ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 M.Jagadeesan

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?

View previous topic View next topic Go down

ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?

Post by பாலாஜி on Thu Aug 04, 2011 10:15 pm

கமல்ஹாசன் நடித்த திரைப்படம் பார்த்து நீண்ட நாட்களாகிறது. கமல் தமிழ் சினிமாவின் தவிர்க்க இயலாத ஆளுமை. தமிழின் சிறந்த பத்து திரைப்படங்களின் பட்டியலை தயா‌ரித்தால் கமல் நடித்த மூன்று படங்களேனும் அதில் இடம்பெறும். நடிகன் ஒரு முகம். திரைக்கதையாசி‌ரியர் இன்னொரு முகம். தேவர் மகனின் திரைக்கதை தமிழின் ஆகச் சிறந்த திரைக்கதைகளில் ஒன்று. இயக்குனராக ஹேராம், விருமாண்டி. பாடகர், பாடலாசி‌ரியர், நடன இயக்குனர், தயா‌ரிப்பாளர் என்று உதி‌ரி முகங்கள் பல.

சினிமா ஒரு விஞ்ஞான தொழில்நுட்பமும்கூட என்பதை அறிந்து அதற்கேற்ப தகவமைத்துக் கொள்வதில் கமல்ஹாசன் முன்னோடி. அவர் ஆளுமை செலுத்த தொடங்கிய பிறகு தமிழில் அறிமுகமான நவீன தொழில்நுட்பங்களில் அறுபது சதவீதம் அவர் வழியாக தமிழ்‌த் திரையுலகை வந்தடைந்ததே. தொலைக்காட்சியால் சினிமாவுக்கு பாதிப்பு என்று அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தொலைக்காட்சிக்கு நடிகர், நடிகைகள் பேட்டியளிக்க தடை விதித்த போது அதனை துணிந்து உடைத்தவர் கமல். தொலைக்காட்சி அறிவியல் கண்டுபிடிப்பு. அறிவியலுக்கு அணை போட முடியாது என்று அன்று அவர் சொன்னது இன்று உண்மையாகியிருக்கிறது. தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை நம்பியே இன்று பல படங்கள் தயா‌ரிக்கப்படுகின்றன.

கமலின் குணா ஒரு மைல் கல். இன்றும் அதன் நினைவுகளில் தோய்ந்து போகிற ரசிகனை காணலாம். நிதி நிறுவன மோசடி தமிழகத்தை உலுக்குவதற்கு முன்பு வெளியானது மகாநதி. 786 நம்பர் சட்டையணிந்த நாயகன் ஆடிப் பாடும் இடமாக இருந்த சிறைச்சாலையை அதன் உண்மை குரூரத்தோடு முன் வைத்த முதல் தமிழ் சினிமா மகாநதி. தீவிரவாதிகள் ஜனங்களை காரணமின்றி கொன்றழிப்பவர்கள் என்ற ஒற்றைப்படையான விமர்சனத்தை உருவினால் குருதிப்புனல் ஓர் அற்புதம்.

யார் காதிலும் பூ சுற்றும் சகலகலா வல்லவன் ரசனையில் இருந்த ரசிகனை ரசனையின் அடுத்தடுத்த படிகளில் குணாவும், மகாநதியும், குருதிப்புனலும் ஏற்றிவிட்டன.

இன்று கமல் ரசிகன் அவர் உயர்த்திவிட்ட ரசனையின் மேல் படிகளில் ஒன்றில் அமர்ந்திருக்கிறான். அவனை அதற்கு மேலும் உயரச் செய்ய வேண்டிய கமலின் படங்கள் எப்படி இருக்கின்றன? அவரது ரசிகனின் ரசனைக்கு தீனி போடும் வகையில் அவை அமைந்திருக்கின்றனவா?

உறுதியாகவும், வெளிப்படையாகவும் கூறுவதென்றால்... இல்லை.

அன்பே சிவம், விருமாண்டி தவிர்த்து ஆரோக்கியமான முயற்சி எதுவும் கமலிடமிருந்து கடந்த சில ஆண்டுகளாக வரவில்லை. கிடைத்ததெல்லாம் தசாவதாரம், மன்மதன் அம்பு போன்றவையே. சகலகலா வல்லவன் ரசனைக்கு ரசிகனை கமலின் படங்களே மீண்டும் கீழிறக்குவது என்பது எவ்வளவு பெ‌ரிய துயரம்? நடமாடும் பல்கலைக்கழகம் என்று வர்ணிக்கப்படும் ஒரு கலைஞனுக்கு இந்த சறுக்கல் ஏன் நிகழ்கிறது?

கமல்தான் கமலின் பிரச்சனை. கமல் சிறந்த நடிகர். கூடவே வெற்றி பெற்ற ஹீரோ. நடிகனுக்கும், ஹீரோவுக்குமான மோதல் அவரது அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இயக்குனர் கமலுக்கு ஹீரோ கமல் ஒருபோதும் அடங்குவதில்லை. அன்பே சிவத்தில் வரும் காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் ஹீரோ கமலை திருப்திப்படுத்த புனையப்பட்டவை. அப்படத்தின் பண்படாத காட்சிகளும் இவைதான். விருமாண்டியின் அனைத்து கதாபாத்திரங்களும் மண் சார்ந்த துலக்கத்துடன் இருக்க கமலின் கதாபாத்திரம் மட்டும் ஒட்டுச் செடியாக விலகி நிற்கும்.

ஹீரோ கமலே பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்துகிறவராக இருக்கிறார். சக ஹீரோவான ர‌ஜினியே இவ‌ரின் இலக்கு. ஹீரோக்களின் ஈகோ கலெக்சனை முன்னிறுத்தியது. சிவா‌ஜியின் கலெக்சனை முந்துவதற்காக உருவானது தசாவதாரம். எந்திரனுக்கு போட்டியாக விஸ்வரூபம் அமைந்துவிடக் கூடாது என்பதே ரசிகர்களின் பிரார்த்தனை. கமலின் போட்டி ர‌ஜினி அல்ல. வேண்டுமானால் அமீர்கானை சொல்லலாம். தயா‌ரிப்பாளர் கமலுக்கு போட்டி டோபி காட், பீப்லி லைவ். இயக்குனர் மற்றும் நடிகர் கமலுக்கு போட்டி தாரே ஜமின் பர். நிச்சயமாக சிவா‌ஜியோ, எந்திரனோ அல்ல.

நடிகர் கமலே ரசிகர்களின் இன்றைய தேவை. பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாலசந்த‌ரிடம் தன்னை முழுதாக கையளித்தது போல் இளம் இயக்குனர்களிடம் கமல் தன்னை ஒப்படைக்க வேண்டும். இந்த கையளித்தல் குறுக்கீடுகள் அற்றதாக இருத்தல் அவசியம்.

இயக்குனர் கமல் திறமையானவர். ஹீரோ கமலைத் தவிர எவரையும் திறம்பட வேலை வாங்கக் கூடியவர். விருமாண்டி கொத்தாளத் தேவன் பசுபதியையும், பேய்க்காமன் சண்முகராஜனையும் எப்படி மறப்பது? இந்த இரு நடிகர்களின் உச்சமாக இன்றும் விருமாண்டியே இருக்கிறது. இயக்குனர் கமல் ஹீரோ கமலை இயக்காமலிருப்பது உசிதம். அப்படி நிகழும் போதெல்லாம் இயக்குனரும், ஹீரோவும் எல்லைக் கோட்டருகே வெற்றியை தவறவிட்டு ஒருசேர தோற்றுப் போகிறார்கள். ஹேராமில் அதுதான் நடந்தது. விருமாண்டியில் அது உறுதிப்பட்டது.

பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், மைனா, ஆரண்யகாண்டம் போன்ற ஒரு முயற்சியையே கமலிடம் ரசிகன் எதிர்பார்க்கிறான். யா‌ரிடமும் சினிமா கற்காத ஒரு அறிமுக இயக்குனரால் ஆரண்யகாண்டம் என்ற அற்புதத்தை தர இயலும் போது உலக சினிமாவை கரைத்துக் குடித்த ஐம்பது வருட அனுபவம் உள்ள கமலால் அது ஏன் சாத்தியமாகாமல் போகிறது?

சிவா‌ஜி கணேசன் குறித்து பேசும்போது நாசர் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார். சிவா‌ஜி ஒரு சிங்கம். அவருக்கு தயிர் சாதம் கொடுத்தே கொன்றுவிட்டோம். வெறும் அழுக்காச்சி படங்களில் அவரை வீணடித்ததை இப்படி வேதனையுடன் குறிப்பிட்டார். கமலும் ஒரு சிங்கம். தசாவதாரம், மன்மதன் அம்பு என்று தொடர்ந்து அவர் தயிர் சாதம் உண்பதை‌க் காண சகிக்கவில்லை. மகாநதி, குருதிப்புனல் என்று கறி சோறு உண்பது எப்போது?

கமல் சார்... ரசிகன் காத்திருக்கிறான்.

நன்றி - வெப் துனியாhttp://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?

Post by அப்துல்லாஹ் on Thu Aug 04, 2011 10:27 pm

உண்மை தான் இது எல்லோர் மனதிலும் உள்ள ஒரு பேராசை தான். சரியான நேரத்தில் வெளிப்பட்டிருக்கிறது கட்டுரையாக,
சட்டென்று கிளப்பி கியரைப்போட்டால் ஒரு அன்பே சிவம் ஒரு ஹேராம் விருமாண்டி அபூர்வ சகோதரர்கள் மைக்கேல் மதன ....
தாகமாய் இருக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு படம் பாக்க ஆசையா யிருக்கு கமல் தாங்க...
ஒரு ரசிகனின் ஆசையை சரியான நேரத்தில் சரியான படைப்பைத் தந்து பூர்த்தி செய்வது ஒரு திறமையான கலைஞனின் கடமையல்லவா....
avatar
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1414
மதிப்பீடுகள் : 204

View user profile http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Re: ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?

Post by திவா on Thu Aug 04, 2011 10:36 pm

உண்மை கட்டுரை ... சியர்ஸ்
avatar
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2645
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

Re: ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?

Post by அருண் on Fri Aug 05, 2011 1:05 am

கமலுக்கு நடிப்பு கூடவே பிறந்ததாகும் அவர் ரசிகர்களை திருப்தி படுத்துவார்..! சூப்பருங்க
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ரசிகர்கள் எதிர்பார்ப்பு... பூர்த்தி செய்வாரா கமல்ஹாசன்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum