புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
89 Posts - 50%
heezulia
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
75 Posts - 42%
mohamed nizamudeen
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
29 Posts - 55%
heezulia
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
20 Posts - 38%
T.N.Balasubramanian
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_m10"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஆர்யா-விஷால்" பேட்டி!!!


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jun 26, 2011 1:19 pm

சில்லறைத் திருடர்களாக இருக்கும் ஆர்யா, விஷால்
இருவரையும் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் எப்படி தங்கள் வசதிக்கு
பயன்படுத்திக்கொள்கிறார்கள். பெட்டி கேஸ் கணக்கு காட்ட தொடர்ந்து
பலியாடுகளாக மாற்றப்படும் இந்த சகோதரர்கள் உண்மையில் உடன் பிறப்புகளா?
தங்கள் வாழ்வை நிர்மூலமாக்கியவர்களை, படத்தின் இறுதியில் எஞ்சியிருக்கும்
ஒருவன் எப்படி நிர்மூலமாக்குகிறான் என்பதுதான் 'அவன் இவன்' என்கிறார்கள்
பாலா அலுவலகத்தில்? 'அவன் இவன்' ரிலீஸ் ஆகும் இந்த பொருத்தமான நேரத்தில்
அவனைப் பற்றி இவனும்.. இவனைப் பற்றி அவனும் பேசினால் எப்படியிருக்கும்?
கடந்த வாரம் ஆர்யா, விஷால் இருவரும் ஒருசேர அளித்த பேட்டி இதோ:


திருச்செந்தூருக்கு அருகில் கடலோரத்தில் மணப்பாடு. அங்கு பகலும் இரவுமாக
'வேட்டை' படப்பிடிப்பில் இருக்கிறார் ஆர்யா. இடையில் பேட்டிக்காக
சந்தித்தார்.


சாக்லேட் ஹீரோவாக அறிமுகமாகி ஒரு தேர்ந்த நடிகராக உருவாகி வருகிறீர்கள். இதுபற்றி?

எனக்கு முதலில் அமைந்த படங்கள் காதலைச் சுற்றி அல்லது
காதலியைச் சுற்றி வந்துகொண்டிருந்தன. ஆரம்பக்கட்டத்தில் அப்படியான
படங்களையே நானும் தேர்ந்தேடுத்தேன். நாம் நடிக்கும் படங்கள் வெற்றிகரமாக
ஓடத்தொடங்கும்போதுதான் நல்ல கதைகளும் வித்தியாசமான கதாபாத்திரங்களும்
வந்துசேரும். அந்த நல்ல நேரம் எனக்கும் வந்தது.

ஒரு திறமையான நடிகராக நான் உருவாகியிருந்தால் அதற்கு முழு காரணமும் எனக்கான
வாய்ப்புகளை வழங்கிய இயக்குநர்கள்தான். அவர்கள் இல்லாமல் இந்த இடத்தில்
நிற்க வாய்ப்பில்லை. 'நான் கடவுள்' போன்ற படங்களை தேடிப்போக முடியாது.
அப்படி ஆழமான நடிப்பை கோரக்கூடிய படங்களில் நடிப்பது ஒரு சவாலான விஷயம்.
'மதராசபட்டினம்' படமும் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம். ஒரு
நடிகனுக்கான சக்சஸ் என்பதே படங்களின் வெற்றியிலிருந்துதானே தொடங்குகிறது.
அதுதான் எனக்கும் நடந்தது.


'நான் கடவுள்', 'மதராசபட்டினம்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்'
என்று மாறுபட்ட கதைகளில் நடிக்கிறீர்கள். இதுமாதிரியான படங்களை எப்படி
தேர்ந்தெடுக்கிறீர்கள்?


எல்லாவற்றையும் நாமே
தேர்ந்தெடுத்துவிட முடியாது. அதுவாகவே அமையும். அப்படி அமைந்த படங்கள்தான்
மூன்றுமே. இந்தப் படம் ஓடும்... இது ஓடாது என்று யாருமே எளிதில் கணித்து
விடமுடியாது. ஒருவகையில் அதிர்ஷ்டமும் வேண்டும். இயக்குநர்கள் கதை
சொல்லத்தொடங்கும்போதே இந்தப் படத்தில் நடிக்காமல் இருக்கக்கூடாது என்று
தோன்றும். பாலா, விஜய், ராஜேஷ் மூவரது படங்களில் நடித்த அனுபவங்கள்
வித்தியாசமானவை. ஆழம், காதல், நகைச்சுவை என எதையும் சுவாரசியமாக
சொல்லத்தெரிந்தவர்கள். என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக நான்தான் அவர்களுக்கு
நன்றி சொல்லவேண்டும்.


படம் தயாரிக்கும் அனுபவம் எப்படி இருக்கிறது?

சில கதைகளைக் கேட்கும்போது நாம் செய்தால் என்ன என்று
தோன்றும். அப்படி அழகான கதைகளை படமாக எடுக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு
உண்டு. புதிய இயக்குநர்களையும் அறிமுகம் செய்ததுபோலவும் ஆகிவிடும். பல
திறமையான இளைஞர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். ஏற்கெனவே
பிரபலமானவர்களைவிட புதியவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றி தங்களை
நிரூபிக்க நினைப்பார்கள். நாங்கள் தயாரித்துள்ள 'படித்துறை' படமும் ஒருசில
வாரங்களில் வெளியாகிவிடும்.


உங்கள் சினிமா வாழ்வில் இயக்குநர் பாலாவுக்குரிய முக்கியத்துவம் என்ன?
என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை
ஏற்படுத்தியவர் இயக்குநர் பாலா. என் கேரியரில் அவருக்கான இடம்
தனித்துவமானது. ஒரு தவத்தைப் போல 'நான் கடவுள்' படத்தை உருவாக்கினார்.
மிகப்பெரிய உழைப்பை அந்தப் படத்திற்கு போட்டோம். ஆனால் அதற்கு இணையான
வரவேற்பும் பாராட்டும் கிடைக்கத் தவறவில்லை. சிறந்த இயக்குநருக்கான தேசிய
விருது கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது. பாலாவின் இயக்கத்தைப் பற்றி நான்
என்ன சொல்லமுடியும்? சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களையே
செதுக்கியவர் அவர். ஒரு சிறு காட்சியாக இருந்தாலும் அது முழுமை பெறாமல்
விடமாட்டார். பர்பெக்ஷனிஸ்ட். நாம் எவ்வளவு சிரமப்பட்டாலும் அவர்
விரும்பியதை நடித்தே ஆகவேண்டும். இயக்குநர்களில் அவரொரு நட்சத்திரமாக
ஜொலிக்கிறார்.


மாறுகண் கொண்டு நடிக்க முடியாமல் அறைக்கு வந்து விஷால்
அழுதார் என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொன்னீர்கள். இத்தனை சிரமப்பட
வேண்டுமா?


சவால்தான். சவாலை எதிர்கொள்வதே நமக்கான
தனித்துவத்தையும் வெற்றியையும் தரும். என்னால் முடியாது என்று நினைத்தால்
முடியாமல்தான் போகும். என்னால் செய்யமுடியாததை இன்னொருவர் செய்யமுடியும்.
ஆனால் எல்லோருக்கும் ஓர் எல்லை இருக்கிறது. அந்த எல்லைவரை விளையாடிப்
பார்க்கத்தான் வேண்டும்.

என்னைவிட விஷாலின் நடிப்பு 'அவன் இவனி'ல் பெரிதாகப் பேசப்படும். அந்த
அளவுக்கு உழைப்பைக் கொட்டியிருக்கிறார். செயற்கையாக இரு கண்களை ஒரு
மூக்கின் பக்கம் குவியவைப்பது மிகவும் கஷ்டம். அப்படி மாறுகண்ணாகத்
தோன்றும்போது இந்தப் பக்கம் பார்? என்று பாலா சொல்வார். சில நேரங்களில்
மயக்கமே வந்துவிடும். என்னடா மச்சான்... இயற்கையிலேயே மாறுகண்ணன் மாதிரி
டீல் பண்றார்? என்று விஷால் நொந்துகொள்வான். இறுதியில் 'அவன் இவனி'ல்
அவன்தான் வெல்லப் போகிறான். பெரிய அளவுக்கு உயரவேண்டும் என்றால் அத்தனை
சிரமப்படத்தான் வேண்டும்.

'அவன் இவன்' படத்தில் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் உண்டா?

நாங்கள் இருவரும் அண்ணன் தம்பிகளாக
நடித்திருக்கிறோம். ஆனால் விஷாலுக்கு நடிப்பதற்கான அதிகமான ஸ்கோப்
இருந்தது. அவன் பெரிய நடிகராக வேண்டும் என்று எதையாவது செய்து
கொண்டிருப்பான். எனக்கு அதை கலாய்க்கிற கேரக்டர். சொல்லியா கொடுக்க
வேண்டும். நமக்கு அது அல்வா சாப்பிடுவதுமாதிரி. சில நாட்களில் படம்
வரப்போகிறது. எங்களைப் பார்த்துவிட்டுச் சிரிக்கப்போகிறீர்கள்.


ஜனனி ஐயர், மதுஷாலினி எப்படி நடித்திருக்கிறார்கள்?


விஷாலின் காதலியாக ஜனனி. எனக்கு மதுஷாலினி. இருவரும்
அலட்டிக்கொள்ளாமல் மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள்தான்
படத்திற்கு ஒரு சுவாரஸ்யத்தைத் தருவார்கள்.


முதன்முதலாக லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கிறீர்கள். எப்படி இருக்கிறது?

ஏற்கெனவே விஷால் மூலம் அவரைப் பற்றி
கேள்விப்பட்டிருப்பதால் உடனே நடிக்கத் தயாராகிவிட்டேன். இயக்குநர்
லிங்குசாமி, ஒரு ஸ்டைல் இயக்குநர். இனிமையான பாடல்களை நேசிக்கிறவர். அதற்கு
'பையா' படம் ஒன்றே போதும். எனக்கும் மாதவனுக்கும் அண்ணன் தம்பி கேரக்டர்.
இருவருக்கும் அமலாபால், சமீரா ரெட்டி என மிரட்டும் ஹீரோயின்கள்.
படப்பிடிப்புத் தளமே ஏதோ திருவிழாபோல இருக்கிறது. ஒரு ரசனை மிகுந்த
இயக்குநரின் படத்தில் நடிப்பதும்கூட ரசனையான விஷயம்தான் என்பதை
உணர்ந்துவருகிறேன். தற்போது அந்த அனுபவத்தில் நான் இருக்கிறேன்.


'இவன் என் நண்பன்' - விஷால்!


அதிரடியாக தரையில் கையை வைத்து மிரட்டும் விழிகளால்
பார்த்த அந்த அதிரடி நாயகன் விஷால் இல்லை இப்போது. அனுபவமும் தெளிவும்
கூடியிருக்கிறது. 'அவன் இவனில்' பாலாவால் புடம் போடப்பட்டிருக்கிறார்.


முந்தைய படங்களின் அனுபவங்களால் வந்த ஞானத்தால் கதைக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருக்கிறீர்களா?

நான் நடித்த முந்தைய படங்கள் ஒரு காலகட்டம் என்றால்,
பாலாவின் 'அவன் இவன்' ஒரு மைல்கல். இந்தப் படத்தை செய்து முடித்துள்ள இந்த
நேரத்தில் என மனம் வெற்றிடமாக இருக்கிறது. என்ன படம் செய்வதென்று புரியாமல்
தவித்துக் கொண்டிருக்கிறேன். சில நேரங்களில் கதை கேட்கும்போது இரண்டு மணி
நேரம் 20 நிமிடங்கள் அலுக்காமல் பொழுது போக்காக படம் இருக்கவேண்டும் என்று
தோன்றும். நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை சொல்லும்போது அதற்காகவே
படம் செய்யவேண்டும் என்ற மனநிலை இருக்கும். ஆனால் தற்போது ஐ யம் டோட்டலி
பிளாங்க்.


சிக்ஸ்பேக் மோகம் முடிந்துவிட்டதா?

அது மோகமல்ல. அந்தக் கதைக்குத் தேவைப்பட்ட ஒரு
விஷயம். இப்போது பாலா படத்துக்காக 16 கிலோ எடையைக் கூட்டினேன். அந்த
கதாபாத்திரத்திற்குத் தேவையாக இருந்தது. எல்லோருக்கும் சிக்ஸ்பேக் மீது ஒரு
கவர்ச்சி இருந்தது. நான் சிக்ஸ்பேக் செய்தபோது என்னாலும் செய்யமுடியும்
என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.


நீங்கள் எதிர்பார்த்த படங்கள் தோல்வியடையும்போது எப்படி இருக்கும்?

மீண்டும் தரைமட்டத்திலிருந்து எழ வேண்டியிருக்கும்.
ஒரு படத்திற்கு முன்பு வருகிற படத்தின் முடிவுதான் நடிகனின் எதிர்காலத்தைத்
தீர்மானிக்கிறது. வெள்ளிக்கிழமையின் வசூல்தான் தீர்மானிக்கும். படம்
வெற்றியடைவதும் தோல்வியடைவதும் ஒரு ரிசல்ட். அவ்வளவுதான். அது நம்மை
பாதிக்கக்கூடாது. அதிலிருந்து ஒன்றை கற்றுக்கொள்ளமுடியும். அதாவது அடுத்த
படத்தை கூடுதல் கவனத்துடன் செய்யவேண்டும் என்பது
.

'அவன் இவனில்' மாறுகண் கொண்டு நடிக்கமுடியாமல் அறைக்கு வந்து அழுதீர்களாமே?

மாறுகண் என்பது என் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய
ரிஸ்க். இதுதான் என்னுடைய கடைசிப்படம் என்று நினைத்து செய்தேன். தலைவலி
அதிகமாகி ஒரு கட்டத்தில் தலைவலி என்றாலே என்னவென்றே தெரியவில்லை.
வந்தால்கூட தெரியாது. ஒவ்வொரு நாள் இரவும் படப்பிடிப்பு முடிந்தவுடன்
ஆர்யாவிடம் போய் புலம்புவேன். அந்த அளவுக்கு மன அழுத்தம். பிறகு
புலம்புவதையும்கூட நிறுத்திவிட்டேன். புலம்புவதால் என்ன
நடந்துவிடப்போகிறது? அதனால் நாளைக்கு படப்பிடிப்பை நிறுத்திவிடப்
போவதில்லை. மறுபடியும் படப்பிடிப்புக்குப் போக வேண்டும். அதையேதான்
செய்யவேண்டும். உலகிலேயே மாறுகண் கொண்டு நடித்த முதல் நடிகராக
இருக்கவேண்டும் என்பதைப் பதிவு செய்வதற்காகவே 'அவன் இவனி'ல் நடித்தேன்.


இயக்குநர் பாலா?

'நான் கடவுள்', 'பிதாமகன்' பார்த்துப் பிரமித்துப்
போயிருக்கிறேன். முதலில் ஒரு நடிகனாக பயணத்தைத் தொடர்ந்த பிறகு
நடிப்பதற்கான விஷயங்களை நோக்கிய தேடலும் தொடரும். அதுதான் கண்ணுக்குத்
தெரியும். அந்தவகையில் பாலாவின் படங்கள்தான் கண்ணில் பட்டன. 'நான் கடவுள்'
படம் பார்த்ததுமே பிரகாஷ்ராஜிடம் புலம்பிக்கொண்டிருந்தேன்.

நடிப்பில் பசி இருந்தால் அப்படியொரு படத்தில் நடிக்கவேண்டும் என்று
சொன்னேன். அதுபோன்ற ஒரு படம் நமக்கு வரும் என்று நம்பிக்கொண்டிருந்தேன்.
அந்த சமயத்தில்தான் ஆர்யா வந்து பாலாவின் 'அவன் இவன்' கதையைச் சொல்லி
நடிக்கிறியா? என்று கேட்டான். உடனே ஒப்புக்கொண்டேன். என் அணுகுமுறையையே
இந்தப் படம் மாற்றியிருக்கிறது. இனிமேல் நடிக்கப்போகும் படங்களாகட்டும்...
எடுக்கும் முடிவுகளாகட்டும்... தெளிவு கிடைத்திருக்கிறது.

சாதாரண இனிப்புக் கடை லட்டுக்கும் திருப்பதி லட்டுக்கும் வித்தியாசம்
இருக்கிறது. திருப்பதி லட்டை வணங்கிவிட்டுத்தான் சாப்பிடுவோம்.
அப்படித்தான் இயக்குநர் பாலா என்னை உருவாக்கியிருக்கிறார்.

ஆர்யாவின் கதாபாத்திரம் எப்படி? படத்தில் இருவருக்கும் சமமான முக்கியத்துவம் உண்டா?


எனக்கும் ஆர்யாவுக்கும் சமமான கதாபாத்திரம்தான்.
இருவருக்கும் சமமான பெயரும் கிடைக்கும். அவருடைய சினிமா கேரியரில் மிக
முக்கியத்துவமான படமாக இருக்கும். ஹீரோயினோடு எனக்குள்ள கெமிஸ்ட்ரியைவிட
ஆர்யாவுடன் காட்டுகிற கெமிஸ்ட்ரி அழகாக இருக்கும். தமிழ் சினிமாவுக்கும்
அது ஆரோக்கியமாக இருக்கும்.


தமிழில் புதுமுகங்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். இந்தப் போட்டியை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்?

எல்லா புதுமுகங்களுமே நமக்குப் போட்டியாளர்கள் தான்.
டான்ஸூம், ஃபைட்டும் தெரிந்தால் பெரிய நடிகனாகிவிடலாம் என்பதெல்லாம் தாண்டி
பத்து பேரில் ஒருவராக உயர்ந்து நிற்கவேண்டும். எல்லாவற்றையும் நாம்
சாதித்துவிட்டோம். இனிமேல் செய்யவேண்டியது ஒன்றுமில்லை என்று சீனியர்கள்
இருந்துவிட முடியாது. இப்போது எல்லோருமே சிந்திக்கிறார்கள். புதுமுகங்கள்
அதிகமாக வரும்போதுதான் நமக்கு ஒரு பொறுப்புணர்வு வரும். எல்லோருமே
ஆடிப்பார்க்கட்டும். அப்போதுதான் சினிமா சுவாரஸ்யமாக மாறும்.


அடுத்து என்ன படம்?

பிரபுதேவா இயக்கும் 'பிரபாகரன்' படத்தில்
நடித்துவருகிறேன். ஆனால் டைட்டில் முடிவாகவில்லை. எண்பது சதவிகிதம்
படப்பிடிப்பு முடிந்துவிட்டது. சமீரா ரெட்டிதான் ஹீரோயின். என் அண்ணனே
தயாரிக்கிறார்.


ஆர்யா ரொம்பவும் நெருங்கிய நண்பரா?

ஆர்யாவும், நானும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே
நண்பர்கள். நடிக்கப்போகிறோம் என்பதுகூட தெரியாது. என் வீட்டுக்கு
பக்கத்துத் தெருவில் ஆர்யா வீடு.
TMT
"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  678642



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"ஆர்யா-விஷால்" பேட்டி!!!  Scaled.php?server=706&filename=purple11
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jun 26, 2011 1:38 pm

நல்லாயிருக்கு "ஆர்யா-விஷால்" பேட்டி!!!  224747944 "ஆர்யா-விஷால்" பேட்டி!!!  678642
கே. பாலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கே. பாலா



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 26, 2011 1:55 pm

அப்போ அவனும் இவனும் நல்ல நண்பர்கள்னு சொல்லுங்க !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக