|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by ரா.ரா3275 Today at 1:22 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Yesterday at 10:59 pm
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm
» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm
» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm
» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm
» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm
» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm
» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm
» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm
» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm
» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm
» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm
» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm
» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm
» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by ந.கார்த்தி Yesterday at 6:12 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:07 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ...........
Page 1 of 1 • Share •
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ...........
மும்பையில் மீண்டும் பயங்கரம் 3 இடங்களில் குண்டுவெடிப்பு
பதிவு செய்த நாள் 7/14/2011 1:39:47

மும்பை : மும்பையில்,
நேற்று மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடித்தது. மத்திய மும்பையில் உள்ள
தாதர் மற்றும் தென் மும்பையில் உள்ள ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய
இடங்களில் நேற்றிரவு அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 17 பேர்
பலியானார்கள். குறைந்தது 107 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மும்பை முழுவதும்
உஷார்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை,
பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2007 ஜூலை
11ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 200
பேர் வரை பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அந்த
பயங்கர சம்பவத்தின் 5வது ஆண்டு நினைவுநாள் கடந்த 11ம் தேதி மும்பையில்
கடைபிடிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு
நடந்திருக்கிறது.
நேற்றிரவு சரியாக 7 மணியளவில் தென் மும்பை ஜவேரி
பஜாரில் முதல் குண்டு வெடித்தது. இங்கு புகழ்பெற்ற மும்பாதேவி கோயில்
அருகில் காவு கல்லியில் (தெரு) உள்ள ஒரு கடையில் மின்சார மீட்டரில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடித்ததும் மின்சார மீட்டருடன் சேர்ந்து கடையும் தீப்பற்றி
எரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும்
போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த குண்டு வெடிப்பில் 4 பேர்
பலியானதாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்
குண்டு வெடித்த அடுத்த நிமிடத்தில் தாதரில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த
குண்டு வெடித்தது. தாதர் ரயில் நிலையம் அருகில் கபூத்தர்கானாவை
(புறாக்கூண்டு) அடுத்த பெஸ்ட் பஸ் நிறுத்தத்தை ஒட்டி சாலையோரத்தில்
நிறுத்தப்பட்டிருந்த காரில் (பதிவு எண் எம்.எச்&43 ஏ 9384)
வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த
சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் தென் மும்பை சர்னிரோடு ரயில்
நிலையம் அருகில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் மூன்றாவது குண்டுவெடித்தது. இங்கு
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மும்பையின் வைர வர்த்தகத்தின்
தலைமையிடமாக சமீபகாலம் வரை ஒபேரா ஹவுசில் உள்ள பஞ்ச்ரத்னா கட்டிடம்
விளங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மும்பை வைர மார்க்கெட்
பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சுக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும்
பஞ்ச்ரத்னா கட்டிடத்தில் இப்போதும் பல வைர வர்த்தகர்களின் அலுவலகங்களும்
இதர அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்து வந்தது.
குறிப்பாக மாலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சிற்றுண்டி
சாப்பிடுவதற்காக இங்குள்ள நடைபாதை கடைகளுக்கு வருவது வழக்கம். அந்த
நேரத்தில் குண்டு வெடித்ததால் இங்கு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது.
முதல் குண்டு வெடித்த ஜவேரி பஜார் மற்றும் தாதரும் மக்கள்
அதிகம் கூடும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு பற்றிய
தகவல் கிடைத்ததும் போலீசார், தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும்
வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கண்ட மூன்று இடங்களுக்கு விரைந்து சென்று
குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து மீட்பு
பணிகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் ரத்தமும் சதையுமாக
கிடந்தவர்கள் மீட்கப்பட்டு கே.இ.எம்., ஜே.ஜே., சயான், செயின்ட் ஜார்ஜ்
உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று
குண்டு வெடிப்புகளிலும் 17 பேர் வரை பலியானதாகவும் 107 பேர்
காயமடைந்ததாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே,
குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும்
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேற்றிரவு அவசரமாக டெல்லியில் இருந்து
சிறப்பு விமானத்தில் மும்பை விரைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த
இடங்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக், குற்றப்பிரிவு போலீஸ்
இணை கமிஷனர் ராகேஷ் மரியா, தீவிரவாத தடுப்பு படை தலைவர் ராகேஷ் மரியா
ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜவேரி பஜாரில்
குண்டுவெடித்த இடத்தை பார்வையிட்ட பின்னர் பேட்டியளித்த மும்பை போலீஸ்
கமிஷனர் அரூப் பட்நாயக் கூறுகையில், ‘‘ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர்
ஆகிய 3 இடங்களில் இரவு 7 மணியளவில் குண்டுவெடித்தது. தாதரில் நடந்ததை விட
ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுசில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிக
சக்திவாயந்ததாக இருந்ததால் இந்த இரு இடங்களில் காயமடைந்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
3 இடங்களிலும் சிலர்
இறந்திருக்கிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் மற்றும்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை இப்போது உறுதியாக கூறமுடியாது. மும்பை
போலீசாருடன் தீவிரவாத தடுப்பு படை, குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் தேசிய
புலனாய்வு ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த குண்டு வெடிப்புகள் குறித்து
விசாரணையை துவக்கியுள்ளன. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் நகரில்
இருந்து தப்பி விடாமல் இருப்பதற்காக மும்பை முழுவதும் சீல் செய்யப்பட்டு
வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளதுÕÕ என்றார்.
இதனிடையே,
மும்பையில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகள் தீவிரவாத தாக்குதல் என்பதை
மத்திய உள்துறை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை
பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நன்றி
தினகரன்

திவ்யா- மகளிர் அணி

- பதிவுகள்: 1322
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 02/05/2011
மதிப்பீடு: 75
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum