோவியத் யூனியன்தான் உலக வரலாற்றில் முதன்முதலாக விண்வெளி ஓடம் ஏவியது என்ற பெருமையை பெற்றுள்ளது. முதல் விமானம், முதல் செயற்கைகோள், முதல் விண்வெளி ஓடம், மனிதனை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பியது என பல பெருமைகளை பெற்றது நமது நாடுதான். தனிப்பட்ட முறையில் நான் விண்வெளிக்கு இன்னும் சிலமுறை செல்ல விரும்புகிறேன். எனக்கு பறப்பது மிகவும் பிடிக்கும். என்னுடைய மிகப்பெரிய ஆசை என்னவெனில் நான் வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான். நன்றி.

(1968-ஆம் ஆண்டு மிக் -15 யுடிசி என்ற விமானத்தில் பறந்த போது, ஏற்பட்ட விமான விபத்தில் இறந்து போனார்.)

தமிழில்: கே. கேசவன்.

நன்றி நக்கீரன் :::
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum