ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரமேஷ்குமார் Today at 9:59 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by கேசவன் Today at 9:50 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Today at 9:37 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by இரா.பகவதி Today at 9:31 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Today at 9:06 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:59 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 8:51 pm

» விவாகரத்து
by முஹைதீன் Today at 8:39 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Today at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Today at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Today at 8:25 pm

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by Aathira Today at 8:21 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Today at 8:21 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Aathira Today at 8:17 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by முஹைதீன் Today at 8:13 pm

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by பிஜிராமன் Today at 8:10 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Today at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Today at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Today at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Today at 7:45 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by balakarthik Today at 7:41 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:31 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Today at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 7:05 pm

» மதுரை மாவட்டம்
by முஹைதீன் Today at 6:48 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Today at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Today at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Today at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Today at 6:27 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 6:24 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Today at 6:22 pm

» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Today at 6:12 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Today at 6:07 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by ஜேன் செல்வகுமார் Today at 6:04 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by கேசவன் Today at 6:03 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by முரளிராஜா Today at 6:02 pm

» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by யினியவன் Today at 5:56 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முஹைதீன் Today at 5:55 pm

» ஈகரையின் கோடிங் ரகசியம் பற்றி அறிய தாருங்கள் !
by வின்சீலன் Today at 5:48 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்!

View previous topic View next topic Go down

செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்!

Post by krishnaamma on Fri Jun 03, 2011 1:00 pm

சூழல் பாதுகாப்பு என்றவுடனே நம்மில் பலர் பேசத் தொடங்குவது ஓசோன் படலத்தில் ஓட்டை, புவி வெப்பமயமாதல், சூழல் மாசுபடுதல் போன்ற பிரச்னைகளையே. கைக்கெட்டும் தூரத்தில் நாமே பாதுகாக்கக்கூடிய சுற்றுப்புறச் சூழலைப் பற்றி பலரும் யோசிப்பதில்லை.

சூழல் மாற்றத்தால் நாம் பல விஷயங்களை இழந்துள்ளோம். அதில் ஒன்று சிட்டுக் குருவி. புவிச் சூழலில் பல்வேறு உயிர்கள் வாழ்வதற்கு மனிதர்களின் மறைமுக தயவு தேவைப்படுகிறது. மற்ற உயரினங்களுக்கு மறைமுகத் தயவு வேண்டும் என்றால் சிட்டுக் குருவிகளுக்கோ நேரடி உதவி தேவைப்படுகிறது. காரணம் இவை நம்மை அண்டி வாழ்ந்த ஓர் உயிரினம். இவற்றின் அழிவுக்கு முக்கிய காரணம் நமது சூழல், உணவு பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமே.

இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சில பத்திரிகையாளர்கள் ஒன்று சேர்ந்து சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். தங்களது வார விடுமுறைகளில் சந்தித்துக் கொள்ளும் இவர்கள் சூழல் பாதுகாப்பில் நாட்டமுள்ள, கல்லூரி, பள்ளி மாணவர்கள், மருத்துவர் போன்றவர்களைத் தங்களுடன் இணைத்துக் கொண்டு "நெஸ்ட்'- ஏ ஹோம் ஃபார் ஃபெதர் ஃபரண்ட்ஸ்' என்ற அமைப்பை துவங்கினர். இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் டால்ஸ்டாயிடம் பேசினோம்.
""கிராமப்புற ஓட்டு வீடுகளில் உள்ள சந்து பொந்துகளில் கூடுகட்டி மனிதர்களுடன் மனிதர்களாக வாழ்ந்தவை சிட்டுக் குருவிகள். நம் பாட்டன் பூட்டன் வீடுகளில் முற்றம் என்ற ஓர் இடம் உண்டு. அங்கே சிறு தானியங்களைக் காய வைப்பார்கள். இடித்தல், புடைத்தல், குருணை நீக்குதல் என்ற தானியங்களைப் பதப்படுத்தும் சில முறைகள் நடைபெற்றன. இதனால் சிட்டுக் குருவிகளுக்கு உணவு கிடைத்தது. இன்றோ வீடுகளில் தானியங்களைப் பார்ப்பதே அரிதாகி விட்டது

நாம் சாப்பிட்டு எஞ்சியவற்றைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவை சிட்டுக் குருவிகள். அடுக்குமாடி குடியிருப்பு கலாசாரம் பெருகிவரும் காலகட்டத்தில் ஓடுகளும் இல்லை, சந்து பொந்துகளும் இல்லை. முற்றமும் இல்லை, தானியங்களும் இல்லை. சின்க்கில் பாத்திரங்கள் துலக்கப்பட்டு வீணாகும் சோற்றுப் பருக்கைகள் கூட நேரடியாகப் பாதாளச் சாக்கடை கழிவுகளுடன் கலந்துவிடுகின்றன. சிட்டுக் குருவிகளின் வாழ்விடம், உணவுத் தட்டுப்பாடு காரணமாக அவை வெகுவாக அழிந்துவிட்டன. வீட்டுக்குள் பறந்து திரியும் குருவிகள் பல மின் விசிறியில் அடிபட்டு இறந்தன. பொதுவாக மனித நடமாட்டம் இருந்தால் மற்ற பறவைகள் அந்த இடத்தை விட்டுப் பறந்துவிடும். ஆனால் சிட்டுக் குருவிகளோ மனிதர்கள் வசிக்கும் வீட்டுத் தாழ்வாரங்களில்தான் கூடுகட்டி வாழும்.

இரண்டு முதல் மூன்று முட்டைகள் வரை இடும். குஞ்சுகள் பொரிந்தவுடன் கூட்டில் இடப்பற்றாக் குறை காரணமாக ஆண் மற்றும் பெண் பறவை தனது குஞ்சுகளை நம்மை நம்பி விட்டுவிட்டு இரவு நேரத்தை வீட்டுக்கு வெளியே உள்ள சிறு மரங்களின் கிளைகளில் அமர்ந்து கழிக்கும். ஒரு பறவை இனம் தனது குஞ்சுகளை நம்மை நம்பி விட்டுச் செல்லும் போது ஆறு அறிவு படைத்த நாம் அதை காக்கத் தவறியதுதான் வேதனை. எனவே வார இறுதியில் நாங்கள் ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் சுமை தூக்குபவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு கடை உரிமையாளர்கள், டீ கடை நடத்துபவர்கள், வியாபாரிகள் போன்றவர்களைச் சந்தித்து சிட்டுக் குருவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அவர்களையும் எங்களுடன் இணைத்துக் கொள்கிறோம். சிட்டுக் குருவியின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் சிட்டு குருவிகள் எந்தெந்தப் பகுதிகளில் எஞ்சியுள்ளன என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள், டீக்கடைகளில் பேசி தினமும் அதற்கு குருணை, தானியங்கள், தண்ணீர் வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அப்பகுதியில் உள்ள மரங்கள், கட்டடங்கள், கடைகளில் ஷட்டர்களுக்கு அருகே சிறிய அட்டைப் பெட்டிகளைத் தொங்கவிட்டிருக்கிறோம். சிட்டுக் குருவிகள் அந்தப் பெட்டிகளுக்கு உள்ளே நுழைந்து வெளியே வருவதை ஒரு விளையாட்டாக வைத்திருக்கின்றன.
சிட்டுக் குருவிகள் கண்களில் படும் இடங்களில் நார், காய்ந்த புல், வைக்கோல் போன்றவற்றைப் போட்டு வைத்தபோது, அவற்றை எடுத்துச் சென்று அந்தப் பெட்டிகளுக்குள் வைத்துக் கொண்டன. நாளடைவில் பெட்டிகளுக்குள் சிறிய சிட்டுக் குருவி குஞ்சுகள் தலை வெளியே தெரிவதும் பெரிய குருவிகள் அவற்றுக்கு உணவு கொடுக்கவும் தொடங்கின.

எங்கள் திட்டம் வெற்றி பெற்றதால் அட்டை பெட்டிகளுக்கு அருகில் மரப்பெட்டிகளை வைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனால் பெட்டிகள் எளிதில் சிதைவடையாததுடன், மழை, குளிர்காலங்களில் குருவிகள் முட்டை பொறிக்கத் தேவையான வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ளும்.

செல்போன் டவர்களால் சிட்டுக் குருவிகளுக்குப் பாதிப்பு இருப்பதாகக் கூறுவார்கள். அப்படியொன்றும் பெரிய பாதிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. காரணம், இரண்டு செல்ஃபோன் டவர்கள் அருகருகில் இருந்தும் அதற்கு கீழே உள்ள கடைகளின் ஷட்டர்களில் கூடுகட்டி இதுவரை ஐந்து முறைக்கு மேல் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துள்ளன. அதே இடத்தில் தற்போது 25-க்கும் மேற்பட்ட சிட்டுக் குருவிகள் கூடுகட்டியுள்ளன. கோவையில் காந்திபுரம், போத்தனூர், நஞ்சுண்டாபுரம், செல்வபுரம், தெலுங்குபாளையம், இடையவர்வீதி, பெரியகடைவீதி, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு போன்ற பகுதிகளில் சிட்டுக் குருவிகளை அடிக்கடி பார்க்க முடிகிறது.

சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் மற்றும் ஹோட்டல்களில் சிட்டுக்குருவி வறுவல் பரிமாறப்படுவதாக தகவல் வந்துள்ளது. அப்பகுதியில் தெருப் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளோம். சிட்டுக்குருவி லேகியம் ஆண்மை அதிகரிக்கும் என்பது பொய்யான வதந்தி. சிட்டுகுருவிகளை வேட்டையாடுபவர்களுக்கான தண்டனைகள் கடுமையாக்க வேண்டும்'' என்கிறார் டாக்டர் டால்ஸ்டாய்.
நெஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர் சி.பாபு. இவர் கோவை காந்திபுரம் ஆம்னி பஸ் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளி. சிட்டுக் குருவிகளுக்குத் தவறாமல் குருணை வைப்பது, அதை யாராவது வேட்டையாட வந்தால் அவர்களை விரட்டுவது என பணியாற்றுகிறார். ""இப்படி முறையான பராமரிப்பால் தற்போது அங்கு சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் அதிகரித்துள்ளது'' என்கிறார் அவர்.

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்!

Post by krishnaamma on Fri Jun 03, 2011 1:06 pm

இப்ப பெங்களூர் ஏர்போர்ட் உள்ளேயே இந்த குருவிகளை பார்க்கலாம். ரொம்ப அழகாக இருக்கும் . நான் சின்னவளாக இருந்த போது எங்க வீட்டுல இந்த குருவிங்க கூடு இருந்தது, (ஹால்லில்) எனவே, அந்த குட்டிகள் பற்க்க கத்துக்கும் போது எங்க அம்மா ஃபேன் போடுவதை நிறுத்திடுவாங்க . என்ன அதுகள் அடி பட்டுடுமே என்று புன்னகை

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்!

Post by dsudhanandan on Fri Jun 03, 2011 1:16 pm

ஆண்

[img][/img]

பெண்





ஜோடி







Last edited by dsudhanandan on Fri Jun 03, 2011 2:08 pm; edited 1 time in total

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்!

Post by krishnaamma on Fri Jun 03, 2011 1:22 pm

நன்றி சுதானந்தன் புன்னகை இது ஆண் பறவை . தலை கருப் பாக இருக்கு பாருங்கோ, பெண் என்றால் லைட் ப்ரௌன் கலரில் இருக்கும்

krishnaamma
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10070
வசிப்பிடம்: வீட்டில்தான்!
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 617

Back to top Go down

Re: செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்!

Post by SK on Fri Jun 03, 2011 2:04 pm


SK
சதுரச் செயலாளர்
சதுரச் செயலாளர்

பதிவுகள்: 3269
வசிப்பிடம்: WORLD
சேர்ந்தது: 10/12/2010
மதிப்பீடு: 434

Back to top Go down

Re: செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்!

Post by dsudhanandan on Fri Jun 03, 2011 2:30 pm

krishnaamma wrote:நன்றி சுதானந்தன் புன்னகை இது ஆண் பறவை . தலை கருப் பாக இருக்கு பாருங்கோ, பெண் என்றால் லைட் ப்ரௌன் கலரில் இருக்கும்


நன்றி....

ஆண், பெண், ஜோடி பறவைகள் என மூன்றையும் பதிந்துவிட்டேன்

dsudhanandan
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3617
வசிப்பிடம்: கோவை இப்போ கோழிக்கோடு
சேர்ந்தது: 23/09/2010
மதிப்பீடு: 414

Back to top Go down

Re: செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்!

Post by ரமீஸ் on Thu Sep 15, 2011 11:33 am

இதை வாசிக்கும் போதே மனதுகுளிர்கிறது.

ரமீஸ்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 6198
வசிப்பிடம்: ஈகரையில் பாதி இலங்கையில் மீதி.
சேர்ந்தது: 28/02/2010
மதிப்பீடு: 21

Back to top Go down

Re: செல்போன் டவர்களும்... சிட்டுக் குருவிகளும்!

Post by பிளேடு பக்கிரி on Thu Sep 15, 2011 12:15 pm

சிரி சிரி சிரி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 378

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum