ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by ரா.ரமேஷ்குமார் Today at 6:51 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:14 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 6:00 am

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am

» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am

» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 1:16 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by ரா.ரா3275 Today at 12:45 am

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 12:42 am

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by ரா.ரா3275 Today at 12:40 am

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am

» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am

» விவாகரத்து
by ரா.ரா3275 Today at 12:30 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:23 am

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:19 am

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:14 am

» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by யினியவன் Yesterday at 11:05 pm

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by இரா.பகவதி Yesterday at 10:32 pm

» கருப்பழகி “யவ்வனப் பிரியா”
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:21 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:10 pm

» பென் டிரைவ் format - உதவி
by kirikasan Yesterday at 10:08 pm

» பெண் சிசுக்களை கலைத்து அதை நாய்க்கு போட்ட டாக்டர் தம்பதி
by இரா.பகவதி Yesterday at 9:37 pm

» ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்டைத் தொடங்கும் கூகுள்!
by முத்துராஜ் Yesterday at 9:06 pm

» நீங்க பெரிய ஆளுனா இதுக்கு பதில் சொல்லுங்க..
by வை.பாலாஜி Yesterday at 8:34 pm

» ஏக்கச் சூட்டில் அடை காக்கிறேன் !
by முஹைதீன் Yesterday at 8:27 pm

» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
by முஹைதீன் Yesterday at 8:25 pm

» குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
by முஹைதீன் Yesterday at 8:21 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by வின்சீலன் Yesterday at 8:08 pm

» 2G உலக மகா ஊழல்
by balakarthik Yesterday at 8:03 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by balakarthik Yesterday at 7:51 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Tamilzhan Yesterday at 7:45 pm

» சோனியா ……. காந்தியா?
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 7:29 pm

» இது உங்களுக்கும் புதிதல்ல
by rameshnaga Yesterday at 7:11 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Yesterday at 7:05 pm

» நாம் குடிக்கும் தேநீர் கலப்படமா?
by பிளேடு பக்கிரி Yesterday at 6:46 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by sathishkumar Yesterday at 6:38 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by பிஜிராமன் Yesterday at 6:35 pm

» ஒரு புத்தகம் வேண்டும் உறவுகளே - பிஜிராமன்
by பிஜிராமன் Yesterday at 6:27 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்... 5 5 3

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by Aathira on Sun Nov 27, 2011 10:49 pm

அன்பு உறவுகளே,
ஏற்கனவே இந்தியாவில் பெரும் தொழிகள் அனைத்தும் அந்நிய முதலீட்டார்கள் கையில் அகப்பட்டு இந்திய பெரும் முதலீட்டாளர்களை இரண்டாம் நிலைக்குத் தள்ளி இருக்கிறது. இதில் இந்திய அரசுக்கு இலாபம் கிட்டியுள்ளது. மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகியுள்ளது என்று மார் தட்டிக் கூறிக்கொண்டாலும் நம் இலாபத்தில் பெரும்பங்கு மேலை நாட்டுக்கு சென்றுகொண்டிருக்கிறது. இது அரங்கேறி விட்ட காட்சி. இனி மாற்ற இயலாது. இந்நிலையில் இப்போது நடுவன் அரசு இந்தியாவில் சிறு வியாபாரங்களையும் அந்நியர்களின் கையில் ஒப்படைத்துள்ளது. இது இந்தியாவின் வ்ளர்ச்சிக்கு ஓரளவு உதவும். அதைவிட ஆளும் மத்திய அரசுக்குப் பெருமளவு உதவும். ஆனால் அன்றாடம் அரை வயிற்றுக் கூழுக்கே அல்லாடிக்கொண்டு இருக்கிற சிறு வியாபாரிகளுக்கு எந்த அளவு உதவும்? அந்நிய முதலீட்டார்களிடம் போட்டி போடும் சக்தி நம் சிறுவியாபாரிகளிடம் உள்ளனவா? மத்திய அரசின் அரசின் இந்த முடிவு சரியானதா? தவறானதா? பதில் கூறுங்கள் .

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by சிவா on Sun Nov 27, 2011 10:56 pm

மத்திய அரசின் இந்த நடவடிக்கை முன்னேறியுள்ள நாடுகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டில் மக்கள் தொகையானது இந்தியாவைப் போல் இல்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ளாதது வருத்தமானது.

சிறு வியாபாரங்களை அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலம் நிச்சயம் நம் நாட்டிலுள்ள சிறு வியாபரிகளைப் பாதிக்கும். இப்பொழுது உள்ள வியாபாரிகள் அனைவரும் அவர்களிடம் வேலைக்குச் செல்ல வேண்டியதுதான்.

பதிவுகள்: 790530 | உறுப்பினர்கள்: 15368 | தலைப்புகள்: 81958 | புதிய உறுப்பினர்: malinimohan

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by Aathira on Sun Nov 27, 2011 11:12 pm

சிவா wrote:மத்திய அரசின் இந்த நடவடிக்கை முன்னேறியுள்ள நாடுகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டில் மக்கள் தொகையானது இந்தியாவைப் போல் இல்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ளாதது வருத்தமானது.

சிறு வியாபாரங்களை அந்நிய நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதன் மூலம் நிச்சயம் நம் நாட்டிலுள்ள சிறு வியாபரிகளைப் பாதிக்கும். இப்பொழுது உள்ள வியாபாரிகள் அனைவரும் அவர்களிடம் வேலைக்குச் செல்ல வேண்டியதுதான்.

இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்களே. அதிலும் முப்பது சதவீதம் அவர்கள் அதாவது அந்நியர்கள் பொருட்களை இங்கே வாங்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளதால் சிறு வியாபாரிகள் அவர்களிடம் விற்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார்களே. இது குறித்து தங்கள் கருத்து?

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by இளமாறன் on Sun Nov 27, 2011 11:12 pm

அந்நிய முதலீடு உலக மயமாக்கல் இவை அனைத்தும் கம்யூனிஸ்ம் நாடு என்று அழைக்கப்பட்ட ரஷ்யா வில் இருந்து வந்தவைகள்

இக்காலத்தில் அந்நிய முதலீடு என்பது வரி விலக்கல் மூலமாக முதலீடு செய்யும் அயல் நாட்டவர்க்கு வரி விளக்கி அவர்கள் முதலீடை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்வது ...

இங்குள்ளவர்கள் முதலீடு செய்தால் இவனிடம் எது இவ்வளவு பணம் என்று தேட ஆரம்பித்து எங்கோ 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் வரி ஏய்ப்பு நடந்து இருக்கிறது என்று ஏகப்பட்ட கேசுகள் நடத்த 15 வருடம் கோர்ட்டு செலவு ...

முதலில் சிறு தொழில்கள் என்பது சிறு தொழில்கள் ஆரம்பிக்க பாங்க் லோன் கொடுத்தார்கள் இப்பொழுது அதுவும் அரசியல்வாதிகளின் விசிறிகளுக்கு மட்டுமே என்றாகி போனது .. பொதுமக்கள் வளர வழியே இல்லாமல் போனது .. கடன் கொடுப்பதும் பிறகு தள்ளு படி செய்வதுமே வாடிக்கை வேடிக்கை ஆகி போன ஒன்று ... ஒரு வேலை இதை ஈடுகட்ட தான் இப்படி முடிவு எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

கடன் வாங்கியவன் நம்ம அரசாங்கம் தானே என் கடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கு கிறது ...அதுவும் தேர்தல் நேரங்களில் நிச்சயம் இலவசம் என்கிற பெயரில் தள்ளுபடி செய்வார்கள் என்கிற நினைப்பில் எல்லோருமே ஏமாற்ற நினைக்கிறார்கள் ... அதாவது நமது தலையிலேயே மண்ணை அள்ளி போட்டு கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன் மொத்தத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்காக யாரும் நினைப்பது கூட இல்லை .. சுரண்டல் ஒன்றே வாழ்க்கை என்றாகி விட்டது

கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by பிஜிராமன் on Sun Nov 27, 2011 11:14 pm

இந்த விவாததிற்கான சரியான குறிப்புகள் இல்லை என்றாலும் என் தனிப்பட்ட கருத்தை தெருவிக்க விரும்புகிறேன்.

1947 கு முன்பு வரை நாம் அன்னியர்களிடம் அடிமை பட்டுக் கிடந்தோம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது வெளிப்படையான ஒன்றும் கூட.

ஆனால் இன்று மத்திய அரசு எடுத்துள்ள இது போன்ற முடிவுகள் நம்மை மறைமுகமாக அடிமையாக்கப் போகும் அபாயங்களாக மாறும். இவை செல்வங்கள் தந்தாலும் நம் சுயத்தை இலக்க ஏதுவாய் அமைந்துவிடும்.

ஏற்கனவே உலகமயமாக்குதலால், உணவு சம்பந்த்தப் பட்ட துறைகளில் வால் மார்ட் அயல் நாட்டு நிறுவனங்களின் பங்கு தான் முக்கால் வாசி. இது நீடித்தால், அவர்கள் தான் அது போன்ற துறைகளில் ராஜாக்களாகவும், அவர்கள் நிர்ணயிப்பது தான் விலை என்ற நிலையும் ஏற்பட்டு விடும்.

என்னைப் பொறுத்த வரை இது தவறு, நாட்டு மக்களை பாதிக்கும்.

மற்றவர்கள் கருத்தைக் கேட்டறிய ஆவலாய் உள்ளேன்

நன்றிகள் அம்மா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by இளமாறன் on Sun Nov 27, 2011 11:17 pm

பிஜிராமன் wrote:இந்த விவாததிற்கான சரியான குறிப்புகள் இல்லை என்றாலும் என் தனிப்பட்ட கருத்தை தெருவிக்க விரும்புகிறேன்.

ஆமோதித்தல் ஆமோதித்தல்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by Aathira on Sun Nov 27, 2011 11:25 pm

இளமாறன் wrote:அந்நிய முதலீடு உலக மயமாக்கல் இவை அனைத்தும் கம்யூனிஸ்ம் நாடு என்று அழைக்கப்பட்ட ரஷ்யா வில் இருந்து வந்தவைகள்

இக்காலத்தில் அந்நிய முதலீடு என்பது வரி விலக்கல் மூலமாக முதலீடு செய்யும் அயல் நாட்டவர்க்கு வரி விளக்கி அவர்கள் முதலீடை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்வது ...

இங்குள்ளவர்கள் முதலீடு செய்தால் இவனிடம் எது இவ்வளவு பணம் என்று தேட ஆரம்பித்து எங்கோ 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் வரி ஏய்ப்பு நடந்து இருக்கிறது என்று ஏகப்பட்ட கேசுகள் நடத்த 15 வருடம் கோர்ட்டு செலவு ...

முதலில் சிறு தொழில்கள் என்பது சிறு தொழில்கள் ஆரம்பிக்க பாங்க் லோன் கொடுத்தார்கள் இப்பொழுது அதுவும் அரசியல்வாதிகளின் விசிறிகளுக்கு மட்டுமே என்றாகி போனது .. பொதுமக்கள் வளர வழியே இல்லாமல் போனது .. கடன் கொடுப்பதும் பிறகு தள்ளு படி செய்வதுமே வாடிக்கை வேடிக்கை ஆகி போன ஒன்று ... ஒரு வேலை இதை ஈடுகட்ட தான் இப்படி முடிவு எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

கடன் வாங்கியவன் நம்ம அரசாங்கம் தானே என் கடன் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கு கிறது ...அதுவும் தேர்தல் நேரங்களில் நிச்சயம் இலவசம் என்கிற பெயரில் தள்ளுபடி செய்வார்கள் என்கிற நினைப்பில் எல்லோருமே ஏமாற்ற நினைக்கிறார்கள் ... அதாவது நமது தலையிலேயே மண்ணை அள்ளி போட்டு கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன் மொத்தத்தில் இந்தியாவின் வளர்ச்சிக்காக யாரும் நினைப்பது கூட இல்லை .. சுரண்டல் ஒன்றே வாழ்க்கை என்றாகி விட்டது

கருத்தில் தவறு இருப்பின் மன்னிக்கவும்

பொதுவாக சிறு வியாபாரிகளுக்கு வரிகளில் ஏய்க்க வாய்ப்பே இல்லையே. ஏனெனில் அவர்களிடமிருந்து ஒரே மாதியான அடிப்படை வரிதானே வசூலிக்கப் படுகிறது. ஏற்கன்வே ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் வந்த பிறகு காய்கறிகள் முதல் பாக்கெட்டில் போட்டு அடைக்கப்பட்ட பொருள்களை வாங்கி பழக்கப்பட்டு விட்டார்கள் நகர வாசிகள். இன்னும் தெருக்கள் தோறும் அந்நிய முதலாளிகள் கண்டிப்பாக வாழைப்பழங்களைத் தோலுரித்து வாயில் ஊட்டி விட்டாவது தங்கள் வியாபாரத்தை பெருக்கி விடுவார்கள். நம்மவர்கள் இவ்விதமான உத்திகளைக் கையாளுவதில் சற்று தயங்குவார்கள். ஏனெனில் இவர்களோ தன்மானச் சிங்கங்கள். இந்த குள்ளநரித்தனம், தந்திரமெல்லாம் இவர்களுக்கு கைவராது. அப்படியிருக்க?? இதிலிருந்து மீள்வது எங்ங்னம்?

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by இளமாறன் on Sun Nov 27, 2011 11:36 pm

மீள்வது மிக கடினம் .. நாம் சகோதரர்கள் விளைவித்து அரசாங்கம் குறைந்த விலையில் எடுத்து கொண்டு பிறருக்கு தள்ளுபடியோடு விற்க எவனோ ஒருவன் அதே பொருள்களை நமது அங்காடிகளில் அவனது இஷ்டம் போல் விலை நிர்ணயிக்க போகிறார்கள் ... நாம் ஒன்றும் சொல்ல முடியாமல் அவர்கள் சொல்லிய விலைக்கு வாங்கியே ஆக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளபடுவோம் ...அதை விட்டு உழைக்க நினைக்கும் நல்ல இளைஞ்சர்கள் கடன் கேட்கும் பொது அரசாங்கம் கொடுத்தால் அவர்கள் தொழில் தொடங்க உதவியாகவும் இருக்கும் இந்தியன் வளரவும் உதவியாகவும் இருக்கும் ...

மீண்டும் ஒரு காந்திய போராட்டம் வந்து அந்நிய தேசத்து பொருள்களை வாங்காதே என்று சொல்வதை போல் இவர்கள் நாம் பொருள்களையே வாங்கி அதிக விலைக்கு நம்மக்கே விற்க போகிறார்கள் ...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by Aathira on Sun Nov 27, 2011 11:40 pm

பிஜிராமன் wrote:இந்த விவாததிற்கான சரியான குறிப்புகள் இல்லை என்றாலும் என் தனிப்பட்ட கருத்தை தெருவிக்க விரும்புகிறேன்.

1947 கு முன்பு வரை நாம் அன்னியர்களிடம் அடிமை பட்டுக் கிடந்தோம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது வெளிப்படையான ஒன்றும் கூட.

ஆனால் இன்று மத்திய அரசு எடுத்துள்ள இது போன்ற முடிவுகள் நம்மை மறைமுகமாக அடிமையாக்கப் போகும் அபாயங்களாக மாறும். இவை செல்வங்கள் தந்தாலும் நம் சுயத்தை இலக்க ஏதுவாய் அமைந்துவிடும்.

ஏற்கனவே உலகமயமாக்குதலால், உணவு சம்பந்த்தப் பட்ட துறைகளில் வால் மார்ட் அயல் நாட்டு நிறுவனங்களின் பங்கு தான் முக்கால் வாசி. இது நீடித்தால், அவர்கள் தான் அது போன்ற துறைகளில் ராஜாக்களாகவும், அவர்கள் நிர்ணயிப்பது தான் விலை என்ற நிலையும் ஏற்பட்டு விடும்.

என்னைப் பொறுத்த வரை இது தவறு, நாட்டு மக்களை பாதிக்கும்.

மற்றவர்கள் கருத்தைக் கேட்டறிய ஆவலாய் உள்ளேன்

நன்றிகள் அம்மா

தனிப்பட்ட கருத்துகளெ வரவேற்கப் படுகின்றன பி.ஜி.ரா. அப்படியென்றால் மீண்டும் நாம் அடைமைக் காலமாகிய ஆயிரத்து எண்ணூறுகளுக்குச் செல்லும் அபாயம் உள்ளது என்று கூறுகின்றீர்கள? ஆனால் சீனா சிறு வியாபரங்களில் அந்நியர்களுக்கு அனுமதி அளித்து இருபது ஆண்டுகள் ஆகி விட்டது. அதன் நிமித்தமாகவே சீனா பொருளாதாரத்தில் முன்னேறிய நாடாக இருப்பதாக கூறுகிறார்கள். அவர்களை இந்த திட்டம் அடிமையாக மாற்றும் என்னும் அச்சம் அவர்களிடம் ஏன் இல்லை?

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by பிஜிராமன் on Sun Nov 27, 2011 11:43 pm

இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள்
கூறுகிறார்களே. அதிலும் முப்பது சதவீதம் அவர்கள் அதாவது அந்நியர்கள்
பொருட்களை இங்கே வாங்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளதால் சிறு
வியாபாரிகள் அவர்களிடம் விற்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும்
கூறுகிறார்களே. இது குறித்து தங்கள் கருத்து?

என்னைப் பொறுத்த வரை இதில் ஆரோக்கியம், இது போன்ற கருதுகளைச் சொல்லும்
வல்லுனர்களுக்கு வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் வியாபாரிகளுக்கு
கிடைப்பது மிகச் சந்தேகம். மேலும் கிடைக்காது என்றே சொல்லலாம்.

காரணம், இவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்யப் போவது அவர்கள் ஊரில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை. அயல் நாடுகளில் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப் படும் மானியங்கள் வேறு நம் நாட்டில் கொடுக்கப் படும் மானியங்களின் அளவும் வேறு.

அதே சம்யம், விவசாயம் என்று எடுதுக் கொண்டால், நம் ஊரைப் போல குறுகிய விவசாயம் கிடையாது, ஒரு பயிர் வகையோ தானிய வகையோ பழ வகையோ எடுதுக் கொண்டால், பல ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரபுக்கு, அதே தானிய, பயிர் மற்றும் பழ வகைகள் தான் பயிரிடப் படும். இது வெகுவாக உற்பத்தி செலவைக் குறைத்து விடும். ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை, குரு விவசாயம் தான், இதற்கு உற்பத்தி செலவு அதிகம் உற்பத்தி விகிதம் குறைவு.

இப்படி இருக்க, அவர்கள் நிர்ணயிக்கும் விலையோடு நம் வியாபாரிகள் போட்டி இடுவது சிரமமாக இருக்கும். கூடிய விரைவில் நொந்து நைந்து போயி விடுவார்கள் என்பது என் கருத்து

இதில் தவறு இருப்பின், தகுந்த விளக்கத்துடன், தெரியப் படுத்தி திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே

நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by இளமாறன் on Sun Nov 27, 2011 11:46 pm

Aathira wrote:

சீனா வில் அந்நியர்கள் யாரும் கால் படித்த ஜாபகம் இல்லை ஆனால் சீனர்கள் உலகில் எல்லா இடங்களில் தொழில் தொடங்கி விட்டார்கள் ...

கிரெக் எகிப்து இத்தாலி ஸ்பெயின் இப்படி பல கடற்கரை தளங்களை வளைத்து போட்டு கொண்டு இருக்கிறார்கள் ...அதிகமாக பொருள்கள் விற்பது மேட் இன் சீனா தான் சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by ANTHAPPAARVAI on Sun Nov 27, 2011 11:49 pm

நல்ல விவாதத்தின் மூலம் நிறைய விஷயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது!
நண்பர்கள் தொடரவும்....

ஆதிரா அவர்களுக்கு பாராட்டுக்கள்!! சூப்பருங்க

ANTHAPPAARVAI
தளபதி
தளபதி

பதிவுகள்: 1681
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 18/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by பிஜிராமன் on Sun Nov 27, 2011 11:50 pm

நன்றிகள் இளா.... புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1302

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by இளமாறன் on Sun Nov 27, 2011 11:59 pm

ANTHAPPAARVAI wrote:
நல்ல விவாதத்தின் மூலம் நிறைய விஷயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது!
நண்பர்கள் தொடரவும்....

ஆதிரா அவர்களுக்கு பாராட்டுக்கள்!! சூப்பருங்க

உங்கள் கருத்துகளையும் கூறுங்கள் அன்பு மலர் அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: சரிதானா? விவாதத்திற்கு வாருங்கள்...

Post by Aathira on Mon Nov 28, 2011 1:02 am

பிஜிராமன் wrote:
இது ஒரு ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள்
கூறுகிறார்களே. அதிலும் முப்பது சதவீதம் அவர்கள் அதாவது அந்நியர்கள்
பொருட்களை இங்கே வாங்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளதால் சிறு
வியாபாரிகள் அவர்களிடம் விற்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்றும்
கூறுகிறார்களே. இது குறித்து தங்கள் கருத்து?

என்னைப் பொறுத்த வரை இதில் ஆரோக்கியம், இது போன்ற கருதுகளைச் சொல்லும்
வல்லுனர்களுக்கு வேண்டுமானால் கிடைக்கலாம். ஆனால் வியாபாரிகளுக்கு
கிடைப்பது மிகச் சந்தேகம். மேலும் கிடைக்காது என்றே சொல்லலாம்.

காரணம், இவர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்யப் போவது அவர்கள் ஊரில் உற்பத்தி செய்யப் பட்ட பொருட்களை. அயல் நாடுகளில் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப் படும் மானியங்கள் வேறு நம் நாட்டில் கொடுக்கப் படும் மானியங்களின் அளவும் வேறு.

அதே சம்யம், விவசாயம் என்று எடுதுக் கொண்டால், நம் ஊரைப் போல குறுகிய விவசாயம் கிடையாது, ஒரு பயிர் வகையோ தானிய வகையோ பழ வகையோ எடுதுக் கொண்டால், பல ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரபுக்கு, அதே தானிய, பயிர் மற்றும் பழ வகைகள் தான் பயிரிடப் படும். இது வெகுவாக உற்பத்தி செலவைக் குறைத்து விடும். ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை, குரு விவசாயம் தான், இதற்கு உற்பத்தி செலவு அதிகம் உற்பத்தி விகிதம் குறைவு.

இப்படி இருக்க, அவர்கள் நிர்ணயிக்கும் விலையோடு நம் வியாபாரிகள் போட்டி இடுவது சிரமமாக இருக்கும். கூடிய விரைவில் நொந்து நைந்து போயி விடுவார்கள் என்பது என் கருத்து

இதில் தவறு இருப்பின், தகுந்த விளக்கத்துடன், தெரியப் படுத்தி திருத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே

நன்றிகள்

நீங்கள் சொல்வது சரிதான் பி..ஜி.ஆர். நம் நாட்டில் குறைந்த அளவு 50, 100 செண்ட் அதிக அளவு 5 , 10 ஏக்கர் என்று நிலம் வைத்திருப்பவர்களே அதிகம். இவர்களிலும் கல்வி அறிவுடன் இருப்பவர்கள் மிகச்சிலரே. இவர்களுக்கு விவசாயப்பொருள்களை எங்கு, எதை வாங்குவது? அரசு மானியங்கள் எவ்வெவற்றுக்குத் தருகிறது, வங்கிக் கடன் எவ்வாறு பெறுவது போன்ற அடிப்படைகள் தெரிவதில்ல என்பது ஒரு புறம். மற்றொரு புறம் சரியான இடைத்தரகர்கள் யார் என்று அறியாமல் ஏமாந்து விடுவோம் என்னும் அச்சத்தால் முடங்கி விடுபவர்கள், தவறான இடைத்தரகளிடம் ஏமாறுபவர்கள் ஆகியவர்கள் அதிகம்.
இந்நிலையில் வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்வது இவர்களின் ஏற்ற இறக்க வியாபாரத்தை ஒரேயடியாக இறக்கத்தில் கொண்டு விட்டு விடும். முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள் விவசாயிகள்.
குறைந்த பட்சம் இது குறித்த நிபந்தனைகள் அந்நியர்களுக்கு என்ன என்ன போட்டிருக்கிறார்கள் என்றாவது ஒரு தெளிவான சிந்தனை விவசாயிகளுக்கு இருக்க வேண்டும். அதற்கு மைய அரசு அந்நிய கொள்முதல், விற்பனையாளர்களுக்கு என்ன என்ன விதிகள் விதித்துள்ளது என்பதை ஒவ்வொரு விவசாயியும் அறிந்து கொள்ளும் வண்ணம் அதை ஒவ்வொரு கடையிலும் காட்சியில் வைக்கச் செய்ய வேண்டும்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10872
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 703

http://aathira.net

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum