புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
3 Posts - 2%
bala_t
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
1 Post - 1%
prajai
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
280 Posts - 42%
heezulia
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
6 Posts - 1%
prajai
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_m10பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 2:05 pm

பெட்ரோல் விலை:



பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! சிறப்பு ஆய்வு கட்டுரை!



மோட்டார் வாகனம் பயன்படுத்வோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள
அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை
பரிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது ”அடப்பாவிங்களா கேக்குரதுக்கு ஆள்
இல்லன்னு பெட்ரொல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்கிட்டே
போரானுங்களே” என்று தான்.

இதில் நாமும் விதிவிலக்கல்ல..

ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 10 முறை பெட்ரோல் விலை
உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெட்ரோல் விலை 5.12 ரூபாய்
உயர்த்தப்பட்டு தற்போது 68.35 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல்
விற்கப்படுகின்றது.

பிரதமர் உட்பட உயர் மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி
உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்னை நிறுவனங்கள்
அரசின் ஒப்புதலுடன் தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, ”நாட்டு
மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்களுக்கு கோடிகோடியாய் பணம் தரும் பெரும்
தொழிலதிபர்கள் நல்லா இருக்கனும் உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர்
முன்னேர வேண்டும்” என்ற அரசியல் வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட
வெளிச்சமாக்கியுள்ளது.

நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!

விலையை உயர்த்து சொல்லப்படும் காரணங்கள்

1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்

அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம் ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு ”இத்தன கோடி நஷ்டம்” என்பது தான்.

இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!! இது மகாப் பொய்யாகும்!!

நாம் இதை இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம்
ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்னை நிறுவனங்களின் (IOC -Indian
Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat
Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை
அறிக்கையை நாம் படித்தது தான்.

நிதி நிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)

IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி
5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்

HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி
2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்

BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி.
அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி
2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்

மேற்குறிப்பிட்ட மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில்
கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, எண்ணை
‘நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று
அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.

நஷ்டம் என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை என்று’ சில பொருளாதார வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.

அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும் ஆனால் 1500 கோடி தான்
லாபம் வந்துள்ளது எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது
போன்று.

லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் ”விலையை கூட்டும் அளவிற்கு
இத்தன கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம்
இருக்கின்றது.

பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும் போது கோடிக்கணக்கில் எண்னை
நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்து விட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும்
விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு பொதுமக்களின்
பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.

நான்கு மாதத்தில் மூன்று எண்னை நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும்
மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்கு
காட்டி, பெட்ரோல் விலையை கூட்டவது நியாயமான அரசு செய்யும் வேலையா?

எனவே அரசுக்கு எண்னை நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை
மாறாக கொடிக்கணக்கில் லாபம் தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது
என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.

2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது

அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய்.

ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல்
விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54
மட்டும் தான்.

2008 ஐ ஒப்பிடும் போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது.
எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அது தான் நியாயம்
அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய
அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலைய உயர்த்தி 63
ரூபாய்க்கு விற்கின்றது.

இது மிகப்பெரும் அநியாயமாகும்.

2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும்
போதே பெட்ரோலை லிட்டர் 54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92
டாலர் தான் விற்கின்றது எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது
மத்திய அரசு விலைய குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.

எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வு தான் காரணம்
என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்

உண்மையில் தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.

ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள் தான்.

இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011


Customs duty 7.5 = 4.75
Import duty 5% = 3.17
Tamilnadu Gov tax 30% = 19.035
Excise duty Rs 14.45 = 14.45
Actual petro price = 22.07

-------------------------------------

Total = 63.45


வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்

22 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரிமேல் வரி
விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன
காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது.
பொய்கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக்கோண்டிருக்கின்றது.

ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..

மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம்
ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.

இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!

இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!

மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.

நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம்
ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம். (மாதம் 15 லிட்டர் எனில்) இது
தெரியுமா உங்களுக்கு ?.

இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!

100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம்
பயன்படுத்தவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய்
780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பன்னிக்கோங்க)
பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.

ஒரு பக்கம் எண்ணை நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறு பக்கம் அதை விட
இரண்டு மடங்கு வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம்.

இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலைலை உயர்த்துகின்றது மத்திய அரசு.

எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள்
நிர்ணயித்துள்ள வரிகள் தானே தவிர பீப்பாய் விலையோ எண்னை நிறுவனிங்களின்
நஷ்டமோ (அப்பட்டமான பொய்) கிடையாது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள
வேண்டும்.

கூடுதலாக வரி விதிக்க காரணம்

1. தனியார் நிறுவனங்கள்

சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலைய உயர்த்துவதற்கும்
முக்கிய காரணம் தற்போது முலைத்துள்ள தனியார் எண்னை நிறுவனங்கள் தான்.

கனிமவளங்கள் நிறந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த
விலைக்கு வாங்கி தனியார் எண்னை நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை
அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது மேலும் வெளிநாட்டில் இருந்து
பெட்ரோலை வாங்கி உள்ள நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.

ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலைன்சுக்கும் பங்கு
செல்கின்றது. இது போன்ற தனியார் எண்னை நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில்
தான் அரசு, பெட்ரோல் விலையை நீங்களே (எண்னை நிறுவனங்களே) நிர்ணயித்துக்
கொள்ளுங்கள் என சட்டம் கொண்டு வந்தது.

இதனால் தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.

Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்னை நிறுவனத்தின்
2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு
தெரியுமா? 4923 கோடியாகும்.

இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.

தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவலளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த
விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும்
அரசிற்கே விற்கின்றன மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு
விற்கின்றது.

இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை,
அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி
விதிக்கவும் தேவையில்லை.

முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில்
நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல் வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும்
அதற்கு பணயமாக்குகின்றனர்.

2. வட்டி

65 சதவிகிதம் அளிவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காணரம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன் தான்.

இத்தனை சதவிகிதம் வரி விதித்தால் தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது.

அதன் அடிப்படையில் தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.

பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது.

பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை
கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி
விதிக்கக் கூடாது.

அமெரிக்காக போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரி தான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.

18% எங்கே 65% எங்கே ?

பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்

மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி
விதிக்கின்றது. ஒரு ரூபாய் க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி தினமும்
அன்றாடம் வேலைக்கு செல்லும் பொதுமக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல்
மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.

இந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு இதை குறைக்க முடியாது என்று சமீபத்தில் கூறியுள்ளார்.

இப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த
பணத்தை தான் ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு ‘சொந்த இடம், சொந்த வீடு,
படத்திற்கு வரி விலக்கு’ பொன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த
கருணாநீதி.

இதுவல்லாமல் பொதுமக்களுக்கு ‘அந்த திட்டம் இந்த திட்டம்’ என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார்.

மேலோட்டமாக சலுகைகளை அறிவித்து விட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல்
மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.

பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாததை போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது.

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.




போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டு விட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள்
வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின்
கருத்து.

விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற
நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய் தான் ஆகின்றது.

இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.

மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாருமாறாக உயர்ந்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை
குறைந்துவிடும். சர்வதே சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால்
பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.

மத்திய அரசு வரியை குறைத்தால் தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை
தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற
மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும். பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.

பொதுமக்களாகிய நாம் தான் இதற்கு ஆவண செய்ய வேண்டும்!

அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்

20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம்
ஆனால் கிட்டதட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை
யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!

ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள்.

சமீப காலமாக ஏற்படும் விலை வாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காணரம்!

இதை கண்டு கொள்ளாமல்அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது.

இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார
வல்லுணராம் அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ
தெரியல..

அரசியல் வாதிகள் ஆட்சியில் இருக்கும் பொது பெட்ரோலுக்கு தங்களது சொந்த
பணத்தை செலவிட்டால் தானே அதன் கஷ்டம் புரியும், இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ்
என்ற பெயரில் அரசின் பணத்தை தானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர்.

எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப்போகின்றது.

எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம்
என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Scaled.php?server=706&filename=purple11
kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Postkathirvelu_r Tue May 31, 2011 6:30 pm

நல்ல பதிவு... படிதுனரிந்து வேண்டிய ஆவண செய்வோம்....

uma rani
uma rani
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Postuma rani Tue May 31, 2011 8:26 pm

ஆ என்ன ஆச்சர்யம்
எனக்கு தலை சுற்றுகின்றது

இதை பற்றிய தெளிவு கண்டிப்பாக மக்களுக்கு இல்லை, இதை பற்றி எடுது உரைப்பார் யாரோ
uma rani
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் uma rani

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Jun 01, 2011 10:54 am

uma rani wrote:ஆ என்ன ஆச்சர்யம்
எனக்கு தலை சுற்றுகின்றது

இதை பற்றிய தெளிவு கண்டிப்பாக மக்களுக்கு இல்லை, இதை பற்றி எடுது உரைப்பார் யாரோ
பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் 359383 பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் 359383 பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் 359383



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


பெட்ரோல் விலை:மக்களை ஏமாற்றும் அரசுகள் Scaled.php?server=706&filename=purple11
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Wed Jun 01, 2011 12:39 pm

பொது நல வழக்கு போடுவாங்களா ஆயில் நிறுவனத்தை எதிர்த்து???

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 01, 2011 2:36 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக