புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
12 Posts - 86%
Manimegala
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
130 Posts - 50%
ayyasamy ram
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
95 Posts - 37%
mohamed nizamudeen
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
jairam
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_m10காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்றின் ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு


   
   

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Sep 21, 2009 11:13 pm

First topic message reminder :

உதவிக்கு ஒரு விரலாவது கொடு
(கருணையின் பேரின்பம்)



நாட்டின் மொத்த ஒரு சதவிகிதத்தில், சில இந்துக் குடி மக்களும் வாழும் ஒரு சிறிய அரபு தேசம் ஏமன்!
பதினேழு சதவிகித குடிமக்கள் நாளொன்றிற்கு 1.25-க்கு குறைந்த அமெரிக்க டாலரை மட்டுமே தனிநபர் வருமானமாக கொண்ட ஏழ்மை தேசம்.

தற்கிடையே, 6500 வீடுகள் நூறு மசூதிகளை கொண்ட ஏமனின் தலைநகர் "சன'அ" நோக்கி இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் தரை இறங்கவிருக்கும் மாலனின் விமானத்தில் முதல் வகுப்பு இருக்கையில் ஒன்று வெறுமனே இருக்க, அவர் தூக்கத்தை கெடுக்க 'இதோ வந்தமர்கிறாள் ஒரு தேவதை!

ரு பளபளக்கும் கருப்பங்கியை முகத்திலிருந்து கால் வரை அணிந்து ஏதோ ஒரு தேசத்தின் ராஜகுமாரியை போல ஒரு கம்பீர தோற்றம் கொண்டிருந்தாள் அவள்.

யாருக்கும் தலை வணங்குபவளல்ல நானென்பது போல் 'நிமிர்ந்த மார்பும் நாசி துளைக்கும் அவளுடைய மனமும் மாலனை சற்று விலகி தூரமாக உட்கார வைத்தது.

வள் திரும்பி மாலனை பார்க்கிறாள், எடுத்து வீசிய வாளினை போல் ஆண்களை வெட்டி வீழ்த்தும் காந்த பார்வை அவளுக்கு. மாறனும் சற்று திரும்பி அவளை பார்க்கிறார். மூடிய அவளுடம்பின் அத்தனை அழகையும் அவளுடைய கண்களிரட்டும் பளிச்சென காட்டியது.

சற்றும் எதிர் பாராத குரலில் அவள் -

"ஹாய்..." என்கிறாள்.

"வணக்கம்" என்றார் மாறன்.

"மன்னியுங்கள். விமானத்தில் பலமுறை வாழ்வின் மிகமுக்கியமானவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, எனவே விமான பயணத்தில் நான் உறங்குவதில்லை."

"அப்படியா. நல்லதம்மா.."

"அங்கு அருகில் இருப்பவர் நன்றாக உறங்குகிறார், அதனால் இங்கு வந்தேன். உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே?"

"இல்லை.. இல்லை.."

"நீங்கள் இந்தியர் தானே"

"நிச்சயமாக"

"பிறரை மதித்து வணங்கும் குணம் மிக உயர்வானது, எனக்கு இந்தியரை மிக பிடிக்கும்"

"நல்லதம்மா.."

"நான் அம்மா அல்ல, என் பெயர் மெஹல். பெயர் சொல்லியே அழைக்கலாம்"

"என்னது.. மெஹல்?!!"

"ஆம்! மெஹல் மோனஹ்"

"மிக அழகான பெயர். அரேபியர் எப்போதும் தன் பெயரை மிக நீளமாய் வைத்துக் கொள்வார்களே?"

"உண்மை தான், எங்களின் பரம்பரை பெயர் அதாவது முப்பாட்டனார் பெயர், தகப்பனார் பெயர் எல்லாம் சேந்து வரும். என் முழு பெயர் 'மொஹம்மத் இத்தநென் அப்தல்லா மெஹல் மோனஹ்"

அவள் தன் முழு பெயரையும் நீட்டி முழக்கி இழுத்து சொல்லி முடிக்க மாலன் சிரித்தே விட்டார்.

"பார்த்தீர்களா? சிரிக்கிறீர்களே"

"மன்னிக்கவும். மெஹல் என்பதே அழகான பெயர். நான் அப்படியே அழைக்கலாம் இல்லையா?"

"தாராளமாக. சரி, உங்கள் பெயரென்ன?"

"என் பெயர் மாலன். மாலன் தாண்டவராயன்."

"தாண்டா....??? மலன்...???"

"இல்லை இல்லை.., மீண்டும் சிரித்தார் மாலன். என் பெயரையே மாற்றி விடுவீர்கள் போலிருக்கே! வெறும் மாலன் என்று அழையுங்கள் போதும்"

அவள் மாலனின் ரசிக்கத் தூண்டும் அழகிய முகத்தையே பார்கிறாள்.

"ஏன்..மெஹல்?"

"ஒன்றுமில்லை, உங்களின் சிரிப்பு வசீகரமானது மாலன்"

"நிஜமாகவா?"

"ஆம். அதுசரி, நீங்கள் ஜோர்டானிலிருந்து வருகிறீர்களே; அங்கே என்ன, வேலை செய்கிறீர்களா?"

மாலன் ஜோர்டான் சென்றதற்கும், ஏமன் வருவதற்குமான அத்தனை காரணங்களையும் விரிவாக சொல்லி முடிக்கிறார். விமானம் சற்றேறக்குறைய தரை இறங்கும் நிலையில் உள்ளது.

"மாலன் இத்தனை சொல்கிறீர்கள் ஆனால் உங்களை பார்த்தால் என்னால் நம்பவே முடிய வில்லை"

"அத்தனை தகுதியற்றவன் போல் தெரிகிறேனா நான்?"

"அப்படியில்லை மாலன், மிக சாதாரண தோற்றமென்றும் உங்களை சொல்லிவிட முடியாது தான், ஆனால் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு ஒரு வயோதிகம் தெரியவில்லையே?"

"உண்மையை போதிப்பதற்கு உணர்தலே அவசியம் மெஹல், வயோதிகமல்ல"

"எனக்கு ஆச்சர்யம் வருகிறது மாலன், இத்தனை சின்ன வயதில் உங்களால் எப்படி இந்தளவிற்கு; தெரியவில்ல.."

அவள் முழுதாக வந்ததை பாதியாகவே நிறுத்தினாள்.

"ரு மனிதன் அழும்போது தான் அழுவதாய் ஒரு பதற்றம் வருமாயின்; எங்கோ ஒரு வீடு பற்றி எரிகையில் தன் வீடு எரிவதாய் ஒரு அவஸ்த்தை ஏற்படுமாயின்; மரம் செடி கொடிகள் அசைகையில் அந்த அசைவின் காரணமென்ன என உற்றுப் பார்த்து அவைகளின் மொழியறிய முயற்சித்திருபாய் எனில்; தண்ணீரில் விழுந்த ஒரு எறும்பை கூட காப்பாற்றி தரையில் விட பாடுபட்டிருப்பாயானால்; கடவுளை இந்துக்களின் கோவிலிலும், இஸ்லாமிய மசூதியிலும், கிருஸ்த்துவ தேவாலையத்திலும் வணங்க முடியுமானால்; மனிதரை கடவுள் வாழும் கோவிலென கண்டு மதித்திருப்பாயானால்....., இவைகளை பற்றிப் பேச வயது ஒரு பொருட்டில்லை மெஹல்."

"மிக அருமை மாலன், ஆனால் எனக்கு இத்தனை நீள பதிலுக்கு அவசியமில்லை. நான் உங்களின் முதல் வரியிலேயே நீங்கள் சொல்ல வருவதை புரிந்துக் கொண்டேன்"

"வாய்ப்பு கிடைக்கும் போது சொல்லவேண்டியதை சற்று விரிவாகவே சொல்லி விடுவது என் பழக்கம், காரணம், நீயா நானா என்று ஜெயிப்பதற்கல்ல என் பேச்சு. நம் உரையாடலை இங்கு வேறு யாரும் கூட கேட்கலாமில்லையா, அப்படி ஒருவர் கேட்டால் கூட போதும் அவருக்கென நாளெல்லாம் பேசுவேன். காரணம் நம்மால் ஒருவரை உருவாக்க முடிந்தால் கூட போதும் அந்த ஒருவரால் நாளை நூறு ஆயிரமாகவும் ஆயிரம் கோடியாகவும் மாறலாம்"

"நீங்கள் பேசினால் நிச்சயமாக மாறும் மாலன், சரி.. ஜோர்டான் எப்படி இருந்தது"

"அருமை. அழகான தேசம்"

"ரசித்தீர்களா?"

"மிக ரசித்தேன்"

"எங்கள் தேசம் அழகான தேசம். அப்படி பாதுகாத்திருக்கிறோம் நாங்கள்."

"அப்படியா!!!? உண்மையாகவா!!?" ஒரு ஏளனமான தொனியில் மாலன் கேட்டுவிட..

"ஏன் இப்படியொரு விகல்பமான சிரிப்பு மாலன்?"

"எத்தனை தவறுகளை கண்டேன் தெரியுமா உங்க நாட்டில்?"

"தவறா?!! என்ன பெரிய தரை அப்படி கண்டுவிட்டீர்கள்?"

"சரி, தாரில்லை.. குறை என்று வைத்துக் கொள்ளுங்கள்"

"இருக்கட்டும் இருக்கட்டும்.. என்ன குறை கண்டீர் எங்கள் தேசத்தில்?"

"ஏனித்தனை கோபம் மெஹல்? உங்களுக்கு பிடிக்கவில்லையெனில் அதை பேசுவானேன். வேறு ஏதேனும் பேசுவோம், நீங்கள் சொல்லுங்கள் ஜோர்டானில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"

"பேச்சை மாற்றுவது எனக்கு பிடிக்காது மாலன், சொல்லுங்கள் என்ன குறை கண்டீர்கள் எங்கள் தேசத்தில்?"

"என் தேசத்தில் கண்ட அதே குறை"

"என்ன?"

"இந்தியாவிற்கு வந்திருக்கிறீர்களா?"

"பலமுறை வந்திருக்கிறேன், உங்கள் கிராம மக்கள் வரை சென்று பார்த்திருக்கிறேன்"

"சபாஷ், அங்கு என்ன கண்டீர்கள்?''

"விண்முட்டும் கட்டிடமும்; அருகே, ஒருவேளை சோற்றினை தேடி அலையும் ஓலை கொட்டகை வாசிகளையும் என்றால் ஒப்புக் கொள்வீர்களா மாலன்?''

"அது தான்.., அதுதான் குறை மெஹல். உலகம் நிறைந்த குறை அது தான்.
ஒரு ஊரில் நூறு வீடிருக்கும், அதில் குறைந்தது பத்து வீடுகளாவது ஐம்பது குடும்பத்திற்குரிய வசதிகளை தனித் தனியே கொண்டிருக்கும்; இன்னுமொரு இருபது வீடுகள் பத்து வீடுகளுக்குரிய சொத்துகளையாவது தனித் தனியே வைத்திருக்கும்; இன்னுமொரு முப்பது வீடுகள் நமக்கு போதுமான வசதிகள் தான் வந்து விட்டதே, இனி எவன் எக்கேடு கெட்டாலென்ன என மறந்து விட்டிருக்கும்; மீதமுள்ள நாற்பது வீடுகளின் கதி????????

பசி.. பட்டினி.. கொலை.. கொள்ளை.., உடுத்த ஒரு ஆடை கிடையாது.., உறங்க ஒரு இடம் கிடையாது.., பிள்ளைகளையாவது வேலைக்கு அனுப்பி, தெருவில் திரிந்து.. திரிந்து.. திரிந்து.. அன்றாடங்காய்ச்சிகளாய் அலைவது ஒரு நாட்டின் குறை இல்லையா மெஹல் மொனஹ்?"

"அந்த குறையை போக்க நீங்களென்ன செய்தீர்கள்?"

"நானென்ன செய்திட முடியும் அத்தனை பேருக்கும். அந்த பத்து வீட்டு பணக்காரனோ; இரண்டாவதான இருபது வீட்டு பணக்காரனோ தன் சொத்தில் அரை பாதியை கொடுத்து உதவினால் கூட போதும், ஏழ்மையை என்ன விலை என்று கேட்குமென் தேசம். செய்வார்களா அந்த ஜமீன்தார்கள்? செய்ய மாட்டார்கள். அது தான் நான் எங்குமே காணும் குறை மெஹல்."

"என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவே இல்லையே மாலன்"

"என்ன பதிலை எதிர் பார்கிறீர்கள்?"

"நீங்கள் என்ன செய்தீர்கள் அந்த குறையை போக்க? ஒரு அணுவை அசைத்து வைக்கும் அளவிற்காவது உங்களால் முடிந்ததை நீங்கள் செய்ய முயன்றீர்களா?"

"நானென்ன செய்துவிட முடியும் மெஹல், நானொன்றும் அந்த முதளிரண்டாம் வர்கமில்லையே"

"மூன்றாம் வர்கமென்பது போதாதா? நினைத்தால் எல்லாம் முடியும் மாலன்."

அதற்கு மேல் விமானத்திற்கே பொறுக்கவில்லை. விமானம் தரை இறங்கியது.. இருவரும் சற்று களைந்து மனதிற்குள் ஆயிரம் கேள்விகளையும் பதில்களையும் சுமந்தவர்களாய் பிரிந்து சென்று அவரவர் பெட்டி பொருள்களை எடுத்துக் கொண்டு ஏமனின் விமான நிலையத்திலிருந்து வெளியே வருகிறார்கள்.

"நல்லது மாலன், நிறைய பேசினோம். ஆயினும் ஒரு முடிவிற்கு வர, நேரம் தான் போதவில்லை -சந்திப்போம். ஏதேனும் தவறெனில் மன்னியுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாய் சொல்கிறேன் மாலன், நினைத்தால் எதுவும் முடியும். இதுபோன்ற காரியங்களில் நாம் அதிக நாட்டம் கொள்வதில்லை. நமக்கென்ன பிறர் காரியம் தானே என சென்று விடுகிறோம். என்னால் அப்படி முடியவில்லை மாலன், எனக்கு வலிக்கிறது"

"எனக்கும் வலிக்கிறதென்று பதில் சொல்லி என்னாகும் மெஹல், சந்திப்போம். மன்னிக்க ஒன்றுமில்லை, சிந்திக்க தான் நிறைய இருக்கிறது"

"ஆம் மாலன் சிந்திப்பது மட்டுமல்ல, எப்படி நடைமுறைக்கு கொண்டு வரலாமென்பதற்காகவும், இந்த நம் சமூகத்திற்காய் நம்மை போன்றவர்கள் ஏதேனும் முயற்சி செய்தேயாக வேண்டுமென்பதற்காகவும் மாலன்"

"நினைத்தால் எல்லாம் முடியும் தான், ஆனால் இது மொத்த சமூகத்தின் குற்றம் மெஹல், நான் தனித்து என்ன செய்திட முடியும்? யோசிக்கிறேன்"

"முடியும். முடியும் மாலன். உங்களுக்காக காத்திருக்கிறார்கள். அதோ அவ்விடம் செல்லுங்கள், ஏமனின் வரவேற்பிடம் அது தான். இது என் விலாசம். எத்தனை நாளிங்கு தங்குவதாக உத்தேசம்?"

"ஐந்து நாட்கள் வரை இருப்பேன் மெஹல்"

"நேரம் கிடைத்தால் என்னை மீண்டும் சந்திக்க முடியுமா?"

"நாளைக்கும் மற்ற நாளும் ஓய்வு தான், மூன்றாம் நாளிலிருந்தே கூட்டம் தொடங்க திட்டம் என்றார்கள்"

"அப்படியானால் கண்டிப்பாக என்னை வந்து சந்திக்க முயற்சி செய்யுங்கள் மாலன். உங்களுக்கொரு அதிசியம் காத்துக் கிடக்கிறது. நான் ஏன் சொன்னேன், என்ன செய்திருக்கிறேன், நான் யாராக இருக்கும் மொத்தமும் விரைவில் அறிவீர்கள்.. விடைபெறுகிறேன் மாலன்.."

அவள் மிக மிடுக்காய் பேசி விட்டு அதோ போகிறாள் அவளுக்கென ஒரு ராஜ கூட்டம் வந்து அவளை சூழ்ந்துக் கொள்கிறது...
------------------------------------------------------------------------------------------------------------
ரகசியம் நாளை தெரியும்; காற்று இன்னும் தொடர்ந்து வீசும்...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 5:50 pm

பகுதி -2 வெளிவந்துவிட்டதா? வாழ்த்துக்கள் வித்யா!



காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 6:07 pm

காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 678642 நன்றி சகோ.. நேரம் கிடைக்கும் போது நிதானமாக படியுங்கள். காத்திருக்கிறேன்.

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Tue Sep 22, 2009 7:14 pm

சிந்திப்பது மட்டுமல்ல, எப்படி நடைமுறைக்கு கொண்டு வரலாமென்பதற்காகவும், இந்த நம் சமூகத்திற்காய் நம்மை போன்றவர்கள் ஏதேனும் முயற்சி செய்தேயாக வேண்டுமென்பதற்காகவும்,

நண்பர் வித்யா,
இன்றைக்கு முக்கியமானதை மிகதெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்,கண்டிப்பாக இது இளைஞர்களால் மட்டுமே முடியும்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Tue Sep 22, 2009 7:29 pm

நிச்சயமாக செல்வா, பெரியவர்களின் வழி காட்டல் நமக்கு மிக அவசியம், நிச்சயம் தேவை. அதே நேரம் எந்த சிலையாக வேண்டுமானாலும் வடித்துக் கொள்ள, மன்னிக்கவும், நல்ல சிலையாக வடித்துக் கொள்ள இளைஞர்களென்னும் கலவையே மிக சிறந்தது.

ன் வியர்வையின் ஒரு சொட்டில் நாளைய சமுதாயம் சிலிர்த்து எழ நான் நினைக்கவில்லை, ஒரேஒரு இளைஞன் வேதனையில் மாண்டு விட வேண்டாமே என்று தான் விரல் பிடித்து அழைத்துவர முயற்சிக்கிறேன்!

செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Mon Sep 28, 2009 10:46 pm

வணக்கம் உங்கள் காற்றின் ஓசை இரண்டாம் பாகம் படித்தேன் மிக அருமை அடுத்து என்ன ஆகும் என்ற ஆவலை தூண்டுகிறது வாழ்த்துகள். காற்றின்  ஓசை - இரண்டு - உதவிக்கு ஒரு விரலாவது கொடு - Page 2 677196

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Dec 14, 2009 10:26 pm

"உண்மையை போதிப்பதற்கு உணர்தலே அவசியம் மெஹல், வயோதிகமல்ல"

உண்மையான வரிகள் அண்ணா , உண்மையை போதிக்க மட்டுமல்ல , எந்த செயலை செய்யவும் வயது ஒரே குறையே அல்ல, வயதில் சிறியவரோ பெரியவரோ செய்ய வேண்டிய காரியங்களில் தெளிவு இருக்குமெனில் வயது குறையே அன்று


"நீங்கள் என்ன செய்தீர்கள் அந்த குறையை போக்க? ஒரு அணுவை அசைத்து வைக்கும் அளவிற்காவது உங்களால் முடிந்ததை நீங்கள் செய்ய முயன்றீர்களா?"

இன்றைய இளைய சமுதாயமாகிய நாம் ,பல நேரங்களில் இவற்றை மாற்ற முயல்வது இல்லை ,காரணம் இது பெரிய காரியம் நான் தனித்து நின்று என்ன செய்வேன் என்பதுதான் . ஏன் நம்மால் ஒரு ஏழை சிறுமியின் மானம் காக்க உடை தர முடியுமெனில் அது போதும். ஆரம்பம் மிக சிறிதாயினும் ,விளைவுகள் மிக பெரியதாய் அமையும் ,ஆழம் விதை போல்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக