ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 ayyasamy ram

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 heezulia

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 மூர்த்தி

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 மூர்த்தி

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

நாச்சியார் விமர்சனம்
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 T.N.Balasubramanian

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(464)
 Dr.S.Soundarapandian

ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்
 மூர்த்தி

பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
 SK

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!
 gayathri gopal

ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்படவில்லை: படத்திறப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதம்
 SK

திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்களுக்கு நீட் தேர்வு எழுத அனுமதி கிடையாது: இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவால் 5 ஆயிரம் பேர் பாதிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

செவ்வாய்

View previous topic View next topic Go down

செவ்வாய்

Post by சிவா on Mon Sep 14, 2009 4:37 amஅதிகாரத்துடன் ஆனந்த வாழ்வு வேண்டுமா? அங்காரனை வழிபடுங்கள்.
உலகில் மாவீரனகா வேண்டுமா? அந்த மங்கள் செவ்வாயை வழிபடுங்கள்
.

செவ்வாய் யார்?

சிவபெருமானின் கண்ணீர்த் துளியிலிருந்து பூமியில் விழுந்து வளர்ந்ததால் குஜன் என்றும் பரத்துவாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமி தேவியால் வளர்க்கப்பட்டதால் அங்ககாரகன் என்றும் அதுவே சுருக்கமாக அங்காரகன் என்றும் வழங்கப்படுகிறது. பூமித்தாயின் மகன் என்பதால் பௌமன் என்று அழைக்கப்படுகிறான். கு என்றால் பூமி அதிலிருந்து ஜனித்தவர் என்பதால் குஜன் என்றும் அழைக்கப்படுகிறார். பூமித்தாயால் வளர்க்கப்பட்டதால் ப+மிகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார். மாலினி சுசீலினி என்று இரு மனைவிகள் உள்ள இவர் செந்நிறமானவர். அதனால் செவ்வாய் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய கைகள் விண்ணில் செவ்வொளி வீசி விளங்குவதால் இவர் தமிழிலக்கியத்தில் “செம்மீன”; என்றும் அழைக்கப்டுகிறார். முந்நீர் நாப்பன் திமில் சுடர் போலச் செம்மீன் இமைக்கும்மாக விசம்பின என்று புறநானுhற்றில் கூறப்படுகிறது. மேலும் வீரபத்திரருடைய அம்சம் செவ்வாய் என்று புராணம் கூறுகிறது. பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்த இவர் முக்குணங்களிலே ராட்சத குணத்தைச் சேர்ந்தவர். சூரியனையும் குருவையும்; போல ஆண் கிரகமாக கருதப்படுவர். போரில் வலிமையுடையவர் என்பதால் சூரியனைப் போல் ஷத்திரிய ஜாதியைச் சேர்ந்தவராவார். நான்கு வித உபாயங்களில் தண்ட உபாயத்திற்குரியவன்.

ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு:

பூமியிலிருந்து சுமார் 14 கோடி மைல் தூரம் உள்ள செவ்வாய் கிரகம் ஒவ்வொரு ராசியிலும் 45 நாட்கள் சஞ்சரிப்பவர். மேஷ விருச்சிக ராசிகளுக்கு அதிபதி மிருகசீரிடம் சித்திரை அவிட்ட நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆங்கில எண்ணில் 9க்கு அதிபதி. மங்களம் என்ற செவ்வாய் ஒரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால்தான் யாருக்கும் தலை வணங்காமல் தன்மானத்துடன் வாழ்வான். உடல் உறுதிக்கும் மன உறுதிக்கும் காரகன் செவ்வாய் ரத்தத்திற்குக் காரகன் ரத்தக் கலப்பான சகோதரர்களுக்கும் காரகன். உடலில் எலும்பினுள் ஊன் (மஜ்ஜை) இவன். நாட்டில் முதல் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்ற அரசியல் தலைவர்கள் காவல் அதிகாரிகள் நாட்டுத் தளபதிகள் நீதிபதிகள் பொறியியல் வல்லுநர்கள் முதலானோரின் ஜாதகங்களில் அங்காரக பலம் இருந்திடும் என்று திடமாக நம்பலாம். மாவீரன் படைத்த புரட்சியாளர்களைத் தோற்றுவிப்பவன் அங்காரகன். பெருந்தன்மை அதே நேரத்தில் கண்டிப்பு தொண்டு செய்தல் தலைமை வகித்தல் வைராக்கியம் பகைவரை பந்தாடும் பராக்கிரமம் இவற்றை அளிப்பவன் செவ்வாய். மேல்நோக்கிப் பார்க்கும் பார்வை கொண்ட இவன் நெருப்புக் கூடத்திலும் உலவுவோன். அரசு வழியில் அமைச்சர் ஆவதும் அவர் உறவில் பிறப்பதும் ஆயுதம் வைத்திருப்பதற்கும் கூட செவ்வாய் ஆதிக்கம் வேண்டும். ஜாதகத்தில் உச்சம் அடைந்த அங்காரகன் ஒரு கேந்திரத்தில் இருந்தானானால் அந்த ஜாதகரை இவன் வாழ வைத்தே தீருவான். ஜாதகத்தில் செவ்வாய் யோக காரகன் ஆகி சந்திரனுடன் இணைந்து சந்திரமங்கள யோகத்தையும் குருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால் குருமங்கள யோகமும் ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றால் ருஜக யோகத்தையும் பிரதிபலிப்பான்.

செவ்வாய் சரியில்லாத ஜாதகர்கள்:

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் சரியில்லை என்றால் அதற்கு செவ்வாய் தோஷம் என்றே சொல்கிறார்கள். அந்தளவுக்கு செவ்வாயின் தாக்கம் பூமியில் அதிகம். செவ்வாய் ஒரு தீக்கோள் உஷ்ண கிரகம். அத்துடன் ரத்தத்திற்கும் காரகத்துவம் வகிப்பவர். உடல் ஆரோக்கியத்திற்கும் உயிர் வாழவும் ரத்த ஓட்டம் மிகமிக அவசியம் விஞ்ஞான மருத்துவ அடிப்டையில் ரத்த குரூப் இவற்றின் தன்மை ஒத்து வந்தால் தான் உடல்நலம் நன்றாக இருக்கும். புத்திரபாக்கியம் ஏற்படுத்தும். இந்த காரணங்களால் செவ்வாய் ஜாதகத்தில் இருக்கும் இடத்தை ஆண் பெண் இருபாலருக்கும் ஒத்துப் போகும் விதத்தில் திருமணத்திற்கு பொருந்தும் விதத்தில் இணைக்கலாம். செவ்வாய் மனித உடலின் ரத்தத்திற்கு காரகத்துவம் வகிக்கும் கிரகம். ஆணை விட பெண் உடலியலின் கூற்றுப்படி ரத்தம் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது. காரணம் பெண்ணிற்கு பூப்பெய்திய பிறகு மாதவிடாய் காரணமாக ரத்த இழப்பு ஏற்படுகிறது. பிரசவ காலத்தில் ரத்த இழப்பு ஏற்படுகிறது. ஆகவே பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் கெட்டுப்போய் இருந்தால் ரத்தசோகை ஏற்பட வாய்ப்புள்ளது. அத்துடன் மாதவிடாய் காலகட்டத்தில் வயிற்று வலி அதிகம் உதிரப் போக்குஅல்லது சரிவர உதிரப்போக்கு அல்லாத நிலை போன்றவை ஏற்படகூடும். உடல் நல்ல ஆரோக்கியமுடன் இருக்காமல் பலகீனமாக இருக்கும்.

இது போல் ஒரு ஆண் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருப்பின் அதிக உணர்ச்சி வசப்படுதல் பால் உணர்வு காம வேட்கை இருக்க வாய்ப்பு உண்டு அல்லது மிகக் குறைவான பால் உணர்வு இருக்கவும் கூடும். செவ்வாய் இருக்கும் இடத்தைப் பொருத்து இவற்றை நிர்ணயிக்க வேண்டும். செவ்வாய் 247812ல் இருந்தால் அவசர புத்தி பேச்சில் கோபம் குடும்பம் நிம்மதியில்லாமை உடல்நலம் பாதிப்பு உற்றார் நண்பர்களுடன் ஒற்றுமை இல்லாமை விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமை அடிபடுதல் காயம் ஏற்படுதல் அறுவை சிகிச்சை தற்கொலை முயற்சி எளிதில் உணர்ச்சி வசப்படும் இயல்பு மாங்கல்ய பாக்கியத்திற்கு ஊறு விளைவிக்கும் நிலை உணர்ச்சி அதிகமான நிலை உடல் சக்தியை இழக்கும் நிலைமை ஒழுக்ககோட்டினால் உடல் நலம் பாதிப்பு போன்ற செய்ல்கள் அனைத்திற்கும் செவ்வாய் சரியில்லாத அமைப்பே காரணமாகும

செவ்வாயின் ஆற்றல் பெற:

முருகன் வழிபாடு மிக முக்கியமானதாகும். அறுபடை வீடுகளில் பழநி அங்காரக சேஷத்திரம். தமிழகத்தில் அங்காரகன் பூஜித்த ஸ்தலங்கள் மூன்று. முதலாவது திருச்சிறுகுடி இது நாகப்பட்டினத்திலிருந்து – பேரளத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அங்காரகன் பூஜித்ததால் இறைவன் பெயரே ஸ்ரீ மங்களேஸ்வரர். இறைவியின் பெயர் மங்கள நாயகி. திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற தலம். அடுத்த அங்காரக சேஷத்திரம் என்று மிகவும் புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் என்கின்ற திருப்புள்ளருக்கு வேளுர். இதை அங்காரகபுரம் என்று அழைப்பார்கள். செவ்வாய்க் கிழமைகளில் சந்தியா காலத்தில் ஆட்டுக்கடா வாகனத்தில் பவனி வருவார் அங்காரகன். அடுத்து அங்காரகனால் பூஜிக்கப்பட்டவர் பழநி ஆண்டவர். செவ்வாய் செவ்வேளை பூஜித்த தலம் பழநி. அதனால் இது அங்காரக சேஷத்திரம் எனப்படுகிறது. வட நாட்டில் செவ்வாய் பூஜித்த தலம் உஜ்ஜயினி. செவ்வாய் கிழமை இராகு காலத்தில் துர்க்கைக்கு சிவப்பு வஸ்திரங்களை சார்த்தி அணிவதாலும் இரத்தினங்களில் பவளமும் உலோகங்களில் செம்பு அணிவதாலும் செண்பக மலர் செவ்வரளி மலர் கொண்டு பூஜை செய்வதாலும் செம்மரங்களை நடுவதாலும் செம்மரங்களுக்கு தண்ணீர் உற்றுவதாலும் செவ்வாய் அருள் பெறலாம். உணவு வகைளில் வெண்டைக்காய் பீட்ரூட் நெல்லிமுள்லி முந்திரி சுண்ட வத்தல் மிதுக்க வத்தல் திப்பிலி மூலம் கசாயம் கறிவேப்பிலை ஈத்து காம்பு கோசசாணி ஆமம் போன்ற வகைகளைச் சேர்த்துக் கொண்டால் செவ்வாய் பாதிப்புகளில் இருந்து விலகி செவ்வாய் ஆதிக்கம் பெறலாம். வாஸ்து சாஸ்திர முறைப்படி தெற்கு பார்த்த வீடுகள் கட்டலாம் வசிக்கலாம்.

தேசத்தைப் பரியாவணம் செய்வோருக்கும் நால்வகைப் படைகளை முன்னின்று இயக்குவோருக்கும் தீப்பிழம்பு போல் அசுத்தத்தை சுட்டெரித்துத் தூய்மையை நிலை நாட்டுவாருக்கும் யாருக்கும் தலை வணங்காமல் தன்மானத்துடன் வாழ்வோருக்கும் மூல பலமாக உள்ள அங்காரகனை வழிப்பட்டு வரமும் பெற்று விட்டால் எல்லாச் சிறப்பும் நம்மை நாடி வரும். இப்படிப்பட் செவ்வாயை வணங்கி சக்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ்வோம். வாழ்க வளமுடன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum