புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
45 Posts - 58%
heezulia
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
24 Posts - 31%
mohamed nizamudeen
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 3%
cordiac
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
Geethmuru
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%
Barushree
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
172 Posts - 55%
heezulia
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
107 Posts - 34%
T.N.Balasubramanian
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 0%
cordiac
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 0%
JGNANASEHAR
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 0%
Geethmuru
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_m10கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பத்திற்கான அறிகுறிகள்


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Aug 16, 2011 12:49 pm

1. கர்ப்பத்திற்கான அறிகுறிகள் :

திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு
எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான். . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி
செய்வது எப்படி? எந்த மாதிரியான அறிகுறிகள் அந்தநேரத்தில் தோன்றும்? என்பது
பற்றி பார்ப்போம்.

ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல்
நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை
நோக்கி நகர்ந்து வருகிறது.

கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Female-ancestor-2
கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.

இவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில
அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான்
கருப்பையுடன் கரு பதியமாகும்.

இத்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :

* மாத விலக்கு தள்ளிப்போகுதல்

* குமட்டல்

* இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

* புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்

* வாசனையைக் கண்டால் நெடி

* மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக
நரம்புகள் புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்

* மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு

* புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை

- குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கர்ப்பத்திற்கான அறிகுறிகள் 05-08-fetalgrowth
முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில்
குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும்,
கை-கால்களும் உருவாகின்றன.

இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே
எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.

மேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில்
வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது
அவசியம்.

கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்…


1. மாதவிலக்கு நிற்பது:



கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு
மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல்
மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில்
கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.

இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும்.
குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல்,
டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற
மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை
வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

நோய் என எடுத்துக்கொண்டால், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக்
குறைபாடுகள், உடல்பருமன், அனோரெக்சியா நெர்வோசா என்ற நரம்புத் தளர்ச்சி
நோய் போன்றவற்றால் மாதவிலக்குதள்ளிப்போகலாம். ஆகவே, மாதவிலக்கு நிற்பதை
மட்டுமே கவனத்தில் எடுத்துக்கொண்டு கருத்தரிப்பை உறுதி செய்ய இயலாது.


2. களைப்பு:



பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான
உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை
உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும்.
சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு
மிக விரைவாகவும் தெரியும்.


3. மசக்கை:



இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத்
கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த
குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு.
பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம்.
மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம்
தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.

சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ
குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே
இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும்
வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும்.
மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை
மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ
தோன்றும்.

அதுசரி… இந்த மசக்கை ஏன் வருகிறது தெரியுமா?

கருமுட்டையும், உயிரணுவும் சேர்ந்து கருவானவுடன், முட்டையை வெளியிட்ட
கருவணுக்கூடு ஈஸ்டரோஜென் ஹார்மோனை அதிகமாகச் சுரக்கும். இதன் காரணமாகவே
இத்தகைய குமட்டலும், வாந்தியும் தோன்றுகின்றன. இதனால் ஏற்படும் சோர்வின்
காரணமாக இரைப்பையின் இயக்கம் குறைந்து உணவுப் பொருட்கள் நெஞ்சில்
நிற்கின்றன. இதனால் உணவுப் பொருட்களைச் சாப்பிட்டாமல்
தவிர்க்கவேண்டியிருக்கும். அப்படி இருந்தும் மசக்கை இருக்கும்போது பெண்கள்
மாங்காய் தின்ன ஆசைப்படுவதும், மண்ணையும், அடுப்புக்கரியையும், சாம்பலையும்
தின்பதை வழக்கமாகக் கொள்வதும் நடக்கிறது.

இதற்கு காரணம் என்ன?

இந்த காலத்தில் தனக்கு மட்டுமின்றி, தனது கருக்குழந்தைக்கு தேவையான
சத்தையும் தாய் பெற வேண்டியுள்ளது. இதனால் உணவு முறையில் மாற்றம் ஏற்பட்டு
கருத்தரித்த ஆரம்ப காலத்தில் சிலருக்கு அதிகப் பசி உணர்வும், பலருக்கு
பசியின்மையும் உண்டாகும்.



4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்:



சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும்
கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில்
தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின்
இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை
அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த
நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து
மறைந்து விடும்.


5. மார்பகப் பகுதி மாற்றங்கள்:


முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள்
உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும்
பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக்
காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால்
போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.

கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள்
ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக
மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல்
போய்விடுகிறது.



6. மனநிலை மற்றும் எடையில் மாற்றம்:


சில பெண்கள் கர்ப்பம் தரித்த ஆரம்பக் காலத்தில் மிகவும் கவலை மற்றும்
துக்கம் நிறைந்தவர்களாகவோ, எதையோ இழந்தவர்களைப் போலவோ காணப்படுகிறார்கள்.
சிலருக்கு இதனால் தாங்க முடியாத தலைவலி, குறிப்பாக ஒற்றைத் தலைவலி
உண்டாகும். கர்ப்பிணிகளுக்கு இந்தக் காலத்தில் உடல் எடை அதிகரிக்கும்.
இல்லாவிட்டால் குறையக்கூடும்.

கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Pregnancy_1



7. வயிறு பெரிதாகுதல்:



கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல்
வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள்
போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த
அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.

கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.

இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும்
இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது
அவசியம்.

அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.

பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன்
மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில்
கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர்
பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே
கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.



அந்த பரிசோதனை முறைகள் :



1. சிறுநீர்ப் பரிசோதனை:

கர்ப்பத்திற்கான அறிகுறிகள் 424465
இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த
பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும்.
காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில்
பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட
பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு
பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து
கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.



2. ஹார்மோன் பரிசோதனை:



இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன்
கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம்.
காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை
செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண்
கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண்
கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர்
கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும்
வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை
முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.



3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை:

மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா
இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது
வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து
கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற
அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள்
அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள்.



4. கரு நெளிவுப் பரிசோதனை:
கர்ப்பத்திற்கான அறிகுறிகள் P-2d
கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்த பிறகு, நான்காவது மாத வாக்கில் கருவானது
தாயின் அடிவயிற்றில் ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு கரு நெளிவு
அல்லது `குயிக்கனிங் டெஸ்ட்’ என்று பெயர். இதைக்கொண்டு குழந்தை எப்போதும்
பிறக்கும் என்பதை மருத்துவர்கள் தெளிவாகக் கூறுவார்கள். கருவின் அசைவை
பிறப்புறுப்பினுள் கையை வைத்துப் பார்த்தல், வயிற்றின் மீது கையை வைத்துப்
பார்த்தால் ஆகிய முறைகளிலும் கண்டறிய இயலும்.

இதுபோன்ற வேறு பல பரிசோதனை முறைகளையும் மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 16, 2011 1:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Aug 16, 2011 3:09 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Tue Aug 16, 2011 4:37 pm

மகிழ்ச்சி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

கர்ப்பத்திற்கான அறிகுறிகள் Jjji
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 16, 2011 4:47 pm

சூப்பருங்க சூப்பருங்க



thiva
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Aug 16, 2011 4:54 pm

கர்ப்பத்திற்கான அறிகுறிகள் 678642 கர்ப்பத்திற்கான அறிகுறிகள் 678642 கர்ப்பத்திற்கான அறிகுறிகள் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக