ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

ஒரு சந்தேகம்??
 மூர்த்தி

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

புதிய சமயங்கள்
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 T.N.Balasubramanian

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!

View previous topic View next topic Go down

தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!

Post by Admin on Wed Aug 24, 2011 11:22 pm

மீண்டும் ஒருதரம் என்னை வேறுவழியில்லாமல் தெய்வத்திருமகள் பார்க்க வைத்துவிட்டார்கள் - பேரூந்தில்! I am Sam திரைப்படம் பார்த்தவர்களால் நிச்சயம் தெய்வத்திருமகளைச் சகிக்க முடியாது - நிலா தவிர்த்து!

எனது I am Sam திரைப்படம் பற்றிய பதிவின்போது இதை தமிழில் தழுவும்போது கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இன்ஸ்பிரேசன்னு I am Sam படத்தைக் குறிப்பிடலாம்னு எழுதியிருந்தேன்.

சில அன்பர்கள் சொன்னார்கள், 'நன்றின்னு டைட்டில்ல சொன்னா ஒரிஜினலா படமெடுத்த கம்பெனிக்கு பெருந்தொகையைக் கொடுக்கவேண்டி வரும் அது சாத்தியமில்லை என்பதால்.....

ஆடுகளம் பட டைட்டிலில் வெற்றிமாறன் இன்ஸ்பிரேஷன்னு ஒரு லிஸ்டே கொடுத்தார் - அந்தப் படத் தயாரிப்பாளர்களெல்லாம் அவர் வீட்டுக் கதவைத் தட்டுவதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை!

ஆனால் ஆடுகளத்தில் எந்த சீனும் அப்பட்டமான காப்பி கிடையாது! ஆரம்பத்தில் வரும் ஒரு துரத்தல் சீன் மட்டும் City of God ஐ ஞாபகப்படுத்தியது அதுபோல சிலவே! ஆனால் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் மட்டும் தனது வழக்கப்படி காப்பி பேஸ்ட்டில் அசத்தியிருந்தார்!

ஆனால் காட்சிக்குக் காட்சி அப்பட்டமாக மிக மோசமான முறையில் காப்பி அடித்து வந்திருக்கும் படம் தெய்வத்திருமகள்!

ஹாலிவுட் படங்களில் மனசை டச் பண்ணும் செண்டிமென்டலான சீன்கள் நிறைய வரும். அது ஒரு கணத்தில் உறுத்தாமல், இயல்பாகக் கடந்துசெல்லும். அனால் அதைத் தமிழ்ப்படுத்துவாங்க பாருங்க....அந்த சீனை ஸ்லோ மோஷனில் இழு....த்து, பயங்கரமான பின்னணி இசை கொடுத்து!

கமல் தனது படங்களில் ஒரு சிறு சீனை ஹாலிவுட் இலிருந்து பயன்படுத்தினால்கூட அதைக் கண்டுபிடித்து குய்யோ முறையோ என அலறுபவர்கள்கூட தெய்வத் திருட்டுமகளை ஆதரிக்கிறார்கள் என்பது ஆச்சரியமே!

அதற்கு முக்கிய காரணம் நிலா மட்டுமே! நிலா - நிச்சயம் தமிழ்சினிமாவின் புதுமுயற்சிதான்!

இப்படி ஒரு குழந்தையை நாங்கள் கண்டதில்லை! நிலா அளவுக்கு I am Sam லூசி நிச்சயம் கவர மாட்டாள். காரணம் அவள் ஒரு வழமையான ஹாலிவுட் குழந்தை அவ்வளவே! அதாவது ஹாலிவுட் படங்களில் குழந்தைகள் எப்போதும் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். தமிழ்சினிமாவின் வழக்கம் போன்ற தத்துவஞானிகளாகவோ,அதிகப்பிரசங்கிகளாகவோ அல்லது மணிரத்தினத்தின் 'பயங்கரவாதிகளாகவோ' இருப்பதில்லை.

நானும் நிலாவை ரசிக்கலாம் என்றால் விக்ரமின் தொல்லையைச் சகிக்க முடியவில்லை. Sam இன் வாயசைவையும், ஹெயார் ஸ்டைலையும் அப்படியே காப்பி பண்ணிய விக்ரம் அடிஷனலா மனிதர் மழலைக்குரலில், இன்ஸ்டால்மென்டில் கதைத்து 'வித்தியாசமான நடிப்பில்' எரிச்சலூட்டுகிறார்.

உண்மையில் I am Sam படத்தை பார்த்தவர்களால் விக்ரமின் ஓவர் ஆக்டிங்கை சகிக்கவே முடியாது. இந்த நடிப்புக்குத்தான் இப்பவே பலர் தேசிய விருதை ரிசர்வ் பண்ணி வைத்திருகிறார்கள்!


I am Sam இல் சாமுக்கு அவனைப்போலவே நான்கு தோழர்கள்! அவர்களின் பேச்சும், நடிப்பும் மிக அழகானவை! அதில் ஒருவர் மிக சீரியசான (அவரளவில்) பேர்வழி! அவர் கோட் சீனில் சாம் பேசும்போது படு சீரியஸாக சொல்வார். 'சாம்
எதையும் நன்றாய் யோசித்துப் பேசு! நீ பேசுவதெல்லாம் பதிவு செய்யப்படுகிறது!' - நீதிமன்ற டைப்பிஸ்டைக் காட்டிச் சொல்வார்!

தெய்வத்திருமகளிலும் விக்ரமுக்கு நான்கு தோழர்கள். அபத்தமாக, வேற்றுக்கிரக ஜந்துகள்போல காட்டியிருப்பார் விஜய் - இவர்களுக்கு விக்ரம் எவ்வளவோ தேவல எனும்படியாக!


ஒரு படத்தைக் காப்பி அடிப்பதுகூட பிரச்சினையில்லை ஆனால் என்னமோ தாங்களே உட்கார்ந்து யோசித்ததாக டீ.வி.க்களில் அலப்பறை குடுப்பாங்க பாருங்க அதைத்தான் தாங்க முடிவதில்லை. இதைத்தவிர்த்தாலே சந்தோஷம் என்று ஒருவருக்கு பின்னூட்டம் போட்டிருந்தேன்.

ஆனா வழக்கம் போலவே...
படம் எடுக்க முடிவு பண்ணியதும்
சார் ஆறுமாசமா (டைரக்கர்) தூங்கல!
சார் குளிக்கல! சார் பல்லு வெளக்கல!
சார் கழிவறைக்குப் போனாக்கூட பேப்பர், பேனாவோட போன வேலைய மறந்து கதைதான் எழுதினாரு!
அலப்பறையை ஆரம்பிச்சுட்டாங்க!

இன்னொரு பக்கம் விக்ரம் சார் ஒரு மாசமா மனவளர்ச்சி குன்றிய சிறுவர்களோட தங்கி நடிப்புப் பயிற்சி எடுத்தாராம்! - ஏன் I am Sam DVD யே போதுமே!

எனக்கு விக்ரமின் நடிப்பு பிடிக்கும், அவரின் உழைப்பின் மேல் மரியாதையுண்டு! பட் யு நோ விக்ரம் சார்...நீங்க திரைக்கு வெளியே நிஜத்தில் 'பீட்டர்' விடும் நடிப்பு சுத்தமாக ரசிக்க முடிவதில்லை!

கொஞ்சமாவது நேர்மை இருந்தால் அடுத்தவர்களின் உழைப்பைத் திருடிவிட்டு இப்படி 'கெத்'தாகப் பேச முடியுமா? ஒருபடத்தை எடுக்கமுன் ஹாலிவுட் இல் கதைக்காக, ஸ்கிரிப்ட்டுக்காக அவர்களின் உழைப்பு அசுரத்தனமானது! படை பரிவாரங்களோடு ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் நின்று scene யோசிக்கும் கேணத்தனங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை!

அப்படியிருக்க I am Sam போன்ற ஒரு சிக்கலான திரைப்படத்துக்கு அவர்கள் உழைத்திருப்பார்கள். அவ்வளவு உழைப்பையும் ஒரு DVD மூலம் திருடிவிட்டு Sean Penn ஐத் தாண்டியும் விடுகிறார் விக்ரம்! ஏற்கெனவே ஹாலிவுட் திரைப்படங்களை அப்படியே காப்பி பண்ணி, அவங்ககிட்டயே கிராபிக்ஸ் செய்து எந்திரனில் ஷங்கர் ஹாலிவுட்டைத் தாண்டியிருந்ததாகச் சிலர் பெருமைப்பட்டார்கள்! எப்படித்தான் முடியுதோ?

உண்மையில் விக்ரமும், விஜய்யும் எத்தனை தரம் I am Sam DVD யைத் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பார்கள் என்பது அவர்களின் மனச்சாட்சிக்குத்தான் தெரியும்!

அஜீத்தின் 'மங்காத்தா',விஜய்யின் 'யோஹன்' கூட ஹாலிவுட் படங்களின் காப்பி என்று சொல்லப்பட்டாலும் அதில் கண்டுகொள்ள ஏதுமில்லை. ஏனெனில் அவை தமிழ்சினிமாவின் மைல்கல்லாகவோ, மிகச்சிறந்த படைப்புகளாகவோ யாரும் பிரச்சாரம் செய்யவோ, தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடப் போவதோ இல்லை.

ஒருசிறுகதையை மிக அற்புதமாக படமாக்கிய ஒரு எழுத்தாளர், இயக்குனர் ஆகியோரின் சொந்த முயற்சியான, நேர்மையான படைப்பான 'அழகர்சாமியின் குதிரை' என்னமாதிரியான வரவேற்பைப் பெற்றது? எத்தனைபேரைச் சென்றடைந்தது எனத் தெரியவில்லை!

திருட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பு உண்மையான உழைப்புக்கும், நேர்மையான படைப்புகளுக்கும் கிடைகிறதா என்பது யோசிக்கவேண்டிய விஷயம்!

http://umajee.blogspot.com/2011/08/blog-post.html
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!

Post by உதயசுதா on Thu Aug 25, 2011 10:18 am

நல்ல வேலை நான் படத்த பார்க்கலாம் என்று நினைத்தேன்.அப்பாடா தப்பிச்சுட்டேன்.நன்றி திரு அட்மின்.அவர்களே
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!

Post by ரேவதி on Thu Aug 25, 2011 10:20 am

இருந்தாலும் அவர்கள் இப்படி ஒரேடிய காப்பி அடிதிருக்க கூடாது அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!

Post by ராஜா on Thu Aug 25, 2011 10:26 am

சரியா சொன்னிங்க அட்மின் , இந்த படத்த ஏண்டா பார்த்தோம்ன்னு இருக்கு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!

Post by ரேவதி on Thu Aug 25, 2011 10:28 am

இதோ அதிஷா எழுதிய விமர்சனம்ஊர்பக்கம் இப்படி சொல்வாங்க.. ஒருத்தன் கஷ்டப்பட்டு நாய்படாத பாடுபட்டு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணுவானாம்.. பக்கத்துவீட்டுக்காரன் ஈஸியா அவள தள்ளிக்கிட்டு போவானாம்! ஊரே ஒன்னு கூடி கல்யாணம் பண்ணவன கையாலாகதவன்னு திட்டுமாம். தள்ளிகிட்டு போனவன கில்லாடிடானு பாராட்டுமாம். அதுமாதிரிதான் இருக்கிறது தமிழ்சினிமா போகிற போக்கு! ஹாலிவுட்லயோ கொரியாவுலயோ ஈரான்லயோ எவனோ கஷ்டப்பட்டு ஒரு படம் எடுப்பானாம் அவனுக்கு நன்றி கூட சொல்லாம கதைய திருடி தமிழ்ல பேர் வச்சு காஸ்ட்யூம் கூட மாத்தாம படம் எடுப்பாய்ங்களாம்! அடடா என்னதான் திருட்டு பொருளா இருந்தாலும் எம்பூட்டு கஷ்டப்பட்டு படம் எடுத்திருக்கான் பாருயா.. அதுக்காக அவன பாராட்டணும்யானு ஒரு கோஷ்டி வேற பீ..பீ னு இதுக்கு ஒத்து ஊதிகிட்டு திரியுமாம். இதுல அந்த ஊர் படத்தையெல்லாம் தமிழ்மக்களுக்கு காட்டணும்ல.. காட்டணும்னா டப்பிங் பண்ணி காட்டுங்களேன்.. அட்லீஸ்ட் நன்றி போட்டாவது காப்பியடிச்சி தொலையறுத்துக்கென்ன கேடு!

பரவால்ல ஏதோ பண்ணிட்டாய்ங்கன்னு விட்டா.. திருட்டு கோஷ்டி ஒன்னா கூடி டிவிக்கு டிவி பேட்டிவேற குடுக்குது.. இந்த படத்துக்கு திரைக்கதை அமைக்க மூணுவருஷம் ரூம்போட்டு யோசிச்சோம் தெரியுமான்றார் படத்தோட இயக்குனரு.. படத்துல பலூன் வாங்கிட்டு போறத கூடவா காப்பியடிப்பாங்க.. இந்த கேரக்டரா நடிக்கறதுக்காக பலநாள் பல குழந்தைகளோட வாழ்ந்தேனு வாய்கூசாம சொல்றாரு படத்தோட ஹீரோ.. ஒரிஜினல் படத்துல வாய உள்ள இழுத்து நடிச்சா டுபாக்கூர்லயும் அப்படியே நடிக்கணுமா.. என்னங்கடா நாடக கம்பெனியா நடத்தறீங்க.. இல்ல தமிழனுங்க பூராப்பயலும் முட்டாப்பயலாகிட்டானா என்ன? இதுக்கும் மேல ஒருபடி போயி விகடன் மாதிரி பத்திரிகைகள் 50 மார்க் குடுத்து பாராட்டி.. இந்த படத்தின் இயக்குனர்தான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளினு பாராட்டறதுக்கெல்லாம் எந்த சுவத்துல போய் முட்டிக்க!

அப்படீனா கஷ்டப்பட்டு யோசிச்சி ஒரு கதை ரெடிபண்ணி அதுக்கு திரைக்கதை எழுதி புரொடீசர் புடிச்சி நாய்பேயா அலைஞ்சு சொந்தமா படம் எடுக்கறவன்லாம் கேனப்பய.. பைஞ்சுரூவாவுக்கு பர்மா பஜார்ல டிவிடி வாங்கி அதை சுட்டு படமா எடுக்கறன் புத்திசாலி! கோடம்பாக்கத்துல ஃபுல் ஸ்கிரிப்டோட புரோடியூசர் கிடைக்கமாட்டாங்களானு தேடி அலையற ஆயிரக்கணக்கான பேரு ஒரிஜினல் ஸ்கிரிப்ட ரெடிபண்ணிவச்சுகிட்டு பைத்தியம் புடிச்சி திரியறான். அவனுக்குலாம் இனிமே என்ன தோணும் மச்சி ஏன் இவ்ளோ கஷ்டபட்டு கதையெல்லாம் யோசிக்கணும் டிவிடிய வாங்கு ஸ்கிரிப்ட்டு ரெடி அதுதான் வொர்க் அவுட் ஆவுது.. அப்பதான் தமிழ்சினிமாவின் விடிவெள்ளியா ஆக முடியும்னு தோணுமா தோணாதா!

ஐயாம் சாம்னு ஒரு படம். அதை எவன் எடுத்தானோ அவன் இந்தப்படத்தை பார்த்தான்னா ரொம்ப சந்தோசப்படுவான். பாதிகதைதான் திருடிருக்காங்க.. மீதிகதை இவங்களே எழுதிட்டாங்க அதுவரைக்கும் சந்தோசம்னு! அந்த பாதிக்கதைதான் படத்தோட சறுக்கலே.. நீட்டி முழக்கி.. ஓவர் சென்டிமென்ட்ட புழிஞ்சி நடுவுல அனுஷ்கா கால்ஷீட் இருக்குனு ஒரு டூயட்ட வேற போட்டு.. ரொம்ப கடுப்பேத்தறாங்க மைலார்ட்.

என்னதான் காப்பி பேஸ்ட்டா இருந்தாலும் படத்தோட ஆறுதலான அம்சம் ஒன்னு மியூசிக். இன்னொன்னு அந்த குட்டிப்பாப்பா! பாப்பா அவ்ளோ அழகுனா மியூசிக் கதறி அழவைக்குது! இரண்டுக்காகவும் இந்த கொடுமைய சகிச்சிகிட்டு பார்க்கலாம்னுதான் தோணுது. ரொம்ப அழகான கதைதான்.. அருமையான நடிப்புதான்.. சூப்பரான காட்சிகள்தான்.. என்ன செய்ய திருட்டுமாங்காவுக்கு ருசியதிகம்தான். ஆனா இது மாங்கா கிடையாதே!

மத்தபடி இதுமாதிரி இன்னமும் தமிழ்சினிமா ரசிகனை ஏமாத்தலாம்ன்ற ஐடியாவ விஜய்மாதிரி டைரக்டர்கள் கைவிடணும். ஏன்னா இப்பலாம் எல்லா தமிழ்சேனல்லயும் ஹாலிவுட் படத்துலருந்து அயல்சினிமா வரைக்கும் தமிழ்ல டப் பண்ணி மக்கள் கதற கதற தினமும் காட்டறாய்ங்க.. மைன்ட் இட்!

இந்த காப்பி பேஸ்ட் படத்துக்கு இதுபோதும்னு நினைக்கிறேன்!
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: தெய்வத் திருட்டுமக்களின் அலப்பறை!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum