ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

+26
Dr.S.Soundarapandian
Aathira
balakarthik
ராஜா
ஹர்ஷித்
மஞ்சுபாஷிணி
Ahanya
ராஜு சரவணன்
Muthumohamed
krishnaamma
யினியவன்
பூவன்
கரூர் கவியன்பன்
சிவா
அகிலன்
ரேவதி
ஜாஹீதாபானு
முஹைதீன்
உமா
kitcha
கே. பாலா
சதாசிவம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
பி.தமிழ்முகில்
ayyamperumal
ஆளுங்க
30 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ஆளுங்க Fri Oct 21, 2011 6:36 pm

சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைப்பூவிற்குச் சென்றேன்..
அங்கு தமிழ் சொற்கள் பற்றிய ஒரு விவாதம் இருந்தது..

விவாதத்தை இங்கும் விவாதிக்கலாம் என்று இங்கு பதிகிறேன்
தமிழில் சில சொற்கள் எழுதும் போது பலரும் பல வழிகளில் எழுதுகிறோம்.. எது சரியான முறை?

உதாரணத்திற்கு,
ஒருவரை வாழ்த்துவதிலேயே துவங்குவோம்!!
"வாழ்த்துக்கள்" என்று சிலர் எழுதுகிறோம்!!
"வாழ்த்துகள்" என்று சிலர் எழுதுகிறோம்!!

இதில் எது சரி --- வாழ்த்துக்களா இல்லை வாழ்த்துகளா??
உங்கள் கருத்து என்ன?ஏன்?

இது தான் முதலாம் சொற்போர்!!

பி.கு: உறவுகள் இது போன்ற பிற சொற்களையும் கொண்டு இங்கு போர் தொடுக்கலாம்!!


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011

http://aalunga.in

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ayyamperumal Fri Oct 21, 2011 7:06 pm

வணக்கம் ஆளுங்க !

உங்களின் இந்த மாதிரியான பதிவுகள் மிகுந்த வரவேற்பு செய்ய பட வேண்டியது. அப்போதுதான் வலி மிகு இடங்கள் ,, வலிமிகா இடங்கள் பற்றி நாங்கள் அறிந்துகொள்ள முடியும். எனக்கு பதில் தெரியவில்லை.

சதாசிவம் அவர்கள் வந்தால் நிச்சயம் பதில் கூறுவார். நன்றி !


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by பி.தமிழ்முகில் Fri Oct 21, 2011 7:10 pm

வாழ்த்துக்கள் என்பதே சரி...
avatar
பி.தமிழ்முகில்
பண்பாளர்


பதிவுகள் : 239
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Fri Oct 21, 2011 7:38 pm

வாழ்த்துக்கள் என்பதே சரி என கருதுகிறேன் புன்னகை

வாழ்த்துகள் என்பது வாழ்த்து +கள் என்றாகி, கள்ளை(toddy) வாழ்த்த வேண்டிய நிலைக்கு உங்களை கீழேதள்ளி விடுமோ என்ற ஐயம் எனக்கு உண்டாகிறது. என்றாலும், நன்றாகத் தமிழ் அறிந்த நண்பர் சதாசிவம் போன்ற தமிழ் அறிஞர்களின் அறிவுரையைக் கேட்டு தெரிந்துகொள்வதில் தவறு இல்லை என்பது என் கருத்து.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by சதாசிவம் Sat Oct 22, 2011 1:49 pm

அருமையான திரியைத் தொடங்கிய ஆளுங்க அவர்களுக்கும், என் மேல் நம்பிக்கை வைத்த அய்யம்பெருமாளுக்கும் , சுந்தர ராஜ் ஐயா அவர்களுக்கும் முதற்கண் நன்றி.

இந்த கேள்வி கேட்கும் வரை, நானும் வாழ்த்துக்கள் தான் சரியான உச்சரிப்பு என்று எண்ணி இருந்தேன். இந்த கேள்விக்கு பிறகு நேற்று இணையதளத்தில் தேடியும், இலக்கண புத்தகத்தில் படித்ததையும் உறவுகளுடன் பகிர்வதில் மகிழ்வுருகிறேன். இதே கேள்வி பல இடங்களில் கேட்கப்பட்டும் பதில் முழுமையாக இல்லை. என்னால் இயன்ற அளவுக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல விழைகிறேன், தவறு இருப்பின் சுட்டிக்காட்டவும்.

வாழ்த்துகள் என்பது தான் சரி, வாழ்த்துக்கள் என்பது தவறு. இந்த சொல் தான் கள்ளுடன் வாழ்த்து என்று பொருள் படும்.

தமிழில் விருப்பம் இருப்பவர்கள் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தில் கீழ்வரும் விவரங்களை எழுதுகிறேன்.

தமிழ் இலக்கணம் அடிப்படையில் எழுத்துத்ததிகாரம், சொல் அதிகாரம், தொடர் மொழி அதிகாரம் என்று மூன்று பெரும் பிரிவுகளை உடையது.

தமிழ் எழுத்துக்கள் உயிர், மெய் , நெடில், குறில், வல்லினம் இடையினம், மெல்லினம் என்று பலவகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம்.

இந்த கேள்விக்கு குற்றியலுகரமும், புணர்ச்சி விதியும் அறிந்து விடை அறிவது தான் சாலச் சிறந்தது, அது இது போன்ற வேறு கேள்விகளுக்கும் உங்களுக்கு விடை காண உதவும். ஆதலால் அவற்றை மேலும் விவரிக்கிறேன்.

ஒரு சொல்லின் இறுதியில் உள்ள உகார எழுத்து தன் இயல்பான கால அளவில் இருந்து குறைந்து ஒலிப்பது. அதாவது ஒரு மாத்திரை அளவில் இருந்து அரை மாத்திரை அளவாக ஒலிப்பது. (கு, சு, டு, து, வு போன்ற எழுத்துகள் உகார எழுத்துகள் ஆகும்) குற்றியலுகரம் ஆகும். இந்த குற்றியலுகரத்தில் கடைசியில் வரும் உகார எழுத்துகள் முன் வரும் எழுத்தை வைத்து இது ஆறு வகைப்படுகிறது. அவை

நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : ஆடு , நாகு
ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு

தனிக் குறில் உடன் வரும் உகார எழுத்துகள், தன் இயல்பான ஓசை அளவை விட அதிகமாக ஒலிக்கும், இவை (யும்) முற்றியலுகரம் என்று கூறப்படும்.
உதாரணம் : பசு, வசு, கொசு, கடு, வடு, பரு, மரு, திரு, உரு, கணு, மனு, தெரு

புணர்ச்சி அடிப்படையில் விகாரப் புணர்ச்சி, அதாவது ஒரு சொல்லும், வேறு ஒரு சொல்லும் இணையும் போது புதிதாக ஒரு எழுத்து தோன்றல், திரிதல் அல்லது கெடுதல் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி, இல்லையேல் இயல்பு புணர்ச்சி ஆகும்.

நிலைமொழி வன் தொடர் குற்றியலுகரமாக இருந்து வரும் மொழி வினைஎச்சத்தின் முன் வரும் வலி மிகும், அது போல் ஈறு கேட்ட எதிர்மறைச்சொல் முன் வரும் வலி மிகும்.
உதாரணம் :
எடுத்து +கொடுத்தான் = எடுத்து க் கொடுத்தான்
அடித்து + கொன்றான் = அடித்து க் கொன்றான்
படித்து + கற்றான் = படித்துக் கற்றான்
படித்து + சென்றாள் = படித்துச்சென்றாள்
சுவைத்து + பார்த்தேன் = சுவைத்துப் பார்த்தேன்.
உண்ணா (து) + போனான் = உண்ணாப்போனான்

இதற்கு மாறாக வரும் மொழியில் வலி வராது போனால் அங்கே ஒற்று மிகாது.
உதாரணம் :
துவைத்து + வைத்தான் = துவைத்து வைத்தான்.
மடித்து + வைத்தான் = மடித்து வைத்தான்.

அது போல் வினைச் எச்சம் சொல் இல்லாத இடங்களில் வரும் போது ஒற்று மிகாது.

தனிக்குறில் முற்றியலுகரம் ஒற்று மிகும்.

இனி உங்கள் பார்வைக்கு


முத்து = முத்துகள்
சொத்து = சொத்துகள்
சிறகு = சிறகுகள்
வாழ்த்து = வாழ்த்துகள்
கழுகு = கழுகுகள்
பசு = பசுக்கள்
பரு = பருக்கள்
மரு = மருக்கள்
தெரு = தெருக்கள்
கணு = கணுக்கள்
கொசு = கொசுக்கள்
கயிறு = கயிறுகள்
உறவு = உறவுகள்
மரபு = மரபுகள்
படகு = படகுகள்
ஆடு = ஆடுகள்
மாடு = மாடுகள்
விலங்கு = விலங்குகள்
கதவு = கதவுகள்
கழிவு = கழிவுகள்
வரவு = வரவுகள்
செலவு = செலவுகள்.
நாற்று = நாற்றுகள்

எண் மற்றும் திசையில் (ஒன்று, இரண்டு, வடக்கு, கிழக்கு ) உள்ள உகார புணர்ச்சி இதில் அடங்காது.

அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்


சதாசிவம்
சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by கே. பாலா Sat Oct 22, 2011 1:58 pm

அருமையான விளக்கம் வாழ்த்துகள் சதாசிவம் அன்பு மலர்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by kitcha Sat Oct 22, 2011 2:07 pm

வாழ்த்துகள் - இது தான் சரி - இது மேலே சொல்லப் பட்டு விட்டாலும் நான் தெரிந்து கொண்டது எப்படி என்றால் -
இயக்குனர் சீமான் அவர்கள் மாதவனை வைத்து ஒரு படம் எடுத்து இருந்தார்.படத்தின் பெயர் வாழ்த்துகள் - முதலில் அது வாழ்த்துக்கள் என்று தான் இருந்தது, அப்போது கலைஞரை அவர் சந்தித்து இது பற்றி பேசும் போது கலைஞர் அவர்கள் வாழ்த்துகள் என்பது தான் சரி யானவை - இடையில் க் வந்தால் அது கள்ளுடன் சேர்ந்து வரும் வார்த்தையாகி விடும் என்று விளக்கமளித்தார்.

அன்றிலிருந்து நானும் அதை தெரிந்து கொண்டேன்.அன்றிலிருந்து நான் எழுதுவதும் அப்படித்தான்

விரிவாக நிறைய விளக்கம் அளித்த திரு.சதாசிவம் அவர்களுக்கு நன்றி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ayyamperumal Sat Oct 22, 2011 2:23 pm

சதாசிவம் wrote:அருமையான திரியைத் தொடங்கிய ஆளுங்க அவர்களுக்கும், என் மேல் நம்பிக்கை வைத்த அய்யம்பெருமாளுக்கும் , சுந்தர ராஜ் ஐயா அவர்களுக்கும் முதற்கண் நன்றி.
வாழ்த்துகள் என்பது தான் சரி, வாழ்த்துக்கள் என்பது தவறு. இந்த சொல் தான் கள்ளுடன் வாழ்த்து என்று பொருள் படும்.
அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்

நன்றி சதாசிவம் அய்யா !

வாழ்த்துகள் என்பது என்ன வகையான சொல் என்பதையும் தெரிவித்திருந்தால் பயன்படும். நன்றி ! புதுவரவுடன் கொண்டாடும் தங்களின் தீப ஒளி திருநாளுக்கு வாழ்த்துகள் !


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by உமா Sat Oct 22, 2011 2:31 pm

உண்மையாக இதை நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்..மிக்க நன்றி...உங்கள் அனைவருக்கும் என் நன்றி கலந்த வாழ்த்துகள்...
நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by ayyamperumal Sat Oct 22, 2011 2:46 pm

kitcha wrote:
இயக்குனர் சீமான் அவர்கள் மாதவனை வைத்து ஒரு படம் எடுத்து இருந்தார்.

நன்றி கிட்சா ! இதே படத்தில் இன்னும் நிறைய தகவல்களை கூறியிருப்பார்கள் !

உதாரணமாக ..கடிகார கடைகளில் 10.10 நேரம் வைப்பதற்கு ஒரு காரணம் கூறுவார்கள். அதையும் கூறினால் நன்று.


சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி?  வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா? Empty Re: சொற்போர் செய்யலாம் வாங்க- எது சரி? வாழ்த்துகளா இல்லை வாழ்த்துக்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum