புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Poll_c10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Poll_m10மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram

53 Posts - 42%
T.N.Balasubramanian

7 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 3%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 2%
சிவா

1 Post - 1%
Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

184 Posts - 50%

136 Posts - 37%

15 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%

Baarushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 29, 2011 8:01 am

First topic message reminder :

ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம் என பெர்க்காசா ஆதரவாளர்களுக்கு அறிவுரை

ஜுலை 9ம் தேதி பெர்சே பேரணியை எதிர்கொள்வதற்கு தாங்கள் நடத்தும் பேரணிக்கு பெர்க்காசாவும் அதன் அரசு சாரா தோழமை அமைப்புக்களும் “வெறும் கைகளுடன்” வரும்.

இவ்வாறு கூறும் பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அன்றைய தினம் தமது உறுப்பினர்கள் யாரும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றார்.

“நான் உத்தரவாதம் அளிக்க முடியாது. வன்முறையில் இறங்குவது யாராவது இருக்கலாம். பெர்க்காசா உறுப்பினர்கள் அதில் சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய தவறாகும்.”

“பலர் அங்கு கூடும் போது யார் அதனைத் தொடங்கினார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ? பெர்சே கூட எங்கள் அமைப்புக்குள் ஊடுருவி இருக்கலாம்,” என்றார் அவர்.

“10 மாவட்டங்களிலும் 22 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெர்க்காசா விளக்கக் கூட்டங்களை நடத்தியுள்ளது. “யாரையும் தூண்ட வேண்டாம்.ஆயுதங்களைக் கொண்டு வர வேண்டாம். வெறும் கைகளுடன் வாருங்கள்,” என உறுப்பினர்களுக்குக் கூறப்பட்டுள்ளது.”

சீனர்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் உணவுப் பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தாம் ஏற்கனவே கூறிய ‘அறிவுரையை’ அவர் மீண்டும் வெளியிட்டார்.

“நாடு குழப்பத்தில் இருக்கும் போது, சாலைகள் போக்குவரத்து தேங்கியிருக்கும் போது நீங்கள் எப்படி சந்தைக் கூடங்களுக்குச் செல்ல முடியும் ?” என அவர் வினவினார்.

சாலைகளிலிருந்து மக்களை விலக்கி வைப்பதே தமது நோக்கம் என்றும் அவர் விளக்கினார்.

போலீஸ் அனுமதி இல்லாமல் பெர்க்காசா சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பது இதுவே முதன் முறையாகும் என்றும் “அனுமதி இல்லாத பெர்சேக்கு பதிலடி” கொடுப்பதற்கே அவ்வாறு செய்யப்படுகிறது என்றும் இப்ராஹிம் சொன்னார்.

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 1:43 am

பிகேஆர் மகளிர் பிரிவு: ‘ஹிஷாமுடின் தேசத் துரோகக் குற்றத்தைப் புரிந்துள்ளார்’

பெர்சே 2.0 அமைப்பு இன்னும் சட்ட விரோத அமைப்பே என வலியுறுத்துவதின் மூலம் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன், அகோங்கிற்கு எதிராக தேசத் துரோகக் குற்றத்தை புரிந்துள்ளதாக பிகேஆர் மகளிர் பிரிவு இன்று குற்றம் சாட்டியுள்ளது.

பெர்சே 2.0 அரங்கம் ஒன்றில் பேரணியை நடத்துவதற்கு அகோங் இணக்கம் தெரிவித்துள்ள வேளையில் அந்த அமைப்பு இன்னும் சட்ட விரோதமானதே என உள்துறை அமைச்சர் கூறுவதாக அந்தப் பிரிவின் தலைவி சுராய்டா கமாருதின் சொன்னார்.

“போலீசார் ஒடுக்குமுறையைத் தொடருவது அவமதிப்பதாகும். அமைதியான கூட்டத்துக்கு மாமன்னர் அங்கீகாரம் அளித்துள்ளது தெளிவான விஷயமாகும்.”

“ஒரு மலாய்க்காரர், மலேசியன் என்ற முறையில் ஹிஷாமுடின் அதற்குக் கட்டுப்பட வேண்டும்,” என சுராய்டா பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

கடந்த இரண்டு நாட்களாக அந்த விவகாரத்தை கையாளுவதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மாறி மாறிப் பேசுவதாகவும் அவர் சாடினார்.

“அந்தக் குளறுபடியிலிருந்து தம்மை விலக்கிக் கொள்ள நஜிப் முயலுகிறார். அவர் பலவீனமான தலைவர் என்பதையே அது காட்டுகிறது. தமது நிர்வாகத்தில் உள்ள அமைச்சர்களுடைய விருப்பங்களுக்கும் மருட்டல்களுக்கும் அவர் அடிபணிவதாகத் தோன்றுகிறது,” என்றும் பிகேஆர் மகளிர் தலைவி சொன்னார்.

“அது ஒரு கேள்வியை எழுப்புகிறது; யாருக்கு அதிகமான அதிகாரம் உள்ளது ? அகோங்கிற்கா, நஜிப்புக்கா அல்லது ஹிஷாமுடினுக்கா ?” என அவர் வினவினார்.

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 1:46 am

எஸ்பிஎடி: வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் கோலாலம்பூருக்கு செல்வதற்கு பஸ் அனுமதிகள் கிடையாது

கோலாலம்பூருக்கு செல்வதற்கு வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் தற்காலிக பஸ் அனுமதிகள் ஏதும் இல்லை. ஆனால் எல்ஆர்டி, கேடிஎம், பஸ் சேவைகள் கோலாலம்பூரில் வழக்கம் போல நடைபெறும்.

இவ்வாறு ஸ்பாட் என்ற தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையத் தலைவர் சையட் ஹமீட் அல்பார் அறிவித்துள்ளார். பெரு நாள் அல்லாத காலங்களில் தற்காலிக பஸ் அனுமதிகளை வழங்குவதில்லை என்ற கொள்கையை தமது ஆணையம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என அவர் விளக்கினார்.

“நாங்கள் தற்காலிக பஸ் அனுமதிகளை முடக்கவில்லை. மாறாக அதே நிலையைக் கடைப்பிடித்து வருகிறோம்,” என அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

“அதற்கு எந்த ஒரு பேரணிக்கும் தொடர்பு இல்லை.”

“சீனப் புத்தாண்டு, நோன்புப் பெருநாள், தீபாவளி போன்ற பெருநாள் காலங்களைத் தவிர வேறு எந்த நேரத்திலும் நாங்கள் தற்காலிக பஸ் அனுமதிகளை வெளியிடுவதில்லை.”

சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது போல அது உத்தரவல்ல எனக் குறிப்பிட்ட அவர் நடப்புக் கொள்கையை மீண்டும் எடுத்துக் கூறும் நோட்டீசே அது எனச் சொன்னார்.

கோலாலம்பூரில் சனிக்கிழமையன்று எல்லாப் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் வழக்கம் போல நடைபெறும் என சையட் ஹமீட் மேலும் கூறினார்.

“என்னைப் பொறுத்த வரையில் எல்ஆர்டி சேவைகள் ஏதும் ரத்துச் செய்யப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.”

சனிக்கிழமையன்று எல்ஆர்டி சேவைகள் நிறுத்தப்பட மாட்டாது என்பதை அந்தச் சேவைகளை நடத்தும் பிராசார்னா நிறுவனத்தின் பேச்சாளர் மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார்.

“சேவைகள் வழக்கம் போல நடைபெறும். என்றாலும் போலீசார் போன்ற எந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம்,” என அவர் சொன்னார். போலீசாரிடமிருந்து தங்களுக்கு இதுவரையில் எந்த ‘அறிவுரையும்’ வரவில்லை என்றார் அவர்.

சனிக்கிழமைக்குத் திட்டமிடப்பட்டுள்ள பெர்சே பேரணிக்கு மக்கள் செல்வதைக் கட்டுப்படுத்த அன்றைய தினம் அதிகாரிகள் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மூடக் கூடும் என பேஸ் புக் போன்ற சமூக இணையத் தளங்களில் ஏற்கனவே ஆரூடம் கூறப்பட்டிருந்தது.

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 1:48 am

பேரணியில் கலந்துகொள்ளாதீர், பிஎஸ்டி உத்தரவு

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Bersih-edu

அரசு ஊழியர்கள் சட்டவிரோத பேரணியிலோ நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்கும் எந்தவோர் இயக்கத்திலோ கலந்துகொள்ளக்கூடாது என்று தடைவிதித்துப் பொதுச் சேவைத்துறை (பிஎஸ்டி) சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

பிஎஸ்டி தலைமை இயக்குனர் அபு பக்கார் அப்துல்லாவின் கையொப்பத்தைக் கொண்டுள்ள ஜூன் 30ஆம் தேதியிடப்பட்ட அந்த அறிக்கை பேரணியின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இவ்வார இறுதியில் மூன்று பேரணிகள் நடத்தத் திட்டமிடப்படுள்ளது. தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்குக் கோரிக்கை விடுக்கும் கூட்டணி (பெர்சே 2.0), பெர்க்காசா, அம்னோ இளைஞர் பகுதி ஆகிய மூன்றும் அப்பேரணிகளுக்குத் திட்டமிட்டுள்ளன.

எல்லா அமைச்சுகளுக்கும் அரசுத்துறைகளுக்கும் மாநிலச் செயலகங்களுக்கும் அனுப்பிய அந்த மூன்று-பக்கக் கடிதத்தில் அபு பக்கார், அரசு ஊழியர்கள் எந்தவோர் இயக்கத்திலும் கட்சிகள் ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலும் தீவிரமாக ஈடுபடுவதோ, அலுவலக நேரங்களில் அப்படிப்பட்ட கூட்டங்களில் கலந்துகொள்வதோ, சட்டவிரோதக் கூட்டம் பற்றித் தகவலளிக்க அலுவலகப் பொருள்களைப் பயன்படுத்தவோ கூடாது என்பதை நினைவுறுத்தினார்.

அரசு ஊழியர்கள் பொதுச் சேவையின் நடுவுநிலைக் கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டும். பாகுபாடு காட்டலாகாது. வழங்கப்படும் சேவை, நிலையானதாகவும் நடுநிலை வாய்ந்ததாகவும் இருப்பதையும் எந்தவொரு இயக்கத்துக்கும் அல்லது அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவாக இல்லாமலிருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றவர் நினைவுபடுத்தினார்.

இந்த விதிகளை மீறினால் 1993 அரசு அதிகாரிகள் நிலை ஆணைகளின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் அவர் விவரித்திருந்தார்.

கல்வி அமைச்சும் ஜூன் 30ஆம் தேதியிடப்பட்ட சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில் பெர்சே 2.0-இன் பெயர் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

பெர்சே 2.0, தேர்தல்கள் வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்று கோரிக்கையுடன் “ஜனநாயகப் பேரணி”க்கு ஏற்பாடு செய்துள்ளதாக அது கூறியது.

“அதைச் சட்டவிரோதக் கூட்டம் என்று போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். அதன் விளைவாக கலகங்களும் ஆர்ப்பாட்டங்களும் பூசல்களும் தோன்றலாம். அக்கூட்டம் நாட்டின் பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் பாதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது”, என்று அமைச்சின் தலைமை இயக்குனர் அப்துல் கப்பார் மஹ்மூட் அதில் தெரிவித்துள்ளார்.

“கல்வி அமைச்சின்கீழ் உள்ள அதிகாரிகளும் பணியாளர்களும் கல்விக்கழகங்களில் உள்ள மாணவர்களும் சட்டவிரோத அமைப்பான பெர்சே ஏற்பாடு செய்யும் பேரணிக்குச் செல்வதோ, அதில் கலந்துகொள்வதோ தடை செய்யப்பட்டுள்ளது”, என்றாரவர்..

கல்வி அமைச்சின் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிககளின் நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் தடுப்பதற்காகவே அவ்வறிக்கை விடுக்கப்பட்டதாக அப்துல் கப்பார் கூறினார்.

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 2:00 am

மலாயா பல்கலைக்கழகத்தில் போலீஸ் முகாம்கள்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 UM-300x175

கலகத் தடுப்புப் போலீசார் உட்பட போலீஸ் படையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இப்போது மலாயா பல்கலைக்கழக தங்கும் விடுதிகளில் முகாம்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.

சனிக்கிழமை கோலாலம்பூரில் நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பேரணியின் தொடர்பில் அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

அந்த விவரங்களை மலாயா பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதித்துவ மன்றம் இன்று வெளியிட்டது.

“அந்தப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையும் யாரும் வளாகம் முழுவதும் போலீஸ் பஸ்களும் டிரக்குகளும் கலகத் தடுப்புப் போலீஸ் வாகனங்களும் நிறைந்திருப்பதைக் காணலாம். அந்த வளாகம் முழுவதும் போலீஸ் பள்ளியாக மாற்றப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இது மிகவும் அபத்தமானது.”

“அந்த போலீஸ்காரர்களும் கலகத் தடுப்புப் போலீசாரும் வெளியூர்களிலிருந்து வந்திருக்கும் சாத்தியமுள்ளது. பெர்சே கூட்டத்தை ஒடுக்குவதற்கு ஜுலை 9ம் தேதி அவர்கள் அனுப்பப்படலாம்,”என அந்தப் பல்கலைக்கழகத்தின் உயர் மாணவர் அமைப்பு கூறியது.

“போலீஸ்காரர்கள் மலாயா பல்கலைக்கழகத்தின் முதலாவது இரண்டாவது, ஏழாவது தங்கும் விடுதிகளில் தங்கியுள்ளதாக தெரிய வருகிறது.” இப்போது அந்தப் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறைக் காலமாகும். அதனால் அந்த தங்கும் விடுதிகள் காலியாக உள்ளன.

நேற்று அந்த வளாகத்திற்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் ஜுலை 12 வரை அங்கு தங்கியிருப்பர் என ஒர் அதிகாரி மலேசியாகினியிடம் கூறினார்.

கூட்டரசுத் தலைநகரில் உள்ள ஒரே ஒரு பொதுப் பல்கலைக்கழகம் மலாயாப் பல்கலைக்கழகமாகும். அது இஸ்தானா நெகாராவிலிருந்தும் மற்ற பெர்சே ஒன்று கூடும் இடங்களிலிருந்தும் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 2:06 am

ஐஜிபி: பேரணியை ஷா அலாமில் நடத்துங்கள்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 IGP1-199x300

பெர்சே 2.0 ஷா அலாமில் உள்ள மெலாவத்தி அரங்கில் தனது பேரணியை நடத்தலாம் என ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் யோசனை கூறியுள்ளார்.

சட்டப்பூர்வ அமைப்பு அல்லது தனிநபர்களின் பெயரில் அது கூடிய விரைவில் அனுமதிக்கு விண்ணப்பிப்பது நல்லது என்று அவர் சொன்னார்.

“கோலாலம்பூரில் நெரிசலாக இருப்பதால் மாநகருக்கு வெளியில் பேரணியை நடத்துமாறு நான் அவர்களுக்கு யோசனை கூறினேன். கோலாலம்பூரில் நடத்தினால் போக்குவரத்துப் பாதிக்கப்படும். வர்த்தகமும் குலையும். பேரணியில் சம்பந்தப்படாத மக்களுக்கும் சிரமம் ஏற்படும்.”

“நான் அவர்களுக்கு மெலாவத்தி அரங்கை பரிந்துரைத்தேன். சிலாங்கூர் மந்திரி புசாரும் அதனை வழங்க முன் வந்துள்ளார்.” அவர் பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனைச் சந்தித்த பின்னர் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

ஆனால் அம்பிகா “பிடிவாதமாக” இருப்பதாகவும் அந்த யோசனையை நிராகரித்து விட்டதாகவும் இஸ்மாயில் சொன்னார்.

“மலேசியா பெரிய நாடு. மாநகர மத்தியில் நீங்கள் ஏன் ஒர் இடத்தைத் தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கின்றீர்கள்?”

“இந்த நாட்டில் எத்தனை அரங்கங்கள் இருக்கின்றன? முப்பது அல்லது நாற்பது? மற்ற இடங்களைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் உங்கள் செய்தியைச் சொல்ல வேண்டும்.”

“அரசாங்கம் அவர்களுக்கு அரங்கத்தைத் தருவதாக கூறியதே தவிர மெர்தேக்கா அரங்கத்தைக் கொடுப்பதாக சொல்லவே இல்லை.”

“நீங்கள் ஒரு செய்தியைச் சொல்ல விரும்பினால் பாகாங்கில் உள்ள ஒர் அரங்கில் அமர்ந்து கொண்டு உங்கள் செய்தியை சொல்ல முடியாதா?”

போலீசார் அனுமதியை வழங்குவதற்கு முன்னர் அரங்கத்தின் உரிமையாளரிடம் ஏற்பட்டாளர்கள் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

பெர்சே 2.0 இன்னும் சட்டவிரோத அமைப்பே, அதனைப் பிரதிநிதிக்கின்ற அல்லது பிரச்சாரம் செய்கின்ற எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசியப் போலீஸ் படைத் துணைத் தலைவர் காலித் அபு பாக்கார் நேற்று கூறியதை இஸ்மாயிலும் இன்று குறிப்பிட்டார்.

நன்றி: http://www.malaysiaindru.com

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 08, 2011 10:30 am

அதிர்ச்சி உள்னாட்டு போர் வருமா ? மன்னர் என்ன சொல்கிறார்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:48 am

தலைவர்களுக்குத் தடை; ஆனால் பெர்சே பேரணி நடக்கும்

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Ambika

பெர்சே 2.0 தலைவர்கள் கோலாலம்பூருக்குள் நுழைய போலீஸ் தடை விதித்திருந்தாலும் மெர்டேகா அரங்கில் பேரணி திட்டப்படி நடக்கும் என்று அறிவித்துள்ளது.

“எவரையும் நகருக்குள் நுழையவிடாமல் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை”, என்று பெர்சே 2.0 இயக்கக் குழு நேற்றிரவு விடுத்த அறிக்கையில் கூறியது.

“அரசாங்கம் நியாயமாக நடந்துகொள்ள விரும்புகிறதோ இல்லையோ மக்கள், நாட்டுப்பற்றுள்ள மலேசியர்களாகிய தங்களின் உரிமைகள் முடக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

“மெர்டேகா அரங்கில் அமைதியாகத் திரள்வோம்; அங்கு உங்கள் வருகையையும் எதிர்பார்க்கிறோம்”, என்றந்த அறிக்கை கூறியது.

நேற்று போலீசார், பெர்சே 2.0, பெர்க்காசா, அம்னோ இளைஞர் பேரணிகளின் ஏற்பாட்டாளர்கள் உள்பட 91 பேருக்கு நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தனர்.

அந்தப் பட்டியலில், முதலில் இடம்பெற்றுள்ளவர்கள் அம்பிகா ஸ்ரீநிவாசன், வொங் சின் ஹுவாட், மரியா சின் அப்துல்லா உள்பட பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர்கள்தான்.

பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள், அன்வார் இப்ராகிம், பாஸ் ஆன்மிகத் தலைவர் நிக் அசிஸ் நிக் மாட், பாஸ் துணைத்தலைவர் முகம்மட் சாபு, டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங், சமூக ஆர்வலர் ஹிஷாமுடின் ரயிஸ் முதலியோரின் பெயர்களும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பெர்சே பேரணிக்கு எதிர்ப்பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின்,, பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலி முதலானோரும் அதில் இடம்பெற்றுள்ளனர்.

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 11:56 am

இளமாறன் wrote:அதிர்ச்சி உள்னாட்டு போர் வருமா ? மன்னர் என்ன சொல்கிறார்

அந்த அளவுக்கு வர வாய்ப்பில்லை, காரணம்.. இங்குள்ள மக்களை மிரட்டி ஆட்சி செய்வதில் வல்லவர்கள் இங்குள்ள ஆட்சியாளர்கள். பத்திரிக்கைகள் அவர்கள் அளிக்கும் செய்தியை மட்டுமே வெளியிட வேண்டும். இல்லையென்றால் கைது, லாக்கப் மரணம் போன்றவைகள் நடைபெறும்.

மலேசியா - ஜுலை 9ம் தேதி பெர்சே மற்றும் பெர்க்காசா பேரணி செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 08, 2011 12:00 pm

தல நீங்க தீவிர அரசியல்ல இறங்க வேண்டிய நேரம் வந்தாச்சி அடுத்த தேர்தலில் நாம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டி இடலாம் நாணக்கு வெற்றி நிச்சயம் நம்ம கட்சிக்கு தனி சின்னமும் கேளுங்கள்

SIVA KUMAR முன்னேற்ற கழகம்

SK முன்னேற்ற கழகம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jul 08, 2011 12:19 pm

நாளை நான் கோலாலம்பூர் போகிறேன், சூழ்நிலை சரியாக அமைந்தால்
பேரணியில் நிச்சயம் கலந்துக் கொள்வேன். நடப்பது நடக்கட்டும்.

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக