ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 Dr.S.Soundarapandian

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

ஷேர் மார்க்கெட் A to Z
 Dr.S.Soundarapandian

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine November
 Meeran

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எங்கும் பொங்கும் ஆனந்தம்

View previous topic View next topic Go down

எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by சிவா on Thu Sep 29, 2011 8:29 amகருணைக்கடல் அமிர்தானந்தமயி வீற்றிருக்கும் (கேரளாவில் உள்ள) அமிர்தாபுரியில் எங்கு பார்த்தாலும், `அம்மா' என்ற கோஷம்! அதிகாலையிலே விழிக்கும் அந்த ஊர் பஜனை, ஹோமங்கள், பாடல்கள் என்று பக்திபூர்வமாய் நள்ளிரவு வரை விழித்திருக்கிறது. எங்கும் ஆனந்தம் பொங்குகிறது.

திங்கள், செவ்வாய், வெள்ளி போன்ற நாட்கள் தவிர மற்ற நாட்களில் அம்மா தன்னைத் தேடி வரும் பக்தர்களுக்கு தரிசனம் வழங்குகிறார். 14, 15 மணி நேரம் ஆனாலும் அத்தனை பேரையும் சந்தித்து ஆசி வழங்கும் வரை அவர் எங்கும் எழுந்து செல்வதில்லை. மகிழ்ச்சி, துக்கம் போன்ற அனைத்தையும் பக்தர்கள் அவரிடம் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

அமிர்தானந்த மயியிடம் சில கேள்விகள்:


அம்மாவை எல்லோரும் எதனால் தாயாகப் பார்க்கிறார்கள்?

"அவர்கள் என்னை அம்மா என்று அழைக்கிறார்கள். அதனால் நான் அவர்களை `மக்களே' என்று அழைக்கிறேன். உலகத்திலே ஒரு களங்கம்கூட இல்லாத அன்பு அம்மாவிடம் இருந்துதான் கிடைக்கிறது. அந்த அன்பை அவர்கள் என்னிடம் காண்கிறார்கள் என்று நினைக்கிறேன். எல்லோருடைய மனதிலும் ஒரு குழந்தை உண்டு. அது கள்ளங்கபடமின்றி மனதுக்குள் ஒளிந்துகிடக்கிறது. எல்லா மதங்களும், மற்றவர்களிடம் அன்பு செலுத்துங்கள் என்று சொல்கிறது. நான் அதைத்தான் செய்கிறேன். எந்த உணர்வுக்கும் அதற்குரிய அதிர்வு உண்டு. கோபத்திற்கு ஒரு அதிர்வு. ஒரு தாய் தன் குழந்தையோடு காட்டும் வாஞ்சைக்கு இன்னொரு அதிர்வு. நிபந்தனையற்ற அன்பின் அதிர்வு மனித மனதை சுத்திகரிக்கும். அன்புதான் என் தர்மம்..''

எவ்வளவோ மக்களுடைய கஷ்டங்களை எல்லாம் கேட்கிறீர்கள். அதனால் அம்மாவுக்கு கவலை ஏற்படுவதுண்டா?


"அப்படி நான் கவலைப்பட்டால் அது சரியாக இருக்காது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரும், அவரது குடும்பத்தினரும் வருகிறார்கள். அவர் இன்னும் சில மாதங்களே உயிரோடு இருப்பார் என்பது அவரது குடும்பத்தினருக்கு தெரியும். அந்த கவலை அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளின் முகத்தில் தெரியும் போது அம்மாவின் மனதும் வேதனைப்படும். ஆனால் கவலைப்பட்டுக்கொண்டிருக்காமல், அவருக்கு என்ன உதவி செய்ய முடியும் என்பதை பற்றித்தான் அம்மா அப்போது சிந்திப்பேன். துக்கப்படுகிறவர்களின் வேதனையிலும், மகிழ்ச்சி அடைகிறவர்களின் சந்தோஷத்திலும் நான் பங்குகொள்கிறேன்..''

அம்மா நீங்கள் கனவு காண்பீர்களா?

"உலகம் நன்மை பெறவேண்டும் என்பதுதான் என் கனவு. உலகில் உள்ள எல்லோருக்கும் உணவு கிடைக்கவேண்டும். எல்லோரும் மழையில் நனையாமல் தூங்கவேண்டும். போர் எதுவும் இன்றி அமைதியாக வாழவேண்டும். இதுதான் நான் காணும் கனவு..''

பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கிவிட்டு, மீதமுள்ள நேரங்களில் அம்மா என்ன செய்வீர்கள்?

"சில நாட்கள் அதிகாலை நான்கு மணிக்கு மேலும் தரிசனம் நீளும். பார்க்க வரும் அத்தனை மக்களையும் பார்த்துவிட்டே அம்மா அந்த இருக்கையில் இருந்து எழுவேன். அறைக்குள் நான் செல்லும்போது நூற்றுக்கணக்கில் கடிதங்கள் இருக்கும். எல்லாவற்றையும் நான் வாசிப்பேன். முக்கியமானவைகளுக்கு நானே நேரடியாக பதில் அளிப்பேன். ஒவ்வொரு பொறுப்பாளர்களையும் அழைப்பேன். உப்பு முதல் கற்பூரம் வரையுள்ள எல்லா விஷயங்கள் பற்றியும் பேசுவோம். அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை அம்மாதான் கொடுப்பேன்...''

கடவுளை அம்மா எந்த வடிவத்தில் பார்க்கிறீர்கள்?

"எல்லாம் கடவுள்தான். சிறுவயது முதலே எனக்கு இயற்கைதான் இறைவன். நதியிலும், மரங்களிலும், பிராணிகளிலும் எல்லா உயிர்களிலும் அம்மா இறைவனை பார்க்கிறேன்..''

நூறு வருடங்கள் கழித்து அம்மாவின் அமைப்புகள் எப்படி செயல்படும் என்று சிந்திப்பதுண்டா?

"இல்லை மகனே, அம்மா அப்படி எதுவும் சிந்திப்பதில்லை. எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. சூழ்நிலைகள் வரும்போது அதற்கு தக்கபடி செயல்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, இந்த கிராமத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிறையபேர் இருந்தார்கள். செயற்கை வால்வுகள் பொருத்துவது அப்போது மிக அரிதாக இருந்தது. அன்றைய கூலியைக்கொண்டு சாப்பாட்டை கழிப்பவர்களுக்கு இதய வால்வு வாங்க முடியுமா? அந்த சூழ்நிலையில் அது பற்றிய ஆராய்ச்சியை தொடங்கினோம். ஆஸ்பத்திரி தொடங்கினோம். எல்லா சேவைகளும் அந்தந்த சூழ்நிலைகளை அனுசரித்து தொடங்கப்பட்டவை. அப்படியே புதிய புதிய பாதைகளில் கடந்து சென்றுகொண்டிருக்கிறோம்...''

அடுத்த ஜென்மத்தைப் பற்றி அம்மா சிந்திப்பதுண்டா?

"அதைப் பற்றி அம்மா சிந்திப்பதில்லை. பலவித கலாசாரங்கள், மதங்களைச் சார்ந்தவர்கள் அம்மாவை பார்ப்பதற்கு வருகிறார்கள். அதில் நல்லவர்கள், திருடர்கள் எல்லோரும் இருக்கலாம். அனைவருடைய சுக, துக்கங்களை அம்மா கேட்கிறேன். அவர்களோடு சந்தோஷத்திலும், கண்ணீரிலும் பங்குபெறுகிறேன். இப்போது நிற்கும் இடத்தை சுத்தப்படுத்திவிட்டல்லவா, அடுத்த இடத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும்..''

நல்ல பிள்ளைகளாக வளர அம்மா கூறும் உபதேசம் என்ன?

"எல்லா பிள்ளைகளும் நல்லவர்கள்தான் மகனே! எல்லோரிடத்திலும் நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. இவை இரண்டையும் அடையாளங்காண வேண்டும். பிள்ளைகளுக்கு இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரிவதில்லை. அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும். பொய் சொன்னால் கண்கள் வெடித்துவிடும் என்று குழந்தைகளிடம் நாம் சொல்வதுண்டு. அது சரி என்றால், இந்த உலகத்தில் அனைவரும் பார்வையை இழந்தவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அந்த பயம், குழந்தைகளிடம் பொய் சொல்லாத நிலையை உருவாக்கும். அதுபோல் கடவுளோடு உள்ள பயபக்தி நம்மிடம் தர்ம செயலை வெளிப்படுத்தும்.

வாகனங்களை ஓட்டிச் செல்வதற்காக ரோடுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ரோட்டில் நினைத்தபடி எல்லாம் வாகனம் ஓட்ட முடியுமா? அதுபோலத்தான் வாழ்க்கையும்! தர்மத்தை நம்பி வாழவேண்டும். நாம் தனித்தீவு அல்ல. வெகுநீள சங்கிலியாக அனைவரும் பிணைக்கப்பட்டிருப்பதால், நாம் அறிந்தோ, அறியாமலோ செய்யும் செயல்கள் மற்றவர்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து வாழவேண்டும்..'' என்கிறார், அமிர்தானந்தமயி.

தினதந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 29, 2011 8:33 am

நுட்பமான கேள்விகளுக்கு ஞானப் பதில்கள்.
அம்மா வாழ்க, அமிர்தானந்தமயி அம்மாவச் சொன்னேன்.
இன்னொரு அம்மாவ இல்ல.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by சிவா on Thu Sep 29, 2011 8:50 am

nadesmani wrote:நுட்பமான கேள்விகளுக்கு ஞானப் பதில்கள்.
அம்மா வாழ்க, அமிர்தானந்தமயி அம்மாவச் சொன்னேன்.
இன்னொரு அம்மாவ இல்ல.

அந்த அம்மாவை இன்று நீங்கள் வாழ்க மட்டுமே சொல்ல முடியும். இல்லையென்றால் நள்ளிரவில் கைது செய்யப்படுவீர்கள்.

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 29, 2011 8:59 am

ஐயோ! வேண்டாங்க சாமி, நான் புள்ள குட்டிகாரன்.
அதுவும் நள்ளிரவிலா,

சொல்லிடரன், சொல்லிடரன். வாழ்க வாழ்க வாழ்க அம்மா (என்ன விட 2 மாதம் மூத்தவங்க)

என்ன கொடுமை சார் இது.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by சிவா on Thu Sep 29, 2011 9:06 am

nadesmani wrote:ஐயோ! வேண்டாங்க சாமி, நான் புள்ள குட்டிகாரன்.
அதுவும் நள்ளிரவிலா,

சொல்லிடரன், சொல்லிடரன். வாழ்க வாழ்க வாழ்க அம்மா (என்ன விட 2 மாதம் மூத்தவங்க)

என்ன கொடுமை சார் இது.

ம்ம்ம்ம்.... இப்பொழுதுதான் எங்கள் தங்கத் தலைவியின் அனல் பார்வை உங்கள் மீது படாமல் தப்பித்துக் கொண்டீர்.

வாழ்க சொல்லச் சொன்னதுக்கே இவ்வளவு அங்கலாய்ப்பு...

இது எப்படி இருக்குன்னு கொஞ்சம் பாருங்கப்பூ...!

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 29, 2011 9:24 am

அது நான்தானங்க சிவா சார். நல்லா பாருங்க. சினிமா சான்ஸ் கேட்டு போட்ட கும்பிடு.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by உதயசுதா on Thu Sep 29, 2011 10:10 am

இப்ப எல்லாம் பெத்தவங்களை கூட அம்மான்னு கூப்பிட மாட்டேங்குராங்க.யார் யாரையோ அம்மான்னு கூப்பிடராங்க.
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கடவுளை நம்புங்கப்பா, இந்த மாதிரி கடவுள் வேஷம் போடுறவங்களை நம்பாதீங்க.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by சிவா on Thu Sep 29, 2011 10:12 am

nadesmani wrote:அது நான்தானங்க சிவா சார். நல்லா பாருங்க. சினிமா சான்ஸ் கேட்டு போட்ட கும்பிடு.

என்ன சான்ஸ், அம்மாகூட ஜோடி சேர்ந்து நடிக்க சான்ஸா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எங்கும் பொங்கும் ஆனந்தம்

Post by T.N.Balasubramanian on Thu Sep 29, 2011 11:24 am

எளிமையானவர் !
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum