|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீby ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:39 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by யினியவன் Today at 2:35 pm
» அடக்கம்!....
by இரா.பகவதி Today at 2:29 pm
» காதலாகிப் போனதடி மனசு
by யினியவன் Today at 2:28 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by யினியவன் Today at 2:16 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 2:13 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 2:09 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by Aathira Today at 1:34 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by புரட்சி Today at 1:33 pm
» விவாகரத்து
by இரா.பகவதி Today at 1:31 pm
» அறிமுகம்
by Aathira Today at 1:31 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by இரா.பகவதி Today at 1:07 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 11:58 am
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by இரா.பகவதி Today at 11:56 am
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by RAJAN1976 Today at 11:21 am
» சோனியா ……. காந்தியா?
by இரா.பகவதி Today at 10:58 am
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 10:57 am
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by கேசவன் Today at 10:50 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by முஹைதீன் Today at 9:13 am
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:36 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:42 am
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by azeeznilo Today at 3:02 am
» அரசியல் ஞானம் சிறிதும் இல்லாத சரத் பொன்சேக்கா?
by அகிலன் Today at 2:08 am
» ஈஸியான... முட்டை பணியாரம்!
by ரா.ரா3275 Today at 1:20 am
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 12:32 am
» மதுரை மாவட்டம்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:30 am
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
by மகா பிரபு Today at 12:07 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி ஜெயலலிதா அறிவிப்பு
Page 1 of 1 • Share •
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக விளையாட்டு வீரர்களுக்கான பரிசுத்தொகை இரண்டு மடங்கு உயர்வு
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி
ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை, ஜன.4-
சர்வதேச விளையாட்டு போட்டியில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கான பரிசுத் தொகை இரண்டு மடங்கு உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி கிடைக்கும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, மற்றும் விளையாட்டு வீரர்களிடையே போட்டி மனப்பான்மையை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தக்க பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்து, அவர்களை தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடச் செய்தல், தலைசிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதுடன், அவர்கள் உயரிய சாதனைகள் புரிந்திடும் வகையில் பல்வேறு ஊக்க உதவிச் சலுகைகளை வழங்குதல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
விளையாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடனும், இளைஞர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தினை வளர்க்கும் நோக்கத்துடனும், தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில், அதாவது 1992-ம் ஆண்டு, இளைஞர் மற்றும் விளையாட்டுப் பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வளர்ச்சி வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு இணையான "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்'' உருவாக்கப்பட்டது.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.2 கோடி
மேலும் 2002-ல், இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளான ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த், தெற்காசிய மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களை கவுரவிக்கும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்க ஆணையிடப்பட்டது.
சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு வழங்கப்படும் உயரிய ஊக்கத் தொகையை இவ்வாண்டு முதல் மேலும் உயர்த்தி வழங்க தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கான ஊக்கத் தொகை ரூ.1 கோடியில் இருந்து ரூ.2 கோடியாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாகவும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.25 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாகவும், ஊக்கத்தொகையை உயர்த்தியும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.50 லட்சமாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாகவும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தியும், அதேபோல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் குழுப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.3 லட்சமாகவும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சமாகவும் உயர்த்தி வழங்க தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
தினப்பயிற்சி திட்டம்
தமிழகத்திலுள்ள 9 விளையாட்டு விடுதிகளும் மற்றும் விடுதிகளுடன் கூடிய 3 விளையாட்டுப் பள்ளிகளில் 860 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்திலிருந்து தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்வதற்காக, இந்த விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் வீரர்களின் எண்ணிக்கையினை 860-ல் இருந்து 1,100 ஆக உயர்த்தியும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கென செயல்பட்டுவரும் உயர்தர விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்று வரும் வீரர்களின் எண்ணிக்கையினை 50-ல் இருந்து 80 ஆக உயர்த்தியும் தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு தொடர் செலவினமாக ரூ.83 லட்சத்து 7 ஆயிரமும், தொடரா செலவினமாக ரூ.1 கோடியும் செலவு ஏற்படும்.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த 70 பயிற்சியாளர்களுக்கு "தினப்பயிற்சி திட்டம்'' எனப்படும் புதிய திட்டத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டத்தில் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட 20 சிறுவர்-சிறுமியர் ஒவ்வொரு விளையாட்டிற்கும், அவரவரது திறமைக்கேற்ப தொடர் திறனறிவு மற்றும் தொழில்நுட்ப சோதனைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, விளையாட்டில் சாதனை புரியும் திறனை ஏற்படுத்துகின்ற வகையில், பயிற்சியாளர் பயிற்சி அளிக்க ஏதுவாக தினப்பயிற்சி மையத்தில் இணைக்கப்படுவர்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, ஒரு மாதத்தில் 25 நாட்களுக்கு, தினசரி காலையிலும், மாலையிலும் விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு சிற்றுண்டி, போக்குவரத்துப்படி, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். இத்திட்டம், கன்னியாகுமரி, விருதுநகர், காஞ்சீபுரம், கோயம்புத்தூர், பெரம்பலூர், ஆகிய 5 மாவட்டங்களில் 10 பயிற்சியாளர்களுடன் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக தொடர் செலவினமாக ரூ.18 லட்சத்துக்கு, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார். விளையாட்டு மேம்பாட்டிற்காக எடுக்கப்படும் மேற்கூறிய நடவடிக்கைகளினால், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வகையில், தமிழக விளையாட்டு வீரர்-வீராங்கனைகளின் திறன் மேம்பாடு அடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினத்தந்தி

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum