ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 5:09 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ரா.ரா3275 Today at 1:22 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ராஜா Today at 12:53 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

» ஆறுதல் சொல்வது எப்படி ?
by ஜேன் செல்வகுமார் Yesterday at 6:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது. 5 5 26

ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Go down

ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Sat Nov 12, 2011 6:08 pm

First topic message reminder :

தமிழர் வாழ்வில் இன்றியமையாத விஷயங்களாகக் கருதுவது ஒழுக்கம், வீரம், காதல் ஆகிய மூன்றும் தான். பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்த மூன்று விஷயங்களைப் பற்றித் தான் அதிகப் பாடல்கள் உள்ளன. 6 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை உள்ள இலக்கியங்களில் தான் பக்தியை மையமாக வைத்து எழுந்த பாடல்கள் அதிகம் காணப்படுகிறது.

சங்கத்தமிழ் நூல்களின் பெரும்பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள் & மேல் கணக்கு நூல்கள் ஆக 18 + 18 =36 நூல்கள் ஆகும். இதில் கீழ் கணக்கு நூல்கள் பெரும்பாலும் நீதி, ஒழுக்கம், வாழ்க்கை நெறிமுறைப் பற்றி அதிகம் கூறுகிறது. அவற்றுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, திரிகடுகம் போல் விளங்கும் சிறந்த நூல் ஆசாரக் கோவை ஆகும். இவை வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளை அடிப்படையாக வைத்து எழுதிய நூல் என்று மூத்தோர் கூறுகின்றனர்.

வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார். ஆசாரங்களை (ஒழுக்கங்கள்) அழகான மாலைப்போல் கோவையாக கோர்த்து (சேர்த்து) எழுதி உள்ளதால் இது ஆசாரக் கோவை என்று பெயர் பெறுகிறது. பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விஷயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது.

இன்று நமக்கு எழும் பல சந்தேகங்கள் ஆன , எந்த திசையில் படுக்க வேண்டும், எந்த திசையில் சாப்பிட வேண்டும், எப்படிச் சாப்பிட வேண்டும், எப்போது குளிக்க வேண்டும், நீராடும் முறை என்ன , யாரை வணங்க வேண்டும், பெரியவர்களுடன் பழகும் போது , உண்ணும் போது செய்ய வேண்டிய ஒழுக்க நெறிகள் (மேனர்ஸ்) என்னென்ன என்பது போன்ற பல கேள்விகளுக்கு இதில் விடை உள்ளது. இது மட்டுமல்லாது மலம், ஜலம் கழிக்க வேண்டிய இடங்கள், எந்த நாள்கள் பெண்ணுடன் சேர்வது நல்லது, எந்த நாள் தவிர்க்க வேண்டும் பற்றியும் இதில் பாடல்கள் உள்ளன.

தமிழன் பல நூற்றாண்டு முன்னரே அறிவியல், வாழ்க்கை நெறிமுறை, ஆரோக்கியமாக வாழும் வழிகள் கண்டு அறிந்திருந்தான் என்பதற்கு இந்த நூல் சிறந்த சான்றாகும்.

ஔவையின் மூதுரை, நல்வழியைப் போல் ஆசாரக்கோவை அனைவரிடமும் பிரபலமாகவில்லை. நம் பள்ளிக்கூட புத்தங்களிலும் இவை அரிதாகவே இடம் பெறுகிறது, பலருக்கு தமிழில் இப்படி ஒரு நூல் இருக்கிறது என்று தெரியவில்லை.

இணையதளத்தில் பல இடங்களிலும் இதில் உள்ள பாடல்களின் மூலம் மட்டுமே கிடைக்கிறது. மூதுரை, நல்வழியைத் தொடர்ந்து ஈகரை உறவுகளுக்கு இந்த அற்புத நூலை அனைவரும் அறிந்து கொள்ள, அனைவரும் சுலபமாக படிக்க, பொருளுடன் பதிக்கும் முயற்சியை தொடங்கியுள்ளேன்.

உங்களின் ஆதரவும் ,தவறு ஏற்படின் எடுத்துக் கூறும் நட்பையும் நாடி தொடர்கிறேன்.


அன்புடன்......


Last edited by சதாசிவம் on Sat Jan 28, 2012 10:49 am; edited 4 times in total

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down


Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by பிஜிராமன் on Thu Jan 19, 2012 9:06 pm

சதாசிவம் wrote:ஆக, அந்த தருணத்தில் நாம் அமைதி காத்து நிற்பதே சிறந்தது. நன்றிகள் ஐயா. ஆயினும், ஒருவர் கூறும் பொழுது நாம் எந்த வித மறுமொழியும் இடாமல் இருப்பது. நன்றாக இருக்குமா ஐயா......

இன்றைக்கு கூறும் பல கல்விப் பாடங்களின் மூலம் நம் இந்திய மரபில், அதிலும் தமிழில் மிகுந்து உள்ளது. பல உளவியல் கோட்பாடுகள் உட்பட.

மறுமொழி இடுவது நாம் பழகும் அதிகாரியின் தனித்தன்மைப் பொருத்தும், நம்முடைய பதவியைப் பொருத்தும் அமைய வேண்டும். குறிப்பாக ஒரு மேலதிகாரி தான் கீழ் உள்ளவன் சொல்வதை கேட்காமல் போகலாம், ஆனால் அவனுடைய காரியதரிசி கூறுவதன் படி செயல்படுகிறார். யூனியன் லீடர் சொல்லுக்கு தலைச் சாய்கிறார். மன்னுனும் தன் தவறுகளை இடிந்துரைக்கும் அமைச்சனின் சொல்லை கேட்க வேண்டும், கேட்கவில்லை என்றால் எதிரியே தேவையில்லை அவன் தானாகவே கெடுவான் என்று வள்ளுவன் கூறுகிறார்.

ஆதலால் உங்களின் பணி நிலையும், நீங்கள் பணி புரியும் அதிகாரியின் குணத்தையும் பொறுத்து அவர் சொல்லுக்கு மறுமொழி இடலாம். அவர் தன் தவறை உணராதவர் என்று உணர்ந்தால் அமைதியாக இருப்பது நமக்கு சிறந்தது என்றும், கடிந்துரைக்கும் நண்பர்களின் சொல் கேட்டு நடப்பது மன்னனுக்கு (அனைத்து அதிகாரிக்கும்) நல்லது என்றும் தமிழ் கூறுகிறது. உங்களின் கீழ் உள்ளவர்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்றும், மேல் உள்ளவர்களிடம் எப்படி நடப்பது சிறந்தது என்றும் தமிழ் கூறுகிறது.


அருமையான விளக்கம் ஐயா......மிகவும் தெளிவாக விளங்கியது...... புன்னகை நன்றி நமக்கு அருகில் இருக்கும் ஆளைப் பொறுத்து மாறுபட்டு செயல் படவேண்டும் என்பது தெளிவாகிறது. நன்றிகள் ஐயா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Fri Jan 20, 2012 4:12 pm

நன்றி ராமன், சந்தேகம் இருப்பின் தயங்காமல் கேளுங்கள்.
:நல்வரவு:

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Sat Jan 21, 2012 6:09 pm

பாடல் 74 ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
(இன்னிசை வெண்பா)


நின்றக்கால், நிற்க, அடக்கத்தால்! என்றும்
இருந்தக்கால், ஏவாமை ஏகார்; பெருந்தக்கார்
சொல்லின் செவி கொடுத்துக் கேட்டீக! மீட்டும்
வினாவற்க, சொல் ஒழிந்தக்கால்!

பொருள் விளக்கம்

சிறந்த குணமுள்ள மாணவர்கள் எப்போதும் அடக்கத்தால் ஆசிரியர் பாடம் சொல்லாமல் சும்மா இருக்கும் போது அமைதியுடன் இருப்பர். என்றும் இருந்து அமரும் இருக்கும் போது அவர் சொல்லாமல் எழுந்து செல்ல மாட்டார். அவர் பாடம் சொல்லும் போது செவி கொடுத்து கவனமாக கேட்பர். கவனிக்காமல் பாடம் சொல்லி முடித்தவுடன் அது குறித்து வினவக்கூடாது.

பாடல் 75 சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


உடுக்கை இகவார், செவி சொறண்டார்; கை மேல்-
எடுத்து உரையார்; பெண்டிர்மேல் நோக்கார்; செவிச் சொல்லும்
கொள்ளார்; பெரியார் அகத்து.

பொருள் விளக்கம்

பெரியவர்கள் இருக்கும் சபையில் உடையை கழட்ட மாட்டார்கள். காதை சொறிந்து நிற்கக் கூடாது. கையை உயர்த்தி பேசக்கூடாது. அங்குள்ள பெண்கள் மேல் கண்கள் செல்லக்கூடாது. அங்கு அவர்கள் பிறர் காதில் சொல்லும் ரகசியத்தை காது கொடுத்துக் கேட்கக்கூடாது.

பாடல் 76 சொல்லும் முறைமை
(இன்னிசை வெண்பா)


விரைந்து உரையார்; மேன்மேல் உரையார்; பொய் ஆய
பரந்து உரையார்; பாரித்து உரையார்; - ஒருங்கு எனைத்தும்
சில் எழுத்தினானே, பொருள் அடங்க, காலத்தால்
சொல்லுக, செவ்வி அறிந்து!

பொருள் விளக்கம்

ஒருவர் ஒரு விஷயம் குறித்து கேட்கும் போது, விரைவாக அவசரத்துடன் பதில் அளிக்கக் கூடாது. சொன்னதை திரும்ப திரும்ப சொல்லக் கூடாது. பொய்யாக உரைக்கக் கூடாது. பலவாறு விவரித்து உரைக்கக் கூடாது. மொத்த கருத்தின் விஷயத்தை சுருக்கமாக சிறிய சொற்றொடர்களால் பொருள் அடங்குமாறு காலம் அறிந்து சொல்ல வேண்டும்.

தொடரும்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by பிஜிராமன் on Sat Jan 21, 2012 6:56 pm


ஒருவர் ஒரு விஷயம் குறித்து கேட்கும் போது, விரைவாக அவசரத்துடன் பதில் அளிக்கக் கூடாது.


மிகவும் நன்று ஐயா, எனக்கு கடைசியாக உள்ள ஆசாரம் பொருந்தும்........அதிலும், மேலுள்ள வரிகள் மிகவும் பொருந்தும், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Sun Jan 22, 2012 3:24 pm

பிஜிராமன் wrote:

ஒருவர் ஒரு விஷயம் குறித்து கேட்கும் போது, விரைவாக அவசரத்துடன் பதில் அளிக்கக் கூடாது.


மிகவும் நன்று ஐயா, எனக்கு கடைசியாக உள்ள ஆசாரம் பொருந்தும்........அதிலும், மேலுள்ள வரிகள் மிகவும் பொருந்தும், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி


நன்றி ராமன்..... :நல்வரவு:

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Sun Jan 22, 2012 3:54 pm

பாடல் 77 நல்ல குலப்பெண்டிர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


தம் மேனி நோக்கார்; தலை உளரார்; கைந் நொடியார்,
எம் மேனி ஆயினும் நோக்கார்; தலைமகன்-
தம் மேனி அல்லால் பிற

பொருள் விளக்கம்

நல்ல குலத்தில் பிறந்த, கற்பு நெறி தவறாத மங்கையர்
தங்கள் உடல் பிறருக்கு அழகாக தெரிய வேண்டும் என்று தங்கள் உடலை பார்த்து அலங்காரம் செய்ய மாட்டார்கள். பிறர் முன்னிலையில் தலைமுடியை உலர மாட்டார்கள், கையை நொடிக்க மாட்டார்கள். தங்கள் கணவனைத் தவிர எத்துணை அழகனாய் இருந்தாலும் பிற ஆடவனைப் பார்க்க மாட்டார்கள்.

பாடல் 78 மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


பிறரொடு மந்திரம் கொள்ளார்; இறைவனைச்
சாரார்; செவி ஓரார்; சாரின், பிறிது ஒன்று
தேர்வார்போல் நிற்க, திரிந்து!


பொருள் விளக்கம்


அரசன், உயர் அதிகாரிகள் இருக்கும் இடங்களில் இருக்கும் சபையில் பிறருடன் ரகசியம் பேசக்கூடாது, அரசன் ஒருவருக்கு கூறும் ரகசியத்தை காது கொடுத்து கேட்கக் கூடாது. கேட்கும் படி நிற்க் நேர்ந்தால் அவர் பேசுவதை கண்டு கொள்ளாமல், அதிலிருந்து விலகி வேறு ஒன்றை கவனிப்பது போல் மாறி நிற்க வேண்டும்.

பாடல் 79 பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
(நேரிசை வெண்பா)


துன்பத்துள் துன்புற்று வாழ்தலும், இன்பத்துள்
இன்ப வகையான் ஒழுகலும், அன்பின்
செறப்பட்டார் இல்லம் புகாமை, - இம் மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள.

பொருள் விளக்கம்

நன்கு கற்று உணர்ந்து அடங்கிய திறம் நிறைந்த பெரியவர்களிடம் தங்களுக்கு துன்பம் ஏற்படும் வேளையில் துன்பத்தை கண்டு துவளாமல் வாழ்வதும், இன்பம் வரும் வேளையில் இன்பத்தை கண்டு பெரு மகிழ்ச்சி அடையாமல் அமைதியாக இருப்பதும், அன்பில்லாத மனிதர்கள் வீட்டில் நுழையாமல் இருப்பதும் ஆகிய மூன்றும் குணங்களும் நிறைந்து இருக்கும்.

பாடல் 80 சான்றோர் பெயர் முதலியவற்றைக் கூறாமை
(நேரிசை வெண்பா)


தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார்; இல்லத்து
உறுமி நெடிதும் இராஅர்; பெரியாரை
என்றும் முறை கொண்டு கூறார்; புலையரையும்
நன்கு அறிவார் கூறார், முறை

பொருள் விளக்கம்

கோபம் வந்த போதும் பெரியவர்களை பேர் சொல்லி அழைக்கக்கூடாது. இல்லத்தரசியிடம் கோபம் கொண்டு நீண்ட நேரம் பேசாமல் இருக்கக்கூடாது. பெரியவர்களை முறை இல்லாமல் பேசக்கூடாது. அது போல் நன்கு விஷயம் அறிந்தவர்கள் துன்பம் விளைவிக்கும் சிறிய குணத்தை உடையவரையும் முறை இல்லாமல் பேச மாட்டார். இதுவே நல்ல நெறி என்று கூறப்படும் முறை ஆகும்.

தொடரும்...

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by பிஜிராமன் on Sun Jan 22, 2012 4:08 pm

நல்ல விளக்கங்கள் ஐயா, மிக்க நன்றிகள்.

ஐயா, குரவர் என்ற வார்த்தை வருகிறதே, அது பெரியோர்களைக் குறிக்கிறதா....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Sun Jan 22, 2012 5:02 pm

பிஜிராமன் wrote:நல்ல விளக்கங்கள் ஐயா, மிக்க நன்றிகள்.

ஐயா, குரவர் என்ற வார்த்தை வருகிறதே, அது பெரியோர்களைக் குறிக்கிறதா....


ஆம் ராமன்,
குரவர் என்றால் பெரியவர், ஆசான், ஆசாரியன் என்ற பொருளைக் குறிக்கும்.
சைவச் சமயக் குரவர் நால்வர் என்று அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரரை குறிப்பிடுகிறோம்.

நன்றி

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Mon Jan 23, 2012 1:29 pm

பாடல் 81 ஆன்றோர் செய்யாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


புழைக்கடைப் பின் புகார்; கோட்டி, உரிமை,
இவற்றுக்கண் செவ்வியார், நோக்காரே, அவ்வத்
தொழிற்கு உரியர் அல்லாதவர்

பொருள் விளக்கம்

அந்தந்த தொழிலுக்கு உரியவர் அல்லாத பெரியவர்கள் ஒரு வீட்டின் பின் வாசல் வழியே நுழைய மாட்டார். அரசன் நாட்டியம், கூத்து என்று சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் அவரை சென்று சந்திக்க மாட்டார்.

பாடல் 82 மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


வண்ணமகளிர் இடத்தொடு தம் இடம்,
ஒள்ளியம் என்பார், இடம் கொள்ளார்; தெள்ளி,
மிகக் கிழமை உண்டுஎனினும், வேண்டாவே; - பெண்டிர்க்கு
உவப்பன வேறாய்விடும்.

பொருள் விளக்கம்

தங்களை அழகு செய்து ஆண்களை கவரும் பெண்கள் இருக்கும் இடத்தில் நல்ல குணம் உள்ளவர் வீடு அமைக்க மாட்டார்கள். அந்த பெண்கள் தங்கும் இடம் தங்களுக்கு உரிமையானதாக இருக்கும் தருணத்திலும் அங்கு தங்கள் மனைவியின் மனம் கோணும் படி அங்கே வீடு அமைக்க மாட்டார், உரிமை கொண்டாட மாட்டார்.

பாடல் 83 கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
(இன்னிசை வெண்பா)


நிரல்படச் செல்லார்; நிழல் மிதித்து நில்லார்;
உரையிடை ஆய்ந்து உரையார், ஊர் முனிவ செய்யார்;
அரசர் படை அளவும் சொல்லாரே; - என்றும்,
'கடைபோக வாழ்தும்!' என்பார்

பொருள் விளக்கம்

வாழ்க்கையில் இறுதி வரை நல்லமுறையில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருவர் செல்லும் பொது அவருடன் ஒரே வரிசையில் உரசும் படி செல்ல மாட்டார். ஒருவருடைய நிழலை மிதித்து நிற்க மாட்டார். ஊரார் வருத்தப்படும் செயலைச் செய்ய மாட்டார். அரசனின் பகைவரிடம் ஆதாயம் கருதி சேர மாட்டார்.

தொடரும்


சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Mon Jan 23, 2012 1:50 pm

பாடல் 84 பழகியவை என இகழத் தகாதவை
(இன்னிசை வெண்பா)


அளை உறை பாம்பும், அரசும், நெருப்பும்,
முழை உறை சீயமும், என்று இவை நான்கும்,
இளைய, எளிய, பயின்றன, என்று எண்ணி,
இகழின், இழுக்கம் தரும்.

பொருள் விளக்கம்

புற்றில் தங்கும் பாம்பும், அரசனும் , நெருப்பும், குகையில் வசிக்கும் சிங்கம் ஆகிய நான்கிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவை நமக்கு பழக்கமானவை, உருவத்தில்/வயதில் சிறியது, எளிமையானது என்று எண்ணக்கூடாது. அப்படி எண்ணி கவனம் இல்லாமல் இருந்தால் துன்பம் விளையும்.

பாடல் 85 செல்வம் கெடும் வழி
(நேரிசை வெண்பா)


அறத்தொடு, கல்யாணம், ஆள்வினை, கூரை,
இறப்பப் பெருகியக்கண்ணும், திறப்பட்டார்
மன்னரின் மேம்படச் செய்யற்க! செய்பவேல்,
மன்னிய செல்வம் கெடும்

பொருள் விளக்கம்

அறிவுத்திறம் நிறைந்த பெரியவர்கள் தங்களிடம் உள்ள செல்வம் நிலை பெற வேண்டுமானால் அரசனை விட அதிகமாக தர்ம காரியங்கள், கல்யாணம், ஆடம்பரம், வீடு ஆகியவற்றுக்கு செலவு செய்ய மாட்டார்கள். செய்தால் சேர்த்து வைத்த செல்வம் வீணாகி விடும்.


பாடல் 86 பெரியவரை 'உண்டது யாது' என வினவக் கூடாது
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


உண்டது கேளார், குரவரை, மிக்காரை,
கண்டுழி; கண்டால், முகம் திரியார், புல்லரையும்
உண்டது கேளார் விடல்

பொருள் விளக்கம்


பெரியவர்களை காணும் பொழுது நீங்கள் சாப்பிட்டது என்ன என்று கேட்கக்கூடாது. அதே போல் கீழ் குணம் உள்ள சிரியவரை கண்டவுடன் முகம் திரியக்கூடாது, அவர்களையும் சாப்பிட்டது என்ன என்று கேட்கக்கூடாது.

தொடரும்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by பிஜிராமன் on Mon Jan 23, 2012 3:21 pm

மிக்க நன்றிகள் ஐயா, அருமையான ஆசாரங்கள், அதற்கேற்ற விளக்கங்கள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Tue Jan 24, 2012 12:39 pm

பிஜிராமன் wrote:மிக்க நன்றிகள் ஐயா, அருமையான ஆசாரங்கள், அதற்கேற்ற விளக்கங்கள்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி ராமன் நன்றி அன்பு மலர்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Tue Jan 24, 2012 1:16 pm

பாடல் 87 கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


கிடந்தாரைக் கால் கழுவார்; பூப்பெய்யார்; சாந்தம்
மறந்தானும் எஞ் ஞான்றும் பூசார்; கிடந்தார்கண்
நில்லார், தாம் - கட்டில்மிசை

பொருள் விளக்கம்

ஒருவர் தூங்கும் போது, அவர்களின் கால் கழுவக்கூடாது, அவர்கள் மேல் புப்பொழியக் கூடாது. மறந்தும் சந்தனம் பூசக்கூடாது. அவர்கள் உறங்கும் போது கட்டில் அருகில் நிற்கவும் கூடாது.

பாடல் 88 பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


உதவிப் பயன் உரையார்; உண்டி பழியார்;
அறத்தொடு தாம் நோற்ற நோன்பு வியவார்; -
'திறத்துளி வாழ்தும்!' என்பார்

பொருள் விளக்கம்

திறமை அறிந்து வாழ நினைப்பவர்கள் தங்கள் பிறருக்குச் செய்த உதவியை அடுத்தவரிடன் சொல்ல மாட்டார். உணவு உண்ணும் போது குறை இருப்பினும் உணவைப் பழியார். நாம் செய்த தர்மம், விரதம் ஆகியவற்றை பெருமையுடன் விவரித்து கூற மாட்டார்.

பாடல் 89 கிடைக்காதவற்றை விரும்பாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


எய்தாத வேண்டார்; இரங்கார், இழந்ததற்கு,
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்; -
மெய்யாய காட்சியவர்

பொருள் விளக்கம்

உண்மையை உணர்ந்த அறிவு நிறைந்தவர்கள், தமக்கு கிடைக்காதவற்றை எண்ணி வருத்தப் பட மாட்டார் . நடந்து முடிந்த நிகழ்ச்சியை நினைத்து கவலைப் பட மாட்டார் . ஒன்றும் செய்ய இயலாத துன்பம் சூழும் சூழல் நிகழ்த்தாலும் கலங்கி நிற்க மாட்டார்.

பாடல் 90 தலையில் சூடிய மோத்தல் முதலானவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


தலைக்கு இட்ட பூ மேவார்; மோந்த பூச்சூடார்;
பசுக் கொடுப்பின், பார்ப்பார் கைக் கொள்ளாரே; என்றும்,
புலைக்கு எச்சில் நீட்டார்; விடல்

பொருள் விளக்கம்

ஒருவர் தலையில் சூடிய பூவை முகர்ந்து பார்க்கக்கூடாது. ஒருவர் முகர்ந்து பார்த்ததை தலையில் சூடக்கூடாது. வேள்வி செய்யும் அந்தணர்கள் பசுவை தானமாக கொடுத்தாலும் அவர்களிடம் இருந்து பெறக்கூடாது. நம் கீழ் பணிபுரியும் மிகச் சிறிய குலத்தில் பிறந்த ஒருவராய் இருந்தாலும் அவர்களுக்குக் கூட நாம் உண்ட உணவின் எச்சிலை கொடுக்கக்கூடாது.

தொடரும்
பி.கு. பிறர் வாழ வேள்வி வளர்ந்து, பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காத உண்மை பேசும், வேதம் ஓதும் அந்தணர்களுக்கு வேண்டிய உதவியை நாம் செய்ய வேண்டுமே தவிர அவர்களிடம் இருந்து ஒன்றைப் பெற்று ஒரு காரியத்தை செய்யக்கூடாது, இதற்குத் தான் மகாலக்ஷ்மியின் அம்சம் என்று கருதும் பசுவைக் கொடுத்தாலும் அவர்களிடம் இருந்து பெறக்கூடாது என்று இந்தப் பாடல் கூறுகிறது.

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by சதாசிவம் on Thu Jan 26, 2012 7:10 pm

பாடல் 91 பழியாவன
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


மோட்டுடைப் போர்வையோடு, ஏக்கழுத்தும், தாள் இசைப்பு,
காட்டுளேயானும், பழித்தார் - மரம் தம்மின்
மூத்த உள, ஆகலான்

பொருள் விளக்கம்

காட்டிலும் நம்மை விட மூத்த வயதுடைய மரங்கள் (யோகிகள்) இருப்பதால் இறுமாப்புடன் இருத்தலும், தன்னடக்கம் இல்லாமல் போர்வை போர்த்தலும், இரு கரங்களை சேர்த்து தலைக்கு பின் வைத்து இருத்தலும் மிகுந்த பாவச் செயலாகும்.

பாடல் 92 அந்தணரின் சொல்லைக் கேட்க!
(நேரிசை வெண்பா)


தலைஇய நற் கருமம் செய்யுங்கால், என்றும்,
புலையர்வாய் நாள் கேட்டுச் செய்யார்; தொலைவு இல்லா
அந்தணர்வாய் நாள் கேட்டுச் செய்க - அவர் வாய்ச்சொல்
என்றும் பிழைப்பது இல

பொருள் விளக்கம்

வீட்டில் முதன்மையான velai தொடங்கும் போது சிறிய arivu உடையவரை நாள் குறிக்க சொல்லக் கூடாது. காலம் கணிப்பதை நன்கு கற்று உணர்ந்த கல்வியாளர்கள் சொல் கேட்க வேண்டும். அவர்கள் சொல்லும் சொல் பொய்ப்பதில்லை.

பாடல் 93 சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


மன்றத்து நின்று உஞற்றார்; மாசு திமிர்ந்து இயங்கார்;
என்றும் கடுஞ் சொல் உரையார்; இருவராய்
நின்றுழியும் செல்லார்; - விடல்

பொருள் விளக்கம்

சான்றோர் இருக்கும் சபையில் குறும்பு செய்யக்கூடாது. அழுக்குத் தோய்த்து அலையக் கூடாது. எப்போதும் கடின சொல் பேசக்கூடாது. இருவர் பேசும் போது இடையில் செல்லக்கூடாது. இவை தவறு, ஆதலால் இவற்றை விட்டொழிக்க வேண்டும்.


பாடல் 94 ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
(இன்னிசை வெண்பா)


கை சுட்டிக் கட்டுரையார்; கால்மேல் எழுத்து இடார்,
மெய் சுட்டி, இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார்;
கையில் குரவர் கொடுப்ப, இருந்து ஏலார்; - ஐயம் இல் காட்சியவர்

பொருள் விளக்கம்

சந்தேகம் இல்லாமல் நன்கு கற்றவர்கள், பெரியார் முன் அவரை சுட்டி, கை நீட்டி கடுமையாகப் பேச மாட்டார். கால் மேல் வைத்து எழுத மாட்டார்,. கல்வி அறிவு இல்லாதவரை அறிவு உள்ளவரோடு ஒப்புமை செய்து சாதித்து பேச மாட்டார். பெரியவர் கொடுக்கும் போது அதை அமர்ந்து கொண்டு கையால் அலட்சியமாக வாங்க மாட்டார்,

தொடரும்

விரைவில் நிறைவுறும்

சதாசிவம்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

Back to top Go down

Re: ஆசாரக் கோவை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு - இனிதே நிறைவுற்றது.

Post by பிஜிராமன் on Thu Jan 26, 2012 9:21 pm

உணவு உண்ணும் போது குறை இருப்பினும் உணவைப் பழியார்


மிகவும் அருமையான ஆச்சாரங்கள் ஐயா,

நான் உணவில் அதிக காரமோ, தேவையில்லாமல், அதிக கரிமசால் பொடியோ சேர்த்து இருந்தால், கோவம் அடைவேன், இனி இதை தவிர்த்துக் கொள்கிறேன்.

ஐயா, 91 ஆவது ஆசாரத்திற்கு இன்னும் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் ஐயா, எனக்கு விளங்க வில்லை.

மிக்க நன்றிகள் ஐயா....... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum