ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்


புதிய இடுகைகள்
பங்களூரு ஒரு செய்தி திரட்டல்
 யினியவன்

8000 ஆயிரம் பதிவுகள் கடந்த ஜேன்(ஹர்ஷித்).
 யினியவன்

அறிமுகம் -ஜெ.செல்வராஜ் -மானிடன் !
 krishnaamma

பால் சாப்பிடுவது அவசியம்தானா..?!
 விமந்தனி

படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்:)
 விமந்தனி

என்னை பற்றி
 தமிழ்நேசன்1981

நாந்தாண்டா போலீஸ்
 விமந்தனி

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வேலை இல்லாப் பட்டதாரிணி!
 விமந்தனி

ருத்ரய்யா - தனித்த படைப்பாளி !
 விமந்தனி

ஐநூறு ரூபாய்!
 விமந்தனி

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -117)
 விமந்தனி

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 rudran

உதவி தேவை
 sakthibruce

பேசாத சில வார்த்தைகள்
 krishnaamma

உடம்பும், மனதும்!
 krishnaamma

படித்ததில் பிடித்தது :)....சிசு கொலையா... வேண்டாம்!
 krishnaamma

ஜெமினிகணேசனின் புத்திசாலித்தனம்!
 krishnaamma

டாக்சி ஓட்டும் பெண்கள்!
 krishnaamma

ஆசிரியருக்கு!
 krishnaamma

படமும் செய்தியும்!
 krishnaamma

வேலன்:-விசிட்டிங்கார்ட்.ஐடிகார்ட்,லேபிள்கள்.உட்பட 30க்கும்3மேற்பட்ட தேவைகளை பரிண்ட செய்திட
 velang

142 அடியை எட்டியது முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம்
 T.N.Balasubramanian

பிடித்த நகைச்சுவை
 T.N.Balasubramanian

மாநிலங்கள் அவை உறுப்பினர் தருண் விஜய் பாராட்டு விழாவில்
 ஜாஹீதாபானு

IT கம்பெனில்ல என்ன பண்ணுறாங்க?
 விமந்தனி

வரலாற்றில் இன்று - நவம்பர்
 விமந்தனி

எருமை மாடு ஈன்ற வெள்ளை நிற கன்று குட்டி
 விமந்தனி

உங்களோட 'பள்ளிப் பருவ' போட்டோவைப் பார்க்கனுமா.
 ஜாஹீதாபானு

இந்த வயசுல ஏன் சின்ன ஃபிகரைப் பார்க்குறீங்க...?
 விமந்தனி

நர்ஸை சைட் அடிக்க வர்றாராம்...!
 ஜாஹீதாபானு

சிரி.......சிரி......சிரி...............:)
 விமந்தனி

த்ரிஷாவுக்கு நிச்சயதாத்த்தம் ...
 T.N.Balasubramanian

விடுப்பு விண்ணப்பம்
 விமந்தனி

லஞ்ச லாவண்யம்னா என்னப்பா..?
 krishnaamma

விதவிதமாக முகமூடி
 krishnaamma

ஷாலினிக்கு இன்று பிறந்த நாள்
 P.S.T.Rajan

மரத்தைக் காணோம்..!! - Mano Red
 M.Saranya

2000 பதிவுகள் கடந்த mbalasaravanan...
 ஹர்ஷித்

ந.க. துறைவன் புதுக்கவிதைகள்
 ந.க.துறைவன்

அறை எண் 7 - முகமூடி வீரர் மாயாவி தோன்றும் காமிக்ஸ்.
 pkselva

பாமரர் தேவாரம்
 ரமணி

முமூடி - குறும்படம் - காணொளி
 ayyasamy ram

இன்றைய ஆன்மீகம்
 ayyasamy ram

10-11-2014-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய
 ayyasamy ram

காமராஜரின் சமயோசிதம்!
 M.M.SENTHIL

வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது
 ayyasamy ram

மனசு சஞ்சலப்படுகிறதா?
 ayyasamy ram

காமராஜரின் (தலைமை) குணாதிசயங்கள்!
 M.M.SENTHIL

இன்று (நவ.19) சர்வதேச ஆண்கள் தினம்
 T.N.Balasubramanian

எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு!!!
 krishnaamma

ஒரு சுவாரஸ்யமான குடும்பக் கதை
 krishnaamma

குழந்தை கேட்டது சரியா, தவறா..?
 krishnaamma

சில வார்த்தைகள்
 krishnaamma

இவளை பாருங்கள் :)
 krishnaamma

சச்சின் டெண்டுல்கரின் சுய சரிதை - பிளே இட் மை வே
 ayyasamy ram

வெந்தய குழம்பு
 krishnaamma

ரமணியின் கவிதைகள்
 ayyasamy ram

நகைச்சுவை துணுக்குகள்
 krishnaamma

வேலன்:-பிடிஎப் பைல்களை பாதுகாக்க
 velang

Eegarai Network

கற்றாழை மருத்துவ குணம்

View previous topic View next topic Go down

கற்றாழை மருத்துவ குணம்

Post by இரா.பகவதி on Sun Jul 31, 2011 7:46 pm

கற்றாழை இயற்கை நமக்கு கொடுத்த கொடை என்றால் மிகையாகது.
நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு இயற்கை பல மருந்து தன்மை கொண்ட பொருட்களை நமக்கு இலவசமாகவே கொடுத்துள்ளது.கிராமப்புறங்களில் எடுத்துக்கொண்டால் கற்றாழை பல இடங்களில் கிடைக்கும். இயற்கையாக வளரும் கற்றாழையில் பல மருத்துவக் குணங்கள் உள்ளன.
கற்றாழை உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் காஸ்மெட்டிக் பொருள் உற்பத்தியிலும், மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சோற்றுக் கற்றாழை மடல்களப் பிளந்த நுங்குச் சுளை போல உள்ள சதைப் பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நல் தண்ணீரில் 7- 10 முறை நன்றாகக் கழுவி எடுத்துக் கொண்டு மருந்தாகப் பயன்படுத்த வேண்டும்.
கற்றாழையைக் கையால் தொட்டால் வாய் கசக்கும் என்பார்கள். கழுவிச் சுத்தம் செய்தால் கற்றாழையின் வெறுட்டல் குணமும், கசப்பும் குறைந்துவிடும்.

கூந்தல் வளர: சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியைச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது படிக்காரத் தூளைத் தூவி வைத்தால் சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும்.
இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும். நல்ல தூக்கம் வரும்.
கண்களில் அடிபட்டால்: கண்களில் அடிபட்டாலோ இதர காரணங்களாலோ கண் சிவந்து வீங்கியிருந்தால் கற்றாழைச் சோற்றை வைத்துக் கட்டி இரவு தூங்கினால் வேதனை குறையும். மூன்று தினங்களில் நோய் குணமாகும்.
கற்றாழைச் சோற்றில் சிறிது படிக்காரத்தூள் சேர்த்து ஒரு துணியில் முடிச்சுக் கட்டி தொங்க விட்டு ஒரு பாத்திரத்தை வைத்து நீர்சொட்டுவதைச் சேகரம் செய்து எடுத்துக் கொண்டு இதைச் சொட்டு மருந்தாக கண்களில் விட்டு வந்தால் கண்நோய்கள், கண்களில் அரிப்பு, கண் சிவப்பு மாறும்.
குளிர்ச்சி தரும் குளியலுக்கு: மூலிகைக் குளியல் எண்ணெய் தயாரிக்க சோற்றுக் கற்றாழை சோற்றுப் பகுதியை எடுத்து அதில் நல்லெண்ணெய் சேர்த்து கடும் வெயிலில் 30 தினங்கள் வைத்து எடுத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். எண்ணெய் பசுமை நிறமாக மாறிவிடும்.
இதில் தேவையான வாசனையைக் கலந்து வைத்துக் கொண்டு குளியலுக்குப் பயன்படுத்தினால் குளிர்ச்சி தரும் எண்ணெய் ஆகும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள்: தழும்புகள், வெயில் பாதிப்புகள், உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் உடனடி மருத்துவர் கற்றாழைச் சாறுதான்.
இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
தோல் பளபளக்க: கற்றாழையை பச்சை மஞ்சளோடு சேர்த்து மைய அரைத்து முகம் கழுத்து கை கால்களில் தடவி சில மணி நேரத்துக்குப் பின்னர் வெந்தய நுரை கொண்டு தேய்த்து குளித்தால் உடல் பளபளப்பாகும். தோல் நோய் வராது.
கற்றாழையை தலை முடியில் தடவி சீவினால் மடி கலையாது. தலையின் சூடும் குறையும். உடல் குளிர்ந்து காணப்படும்.
கண்நோய்: கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
தோல் இறுக்கத்திற்கு: கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.
சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது.
[b]

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 6972
மதிப்பீடுகள்: 979

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கற்றாழை மருத்துவ குணம்

Post by மஞ்சுபாஷிணி on Sun Jul 31, 2011 8:42 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பகவதி...

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 9997
மதிப்பீடுகள்: 874

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கற்றாழை மருத்துவ குணம்

Post by இரா.பகவதி on Sun Jul 31, 2011 9:25 pm

வரவேற்கிந்த்றேன் அக்கா

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 6972
மதிப்பீடுகள்: 979

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கற்றாழை மருத்துவ குணம்

Post by கலைவேந்தன் on Mon Aug 01, 2011 12:15 am

நீரிழிவுக்கு ( சர்க்கரை வியாதிக்கு ) கற்றாழை சிறந்த மருந்து என்று கூறுவது உண்மையா என்று யாராவது தெரியபப்டுத்தவும்.

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 13411
மதிப்பீடுகள்: 651

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கற்றாழை மருத்துவ குணம்

Post by இரா.பகவதி on Sun Sep 18, 2011 10:56 pm

நீரழிவுநோய்க்கு பாகற்காய் உணவில் சேர்த்து கொள்ளுதல் மற்றும் அதன் இலையை அரைத்து சாறாக குடித்தல் நல்லது

இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள்: 6972
மதிப்பீடுகள்: 979

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கற்றாழை மருத்துவ குணம்

Post by பிரசன்னா on Sun Sep 18, 2011 10:59 pm

தகவலுக்கு நன்றி - நல்ல பதிவு ...

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 5600
மதிப்பீடுகள்: 830

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum