புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
74 Posts - 44%
heezulia
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
prajai
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Jenila
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
1 Post - 1%
M. Priya
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
10 Posts - 5%
prajai
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
8 Posts - 4%
Jenila
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_m10பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரழகி கிளியோபாட்ரா !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Nov 09, 2011 11:57 am

First topic message reminder :

இன்று நெல்லை விவேகநந்தா அவர்கள் எழுதிய "உலக பேரழகி கிளியோபாட்ராவின்" வாழ்க்கை வரலாற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..


பேரழகி கிளியோபாட்ரா ! - Page 3 Cleopatradrawing

அழகு என்று சொன்னாலே முதலில் நினைவுக்கு வருபவள் எகிப்து பேரரசி
கிளியோபாட்ரா. உலகப் பேரழகி பட்டத்தை இன்றுவரையிலும் தக்க வைத்துக்
கொண்டிருப்பவள் கிளியோபாட்ராதான். அவளுடைய அழகால் கவிழ்ந்த அரசுகளும்
உண்டு. அந்த ஆழகை ஆராதித்த அரசுகளும் உண்டு. அந்த அழகின் வசீகரத்தால்
சிதறுண்டு போனது ராஜ்ஜியங்கள் மட்டுமல்ல.. அவளது வாழ்க்கையும்தான்..!

கி.மு.51-ம் ஆண்டில் ஒரு நாள்.

வடக்கு எகிப்தின் கடற்கரையில்
அமைந்திருந்த அலெக்சாண்டிரியா நகர மக்கள் அனைவரும் அடுத்து என்ன
நடக்கப்போகிறது என்பதை அறிய ஆவலோடு காத்திருந்தனர்.

நாட்டை ஆளும்
பேரரசரின் அரண்மனை விழாக்கோலம் பூண்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.
அமைச்சர்கள் மற்றும் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே அங்கே
கூடி இருந்தனர்.

அவர்களின் பார்வை எல்லாம் நம் கதாநாயகியான 18 வயது
இளம்பெண்ணையும், 12 வயதான ஒரு பையனையும் மொய்த்துக் கொண்டிருந்தது. இவர்கள்
இருவரும் அக்காள், தம்பி. இவர்களது திருமணத்தைக் காணவே இந்த அரண்மனை
விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

என்னது...? அக்காள்- தம்பிக்குத் திருமணமா என்று அதிர்ச்சியடைகிறீர்களா?

கிறிஸ்து
பிறப்பதற்கு முன்பான காலகட்டத்தில் ஒவ்வொரு ராஜ்ஜியத்திலும் இப்படி
குடும்பத்துக்குள் மணம் செய்யும் சம்பிரதாயம் இருந்து வந்திருக்கிறது..

ஏன்?

அந்தக் காலத்தில் அரச பரம்பரையில், அரசாளும் உரிமை ஒரு குடும்பத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் காரணம்.

அரசர்
இறந்துவிட்டால், அவரது மனைவியைப் பேரரசி ஆக்கிவிடுவார்கள். அரசியும்
கொல்லப்பட்டுவிட்டால் (இது போராகவும் இருக்கலாம், அரசியலுக்காக நடக்கும்
கொலையாகவும் இருக்கலாம்) வாரிசை நியமிப்பார்கள். அந்த வாரிசு வயதுக்கு வந்த
ஆணாக இருந்தால் பிரச்சினை இல்லை. அவன், சிறுவனாக இருந்துவிட்டால்?

அவனுக்கு
மூத்த சகோதரி இருந்தால் அவளுக்கும், இவனுக்கும் திருமணம் செய்து வைத்து,
அவளை அரசியாக்கி விடுவார்கள். அப்படித்தான் பட்டத்துக்கு வந்தாள் நம்
கதாநாயகி கிளியோபாட்ரா!

திருமணம் நடைபெறும் இடத்தில் நம் கதாநாயகி
மிடுக்கோடு காட்சியளிக்க மணமகனான அவளது தம்பிதான், விரல் சூப்பாத குறையாக
நின்று கொண்டிருந்தான்.

பளபளக்கும் ஆடையில் வசீகரமாக அந்தக் கூட்டத்தில் மின்னிக் கொண்டிருந்த நம் கதாநாயகியைப் பற்றி கொஞ்சம் வர்ணித்துதான் ஆக வேண்டும்.

வயதுக்கு
வந்த 18 வயது பெண் என்பதால், ஒட்டுமொத்த அழகும் அவளது தேகத்தில் நைல்
நதியாக நீளமாக நெளிந்து வளர்ந்து படர்ந்திருந்தது.தலையை அலங்கரித்த,
பளிச்சிடும் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்த கிரீடம் அவளது அழகில்
தோற்றுப்போய் ஒதுங்கி இருந்தது. கறுத்துச் செழித்து வளர்ந்திருந்த அவளது
தலை முடி, மெல்லிய இடுப்பு வரையிலும் உரசிக் கொண்டிருந்தது.

உருண்டையாகவும்
இல்லாமல், சப்பையாகவும் இல்லாமல், இவை இரண்டும் இடையில் அமைந்த அவளது
பிரகாசமான முகம், அந்த அரண்மனைக்கு இன்னும் வெளிச்சமூட்டியது.
மெல்லிடையிலும், மாராப்பிலும் தொங்கிக் கொண்டிருந்த ஆபரணங்கள், அவளை
குட்டித் தேவதைபோல் அலங்கரித்திருந்தன. அவளது கண்களில் மிரட்சிக்கு பதில்
தைரியம்... தைரியம்... தைரியம் மாத்திரமே!

இந்த உலகமே ஒரு நாள் எனது
கடைக்கண் பார்வையில் சொக்கி என் காலடியில் விழத்தான் போகிறது..." என்று
சொல்வதுபோல் திமிராக காட்சி தந்து கொண்டிருந்தன அவளது கண்கள்.

ஆனாலும்,
அந்த கண்களுக்குள் காதலும் ஒரு ஓரமாக இழையோடிக் கொண்டிருந்தது. சிறிதுநேரத்தில் நடந்து முடிந்தது திருமணம்.

யார் இந்த கிளியோபாட்ரா?

இயேசு
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு, அதாவது கி.மு.69-ம் ஆண்டு ஜனவரி மாதம்
எகிப்தை ஆண்டு வந்த டாலமி வம்ச மன்னரான 12-ம் டாலமிக்கு மகளாகப்
பிறந்தவள்தான் நம் கதாநாயகி கிளியோபாட்ரா. இவளுக்கு முன்பு, அவளது
அரசவம்சத்தில் ஏற்கெனவே கிளியோபாட்ரா என்ற பெயரில் 6 பேர் வாழ்ந்து
முடித்துவிட்டதால், நம் கதாநாயகி 7-ம் கிளியோபாட்ரா என்று
அழைக்கப்படுகிறாள்.

தந்தை ஓ.கே. தாய் யார்?

இந்த கேள்விக்குத்தான் இன்றுவரையிலும் உறுதியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும், அவளது தாய் பெயர் இஸிஸ் என்று கூறுவோரும் உண்டு.

கிளியோபாட்ரா
எப்படிப்பட்டவள், அவளிடம் என்னென்ன திறமைகள் இருந்தன என்பவை பற்றியெல்லாம்
புகழ்ந்திருந்த அவள் காலத்து எழுத்தாளர்களின் விரிவான ஆதாரங்கள்
காலப்போக்கில் மறைந்துவிட்டன.

அதேநேரம், அவள் வாழ்ந்த 200
ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது இயேசு கிறிஸ்து பிறந்த 150 ஆண்டுகளுக்குப்
பிறகு, அவளைப் பார்த்தவர்கள் மற்றும் அவளை சந்தித்தவர்கள் விட்டுச் சென்ற
குறிப்புகளைக் கொண்டு, புளுடார்ச் என்ற வரலாற்று ஆசிரியர் எழுதியவைதான்
இன்றும் நமக்கு அவளைப் பற்றிய ஆதாரங்களாக உள்ளன.

அவள் சிவந்த நிற
மேனி கொண்டவள் அல்ல; ஆனால், அழகாகவும், கவர்ச்சியாகவும், பார்த்த
மாத்திரத்தில் மற்றவர்களைக் கவரும் தோற்றப் பொலிவைக் கொண்டவளாகவும்,
இனிமையான குரலுக்கு சொந்தக்காரியாகவும் திகழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார்
இவர்.

கிளியோபாட்ரா பிறந்த டாலமி வம்சத்தினர், பரம்பரை பரம்பரையாக
அரசவம்ச வழியினர் கிடையாது. கி.மு. 345-களில் பரந்து விரிந்து காணப்பட்ட
பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாகவே, அதாவது ஒரு மாகாணமாகவே எகிப்து
இருந்தது.

உலகையே தனது ஆட்சியின் கீழ் கொண்டு வரப் புறப்பட்டு,
வெற்றிமேல் வெற்றிபெற்ற மாவீரன், மாசிடோனிய பேரரசன் அலெக்ஸாண்டர் எகிப்து
மாகாணத்தின் மீதும் படையெடுத்து வெற்றிகொண்டான்.

எகிப்து வெற்றியைத்
தொடர்ந்து, நைல் நதி வழியாக பெரும் படைகளுடன் இந்தியா நோக்கிப் புறப்பட்ட
அலெக்ஸாண்டர், தான் வென்ற பகுதிகளை ஆட்சி செய்ய சில கவர்னர்களை
நியமித்தார். அவர்கள் அந்த நாடுகளின் ஆட்சிப் பொறுப்பை கவனித்துக்
கொண்டனர்.

அவ்வாறு அலெக்ஸாண்டரால் நியமிக்கப்பட்ட கவர்னர்களில்
ஒருவர்தான் டாலமி. இவர், அலெக்ஸாண்டரின் மிகச் சிறந்த படைத்தளபதி
மட்டுமின்றி சிறந்த நண்பரும்கூட. மாசிடோனியாவின் ஆர்டியா மாவட்டத்தைச்
சேர்ந்த செல்வந்தரான லகஸ் என்பவரின் மகன்தான் இந்த டாலமி. தாய் பெயர்
அர்சினி.

ஆரம்பத்தில் எகிப்து, லிபியா, அரேபியப் பகுதிகளின்
கவர்னராக மட்டுமே இருந்து வந்த டாலமி, கி.மு. 305 முதல் அலெக்ஸாண்டருக்குப்
பிறகு மன்னராக நாட்டை ஆளத் தொடங்கினார். அதுவரை, எகிப்தை ஆண்டு வந்த பல
வம்சத்தினரின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். டாலமி என்ற புதிய வம்சம்
ஆரம்பமானது.

சரி.. கிளியோபாட்ரா பேரழகி ஆனது எப்படி?

கி.மு. 51-ல் தனது 12 வயது தம்பி 13-ம் டாலமியை திருமணம் செய்து கொண்டதன்
மூலம் எகிப்து பேரரசின் அரசி ஆனாள் 18 வயது கிளியோபாட்ரா. அவளது தம்பி
13-ம் டாலமி நாட்டின் அரசன் ஆனான்.

அரியணையில் ஏறிய கிளியோபாட்ரா,
ஒரு நாட்டின் அரசியாக மட்டுமின்றி அழகுப் பதுமையாகவும் திகழ்ந்தாள்.
பருவத்தின் செழிப்பு அவளது மேனியில் கொட்டிக் கிடந்தது. அதுவரை நைல் நதியை
அழகுக்கு அழகாய்ப் போற்றி வந்த எகிப்து கவிஞர்கள், அதற்கும் ஒரு படி மேலாக
கிளியோபாட்ராவை புகழ்ந்து தள்ளினர்.

தனது அழகைக் கண்டு தானே வியந்து
போனாள் கிளியோபாட்ரா. அந்த பேரழகுக்கு இன்னும் மெருகூட்ட தன்னைப் பலவாறு
அலங்கரித்துக் கொண்டாள். ஆடை, ஆபரணங்கள் அணிவதில் தனிக்கவனம் செலுத்தினாள்.
அக்காலத்தில் கிடைத்த இயற்கை அழகுப் பொருட்கள் அவளை விதவிதமாக
அலங்கரித்தன.

அவளது மேனியில் நறுமணப் பொருட்களின் வாசனை எப்போதும்
இருக்கும். அவள் அணிந்த ஆடைகளை நவரத்தினங்கள் அலங்கரித்தன. சிறப்பான சிகை
அலங்காரம் அவளது அழகு முகத்திற்கு, மேலும் அழகு சேர்த்தது. கழுத்தில்
இருந்து மூக்குவரை மறைக்கும் முகவலைகள் அவளது அழகை மேலும் அதிகரித்தது.

உதட்டுச்சாயம் இல்லாமலே லேசாக எப்போதும்
சிவந்திருந்த உதடுகளும், வில் போன்ற புருவத்தில் இருந்து புறப்பட்ட பார்வை
அம்புகளும் அவளுக்கே உரிய அடையாளமாகத் திகழ்ந்தன.

அவள் எங்கு
புறப்பட்டுச் சென்றாலும், சேவை செய்யும் அழகான இளம்பெண்களும்
பின்தொடர்ந்தனர். அந்த சேவைப் பெண்களுக்கு மத்தியில் நடந்து வந்த
கிளியோபாட்ரா சாட்சாத் தேவதை போலவே தெரிந்தாள். இவ்வாறாக, எகிப்து மக்களின்
தெய்வமாகவும் தேவதையாகவுமே தன்னைக் காட்டிக்கொண்டாள் கிளியோபாட்ரா.

கிளியோபாட்ரா,
கிரேக்க காதல் கடவுளான க்யூபிட் போலவே இருந்தாள். சில நேரங்களில்
எகிப்தைக் காக்கும் பிரதான கடவுளான இசிஸ் மற்றும் டார்சஸ் நகரின் முக்கிய
காதல் பெண் தெய்வமான அப்ரோடைட் ஆகிய இரு தெய்வங்களின் கலவை போலவும்
தெரிந்தாள். நாட்கள் செல்லச் செல்ல அவளது அழகும் மேலும் மேலும்
அதிகரித்துக்கொண்டே போனது.

இப்படியெல்லாம் கிளியோபாட்ரா மேனி அழகில்
ஜொலிக்க அவள் தினமும் குளித்தவிதம்தான் காரணம் என்று இன்றுவரையில்
கூறுவோர் உண்டு. அவர்கள் சொல்லும் காரணம், கிளியோபாட்ரா தினமும் கழுதைப்
பாலில் குளித்தாள் என்பதுதான்-. ஆனால், இது எந்த வகையில் உண்மை என்பதற்கு
ஆதாரங்கள் இல்லை.

ஆனாலும், அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள்
உள்ளன. ஏனென்றால், அந்தக் காலத்தில் எகிப்தில் கழுதைகள் பிரபலமாக
திகழ்ந்தன. அவர்களது மறு ஜென்ம நம்பிக்கைக்கு கழுதைகளே முக்கிய காரணமாகத்
திகழ்ந்தன.

இறந்தவர் உடலைப் பாதுகாத்து வைத்திருந்தால், அந்த உடல்
மறு ஜென்மத்தின்போது உதவும் என்றும், ஆவிகள் இருப்பது உண்மை என்றும் அக்கால
எகிப்தியர் நம்பினர். அதன் காரணமாக, ஒருவர் இறந்துவிட்டால், அவரது
கல்லறைக் கிடங்கில் ஒரு கழுதையின் சிலையை செய்து வைக்கும் பழக்கம்
அவர்களிடத்தில் இருந்தது. மறு ஜென்மத்தில் இந்தக் கழுதை இப்போது
இறந்தவருக்கு உதவும் என்பது அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கையாக
இருந்தது.

இப்படி, எகிப்தியர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக
இருந்த கழுதை, கிளியோபாட்ராவின் அழகு ரகசியத்திலும் ஒளிந்திருப்பதில்
வியப்பில்லை என்று கருதவும் இடம் ஏற்படுகிறது. தனது அழகுக்காக
குங்குமப்பூவையும் அவள் பயன்படுத்தினாள் என்ற கருத்தும் உள்ளது.

அழகு
மட்டுமின்றி, பல்வேறு திறமைகளும் கிளியோபாட்ராவிடம் ஒளிர்ந்தன. அவளது
பேச்சில் இனிமை மட்டுமின்றி ஒருவித கவர்ச்சியும் சேர்ந்தே வந்தது. கற்பனை
வளமும் அவளிடம் நிறைந்திருந்தது. உணர்ச்சிகரமாக அவள் பேசும்போது,
துப்பாக்கியில் இருந்து பாயும் குண்டுகள் போல அவளது வார்த்தைகள் வேகமாகவும்
ஆக்ரோஷமாகவும் வந்து விழுந்தன.

தாய்மொழியுடன் மேலும் சில
மொழிகளையும் கற்று வைத்திருந்தாள். 9 மொழிகள் வரை கிளியோபாட்ராவுக்கு பேசத்
தெரியும் என்பது பலரது கருத்து. எகிப்தை ஆண்ட டாலமி வம்ச அரசர்களுக்கு
எகிப்திய மொழி தெரிந்திருக்கவில்லை. ஆனால், கிளியோபாட்ரா அதனைக் கற்று
வைத்திருந்தாள்.

உலோகங்களைப் பொன்னாக மாற்றும் ரசவாத வித்தையும் அவளுக்குத் தெரியும் என்று கூறுவோரும் உண்டு.

இப்படி பல்வகை திறமைகளுடனும், சாதுரியத்துடனும் செயல்பட்ட கிளியோபாட்ராவுக்கு, அவளது அமைச்சர்களாலேயே முதல் ஆபத்து வந்தது.




ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:36 pm

கி.மு.44ல் ரோமாபுரியின் செனட் சபையில் ஜூலியஸ் சீஸரைக் கொலை செய்த
சதிகாரர்களான காஷியஸ், புரூட்டஸ் ஆகியோரின் தற்கொலையும், அவர்களது படையின்
தோல்வியும் ரோமாபுரியில் மீண்டும் அமைதியைக் கொண்டு வந்தது.
ஜூலியஸ்
சீஸரின் அரசியல் வாரிசான அகஸ்டஸும், சீஸருக்கு வலது கரமாக செயல்பட்ட
படைத்தளபதி ஆண்டனியும் சேர்ந்து புதியதோர் ராணுவ ஆட்சியை கொண்டுவர
முயன்றனர். அவர்கள் ஏற்கனவே முடிவு செய்த லெப்பிடசும் அவர்களுடன் கூட்டு
சேர்ந்தார். இவர்கள் மூவர் தலைமையிலான ராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டது.
இதுவே வரலாற்று சிறப்புமிக்க "மூவர் கூட்டணி" எனப்பட்டது. கி.மு.43ல் இது
ஏற்பட்டது.

இவர்களது கூட்டணியில் ரோமபுரியின் ஆட்சிக்கு உட்பட்டு
இருந்த பகுதிகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. மூவர் கூட்டணிக்குத்
தலைமை தாங்கிய அகஸ்டஸ், ஆண்டனி, லெப்பிடஸ் மூவரும் ஆளுக்கு ஒரு பகுதியைத்
தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அகஸ்டஸ் வயதில் சிறியவராக
இருந்தாலும் ரோமானிய அரசியலில் மிகச்சிறந்த அனுபவம் அவருக்கு இருந்தது.

இதற்கிடையில்,
ரோமின், டைபர் நதிக்கரையில் இருந்த சீஸரின் அரண்மனையில் அவரது
விருந்தினராக தங்கியிருந்த எகிப்து பேரரசி கிளியோபாட்ரா, சொந்த நாட்டிற்கு
திரும்புவது என்ற முடிவுக்கு வந்திருந்தாள். சீஸரின் கொலையும், அவருக்கும்,
தனக்கும் பிறந்த மகன் டாலமி சீஸர் அவரது வாரிசாக அறிவிக்கப்படாததும்
கிளியோபாட்ராவைப் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாக்கி இருந்தது. சீஸர் கொலை
செய்யப்பட்ட சில மாதங்களுக்கு ரோமாபுரியில் அமைதியற்ற சூழ்நிலை நிலவியதால்
பாதுகாப்பு காரணங்களுக்காக ரோமிலேயே தங்கியிருந்தாள் கிளியோபாட்ரா.

இப்போது
அகஸ்டஸ், ஆண்டனி, லெப்பிடஸ் தலைமையில் புதிதாய் மூவர் கூட்டணி
உருவாகிவிட்டதால், அவர்களின் ஆதரவுடன் எகிப்து பேரரசியாக நீடிக்கக்கூடிய
வாய்ப்பு மட்டுமே கிளியோபாட்ராவுக்கு இருந்தது. அதைத் தனக்குச் சாதகமாக
பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தவள், அந்த மூவருள் ஒருவரைத் தனது கைக்குள்
போட்டுக் கொள்ள தீர்மானித்தாள். அதற்காக அவள் தேர்வு செய்தது ஆண்டனியை.
சீஸருக்கு அடுத்த இடத்தை நிரப்பக் கூடிய தகுதி ஆண்டனி ஒருவனுக்கு மட்டுமே
இருக்கிறது என்ற அவளது கணிப்புதான் அதற்குக் காரணம்.

ஆண்டனி,
சீஸரைப் போன்று கிழட்டுச் சிங்கம் அல்ல. இளமை முறுக்கேறிய மாபெரும் வீரன்
மற்றும் ரோமானிய முதன்மை படைத்தளபதி. வயது நாற்பதைத் தாண்டி இருந்தாலும்,
இளைஞன் என்று கூறும் அளவுக்கு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தான்.
அடிக்கடி போர் முனைக்குச் சென்று வந்தவன் என்பதால், அவனது உடல் இரும்பு
போன்று நின்றது.
அவனது கட்டுடல் அழகைக் கண்டு மயங்காத ரோமாபுரி பெண்களே
கிடையாது. அந்த அளவுக்குக் கட்டு மஸ்தான உடலுடன் பேரழகனாகவும் திகழ்ந்தான்
ஆண்டனி.

அழகான பெண்ணைக் கண்ட மாத்திரத்தில் அவளைத் தன் மஞ்சணைக்குக்
கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைப்பான் ஆண்டனி. அதன்படி அவளைக் கொண்டு
வந்தும் விடுவான். அடிக்கடி மது அருந்தும் வழக்கமும் அவனுக்கு இருந்தது.
அவனது மஞ்சணைக்கு வந்து போகும் பெண்களின் பட்டியலில் ரோமாபுரியின் முன்னணி
நாடக நடிகைகளும் இருந்தனர்.
இது கிளியோபாட்ராவுக்கு நன்றாகவேத்
தெரியும். அதனால், அவனைத் தன் வலையில் எளிதில் வீழ்த்திவிடலாம் என்று
சரியாக கணித்தாள் அவள். ஆரம்பத்தில் தனது எகிப்து பேரரசைத் தன் வசம் தக்க
வைக்கவே ஆண்டனியைக் கைக்குள் போட முடிவெடுத்தாள். ஆனால், நாளடைவில்
அவர்களுக்குள் மலர்ந்த புனிதமான - உன்னதமான காதல் இன்றும் பிரமிப்பாக
பேசப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், அவர்களது காதலைத் தனது "ஆண்டனி
அன்ட் கிளியோபாட்ரா" நாடகத்தில் ஏகத்துக்கும் புகழ்ந்த - வர்ணித்த
ஷேக்ஸ்பியர்தான்.

ஆண்டனியைத் தனது கைக்குள் போட்டுக் கொள்ள
கிளியோபாட்ரா உறுதியான முடிவெடுத்த நேரம், டைபர் நதிக்கரை அரண்மனையில்
தங்கியிருந்த அவளை சந்திக்க வந்தான் ஆண்டனி.

ரோமாபுரியின் மூவர்
கூட்டணியில், சீஸரின் அரசியல் வாரிசு அகஸ்டஸுக்கு அடுத்த இடத்தில் ஆண்டனி
இருந்ததும், பிலிப்பி போரில் அவனுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியும் அவனது
வீர நடையை இன்னும் கம்பீரமாக்கி இருந்தன. அந்த மிடுக்குடனேயே அவளிடம்
பேசினான்.

"என்ன கிளியோபாட்ரா... எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதுபோல் இருக்கிறதே..."

"ஒன்றுமில்லை,
ஆண்டனி. எவ்வளவு நாட்களுக்குத்தான் இங்கேயே தங்கியிருப்பது? அதனால்தான்,
எகிப்துக்குத் திரும்பலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்".

"என்ன இருந்தாலும் நீ எகிப்து பேரரசி ஆயிற்றே... நிச்சயம் அங்கே போய்த்தானே ஆகவேண்டும்?"

"சீஸர்
இருந்தவரை எனக்கு மட்டுமின்றி என் நாட்டுக்கும் பாதுகாப்பு கிடைத்தது.
இப்போது அதே பாதுகாப்பு கிடைக்குமா என்று அச்சமாக இருக்கிறது".

"அந்த பயம் எல்லாம் உனக்கு வேண்டாம் கிளியோபாட்ரா. எங்களுடன் நீ இணைந்து சென்றுவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை".

"நிச்சயமாக
நானும் அதைத்தான் செய்யப் போகிறேன். இப்போதைய ரோமாபுரி மூவர் கூட்டணியில்
இயங்கினாலும், நீங்கள் எனக்கு உரிய மரியாதையும், என் நாட்டுக்கும், நாட்டு
மக்களுக்கும் எதிரிகளால் ஆபத்து ஏற்படாதவாறு பாதுகாப்பு கொடுப்பீர்கள்
என்று நம்புகிறேன். அதைத் தாங்கள் எனக்கு உறுதியளிக்க வேண்டும்".

"எனது
மதிப்பிற்குரிய சீஸரின் காதலியாக இருந்த உனக்கு நிச்சயம் இந்த ரோமாபுரி
கடன்பட்டு இருக்கிறது. அதிலும், இந்த ஆண்டனி நிறையவே கடமைப்பட்டு
இருக்கிறான்..." என்ற ஆண்டனி லேசாக சிரித்து வைத்தான். அந்தச் சிரிப்பில்
ஓராயிரம் அர்த்தங்கள் இருந்தன.

அடுத்த சில நாட்களில் ரோமில்
இருந்து, படைவீரர்கள் சூழ எகிப்துக்குப் புறப்பட்டாள் கிளியோபாட்ரா.
சீஸருடன் தான் வாழ்ந்த இனிய நாட்களையும் மனதில் சுமந்துக் கொண்டு
பயணித்தாள் அவள்.

கிளியோபாட்ரா எகிப்து திரும்பிய சில மாதங்களில்,
ரோமாபுரியில் புதிதாய் அமைந்த மூவர் கூட்டணியில் ஆதிக்கப் போட்டி
ஏற்பட்டது. ரோமையும், அதன் மாகாணங்களையும் தனது கட்டுப்பாட்டில்
வைத்திருந்த அகஸ்டஸ், ரோமாபுரி பேரரசு முழுமைக்கும் ஆதிக்கம் செலுத்த
விரும்பினார்.

மாசிடோனியா, கிரீஸ், பைதினியா, ஆசியா மைனர், சிரியா
உள்ளிட்ட ரோமப் பேரரசுக்கு உட்பட்ட நாடுகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருந்த ஆண்டனியும் அகஸ்டஸ் போன்றே கனவு கண்டான். இவர்களுக்குத் தானும்
சளைத்தவன் அல்ல என்பதுபோல் நடந்து கொண்டான், மூவர் கூட்டணியில் கடைசியாக
இடம்பெற்று இருந்த லெப்பிடஸ். அகஸ்டஸ், ஆண்டனியை விட இவனது பலம் குறைவுதான்
என்பதால், இவன் சரியான தருணத்துக்காக காத்திருந்தான். ஆனாலும்
இவர்களுக்குள் பனிப்போர் நிகழ்ந்து கொண்டே இருந்தது.

நாட்கள் மாதங்களாகி வேகமாக பறந்தன.

எகிப்து
திரும்பிய கிளியோபாட்ரா திறம்பட ஆட்சி செய்தாள். இப்போது அவளது வயது
இருபத்தெட்டாக இருந்தது அவளை இன்னும் பக்குவப்பட வைத்திருந்தது.
ரோமாபுரியின் பேரரசானது மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பிறகு
கிளியோபாட்ராவின் எகிப்து, சுதந்திர நாடாகத் திகழ்ந்தது. காரணம், சீஸரின்
ஆசை நாயகியாக அவள் இருந்ததுதான்.

தனித்து இயங்கும் அவளது நாட்டை,
தனது கட்டுப்பாட்டிற்குள் முழுமையாக கொண்டு வந்து, தனது பலத்தை
அதிகரித்துக்கொள்ள ஆசைப்பட்டான் ஆண்டனி. இதையடுத்து பெரும் படையைத்
திரட்டிக் கொண்டு போருக்குப் புறப்பட்டான் அவன். கிரீஸ், ஆசிய மைனர் வழியாக
எகிப்து செல்வது என்பது அவனது திட்டமாக இருந்தது.

இதுபற்றி ஒற்றன் வழியாக செய்தி அறிந்த கிளியோபாட்ரா, சற்று நடுங்கித்தான் போனாள்.
தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்,
ரோமானியப் பேரரசராக முடிசூட வேண்டும் என்றும் ஆசைப்பட்ட ஆண்டனி, பெரும்
படையைத் திரட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான். அவனது ஆவேச வருகையை
அறிந்த எதிரி நாட்டினர் பலர் பயந்து போயினர். அவனைத் தலைகுனிந்து
வரவேற்றனர்.

ரோமாபுரியில் இருந்து முதன்முதலாக அவன் சென்ற நாடு
கிரீஸ். ஏற்கனவே ரோமாபுரியின் ஆதிக்கத்தில் அந்த நாடு இருந்ததால்,
அந்நாட்டு மக்கள் ஆண்டனிக்கும், அவனது படைக்கும் உற்சாக வரவேற்பு
கொடுத்தனர். அங்குள்ளவர்கள் அவனை இன்னொரு சீஸராகவே கருதி மரியாதை
கொடுத்தனர். அத்துடன், "ஹெர்க்குலிஸ்" என்ற போர்க் கடவுளாகவும், "டயோனிசஸ்"
என்ற புதிய மதுக் கடவுளாகவும் ஆராதிக்கப்பட்டான்.

கிரீசை அடுத்து
ஆசியா மைனருக்கு அவன் சென்றபோதும் அதே உற்சாக வரவேற்பு தொடர்ந்தது.
தொடர்ந்து, அங்கிருந்து எகிப்துக்குப் பயணமானான். அந்த நாடு ரோமப் பேரரசின்
ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலும், அங்கு ரோமானிய படைவீரர்கள் பாதுகாப்பு
பணியில் இருந்தாலும், சுதந்திர நாடாகவே திகழ்ந்தது.

இதற்குக்
காரணம், அந்த நாட்டின் பேரரசி கிளியோபாட்ரா மீது சீஸர் கொண்ட இனம் புரியாத
பேரன்புதான். அதனால்தான், எகிப்தைக் கைப்பற்றினாலும் கிளியோபாட்ராவிடமே
ஒப்படைத்துவிட்டார்.

இப்போது சீஸர் இல்லாததாலும், கிளியோபாட்ராவின்
பேரழகு மீது ஏற்கனவே தான் ஒரு கண் வைத்திருந்ததாலும், நம்பிக்கையோடு
எகிப்து சென்றான் ஆண்டனி. தன்னை புதிய சீஸராகவே அவன் நினைத்துக் கொண்டான்.
கி.மு.41ல்
எகிப்தை பெரும் படையுடன் சென்றடைந்தான் ஆண்டனி. அப்போது அவனது வயது
நாற்பதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. கிளியோபாட்ராவின் வயது
இருபத்தெட்டு...

எகிப்து வந்து சேர்ந்த ஆண்டனி, அங்கு முதல் ஆளாக
சந்திக்க ஆசைப்பட்டது கிளியோபாட்ராவைத்தான். ஆனால், அவன் மனதிற்குள் தான்
இன்னொரு சீஸர் என்ற மமதை எண்ணம் இருந்ததால், கிளியோபாட்ராவைத் தன்னை வந்து
சந்திக்குமாறு உத்தரவிட்டான்.

ஆண்டனி, கிளியோபாட்ராவைச் சந்திக்க
இன்னொரு காரணமும் இருந்தது. இப்போது அவனது ஆளுகையின் கீழ் ரோமப் பேரரசுக்கு
உட்பட்ட கீழை நாடுகள் பல இருந்தன. அவற்றிற்கு எல்லாம் தலைமையிடமாக
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவைப் பயன்படுத்திக் கொள்ளவும் ஆசைப்பட்டான்.

அலெக்ஸாண்டிரியாவில்
இருந்த கிளியோபாட்ராவிடம் ஆண்டனியின் உத்தரவு பற்றி கூறப்பட்டபோது, அவள்
சற்றே கோபப்பட்டது என்னவோ உண்மைதான். தன்னை அவன் சந்திக்க வருவான் என்று
அவள் உரிமையோடு எதிர்பார்த்தாள். ஆனால், அது நடைபெறாதபோது, ஆண்டனியைப் போய்
சந்திப்பது என்றும் முடிவு செய்து கொண்டாள்.

மேலும், கிளியோபாட்ரா
மீதான சில குற்றச்சாட்டுகள் ஆண்டனியின் கவனத்திற்கு வந்திருப்பதாக அந்த
தூதுவன் அவளிடம் கூறினான். அதற்கு அவள் பதில் அளிக்கையில், "மன்னராட்சி
நடைபெறும் இந்த எகிப்தில் அரசி மீது கூறப்படும்
குற்றச்சாட்டுகளுக்கு
எல்லாம் நான் பதில் கூற முடியாது. அதை ஆண்டனியிடம் கூறவும் எனக்கு
விருப்பம் இல்லை. நட்பு பாராட்டுவது என்றால் மாத்திரமே என்னால் அங்கே
வரமுடியும்" என்று கூறி, அவனை அனுப்பிவிட்டாள்.

சில நாட்களுக்குப்
பிறகு ஆண்டனி மற்றும் கிளியோபாட்ராவின் சந்திப்பு நிகழ்ந்தது. டார்சஸ்
நகரில் அவர்களது சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பேரழகியான
கிளியோபாட்ரா தன்னை ஆடம்பரமாக அலங்கரித்துக் கொள்வது என்பது அவளது
இயல்போடு இணைந்த ஒன்று. அதுமட்டுமின்றி, தன்னோடு இணைந்த சூழ்நிலைகளையும்
அவள் ஆடம்பரமாக்கிக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தாள். சீஸருக்கு கூட அவளது
பேரழகு மட்டுமின்றி, அவளது தனிப்பட்ட ஆடம்பர வாழ்க்கையும்தான்
பிடித்துப்போய் இருந்தது.
சீஸர் தன்னை விரும்ப காரணமாக இருந்த அதே
அழகையும், ஆடம்பரத்தையும் மீண்டும் ஒரு காதல் ஆயுதமாகப் பயன்படுத்தினாள்
கிளியோபாட்ரா. ஆம்... டார்சஸ் நகருக்கு ஆண்டனியைச் சந்திக்கப் புறப்பட்ட
கிளியோபாட்ரா, தன்னைப் பேரழகிக்கும் பேரழகியாக அலங்கரித்துக் கொண்டாள்.

அவள்
மேனியில் மோதிய அந்தப் பாலைவனக் காற்று கூட சிலிர்த்துக் கொண்டு
குளிர்ந்து போனது. கிளியோபாட்ரா மட்டுமின்றி அவளுடன் வந்த தோழியரும்
அரசிளங்குமரிகளாகவே தகதகத்தனர். அந்த அளவுக்கு ஆடம்பரம் அவர்களிடம்
கொட்டிக் கிடந்தது.

இந்தநேரத்தில் 'ஹெர்மாச்சிஸ்' என்ற வரலாற்று
ஆசிரியர், கிளியோபாட்ரா பற்றி விட்டுச் சென்ற குறிப்புகளை அலசும்போது,
"இவ்வளவு கம்பீரமாகவும்- ஆடம்பரமாகவுமா கிளியோபாட்ரா வாழ்ந்தாள்?" என்ற
கேள்வி நம்முள் எழுகிறது.

"கிளியோபாட்ராவிடம் இயல்பாகவே ஆடம்பர
மோகம் இருந்தது. அவள் தேரில் பயணிக்கும்போது, தேருக்கு முன்பாக யானைகளும்,
பின்னால் சிங்கங்களும் அணிவகுத்து வரும். அவள் பவனி வந்த தேர் தங்கத்தால்
செய்யப்பட்டு மினுமினுத்தது. அவளைத் தாங்கிய ரதத்தை வெள்ளைக் குதிரைகள்
மாத்திரமே இழுத்து வந்தன. தேர் மட்டுமின்றி, தனது தலையில் கூட இரண்டு
பொன்னால் ஆன கொம்புகளுக்கு இடையே சந்திரன் தோன்றுவது போன்ற அடையாளச்
சின்னத்தைச் சூடியிருந்தாள். மரகதக் கற்களும், மாணிக்கப் பரல்களும்,
பவளமும் பதிக்கப்பட்ட பட்டைகளைக் கழுத்தில் அணிந்திருந்தாள். அவளது அழகிய
கரங்களுக்குப் பொன்னால் ஆன காப்புகள் அழகு சேர்த்தன..." என்று
குறிப்பிடுகிறார் ஹெர்மாச்சிஸ்.

இப்போது ஆண்டனியைத் தனது சொந்த
நாட்டில் சந்திக்கப் போகும் போதும் அதே ஆடம்பரத்துடன் புறப்பட்டாள்.
டார்சஸ் நகரைச் சென்றடைய நீளமான நைல் நதியின் ஒரு கிளையைப் படகில் கடந்தாக
வேண்டும். அதற்குத் தயாராக நிறுத்தப்பட்டிருந்த படகும் பொன் கொண்டு
அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

நிலத்தை முத்தமிடும் அளவுக்கு
நீண்டிருந்த ஆடையை அணிந்தபடி டார்சஸ் நகரை நோக்கி படகில் பயணித்தாள் அவள்.
யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே... என்பதுபோல்,
கிளியோபாட்ராவின் வருகையை முந்திச் சென்று ஆண்டனிக்கு உணர்த்தின, அவளது
ஆடம்பரமும், அவள் மேனியில் இருந்து வெளிப்பட்ட வாசனைத் திரவியங்களின்
நறுமணமும்!

இந்தநேரத்தில் வரலாற்று ஆசிரியர் 'புளுடார்ச்', படகில் கிளியோபாட்ரா வந்த அழகை வர்ணிக்கும் பாங்கும் தனி அழகுதான்.
"நைல்
நதியில் படகில் பயணித்த கிளியோபாட்ரா பார்ப்பதற்கு, கிரேக்க காதல் கடவுளான
"வீனஸ்" போலவே இருந்தாள். அவளுடன் வந்தத்தோழிப் பெண்கள் காதல் தேவதைகளாகவே
ஜொலித்தனர். அவர்கள் கிளியோபாட்ராவுக்கு சாமரம் வீசியபடி வந்தனர்....
படகில் துடுப்பு போட்டவர்கள் ஆண்கள் அல்ல. அனைவரும் அழகான பணிப் பெண்கள்.
அவர்கள் பயன்படுத்திய துடுப்புகள் வெள்ளியால் செய்யப்பட்டு இருந்தன. குழல்,
யாழ் இசைப்பவர்கள் தங்கள் வாத்தியங்களை இசைத்துக் கொண்டிருந்தனர். அதை
கிளியோபாட்ரா ரசித்தபடியே வந்தாள். விலை உயர்ந்த வாசனைத் திரவியங்கள், புகை
மூட்டப்பட்டு நறுமணத்தை அந்த நதிக் காற்றில் மிதக்கவிட்டன. அந்த நறுமணம்
நைல் நதியையே மணக்க வைத்தது.... கிளியோபாட்ரா வருகை புரிந்த இந்த பேரழகு
காட்சியைக் காண்பதற்கென்றே டார்சஸ் துறைமுகத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில்
திரண்டிருந்தனர்..." என்று, கிளியோபாட்ராவின் டார்சஸ் வருகையை வரலாற்றில்
பதிவு செய்கிறார் புளுடார்ச்.

கிளியோபாட்ராவைக் காண டார்சஸ் நகர
மக்களே துறைமுகத்திற்குத் திரண்டு வந்ததால், ஆண்டனியும் தனது
படைவீரர்களுடன் அங்கே வந்திருந்தான். கிளியோபாட்ரா வருகையை ஆவலோடு
எதிர்பார்த்து நின்றிருந்தான்.
படகில் இருந்து தனது பாதங்களால் தரையை
முத்தமிட்ட கிளியோபாட்ராவைப் பார்த்த ஆண்டனி, அசையா சிலையானான். வானில்
இருந்து வந்த தேவதை போல ஜொலித்த கிளியோபாட்ராவை வைத்த கண் வாங்காமல்
பார்த்தபடி வியந்து நின்றான்.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:39 pm

கிளியோபாட்ரா அளித்த விருந்தில் சொக்கிப் போனது ஆண்டனி மட்டுமல்ல; அந்த
விருந்தில் பங்கேற்ற அவனது அத்தனை படைவீரர்களும்தான்! ஆம்... மிதக்கும்
வசந்த மாளிகையில் தான் வைத்த விருந்தில் பங்கேற்ற ஆண்டனியின் ரோமாபுரி
படைவீரர்களுக்கு அறுசுவை உணவுகளோடு, பலவித பரிசுகளையும் வாரி வாரி
வழங்கினாள் கிளியோபாட்ரா. அதுவும், அவளே தன் கைப்பட அந்தப் பரிசுகளை
வழங்கியதால் அத்தனை ரோமாபுரி வீரர்களும் உள்ளம் மட்டுமின்றி உடலும்
குளிர்ந்து போனார்கள்.

ஆண்டனிக்கு மிகவும் வேண்டியவர்களுக்கு அரபுக்
குதிரைகளும் மற்றும் சிலருக்கு ஆபரணக் கற்கள் பதிக்கப்பட்ட விருந்து
மேஜைகளும், இன்னும் சிலருக்கு தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன தட்டுகளும்
வழங்கப்பட்டன. இவற்றோடு நல்ல உடல் உழைப்பை வெளிப்படுத்தக்கூடிய, ஏராளமான
எத்தியோப்பிய அடிமை இளைஞர்களும் ரோமாபுரி வீரர்களுக்குப் பரிசாக
கிடைத்தனர்.

ஏழையாக வந்தவர்கள் எல்லாம் கிளியோபாட்ராவின் இந்த
விருந்தின் மூலம் செல்வந்தர்கள் ஆனார்கள் என்று குறிப்பிடுகிறார்கள்
வரலாற்று ஆய்வாளர்கள்.

கிளியோபாட்ராவின் இந்த மாபெரும் விருந்தைக்
கனவிலும் எதிர்பார்க்காத ஆண்டனி, தான் ரோமாபுரியின் வருங்கால வேந்தன்
என்பதை நிரூபிக்க பதில் விருந்துக்கு கிளியோபாட்ராவை அழைத்தான்.
எவ்வளவுதான் மெனக்கெட்டாலும கிளியோபாட்ராவின் தாராள மனதிற்கு முன்பு அவன்
தோற்றுப்போனதுதான் உண்மை.

ஆண்டனியை மகிழ்விக்க இன்னொரு விருந்தையும்
நடத்தினாள் கிளியோபாட்ரா. அந்த விருந்தும் வரலாற்றின் முக்கிய பக்கங்களில்
நீங்கா இடம்பெற்றுள்ளது.

அந்த விருந்து நடைபெற்ற அறை முழுவதுமே
இறக்குமதி செய்யப்பட்ட ரோஜாப் பூக்களால் நிரம்பி இருந்தது. ஆயிரக்கணக்கான
ரோஜாப் பூக்கள் சுவராக எழுந்திருந்த அந்த அறை ஆண்டனியைப் பிரமிக்கச்
செய்தது.

கிளியோபாட்ரா என்றால் ஆடம்பரம், ஆடம்பரம் என்றால் கிளியோபாட்ரா என்பதை உறுதி செய்தன கிளியோபாட்ராவின் இந்த புதுமை விருந்துகள்.

கிளியோபாட்ராவிடம்
பேரழகும், செல்வச் செழிப்பும் மட்டுமின்றி, நாட்டை ஆள்பவருக்கான
சமயோசிதத் திறனும், பலமொழித் திறமையும், எந்தவொரு மாவீரனுடனும் நேருக்கு
நேர் அஞ்சாமல் விவாதம் செய்கிற சக்தியும் இருந்ததால் அவளை நன்கு
பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தான் ஆண்டனி. அதற்காக அவள் சொன்னதை எல்லாம்
கேட்டான்.

அதன் தொடர்ச்சியாக, கிளியோபாட்ரா சொன்னபடி அவளது தங்கை
அர்சினோவை கொலை செய்தான் ஆண்டனி. தான் சொல்லும் எதையும் செய்ய ஆண்டனி
தயாராக இருக்கிறான் என்ற நிலை வந்ததும், அவன் மீது உண்மையாகவே அன்பு
செலுத்தத் தொடங்கிவிட்டாள் கிளியோபாட்ரா. தனது இறுதிக்காலம் வரை அவன்
தன்னுடன் இருக்க வேண்டும் என்றும் பேராசைகொண்டாள்.

ஆனால்,
ஆண்டனியின் கணக்கோ வேறு மாதிரியாக இருந்தது. மது, மாது, சூதாட்டம்... என்று
தனது உல்லாசத் தேவைகளை நிறைவேற்றும் சிறந்த இடமாக அலெக்சாண்டிரியா
திகழ்ந்ததால், பேரழகி கிளியோபாட்ராவைப் பிரியவும் முடியாமல்,
அலெக்சாண்டிரியாவை விட்டு அகலவும் முடியாமல் இன்பத் தவிப்புக்கு ஆளானான்.

ஒருநாள்
ஆண்டனியும், கிளியோபாட்ராவும் மாரியோட்டிஸ் என்ற ஏரிக்கரைக்குப்
பொழுதுபோக்குக்காகச் சென்றனர். அங்கே இருவரும் தூண்டில் மூலம் மீன்
பிடித்து மகிழ்ந்தார்கள். கிளியோபாட்ரா பயன்படுத்திய தூண்டிலில் மட்டுமே
மீன்கள் சிக்கின.

அப்போதுதான் ஆண்டனிக்கு அந்த யோசனை தோன்றியது.
தனது பணியாளன் ஒருவனை அழைத்தவன், அவனது காதில் ஏதோ கிசுகிசுத்தான். சிறிது
நேரத்தில் அவனது தூண்டிலில் வரிசையாக மீன்கள் சிக்க ஆரம்பித்தன.

எப்படி
இந்த திடீர் மாற்றம் என்று யோசித்த கிளியோபாட்ரா, அருகில் தனக்குத்
தெரியாமல் என்ன நடக்கிறது என்று ரகசியமாக கண்காணித்தாள். ஆண்டனியின்
பணியாளன், ஆண்டனி பிடித்த மீன்களைத் திரும்பத் திரும்ப நீருக்குள் மூழ்கி,
அவன் உபயோகிக்கும் தூண்டிலில் அவற்றை செருகிவிட்டு வந்து கொண்டிருந்தான்.

இதுதான்
அந்த ரகசியமா என்று மனதிற்குள் லேசாக சிரித்து வைத்த கிளியோபாட்ரா, தனது
பணியாளன் ஒருவனை அருகில் அழைத்து அவன் காதில் ஏதோ சொன்னாள்.

அடுத்த
சில நிமிடங்களில் ஆண்டனியின் தூண்டிலில் ஒரு மீன் துண்டு சிக்கியது. அதில்
லேசாக மசாலா ஒட்டியிருந்தது. வறுப்பதற்கு தயாரான நிலையில் அதில் செதில்கள்
நீக்கப்பட்டு இருந்தன. இதைப் பார்த்தும் பார்க்காததுபோல் முகத்தைத்
திருப்பிக்கொண்டாள் கிளியோபாட்ரா. ஆனால், ஆண்டனியின் முகத்தில்தான்
அதிர்ச்சி.

"ஆச்சரியமாக இருக்கிறதே... மீனில் மசாலா வேறு தடவப்பட்டு
இருக்கிறது. விட்டால்... வறுவல் மீன் கூட வரும் போல் இருக்கிறதே..." என்று
அதிர்ச்சியானான்.

மசாலா தடவிய மீனை வேகவேகமாக தூண்டிலில் இருந்து
கழற்றிவிட்டு, தூண்டிலை மீண்டும் ஏரிக்குள் போட்டான். அடுத்த சில
நொடிகளிலும் மீண்டும் தண்ணீரில் கரைந்ததுபோக லேசாக மசாலா ஒட்டியிருந்த
நிலையில் மீன் துண்டு தூண்டிலில் வந்தது.
இதைப் பார்த்துவிட்ட கிளியோபாட்ரா, மனதிற்குள் எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் கேட்டாள்.

"என்ன
ஆண்டனி. ரோமாபுரியின் வருங்கால வேந்தர் என்பதற்காக உங்களது தூண்டிலில்
மசாலாவோடு மீனே துண்டுகளாகி வருவது மிகவும் அதிகமாகத்தான் இருக்கிறது..."
என்றவள், தன்னையும் மீறி சிரித்துவிட்டாள்.

ஆண்டனி
கிளியோபாட்ராவுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவித்தான். கடைசியில் அவளே
உண்மையைச் சொல்லிவிட லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்து வைத்தான் ஆண்டனி
(கிளியோபாட்ரா அனுப்பிய பணியாளன்தான் ஆண்டனியின் தூண்டிலில் மசாலா தடவிய
மீன் துண்டுகள் வரக் காரணம். அவன்தான், ஆண்டனியின் பணியாளனை ஓரம்
கட்டிவிட்டு, அவனது தூண்டிலில் மசாலா தடவிய மீன் துண்டுகளைச்
செருகிவிட்டான்).

மேற்படி சம்பவத்தில் வரலாற்றுக் கற்பனை
இருந்தாலும், ஆண்டனியும் கிளியோபாட்ராவும் எந்த அளவுக்கு காதலன் காதலியாக,
அன்யோன்யமாக இருந்தார்கள் என்பதனை இந்தக் காட்சி எடுத்துரைக்கிறது.

கிளியோபாட்ராவும்,
ஆண்டனியும் கொண்டிருந்த காதலை வரலாற்று ஆய்வாளர்கள் புகழ்ந்தே
பேசுகிறார்கள். ஆரம்பத்தில், கிளியோபாட்ரா தன் ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ள
ஆண்டனியைத் தனது கைக்குள் போட்டுக்கொண்டாலும் நாளடைவில் ஆண்டனியை உயிருக்கு
உயிராக நேசிக்கத் துவங்கிவிட்டாள். ஆண்டனியும், அவளது கவர்ச்சி வலையில்
விழுந்தவன்தான் என்றாலும், அவள் தன்மீது காண்பித்த அபரிமிதமான அன்பால்
அவள்பால் அவனும் கரைந்து போனான்.

ஷேக்ஸ்பியர்கூட இவர்களது காதலைப் புகழ்ந்தே சொல்கிறார்.

ஒருமுறை கிளியோபாட்ராவும், ஆண்டனியும் சந்தித்துக்கொண்டபோது நடந்த உரையாடல்:
"ஆண்டனி... என்னை நீங்கள் எந்த அளவுக்குக் காதலிக்கிறீர்கள்? அந்த அளவைக் குறிப்பிட முடியுமா?" கிளியோபாட்ரா கேட்டாள்.
"என்ன... அப்படி கேட்டுவிட்டாய் கிளியோபாட்ரா? நம் காதலை அளவிட அளவீடுகளே இல்லை".
"சும்மா கற்பனையை அவிழ்த்துவிட வேண்டாம். என்னை திருப்திப்படுத்துவதற்காவது சொல்லுங்கள். என் மீது உங்களுக்கு எவ்வளவு காதல் உள்ளது?"
"அன்பே... அளவிடக்கூடியது பிச்சைக்காரர் காதல். நம் காதலுக்கு அளவே இல்லை".
"மீண்டும் மீண்டும் என்னை சமாளிக்க வேண்டாம். உண்மையைச் சொல்லுங்கள்..."
"நான்
உன் மீது கொண்டுள்ள காதலின் அளவைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால்,
புதிதாய் சொர்க்கம் ஒன்றையும், பூமி ஒன்றையும் அந்த இறைவன் படைக்க
வேண்டும்" என்று கூறி, கிளியோபாட்ராவையே வியப்பில் ஆழ்த்தினான் ஆண்டனி.

இந்தச்
சமயத்தில்தான், கிளியோபாட்ரா தனது கருவில் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்க
ஆரம்பித்திருந்தாள். இதற்குக் காரணம், வேறு யாரும் அல்ல; மார்க்
ஆண்டனியேதான்!
கிளியோபாட்ரா அழகில் மயங்கிக் கிடக்கிறான் ஆண்டனி என்கிற தகவல் எகிப்து மக்களுக்கு மட்டுமின்றி, ரோமாபுரி வரைக்கும் பரவிவிட்டது.

ரோம்
நகரில் வசித்து வந்த ஆண்டனியின் மனைவி புல்வியா இதை அறிந்து சற்று
அதிர்ச்சியானாள். ஆனாலும், ஒரு அரசன் இன்னொரு அரசனின் மனைவியைத் தூக்கி
வருவதும், அழகான பெண்கள் மீது ஆசைப்படுவதும் காலம் காலமாக தொடர்வது
என்பதால் அதை மிகப்பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை அவள்.

இதற்கிடையில்,
ரோமாபுரி மூவர் கூட்டணியில் முதன்மையானவனான ஆக்டேவியன், ரோமாபுரி
முழுமையையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்று வந்தான்.
அதையொட்டி, ஆண்டனியின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளைத் தனக்குக் கீழ்
கொண்டு வர நடவடிக்கைகள் எடுத்தான்.

இதையறிந்த ஆண்டனியின் மனைவி
புல்வியா கொதித்தெழுந்தாள். அவள், ஆண்டனியின் சகோதரன் லூசியசுடன் சேர்ந்து
ஆக்டேவியனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினாள். இருவரும் படைகளைத் திரட்டி
ஆக்டேவியனைப் போர்க்களத்தில் எதிர்கொண்டனர்.

ஆனால், எப்போதும்
தந்திரமாக காய்களை நகர்த்தும் ஆக்டேவியன் படைகள் முன்பு எளிதில்
தோற்றுப்போயினர். இருவரும் நாட்டைவிட்டே விரட்டப்பட்டனர். சிசியான் என்ற
இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்த புல்வியா, அங்கேயே நோய்வாய்ப்பட்டு மரணம்
அடைந்தாள்.

அவள் இறந்த செய்தி தாமதமாகத்தான் ஆண்டனியை வந்தடைந்தது.
தனது அதிகாரப்பூர்வ மனைவி என்பதால் ஓரிரு துளிகள் கண்ணீர் சிந்தினான்.
அத்துடன், ஆக்டேவியனின் கை வேகமாக ஓங்குவதால், தான் ரோமாபுரிக்கு உடனே
புறப்பட்டுச் செல்வது அவசியம் என்றும் உணர்ந்தான். அதற்கான ஏற்பாடுகள்
அதிவேகமாக நடைபெற்றன. அவன் ரோம் புறப்படும் நாளும் வந்தது.
ஆண்டனி
ரோமாபுரிக்கு செல்வது கிளியோபாட்ராவுக்குப் பிடிக்கவில்லை. அவன்,
தன்னுடனேயே இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.. அதனால், தனக்கு என்னவென்றே
தெரியாத நோய் வந்தது போல் அழகாக நடித்தாள்..

இதை, தனது நாடகத்தில் உயிரோட்டத்துடன் வர்ணிக்கிறார் ஷேக்ஸ்பியர்.

"ஆண்டனி...
ரோமுக்கு கண்டிப்பாக போய்த்தான் ஆக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டு,
அதற்காக பொய் காரணங்களை என்னிடம் கூற வேண்டாம். போகிறேன் என்று
சொல்லிவிட்டுச் செல்லுங்கள். அந்த சொர்க்கமே எனது இதழிலும், விழியிலும்
இருக்கிறது என்று நீங்கள் முன்பு பேசியது உண்மையாக இருந்தால்,
என்னைவிட்டுப் போகமாட்டேன் என்றல்லவா முடிவெடுத்து இருக்க வேண்டும்?
என்னைவிட்டு நீங்கள் சென்றாலும், உங்களுக்காக எகிப்தில் ஒரு இதயம்
இருக்கிறது என்பதை உணர்ந்தால் மட்டும் போதும்..." என்ற கிளியோபாட்ராவின்
மீன் விழிகளில் கண்ணீர் இழையோடிக் கொண்டிருந்தது.

"என்னை மறுபடியும்
மறுபடியும் போகாதே... என்று சொல்லாதே, கிளியோபாட்ரா. நான் அங்கே செல்வது
காலத்தின் கட்டளை. நீ நினைப்பதுபோல் நான் உன்னைப் பிரிந்து அங்கே
செல்லவில்லை. உனக்காக எனது இதயத்தை இங்கே விட்டுவிட்டுதான் போகப்போகிறேன்".

"எனக்காக உங்கள் இதயத்தையே இங்கே விட்டுவிட்டு போகப்போவதாகச் சொல்கிறீர்கள்? அப்படியென்றால், இங்கேயே இருந்துவிடலாமே..."

"இல்லை,
கிளியோபாட்ரா! ரோமாபுரியில் உள்நாட்டு குழப்பம் உருவாகி இருக்கிறது.
முன்பு வெறுக்கப்பட்டவர்கள் பலம் பெறுகிறபோது, புதிதாய்
நேசிக்கப்படுகிறார்கள். ஆம்... ரோம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட செக்ஸ்டஸ்
பாம்பேயஸ் மீண்டும் தலையெடுக்கத் துவங்கியுள்ளான். அவனுக்குக் கிடைத்துள்ள
இந்த ஆதரவு, நம்மை அஞ்ச வைக்கிறது. அத்துடன், இன்னொரு காரணமும்
இருக்கிறது..." என்ற, ஆண்டனி அதற்கு மேல் பேச முடியாமல் திடீரென்று
விக்கித்தான்.

"என்ன காரணம்? ..?" பதற்றம் கலந்த ஆர்வத்தோடு கேட்டாள் கிளியோபாட்ரா.

"எனது மனைவி புல்வியா இறந்துவிட்டாள் அல்லவா?"

"ஆமாம்... இப்போது அதற்கு என்ன?"

"அவள்
எனது மனைவி மட்டுமல்ல; மிகச்சிறந்த போர் வீராங்கனையும்கூட! அவளது மறைவு
என்னவென்றே புரியாமல் என்னை ஏங்கச் செய்கிறது..." என்ற ஆண்டனியின் வீரக்
கண்களில் கண்ணீர் துளிகள் அரும்பி பளிச்சிட்டன. அதை கவனித்துவிட்டாள்
கிளியோபாட்ரா.

"புல்வியாவுக்காக நீங்கள் விடும் கண்ணீர் உண்மையானதா
அல்லது நடிப்பா என்று என்னால் அறிய முடியவில்லை. ஆனாலும், உங்களை
நம்புகிறேன். நிச்சயமாக உங்களது இந்தச் செயல் நடிப்பாக இருக்கக்கூடாது
என்று வேண்டிக் கொள்கிறேன். எல்லா கடவுள்களும் உங்களுக்குத் துணை
வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். உங்களது வீர வாளில் எல்லாம்
வெற்றியாகட்டும்..."

"மிகவும் மகிழ்ச்சி அன்பே! உனது பிரார்த்தனை
நிச்சயம் பலிக்கும். வெற்றிவீரனாக மீண்டும் எகிப்து திரும்புகிறேன். நான்
இங்கிருந்து தற்காலிகமாக உன்னைப் பிரிந்து சென்றாலும், உன்னுடன்
இருப்பதாகவே எண்ணுவேன்..." என்ற ஆண்டனி, கிளியோபாட்ராவிடம் விடைபெற்று,
படைவீரர்களுடன் ரோம் புறப்பட்டான்.

இதற்கிடையில் எகிப்தில் ஆண்டனி
போட்ட காமக்களியாட்டங்கள் குறித்து விசாரணை நடத்தினர், ரோமாபுரியின் மூவர்
குழுவின் ஆக்டேவியனும் லெப்பிடசும்!

"லெப்பிடஸ்... ஆண்டனியின் மீது
புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆட்சிப் பரப்பை விரிவுப்படுத்த
எகிப்துக்குச் சென்றவர், கிளியோபாட்ரா விரித்த மோக வலையில்
விழுந்துவிட்டாரே... ரோமாபுரியின் மூவர் குழுவில் தானும் ஒருவர் என்பதை
மறந்துதான் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாரா?"

"அவசரப்பட வேண்டாம்,
இளைய சீஸர். ஆண்டனியின் குணங்கள்தான் நம்மை இப்படி பேச வைத்திருக்கின்றன.
நிச்சயம் அவர் ரோம் திரும்புவார். அவரோடு நட்புறவு பாராட்டுவதுதான்
நல்லது".

"ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?"

"தங்கள் தந்தை
சீஸரைக் கண்டு அஞ்சியவர்கள், இப்போது தலையெடுக்கத் துவங்கிவிட்டார்கள்.
செக்ஸ்டஸ் பாம்பேயஸ் கடல் பகுதிகளை ஆக்கிரமித்துவிட்டான். அவனது ஆதிக்கம்
நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது".

"சரி... என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல வருகிறீர்கள்?"

"அவசரப்பட்டு
ஆண்டனியை ஒதுக்கிவிடாமல், அனைவரும் சேர்ந்து, எதிரிகள் மீது போர் தொடுக்க
வேண்டும். அப்போதுதான் பாம்பேயஸ் போன்ற திடீர் எதிரிகளை விரட்ட முடியும்.
இல்லையென்றால், ரோமப் பேரரசு மீது ஒரு பயம் இல்லாமல் போய்விடும்".

"நீங்கள்
சொல்வதும் சரிதான். ஆண்டனி மீண்டும் ரோம் வரட்டும். அதற்கான ஏற்பாடுகளை
இப்போதே செய்கிறேன்..." என்ற ஆக்டேவியன், "நாம் எல்லாம் ஒரே அணியில்
இருந்தால், நான் எப்போது இந்த ரோமாபுரிக்குத் தனிப்பெரும் பேரரசன் ஆவது?’
என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டே அங்கிருந்து வெளியேறினான்.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:49 pm

ஆண்டனியைத் தற்காலிகமாக பிரிந்த கிளியோபாட்ராவுக்குத் தூக்கம் வர மறுத்தது.
தன்னருகில் உதவிக்கு யாரும் இல்லை என்பது போன்ற தவிப்புக்கு ஆளானாள்.

ஆண்டனியின்
பிரிவைத் தாங்க முடியாத கிளியோபாட்ரா நீண்ட தூக்கம் தரும் மருந்தைத்
தேடியதாக தனது நாடகத்தில் பதிவு செய்கிறார் ஷேக்ஸ்பியர். தூக்க மருந்து
கேட்கும் கிளியோபாட்ராவிடம் ஏன் என்று கேட்கிறாள், சார்மியான் என்ற அவளது
தோழி.

அதற்கு கிளியோபாட்ரா, "எனது ஆண்டனியைப் பிரிந்திருக்கும் இந்த
இடைப்பட்ட காலத்தைத் தூங்கியே கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
அதனால்தான் அப்படி கேட்டேன்" என்கிறாள்.
இதில் இருந்தே, கிளியோபாட்ரா ஆண்டனி மீது எந்த அளவுக்குக் காதல் வசப்பட்டிருந்தாள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஆண்டனியின் பாதுகாப்புக்காக அவனுடன் எல்லைவரை சென்று திரும்பிய தம் படைவீரர்களில் ஒருவனை அழைத்து ஆர்வமாக பேசினாள் கிளியோபாட்ரா.

"வீரனே...
வந்துவிட்டாயா? உன் வருகைக்காகத்தான் இவ்வளவு நேரமும் காத்திருந்தேன்.
ஆண்டனி நல்ல முறையில் புறப்பட்டுச் சென்றாரா? நிச்சயம் அவரது பயணம்
சிறப்பாகத்தான் இருக்கும். உன் முகத்தைப் பார்த்தாலே அது நன்றாகத்
தெரிகிறது..." என்று வேகவேகமாக பேசியவள்,

"சரி... அவர் எனக்கென்று எதுவும் கொடுத்து அனுப்பினாரா?" என்று ஆர்வத்தோடு கேட்டாள்.

"ஆமாம்
அரசியாரே! விலை உயர்ந்த கீழ்த்திசை நாட்டு முத்தினை, பலமுறை முத்தமிட்டு
என்னிடம் தந்தார். இதை, பாதுகாப்பாக எனக்கு உரிய உனது அரசியாரிடம்
சேர்த்துவிடு என்று என்னைப் பணித்தார். இதோ அந்த முத்து..." என்ற வீரன்,
ஆண்டனி பரிசாகக் கொடுத்தனுப்பிய விலை உயர்ந்த முத்தினை கிளியோபாட்ராவிடம்
கொடுத்தான்.

பேரின்ப பரவசத்தோடு அதைப் பெற்றுக் கொண்ட கிளியோபாட்ரா, "வேறு எதுவும் சொன்னாரா?" என்று தணியாத ஆர்வத்தில் கேட்டாள்.

"இன்னும்
சொன்னார் அரசியாரே! எகிப்து அரசியின் காலடியில் பல நாடுகளை இந்த ஆண்டனி
பரிசாக வைப்பான் என்று போய்ச் சொல். கீழ்த்திசை நாடுகள் விரைவில் அவளைத்
தங்களது தலைவியாக அழைக்கும் என்பதையும் மறந்துவிடாமல் சொல்லிவிடு என்று
கூறியவர், தனது குதிரை மீது தாவி ஏறினார்" என்றான், வீரன்.

'என்னைத்
தற்காலிகமாகப் பிரிந்தாலும், அவருக்கு என் மீதான அன்பும், பாசமும்
குறையவில்லை' என்று மனதிற்குள் பெருமிதப்பட்டுக் கொண்டாள் கிளியோபாட்ரா.

இந்தக்
காலக்கட்டத்தில்தான் தான் ஏற்கெனவே நேசித்திருந்த, ஜூலியஸ் சீஸரை விடவும்,
இளம் வீரன் ஆண்டனியை அதிகமாக நேசிக்க ஆரம்பித்து இருந்தாள் கிளியோபாட்ரா
என்று குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.

ஒருமுறை தனது தோழி
சார்மியானிடம், ஜூலியஸ் சீஸரை நான் இதுபோன்று நேசித்து இருக்கிறேனா என்று
ஆண்டனியை மனதில் நினைத்து கேட்டாள், கிளியோபாட்ரா.

அதற்கு சார்மியான், "ஓ... அந்த மாவீரரையா?" என்று ஆர்வமாகக் கேட்டாள்..

அவள் இப்படி சொன்ன மாத்திரத்தில் கன்னம் சிவந்து கோபமானாள் கிளியோபாட்ரா.

"இனி
ஒருமுறை நீ சீஸரை அதுபோன்று பெருமையாக அழைத்தால், நான் உன் கழுத்தைத்
திருகிக் கொன்றுவிடுவேன். மாவீரன் என்றால், அது ஆண்டனிதான் என்று சொல்"
என்று கூறி செல்லமாக மிரட்டினாள்..

கிளியோபாட்ரா இப்படிச்
சொன்னதும், சார்மியானுக்குத் திடீர் சந்தேகம். சீஸர் உயிரோடு இருக்கும்வரை
அவரை நாம் புகழ்ந்து பேசினால்தான் இவளுக்குப் பிடித்தது. இப்போது தலைகீழாக
மாறிவிட்டாளே... என்று மனதிற்குள் புலம்பியவளுக்கு, கிளியோபாட்ராவின்
மனதில், மறைந்த சீசருக்கு இப்போது இடம் இருக்கிறதா இல்லையா என்பதை
அறிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது. அதை அவள் கிளியோபாட்ராவிடம் சட்டென்று
கேட்டும்விட்டாள்.

கோபமான கிளியோபாட்ரா, "ஆண்டனியோடு சீஸரை
ஒப்பிட்டு நீ பேசியது இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். நான் சீஸரை
நேசித்தது அந்தக் காலம். அப்போது நான் சிறுமி. என் உள்ளம் பக்குவம்
அடையாமல் இருந்தது. அனுபவம் இல்லாததால் சீஸரைப் புகழ்ந்து பேசிவிட்டேன்.
ஆனால், இப்போது நிலைமை வேறு. ஆண்டனியைத்தான் நான் முழுமையாக நேசிக்கிறேன்.
அதுதான் உண்மை!" என்று கிளியோபாட்ரா கூறியதாக வரலாற்றில் பதிவு செய்கிறார்
ஷேக்ஸ்பியர்.

இதற்கிடையில், ரோமாபுரிக்கு வந்து சேர்ந்தான் ஆண்டனி. அவனும், ஆக்டேவியனும், லெப்பிடசும் சந்திக்க ஏற்பாடு ஆனது.
மனைவியைப்
பறிகொடுத்த சோகம் எட்டிப் பார்த்திருந்த ஆண்டனி, அதற்குக் காரணம்
ஆக்டேவியன்தான் என்று கருதியதால் சற்றே கோபத்துடன் காணப்பட்டான்.
ஆக்டேவியனும், ஆண்டனி தூண்டிவிட்டதால்தான் புல்வியா தனக்கு எதிராகக் கலகம்
செய்தாள் என்று கருதினான்.

ஆண்டனியும், ஆக்டேவியனும் சண்டை
இட்டுக்கொண்டால் மூவர் கூட்டணிக்கே ஆபத்தாகிவிடும் என்று எண்ணிய, அந்த
கூட்டணியின் மூன்றாவது ஆட்சியாளனான லெப்பிடஸ் இருவரையும் சமரசம் செய்யும்
நோக்கத்துடனேயே பேசினான். அதனால், இருவரும் சற்றே இறங்கி வந்து
பேசினார்கள்.

முதலில், மூவர் கூட்டணியின் முதலாமவனும், ஜூலியஸ் சீஸரின் அரசியல் வாரிசுமான ஆக்டேவியனே பேசினான்.

"ஆண்டனி...
நீங்கள் எகிப்தில் தங்கியிருந்ததைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு
எதிராக தாங்கள் செய்த சதிதான் அதிர்ச்சியாக உள்ளது".

"என்னது... நான் சதி செய்தேனா? அரசியல் அனுபவம் அதிகம் இல்லாத உனக்கு எதிராக சதி செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை".

"அப்படியென்றால்,
தங்கள் மனைவி புல்வியா உங்களது சகோதரனுடன் சேர்ந்து எனக்கு எதிராக கலகம்
விளைவித்ததை எப்படி எடுத்துக்கொள்ளச் சொல்கிறீர்கள்?"

"எனது
சகோதரன், எனது மனைவியுடன் சேர்ந்து உனக்கு எதிராக கலகம் செய்தது, எனக்கு
ஆதரவாகத்தான் என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? அதேநேரம், நீ என்னுடன்
சண்டையிட ஆசைப்பட்டால் வேறு காரணத்தைத் தேடு".

"நீங்கள் சொல்வது உண்மைதான் என்பதை நான் எப்படி நம்புவது?"

"நம்பித்தான்
ஆகவேண்டும். ஆட்சிப் பொறுப்பில் நான் உனது பங்காளி. எனது சகோதரன், நீ
சொல்வதுபோல் கலகம் ஏற்படுத்தினால் அது என்னையும் சேர்த்தே பாதிக்கும்.
அதனால், நானும் அவனது கலகத்தை அங்கீகரிக்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில்
இந்த நாட்டின் மூன்றில் ஒரு பகுதியைக் கட்டிக்காப்பது என்பது எளிதான
ஒன்றுதான். ஆனால், புல்வியா போன்ற ஒருத்தியுடன் குடும்பம் நடத்துவது என்பது
அதைவிட கஷ்டம். மேலும், அவள் கலகம் செய்ய காரணம், அவளது சொந்த
உணர்ச்சிகளும், சூழ்ச்சிகளும்தான். அதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.
மற்றபடி, அவளது கலகத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லவே
இல்லை. இதற்கு மேலும் என்னால் விளக்கம் அளிக்க முடியாது".

"சரி... அந்த விஷயத்தை விட்டுவிடுங்கள். அதேநேரம், இன்னொரு வாக்குறுதியையும் நீங்கள் மீறிவிட்டீர்கள்".

"என்ன வாக்குறுதி?"

"எனக்குத்
தேவைப்படும்போது ஆயுத உதவியும், பொருள் உதவியும் செய்ய வேண்டும் என்பது
நம் இருவருக்கும் இடையே உள்ள உடன்பாடு. ஆனால், அதை நீங்கள்
மறந்துவிட்டீர்கள்".

"இல்லை, ஆக்டேவியன். நான் உன்னை மறக்கவில்லை.
என்னையே மறந்துவிட்டேன். என் மனைவியின் கலகத்திற்கும், இதற்கும்தான்
தொடர்பு இருக்கிறது. அதையும் சேர்த்தே ஒப்புக் கொள்கிறேன்".

"என்ன சொல்ல வருகிறீர்கள்?"

"நான்
எகிப்தில் இருந்து ரோமாபுரி திரும்ப வேண்டும் என்பதற்காகவே என் மனைவி
புல்வியா தங்களை எதிர்த்து கலகம் செய்திருக்கிறாள் என்பது எனது கணிப்பு.
அதற்காக நான் வருந்துகிறேன். தேவைப்பட்டால் மன்னிப்பும் கேட்கிறேன்..."
என்று ஆண்டனி இறங்கி வந்தபோது, லெப்பிடஸ் குறுக்கிட்டான்.

"சபாஷ்
ஆண்டனி. உங்களது பெருந்தன்மையான முடிவை வரவேற்கிறேன். இளைய சீஸர் அதை பெரிய
விஷயமாக கருதமாட்டார் என்று உறுதியாகச் சொல்கிறேன்..." என்று கூறி,
ஆக்டேவியனின் கோபத்தையும் குறைத்தான்.
தொடர்ந்து, ஆக்டேவியன், ஆண்டனி
இருவரும் சமாதானம் ஆனார்கள். மனம் விட்டுப் பேசினார்கள். அதன்
தொடர்ச்சியாக, தனது சகோதரி ஆக்டேவியாவை ஆண்டனிக்கு மறுமணம் செய்து கொடுக்க
முன் வந்தான் ஆக்டேவியன். ஆண்டனியும் அதற்குச் சம்மதித்தான்.
ரோமாபுரியில் உள்ள ஆக்டேவியனின் அரண்மனையில் அன்றைய தினம் பரபரப்பு
தொற்றிக் கொண்டது. ஆம்... அன்றுதான், ஆக்டேவியனின் தாய் வழி சகோதரி
ஆக்டேவியாவை கிளியோபாட்ராவின் மனம் கவர்ந்த ஆண்டனி மறுமணம் செய்து கொள்ளும்
விழா எளிய முறையில் நடந்தது. ஆண்டனிக்கு மட்டுமின்றி ஆக்டேவியாவுக்கும்
இது மறுமணம்தான். ஏற்கனவே அவளுக்கு முதல் கணவன் மூலம் 3 குழந்தைகள்
இருந்தனர். அவளது கணவன் இறந்துபோய்விட்டதால், அவளை ஆண்டனிக்கு மறுமணம்
செய்து வைத்தான் ஆக்டேவியன். அதில் அவனது சுயநலமும் கலந்திருந்தது.

இரவு
வந்ததும் புதுமணத் தம்பதியரான ஆண்டனியும் ஆக்டேவியாவும் முதலிரவு அறையில்
பளிச்சிட்ட விலை உயர்ந்த அலங்கார மஞ்சணையில் அமர்ந்திருந்தனர். அமைதியான
சுபாவம் கொண்ட ஆக்டேவியா வழக்கம்போல் அமைதியாகவே இருந்தாள். ஆண்டனிதான்
அவளிடம் முதலில் பேசினான்.

"அன்பே ஆக்டேவியா... என்னைப் பற்றி நீ
பலவாறு கேள்விப்பட்டு இருப்பாய். நீ கேள்விப்பட்டவை அனைத்தும்
உண்மையாகக்கூட இருக்கலாம். நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. அதேநேரம்,
உன்னை, உனது விருப்பம் இல்லாமல் மணந்துகொண்டு விட்டேனா என்று
சந்தேகிக்கிறேன்..."

அதுவரை அமைதியாக இருந்த ஆக்டேவியா மெல்ல பேசினாள்:

"அப்படியெல்லாம் தவறாக எதையும் நான் எண்ணவில்லை. மாவீரனான உங்களிடம் குற்றம் கண்டுபிடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்".

"நல்லது
ஆக்டேவியா. உனது பெருந்தன்மையை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறது..."
என்ற ஆண்டனி, அவளை இறுக்கமாக அணைத்தான். அவளுடன் இயல்பாக கலந்தான்.

மறுநாள்
காலை ஆண்டனிக்கு முன்னதாகவே ஆக்டேவியா எழுந்து குளித்தும்
முடித்திருந்தாள். அழகான மென்மையான ஆடை அவளது கட்டழகை மெல்லிய திரை போட்டு
மறைத்திருந்தது.

ஆக்டேவியாவின் பேரழகில் மீண்டும் சிலிர்த்துப் போன ஆண்டனி, அவளது சிவப்பு கையை வேகமாக பிடித்து இழுத்தான்.
அப்போது ஆக்டேவியா "உங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டவை எல்லாம் உண்மையாகத்தான் இருக்குமோ..." என்று இழுத்தாள்.

"அப்படி என்ன கேள்விப்பட்டாய்?"

"இல்லை...
பெண்கள் விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் சபலம் என்றார்கள். நானும், எல்லா
ரோமாபுரி ஆண்களிடமும் இருக்கக்கூடிய விஷயம்தானே என்று அதைப் பெரியதாக
எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், அந்த விஷயத்தில் நீங்கள் இந்த அளவுக்கு
வேகமாக இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்ற ஆக்டேவியா,
ஆண்டனியின் தலை முடியை வேகமாக கோதிவிட்டு அங்கிருந்து அப்போதைக்கு
அகன்றாள்.

எகிப்தில் கிளியோபாட்ராவோ ஆண்டனியின் நினைவால் வாடிக்
கொண்டிருந்தாள். ஆண்டனியின் காமக்களியாட்டத் தேவைகளுக்கு அவளும், எகிப்தின்
அலெக்ஸாண்டிரியாவும் தேவைப்பட்டதால்தான், அங்கே அவன் மதி மயங்கிக்
கிடந்தான் என்பது அவளுக்கு அதுவரை தெரியாமலேயே இருந்தது.

ஆண்டனியைக்
காணாத கிளியோபாட்ராவின் தேகம் மெலிந்து போய் காணப்பட்டது. முகத்தில்
எப்போதும் காணப்படும் மகிழ்ச்சி காணாமல் போய் இருந்தது. சோகமாய்
உறைந்துபோய் இருந்த அவளை உசுப்பேற்றிவிட்டாள் சார்மியான்

"எகிப்து
அரசியே! உங்கள் சோகத்திற்கான காரணம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். மாவீரர்
ஆண்டனி தற்காலிகமாகத்தான் உங்களை விட்டு இப்போது பிரிந்திருக்கிறார். அவர்
உங்களைத் தேடி விரைவில் இங்கு வருவார். அதனால் நீங்கள் எப்போதும்போல்
சந்தோஷமாக இருங்கள்".

"நல்லது சொன்னாய் என் அருமைத் தோழி. உனது இந்தப் பேச்சு எனக்கு ஆறுதலைத் தருகிறது. உன்னுடன் விளையாட ஆசைப்படுகிறேன்".

"எனக்கும் ஆசைதான் அரசி. ஆனால் என் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், தங்களுடன் ஓடிப் பிடித்து விளையாடுவதில் சிரமம் ஏற்படும்."

"அப்படியென்றால், இப்போது என்னுடன் விளையாட யார்தான் துணைக்கு வருவார்?"

"இதோ...
மார்டியான் வருகிறான். அவனோடு விளையாடுங்கள்..." என்று, எதிரே வந்து
கொண்டிருந்த திருநங்கையான மார்டியானை சுட்டிக்காட்டினாள் சார்மியான்.

ஆனால்,
கிளியோபாட்ராவுக்கு ஓடியாடி விளையாட வேண்டும் என்கிற ஆசை வரவில்லை.
ஆண்டனியுடன் மீன் பிடித்து பொழுது போக்கிய நாட்கள் நினைவுக்கு வர... "மீன்
பிடிக்கச் செல்லலாம்" என்றாள்.

அப்போது வேகவேகமாக வந்தான் தூதுவன் ஒருவன். அவனைப் பரபரப்புடன் ஏறிட்டாள் கிளியோபாட்ரா.

"தூதுவனே...
உன் வேகத்தைப் பார்த்தால் மகிழ்ச்சியான செய்தி ஏதேனும் கொண்டு
வந்திருக்கிறாய் என்று நினைக்கிறேன். ஆண்டனி என்னைப் பார்க்க வந்து கொண்டு
இருக்கிறாரா? அல்லது, நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்டு, தூது அனுப்பி
இருக்கிறாரா? உண்மையை வேகமாகச் சொல்..."

"நம் மாவீரர் ஆண்டனி அவர்களைப் பற்றிய செய்திதான் அரசி".

"அப்படியானால் வேகமாகச் சொல். தேனான செய்தி கொண்டு வந்திருக்கும் உன் பேச்சைக் கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்".

"நான் கொண்டு வந்துள்ள செய்தியை எப்படி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் அரசி"!

"சந்தோஷம்
எந்த அளவுக்கு நம்மைப் பாதிக்கும் என்று நான் நன்கு அறிவேன். உன்னிடமும்
அந்தப் பாதிப்புதான் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். விரைவாக
அந்த நல்ல செய்தியைச் சொல்..."

"அரசியாரே... நான் கொண்டு வந்துள்ள செய்தி நல்ல செய்தி அல்ல..."

"அப்படியானால் கெட்ட செய்தியா? என் ஆண்டனி இறந்துவிட்டாரா?"

"அப்படி இல்லை அரசி..."

"என்ன சொல்ல வருகிறாய்? என்னை மேலும் குழப்பத்திற்கு ஆளாக்காமல் உண்மையை மறைக்காமல் சொல். நீ கொண்டு வந்துள்ள செய்தி என்ன?"

"நம் மாவீரர் ஆண்டனி, ஆக்டேவியா என்ற அழகான பெண் சொல்வதையெல்லாம் கேட்கத் தொடங்கி இருக்கிறாராம்".

"வார்த்தையை
அளந்து பேசு. ஆண்டனிக்கு அழகான காதலி நான் ஒருத்தி மட்டும்தான். இனியும்
அந்தப் பெண்ணை அழகி என்று சொன்னால் நான் உன் நாக்கை அறுத்துவிடுவேன்.
சரி... அந்த ஆக்டேவியா யார்?"

"இளைய சீஸரான ஆக்டேவியனின் தாய் வழி சகோதரியாம்".

"அவளுக்கும், என் ஆண்டனிக்கும் என்ன முடிச்சு போடுகிறாய்?"

"நான் சொல்வதைக் கேட்டு வருத்தம் கொள்ள வேண்டாம் அரசியாரே... நான் சொல்லப் போவது முற்றிலும் உண்மையானதுதான்".

"உள்ளதை உடனடியாகச் சொல். என் பொறுமையை மேலும் சோதிக்காதே..."

"அரசி...
நம் மாவீரர் ஆண்டனிக்கும், அந்த ஆக்டேவியாவுக்கும் திருமணம்
ஆகிவிட்டது..." என்று சொன்ன அந்தத் தூதுவன் மேற்கொண்டு எதையும் சொல்லாமல்
வாய் பொத்தி அமைதியானான்.

அதே நேரம், கிளியோபாட்ரா கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாள். தகவல் சொன்ன தூதுவனின் இடது கன்னத்தில்
"பளார்" என்று ஒரு அறைவிட்டாள். அதைத் தாங்க முடியாத அவன் அங்கேயே சுருண்டு விழுந்தான்.

ஷேக்ஸ்பியரும் அவளது அந்த நேரத்திலான கோபத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துகிறார்.

ஆண்டனிக்கும்,
ஆக்டேவியாவுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று சொன்ன தூதுவனுக்கு 'மிக
மோசமான தொற்றுநோய் தாக்கட்டும்' என்று சாபமிடுகிறார் அவர்.

தூதுவன்
உண்மையையே சொன்னாலும், ஆண்டனிக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் திருமணம் ஆகி
இருக்காது என்றே நம்பினாள் கிளியோபாட்ரா. அவளது தோழி சார்மியான் கூறிய
சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் உளற ஆரம்பித்தாள்.

"ஆண்டனிக்குத்
திருமணம் ஆகிவிட்டது என்ற செய்தி பொய்யாக இருந்தால், எனது எகிப்தின் பாதிப்
பகுதியை இழக்கக்கூட தயாராக இருக்கிறேன்..." என்று, அப்பாவியாய் புலம்பிய
அவளைப் பார்க்கவே சார்மியானுக்குப் பரிதாபமாக இருந்தது.
அந்தநேரத்தில்
கிளியோபாட்ரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால், ஆண்டனிக்கு திருமணம் ஆன
விஷயத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மயக்கமாகி சரிந்தாள்.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:50 pm

அலெக்ஸாண்டிரியாவில் இருந்து ரோமிற்கு ஆண்டனி வந்து ஆறு மாதங்கள் வேகமாக
ஓடியிருந்தன. ஒருபுறம் ஆசைக் காதலி கிளியோபாட்ரா இரட்டைக் குழந்தைகளை
வயிற்றில் சுமந்தபடி நிறைமாத கர்ப்பிணியாக இருக்க, மறுபுறம் மறுமணம் செய்து
கொண்ட ஆக்டேவியாவுடன் இன்பமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

திருமணமான
சில மாதங்களிலேயே ஆண்டனி மூலம் கர்ப்பம் தரித்தாள் ஆக்டேவியா. அவளது
வயிற்றில் பெண் சிசு உருவாகியிருந்தது. இதற்கிடையில், நிறைமாத கர்ப்பிணியாக
இருந்த கிளியோபாட்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அலெக்ஸாண்டிரியாவில்
இருந்து மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்தும் கைதேர்ந்த மருத்துவச்சிகள்
முன்னதாகவே வரவழைக்கப்பட்டு இருந்தனர். கிளியோபாட்ராவுக்கு முதலில் ஒரு ஆண்
குழந்தையும், அதைத் தொடர்ந்து பெண் குழந்தையும் பிறந்தன. ஆண் குழந்தை
அலெக்ஸாண்டர் ஹெலியோஸ் என்றும், பெண் குழந்தை கிளியோபாட்ரா செலின் என்றும்
அழைக்கப்பட்டனர்.

ஆண்டனி மூலம் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை
ஆசையோடு எடுத்து முத்தமிட்டாள் கிளியோபாட்ரா. அவளுக்கும் ஜூலியஸ்
சீஸருக்கும் பிறந்த சிறுவனான டாலமி சீஸர் இரு குழந்தைகளையும் ஆசையோடு
தொட்டு சிலிர்த்தான்.

கிளியோபாட்ரா இரட்டைக் குழந்தைகளைப்
பெற்றெடுத்த தகவல் ரோமாபுரிக்கும் பறந்தது. ஆனால், ஆண்டனியோ ஆக்டேவியாவுடன்
ஏதென்சுக்குச் சென்றிருந்தான். அங்கிருந்தபடி தனது கட்டுப்பாட்டிற்குள்
வந்த நாடுகளை ஆட்சி செய்ய ஆரம்பித்திருந்தான் அவன். அங்குள்ள பிரம்மாண்ட
அரண்மனையில் புதிய மனைவி ஆக்டேவியாவுடன் குடும்பம் நடத்தி வந்தான்.
ஆக்டேவியாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

ஆக்டேவியா மிகவும்
அழகானவள்தான். ஆனால் நாட்கள் நகர நகர, குழந்தையைப் பெற்றெடுத்த ஆக்டேவியா
பொலிவிழக்கத் தொடங்கினாள். ஆண்டனிக்கும் அவள் மீதான மோகம் வெகுவாகக்
குறைந்தது. அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்ட அதே நேரம் ஆக்டேவியாவின் சகோதரன்
ஆக்டேவியனுக்கும், ஆண்டனிக்கும் இடையே பனிப்போர் துவங்கி இருந்தது.

ஆண்டனிக்கும்
கிளியோபாட்ராவுக்கும் இடையே உள்ள உறவு பற்றியும் ஆண்டனியின் போர்
நடவடிக்கைகள் பற்றியும் குற்றம் சுமத்தினான். மூவர் கூட்டணியின்
உடன்பாடுகளை ஆண்டனி மீறுவதாகவும் குற்றம் சாட்டினான்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், ஒரு நாள், ஆக்டேவியாவுடன் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டான் ஆண்டனி.

"ஆக்டேவியா!
உன் சகோதரனைக் கண்டித்து வை. அவன், மூவர் கூட்டணி ஒப்பந்தத்தை மீறி
செக்ஸ்டஸ் பாம்பேவுக்கு எதிராக போர் செய்திருக்கிறான். தனது எதிர்காலத்
திட்டம் பற்றிய அறிக்கை வெளியிட்டு இருப்பதோடு, என்னைப் பற்றியும் அவதூறு
பேசி இருக்கிறான். ".

"நீங்கள் தவறாக கருத வேண்டாம். யார், யாரோ
சொல்வதையெல்லாம் நம்ப வேண்டாம். ஆக்டேவியன் என் சகோதரன். நமக்கு எதிராக
எதையும் சொல்லியிருக்க மாட்டார்".

"நீதான் உன் சகோதரனை மெச்சிக் கொள்ள வேண்டும். அவன் என்னைப் பற்றி தவறாக பேசியது உண்மை. ".

"என் மனைவியாக உன்னிடம் ஒன்றை மட்டும் எதிர்பார்க்கிறேன்".

"என்ன எதிர்பார்க்கிறீர்கள்? உங்கள் விருப்பத்தை நான் நிறைவேற்றுகிறேன்".

"எனக்காக நீ தூது செல்ல வேண்டும்".

"என்ன தூது? "

"உன்
சகோதரனிடம்தான் நீ தூது செல்ல வேண்டும் மிக விரைவிலேயேஎனக்கும்,
அவனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு நீதான் தீர்வு காண வேண்டும்.
அந்தத்தீர்வு எனக்கு சாதகமாக இருக்க வேண்டும்" என்ற ஆண்டனி, அங்கிருந்து
சட்டென்று வேகமாக வெளியேறினான்.

சில நாட்களில் ஆக்டேவியா,
ஆண்டனியிடம் விடைபெற்று ஏதென்சில் இருந்து ரோமாபுரிக்குப் புறப்பட்டாள்.
அவளது கையில் ஒரு பெண் குழந்தை இருக்க... அவளது வயிற்றில் ஆண்டனியின்
இன்னொரு வாரிசும் உருவாகத் துவங்கி இருந்தது. அதுவும் பெண் குழந்தைதான்!
ஏதென்சில் இருந்து ரோமாபுரிக்கு வந்து சேர்ந்த ஆக்டேவியாவுக்கு
ஏமாற்றம்தான் காத்திருந்தது. அவளது சகோதரன் ஆக்டேவியன், ஏன் இங்கு வந்தாய்
என்று கேட்காத குறையாகத்தான் வரவேற்றான். அருகில் தோழியர் இருந்ததால் வந்த
கண்ணீரையும் கண்ணுக்குள் விழுங்கிக்கொண்டு பேசினாள்.

"என்னை வாய் நிறைய புன்னகை வார்த்தைகளோடு வரவேற்க மாட்டாயா?"

"...
ஏன் திருட்டுத்தனமாக என்னைப் பார்க்க வந்து இருக்கிறாய் ஆக்டேவியா? நீ
ஆண்டனியின் மனைவி என்றால் மாபெரும் படையுடன் அல்லவா என்னைப் பார்க்க
வந்திருக்க வேண்டும்? நீ வரும் வழியில் திரண்டிருந்த மக்கள் எல்லோரும்
முதுகு வளைந்து அல்லவா உன்னை வரவேற்றிருக்க வேண்டும்? அதற்கு முன்னதாக,
அந்த மக்கள் எல்லோரும் உன் வருகையை எதிர்பார்த்து தவம் கிடந்திருக்க
வேண்டுமே! ஆனால், அப்படி எதுவும் இங்கே நிகழவில்லையே... நீ ஒரு
வேலைக்காரியைப் போல் அல்லவா இந்த ரோமுக்கு வந்திருக்கிறாய்? உன்னிடம்
அன்பைப் பொழிய வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். ஆனால், அதற்கு இடமே
இல்லாமல் செய்துவிட்டாயே...!"

"நீ என் மேல் வைத்திருக்கும்
அன்புக்கு நன்றி. நீ நினைப்பதுபோல் நான் யாருடைய கட்டாயத்தின் பேரிலும்
இங்கே வரவில்லை. இது என்னுடைய சொந்த விருப்பமே!"

"சொந்த விருப்பம் என்றால்..."

"அதுபற்றி தனியாகத்தான் நான் பேச முடியும்..."

"தாராளமாகப் பேசலாமே..." என்ற ஆக்டேவியன், ஆக்டேவியாவை தனி அறைக்கு அழைத்துச் சென்றான்.

சில நிமிட மவுனங்களுக்குப் பிறகு ஆக்டேவியனே வாய் திறந்தான். "சரி... வந்த விஷயத்தைச் சொல். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன..."

"எனக்கும்
அப்படித்தான். வந்த விஷயத்தை உடனே சொல்லிவிட்டுக் கிளம்புகிறேன். எனது
கணவர் ஆண்டனிக்கு எதிராக நீ போர் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாயாமே...?"

"உன்
கணவருக்கு எதிராக நான் எந்த போர் முயற்சிகளிலும் ஈடுபடவில்லை. எனது
எதிரிகளைத்தான் அழிக்கிறேன். அந்த எதிரிகள், உன் கணவருக்கு வேண்டியவர்களாக
இருந்தால், அதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்ள முடியாது".

"அப்படியென்றால், நீ என் கணவருக்கு எதிராகவும் போர் தொடுப்பாய் அல்லவா?"

"ஏன் நீயே கற்பனை செய்து கொண்டு பேசுகிறாய்? இப்போது உன்னை ஆண்டனி இங்கே அனுப்பக் காரணம் இந்தப் பிரச்சினை அல்ல."

உன் கணவர், தனது ஆசைக் காதலி கிளியோபாட்ராவுடன் இன்னும் நெருக்கத்தை
ஏற்படுத்திக் கொள்ளவே இப்போது இங்கே உன்னை அனுப்பி வைத்து இருக்கிறார்.
"நிச்சயமாக
இருக்க முடியாது. முன்பு வேண்டுமானால் அவருக்கு அந்த கிளியோபாட்ராவின்
மீது மோகம் இருந்திருக்கலாம். ஆனால் என் கணவர் என் மீதுதான் இப்போது ஆசையாக
இருக்கிறார். அதற்கு சாட்சி எனக்கும் அவருக்கும் பிறந்த பெண் குழந்தை
மட்டுமின்றி, என் வயிற்றில் வளரும் அவரது இன்னொரு வாரிசும் கூட!"

"அவசரப்பட்டு என்னை சபித்து விடாதே சகோதரி. இப்போது அவர் எங்கே இருக்கிறார்?"

"ஏதென்சில்தான்!"

"இல்லை...
அவர் ஏதென்சில் இருக்க வாய்ப்பே இல்லை. ஆண்டனிக்கும்
கிளியோபாட்ராவுக்குமான தொடர்பு இப்போது மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்டனி, கிளியோபாட்ராவைத் தேடி சென்றுவிட்டார் என்றே நினைக்கிறேன்".

"ஏற்கெனவே
அவர்கள் கீழ்த்திசை நாட்டு மன்னர்களின் உதவியைத் திரட்டி வருகிறார்கள்.
லிபியா, பாபலகோனியா, அரேபியா, லிகோனியா உள்ளிட்ட பல நாடுகளின் மன்னர்களை
தனக்கு சாதகமாக மாற்றியிருக்கிறார் ஆண்டனி. அவர் வேறு ஏதோ திட்டம்
தீட்டுகிறார் என்பது எனக்கு நன்றாகவே தெரிகிறது. எகிப்தை தலைமையிடமாகக்
கொண்டு ஒரு புதிய அரசை கிளியோபாட்ராவுடன் இணைந்து ஏற்படுத்த அவர் தயாராகி
வருவதாக எனக்கு ஒற்றர்கள் வாயிலாக தகவல்களும் வந்து கொண்டிருக்கின்றன. அதை
வைத்துத்தான், ஆண்டனி உன்னை ஏமாற்றிவிட்டார் என்று கூறுகிறேன்".

"அய்யோ!
நான் என்ன செய்வேன்...? என் கணவர் உண்மையிலேயே நீ சொன்னபடி நடந்தால்...
அய்யோ... அதை நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறதே...!" என்ற
ஆக்டேவியாவின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் வேகமாக பெருக்கெடுத்தன.

"சரி... நடந்ததை எல்லாம் மறந்துவிடு சகோதரி. இதுவரை நீ எழுதிய
கடிதங்கள்தான் உன் கணவர் மீது என்னை போர் தொடுக்கவிடாமல் தடுத்தன. இனி,
எல்லாம் விதிப்படிதான் நடக்கும். அதற்காக நீ தேவையின்றி கண்ணீர் விடுவதில்
எந்த அர்த்தமும் இல்லை. அதனால், என் அரண்மனையில் நன்றாக ஓய்வெடு. நிச்சயம்
உனக்கு நீதி கிடைக்கும்..." என்று கூறிய ஆக்டேவியன், அங்கிருந்து வேகமாக
வெளியேறினான்.

இதற்கிடையில்…

கிளியோபாட்ராவை சந்திக்க எல்லா
ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான் ஆண்டனி. அவளுடன் மீண்டும் சேர்ந்து
வாழ வேண்டும், எகிப்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கீழ்திசை நாடுகளுக்கே
அவளை பேரரசி ஆக்க வேண்டும், தானும் அந்த நாடுகளுக்கு பேரரசன் ஆக வேண்டும்
என்று அவன் திட்டமிட்டுக்கொண்டிருந்தான்.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:51 pm

ஆண்டனிக்குத் தன் மீது மீண்டும் காதல் துளிர்த்துவிட்டது என்பதை அறிந்த
கிளியோபாட்ரா பேரானந்தம் அடையவில்லை. தான் அவன் மீது அளவு கடந்த காதல்
வைத்திருந்தும், அவன் அதை மறந்து ஆக்டேவியனின் விருப்பப்படி அவனது சகோதரி
ஆக்டேவியாவைத் திருமணம் செய்து கொண்டது அவளுக்குப் பிடிக்கவில்லை.

ஆண்டனி
எகிப்தில் தங்கியிருந்தபோது, அவன் கிளியோபாட்ராவுக்காக அளித்த
உறுதிமொழிகள், காதல் பேச்சுக்கள், கனிவான பார்வைகள், ஆதரவானப் பேச்சுகள்,
அக்கறையான கவனிப்புகள்... என்று எல்லாமே அவளை வெகுவாக ஈர்த்திருந்தன.
ஆண்டனி தன் மீது உயிரையே வைத்திருக்கிறான் என்று உறுதியாக நம்பி
இருந்தாள்.. ஆனால், அவனது துரோகம் கிளியோபாட்ராவின் மனதை சற்று ஆழமாகவே
பாதித்தது.

மீண்டும் ஆண்டனி தன்னைத் தேடி வருகிறான் என்பதை அறிந்ததும், அவள் தன் வேதனைகளை தன் ஆழ்மனதிற்குள் போட்டு புதைத்துக் கொண்டாள்.

கிளியோபாட்ராவின்
இந்த முடிவுக்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஆண்டனியின் வலிமையையும் மீறி
ரோமாபுரியில் ஆக்டேவியன் ஆதிக்கம் செலுத்துவதை அறிந்து கொண்ட அவள், அவனால்
தனது ஆட்சிக்கு ஆபத்து நேரலாம் என்று சற்று அஞ்சினாள். அதனால், மீண்டும்
தன்னைத் தேடி வரும் ஆண்டனி மீது வெறுப்பைக் கக்காமல், அவனை அரவணைத்துச்
செல்வதுதான் சரி என்று எண்ணினாள்.

அதன் தொடர்ச்சியாக, எகிப்தின் அலெக்ஸாண்டிரியா நகரை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆண்டனியை வரவேற்கத் தயாரானாள்.

கி.மு.37ஆம்
ஆண்டு இலையுதிர் காலத்தில் ஆண்டனியும், கிளியோபாட்ராவும் நீண்ட
இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டனர். ஆண்டனி, தனது
சுயநலத்திற்காகத்தான் தன்னுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறான் என்பதை
அறிந்திருந்த கிளியோபாட்ரா, அவனிடம் சற்று இடைவெளி விட்டே பழகினாள்.
அதேநேரம், தான் அவனை வெறுப்பது அவனுக்கு எந்தச் சூழ்நிலையிலும்
தெரிந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் எச்சரிக்கையாக இருந்தாள்.

ஆனால்,
ஆண்டனியின் நிலைதான் பரிதாபமாக இருந்தது. ரோமாபுரியில் ஆக்டேவியனின் கை
பலமாக ஓங்கி வருவதால், அவனை அதிரடியாகச் சமாளிக்க கிளியோபாட்ராவின் படை
மற்றும் பொருள் உதவி தனக்கு நிச்சயம் தேவை என்கிற நிலையில் இருந்தான்.
அதனால் அவன், கிளியோபாட்ரா என்ன சொன்னாலும் அதைக் கேட்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டிருந்தான்.

ஆண்டனியின் பரிதாப நிலையைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் கிளியோபாட்ரா.

"ஆண்டனி... இப்போது உங்களிடம் நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. புது மனைவி ஆக்டேவியா செய்த மாயம்தான் இதற்குக் காரணமா?"

"வந்ததுமே என்னைச் சீண்டிப் பார்க்கிறாயா? அவள் வேண்டாம் என்றுதானே நான் இப்போது இங்கே உன்னைத் தேடி வந்திருக்கிறேன்..."

"என்னைத்
தேடி வந்திருப்பதில் தவறில்லை. நான், அதிகமான ஆசை வைத்தது உங்களிடம்தான்.
அப்படிப்பட்ட உங்களிடம் நான் ஏன் வேண்டா வெறுப்பாக பேச வேண்டும்? ஏன்
உங்களைக் கோபத்திற்கு ஆளாக்க வேண்டும்?"

"நீ பேசும் பேச்சைக் கேட்டால் எனக்கு குழப்பம்தான் அதிகரிக்கிறது., தீர்வு கிடைப்பதுபோல் தெரியவில்லையே..."

"சரி...
நடந்ததை விடுங்கள். இனி, நீங்கள் அந்த ஆக்டேவியாவைப் பற்றி நினைக்க
வேண்டாம். ஆனால், எனக்காக நீங்கள் ஒன்றை செய்து ஆக வேண்டும்..."

"நான்
இப்போது அவளமறந்தே போய்விட்டேன். நீதான் நான் வந்தது முதல் அவளைப் பற்றியே
பேசிக் கொண்டிருக்கிறாய்..." என்ற ஆண்டனி, முகத்தில் லேசாக கோபத்தை
வரவழைத்துக் கொண்டு திரும்பி நின்றான்.

அடுத்த நிமிடமே அவனது தோளில்
கை வைத்தாள் கிளியோபாட்ரா. அவளது அந்த திடீர் ஸ்பரிசத்தில் சட்டென்று மனம்
குளிர்ந்தான் ஆண்டனி. அடுத்தநொடியே கிளியோபாட்ரா பக்கம் திரும்பினான்.

"அன்பே
கிளியோபாராட்ரா! நீ போர்த் திறத்தில் மிகப்பெரிய வீராங்கனை மட்டுமல்ல,
மிகச்சிறந்த பெண்ணும்கூட! ஒரு ஆணின் முன்பு எந்த நேரத்தில் எப்படி பேச
வேண்டும், எதை பேச வேண்டும், எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதை
மிகத் துல்லியமாக தெரிந்து வைத்திருக்கிறாய். உனது இந்த நடவடிக்கைகள்தான்
நான் இந்த உலகில் எந்த திசையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும் உன்னை
நோக்கி ஈர்க்க வைக்கின்றன".

"கோபம் எல்லாம் மறைந்துவிட்டதுபோல்
தெரிகிறதே..." என்ற கிளியோபாட்ராவும், ஆண்டனியின் இரு தோள்களையும் தனது
மென்மையான கரங்களால் பற்றினாள்.

"ஆமாம் கிளியோபாட்ரா. நான் இதுவரை
எத்தனையோ ஆயிரம் பெண்களைப் பார்த்து இருக்கிறேன். உன்னைப் போன்ற அன்பு,
அரவணைப்பு, புத்தி சாதுர்யம் கொண்ட பெண்ணை இதுவரையில் நான் பார்த்தது
இல்லை".

"நீங்கள் உற்சாக மனநிலையில் இருப்பதால் இப்போதே அதை கேட்டு
விடுகிறேன். நீங்கள் எனக்காக ஆக்டேவியாவை துறக்க வேண்டும். உங்கள்
எதிரியாகிவிட்ட ஆக்டேவியனின் சகோதரி உங்களுக்கு வேண்டாம். அவளை முறைப்படி
விவாகரத்து செய்து விடுங்கள். ஆக்டேவியாவை விவாகரத்து செய்யும் நீங்கள்,
அடுத்தகணமே என்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதுநாள்வரை
நான் உங்களது ஆசைக்காதலியாக இருந்ததும், இரு குழந்தைகள் பெற்றுக்கொண்டதும்
போதும். இன்னும் ஆயிரம் ஆண்டு கழித்து எனது வரலாற்றைப் புரட்டினால், நான்
யார் யாருக்கோ ஆசை நாயகியாக இருந்தேன் என்று தகவல் இருக்கக்கூடாது. ஜூலியஸ்
சீஸரோடு வாழ்ந்தபோதுதான் எனது ஆசை நிறைவேறவில்லை. இனியாவது அந்த ஆசை
நிறைவேற வேண்டும். அதுவும், கூடிய சீக்கிரமே அது நடைபெற வேண்டும்.
...
இவை மட்டுமின்றி, ஆக்டேவியன் தோற்று, நாம் வெற்றி பெறும்போது டாலமி சீஸர்
(கிளியோபாட்ராவுக்கும் ஜூலியஸ் சீஸருக்கும் பிறந்தவன்: கிளியோபாட்ராவின்
முதல் மகன்) ரோமாபுரியின் பேரரசனாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அத்துடன்,
நமக்கு பிறந்த குழந்தைகளுக்கும் நாடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்..."
என்ற கிளியோபாட்ராவின் பேச்சு, ஆண்டனிக்கு அவள் பிறப்பிக்கும் உத்தரவாகவே
தோன்றியது.

கிளியோபாட்ராவின் உதவி வேண்டியே வந்த ஆண்டனி, அவள் கேட்ட
அனைத்திற்கும் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தான். ஆனால், ஆண்டனியை நம்பாத
கிளியோபாட்ரா, தனது கோரிக்கைகளை ஒப்பந்தமாக்கி, அதில் ஆண்டனியின்
கையெழுத்தையும் பெற்றுக்கொண்டாள். மேலும், கிளியோபாட்ராவின் விருப்பப்படி
அவளை முறைப்படி திருமணமும் செய்து கொண்டான் ஆண்டனி.

ஆண்டனி மீண்டும்
கிளியோபாட்ராவுடன் இணைந்து நாடு பிடிக்கும் வேலையில் இறங்கிவிட்டான்
என்பதை அறிந்த ஆக்டேவியன், ஆண்டனிக்கு எதிராக போர் செய்ய மிகப்பெரும்
படையைத் திரட்ட ஆரம்பித்திருந்தான்.
மீண்டும் கிளியோபாட்ராவுடன் சேர்ந்த ஆண்டனி, தனது படையின் பலத்தைப் பெருக்க
நடவடிக்கைகள் மேற்கொண்தோடு, அவளுடன் இணைந்து குடும்பம் நடத்தவும்
ஆரம்பித்திருந்தான். மனதளவில் ஆண்டனியை மெல்ல வெறுக்க ஆரம்பித்திருந்த
கிளியோபாட்ரா, தனக்கு சக்தி வாய்ந்த ஓர் ஆண் தேவை என்பதால் வேறு வழியின்றி
அவனுடன் இல்லற வாழ்வில் இணைந்திருந்தாள்.

இதற்கிடையில், எகிப்தை
மையமாகக் கொண்டு கீழ்த்திசை நாடுகளில் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்ட ஆண்டனி,
தன்னை கீழ்த்திசை நாடுகளின் சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்திக் கொண்டான்.
எகிப்தைப் பொறுத்தவரை, அந்த நாட்டின் கவர்னராக கிளியோபாட்ராவுடன் ஒப்பந்தம்
செய்து கொண்டான். கிளியோபாட்ரா வழக்கம்போல் எகிப்தின் அழகு ராணியாக வலம்
வந்தாள்.

கிளியோபாட்ராவுடன் ஆண்டனி உறவை மீண்டும் புதுப்பித்துக்
கொண்ட பின், அவன் தன் படைகளை வழி நடத்திச் சென்ற இடங்களில் எல்லாம்
வெற்றிமேல் வெற்றி கிடைத்தது. கிளியோபாட்ரா தன்னுடன் இருப்பதே இதற்கெல்லாம்
காரணம் என்று பெருமிதம் கொண்டான் ஆண்டனி.

சைபிரஸ், பாலஸ்தீனம்,
போனிசியா, சினாய், மத்திய சிரியா, சிலிசியா நாட்டின் பெரும் பகுதிகள் என
கீழ்த்திசை நாடுகளில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொண்டே போனான். அதில்
அவனுக்கு கர்வமும் ஏற்பட்டது. அந்தக் கர்வத்துக்கு வெகுவிரைவிலேயே பலத்த
அடியும் கிடைத்தது!

கி.மு.37 குளிர்காலத்தில் பார்த்தியன்களுடன்
போர் தொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தான் ஆண்டனி. அதற்காக பெரும் படைகளைத்
திரட்டினான். கி.மு.36 மார்ச் மாதத்தில் இரு தரப்பினர் இடையேயும் போர்
துவங்கியது. இந்தப் போரில் ஆண்டனி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும்
என்று நினைத்த கிளியோபாட்ரா அவனுடனேயே போர்க்களத்தில் முகாமிட்டிருந்தாள்.
ஆனால், சூழல் தடையாக இருந்தது. கிளியோபாட்ரா இப்போது மூன்றாவது முறையாக
கருத்தரித்திருந்தாள். அச்செய்தியை ஆண்டனியிடம் கூறினாள்.

"ஆண்டனி...
நம் படைகள் வேகமாகவும் விவேகமாகவும் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.
நிச்சயம் வெற்றி நமக்குத்தான்!" என்று நெஞ்சம் நிமிர்ந்து சொன்னாள்
கிளியோபாட்ரா.

"இதில் என்ன சந்தேகம் கிளியோபாட்ரா? நீ என்னருகில்
இருந்தாலே வெற்றி என் பக்கம்தான்" என்று கூறி பரந்து விரிந்த தோள்களை
உயர்த்திக் கட்டினான் ஆண்டனி

"பார்த்தியன்களுக்கு எதிரான இந்தப் போரில் நான் உங்களுடன் வர முடியுமா என்ற சந்தேகம் எனக்கு திடீரென்று ஏற்பட்டு விட்டது".

"உனக்கு என்ன ஆயிற்று கிளியோபாட்ரா? ஏன் உன் பேச்சில் தயக்கம்?

"ஆண்டனி... இப்போது நான் மீண்டும் கருத்தரித்து இருக்கிறேன். நமக்கு இரண்டாவது முறையாக ஒரு வாரிசு என் வயிற்றில் வளருகிறது".

கிளியோபாட்ரா
சொன்னதைக் கேட்ட ஆண்டனி மிகவும் மகிழ்ந்தான். "மகிழ்ச்சியான செய்திதானே
சொல்லி இருக்கிறாய். இதைக் கேட்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?"

"எனக்கும்
மகிழ்ச்சிதான். இந்த நேரத்தில் உங்களுடன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று
நினைக்கிறேன். அதனால்தான் இதுபற்றி யோசிக்கிறேன்".

"நீ
தேவையில்லாமல் யோசிக்க வேண்டாம் கிளியோபாட்ரா. பார்த்தியன்களுக்கு எதிரான
போரில் வெற்றி நமக்கு என்பது எப்போதோ உறுதி செய்யப்பட்டுவிட்டது. இப்போது
உனக்குத் தேவை ஓய்வு. அதனால், போர் முகாமில் நீ தங்க வேண்டாம். இன்றே...
ஏன், இப்போதே அலெக்ஸாண்டிரியாவுக்குப் புறப்பட்டு விடு. அங்குள்ள நம்
அரண்மனையில் நிறைய ஓய்வெடு" என்று கூறிய ஆண்டனி, அன்றே கிளியோபாட்ராவை
எகிப்துக்கு அனுப்பி வைத்தான்.

அதேநேரம், ஆண்டனியின் வெற்றிக்காக
ஒரு லட்சம் வீரர்களும், பத்தாயிரம் குதிரைப்படை வீரர்களும் தயார் நிலையில்
இருந்தனர். அவர்கள் எதிரி நாட்டை நோக்கி முன்னேறினார்கள்.பார்த்தியன்களும்
பெரும் படையைத் திரட்டி இருந்தனர்.

இரு தரப்பினரும் கடுமையாக
மோதிக் கொண்டார்கள். பகலில் போரும், இரவில் ஓய்வுமாக பல நாட்கள் கழிந்தன.
இந்தப் போர் நிகழ்ந்த காலத்தில் கடும் குளிர் நிலவியது. அத்துடன்,
உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்டது. ஆண்டனியின் பெரும்படை அவற்றைத் தாக்குப்
பிடிக்க முடியாமல் திணறியது. பார்த்தியன்கள், உள்நாட்டுக்காரர்கள் என்பதால்
ஆண்டனியின் பெரும் படை தங்கள் நாட்டிற்குள் நுழைய முடியாமல் தடுப்பு வேலி
அமைத்து தாக்குதல் நடத்தினர்.

எதிர் தாக்குதல் நடத்திய ஆண்டனியின்
படைக்குப் பெரும் பொருட்செலவும், வீரர்களின் திறன் இழப்பும் ஏற்பட்டது.
இன்னும் ஓரிரு மாதங்கள் இந்தப் போர் தொடர்ந்தால் கடும் பஞ்சத்தாலேயே தனது
படைவீரர்கள் மாண்டு விடுவார்கள் என்று அஞ்சினான் ஆண்டனி.
மேலும்,
கருவுற்றிருந்த கிளியோபாட்ரா எப்படி இருக்கிறாளோ என்ற பரிதவிப்பும் அவனை
வாட்டியது. அதனால் அவனது வீரமான பேச்சிலும் சற்று தொய்வு காணப்பட்டது.
இதையடுத்து, இப்போது பார்த்தியன்களை எதிர்த்து போர் புரிய வேண்டாம் என்று
எண்ணிய ஆண்டனி, தனது படையை எகிப்து நோக்கித் திரும்ப உத்தரவிட்டான்.

ஆண்டனியின்
படை பின்வாங்கி எகிப்து நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறது என்ற தகவலை
அறிந்த கிளியோபாட்ரா கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள். மிகப்பெரிய படை
இருந்தும் பார்த்தியன்களை வெல்ல முடியாமல் ஆண்டனி திரும்பி வருகிறாரே என்று
எரிச்சல் அடைந்தாள்.

ஆனால், எகிப்து திரும்பிய ஆண்டனியிடம் கோபத்தை
வெளிப்படுத்துவதற்குப் பதிலாக பாசத்தையே பொழிந்தாள் கிளியோபாட்ரா.
ஆண்டனியே இதை எதிர்பார்க்கவில்லை. பார்த்தியன்களுக்கு எதிராக போர்
முயற்சியில் வீணான பெரும் பொருட்செலவையும், வீரர்களின் திறன் இழப்பையும்
அறிந்திருந்த கிளியோபாட்ரா, ஆண்டனிக்கு உற்சாகம் ஊட்டும் பொருட்டு
அறிவுரைகள் பல வழங்கினாள்.
சில மாதங்கள் கிளியோபாட்ராவின் அரண்மனையிலேயே ஓய்வெடுத்து வந்தான் ஆண்டனி.

கி.மு.36
இறுதியில் ஆண்டனியின் இரண்டாவது குழந்தை பிறந்தது. தாயைப் போலவே அழகில்
ஜொலித்த அந்தக் குழந்தைக்கு டாலமி பிலடெல்பஸ் என்று பெயர் சூட்டி
மகிழ்ந்தனர் தம்பதியினர்.

இதற்கிடையில், ரோமில் ஆதிக்கம் செலுத்தி
வந்த ஜூலியஸ் சீஸரின் அரசியல் வாரிசான ஆக்டேவியன், ஆண்டனிக்கு ஒரு தூது
அனுப்பினான். ஆண்டனியுடன் நட்புறவுடன் பழகிய, "கடல் அரசன்" என்று தனக்குத்
தானே பெயர் சூட்டிக்கொண்டு, கீழ்திசை நாடுகளின் கடல் பகுதியில் ஆதிக்கம்
செலுத்தி வந்தவனுமான செக்ஸ்டஸ் பாம்பேயை வீழ்த்த வேண்டும் என்பதுதான்
அந்தத் தூது.

ஆக்டேவியனிடம் முடியாது என்று சொல்லிவிட்டால், அது தன்
இயலாமையைக் காட்டிவிடும் என்று உணர்ந்த ஆண்டனி, பெரும்படையுடன் செக்ஸ்டஸ்
பாம்பேயை எதிர்கொண்டு போரிட்டு அவனை வீழ்த்தினான்.

ஆண்டனியின் இந்த
உதவிக்குக் கைமாறாக ரோமாபுரியில் ஆண்டனியின் சிலையை நிறுவினான் ஆக்டேவியன்.
ஆண்டனிக்கு ஆக்டேவியன் சிலை நிறுவ இன்னொரு காரணமும் இருந்தது.
கிளியோபாட்ராவை விட்டு விலகி, தனது சகோதரி ஆக்டேவியாவை ஆண்டனி மீண்டும்
ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அது!



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:52 pm

தனது சகோதரி ஆக்டேவியாவைப் பிரிந்த ஆண்டனியை மீண்டும் அவளுடன் சேர்த்து
வைக்க எண்ணி காய்களை நகர்த்தினான் ஆக்டேவியன். அது பற்றி ஒற்றர்களிடமும்
கூறி ஆண்டனிக்கு அனுப்பியவன், ஆண்டனியை ரோமிற்கே வருமாறும் கேட்டுக்
கொண்டான். ஆக்டேவியன் போட்ட இந்தக் கணக்கின் பின்னணியில் கிளியோபாட்ராவின்
முடியாட்சியை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற பெரும் திட்டமும்
இருந்தது.

ஒருவேளை, ஆக்டேவியனின் விருப்பப்படி ஆண்டனி
கிளியோபாட்ராவை விடுத்து மீண்டும் ஆக்டேவியாவுடன் இணைந்திருந்தால்
ரோமாபுரியின் இன்றைய வரலாறு அப்படியே தலைகீழாக மாறியிருக்கும் என்பது
மட்டும் நிச்சயம்! ஆனால், கிளியோபாட்ராவை விட்டுப் பிரிய ஆண்டனிக்கு மனசு
வரவில்லை. இதனால்தானோ என்னவோ, அவனது அழிவும் நெருங்க ஆரம்பித்தது.

அதேநேரம்,
ஆக்டேவியன் செய்த தந்திரம் கிளியோபாட்ராவுக்கும் தெரிந்துவிட்டது. அதை
அவள் வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஆண்டனி தன்னைப் பிரிந்து சென்றுவிடாமல்
இருக்க அவன் மீது மேலும் அன்பைப் பொழிய ஆரம்பித்தாள்.

இதற்கிடையில்,
கி.மு.35 இறுதியில் கிளியோபாட்ரா மற்றும் ஆண்டனியின் படை ஆர்மீனியாவை
முற்றுகையிட்டு வென்றது. அந்நாட்டின் மன்னன் கைது செய்யப்பட்டான்.
ஆர்மீனியா வெற்றியைப் பெரிய விழாவாகக் கொண்டாட முடிவெடுத்தாள்
கிளியோபாட்ரா. கி.மு.34ல் அந்த விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஊர்வலமும்
நடந்தது. கிளியோபாட்ரா, ஆண்டனி மற்றும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும்
ஊர்வலத்தில் தெய்வங்களுக்கு இணையாக அழைத்து வரப்பட்டனர்.

கிளியோபாட்ரா
புதிய ஐஸிஸ் தெய்வமாகவும், ஆண்டனி புதிய டயோனிஸஸ் தெய்வமாகவும் எகிப்து
மக்களால் போற்றப்பட்டனர். கிளியோபாட்ராவின் பேச்சைக் கிளிப் பிள்ளையாக
கேட்கும் அவள் வழி வந்த சிறுவன் 15வது டாலமி, "மன்னர் மன்னன்" என்ற
பட்டத்துடன் எகிப்து அரசனாக பதவியேற்றான். கிளியோபாட்ராவுக்கு "அரசர்களின்
அரசி" என்ற பட்டம் சூட்டப்பட்டது.

இந்த வெற்றி விழாவில், கைது
செய்யப்பட்ட ஆர்மீனியா நாட்டு மன்னன் கிளியோபாட்ரா முன்பு மண்டியிட
பணிக்கப்பட்டான். (கிளியோபாட்ரா மட்டுமின்றி, அக்கால அரச பரம்பரையினர்
எதிரிகளை இப்படித்தான் நடத்தினார்கள்) ஆனால், அவன் மண்டியிட மறுத்து
சீறினான்.

அவனது சுயமரியாதையைப் புரிந்து ஏற்றுக்கொண்ட
கிளியோபாட்ரா, அவனைக் கொல்ல நினைக்காமல் அவனையும் அவனது குடும்பத்தினரையும்
அரசியல் கைதிகளாக சிறை வைக்க உத்தரவிட்டாள். கிளியோபாட்ராவின் இந்தப்
பெருந்தன்மையான முடிவு வரலாற்று ஆய்வாளர்களால் வியப்பாகப்
பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த ஆர்மீனிய வெற்றி விழாவின்
தொடர்ச்சியாக, கிளியோபாட்ரா - ஆண்டனியின் தலைமைக்குக் கீழ் வந்த சில
பகுதிகள் அவர்களது குடும்ப வாரிசுகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.
கிளியோபாட்ராவுக்கும், ஆண்டனிக்கும் பிறந்த இரட்டையரான அலெக்ஸாண்டர்
ஹீலியாசுக்கும், கிளியோபாட்ரா செலினுக்கும் ஆர்மீனியா, மெடியா மற்றும்
யூபிரேட்ஸ் பகுதிகளை ஆளும் அரசுரிமை அளிக்கப்பட்டது. மேலும் அவர்களின்
மற்றுமொரு வாரிசு, இரண்டே வயது ஆன டாலமி பிலடெல்பஸ் வடக்கு சிரியா மற்றும்
சிலிசியா நாடுகளின் மன்னனாக முடிசூட்டப்பட்டான்.

ஆனால்,
கிளியோபாட்ராவுக்கும் ஜூலியஸ் சீஸருக்கும் பிறந்த டாலமி சீஸருக்கு ஆட்சிப்
பகுதிகள் வழங்கப்படவில்லை. அவனை ரோமாபுரியின் மன்னனாக்க வேண்டும் என்பது
கிளியோபாட்ராவின் நெடுநாள் கனவு. அதனால்தான், இந்த விழாவில் அவனுக்கு
முக்கியத்துவம் தரப்படவில்லை.

இந்த வெற்றி விழாவில் கிளியோபாட்ரா,
ஆண்டனி இருவரது உருவமும் பதிக்கப்பட்ட நாணயங்களும் வெளியிடப்பட்டன.
கிளியோபாட்ராவின் தலை வடிவம் இடம் பெற்ற நாணயத்தின் பகுதியில் "அரசர்களின்
அரசி" என்ற குறிப்பும், ஆர்மீனியன் மணிமுடியைத் தரித்த ஆண்டனியின்
தலைப்பகுதி இடம்பெற்ற அதே நாணயத்தின் பின்பக்கத்தில் "ஆர்மீனியா வெற்றி
கொள்ளப்பட்டது" என்ற அடிக்குறிப்பு வாசகமும் இடம்பெற்றன.

எகிப்தில்
நடைபெற்ற இந்த வெற்றிக் கொண்டாட்டத்தை அறிந்த ஆக்டேவியன் கோபத்தின்
உச்சிக்கே சென்றுவிட்டான். ஆண்டனியை வெளிப்படையாக விமர்சனம் செய்யத்
துவங்கினான். அவன் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிக் கிடந்து அவளுக்குச்
சேவை செய்வதாக ரோமாபுரி முழுவதும் பரப்புரை செய்தான். இதன் தொடர்ச்சியாக
கிளியோபாட்ரா, ஆண்டனி குறித்த உண்மைக்கும் புறம்பான பல தகவல்களை ரோமாபுரி
மக்களிடையே பரப்பினான் ஜீலியஸ் சீஸரின் அரசியல் வாரிசான ஆக்டேவியன்.

இப்படியே விட்டால், ரோமாபுரியின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகளையும் கூட
தனக்கும் கிளியோபாட்ராவுக்கும் பிறந்த வாரிசுகளுக்கு ஆண்டனி எழுதி வைத்து
விடுவான் என்றும் கூறி, ரோமாபுரி மக்களைத் தூண்டிவிட்டான்.

தனக்கு எதிராக ரோமாபுரியில் ஆக்டேவியன் பின்னும் சதி வலை பற்றி அறிந்த ஆண்டனி, அவனைக் கடிந்து ஒரு கடிதம் எழுதினான்.

"ஏன்
நீ இப்படி மாறிவிட்டாய்? உன் மனநிலையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு விட்டதா?
கிளியோபாட்ரா எகிப்துக்கு அரசி மட்டுமல்ல; எனக்கு மனைவியும் கூட!........
...
எங்கள் இருவருக்கும் இடையேயான உறவு இன்றோ நேற்றோ பூத்ததல்ல; அது மலர்ந்து
10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. என்னை விமர்சனம் செய்யும் நீ மட்டும்
யோக்கியமானவனா?.." என்று நீள்கிறது அந்த கடிதம்.

ஆண்டனியின்
இக்கடிதத்தைப் படித்த ஆக்டேவியன், அதைக் கிழித்து எறிந்ததோடு, தனது
வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கும் ஆண்டனியை எப்படியேனும் அழித்தே தீருவது
என்ற உறுதியான முடிவுக்கும் வந்தான்.

அதற்கு ஆயுதமாக அவன் கையில்
எடுத்தது, ரோமாபுரியில் ஆண்டனி எழுதி வைத்துவிட்டுச் சென்ற அவனது உயிலை!
ஒருவர் தன்னைப் பற்றி எழுதி வைத்துள்ள உயிலை, அவர் உயிரோடு இருக்கும்போதே
கைப்பற்றுவதும், அதைப் பலர் அறியச் செய்வதும் பெரும் குற்றம். அதையெல்லாம்
எண்ணாமல் ஆண்டனி எழுதி வைத்திருந்த உயிலின் ரகசியத்தைப் பலரும் அறியும்
வகையில் வெளிப்படுத்தத் தயாரானான் ஆக்டேவியன்.
ரோமில் ஆண்டனி எழுதி வைத்திருந்த உயிலை ஆர்வத்தோடு வாசித்தான் ஆக்டேவியன்.

"நான்
இறந்த பிறகு எனது உடல் ரோமானிய ஆட்சிப் பேரவையின் (செனட் சபை) முன்பு
ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அதன் பின்னர் கப்பல் மூலம்
கிளியோபாட்ராவுக்கு அனுப்பப்பட வேண்டும். அலெக்ஸாண்டிரியாவிலேயே எனது உடல்
நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்..." என்று இறுதியாகக் குறிப்பிடப்பட்டிருந்த
அந்த உயிலில், சிசேரியன் என்கிற டாலமி சீஸர்தான் (கிளியோபாட்ரா மற்றும்
ஜூலியஸ் சீஸருக்கு பிறந்தவன்) சீஸருக்கு உண்மையான வாரிசு என்கிற ஆண்டனியின்
நிலைப்பாடும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதோடு, அவன் கிளியோபாட்ராவுக்கு
அன்பளிப்பாக அளித்திருந்த நாடுகள் பற்றிய விவரமும் அந்த உயிலில் பதிவு
செய்யப்பட்டு இருந்தது.

தனது உயிலில் ஆண்டனி குறிப்பிட்டிருந்த இந்த
முக்கியமான தகவல்களை தனக்கான துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தினான்
ஆக்டேவியன். ஆம்..! சபை மரபுகளை மீறி ரோமின் செனட் சபையின் பார்வைக்கு அந்த
உயிலைக் கொண்டு வந்தான். ஆண்டனியின் உயிலில் குறிப்பிடப்பட்டு இருந்த
தகவல்கள் அத்தனையையும் வாசித்துக் காட்டிப் பேசினான்.

"எந்தவொரு
உண்மையான ரோமானியனும் தான் இறந்த பிறகு தனது உடல் சொந்த நாட்டில்தான்
நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்புவான். ஆனால், கிளியோபாட்ரா
மீது கொண்ட மோகத்தினால் ஆண்டனியின் ஆசை மாறிவிட்டது. அவர் ரோமானியனே
கிடையாது..." என்று உணர்ச்சிப்பூர்வமாக ஆக்டேவியன் ஆற்றிய உரை ஆண்டனிக்கு
எதிராக ரோமாபுரி மக்களை திசை திருப்பியது.

இதற்கிடையில்,
ஆக்டேவியாவை விவாகரத்து செய்யும்படி ஆண்டனியை ஏற்கனவே வற்புறுத்திக்
கொண்டிருந்த கிளியோபாட்ரா, அதற்கான கடிதத்தை ஆண்டனி மூலம் ரோமிற்கு
அனுப்பச் செய்தாள். இதையும் ஆண்டனிக்கு எதிராகப் பயன்படுத்தினான்
ஆக்டேவியன்.

சரியாகக் காய்களை நகர்த்தி வந்த ஆக்டேவியனுக்கு ஆதரவாக
ஓரணியில் திரண்டு நின்றனர் ரோமாபுரி மக்கள். மாவீரர் ஆண்டனியை தனது
கவர்ச்சியான அழகால் மயக்கிய கிளியோபாட்ராவை ஆக்டேவியன் கொலை செய்ய
வேண்டும், எகிப்தையும் ரோமாபுரியுடன் இணைக்க வேண்டும் என்று ரோமாபுரி
மக்களைப் பேச வைத்தான் ஆக்டேவியன்.

இது நடந்த சில நாட்களிலேயே
கிளியோபாட்ரா மற்றும் ஆண்டனிக்கு எதிராக போர் அறிவிப்பை வெளியிட்டான்
ஆக்டேவியன். கி.மு.31 ஆரம்பத்தில் ஆக்டேவியனின் பெரும் படை எகிப்தை நோக்கி
ஆவேசத்தோடு புறப்பட்டது. அவர்கள் அலெக்ஸாண்டிரியா கடற்கரையில் வந்திறங்க
ஏராளமான கப்பல்களும் தயாராக நின்றிருந்தன. ஆக்டேவியனின் போர் அறிவிப்பை
ஏற்கனவே எதிர்பார்த்திருந்தாள் கிளியோபாட்ரா. அதனால், அவளும் பெரும்
படையைத் திரட்டினாள். எகிப்து எல்லையை ரோமாபுரி படைவீரர்கள்
நெருங்குவதற்குள் அவர்களைத் தாக்க திட்டம் தீட்டினாள் அவள்.

கி.மு.31 ஜூலை மாதம்

ஆக்டியம்
என்ற இடத்தின் அருகில் அமைக்கப்பட்டிருந்த ஆண்டனியின் படை முகாமில்
போர்வாளை சுழற்றியபடி பரபரப்பாகக் காணப்பட்டாள் கிளியோபாட்ரா. அவளது
வேகத்தைப் பார்த்த ஆண்டனியின் நண்பனான எனோபார்பஸ் பதற்றம் ஆனான்.

"அரசியாரே!
தங்களது வேகத்தைப் பார்த்தால் எங்களுக்கே பயமாக இருக்கிறது. வேகத்தைவிட
விவேகம்தான் வெற்றியைத் தரும் என்பது தாங்கள் அறியாததா?"

"எனது
கோபக்கனல் மீது பரிதாபப் பேச்சை வீசி அதன் வேகத்தை தணித்துவிடாதே.
ஆக்டேவியன் அறிவித்துள்ள போர் எனக்கும், இந்த எகிப்துக்கும்தான் எதிரானது.
இந்த நாட்டு அரசி என்ற முறையில் நான் போர்முனைக்கு செல்வதுதான் சரி".

"அவரசப்பட
வேண்டாம் அரசியாரே! நீங்கள் இந்த வேகத்தில் போர்க்களத்திற்கு வந்தால் நம்
மாவீரர் ஆண்டனியின் கவனம் திசை திரும்பும். அவரது வேகம் எதிரிகளை
அழிப்பதில் இருந்து உங்களைக் காப்பாற்றுவதை நோக்கித் திரும்பிவிடும்.
அதனால், நீங்கள் இப்போது போர்க்களத்திற்கு வருவது சரியல்ல. ஏன்...
அப்படியொரு சூழ்நிலை வராது என்றே நினைக்கிறேன். ஆக்டேவியனின் படைகளை நம்
ஆண்டனியே பந்தாடி விடுவார்".

"இல்லையில்லை... நீ என்னதான் சமாதானம்
செய்தாலும், அதை நான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நான் போர்க்களத்திற்கு
வருவது உறுதி. அதையும் மீறி தடுத்தால், ஆண்டனியின் நண்பன் என்று கூட
பார்க்காமல் உன்னை முதலில் கொன்றுவிட்டு போர்க்களத்திற்கு சென்று
விடுவேன்..." என்று கோபத்தில் கிளியோபாட்ரா கர்ஜித்து முடிக்கவும், ஆண்டனி
வரவும் சரியாக இருந்தது.

"உனக்கு என்ன ஆயிற்று கிளியோபாட்ரா. உனது கோபக்குரல் போர் முகாமையும் தாண்டி கேட்கிறதே...?"

"நானும்
போர்க்களத்திற்கு கிளம்பினேன். ஆனால், இவன்தான் வேண்டாம் என்று கூறி
தடுக்கிறான். அதனால்தான் சற்று உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்".

"போர்க்களத்தில்
உணர்ச்சிவசப்படக்கூடாது என்று நீயே என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறாயே...
அப்படி இருக்கும்போது, நீயே இந்த சூழ்நிலையில் அவ்வாறு நடந்து கொள்ளலாமா?"

"நான்
இப்போது செய்தது சரியா.. தவறா என்று பட்டிமன்றம் நடத்தக்கூடிய நேரமா இது?
எதிரியைக் குறிபார்த்து தாக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு எளிதில் வெற்றி
கிடைக்கும்".

"நீதான் பெரிய ராஜதந்திரி ஆயிற்றே... உன் கணிப்பைச் சொல். அதன்படியே போர்க்களத்தில் முன்னேறுவோம்".

"ரோமில்
இருந்து புறப்பட்டு வரும் எதிரி படைகள் நிச்சயம் கடல் வழியாகத்தான் நம்
நாட்டிற்குள் நுழையும். அதனால், நமது கடற்படையின் பலத்தை அதிகரிக்க
வேண்டும்..." என்று கிளியோபாட்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவள் முன்பு
வந்து பணிந்தான் எகிப்து படைத் தளபதி கனியடிஸ்.

"குறுக்கிடுவதற்கு
மன்னிக்கவும். கடற்போர் விஷயத்தில் எனது கருத்தையும் தெரிவிக்க
விரும்புகிறேன். அதில் தவறு இருந்தால் மன்னிக்கவும்".

"தாராளமாகச் சொல்லுங்கள்".

"கடற்படையைப்
பொறுத்தவரை நம்மைவிட ஆக்டேவியனுக்குத்தான் போர் அனுபவம் அதிகமாக
இருக்கிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்த
பாம்பேயுடன் அவரது படை அடிக்கடி போர் புரிந்துள்ளது. அந்த அனுபவம்
அவர்களுக்கு மிகப் பெரிய பலமாக இருக்கும் என்பது என் கணிப்பு".

அப்போது
ஆண்டனியின் நண்பன் எனோபார்பசும் குறுக்கிட்டான். "நம் தளபதியார் சொல்வது
உண்மைதான்! ஆக்டேவியனின் கடற்படையில் உள்ள மாலுமிகள் மிகவும் திறமைசாலிகள்.
அவர்களுக்கு இருக்கும் அனுபவம் நம் மாலுமிகளுக்கு கிடையாது. அதுவும், நம்
மாலுமிகளில் பலர் புதியவர்கள். திடீர் போரை அவர்களால் எப்படி சமாளிக்க
முடியும் என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது.

... மேலும், எதிரி
படையில் உள்ள கப்பல்கள் அளவில் சிறியவை, வேகமாகச் செல்லக்கூடியவை. ஆனால்,
நம் கப்பல்கள் பிரம்மாண்டாகவும், கனமாகவும் இருப்பதால் அவற்றை வேகமாக இயக்க
முடியாது. அதனால், எதிரி படைவீரர்கள் நம் கப்பலை எளிதில் தாக்கி
சேதப்படுத்துவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதனால், கடலுக்கு மத்தியில்
எதிரி படையை எதிர்கொள்வதைவிட நிலத்தில் தரைப்படையுடன் எதிர்கொள்வதுதான்
சிறந்தது என்பது எனது கணிப்பு.எதிரியை கடலுக்குள்தான் சென்று சந்திக்க
வேண்டும் என்கிற அவசியம் இல்லை. எதிரி படைவீரர்கள் பல ஆயிரம் மைல் தொலைவு
பயணித்து வந்திருப்பதால் அவர்களிடம் சோர்வு அதிகம் இருக்கும். இந்த
பாலைவனப் பகுதியும் அவர்களுக்கு புதிது என்பதால், இங்கே அனுபவப்பட்ட
நம்மால் அவர்களை எளிதில் எதிர்கொண்டு தாக்குதல் நடத்திவிட முடியும்".

"இல்லை
எனோபார்பஸ்! எதிரியை கடலுக்கு மத்தியிலேயே தாக்கி அழித்துவிட வேண்டும்
என்பதுதான் எனது திட்டம். கடலுக்குள்ளேயே அவர்களை அழித்துவிட்டால்
தரைப்படைக்கு வேலை இல்லையே..."

"தாங்கள் சொல்வதும் சரிதான். ஆனால்,
நமது காலாட்படை வீரர்கள் மிகவும் திறமைசாலிகள். பல போர்களில் பங்குபெற்ற
அனுபவம் கொண்டவர்கள். அதோடு, நமது காலாட்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகம்.
அதனால் எதிரிகளை எளிதில் வீழ்த்திவிட முடியும்".

"மீண்டும் நீ தப்பு
கணக்குதான் போடுகிறாய் எனோபார்பஸ். நல்ல நண்பனாக எண்ணி உன் கருத்துக்களைக்
கேட்டாலும் அவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எதிரியை நம் இடத்திற்கு
கொண்டு வருவதை விட தூரத்திலேயே அவர்களைக் காலி செய்வதுதான் என் திட்டம்.
இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. நான் காட்டும் வழிதான்
வெற்றிக்கான வழி!" என்று உறுதியாகவும் உத்தரவாகவும் சொன்னான் ஆண்டனி.

அவனது
கருத்தை கிளியோபாட்ராவும் ஏற்றுக்கொண்டாள். ஆக்டேவியன் படையைவிட தனது
படையில் அதிக கப்பல்கள் இருந்ததால்தான், எப்போதும் தானே முடிவெடுத்து
பழக்கப்பட்ட அவள், முதன் முறையாக போர் விஷயத்தில் ஆண்டனி சொன்னதை
ஏற்றுக்கொண்டாள் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

எதிரியை எப்படி
எதிர்கொள்வது என்று கிளியோபாட்ரா, ஆண்டனி உள்ளிட்டவர்கள் பரபரப்பாக பேசிக்
கொண்டிருந்த அந்த நேரத்தில், ஒரு படைவீரன் மூச்சு வாங்க ஓடி வந்து நின்று,
அதே வேகத்திலேயே பேசினான்.

"அரசியாரே! எதிரி படை எகிப்தை நோக்கி கடல் வழியாக முன்னேறிக் கொண்டிருக்கிறது".



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:53 pm

ஆக்டேவியனின் ரோமானியப்படை எகிப்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. இதை
அறிந்த கிளியோபாட்ராவும், ஆண்டனியும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து
விரிவான ஆலோசனை நடத்தினார்கள். ஆக்டேவியனின் கடற்படையை வெற்றி கொள்ள
எகிப்து கடற்படை வீறுகொண்டு புறப்பட்டது.

நடுக்கடலில் ஆக்டேவியனின்
படையும், கிளியோபாட்ரா மற்றும் ஆண்டனியின் கூட்டுப்படையும் மோதின. ஏற்கனவே
கடற்போரில் தனித்திறன் பெற்றிருந்த ரோமானியப்படை, எகிப்து கூட்டுப்படையை
சுலபமாய் எதிர்கொண்டது. ஆரம்பத்தில் கிளியோபாட்ரா மற்றும் ஆண்டனியின்
கூட்டுப்படைக்கு வெற்றி கிடைப்பதுபோல் தோன்றினாலும், பின்னர் பெரும்
பின்னடைவு ஏற்பட்டது.

கிளியோபாட்ராவும், ஆண்டனியும் தனித்தனி
கப்பல்களில் சென்று தாக்குதல் நடத்தினர். வேகமாக முன்னேறிச் சென்ற
கிளியோபாட்ராவை ரோமானியப் படையினர் திடீரென்று சுற்றி வளைத்தனர். அதை
எதிர்பார்த்திராத கிளியோபாட்ரா கப்பலை வேகமாக திரும்ப உத்தரவிட்டாள். அவள்
பின்வாங்கியதைக் கவனித்த ஆண்டனி, கிளியோபாட்ராவுக்கு ஏதேனும்
பிரச்சினையோ... என எண்ணியவாறு போர் புரிவதை விட்டுவிட்டு கிளியோபாட்ரா
கப்பலை பின்தொடர்ந்தான்.

இருவரது கப்பல்களும் திடீரென்று
பின்வாங்கியதால் எகிப்து கூட்டுப்படை சார்பில் போரிட்ட அறுபது போர்க்
கப்பல்களும் செய்வதறியாது குழப்பத்தில் ஆழ்ந்தன. ரோமானியப்படைய எதிர்கொள்ள
இயலாமல் அவைகளும் பின்வாங்கின. வெற்றிக் களிப்பில் ஆனந்தக் கூத்தாடிய
ரோமானியப்படை அலெக்ஸாண்டிரியாவுக்குள் நுழைந்தது.

உயிருக்கு பயந்து
ஓடிய கிளியோபாட்ராவும், ஆண்டனியும் ஒருவரையொருவர் பார்க்கவே
வெட்கப்பட்டனர். அதுவரை கிளியோபாட்ராவின் பேரழகு மேல் மையல் கொண்டிருந்த
ஆண்டனி, திடீரென்று தனக்கு ஞானோதயம் ஏற்பட்டதுபோல் உணர்ந்தான். பெண்ணின்
அழகே கதியென்று கிடந்ததால்தான் தனக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டதாகக்
கருதினான்.

தனது தோல்வி முகத்தைக் காண சகிக்காத ஆண்டனி பலவாறு
உளறினான் என்று தனது நாடகத்தில் பதிவு செய்கிறார் ஷேக்ஸ்பியர். தனது
படைவீரர்களில் சிலரைப் பார்த்து ஆண்டனி இவ்வாறு பேசுவதாக கூறுகிறார் அவர்.

"எல்லா
வீரர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய நானே இப்படி உயிருக்குப்
பயந்து ஓடி வந்துவிட்டேனே! கிளியோபாட்ரா சொன்னதை எல்லாம் கேட்ட நான், இன்று
அவளது முகத்தைப் பார்க்கவே வெட்கப்படும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே! எனது தலை
மயிரே இப்போது எனக்கு எதிராக கலகம் செய்கிறதே!

... உங்களுக்கு
ஆணையிட எனக்கு அதிகாரம் இல்லை. இப்போதே நீங்கள் என்னை விட்டுச் சென்று
விடுங்கள். நேராக துறைமுகத்திற்கு செல்லுங்கள். அங்கு தங்கம், வைரம்,
வைடூரியம் உள்ளிட்ட செல்வங்கள் ஏற்றிய கப்பல் தயாராக நிற்கும். அதில் உள்ள
செல்வங்கள் அனைத்தும் உங்களுக்குத்தான். இப்போதே இங்கிருந்து
சென்றுவிடுங்கள். உங்களை வாய்ப்பு இருந்தால் பிறகு சந்திக்கிறேன்..." என்று
ஆண்டனி கூறுவதாகக் குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.

ரோமானியப்
படையிடம் தோல்வியுற்ற பிறகு முதன் முதலாக எகிப்து அரண்மனையில்
சந்தித்துக்கொண்ட கிளியோபாட்ராவும், ஆண்டனியும் பேச முடியாமல் மௌனத்தில்
ஆழ்ந்தனர். சிறிதுநேரத்திற்குப் பிறகு ஆண்டனியே மௌனம் கலைத்தான்.

"உன்னால்தான்
எனக்கு எழுச்சி கிடைத்தது. இப்போது எனக்கு கிடைத்துள்ள வீழ்ச்சியும்
உன்னால் கிடைத்ததுதான்! உன்னைப் பார்க்கவே இப்போது எனக்கு வெட்கமாக
இருக்கிறது".

"ஏன்.. இப்படியெல்லாம், எல்லாம் முடிந்துவிட்டதுபோல் பேசுகிறீர்கள்? நமது படையின் தோல்விக்காக நான் வருந்துகிறேன்.

நான்தான் போர்க்களத்தில் இருந்து பின்வாங்குகிறேன் என்றால் நீங்களுமா?"

"எல்லாம் உன் மீது நான் வைத்திருக்கும் காதல்தான்".

"போர்க்களத்திலும் அந்தக் காதல் உங்கள் கண்ணை மறைக்குமா என்ன?"

"சரி... இப்போது அது பற்றி பேசக் கூடிய நேரம் இல்லை. இதுவரை உன் பேச்சை நான் கேட்டேன். இப்போது நான் சொல்வதை நீ கேட்பாயா?"

"வேறு வழி எனக்குத் தெரியாததால் உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுகிறேன்".

"ரோமானியப்படை
எகிப்துக்குள் நுழைந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் நம் மீது
தாக்குதல் நடத்தலாம். அதனால் ராஜதந்திரத்தோடு செயல்படுவதுதான் நமக்கு
நல்லது! நமது தோல்வியை மறைமுகமாக ஆக்டேவியனிடம் ஒப்புக்கொண்டுதான்
ஆகவேண்டும். அவனுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போதைக்கு
போரைத் தவிர்த்துவிட்டால் அதன்பின் வெற்றிக்கனியை எளிதில் பறித்துவிடலாம்".

"நீங்கள் சொல்வதைக் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. அது நடைமுறைக்குச் சாத்தியமாகுமா?"

"இப்போதைக்கு
என்னால் இப்படித்தான் யோசிக்க முடிகிறது. வேறு வழியே இல்லை. இப்போதே நாம்
ஆக்டேவியனுக்கு தூது அனுப்ப வேண்டும். அப்போதுதான் நமது சுயகவுரவத்தைக்
காப்பாற்றிக் கொள்ள முடியும்..." என்ற ஆண்டனி, தன்
பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை ஆக்டேவியனிடம் தூது அனுப்பினான்.

அவர்
ஆக்டேவியனிடம் ஆண்டனி சார்பாக பேசினார். "தங்களது வெற்றியை ஆண்டனி ஏற்றுக்
கொள்கிறார். இப்போது அவர் உங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறார். தான்
எகிப்தில் வாழ வேண்டும் என்பதுதான் அந்த வேண்டுகோள். அதை நீங்கள்
ஏற்றுக்கொள்ளாவிட்டால், ஏதென்சில் தனி மனிதனாக உயிர் வாழ அனுமதி தருமாறும்
வேண்டுகிறார். ஆண்டனியின் நிலைதான் எகிப்து அரசி கிளியோபாட்ராவுக்கும்!
அவரும் தங்களது வெற்றியை ஏற்றுக்கொள்கிறார். இப்போதைய சூழ்நிலையில் எகிப்து
உங்கள் வசம் ஆனாலும், அதன் அரசுரிமை தனது குழந்தைகளுக்கும், அவர்களது
வாரிசுகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்..." என்று ஆண்டனி
கூறிய கருத்தை ஆக்டேவியன் முன்பு பதிவு செய்தார் அந்த ஆசிரியர்."

ஆனால்,
வெற்றி மிதப்பில் இருந்த ஆக்டேவியன் அதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை.
ஆண்டனியைப் பழி வாங்கியே ஆக வேண்டும் என்று முடிவு செய்தான்.

"என்னைப்
பொறுத்தவரை ஆண்டனி ஒரு மன்னிக்க முடியாத நம்பிக்கைத் துரோகி. அதனால்,
அவனுக்கு எந்தப் பிச்சையும் அளிக்க நான் தயாராக இல்லை. அதேநேரம்,
கிளியோபாட்ரா இந்த நாட்டுக்கு அரசி என்பதால் அவளது வேண்டுகோளைப் பரிசீலிக்க
தயாராக இருக்கிறேன். அவள் விருப்பப்பட்டால் என்னிடம் தனது வேண்டுகோளை
நேரடியாக தெரிவிக்க வரலாம். அதேநேரம், அவளுக்கு ஒரு நிபந்தனையும்
விதிக்கிறேன். அவள் தன்னிடம் ஒட்டிக்கொண்டுள்ள மானம் கெட்ட ஆண்டனியை
விரட்டிவிட வேண்டும். அல்லது, அவனைக் கொலை செய்ய வேண்டும். இதை
கிளியோபாட்ரா செய்தால், அவளது வேண்டுகோளை பரிசீலனை செய்ய இந்த இளைய சீஸர்
தயாராக இருக்கிறார் என்று சொல்..." என்று ஆண்டனி தூது அனுப்பிய ஆசிரியரிடம்
சொல்லி அனுப்பினான் ஆக்டேவியன்.

அதேநேரம், ராஜதந்திரத்தோடு இன்னொரு
முயற்சியையும் அவன் மேற்கொண்டான். அதுவும், ஆண்டனியை அழிக்க வேண்டும்
என்பதற்காகவே! அதற்காக தனது நண்பன் தைரஸ் என்பவனை அழைத்தான்.

"தைரஸ்!
நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நான் என்ன நினைத்து எகிப்து மீது போர்
தொடுத்தேனோ அது நிறைவேறுவதற்கான காலம் நெருங்கிவிட்டது. ஆண்டனி தோல்வி
பயத்தில் ஆடிப்போய் உள்ளான். இந்த நேரத்தில் கிளியோபாட்ராவின் மனதை
மாற்றினால், ஆண்டனியை அவளிடம் இருந்து எளிதில் பிரித்துவிடலாம். அதற்காக நீ
கிளியோபாட்ராவிடம் எனது சார்பில் செல். ஆண்டனியைத் தவிர அவள் என்னவெல்லாம்
கேட்கிறாளோ, அவை எல்லாம் கிடைக்கும் என்று உறுதி கூறு. எனது உதவி
தேவைப்படும் நிலையில் அவள் இருப்பதால் நிச்சயம் அவள் நம் பக்கம் சாய்ந்து
விடுவாள். ஆண்டனி கதையை முடித்துவிடலாம்." என்ற ஆக்டேவியன் பலமாக
சிரித்தான்.
கிளியோபாட்ராவுக்கு மன்னிப்பு கொடுத்துவிட்டு ஆண்டனியைப் பழி வாங்க
காத்திருந்த ஆக்டேவியன், கிளியோபாட்ராவிடம் தைரஸ் என்பவனைத் தூதாக
அனுப்பினான். அவன் அவளிடம் ஆக்டேவியனின் நிலையைத் தெளிவுபடுத்திக்
கூறினான்.

"எங்கள் தலைவர் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார்.
தாங்கள் ஆண்டனியுடன் இருப்பதற்குக் காரணம் அன்பு அல்ல, அச்சம்தான் என்பது
இளைய சீஸருக்கு நன்றாகவே தெரியும்".

"ஓ... இப்படியெல்லாம் அவர் நினைக்கிறாரா?"

"ஆண்டனியுடனான
தங்கள் நெருக்கம் உங்களுக்கு களங்கத்தையே ஏற்படுத்தும். அதனால்
உங்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை. இப்போது உங்கள் கருத்தை
அறிந்து வரவே என்னை இங்கே அனுப்பி இருக்கிறார். தங்களது நிலைபாட்டைச்
சொன்னால், அவரிடம் முறையாக எடுத்துரைப்பேன்..."

"எகிப்துக்கு எதிரான
கடற்போரில் அவர் படை பெற்றுள்ள வெற்றியை நான் ஏற்றுக்கொள்வதாகச் சொல்.
அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றும்
சொல்லிவிடு".

"நன்றி அரசியாரே!" என்ற ஆக்டேவியனின் தூதுவன்
கிளியோபாட்ராவின் கையை முத்தமிட்டான். இதை அங்கு வந்த ஆண்டனி
பார்த்துவிட்டான். அக்கணமே அவனது முகம் கோபத்தால் சிவந்த து. ஆக்டேவியனின்
தூதுவனை சவுக்கால் அடிக்குமாறு தன் வீரர்களுக்கு அவன் உத்தரவிட்டான்.
கோபம் அடங்காத ஆண்டனி, அதே அனல் வீசும் கோபப் பார்வையை கிளியோபாட்ரா மீதும்
வீசினான்.

"தூது வந்த ஒருவனிடம் முத்தமிட கையைக் கொடுப்பது ஒரு அரசிக்கு அழகா?"

"ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்?"

"கை
நீட்டி பரிசு பெறும் ஒரு சேவகனிடம் கையை நீட்டிவிட்டு என்னிடமா கேள்வி
கேட்கிறாய்? இந்த ஆண்டனியின் காதல் மனைவி இப்படி இருக்கக்கூடாது..." என்று
அவன் சொல்லி முடித்தபோது, சவுக்கடி பட்ட தூதுவன் தைரஸை ஆண்டனியின் வீரர்கள்
இழுத்துக்கொண்டு வந்து அவன் முன்பு நிறுத்தினர்.

"ஆக்டேவியன்
வெற்றி பெற்ற இந்த நாளில் அவன் தூதுவன் நம்மிடம் சவுக்கடி
வாங்கியிருக்கிறான். இங்கு நடந்தை அவன் ஆக்டேவியனிடம் போய்ச் சொல்லட்டும்"
என்ற ஆண்டனி அந்த தூதுவனை விரட்டியடித்தான்.

நடந்ததை எல்லாம்
மவுனமாக பார்த்துக் கொண்டிருந்தாள் கிளியோபாட்ரா. ஆனாலும், அவள் மனதில்,
ஆண்டனியின் கடுமையான வார்த்தைகள் ஆழமாய்ப் பதிந்து விட்டிருந்தன.

"ஆண்டனி! என் கையை ஆக்டேவியனின் தூதுவன் முத்தமிட்டதைப் பற்றி தவறாக விமர்சனம் செய்ய உங்களுக்கு எப்படி மனம் வந்தது?"

"அப்படியென்றால், அந்த இளைய சீஸரான ஆக்டேவியனை மகிழ்விக்க ஒரு சேவகனைக் காதலிப்பாயா?"

"எப்போதும் அன்பாய்ப் பார்த்த உங்கள் பார்வையும், தேனினும் கனிவாகப் பேசிய உங்கள் பேச்சும் இப்போது திடீரென்று மாற என்ன காரணம்?

"என்
மீதான அன்பு இப்போது உன்னிடம் இல்லை என்றே நினைக்கிறேன். இல்லையெனில் ஒரு
ஏவலாள் முத்தமிடும் பொருட்டு உன் அழகிய கரங்களை நீட்டி இருக்க மாட்டாய்".

"ஏன் ஆண்டனி திரும்பத் திரும்ப அதே விஷயத்திற்குள் நுழைகிறீர்கள்?"

"இப்போது அதுதானே பிரச்சினை?"

"எதையும்
தவறாக நினைத்தால் தவறாகத்தான் தோன்றும். ஆக்டேவியனின் தூதுவன், அவன் படை
பெற்றுள்ள வெற்றியின் காரணமாக ஒருவித மமதையில் என் கரத்தை முத்தமிட்டான்.
அவன் என் கரத்தை முத்தமிட்ட அக்கணமே அவனை என்னால் கொன்றிருக்க முடியும்.
ஆனால் அவன் ஆக்டேவியனின் அந்தரங்க செய்தியை சொல்வதற்காக நம்மைத் தேடி
வந்துள்ளான். அப்படியிருக்கும்போது அவனை முறையாக நடத்துவதுதான் போர்
சூழலில் சரியானது"

"நீ சொல்வதைப் பார்த்தால், என்னைப் பற்றி கவலைப்பட்டது போலவே தெரியவில்லையே...??"

"ஆண்டனி!
திரும்பத் திரும்ப ஏன் என்னை வதைக்கிறீர்கள்? இப்படியெல்லாம் கேள்விகள்
கேட்டு என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பதற்குப் பதிலாக ஒரேயடியாக
சாகடித்து விடுங்கள்" என்ற கிளியோபாட்ராவின் கண்களில் இருந்து கண்ணீர்
பொலபொலவென கொட்டியது.

தன் மீது கிளியோபாட்ராவின் காதல் எள்ளளவும் குறையவில்லை என்று கணித்த ஆண்டனி வெகுநேரத்திற்குப் பிறகு சமாதானம் ஆனான்.

"அழாதே
கிளியோபாட்ரா. உன்னை நான் சந்தேகப்படவில்லை. ஏதோ ஒரு ஆதங்கத்தில் அப்படி
கேட்டுவிட்டேன். உன் மனதை எனது பேச்சு புண்படுத்தி இருந்தால் இப்போதே
மன்னித்துவிடு!" என்று சொன்னான்.

இதற்கிடையில், கடல் வழிப் போரில்
பிரம்மாண்ட வெற்றி பெற்ற ரோமானியப்படை, அடுத்ததாக தரை வழியில் எகிப்து
படையை எதிர்கொள்ளத் தயாரானது. இதையறிந்த ஆண்டனி உற்சாகம் ஆனான்.
ஆக்டேவியனின் ரோமானிய தரைப்படையை விட தனது கூட்டுப்படையின் வலிமை அதிகம்
என்று அவன் அறிவான்.

"எனது பலம் மூன்று மடங்காகும். துணிவோடு
போராடுவேன். என் கையில் சிக்கிய எதிரிகள் எவரும் தப்பிக்க முடியாது. முன்பு
எனது பகைவர்கள் பலருக்கு உயிர்ப்பிச்சை வழங்கினேன். ஆனால், இப்போது நான்
என்னை எதிர்க்கும் அனைவரையும் மரண உலகத்திற்கு அனுப்பப் போகிறேன்..." என்று
ஆண்டனி கர்ஜித்ததாக பதிவு செய்கிறார் ஷேக்ஸ்பியர்.

ஆண்டனியின்
புதிய உற்சாகம் கிளியோபாட்ராவுக்கு புது தெம்பையும் நம்பிக்கையையும்
தந்தது. கடற்போரில் தோற்ற தனது படைக்குத் தரைப்போரில் ஆண்டனியின்
உணர்ச்சிப்பூர்வமான கொந்தளிப்பால் வெற்றி கிடைக்கும் என்று இவளும்
எண்ணினாள்.

ஆனால், அவள் போட்ட கணக்கை சுக்கு நூறாக உடைத்து தகர்த்தெறிய தயாராகிக் கொண்டிருந்தான் ஆக்டேவியன்.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 3:55 pm

எகிப்தினுள் புகுந்த ஆக்டேவியனின் ரோமானியப்படை எகிப்தின் கூட்டுப்படையை
எதிர்கொள்ள தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது வழக்கத்தை விட கூடுதலான
பரபரப்பு ஆக்டேவியனிடம் காணப்பட்டது.

"நாளை நடைபெறும் போரே இறுதியான
போராக இருக்க வேண்டும். நிச்சயம் அப்படித்தான் இருக்கும்! எகிப்துக்குள்
புகுந்துவிட்ட நம்மால் எகிப்து கூட்டுப்படையை எளிதில் வெற்றி கொண்டுவிட
முடியும். நமது படையில் முதல் வரிசையில் இடம் பெற்றுள்ள அனுபவம் வாய்ந்த
வீரர்கள் ஏற்கெனவே ஆண்டனி படையில் பணியாற்றியவர்கள் என்பதால், ஆண்டனி
வகுக்கும் வியூகத்தை அவர்கள் எளிதில் முறியடித்து விடுவார்கள். நமது வெற்றி
உறுதியாகிவிட்டது...." என்று நீண்டு கொண்டே போன ஆக்டேவியனின் வீரவுரை
ரோமானியப்படை வீரர்களுக்கு உற்சாக டானிக் ஆக அமைந்தது.

அதேநேரம் ...

எகிப்து
கூட்டுப்படையின் முகாமில் ஆண்டனியின் நிலையோ பரிதாபத்திற்குரியதாக
இருந்தது. அளவுக்கு மீறி மது அருந்த ஆரம்பித்திருந்த அவன், தனது
வீரர்களயும் மது அருந்துமாறு கட்டாயப்படுத்தினான் என்கிறார் ஷேக்ஸ்பியர்.

"இன்றிரவு
நீங்கள் எல்லோரும் எனக்கு சேவை செய்யுங்கள். இது உங்களது கடைசி சேவையாகக்
கூட இருக்கலாம். எனது வாழ்க்கை முடியப் போகிறது என்பது எனக்கு நன்றாகவே
தெரிகிறது. ஒருவேளை நீங்கள் நாளை இன்னொருவருக்கு இதைச் செய்ய நேரலாம்.
மனைவியிடம் நம்பிக்கை கொண்டுள்ள கணவனைப் போல நான் உங்கள் மீது என் மரணம்
வரை நம்பிக்கை வைத்திருக்கிறேன். இன்று இரவு எனக்கு இரண்டு மணி நேரம் சேவை
செய்யுங்கள். அதற்கு மேல் உங்களிடம் நான் கேட்கவில்லை. உங்கள் சேவைக்கு
ஏற்ற பரிசை கடவுள் வழங்குவார்..." என்று ஆண்டனியின் பரிதாபப் பேச்சை பதிவு
செய்கிறார் ஷேக்ஸ்பியர்.

மறுநாள் பொழுது புலர்ந்தது.

ஆக்டேவியனின்
வீரர்கள் போர் புரிந்து வெற்றி பெற வேண்டும் என்கிற உற்சாகத்தோடு துயில்
எழ, ஆண்டனியின் வீரர்களோ போர்க்களத்தில் என்ன நடக்கப்போகிறதோ என்கிற
பீதியுடன் விழித்தெழுந்தனர்.

இன்று நடைபெற உள்ள போரில் எப்படியும்
வெற்றி பெற்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் ஆண்டனி இருந்ததால் அவனை
உற்சாகத்துடன் வழியனுப்பத் தயாரானாள் கிளியோபாட்ரா.

"ஆண்டனி! நேற்றிரவு நன்றாக தூங்கினீர்களா? உங்கள் உடலின் களைப்பு முகத்தில் அப்பட்டமாகத் தெரிகிறதே...?"

"அப்படியெல்லாம்
ஒன்றுமில்லை. இன்றைய போர்க்களத்தில் எதிரிகளை எப்படியெல்லாம் எதிர்கொள்ள
வேண்டும் என்று நம் வீரர்களை அறிவுறுத்தியதால் துயில் கொள்ள சற்றுக்
காலதாமதமாகிவிட்டது. அவ்வளவுதான்! மற்றப, இந்த ஆண்டனி எப்போதும் மாவீரன்.
வெற்றி இவனுக்கு எப்போதும் எட்டும் கனிதான்!"

"அதில் எனக்கும் நம்பிக்கை இருக்கிறது ஆண்டனி. இப்போது நான் உங்களிடம் ஒன்று கேட்பேன்… அதைச் செய்வீர்களா?"

"நீ
சொல்லி நான் எதைத்தான் கேட்கவில்லை? நடந்து முடிந்த கடற்போரில் கூட உனக்கு
ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விட்டதோ என்று நான் பின்வாங்கியதால்தான்
தோல்வியின் விளிம்புக்கு வந்துவிட்டோம். என்ன வேண்டுமானாலும் கேள், எனது
உயிரைக்கூட உனக்கே உனக்காய் பரிசளிக்க நான் எப்போதும் காத்திருக்கிறேன்..."
என்று கிளியோபாட்ராவைப் பார்த்துக் கேட்டான்.

"சில நேரங்களில் நாம்
யதார்த்தமாக வெளிப்படுத்தும் வாய் வார்த்தைகள் கூட அப்படியே
பலித்துவிடுவது உண்டு. இப்போது, நமது வெற்றி தொடர்பான கனவுகள் பலிக்க
வேண்டுமே தவிர, நமக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது. இப்போது நான்
உங்களிடம் கேட்க நினைப்பதை எப்படி கேட்பது என்றே எனக்குத் தெரியவில்லை.
கேட்பதா.. வேண்டாமா என இரட்டை நிலைப்பாட்டில் சிக்கித் தவிக்கிறேன்."

"ஆரம்பத்தில்
உற்ற தோழியாய்... அதன்பின் காதலியாய்... அதற்குப் பிறகு அன்பு மனைவியாய்
என் மனதிற்குள் குடியேறிய உனக்குள் தவிப்பா? அதை இப்போதே சொல்லிவிடு.
இல்லையென்றால், போர்க்களத்தில் கூட உனது தவிப்பு என்னவோ என்று நானும்
தவிக்க நேரிடும். நமது கடற்படைக்கு நேர்ந்த கதி மீண்டும்...!!"

"நீங்கள் சொல்வதும் சரிதான் ஆண்டனி. நான் கேட்க நினைப்பது, திருமணம் ஆன எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுகிற சந்தேகம்தான்".

"என்ன சந்தேகமா...?"

"தவறாக
எண்ண வேண்டாம் ஆண்டனி. எதிரியான ஆக்டேவியனின் படை எகிப்துக்குள்
நுழைந்துவிட்டது. ஒருகாலத்தில் இதே ஆக்டேவியன் உங்களுடன் நெருங்கிப்
பழகியவன். அன்று அவன் சிறுவன். இன்று துடிப்புமிக்க இளைஞன். கடற்போரில்
கிடைத்த எதிர்பாராத வெற்றியின் காரணமாக புதிய வலிமையோடு வந்திருக்கிறான்.
அவனை எதிர்கொள்வதில் தங்களுக்கு அச்சம் இல்லையே...? வேண்டுமானால்..."

"நிறுத்து கிளியோபாட்ரா. நான் இப்போது மாவீரனாக இருக்கிறேனா? இல்லை... கோழையாகிவிட்டேனா என்று சந்தேகிக்கிறாயா?"

"அய்யோ...!
நான் அப்படி எண்ணவில்லை ஆண்டனி. இப்போது நீங்கள் வெற்றிபெற வேண்டும்.
அதுதான் என்னுடய ஆசை. சீஸருக்குப் பிறகு நான் உங்களுக்காகவே வாழ்ந்து
வருகிறேன். இடையில் நமக்குள் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறந்து
இருக்கலாம். தம்பதியருக்குள் அதுபோன்று ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான்.
இன்றைய போரில் நீங்கள் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அதனால், நானும்
உங்களுடன் போர்க்களத்திற்கு வரலாமா என்று கேட்கத்தான் நினைத்தேன்".

"கடற்போரில்
ஏற்பட்ட விபரீத நிலை மீண்டும் ஏற்பட வேண்டாம் என்றே நினக்கிறேன். இப்போது
நான் ஆக்டேவியனை எதிர்த்து போர் புரிய நமது கூட்டுப்படை வெற்றிபெற வேண்டும்
என்பது ஒரு காரணமாக இருந்தாலும், நீ எந்தச் சூழ்நிலையிலும் தோற்று அந்த
மீசையில்லா ஆக்டேவியன் முன்பு தலைகுனியக் கூடாது என்பதுதான் முக்கிய
காரணம். அதனால், ஆக்டேவியனுக்கு எதிரான போரில் நீ பங்குகொள்ள வேண்டாம்.
உனது ராஜதந்திர அறிவுரைகளை எனக்குச் சொல். நான் வெற்றிக்கனியுடன் திரும்பி
வருகிறேன்".

"சபாஷ் ஆண்டனி! உங்களை நினைத்தாலே எனக்குப் பெருமையாக
இருக்கிறது. மாவீரன் ஆண்டனியின் காதலியாகவும் மனைவியாகவும் இருப்பதற்கு
நான் பெருமைப்படுகிறேன். நாளைய வரலாறு நம்மைப் போற்றும் என்பது
உறுதியாகிவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது".

"உனது ஆசை நிச்சயமாக
நிறைவேறும் கிளியோபாட்ரா. இப்போது ஆதவன் சோம்பல் களைந்து எழத்
துவங்கிவிட்டான். நமது பெரும் படையைத் திரட்டிக்கொண்டு போர்க்களத்திற்குச்
செல்ல வேண்டும். எனக்கு விடை கொடு அன்பே! இன்று மாலை நான் உன்னைப் பார்க்க
வரும்போது, ரோமானிய வரலாறே திசை திரும்பிப் போய் இருக்கும்..." என்று
நெஞ்சு நிமிர்ந்து பேசிய ஆண்டனி, கிளியோபாட்ராவை ஆசையாய்க் கட்டியணைத்தான்.
அவளும் அவனது நெற்றியில் முத்தமிட்டு போர்க்களத்திற்கு வாழ்த்தி அனுப்பி
வைத்தாள்.

கிளியோபாட்ராவிடம் விடைபெற்று போர்க்கள முகாமுக்கு
திரும்பிய ஆண்டனிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அவனது
நெருங்கிய நண்பர்களாகிய எனோபார்பஸ் உள்ளிட்ட சில முக்கியமான வீரர்கள்
எகிப்து படையில் இருந்து ஆக்டேவியனின் ரோமானியப் படைக்குத் தாவியிருந்தனர்.

எவ்வளவோ
அதிர்ச்சியைத் தாங்கி பழக்கப்பட்ட ஆண்டனியின் இதயம், இப்போதும்
எனோபார்பசுக்கு ஆதரவாகவே பேசியது. எனோபார்பசுக்கு உரிய செல்வத்தை முறையாக
அனுப்பி வைத்ததோடு, "நீ எங்கிருந்தாலும் வாழ்க! இனியாவது, தலைவனை மாற்றும்
பழக்கத்தை கைவிடு" என்று ஆண்டனி அவனுக்கு எழுதிய கடிதம், ஆண்டனியின் இரக்க
குணத்தையும் வெளிப்படுத்துகிறது.
ஆண்டனி - கிளியோபாட்ராவின் கூட்டு தரைப்படையை எந்த சூழ்நிலையிலும்
வீழ்த்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு போர்க்களம் இறங்கியது
ஆக்டேவியனின் ரோமானியப்படை. ஆனால், எகிப்து வீரர்களின் ஆக்ரோஷ
தாக்குதலுக்கு முன்னால் ஆக்டேவியனின் போர் அணுகுமுறை எதிர்பார்த்த பலனை
அளிக்கவில்லை.

இரு தரப்பிலும் வீரர்கள் பலர் உயிரிழந்தனர்.
ஆண்டனிக்கும்கூட லேசான காயம் ஏற்பட்டது. அன்றைய போர்க்களம் எப்படையின்
வெற்றியையும் தீர்மானிக்கவில்லை. எனினும், எகிப்து படையின் கையே
ஓங்கியிருந்தது. மாலைநேர சூரியன் துயில் கொள்ளக் கிளம்பியதும் இரு தரப்புப்
படைகளும் தங்களது முகாம்களுக்குத் திரும்பின.

எகிப்து படைக்கு
முழுமையான, இறுதியான வெற்றி கிடைக்கவில்லை என்பதில் கிளியோபாட்ராவுக்கு
மிகப் பெரிய வருத்தம் இருந்த போதிலும், எகிப்து படை ரோமானியப் படையை
அதிரடியாக எதிர்கொண்டது அவளுக்கு ஆறுதலைத் தந்தது. போரில் காயம்பட்ட
ஆண்டனியைப் பார்க்க ஓடோடி வந்தாள். உற்சாகத்துடன் காணப்பட்ட ஆண்டனியைப்
பார்த்த அவளுக்குள்ளும் உற்சாகம் பிறந்தது.

"ஆண்டனி எப்படி இருக்கிறீர்கள்? நமது படைக்கு வெற்றி வசப்படுமா?"

"நீ என்னருகில் துணையாக இருக்கும்போது என்றுமே எனக்கு வெற்றிதான்!".

"நன்றி
ஆண்டனி! தங்கள் காயம் எப்படி இருக்கிறது? தகுந்த மருத்துவம்
பார்த்தீர்களா? சரியாக சாப்பிட்டீர்களா? பணிப்பெண்கள் தங்களை கனிவுடன்
கவனித்துக் கொள்கிறார்களா? என்ன வேண்டும் என்றாலும் இப்போதே என்னிடம்
சொல்லுங்கள். உங்களுக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்யக்
காத்திருக்கிறேன்" என்றவாறு ஆண்டனி மீது பாசமழை பொழிந்து அவனைத் திகைக்க
வைத்தாள் கிளியோபாட்ரா.

ஆண்டனியும், கிளியோபாட்ரா தன் மீது
கொண்டுள்ள அபரிமிதமான காதலைக் கண்டு வியந்து போனான். அவளுக்கு பதிலுக்கு
உணர்வுப்பூர்வமாக நன்றி சொல்ல வார்த்தைகள் கிடைக்காமல் இன்பத் தவிப்புக்கு
ஆளானான்.

"அன்பே கிளியோபாட்ரா! என் மீது நீ செலுத்தும் அன்பைப்
பார்த்தால், எனக்கே வியப்பாக இருக்கிறது. அன்பு என்கிற பெயரில் வெறும்
வேடத்தையே பிறரிடம் அதிகம் பார்த்துப் பார்த்து பழகிப்போய்விட்ட எனக்கு நீ
வினோதமாகத் தெரிகிறாய். உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை..."
என்று கிளியோபாட்ராவை கட்டியணைத்தபடி கண்ணீர் மல்க உருகினான் ஆண்டனி.

மறுநாள்
நடைபெறும் போரில் ரோமானியப் படையை எகிப்தை விட்டே விரட்டியடிக்கும்
வகையில் ஆண்டனிக்கு உற்சாகம் ஊட்ட, அவனுக்கு தங்கக் கவசம் ஒன்றை பரிசாக
வழங்கினாள் கிளியோபாட்ரா.

அவளது தனிப்பட்ட பரிசளிப்பும், ஊட்டிய
உற்சாக வார்த்தைகளும் ஆண்டனிக்கு புதிய தெம்பைத் தந்தன. மறுநாள் நடைபெறும்
போர் இறுதியான போராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு,
மகிழ்ச்சிக்காக மதுவும் அருந்திவிட்டு தனக்குரிய ஓய்வறைக்குச் சென்றான்.
அப்போது நேரம் நள்ளிரவைத் தொட்டிருந்தது.

அதே நேரம், எதிர்முகாமில்
எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரத்துக் கொண்டிருந்தார்கள். உலகத்தையே நடுங்க
வைக்கும் இளைய சீஸர் ஆக்டேவியனின் தரைப்படைக்கு எகிப்தில் ஏற்பட்ட
பின்னடைவு, ஆக்டேவியனை மட்டுமின்றி, அவனது படைவீரர்களையும் யோசிக்க
வைத்தது. அதுவே அவர்களுக்குள் கோபமும் வெறியுமாக மாறியது.

ஆனால்,
ஆண்டனியின் நண்பனாக இருந்து ஆக்டேவியன் பக்கம் தாவிய எனோபார்பஸ் வேறுவிதமாக
புலம்பிக் கொண்டிருந்தான். 'நீ எங்கிருந்தாலும் வாழ்க' என்று ஆண்டனி
அனுப்பிய வாழ்த்துக் கடிதத்தை படித்த பிறகே இப்படியொரு நிலைக்கு ஆளானான்.
பகலில் சுட்டெரித்துவிட்டு இரவில் கடும் குளிரைப் பொழிந்து கொண்டிருந்த
அந்தப் பாலைவனத்து நிலவிடம் அவன் கடைசியாக மனம் விட்டு புலம்பினான்.

"ஏ
நிலவே..! எனது துயரத்தை மேலும் மேலும் வளர்க்காதே! இந்த இரவின் நச்சுக்
குளிரில் எனது உயிர் போகட்டும். நான் செய்த மாபெரும் துரோகம் பெரிய
பாறாங்கல்லாக மாறி எனது இரக்கமற்ற இதயத்தை உடைக்கட்டும். சோக வெப்பத்தால்
அந்த இதயம் தூள் தூளாகட்டும். இதுவரை எனக்குள் புதைந்து கிடந்த துரோக
எண்ணங்கள் காய்ந்து மறையட்டும்.

... ஆண்டனிக்காக அது மேலும்
வருந்தட்டும். ஆண்டனியே... நீ என்னை மன்னித்துவிடு. நெருங்கிய நண்பனான
உனக்கே நான் துரோகம் செய்துவிட்டேன். அதற்காக நான் இப்போது வருந்துகிறேன்.
உனக்கு துரோகம் செய்த எனக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும். அந்த தண்டனை
என்னைத் தேடி வராவிட்டாலும் கூட, நானே எனக்கு கொடுத்துக் கொள்வேன்..."
என்று கூறிக்கொண்டே அந்த பாலைவன மண்ணில் பொத்தென்று விழுந்தான் எனோபார்பஸ்.
அடுத்த சில நொடிகளிலேயே, நண்பனுக்கு இக்கட்டான நேரத்தில் செய்த துரோகத்தை
நினைத்து தவியாய் தவித்த அவனது உயிரும் வேதனையுடன் விடைபெற்றுக் கொண்டது.

பரபரப்புகளுக்கு மத்தியில் விடிந்தது மறுநாள்.

தரைப்போரில்
எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பின்னடைவால், மீண்டும் கடல் வழியாக எகிப்து
படையை எதிர்கொள்ளத் திடீர் திட்டம் தீட்டினான் ஆக்டேவியன். கடற்போருக்கு
தேவையான பலம் எகிப்து படையிடம் இல்லை என்பதை சரியாகக் கணித்து, அதன்படி
காயை நகர்த்திய அவனது ராஜதந்திரம் தங்களுக்கு முடிவுரை எழுதி விடும் என்று
ஆண்டனியும், கிளியோபாட்ராவும் நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மீண்டும்
கடற்போருக்கு தயாரான ஆக்டேவியன் எகிப்து படையின் மீது இரு முனைத்
தாக்குதல் நடத்த திட்டமிட்டான். ஒருபுறம் பலம் வாய்ந்த கப்பல் படையுடன்
எகிப்தை முற்றுகையிடுவது, மறுபுறம் மீண்டும் தரைப்படையை புதிய பலத்துடன்
களமிறக்குவது என்று முடிவெடுத்து, அதன்படி இரு வழிகளில் படைகளைப் பிரித்து
அனுப்பினான்.

ஆக்டேவியன் தரை வழியாகவும், கடல் வழியாகவும் எகிப்தின்
மீது தாக்குதல் தொடுக்கலாம் என்று கணித்த ஆண்டனி, பலம் குறைந்த எகிப்து
கடற்படைக்கு பலம் சேர்க்க தரைப்படையைச் சேர்ந்த ஏராளமான வீரர்களை அங்கு
அனுப்பி மிகப்பெரிய முட்டாள்தனமான முடிவை எடுத்தான்.

கடற்போரில்
குதித்த ரோமானியப் பெரும்படையின் சிறிய கப்பல்கள் எகிப்தை நோக்கி வேகமாக
முன்னேறின. ஆனால், எகிப்து படையில் இருந்த மிகப் பெரிய கப்பல்கள்
தள்ளாடியபடியே எதிரிகளை நோக்கி முன்னேறின.

இதை சாதகமாகப்
பயன்படுத்திக் கொண்ட ரோமானியப் படை வீரர்கள், எகிப்து படையின் பிரம்மாண்ட
கப்பல்களை தங்களது சிறிய அதிவேகக் கப்பல்களால் சுற்றி வளைத்து தாக்கினர்.
நாலாபுறமும் ரோமானியப் படைவீரர்கள் தாக்கியதால் நிலைகுலைந்து போனார்கள்
எகிப்து படைவீரர்கள். எகிப்து கடற்படையில் கடைசி நேரத்தில் வலுக்கட்டாயமாக
திணிக்கப்பட்ட தரைப்படை வீரர்களை எளிதில் வெற்றி கொண்டது ரோமானிய கப்பல்
படை.

இதற்கிடையில், ஆக்டேவியன் உத்தரவுப்படி ரோமானிய தரைப்படையும்
அலெக்ஸாண்டிரியா நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. முந்தைய நாள்
போரில் அதிகப்படியான வீரர்களைக் கொண்டு காணப்பட்ட எகிப்து தரைப்படை இன்று
அதில் பாதி பலத்தை மட்டுமே கொண்டிருந்தது. அதனால், எகிப்து தரைப்படையை
எளிதில் விரட்டியடித்தனர் ரோமானியப் படை வீரர்கள்.

தங்களது தோல்வி
உறுதி என்பதை உணர்ந்த எகிப்து தரைப்படையினர் ரோமானியப் படையிடம் திடீரென்று
சரணடைந்தனர். எகிப்து கப்பல் படையும் தோல்வியை ஏற்று ஆக்டேவியனிடம்
சரணடைந்தது.

இந்த திடீர் மாற்றங்களை எதிர்பார்க்காத ஆண்டனிக்கு,
கிளியோபாட்ரா தன்னை ஏமாற்றிவிட்டாளோஎன்ற எண்ணம் தலைதூக்கியது. ஒரே
நேரத்தில் எகிப்து தரைப்படையும், கடற்படையும் ஆக்டேவியனிடம் சரணடைந்ததால்
அப்படி அவசரமாக யோசித்தான். கிளியோபாட்ரா தனது அரசை கைப்பற்றிக் கொள்ள
தன்னைப் பலிகடா ஆக்கிவிட்டாள் என்றே கருதினான்.

நேராக, கிளியோபாட்ரா
பலத்த பாதுகாப்புடன் தங்கியிருந்த படை முகாமிற்குச் சென்றான். கையில்
வாளுடன் கோபம் கொப்பளிக்க வந்த அவனைப் பார்த்து கிளியோபாட்ராவின் உயிர்த்
தோழியர் எல்லாம் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். தனது தோழியர் மரண பயத்தில்
ஓடி வருவதைக் கவனித்த கிளியோபாட்ரா, ஒருவேளை ஆக்டேவியனின் படைதான்
வந்துவிட்டதோ என்று பயந்தாள். ஆனால், அதே ஆக்டேவியன் வர வேண்டிய
ஆக்ரோஷத்தில் ஆண்டனி வந்து நின்றதால் அவளது முகத்தில் திடீர் கலவரம்
வெடித்தது.

"ஆண்டனி! உங்களுக்கு என்ன ஆயிற்று? போருக்கு வீரநடை
போட்டு புறப்பட்டுச் சென்ற உங்களுக்கு என்ன நேர்ந்தது? ஏன் உங்களுக்கு
இந்தக் கொலை வெறி?..."

மேற்கொண்டு அவளைப் பேச அனுமதிக்கவில்லை
ஆண்டனி. வலது கையில் வாளை ஓங்கிக்கொண்டு இடது கையால் கிளியோபாட்ராவின்
கழுத்தை சட்டென்று இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவனது முரட்டுப்
பிடியில் ரத்தம் வழியாத குறையாக சிவந்து போனது கிளியோபாட்ராவின் கழுத்து.



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 4:04 pm

"ஆண்டனி என்னை விடுங்கள். போர்க்களத்தில் நடந்ததை முதலில் கூறுங்கள்.
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடாதீர்கள். அது, உங்களைப் போன்ற
மாவீரனுக்கு அழகும் அல்ல..." தனது கழுத்தை வேகமாக நெறித்த ஆண்டனியிடம்,
கிளியோபாட்ராவால் இதற்கு மேலும் பேச முடியவில்லை. கிளியோபாட்ரா கெஞ்சியதால்
அவளைத் தனது பலமான பிடியில் இருந்து விடுவித்தான் ஆண்டனி.

"ஏன்
என்னை ஏமாற்றினாய்? சொல்லி வைத்தது போல் நம் கடற்படையும், தரைப்படையும்
ஆக்டேவியனிடம் சரணடைய என்ன காரணம்? நமது படைவீரர்களிடம் எனக்குத் தெரியாமல்
நீ என்ன சொல்லி வைத்தாய்?"

"ஆண்டனி... நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. போர்க்களத்தில் நடந்ததை முதலில் கூறுங்கள்".

"உன்னை
நம்பி அந்த ரோமாபுரியை விட்டு நீயே கதியென கிடந்த எனக்கு நீ நல்ல பாடம்
கற்பித்து விட்டாய். உண்மையைச் சொன்னால் உனக்கு கோபம் வருகிறது. எகிப்து
படைகள் ஆக்டேவியனிடம் ஒட்டுமொத்தமாக சரணடைந்ததன் காரணம்தான் என்ன?".

"ஆண்டனி!
அவசரப்பட்டு வார்த்தையை உதிர்க்கிறீர்கள். எனக்கு உங்கள்மேல் கோபம்
வரவில்லை. உங்கள் அறியாமையையும், நம்பிக்கை இல்லாத்தன்மையையும்
நினைத்துதான் பரிதாபப்படுகிறேன். நீங்கள்தானே போர்க்களத்தில் இருந்தீர்கள்.
நீங்கள்தானே நம் படைகளை வழிநடத்திச் சென்றீர்கள்? உங்களுக்கே அதற்கான
காரணம் தெரியாதபோது எனக்கு மட்டும் எப்படித் தெரியும்?"

"உன்
பேச்சைப் பார்த்தால் நடந்த சம்பவங்களுக்கும், உனக்கும் எந்த சம்பந்தமும்
இல்லை என்பது போல் இருக்கிறதே... ஒருவேளை நீ நடிக்கிறாயா? இல்லை
உண்மையைத்தான் சொல்கிறாயா?"

"ஆண்டனி... இதற்கு மேலும் உங்களிடம்
நான் பொறுமையாக விளக்கம் கூறிக் கொண்டிருக்க முடியாது. தோல்வி பயத்தில்
உயிருக்குப் பயந்து எதிரியிடம் சரணடைந்து விட்ட நம் படையினரை, நான்தான்
சரணடையச் சொன்னேன் என்று நீங்கள் சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை".

"நீ
சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை! நீ சொல்லித்தான் அவர்கள் அந்த
ஆக்டேவியனிடம் சரணடைந்திருக்கிறார்கள். இதுதான் உண்மை என்கிறேன்".

"ஆண்டனி!
நீங்கள் ஏதோ ஒரு முடிவோடு வந்திருக்கிறீர்கள் என்பது மட்டும் நன்றாகத்
தெரிகிறது. மனைவியிடம் நம்பிக்கை வைத்துப் பேசவேண்டிய கணவனாக நீங்கள்
நடந்துகொள்ளவில்லை....".

கிளியோபாட்ராவின் மேலும் தொடர்ந்த
பேச்சினால் கொந்தளித்த ஆண்டனி, அந்த போர்ப்படை முகாமில் இருந்து வேகமாக
வெளியேறினான். ஆண்டனியைத் தொடர்ந்து கிளியோபாட்ராவும் அங்கிருந்து
வெளியேறி, அலெக்ஸாண்டிரியாவில் உள்ள தனது அரண்மனையை அடைந்தாள். ஆண்டனி
பேசிய விஷயங்கள் அவளது மனதை பெரிதும் பாதித்திருந்தன.

மிகவும்
சோகமாக அமர்ந்திருந்த கிளியோபாட்ராவிடம் ஒரு யோசனையைத் தெரிவித்தாள் அவளது
தோழி சார்மியான். பின்னர் வரலாறே மறக்க முடியாத சம்பவம் நடைபெறக் காரணமாக
அந்த யோசனை அமையப்போவதை அத்தோழி அறியவில்லை!

"அரசியாரே! விரைவில்
நாம் அனைவரும் ஆக்டேவியனால் கைது செய்யப்படவோ அல்லது கொல்லப்படவோ
நேரிடலாம். ஆண்டனியும் இப்போது நம் வசம் இல்லாததால், இந்த இக்கட்டான
சூழ்நிலையில் இருந்து தப்பிக்க எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. அதை நான்
தங்களிடம் தெரிவிக்கலாமா?"

"ஆண்டனியே என்னை ஏமாற்றுக்காரி என்று சொல்லிவிட்டார். இனி நான் வாழ்ந்து என்ன பயன்? இருந்தாலும் தாராளமாக உன் யோசனையைச் சொல்".

"நமது
குற்றவாளிகளைக் கொலைக்களக் கூடத்தில் வைத்து தண்டிப்போம் அல்லவா!
இப்போதைக்கு தங்களுக்கு பாதுகாப்பான இடம் அது ஒன்றுதான் என்பது என்
கணிப்பு. நீங்கள் அங்கு இப்போதே புறப்பட்டுச் சென்று விடுங்கள். ஆண்டனி
உட்பட வேறு யாரிடமும் இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம்".

"இல்லை
சார்மியான்! எதிர்பார்க்காத தோல்வி காரணமாக அவர் ஏதோ ஒருவித வேகத்தில்
என்னை அப்படிப் பேசிவிட்டார். ஆனால், அவரது மனதிற்குள் நிச்சயம் எனக்கு
எப்போதும் ஓர் இடம் உண்டு".

"அரசியாரே! நான் தங்களின் நெருங்கிய
தோழி என்கிற முறையில் என்னுடைய இன்னொரு கருத்தையும் சொல்ல ஆசைப்படுகிறேன்.
சற்று நேரத்திற்கு முன்பு தங்களை மதிப்பிற்குரிய ஆண்டனி தவறாகப் பேசினார்
அல்லவா? அவர் இதயத்தில் தங்களுக்குத் தனி இடம் இருப்பதாகவும் சொன்னீர்கள்.
தங்கள் மீதான அவரது காதல் எத்தகையது என்பதை இந்த நேரத்தில் ஏன்
பரிசோதித்துப் பார்க்கக்கூடாது?"

"அது தவறு. காதலர்களுக்குள்
நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இல்லாவிட்டால் அவர்கள் காதலர்களாகவே
இருக்க முடியாது. இப்போது ஆண்டனி வேண்டுமானால் என்னைத் தவறாகப் பேசலாம்.
ஆனால், அவர் மீது எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கிறது. இந்தக்
கிளியோபாட்ராவுக்காக தனது உயிரைக் கூட கொடுப்பார். அவர் மனதில் எனக்கு இடம்
இல்லை என்று மட்டும் நிச்சயம் சொல்லவே மாட்டார்".

"நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் மதிக்கிறேன் அரசியாரே! ஆனாலும்..."

"என்ன
ஆனாலும்... அவரை சோதித்தே ஆக வேண்டும் என்று சொல்ல வருகிறாயா?
அப்படியெனில் அவரை எப்படி சோதிக்க வேண்டும் என்கிறாய்? நமது படைகள் எல்லாம்
எதிரியிடம் சரணடைந்துவிட்ட இந்த நேரத்தில் இப்படியொரு சோதனை அவசியம்தானா?"

"தங்களது
கருத்திலும் நியாயம் இருக்கிறது அரசியாரே! ஆனாலும், தங்களைப் பற்றிய
ஆண்டனியின் விமர்சனத்தின்படி வரலாறு தங்களைத் தவறாக கருத வாய்ப்பு உண்டு
அல்லவா?"

"ஆமாம்... இப்போதுதான் புரிகிறது சார்மியான். என்னுடன்
பழகிப் பழகி நீயும் கூட ராஜதந்திரத்துடன் பேச ஆரம்பித்து விட்டாய். வரலாறு
மிக மிக முக்கியம் தோழி! அதுசரி... எனது ஆண்டனியை நான் எப்படி சோதிப்பது?
அதுவும், இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையில்!"

"நான் இப்போது
கூறும் யோசனையை நீங்கள் தவறாக எண்ணக்கூடாது. வரலாறு உங்களைப்
பழிக்கக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன். கொலைக்களக் கூடத்தில் தஞ்சம்
புகும் தாங்கள் அங்கே இறந்துவிட்டதாக....."

இதற்கு மேல் சார்மியானை
பேச அனுமதிக்கவில்லை கிளியோபாட்ரா. "நிறுத்து உன் பேச்சை! பொய்
சொல்வதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. ஆண்டனி என் மீது உயிரையே
வைத்திருக்கிறார் என்று உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால், நீ
என்னவோ தவறுதலாக வழிகாட்டுகிறாயே..."

"மன்னிக்க வேண்டும் அரசியாரே!
தங்கள் மனம் புண்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் நான் அவ்வாறு சொல்லவில்லை.
தங்களைப் பற்றி அப்படியொரு பொய்யான தகவலை மதிப்பிற்குரிய ஆண்டனியிடம்
கூறினால், அவர் தங்களை நோக்கி ஓடோடி வருவார். அவர் மனதில் நீங்கள்
எப்போதும் இருக்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்பதற்காக
அப்படிச் சொல்ல வந்தேன். அதில் தவறு இருந்தால் மீண்டும் என்னை மன்னித்து
விடுங்கள்..." என்ற சார்மியான், சட்டென்று கிளியோபாட்ராவின் காலில்
விழுந்துவிட்டாள்.

சில நிமிடங்கள் மவுனமாக இருந்த
கிளியோபாட்ராவுக்கு சார்மியான் சொன்ன யோசனை சரியாகவே தோன்றியது. அடுத்த ஒரு
மணி நேரத்தில் ரகசியமாக நெருங்கிய தோழியர் சிலருடன் அலெக்ஸாண்டிரியா
அரண்மனையில் இருந்து வெளியேறி எகிப்தின் கொலைக்களக் கூடத்தைச் சென்றடைந்த
கிளியோபாட்ரா, ஆண்டனிக்கு அந்தப் பரபரப்பான தகவலை அனுப்பினாள்.

"எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் மறைந்திருந்த கிளியோபாட்ரா திடீரென்று தற்கொலை செய்து கொண்டாள்!"
"கிளியோபாட்ரா இறந்துவிட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து வந்த ஒரு ஜீவன்
இந்த உலகத்தை விட்டே மறைந்துவிட்டதா? அன்பே... நான் சொல்லக்கூடாத
வார்த்தைகளைக் கேட்டு இப்படியொரு முடிவை எடுத்து விட்டாயா? ... இனி நான்
என்ன செய்வேன். இனி நான் வாழ்ந்து என்ன பயன்? என் அரசியே... எனக்காக
சொர்க்கத்தில் காத்திரு. இதோ நானும் வந்து விடுகிறேன்..." கிளியோபாட்ரா
தற்கொலை செய்து கொண்டதாக தகவல் அறிந்த ஆண்டனி இப்படித்தான் புலம்பினான்.

"எனக்காக
வாழ்ந்தவளே உயிரோடு இல்லாததால், இனி நான் உயிர் வாழ்வது அவமானம். நான்
பேராசை கொண்டவன் என்று வரலாறு என்னைப் பழிக்கும். அதற்கு இடம் கொடுக்க
மாட்டேன்..." என்று ஆண்டனியின் கடைசி நேர புலம்பலைப் படம் பிடித்துக்
காட்டுகிறார் ஷேக்ஸ்பியர்.

கிளியோபாட்ரா உண்மையிலேயே இறந்துவிட்டாள்
என்று நம்பிய ஆண்டனியும் உண்மையிலேயே சாகத் துணிந்துவிட்டான். அவனுக்கு
அருகில் அப்போது நின்றிருந்த அவனது அடிமையான ஈராஸ் சற்று நடுங்கியபடியே
நின்றிருந்தான்.

"ஏன் மவுனமாக இருக்கிறாய் ஈராஸ்? உன் தலைவியின்
பிரிவை உன்னாலும் தாங்க முடியவில்லையா? உனக்கே இந்த நிலைமை என்றால், என்
இதயத்தில் அவளுக்கு மட்டுமே கோவில் எழுப்பியுள்ள என்னால் எப்படித் தாங்கிக்
கொள்ள முடியும். அதனால், ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அதற்கு நீதான்
உதவ வேண்டும்".

"உதவியா..? நான் என்ன உதவி செய்யமுடியும்?"

"ஆமாம்! நீதான் எனது கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்".

"என்னது... கடைசி ஆசையா? நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே என்னால் கணிக்க முடியவில்லை".

"உன்னை
நீயே குழப்பிக் கொள்ளாதே ஈராஸ். இப்போதுதான் நீ தைரியமாக இருக்க வேண்டும்.
நான் சொல்வதைச் செய்ய வேண்டும். என் மரணம் உன் கையால் நிகழ வேண்டும்."

அதிர்ந்து
போன ஈராஸ், "ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? நமது அரசியாரின் உடலை
ஒருமுறை பார்த்த பின்னர் உங்கள் முடிவு பற்றி யோசிக்கலாமே..." என்றான்.

"இல்லை
ஈராஸ்! என் கிளியோபாட்ரா இறந்துவிட்டாள் என்ற செய்தி என் காதில் எப்போது
கேட்டதோ, அப்போதே நானும் இறந்து போய்விட்டேன். இப்போது உன்னிடம் பேசிக்
கொண்டிருப்பது உயிரற்ற எனது உடல்தான்!"

"அவசரப்பட வேண்டாம், அரசே!
தற்கொலை என்பது யாரும் யோசித்து எடுக்கும் முடிவு அல்ல. ஒரு சில நொடிகளில்
தன்னையும் அறியாமல் எடுக்கப்படுகிற தவறான முடிவு. நமது தலைவிதான்
அப்படியொரு முடிவை..." இதற்கு மேல் பேச ஈராஸ் சற்று சிரமப்பட்டான்.

"ஏன்
சொல்ல வந்ததை விழுங்குகிறாய். இப்போது நீ சொல்லும் அறிவுரை கூட நான்
கேட்கும் கடைசி அறிவுரை என்பதால்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்".

"தங்களுக்கு
அறிவுரை சொல்கிற தகுதி என்னிடம் இல்லை. ஆனாலும், நடந்த சம்பவத்தைத்
தீவிரமாக விசாரிக்கலாம் அல்லவா. அவர் இறந்ததற்கான காரணத்தைத் தெரிந்து
கொண்டுவிட்டு, அதன்பின் தங்கள் முடிவு பற்றி யோசிக்கலாமே?"

"நிறுத்து!
போதும் உன் அறிவுரை. இவ்வளவு நேரம் நான் உன்னுடன் பேசியதே பெரிய விஷயம்.
இதுவரை நீ சொன்ன உதவாத அறிவுரைகள் போதும். இனி நான் சொல்வதை எனது உத்தரவாக
ஏற்றுச் செய்!"

"சரி... அப்படியே செய்கிறேன்..." என்ற ஈராஸின்
கைகள், கால்கள் மட்டுமின்றி உடலே நடுங்க ஆரம்பித்துவிட்டது. அழாத குறையாக
ஆண்டனியின் முன் பரிதாபமாக நின்றிருந்தான். அவனது கையில் ஒரு கத்தியை
அவசரமாக திணித்த ஆண்டனி, தனது கர்ஜனையான குரலால் மீண்டும் அவனை
மிரட்டினான்.

"ஈராஸ்... இப்போது நீ செய்யும் செயலால் வரலாற்றில்
இடம்பெறப் போகிறாய். என்னைப் பற்றி யாரெல்லாம் பேசப் போகிறார்களோ, அங்கே
நீயும் பேசப்படப் போகிறாய்..."

"தங்கள் அடிமையான நான் அதற்கெல்லாம் தகுதியானவனா?"

"ஆமாம்... என்னைக் கொல்லப்போகும் தகுதியை உனக்கு நான் தரப்போகிறேன் அல்லவா?"

"என்னது கொலையா? அதுவும் நானா உங்களை..." மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தான் ஈராஸ்.

"ஆமாம்
ஈராஸ்! இப்போது நீ என்னை என் சுயவிருப்பத்துடனேயே கொல்லப் போகிறாய்.
அதனால்தான் உன் கையில் கத்தியைக் கொடுத்து இருக்கிறேன். கிளியோபாட்ரா சென்ற
இடத்திற்கே நானும் செல்லத் தயாராகிவிட்டேன். தாமதம் வேண்டாம். உடனே
செயல்படு..".

"இல்லை அரசே! நீங்கள் என்னைக் கொன்றாலும் பரவாயில்லை. உங்களை என்னால் கொல்ல முடியாது".

"தேவையில்லாமல்
பேசிப் பேசி என் மனதை மாற்றி விடாதே ஈராஸ். சொன்னதை மட்டும் செய்! இது என்
உத்தரவு! இப்போது கத்தியால் என்னை குத்தப் போகிறாயா இல்லையா?"

"இந்தக்
கத்தி உயிரை பலி வாங்க வேண்டும் என்று முடிவாகிவிட்டது. அதற்குக் காரணமாக
நான் அமைந்துவிட்டேன். உங்கள் முகத்தை மட்டும் திருப்பிக் கொள்ளுங்கள்.
கண்களை மூடிக்கொள்ளுங்கள். இந்தக் கத்தியால் உயிரை எடுக்கிறேன்..." என்று
ஈராஸ் சொல்ல, அடுத்த நொடியே ஆண்டனி நெஞ்சை நிமிர்த்தி தன் முகத்தை வேகமாக
திருப்பிக் கொண்டான். கண்களை மூடிக்கொண்டான்.

நொடிகளின் வேகம்
அதிகரித்தது. ஆனால், ஆண்டனிக்கு எதுவும் ஆகவில்லை. ஒரே ஒரு சத்தம். யாரோ,
"ஆ...!" என்று கத்திக்கொண்டு விழுவதைக் கேட்ட ஆண்டனி சட்டென்று கண்களைத்
திறந்தான். அவனுக்கு எதிரே, ஈராஸ் தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்டு
உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.

திடுக்கிட்ட ஆண்டனி ஈராஸைப்
பிடித்து உலுக்கினான். ஈராஸின் கண்கள் இறுதியாய் ஒருமுறை இமைத்துப் பின்
உறைந்தன. அந்தக் கத்தியை அவனது உடலில் இருந்து பிடுங்கிய ஆண்டனி, மண்
தரையில் அந்த கத்தியை செங்குத்தாக நிறுத்தினான். அதன்மீது கண் இமைக்கும்
நேரத்தில் பாய்ந்தான்.

சற்றுநேரத்தில் அங்கு வந்த எகிப்து வீரர்கள்
சிலர் ஆண்டனி கத்திக்குத்து காயத்துடன் உயிருக்குப் போராடிக்
கொண்டிருப்பதையும், அவனுக்கு அருகில் ஈராஸ் ரத்த வெள்ளத்தில் இறந்து
கிடப்பதையும் பார்த்து திடுக்கிட்டனர்.

"கிளியோபாட்ரா தங்களைப்
பார்க்க ஆசைப்படுகிறார். அதற்குள் இப்படி அவசரப்பட்டு விட்டீர்களே..."
என்று அவர்கள் சொன்னபோது, போக இருந்த உயிரையும் பிடித்துக் கொண்டு
அதிர்ச்சியானான் ஆண்டனி.

அப்போது அவனால் ஒன்றை மட்டுமே உடனடியாக சொல்ல முடிந்தது. "என்னது...!! கிளியோபாட்ரா இன்னும் சாகவில்லையா?"



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 10, 2011 4:05 pm

எகிப்தின் கொலைக்களக்கூடத்தில் கிளியோபாட்ரா தற்கொலை செய்து கொண்டதாக தான்
அறிந்த செய்தியில் உண்மை இல்லை.. அவள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறாள்
என்பதை அறிந்த ஆண்டனிக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனாலும் தற்கொலை
முயற்சியின் விளைவாக வெளியேறிக் கொண்டிருந்த ரத்தம் அவனை பேச விடாமல்
பலவீனப்படுத்தியது.

"அரசே! தாங்கள் ஏதோ கேட்க வருகிறீர்கள்? அதைத்
தெளிவாகக் கேளுங்கள். தங்களது உள்ளக் குமுறலை எங்களால் கேட்க முடியாமல்
போனால் வரலாறு எங்களை மன்னிக்காது".

"கிளியோபாட்ரா தற்கொலை செய்ததாக
தகவல் பரப்பியது யார்? எதற்காக அவள் இப்படியொரு காரியத்திற்குத்
துணிந்தாள்?" திணறியபடி கேட்டான் ஆண்டனி.

"சொல்கிறேன் அரசே!
அரசியாரின் நல்ல நோக்கத்திற்காக இப்படி சொல்லப்பட்டதில் இதுபோன்று விதி
விளையாடும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தோழியர் கொடுத்த யோசனையின்
காரணமாகவேதான் நமது அரசி இப்படி கூறச் சொல்லி இருக்கிறார்".

"ஏன்...?"

"ஆக்டேவியனுடன் சேர்ந்து நமது அரசி சதி செய்து விட்டதாக தாங்கள் அவர் மீது கோபம் கொண்டீர்கள்.
தாங்கள்
அவ்வாறு எண்ணியதால், தங்களது அர்த்தமற்ற கோபத்தைத் தணிக்க வழி தெரியாத
சூழ்நிலையில், தங்களது கோபம் உண்மைதானா என்பதைச் சோதிக்க அவ்வாறு தகவல்
அனுப்பி இருக்கிறார். இதற்கு முழுக்க முழுக்கக் காரணம் அவர் அல்ல. அவரது
தோழியர் கொடுத்த யோசனைதான்!

"சரி... நான் எடுத்த இந்த தவறான முடிவு பற்றி என் அன்பான கிளியோபாட்ராவுக்குத் தகவல் சொல்லிவிட்டீர்களா?"

"ஆமாம்
அரசே! தங்களின் நிலையைப் பார்த்த மாத்திரத்தில் இரு வீரர்கள் நமது
அரசியைப் பார்க்கச் சென்று விட்டார்கள்..." என்ற ஆண்டனியின் வீரர்கள்,
ஆண்டனியின் உடலில் பாய்ந்திருந்த கத்தியை அப்புறப்படுத்தி, அவனுக்கு
அவசரமாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். கிளியோபாட்ராவிடம் தன்னை அழைத்துச்
செல்லுமாறு ஆண்டனி வேண்ட, உடனடியாக அவனைத் தூக்கிச் சென்றனர்.

இதற்கிடையில்
கொலைக்களக்கூடத்தின் மேல்மாடத்தில் பதுங்கியிருந்த கிளியோபாட்ரா,
ஆண்டனிக்கு என்ன ஆயிற்றோ.. என்கிற பதற்றத்தில் பரிதவித்தாள். உயிருக்குப்
போராடிக்கொண்டிருந்த ஆண்டனியை வீரர்கள் தூக்கி வந்ததைப் பார்த்த அவளது
கண்கள் தன்னை மறந்து கண்ணீர் மழையைச் சொரிந்தன. கிளியோபாட்ரா இருந்த மேல்
மாடத்திற்கு ஆண்டனியை கொண்டு வந்து அமர வைத்தனர் வீரர்கள்.

"அய்யோ...
மாவீரரான நீங்கள் இப்படியொரு முடிவை எடுப்பீர்கள் என்று நான் கனவிலும்
நினைத்துப் பார்க்கவில்லையே... நான் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்யப்
போகிறேன் என்றே தெரியவில்லையே... அன்பான கணவனின் சாவுக்கு இந்தக்
கிளியோபாட்ராவே காரணமாகிவிட்டாள் என்று என்னை வரலாறு பழிக்குமே... என்னை
மன்னித்து விடுங்கள் ஆண்டனி!" என்று புலம்பினாள் கிளியோபாட்ரா.

"அவசரப்படாதே அன்பே! இப்படியொரு முடிவு என்னோடு போகட்டும். நீயாவது தப்பித்துக் கொள்".

"உயிர்
பிரியும் நேரத்தில் கூட எனக்காகப் பரிந்து பேசுகிறீர்களே... உங்களது
கோபத்தை வைத்து, என் மீதான உங்களது அன்பை சோதித்தது எவ்வளவு பெரிய
முட்டாள்தனம் என்று இப்போதுதான் புரிகிறது".

"இப்போது அதற்காக வருந்தி எந்தப் பயனும் இல்லை. இப்போது நான் சொல்வதைக் கேட்பாயா? இல்லை... கேட்டுதான் ஆகவேண்டும்".

"சொல்லுங்கள் ஆண்டனி. அப்படியே கேட்கிறேன்..."

"ஆக்டேவியன்
மிக மிக மோசமானவன். நமது தோல்வியால் வெற்றிக்களிப்பில் உள்ள அவன் உன்னைப்
பார்த்துவிட்டால் சும்மா விட மாட்டான். உனது மானத்திற்கும் அவனிடம்
உத்தரவாதம் கிடைக்காது. அதனால், அவனிடம் உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு
சமாதானமாக சென்று விடு. அப்போதுதான் உனது மானமும் காக்கப்படும்; உனக்குரிய
பாதுகாப்பும் கிடைக்கும். ஆக்டேவியனின் படையில் அவனது நண்பன்
புரொக்கியூலிஸ் மட்டுமே நல்லவன். அவன் சொன்னால் மாத்திரம் நம்பு..." என்ற
ஆண்டனியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

நிரந்தர மயக்க நிலைக்குச்
சென்ற அவனது உயிரும் நிரந்தரமாக பிரிந்தது. ஆண்டனி இறந்துவிட்டான் என்பதை
அறிந்த கிளியோபாட்ரா ஓ..வென கத்திக் கொண்டே மயங்கி சரிந்தாள்.

ஆக்டேவியனுக்குத்
தெரியாமல் இப்படி எல்லாமே முடிந்துபோய் இருக்க, அவன் மட்டும் ஆண்டனியைப்
பிடிக்க வியூகம் அமைத்துக் கொண்டிருந்தான். அப்போது ரத்தக்கறை படிந்த
கத்தியுடன் வந்து நின்றான் ஆண்டனியின் வீரன் ஒருவன்.

அவனைக் கண்ட ஆக்டேவியன் பரபரப்பானான். "நீ யார்? உனக்கு இங்கே என்ன வேலை? ரத்தக்கறை படிந்த கத்தியுடன் வந்திருக்கிறாயே?"

"நான் மாவீரர் ஆண்டனியின் வீரன். இப்போது அந்த மாவீரன் உயிரோடு இல்லை".

"ஏ.. வீரனே... என்ன சொல்கிறாய்?" பதற்றம் கலந்த ஆர்வத்தோடு கேட்டான் ஆக்டேவியன்.

"ஆமாம்...
இளைய சீஸர் அவர்களே! ஆண்டனி மறைந்துவிட்டார். இந்தக் கத்திதான் அவரது
உயிரைப் பறித்துவிட்டது. அவரை உங்கள் படை வீழ்த்தவில்லை. அவர் தன்னைத்தானே
வீழ்த்திக் கொண்டார்".

"அந்தோ பரிதாபம்! என்னுடன் நெருங்கி
பழகியவர், என்னோடு ரோமாபுரிக்காக பல்வேறு முடிவுகள் எடுத்தவர் என்கிற
முறையில் அந்த மாவீரரின் இத்தகைய முடிவுக்காக வருந்துகிறேன். ஆண்டனியின்
மரணத்திற்காக இந்த இளைய சீஸர் வருந்தவில்லை என்றால் அந்தக் கடவுளே மன்னிக்க
மாட்டார்" என்றான், ஆண்டனி மறைவின் தொடர்ச்சியாக ரோமாபுரியின் மாபெரும்
பேரரசர் அகஸ்டஸ் சீஸர் ஆன ஆக்டேவியன். ஆண்டனியின் மறைவை ஆக்டேவியன்
ஏற்றுக்கொண்ட விதத்தை ஆழமாகப் பதிவு செய்கிறார் ஷேக்ஸ்பியர்.

"ஆண்டனி...
இதற்காகவா உங்களை நான் பின்தொடர்ந்து வந்தேன்? ஒரு நோயைத் தீர்ப்பதற்கு
அறுவை சிகிச்சை தேவைதான். எனது வீழ்ச்சியை நீங்களோ அல்லது உங்களது
வீழ்ச்சியை நானோ பார்க்க வேண்டும் என்பது விதி. இந்த உலகத்தில் நாம்
இருவரும் சமாதானமாக இணைந்து வாழ முடியவில்லை. ஆனாலும், உங்களது மறைவுக்காக
நான் கண்ணீர் வடிக்கிறேன். உங்களை எனது சகோதரராகவே பார்க்கிறேன். எனது
அரசில் பங்காளி, போர்க்களத்தில் நண்பன் என்று தாங்கள் இருந்தாலும், அந்த
விதி நம் இருவரையும் இணைந்து பணியாற்ற அனுமதிக்கவில்லை" என்று ஆக்டேவியனின்
அனுதாபத்தை தெரிவிக்கிறார் ஷேக்ஸ்பியர்.

ஆண்டனியின் மறைவுக்காக ஆக்டேவியன் வருந்தி நின்று கொண்டிருந்த நேரத்தில் கிளியோபாட்ராவின் வீரன் ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான்.

"எங்கள்
அரசி எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தங்கியிருக்கிறார். அவர், தங்களது
வெற்றியை ஏற்றுக் கொள்கிறார். தாங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதை ஏற்கவும்
அவர் தயாராக இருக்கிறார்" என்றான் அந்த வீரன்.

வெற்றிக்கனியை
பறித்துவிட்ட ஆக்டேவியன் கிளியோபாட்ராவைச் சந்திக்க தயாரானான். அதற்காக
தனது நண்பனான புரொக்கியூலிஸ் என்பவனை அவசரமாக அழைத்தான்.

"நண்பா!
ஆண்டனி தற்கொலை செய்து கொண்டதுபோல் கிளியோபாட்ராவும் தற்கொலை செய்து
கொள்ளலாம். ஒருவேளை அவள் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டால், அது நமக்கு
மகத்தான வெற்றி அல்ல. ரோமில் நாம் விரைவில் நடத்தும் வெற்றி ஊர்வலத்தில்
அவளது காட்சிதான் மகத்தானதாக இருக்கப் போகிறது. அதனால் ரோமாபுரியில் நமது
வெற்றி விழா முடியும் வரை அவளது உயிர் எந்தச் சூழ்நிலையிலும் போய்விடக்
கூடாது" என்று கூறிய ஆக்டேவியன், கிளியோபாட்ராவைப் பாதுகாப்பாக பார்த்துக்
கொள்ளும்படி அவனுக்குக் கட்டளையிட்டான்.
ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு ஆளாக்கி இருந்தது.
வழக்கமாகக் காணப்படும் கலகலப்பு ஒட்டுமொத்தமாக காணாமல் போய் இருந்தது.
பிரம்மாண்டமான அந்த கல்லறை மாடத்தின் ஓர் அறையில் முடங்கிக் கிடந்தாள்.
உயிரற்ற ஆண்டனியின் உடல் இன்னொரு அறையில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த
நேரத்தில் ஆக்டேவியன் தூது அனுப்பிய, அவனது நண்பன் புரொக்கியூலிஸ் சில
ரோமானிய வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான். கொலைக்களக்கூடத்தின்
கீழ்பகுதியில் நின்று கொண்டு, மேல் மாடத்தில் தங்கியிருந்த கிளியோபாட்ராவை
சந்திக்க வேண்டி குரல் கொடுத்தான்.

அவனது சப்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள் கிளியோபாட்ரா.

"யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்?"

"என் பெயர் புரொக்கியூலிஸ். இளைய சீஸர் ஆக்டேவியனின் நண்பன்".

"எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?"

"இளைய சீஸர்தான் எங்களை அனுப்பி இருக்கிறார். தாங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைக் கேட்டறிய வந்திருக்கிறோம்".

"ஓ...
அப்படியா? உங்களைப் பற்றி ஆண்டனி என்னிடம் ஏற்கனவே கூறி இருக்கிறார்.
ஆக்டேவியன் உள்ளிட்ட அவனது ஆதரவாளர்கள் யாரையும் நம்பாதே. ஆனால்,
புரோக்கியூலிஸை மட்டும் நம்பு. அவன் ரொம்ப நல்லவன் என்றும் கூறினார்".

"என்னைப்
பற்றி ஆண்டனி அப்படியா கூறினார்? இதைக் கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறது. அதேநேரம், அவர் உயிருடன் இல்லையே என்கிற சோகம் என்னைத்
தாக்குகிறது..." என்ற புரொக்கியூலிஸின் கண்கள் லேசாகப் பனித்தன. தொடர்ந்து
பேசினான். "நான் மேல் மாடத்திற்கு தங்களுடன் பேச வரலாமா?"

சிறிது யோசனைக்குப் பிறகு "சரி... வாருங்கள்" என்றாள்.
"உங்களுடனான
இந்த சந்திப்பு நல்லபடியாக அமையும் என்று நம்புகிறேன். உங்கள் விருப்பத்தை
ஒளிவு மறைவின்றி என்னிடம் கூறுங்கள். என்னால் முடிந்த உதவிகளை
உங்களுக்குச் செய்ய காத்திருக்கிறேன்".

"உங்களது உதவும்
மனப்பான்மைக்கு நன்றி. இதுவரை எல்லா ஏமாற்றங்களையும் சந்தித்தாகி விட்டது.
இனிமேல் எந்த ஏமாற்றம் வந்தாலும் அது பற்றிக் கவலைப்படப் போவதில்லை.
என்னைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்து விட்டதாகவே நினைக்கிறேன். அதனால்,
உங்களது உதவி ஏதும் எனக்கு வேண்டாம்".

"இல்லை எகிப்து அரசியாரே!
உங்களது பேச்சைப் பார்த்தால், இனி வாழ்வதில் அர்த்தமே இல்லை என்பதுபோல
இருக்கிறது. தயவு செய்து அப்படி ஏதேனும் தவறான முடிவை எடுத்து விடாதீர்கள்.
உங்களது ஏதேனும் ஒரு ஆசையாவது கேளுங்கள். அதையாவது நான் நிறைவேற்றித்
தருகிறேன்".

"சரி... நீங்கள் என் மீது அதிக அக்கறை கொண்டு சொல்வதால்
ஒன்றே ஒன்றை மட்டும் கேட்கிறேன். நான் பிச்சை எடுக்க வேண்டும் என்று
உங்களது இளைய சீஸர் ஆசைப்பட்டால் இந்த எகிப்து அரசை பிச்சை கேட்பதாகப்
போய்ச் சொல்லுங்கள். இப்போது அவர் வெற்றி கொண்டுள்ள இந்த எகிப்து என்
மகனுக்கு வழங்கப்பட வேண்டும். இதுதான் என் ஆசை. இதைத் தவிர வேறு எதையும்
நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை".

"என்னிடம் நம்பிக்கை வைத்து மனம்
திறந்து பேசியதற்கு நன்றி. எங்கள் பேரரசர் சார்பில் உங்கள் உயிருக்கு
உத்தரவாதம் தருகிறேன். உங்களை துன்புறுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.
எதிரியாக வளர்ந்த ஆண்டனியை சிறைபிடிக்கத்தான் அவர் இங்கே படையெடுத்து
வந்தார். இப்போது துரதிர்ஷ்டவசமாக ஆண்டனி தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு
விட்டதால் எங்களது இளைய சீஸரின் வேலை முடிந்து விட்டது. அவர் விரைவில்
ரோமாபுரிக்குத் திரும்ப இருக்கிறார். உங்களுக்கு என்ன தேவையென்றாலும்
எப்போது வேண்டுமானாலும் எங்கள் சீஸருக்கு தகவல் அனுப்புங்கள். அவர்
நிச்சயம் அதை உங்களுக்கு செய்து தருவார் என்பதற்கு நான் உத்தரவாதம்
அளிக்கிறேன்..."

"நன்றி புரொக்கியூலிஸ்... மேலும், நான் உங்களது
இளைய சீஸரையும் பார்க்க விருப்பப்படுவதாகவும் சொல்லுங்கள்" என்ற
கிளியோபாட்ரா, தன் பரிதாப நிலையை எண்ணி மேற்கொண்டு பேச முடியாமல்
அமைதியானாள்.
அவளிடம் விடைபெற்று புறப்படத் தயாரானான் புரொக்கியூலிஸ்.

அப்போது
அவனுடன் வந்த ஆக்டேவியனின் இன்னொரு நண்பனான ரோமானியப் படைத்தளபதி காலசும்,
சில ரோமானிய வீரர்களும் சட்டென்று கிளியோபாட்ரா தங்கியிருந்த அந்த
கொலைக்களக்கூடத்திற்குள் நுழைந்தனர்.
வந்தவர்கள் சூழ்ச்சி வலை பின்னி
தங்களைக் கைது செய்து விட்டதாகக் கருதிய கிளியோபாட்ரா, அவர்களிடம் கைதாகி
சித்ரவதைக்கு ஆளாவதைவிட தற்கொலை செய்வதே மேல் என்று முடிவெடுத்து, தனது
வாளால் தன்னைத்தானே வெட்டித் தற்கொலை செய்ய முயன்றாள்.

இதை
எதிர்பார்க்காத புரொக்கியூலிஸ் சட்டென்று பாய்ந்து அவளது கையைப் பிடித்து
தற்கொலை முயற்சியைத் தடுத்தான். "என்ன காரியம் செய்துவிட்டீர்கள்? மாபெரும்
எகிப்து தேசத்துக்கு அரசியான தாங்கள் எடுக்கும் முடிவா இது? இப்போது
நாங்கள் உங்களைக் கைது செய்ய வரவில்லை. எங்களது இளைய சீஸரும் அப்படியொரு
உத்தரவை எங்களுக்குப் பிறப்பிக்கவில்லை. மீண்டும் சொல்கிறேன், உங்களது
பாதுகாப்புக் கருதிதான் நானும் மற்ற ரோமானிய வீரர்களும் இங்கே
வந்திருக்கிறோம்".

புரொக்கியூலிஸ் கொடுத்த விளக்கத்திற்குப் பிறகுதான் கிளியோபாட்ரா அமைதியானாள்.

தொடர்ந்து
சில ரோமானிய வீரர்கள் மட்டும் கிளியோபாட்ராவின் பாதுகாப்புக்காக
கொலைக்களக்கூடத்தின் முன்பு நின்று கொண்டனர். புரொக்கியூலிஸ் ஆக்டேவியனைப்
பார்க்கப் புறப்பட்டான்.

ஆண்டனியின் மறைவுக்குப் பிறகு மரண பயத்தில்
இருந்த கிளியோபாட்ராவுக்கு அன்றைய இரவு தூக்கம் வர மறுத்தது. நள்ளிரவு வரை
வெகுநேரம் தனிமையில் விழித்து தவித்திருந்த அவள், ஒருகட்டத்தில் தன்னை
அறியாமலேயே தூங்கிப் போனாள். ஆனால், அவளது கனவுலகம் மட்டும் பகலாக
இருந்தது!

திடீரென்று ஏதோ பயங்கர சத்தம். கொலைக்களக்கூடத்தில்
இருந்து வேகமாக ஓடி வந்து வெளியே எட்டிப் பார்த்தாள் கிளியோபாட்ரா.
சற்றுத்தொலைவில் ஆக்டேவியனின் பிரம்மாண்ட ரோமானிய குதிரைப்படை ஆவேசத்தோடு
வந்து கொண்டிருந்தது. அடுத்த சில நிமிடங்களில் அந்தப் படை
கொலைக்களக்கூடத்தை சூழ்ந்து கொண்டது.

சிறிதுநேரத்தில் கொலைக்களக்
கூடத்திற்குள் நுழைந்த ரோமானியப் படை கிளியோபாட்ராவைக் கைது செய்தது. அவளது
கைகளை இரும்புச் சங்கிலியைக் கொண்டு கட்டிய வீரர்கள் அவளைத் தரதரவென்று
இழுத்துச் சென்றனர்.
எகிப்து வீதிகள் வழியாக அவள் இழுத்துச்
செல்லப்பட்டபோது அந்த துயரக் காட்சியை காண சகிக்க முடியாத பொதுமக்கள்
தங்களையும் மீறி அழுதனர். சிலர் அந்த சோகக் காட்சியை காண சக்தியின்றி
தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கொண்டனர்.

இதையெல்லாம் கவனித்த
கிளியோபாட்ரா, கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். கடந்த சில நாட்களுக்கு
முன்பு வரை இதே வீதிகளில் தங்கத்தேரில் தெய்வமாக பவனி வந்த அவள், இன்று
கைதியாக சிறைபிடிக்கப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை அவளால் தாங்கிக் கொள்ள
முடியவில்லை.

'இத்தகைய அவமானம் ஏற்படும் என்று தெரிந்திருந்தால் ஆண்டனி இறந்த அன்றே தற்கொலை செய்திருப்பேனே...' என்று மனதிற்குள் புலம்பினாள்.

திடீரென்று
அவள் கைகள் கட்டப்பட்டு இருந்த இரும்புச் சங்கிலியில் இணைக்கப்பட்டு
இருந்த கயிறு அவளை வேகமாக இழுக்க ஆரம்பித்தது. ஆம்... அவளை குதிரையில்
இருந்தபடி வீதிகளில் இழுத்துச் சென்ற ரோமானிய வீரர்கள் திடீரென்று குதிரையை
வேகமாக விரட்டினர்.

குதிரையின் வேகத்திற்கு இணையாக ஓட முடியாத
கிளியோபாட்ரா சில அடிகள் எடுத்து வைத்த நிலையிலேயே கால் இடறிக் கீழே
விழுந்தாள். கூரிய கற்கள் நிறைந்த சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட
கிளியோபாட்ராவின் உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டன. அவளது ஆடையின் பல பகுதிகள்
கிழிந்து தொங்கின.

அடுத்த சில நொடிகளிலேயே அவள் சுயநினைவை இழக்க
ஆரம்பித்தாள். திடீரென்று 'டமார்' என்று பயங்கர சப்தம்! இழுத்துச்
செல்லப்பட்ட கிளியோபாட்ரா சாலையோரம் இருந்த இரும்புத் தூணில் மோதினாள்.

'அம்ம்...ம்மா...' என்று கத்திக்கொண்டே கீழே விழுந்தாள்.

கண் விழித்தபோது படுக்கையில் இருந்து கீழே விழுந்து கிடந்தாள்.
அதே
வேகத்தில் கைகளைப் பார்த்தாள். அதில் இரும்புச் சங்கிலிகள் இல்லை. ஆடையைப்
பார்த்தாள். அதில் எந்த கிழிசலும் இல்லை. உடம்பிலும் காயங்கள் இல்லை.

'அப்படியானால்... நான் கண்டது எல்லாம் கனவா?'

கிளியோபாட்ரா தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், அவளது இதயத் துடிப்பின் வேகம் மட்டும் இரு மடங்காகி இருந்தது.



Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக